உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-2.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 மாதகர்ப் புலவர்கள்

பெயரின்கண் வரும் தொண்டை என்ற சொல், துரோணம் என்ற சொல்லின் மரூஉ முடிபாம் எனக் கூறித் திரையன் வரலாறு குறித்து நச்சிர்ைக்கினியர் கூறியதை மறுத்து வேறு கூறுவர், வேறு சிலர். இது, கடியலூர் உருத்திரங் கண்ணர்ை பற்றிக் கூறவந்த நூல் : திரையனப்பற்றிக் கூறுவது அல்ல இதன் குறிக்கோள் ; ஆதலின், அவன் வரலாறுபற்றிய ஆராய்ச்சியினே கண்டு மேற்கொண்டிலேன்; அவன் குறித்து அவர் கூறுவனவற்றைபட்டும் குறிப்பிடல் பொருந்தும்.

திரையன், திருமாலே முதல்வகைக்கொண்ட குடியிற் பிறந்தவன்; திரைதரு மரபின்வழி வந்தவன் ; சேர, சோழ, பாண்டியர் மூவரினும் சிறந்தவன்; கடலிற் பிறந்த வளைகள் பலவற்றுள்ளும் வலம்புரிச்சங்கு சிறந்ததாதல் போல் சிறப்புடையான் : அல்லது கடிந்து அறம் விளங்க காடாண்டவன் ; வேற்படை பல வுடையான் திரையன் எனும் பெயருடையான் ; ர்ேப்பேர் எனும் பெயருடைய தோர் ஊர் இவனுக்கு உரித்து : காஞ்சியைத் தலைநக ராகக்கொண்டு நாடாண்டவன் : யானேகள் கொணரும் விறகினல் வேள்விவேட்கும் அந்தணர்கள் கிறைந்த வேங் கடமலேயும் அவன் ஆட்சிக் குட்பட்டதே திரையன், தொண்டையர்குடி வந்தவன் ; தொண்டையர், பகைவர் பணிந்து திறை தர முன்வரினும், அதை ஏற்றுக்கொள்ள எண்ணுராய், அவரை அழித்து அவர்பொருள்கள் அனைத் தையும் கொள்ளும் ஆற்றல் வாய்ந்தவராவர். இவ்வளவே இந்நூலால் அறியத்தக்கன.

"இருகிலங் கடந்த திருமறு மார்பின்

முக்கீர் வண்ணன் பிறங்கடை, அங்கீர்த் திரைதரு மரபின் உரவோன் உம்பல்: மலர்தலை உலகத்து மன்னுயிர் காக்கும் முரசுமுழங்கு தான்ே மூவருள்ளும் இலங்குநீர்ப் பரப்பின் வள்ைமிக் கூறும் வலம்புரி அன்ன வசைநீங்கு சிறப்பின் அல்லது கடிந்த அறிம்புரி செங்கோல் பல்வேல் திரையன்.