புறநாநூறு
புறநானூறு என்னும் தொகைநூல் நானூறு பாடல்களைக் கொண்ட புறத்திணை சார்ந்த ஒரு சங்கத் தமிழ் நூலாகும். இது சங்க காலத் தமிழ் நூல் தொகுப்பான எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று. இந் நூலில் அடங்கியுள்ள பாடல்கள் பல்வேறு புலவர்களால் பல்வேறு காலங்களில் பாடப்பட்டவை. அகவற்பா வகையைச் சேர்ந்த இப்பாடல்கள், 150-க்கும் மேற்பட்ட புலவர்களால் எழுதப்பட்டவை. புறநானூற்றின் பாடல்கள் சங்ககாலத்தில் ஆண்ட அரசர்களைப் பற்றியும் மக்களின் சமூக வாழ்க்கை பற்றியும் எடுத்துரைக்கின்றன.
இறைவனின் திருவுள்ளம்! போரும் சோறும்! வன்மையும் வண்மையும்! தாயற்ற குழந்தை! அருளும் அருமையும்! தண்ணிலவும் வெங்கதிரும்! வளநாடும் வற்றிவிடும்! கதிர்நிகர் ஆகாக் காவலன்! ஆற்றுமணலும் வாழ்நாளும்! குற்றமும் தண்டனையும்! பெற்றனர்! பெற்றிலேன்! அறம் இதுதானோ? நோயின்றிச் செல்க! மென்மையும்! வன்மையும்! எதனிற் சிறந்தாய்? செவ்வானும் சுடுநெருப்பும்! யானையும் வேந்தனும்! நீரும் நிலனும்! எழுவரை வென்ற ஒருவன்! மண்ணும் உண்பர்! புகழ்சால் தோன்றல்! ஈகையும் நாவும்! நண்ணார் நாணுவர்! வல்லுனர் வாழ்ந்தோர்! கூந்தலும் வேலும்! நோற்றார் நின் பகைவர்! புலவர் பாடும் புகழ்! போற்றாமையும் ஆற்றாமையும்! நண்பின் பண்பினன் ஆகுக! எங்ஙனம் பாடுவர்? வடநாட்டார் தூங்கார்! பூவிலையும் மாடமதுரையும்! புதுப்பூம் பள்ளி! செய்தி கொன்றவர்க்கு உய்தி இல்லை! உழுபடையும் பொருபடையும்! நீயே அறிந்து செய்க! புறவும் போரும்! வேண்டியது விளைக்கும் வேந்தன்! புகழினும் சிறந்த சிறப்பு! ஒரு பிடியும் எழு களிரும்! காலனுக்கு மேலோன்! ஈகையும் வாகையும்! பிறப்பும் சிறப்பும்! அறமும் மறமும்! தோற்பது நும் குடியே! அருளும் பகையும்! புலவரைக் காத்த புலவர்! \'கண்டனம்\' என நினை! எங்ஙனம் மொழிவேன்? கவரி வீசிய காவலன்! ஈசலும் எதிர்ந்தோரும் ! ஊன் விரும்பிய புலி ! செந்நாவும் சேரன் புகழும்! எளிதும் கடிதும்! மூன்று அறங்கள்! கடவுளரும் காவலனும்! காவன்மரமும் கட்டுத்தறியும்! புலியும் கயலும்! பாவலரும் பகைவரும்! மதியும் குடையும்! மலைந்தோரும் பணிந்தோரும்! போரும் சீரும்! என்னாவது கொல்? புற்கை நீத்து வரலாம்! நாணமும் பாசமும்! நல்லவனோ அவன்! அன்னச் சேவலே! மறவரும் மறக்களிரும்! காலமும் வேண்டாம்! குளிர்நீரும் குறையாத சோறும் இவளையும் பிரிவேன்! இனியோனின் வஞ்சினம்! உயிரும் தருகுவன்! வேந்தனின் உள்ளம்! அரச பாரம்! அதுதான் புதுமை! யார்? அவன் வாழ்க! அவர் ஊர் சென்று அழித்தவன்! பகலோ சிறிது! காணாய் இதனை! யார்கொல் அளியர்? ஊசி வேகமும் போர் வேகமும்! இருபாற்பட்ட ஊர்! புற்கையும் பெருந்தோளும்! யான் கண்டனன்! கல்லளை போல வயிறு! எம்முளும் உளன்! எவருஞ் சொல்லாதீர்! என்னையும் உளனே! புலியும் மானினமும்! எமக்கு ஈத்தனையே! மழலையும் பெருமையும்! பெருந்தகை புண்பட்டாய்! சிறுபிள்ளை பெருங்களிறு! புதியதும் உடைந்ததும்! அவன் செல்லும் ஊர்! மூதூர்க்கு உரிமை! வளநாடு கெடுவதோ! அமரர்ப் பேணியும், ஆவுதி அருத்தியும் சினமும் சேயும்! பலநாளும் தலைநாளும்! சேம அச்சு! புரத்தல் வல்லன்! யானையும் முதலையும்! தேனாறும் கானாறும்! தெய்வமும் பாரியும்! மாரியும் பாரியும்! பறம்பும் பாரியும்! மூவேந்தர் முன் கபிலர்! யாமும் பாரியும் உளமே! விறலிக்கு எளிது! உடையேம் இலமே! பறம்பு கண்டு புலம்பல்! உயர்ந்தோன் மலை! அந்தோ பெரும நீயே! குதிரையும் உப்புவண்டியும்! தந்தை நாடு! சிறுகுளம் உடைந்துபோம்! வேந்தரிற் சிறந்த பாரி! கம்பலை கண்ட நாடு! புலவரும் பொதுநோக்கமும்! பெருமிதம் ஏனோ! மயக்கமும் இயற்கையும்! வறிது திரும்பார்! புகழால் ஒருவன்! கபிலனும் யாமும்! உரைசால் புகழ்! முழவு அடித்த மந்தி! வேங்கை முன்றில்! சூல் பத்து ஈனுமோ? காடும் பாடினதோ? போழ்க என் நாவே! காணச் செல்க நீ! இம்மையும் மறுமையும்! காணவே வந்தேன்! வாழ்த்தி உண்போம்! நின்பெற்றோரும் வாழ்க! நின்னை அறிந்தவர் யாரோ? சாதல் அஞ்சாய் நீயே! தேற்றா ஈகை! மறுமை நோக்கின்று! கொடைமடமும் படைமடமும்! யார்கொல் அளியள்! தோற்பது நும் குடியே! அவள் இடர் களைவாய்! தேர் பூண்க மாவே! எம் பரிசில்! என் சிறு செந்நா! வண்மையான் மறந்தனர்! நளி மலை நாடன்! அடைத்த கதவினை! பெயர் கேட்க நாணினன்! கூத்தச் சுற்றத்தினர்! இரத்தல் அரிது! பாடல் எளிது! ஞாயிறு எதிர்ந்த நெருஞ்சி! இரண்டு நன்கு உடைத்தே! ஏறைக்குத் தகுமே! உள்ளி வந்தெனன் யானே! கொள்ளேன்! கொள்வேன்! புலி வரவும் அம்புலியும்! பின் நின்று துரத்தும்! இரவலர்அளித்த பரிசில்! தமிழ் உள்ளம்! வளைத்தாயினும் கொள்வேன்! இழத்தலினும் இன்னாது! யாமும் செல்வோம்! ஒவ்வொருவரும் இனியர்! கேழல் உழுத புழுதி! தருக பெருமானே! உலைக்கல்லன்ன வல்லாளன்! வாழ்க திருவடிகள்! பகைவரும் வாழ்க! யான் வாழுநாள் வாழிய! அவலம் தீரத் தோன்றினாய்! என் நெஞ்சில் நினைக் காண்பார்! சாயல் நினைந்தே இரங்கும்! யானையும் பனங்குடையும்! இன்சாயலன் ஏமமாவான்! பருந்து பசி தீர்ப்பான்! நீயும் வம்மோ! இன்னே சென்மதி! பிறர்க்கென முயலுநர்! கற்கை நன்றே! யானை புக்க புலம்! ஆறு இனிது படுமே! வேந்தர்க்குக் கடனே! ஆண்கள் உலகம்! மக்களை