உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கவியரசர் முடியரசன் கடித இலக்கியம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(೯ಾತäಣEE) அன்புள்ள அரசு, உன் கடிதம் கிடைத்தது. பாடங்களை ஒழுங்காகப் படித்து வருவதாக எழுதியிருப்பது கண்டு மகிழ்வெய்து கிறேன். உடல் நலனை நன்கு பேணி வைத்துக்கொள். உடம்பை எப்பொழுதும் தூய்மையாக வைத்துக்கொள். உடம்பு தூய்மையாக இருப்பின் உள்ளமும் தூய்மைப்படும். பாடங்கள் மனத்தில் நன்கு பதிய - பதிந்தவை மறவாதிருக்க உடற்றுாய்மை உறுதுணை செய்யும்; நினைவாற்றலுக்கு அது நன்மருந்து. வைகறைத் துயில் எழுதலும் இளங்காலையில் நீராடலும் அதனைத் தரவல்லன. இவ்வொழுக்கங்களில் மிகவும் உன்னிப்பாக இருத்தல் வேண்டும். எல்லாராலும் எளிதாகக் கடைப்பிடிக்க முடியாதது ஒழுக்கம் என்று சிலர் எண்ணுவர். இன்னும் சிலர் இல்வாழ் வானுக்குத்தான் ஒழுக்கம் வேண்டப்படுவது என்றுங் கூறுவர். ஒழுக்கத்திற்கு அவ்வாறு வரையறை கூறுவது தவறு. அவ்வாறாயின் மற்றையோர்க்கு எவ்வாறு ஒழுக்கம்