உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-2.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடியலூர் உருத்திரங் கண்ணணுர் 27°

உணரல் இயலும் வெளவாலே, அவள் நன்கு அறிதற்கு, அதற்கும் தலேவற்கும் உள்ள ஒர் ஒற்றுமையும் காரண மாம்; அது, தான்் பகற்காலமெல்லாம் வாழ்ந்திருந்த. மரத்தைத் தனியேவிட்டுப் பழம் தேடிப் போகிறது : தலைவனும் தான்் தனித்திருக்கப் பொருள் தேடிப் போயுளான். இதல்ை வெளவாலே அவள் நன்கு அறிக் துளாள் ; அதிலும், தலைவன் பிரிந்திருக்கும் காலத்தில் அறிந்துளாள். இவ்வாறு அறிந்து வருந்தினுள் ஒரு. பெண், தன் கணவன் பொருள் தேடிப் பிரிந்து போன காலத்து எனப் பாடி அக்காலப் பெண் ஒருத்தியின் உள் ளத்தையும் உணர்த்தியுள்ளார்:

"நெடுநீர் ஆம்பல் அடைப்புறத் தன்ன

கொடுமென் சிறைய கூருகிர்ப் பறவை அகல் இலேப் பலவின் சாரல் முன்னிப் பகல் உறை முதுமாம் புலம்பப் போகும் சிறுபுன் மாலே உண்மை - - அறிவேன்.தோழி! அவர்க் காணு ஊங்கே."

•. - - (குறுங் : உடுஉ}. கடியலூர் உருத்திரங்கண்ணனரின் பெருமையினையும் அவர் பாக்களின் நலத்தினையும் கூறிக்கொண்டே செல்லின் ஏடு விரியும்; அவற்றின் நலத்தினே எல்லாம் அவற்றை. அறிந்து அகமகிழ்வாராக.