வள்ளவர் கோட்டம்●
14
● கவியரசர் முடியரசன்
வள்ளுவர் கோட்டம் 9 14 °. ைகவியரசர் முடியரசன் ல் சென்னை சென்று திரைப்படத்துறையில் ஈடுபட்டார்.கண்ணாடி மாளிகை என்ற திரைப்படத்திற்குப் பாடல், உரையாடல் எழுதினார். திரைத்துறையில் சிறுமைகளைக் கண்டு வெறுப்புற்று, தம் இயல்புக்கும், கொள்கைக்கும், அத்தொழில் சிறிதும் ஒத்து வராததால் திரைத் துறையிலிருந்து வெளியேறினார். (1961) இ மீண்டும் காரைக்குடியில் தமிழாசிரியர் பணி (1962). * இந்தி எதிர்ப்புப் போரில் ஈடுபட்டதாகக் காவல் துறையினர் வழக்கு (1965). * பூங்கொடி நூலுக்குத் தமிழ்நாடு அரசு தடைசெய்ய ஏற்பாடு (1966). ஆட்சி மாற்றத்தால் 'பூங்கொடி தடை ஏற்பாடு விளக்கம் (1967). 8 தமிழாசிரியப் பணி ஓய்வு (1978). கி. மதுரைப் பல்கலைக் கழகம் தமிழியற் புலத்தில் நாடகக் காப்பியப் பணி (1985). * திராவிட நாடு, முரசொலி, முத்தாரம், குடியரசு, விடுதலை, போர்வாள், முல்லை, எழில், தென்றல், மன்றம், அழகு, முருகு, பொன்னி, குயில், கதிரவன், நம்நாடு, வாரச் செய்தி, பிரசண்ட விகடன், தமிழ்ப்பாவை, காதல், தாமரை, புதுவாழ்வு, தனியரசு, சங்கொலி, வாழ்வு, தோழன், திராவிடமணி, தமிழ்ச்சுவை, தமிழ், போர்முரசு, பாசறை, இன முரசு, இன முழக்கம், நித்திலக் குயில், செந்தமிழ்ச் செல்வி, கலைக்கதிர், அமுத சுரபி, கழகக் குரல், மறவன் மடல், சமநீதி, உரிமை வேட்கை, தென்னரசு, தென்னகம், தமிழ்முரசு, தமிழ்நாடு, அலை ஒசை, தமிழ்நேசன் (மலேசியா), கவிதை, முல்லைச்சரம், தமிழரசு, குங்குமம், தினமணி கதிர், தினமணி ஆகிய இதழ்களிலும் மற்றும் பல்வேறு இதழ்களிலும் கவிஞர் தமது எழுத்தோவியங்களைத் திட்டியுள்ளார். 8 கவிஞரது கவிதைகள் பல சாகித்திய அகாதமியால் இந்தியிலும், ஆங்கிலத்திலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. கன்னடத்திலும், உருசிய மொழியிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.