இல்லோர்! உண்பதும் உடுப்பதும்! எலி முயன் றனையர்! நரையில ஆகுதல்! பெரியோர் சிறியோர்! ஒக்கல் வாழ்க்கை! முழவின் பாணி! எல்லாரும் உவப்பது! குறுமகள் உள்ளிச் செல்வல்! நல் குரவு உள்ளுதும்! மறவாது ஈமே! கலிகொள் புள்ளினன்! பரந்தோங்கு சிறப்பின் பாரி மகளிர்! இவர் என் மகளிர்! கைவண் பாரி மகளிர்! இரவலர்க்கு உதவுக! அதனினும் உயர்ந்தது! பெட்பின்றி ஈதல் வேண்டலம்! எத்திசைச் செலினும் சோறே! வருகென வேண்டும்! வாணிகப் பரிசிலன் அல்லேன்! நல்நாட்டுப் பொருந! நினையாதிருத்தல் அரிது! நாணக் கூறினேன்! யாம் உம் கோமான்? நினையும் காலை! நல்வினையே செய்வோம்! அல்லற்காலை நில்லான்! அவனுக்கும் இடம் செய்க! நெஞ்சம் மயங்கும்! சான்றோர்சாலார் இயல்புகள்! உணக்கும் மள்ளனே! கலங்கனேன் அல்லனோ! வைகம் வாரீர்! என் இடம் யாது? நடுகல்லாகியும் இடங் கொடுத்தான்! இறந்தோன் அவனே! வலம்புரி ஒலித்தது! இரந்து கொண்டிருக்கும் அது! நயனில் கூற்றம்! ஒல்லுமோ நினக்கே! மறந்தனன் கொல்லோ? நீ இழந்தனையே கூற்றம்! புகழ் மாயலவே! கொள்வன் கொல்லோ! பொய்யாய்ப் போக! உண்டனன் கொல்? அருநிறத்து இயங்கிய வேல்! கலந்த கேண்மைக்கு ஒவ்வாய்! சோற்றுப் பானையிலே தீ! தகுதியும் அதுவே! இடுக, சுடுக, எதுவும் செய்க! பிறர் நாடுபடு செலவினர்! விசும்பும் ஆர்த்தது! முல்லையும் பூத்தியோ? யாண்டு உண்டுகொல்? கலைபடு துயரம் போலும்! என்னிதன் பண்பே? பொய்கையும் தீயும் ஒன்றே! பேரஞர்க் கண்ணள்! அளிய தாமே ஆம்பல்! சுளகிற் சீறிடம்! மனையும் மனைவியும்! அவனும் இவனும்! அவனே இவன்! கூறு நின் உரையே! ஆனாது புகழும் அன்னை! முன்கை பற்றி நடத்தி! அகலிதாக வனைமோ! செருப்பிடைச் சிறு பரல்! தொடுதல் ஓம்புமதி! புனை கழலோயே! கேண்மதி பாண! கழிகலம் மகடூஉப் போல! தன்னினும் பெருஞ் சாயலரே! களிற்றடி போன்ற பறை! இன்றும் வருங்கொல்! வென்றியும் நின்னோடு செலவே! அறிவுகெட நின்ற வறுமை! கிடைத்தில கிடைத்தில கருங்கை வாள் அதுவோ! ஆண்மையோன் திறன்! மைந்தன் மலைந்த மாறே! கிழமையும் நினதே! கூடல் பெருமரம்! நீலக் கச்சை! தன் தோழற்கு வருமே! குடப்பால் சில்லுறை! சிதரினும் பலவே! பெரிது உவந்தனளே! செல்கென விடுமே! வழிநினைந்து இருத்தல் அரிதே! நெடுந்தகை புண்ணே! புலவர் வாயுளானே! அழும்பிலன் அடங்கான்! பெயர்புற நகுமே! தலைபணிந்து இறைஞ்சியோன்! பலர்மீது நீட்டிய மண்டை! காண்டிரோ வரவே! மொய்த்தன பருந்தே! ஆயும் உழவன்! மறப்புகழ் நிறைந்தோன்! மாலை மலைந்தனனே! சினவல் ஓம்புமின்! பூவிலைப் பெண்டு! வம்மின் ஈங்கு! ஊறிச் சுரந்தது! நெடிது வந்தன்றால்! தண்ணடை