பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198 சைவசித்தாந்தம் - ஓர் அறிமுகம் ஆகாமிய வினை பிராரத்தமாய்ப் பக்குவப் படும்வரை சஞ்சிமாய்க் கிடக்கும். இவற்றுள் பக்குவப்பட்டவை பிராரத்த மாய் வரும். வினை தன் பயனைத் தான் தருவதற்குரிய எல்லாச் சூழ்நிலைகளும் வாய்க்கப் பெறுவதே பக்குவப் படுதல்’ என்பதாகும். வினை அச்சூழ்நிலைகளைத் தரும் பயன் சாதி, ஆயு, போகம் என்ற மூன்றாக நடைபெறும். (அ) சாதி என்பது பிறக்கும் இனம். சாதியினை 'வருணாசிரமம் முறையில் கொண்டாலும் கொள்ளலாம். இக் காலத்தில் கூறப்பெறும் முற்போக்கு அடைந்த இனம், தாழ்த்தப் பட்ட இனம் முதலாகச் சொல்லப்பெறுவனவற்றைக் கொண்டா லும் கொள்ளலாம். இன்றைய நிலையில் உலகமளாவிய பார்வையைச் செலுத்தினால் எந்த நாட்டிலும் எந்த வகையி லேனும் எவையேனும் சில பிரிவுகள் இருந்தே வருதலைக் காண முடிகின்றது. இந்நிலைக்குரிய அரசியல், சமூக இயல் காரணங்களை இவண் ஆய்வதில் பயன் இல்லை. ஆனால் யார் என்ன முயற்சி செய்தாலும் வினையின் பயனாக அவை இருந்தே தீரும் என்பதை மட்டிலும் நாம் உளம் கொண்டால் போதுமானது. இங்ங்னமே அரசியல் போர்வையில் - நாடகத் தில்? - யார் எங்கே எந்த வகையான முயற்சிகள் செய்யினும் வினையின் பயனான சாதிப்பிரிவு ஏதேனும் ஒரு வடிவத் தில் மக்களிடையே இருந்துதான் தீரும் என்பதை மட்டும் நாம் ஈண்டு உணர்ந்தால் போதுமானது. இன்னும் இங்குச் சாதி என்பதை படைப்பு விசேடமா கக் கொண்டாலும் கொள்ளலாம். படைப்பு ஒருவகையாகக் காணப்பெறாது. மாணிக்கவாசகப் பெருமான் கூறியது போல், புல்லாய்ப் பூடாய்ப் புழுவாய்...தாவர சங்கமத்துள் எல்லாப் பிறப்பும் பிறந்து' 43. திருவா. சிவபுரா. அடி (26.31)