42 பாரதியும் பாரதிதாசனும் அறம்ஒன் றேதரு மெய்யின்பம் என்ற கல் லறிஞர் தம்மை அனுதினம் போற்றுவேன் பிறவிரும்பி உலகினில் யான்பட்ட பீழை எத்தனை கோடி நினைக்கவும் திறன் அழிந் தென் மனம்உடை வெய்துமால் தேசத்துள்ள இளைஞர் அறிமினோ அறம்ஒன் றே தரு மெய்யின்பம்; ஆதலால் அறனையே துணை என்று கொண் டுய்திரால் என்று பாடினார். அறத்தை வலியுறுத்திய திருவள்ளுவர் சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லியினைத் தவிர்க்க வேண்டுவது குறித்தும் பாடியுள்ளார். சினம் என்னும் சேர்ந்தாரைக்கொல்லி இனமென்னும் ஏமப் புணையைச் சுடும் (குறள : 306) முன்னோர் மொழிபொருளைப் பொன்னேபோல் போற்றுபவர் பாரதியார் என்பதனைப் பின்வரும் பாரதியின் பாடற்பகுதியால் அறியலாம். கோனாகிச் சாத்திரத்தை யாளும் மாண்பார் ஜகதீச சந்திர வசு கூறுகின்றான் (ஞானானுபவத்தில் இது முடிவாம் கண்டீர்) நாடியிலே அதிர்ச்சி யினால் மரணம் என்றான் கோபத்தால் காடியிலே அதிர்ச்சி உண்டாம். அடுத்து, பொருள்தனைப் போற்றிவாழ்' என்னும் தமிழ் மூதுரைப்படி, திருவள்ளுவர் பொருளின் இன்றியமையாமையினைப் பலவிடங்களிற் புலப்படுத்தி யுள்ளார். -
பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/42
Appearance