பெறுதல்! கலங்கல் தருமே! கலம் தொடா மகளிர்! எல்லை எறிந்தோன் தம்பி! அறிந்தோர் யார்? வேலின் அட்ட களிறு? மடப்பிடி புலம்ப எறிந்தான்! எம்முன் தப்பியோன்! சொல்லோ சிலவே! ஒண்ணுதல் அரிவை! யாண்டுளன் கொல்லோ! நாணின மடப்பிடி! என்னைகண் அதுவே! உரவோர் மகனே! சால்பு உடையோனே! காளைக்குக் கடனே! வேண்டினும் கடவன்! மனைக்கு விளக்கு! இல்லிறைச் செரீஇய ஞெலிகோல்! சீறியாழ் பனையம்! யாதுண்டாயினும் கொடுமின்! பெடையடு வதியும்! முயல் சுட்டவாயினும் தருவோம்! கண்ட மனையோள்! வன்புல வைப்பினது! கண்படை ஈயான்! உள்ளியது சுரக்கும் ஈகை! உலந்துழி உலக்கும்! வேந்து தலைவரினும் தாங்கம்! பருத்திப் பெண்டின் சிறு தீ! வரகின் குப்பை! ஈயத் தொலைந்தன! மாப்புகை கமழும்! ஆழி அனையன்! இல்லது படைக்க வல்லன்! வேல் பெருந்தகை உடைத்தே! தங்கனிர் சென்மோ புலவீர்! தூவாள் தூவான்! கடவுள் இலவே! பண்பில் தாயே! இவர் மறனும் இற்று! ஓரெயின் மன்னன் மகள்! வளரவேண்டும் அவளே! அணித்தழை நுடங்க! இழப்பது கொல்லோ பெருங்கவின்! வாள்தக உழக்கும் மாட்சியர்! ஏணி வருந்தின்று! இரண்டினுள் ஒன்று! பன்னல் வேலிப் பணை நல்லூர்! பாழ் செய்யும் இவள் நலினே! வேர் துளங்கின மரனே! பெருந்துறை மரனே! ஊர்க்கு அணங்காயினள்! வாயிற் கொட்குவர் மாதோ! தாராது அமைகுவர் அல்லர்! தித்தன் உறந்தை யன்ன! \'யார் மகள்?\' என்போய்! நாரை உகைத்த வாளை! ஊரது நிலைமையும் இதுவே? காதலர் அழுத கண்ணீர்! தொக்குயிர் வௌவும்! விடாஅள் திருவே! நீடு விளங்கும் புகழ்! பலர் வாய்த்திரார்! முள் எயிற்று மகளிர்! உடம்பொடுஞ் சென்மார்! உடம்பொடு நின்ற உயிரும் இல்லை! மகிழகம் வம்மோ! நிலமகள் அழுத காஞ்சி! மாயமோ அன்றே! வாழச் செய்த நல்வினை! பாடி வந்தது இதற்கோ? போர்க்களமும் ஏர்க்களமும்! பழுமரம் உள்ளிய பறவை! பொருநனின் வறுமை! ஆரம் முகக்குவம் எனவே! நின்னோர் அன்னோர் இலரே! அண்டிரன் போல்வையோ ஞாயிறு? பாடன்மார் எமரே! கிணைக்குரல் செல்லாது! நாடு அவன் நாடே! எஞ்சா மரபின் வஞ்சி! இலங்கை கிழவோன்! சேய்மையும் அணிமையும்! கரும்பனூரன் காதல் மகன்! கேட்டொறும் நடுங்க ஏத்துவேன்! வெள்ளி நிலை பரிகோ! நெல் என்னாம்! பொன் என்னாம்! காவிரி அணையும் படப்பை! வேண்டியது உணர்ந்தோன்! சிறுமையும் தகவும்! நூற்கையும் நா மருப்பும்! நெய்தல் கேளன்மார்! காண்பறியலரே! வேலி ஆயிரம் விளைக! அமிழ்தம் அன்ன கரும்பு! பழங்கண் வாழ்க்கை! என்றும் செல்லேன்! அவிழ் நெல்லின் அரியல்! பாடல்சால் வளன்! தண் நிழலேமே! துரும்புபடு சிதா அர்! கடவுட்கும் தொடேன்! உலகு காக்கும் உயர் கொள்கை!
