காரதியும் காரதிதாசனும் எங்கெங்குக் காணினும் சக்தியடா தம்பி ஏழுகடல் அவள் வண்ணமடா! அங்குத் தங்கும் வெளியினிற் கோடியண்டம் -அந்தத் தாயின்கைப் பக்தென ஓடுமடா!-ஒரு கங்குலில் ஏழு முகிலினமும் வந்து கர்ச்சனை செய்வது கண்டதுண்டோ:-எனில் மங்கை நகைத்த ஒலியிலெலாம்-அவள் மந்த நகையங்கு மின்னுதடா! காளை ஒருவன் கவிச்சுவையைக் கரை காண கினைத்த முழுநினைப்பில்-அன்னை தோளசைத் தங்கு நடம்புரிவாள்-அவன் தொல்லறி வாளர் திறம்பெறுவான்: ஒரு வாளைச் சுழற்றும் விசையினிலே-இந்த வைய முழுவதும் துண்டு செய்வேன்!-என நீள இடையின்றி நிேனைத்தால் ஆம்-அம்மை நேர்படு வாள் உன்றன் தோளினிலே! என்ற கனகசுப்புரத்தினத்தின் பாடலைப் பாரதியார் "பூரீ சுப்பிரமணிய பாரதியாரின் கவிதா மண்டலத்தைச் சார்ந்த கனகசுப்புரத்தினம் எழுதியது" என்னும் குறிப்புடன், சென்னை 'சுதேசமித்திரன்’ பத்திரிகைக்கு அனுப்பப்பட்டுப் பிரசுரமானது. இப் பாடலே கனக சுப்புரத்தினத்தைத் தமிழ்க் கவிதை உலகிற்கு அறிமுகம் செய்துவைத்தது. பாரதியார் தமிழ்மொழிமாட்டுப் பெரும் பற்றுக் கொண்டவர் என்பதனைக் கீழ்க்காணும் சான்றுகள் கொண்டு தெளியலாம். "இந்த நிமிஷத்தில் தமிழ் ஜாதியின் அறிவு, கீர்த்தி, வெளியுலகத்திலே பரவாமல் இருப்பதை நானறிவேன்,
பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/8
Appearance