பால்வெளி அண்டம்

விக்கிமூலம் இலிருந்து

பால்வெளி அண்டம்,இரவுவானில் ஒளிப்புள்ளிகள்போலப் புலப்படும் விண்மீன்கள் எல்லாம் தொலைவில் உள்ள சூரியன்கள்தாம்.இவற்றுள் பல, சூரியனைப்பொல நூறு அல்லது ஆயிரம் மடங்கு பெரிய விண்மீன்கள்.இவை மிகமிகத்தொலைவில் உள்ளதால் வெறும் ஒளிப்புள்ளிகளாகத் தெரிகின்றன,அவற்றில் சிலவற்றைக் கோள்கள் சுற்றிவருகின்றன என்று வானவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.சூரியன் உட்பட,கண்களுக்குப் புலப்படும் விண்மீன்கள் எல்லாம் பால்வெளி அண்டத்தைச் சார்ந்தவை.சில நாள்களில் தெளிந்த இரவுவானில் வெண்மை நிற்த்தில் ஒளிறும் பட்டை போன்ற பகுதி புலப்படும். இதனை நமது முன்னோர் பால்வெளி எனவும்'ஆகாய கங்கை' எனவும் அழைத்தனர்.பால்வெளியும் மிக அடர்த்தியான விண்மீன் தொகுதிதான் இந்த விண்மீன்கள் வெகு தொலைவில் உள்ளதால் புள்ளிபோலக் காட்சி தருகின்றன.நாம் அனைவரும் இந்தப் பால்வெளி அண்டத்திலுள்ள சூரியக் குடும்பத்தின் ஒர் அங்கமான பூமியில் தன் வாழ்கிறோம்.

மேற்கோள்கள்[தொகு]

ஆறாம் வகுப்பு-தொகுதி 2-165

"https://ta.wikisource.org/w/index.php?title=பால்வெளி_அண்டம்&oldid=493895" இலிருந்து மீள்விக்கப்பட்டது