இறைவனின் திருவுள்ளம்!
பாடியவர்:பெருந்தேவனார்.
பாடப்பட்டோன்: இறைவன்
கண்ணி கார்நறுங் கொன்றை; காமர் வண்ண மார்பின் தாருங் கொன்றை; ஊர்தி வால்வெள் ளேறே; சிறந்த சீர்கெழு கொடியும் அவ்வேறு என்ப; கறைமிடறு அணியலும் அணிந்தன்று; அக்கறை மறைநவில் அந்தணர் நுவலவும் படுமே; பெண்ணுரு ஒரு திறன் ஆகின்று; அவ்வுருத் தன்னுள் அடக்கிக் கரக்கினும் கரக்கும்; பிறை நுதல் வண்ணம் ஆகின்று; அப்பிறை பதினெண் கணனும் ஏத்தவும் படுமே; எல்லா உயிர்க்கும் ஏமம் ஆகிய, நீரறவு அறியாக் கரகத்துத், தாழ்சடைப் பொலிந்த அருந்தவத் தோற்கே.
போரும் சோறும்!
பாடியவர்: முரஞ்சியூர் முடிநாகராயர். பாடப்பட்டோன்: சேரமான் பெருஞ்சோற்று உதியன் சேரலாதன். திணை: பாடாண். துறை: செவியறிவுறூஉ; வாழ்த்தியலும் ஆம்.
மண் திணிந்த நிலனும், நிலம் ஏந்திய விசும்பும், விசும்பு தைவரு வளியும் வளித் தலைஇய தீயும், தீ முரணிய நீரும், என்றாங்கு ஐம்பெரும் பூதத்து இயற்கை போலப் போற்றார்ப் பொறுத்தலும், சூழ்ச்சியது அகலமும் வலியும், தெறலும், அணியும், உடையோய்! நின்கடற் பிறந்த ஞாயிறு பெயர்த்தும் நின் வெண்தலைப் புணரிக் குடகடல் குளிக்கும் யாணர் வைப்பின், நன்னாட்டுப் பொருந! வான வரம்பனை! நீயோ, பெரும! அலங்குளைப் புரவி ஐவரோடு சினைஇ, நிலந்தலைக் கொண்ட பொலம்பூந் தும்பை ஈரைம் பதின்மரும் பொருது, களத்து ஒழியப் பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்! பாஅல் புளிப்பினும், பகல் இருளினும், நாஅல் வேத நெறி திரியினும் திரியாச் சுற்றமொடு முழுதுசேண் விளங்கி, நடுக்கின்றி நிலியரோ அத்தை; அடுக்கத்துச், சிறுதலை நவ்விப் பெருங்கண் மாப்பிணை, அந்தி அந்தணர் அருங்கடன் இறுக்கும் முத்தீ விளக்கிற், றுஞ்சும் பொற்கோட்டு இமயமும், பொதியமும், போன்றே!
வன்மையும் வண்மையும்!
பாடியவர்: இரும்பிடர்த் தலையார். பாடப்பட்டோன்: பாண்டியன் கருங்கை ஒள்வாள் பெரும்பெயர் வழுதி. திணை: பாடாண். துறை : செவியறிவுறூஉ; வாழ்த்தியலும் ஆம். சிறப்பு : இரும்பிடத் தலையாரைப் பற்றிய செய்தி.
