உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுவைக் கவிஞர் பாரதியார்-ஒரு கண்ணோட்டம்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 புதுவை (மை)க் கவிஞர் உலகிலுள்ள சமயங்கள் போற்றும் உயர்ந்த நூல்க ளெல்லாம் பொது இயல்பு ஒன்றைப் படைத்திருக் கின்றன. நேர்முகமாகவோ அல்லது மறைமுகமாகவோ அவை யாவும் மகாவாக்கியத்துக்கு விளக்கமாக வந்து அமைந்திருக்கின்றன. மகாவாக்கியம் என்பது பரமான் மாவுக்கும் சீவான்மாவுக்கும் உள்ள சம்பந்தத்தைச் சொல்வது, வேதங்களில் நான்கு மகாவாக்கியங்கள் அமைந்திருக்கின்றன. அவற்றுள் மிகச் சிறப்புடையது தத் துவம், அலி என்னும் மூன்று சொற்களைக் கொண்டது. துவம்-நீ, தத்-அதுவாக, அலி-இருக்கிறாய் என்பது பொருள். சீவான்மாவாகிய நீ பரமான்வாகிய அதற்கு அந்தியமானவன் அல்லன் என்பது பொருள். இக்கோட்பாட்டை எல்லாச் சாத்திரங்களும் ஏதேனும் ஒரு விதத்தில் இயம்புகின்றன. இதை எடுத்து ஒதாத நூல் உயர்ந்த நூல் ஆகாது. 'தத்துவம் அலி' என்னும் மகாவாக்கியத்துக்கு உற்ற உயர்ந்த விளக்கம் என்று பகவத்கீதையைச் சொல்லலாம். இவற்றையெல்லாம் ஆழ்ந்து சிந்தித்தால், வேறுபடு சமயமெல்லாம் புகுந்து பார்க்கில் விளங்குபரம் பொருளே!ரின் விளையாட் R.6U6ü ↑ 6U மாறுபடும் கருத்தில்லை, முடிவில் மோன வாரிதியின் நதித்திரள்போல் வயங்கிற் றம்மா!? என்ற தாயுமான அடிகளின் கருத்து நம் கவிஞரின் கருத் திற்கு அடிப்படையாக இருப்பதைக் கண்டு மகிழலாம். 9. தாயுமான் சுவாமி பாடல்-630