உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-2.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 மாநகர்ப்புேலவர்கள்

பாய்வதால், சோழநாடு சோற்றுவளம் படைத்துத் திகழ் கிறது; அவ்வாறு சோனுட்டிற்கு வளம்பல வழங்கும் காவிரி, அவ்வாற்றலேப் பெறுதற்குக் காரணமாயது அதன் பிறப்பிடமே ; அது மழையரு மலைகளிடையே பிறந்த பெருமையுடையது. காவிரியாற்றைப் பாராட்ட விரும்பிய புலவர், அதன் பிறப்பிடம் கூறிப் பாராட்டும் புலமைகலம் போற்றற்குரியது.

"வான்பொய்ப்பினும் தான்்.பொய்யா

மலைத்தலேய் கடற்காவிரி - புனல்பரந்து பொன் கொழிக்கும்.' (பட்டினப் : தி - எ) கடியலூர் உருத்திரங்கண்ணனர் புலமைநலம் சான்ற பெரியாராவர். அவர் பாக்கள் அரிய நயம் பல செறிந்து தோன்றும் அவர் எதைக் கூறினும் ஏதேனும் ஓர் அரும் பொருளே உள்ளடக்கியன்றிக் கூருர். தொண்டைமான் இளந்திரையனேப் பாராட்ட முன்வந்த புலவர், "அகலிரு விசும்பின் பாயிருள் பருகிப் பகல் கான்று எழுதரு பல் கதிர்ப் பருதி,' என்று தொடங்கிப் பாடியுள்ளார். இருள் ஒழித்து ஒளிவிட்டு எழுந்த ஞாயிறு என்பதே இதன் பொருள். இறை இருக்ளக் குடித்துப் பகலைக் கக்கி எழுந்த ஞாயிறு என்று கூறியுள்ளார் : உலகில் நல்லனவற்றை உட் கோடலும், தீயனவற்றைக் கக்குதலுமே இயற்கை; இவ் வியற்கைக்கு மாருன செய்கையினே ஞாயிற்றுக்கு ஏற்றி, செயற்கரிய செய்வார் பெரியர்" என்ற இலக்கணத்திற்கு இலக்கியமாகிச் சிறந்தான்் ஞாயிறு என்று பாராட்டி யுள்ளார் ; கடற்றிரை தந்த தொண்டைமான் இளந்திரை யனேப் பாராட்டவந்த இப்பர்ட்டின் தொடக்கத்தே, இருள் போக்கி, ஒளிவிட்டுக் கடலிடையே தோன்றும் ஞாயிற் றைக் குறிப்பிட்டது, அவன் பிறந்த குடியை உட்கொண் டாதல் உணர்க. திரையன் பிறந்த பல்லவர் குடிக்கும் சளுக்கியர்க்கும் தொன்றுதொட்டே பகைமை உண்டு. வன் தன் பகைவராகிய சளுக்கியரை வென்ருன் சளுக் யேர்க்குக் கொடி பன்றி. பன்றி இருள்கிறம் உடையது; ஞாயிறுபோல் கடற்றிரையிடத்தே தோன்றிய திரையன்,