உவவுமதி உருவின் ஓங்கல் வெண்குடை நிலவுக்கடல் வரைப்பின் மண்ணகம் நிழற்ற, ஏம முரசம் இழுமென முழங்க, நேமி யுய்த்த நேஎ நெஞ்சின், தவிரா ஈகைக், கவுரியர் மருக! செயிர்தீர் கற்பின் சேயிழை கணவ! பொன் னோடைப் புகர் அணிநுதல் துன்னருந் திறல் கமழ்கடா அத்து எயிரு படையாக, எயிற்கதவு இடாஅக் கயிறுபிணிக் கொண்ட கவிழ்மணி மருங்கில். பெருங்கை யானை இரும்பிடர்த் தலையிருந்து மருந்தில் கூற்றத்து அருந்தொழில் சாயாக் கருங்கை ஒள்வாள் பெரும்பெயர் வழுதி! நிலம் பெயரினும், நின்சொற் பெயரல்; பொலங் கழற்காற்,புலர் சாந்தின் விலங் ககன்ற வியன் மார்ப! ஊர் இல்ல, உயவு அரிய, நீர் இல்ல, நீள் இடைய, பார்வல் இருக்கைக், கவிகண் நோக்கிற், செந்தொடை பிழையா வன்கண் ஆடவர் அம்புவிட, வீழ்ந்தோர் வம்பப் பதுக்கைத் திருந்துசிறை வளைவாய்ப் பருந்திருந்து உயவும் உன்ன மரத்த துன்னருங் கவலை, நின்நசை வேட்கையின் இரவலர் வருவர்! அது முன்னம் முகத்தின் உணர்ந்து, அவர் இன்மை தீர்த்தல் வன்மை யானே.
தாயற்ற குழந்தை!
பாடியவர்: பரணர்.
பாடப்பட்டோன் : சோழன் உருவப் ப·றேர் இளஞ்சேட் சென்னி.
திணை: வஞ்சி. துறை: கொற்ற வள்ளை.
சிறப்பு : சோழரது படைப் பெருக்கமும், இச் சோழனது வெற்றி மேம்பாடும்.
வாள்,வலந்தர, மறுப் பட்டன செவ் வானத்து வனப்புப் போன்றன! தாள், களங்கொளக், கழல் பறைந்தன கொல் ஏற்றின் மருப்புப் போன்றன; தோல்; துவைத்து அம்பின் துனைதோன்றுவ, நிலைக்கு ஒராஅ இலக்கம் போன்றன; மாவே, எறிபதத்தான் இடங் காட்டக், கறுழ் பொருத செவ் வாயான், எருத்து வவ்விய புலி போன்றன; களிறே, கதவு எறியாச், சிவந்து, உராஅய், நுதி மழுங்கிய வெண் கோட்டான், உயிர் உண்ணும் கூற்றுப் போன்றன; நீயே, அலங்கு உளைப் பரீஇ இவுளிப் பொலந் தேர்மிசைப் பொலிவு தோன்றி, மாக் கடல் நிவந் தெழுதரும் செஞ் ஞாயிற்றுக் கவினை மாதோ! அனையை ஆகன் மாறே, தாயில் தூவாக் குழவி போல, ஓவாது கூஉம், நின் உடற்றியோர் நாடே.
அருளும் அருமையும்!
பாடியவர்: நரிவெரூஉத் தலையார். பாடப்பட்டோன்: சேரமான் கருவூரேறிய ஒள்வாட் கோப்பெருஞ் சேரல். திணை: பாடாண். துறை: வெவியறிவுறூஉ: பொருண் மொழிக் காஞ்சியும் ஆம். சிறப்பு: பார்வையானே நோய் போக்கும் கண்ணின் சக்தி பற்றிய செய்தி.
எருமை அன்ன கருங்கல் இடை தோறு, ஆனிற் பரக்கும் யானைய, முன்பின், கானக நாடனை!நீயோ, பெரும! நீயோர் ஆகலின், நின் ஒன்று மொழிவல்; அருளும் அன்பும் நீக்கி நீங்கா நிரயங் கொள்பவரொடு ஒன்றாது, காவல், குழவி கொள் பவரின், ஓம்புமதி! அளிதோ தானே; அது பெறல்அருங் குரைத்தே.