SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS நன்றியுணர்வும், நற்பண்பும் இல்லாரிடம் நட்புச் செய்தல் கூடாது. அத்தகையவர் தொடர்பை ஒன்று கொடுத்தாயினும் விட்டு விடுதல் வேண்டும். இன்பத்தில் துணையாவார் போலக் கூடி வாழ்ந்து, துன் பத்தில், விட்டு நீங்கும் இயல்புடையாரை நண்பராகக் கொள்ளு வதைவிடத் தனிமையே சிறந்தது. உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார்தம் தொடர்பு, கனவின் கண்ணும் இன்னாததாகும். சொல்லொன்றும் செயலொன்றுங் கொண்டார் நட்பு, உன்னைச் சிறிதும் அணுகாமல் காத்துக்கொள்ள வேண்டும். சிலர், உன்னைக் கண்ட பொழுது, பணிந்து, வணங்கிய சொற்களைப் பகருவர். தோற்றத்தில் பணிவும், சொல்லில் வணக்கமும் இருப்பதால் நம்பி விடுதல் கூடாது. பகருவோன் எத்தகைய பண்பினன் என ஆய்ந்து பார்த்தல் வேண்டும். வில்லும் வளையத்தான் செய்கிறது. ஆனால், அவ்வளைவு அம்பைப் பாய்ச்சுவதற் காகத்தான் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். தொழுதுவரும் கையத்தே பழுது தரும் படைக்கலமும் மறைந்திருக்கும்; அழுது வருங் கண்ணிருள் அழிவு தரும் வஞ்சகமும் கலந்திருக்கும். ஆதலின் வெளித் தோற்றத்தைக் கொண்டே ஒரு முடிபுக்கு வருதல் கூடாது. நல்லவரை ஆராய்ந்தறிந்து, அவருடன் தொடர்பு கொண்ட பிறகு, எப்பொழுதேனும் அவர், வெறுக்கத்தக்க செயல்களைச் செய்து விடின், அவரை வெறுத்தொதுக்குதல் கூடாது. அன்பின்மையாற் செய்தனர் என்று எண்ணுதல் தவறு; அறியாது செய்தனர் அல்லது மிக்க வுரிமையாற் செய்தனர் என்று கருதிப் பொறுத்துக் கொள்ளுதல்
பக்கம்:கவியரசர் முடியரசன் கடித இலக்கியம்.pdf/161
Appearance