உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தெய்வத் திருமகன் (கவிதை).pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

27


கண்ணன் போலக் கீதை மொழியில் பேசினான். "இது கொடுமை ; பெண் அடிமை அல்லள்; தவறு செய்வதற்கு அவளுக்கு வாய்ப்பு உண்டு.

இழுபறி நிகழ்வது தவிர்க்க இயலாது ; நீ தவறு செய்யாதே அது உனக்குப் பெருமை" என்று அறிவுரை தந்தான்.

கற்பு என்று சொல்லி மகளிரை அடக்குவது அவர்களை ஒடுக்குவது அறியாமை; தெரியாமை.

அதை இருவர்க்கும் பொதுநிலை வைப்போம் என்று கூறுவது உயர்வு.

தவறு செய்வதற்கு இருவர்க்கும் வாய்ப்பு உண்டு; அதை வைத்துப் பிரிவு தேவை இல்லை" என்றான்.

அவன் அறிவுரையைத் தவசியால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை; என்றாலும் அவள் தனக்குத் தேவைப்பட்டாள்