வஞ்சிமாநகரம்.
127
(Tirtu-karur) வஞ்சியாதல் வேண்டுமென்றும், அதற்கேற்ப அங்குள்ள பேரியாறே நூல்களிற் கூறப்பட்டபடி, ஆன்பொ ருநையாதல் வேண்டுமென்றும் ஒரு புதிய கொள்கையை நாட்ட, அதனையே சரித்திரவறிஞர் பலரும் பின்பற்றுவாரா யினர். இக் கொள்கைக்கு ஆதாரமாயிருப்பதெல்லாம், கரு ஆரென்ற பெயரொற்றுமையொன்றைத் தவிர, வேறு சாதன மில்லை. இங்ஙனம் பெயரொப்பொன்றையே கொண்டு, நாம் ஒரு முடிவுபடுத்தல் எங்ஙனம் கூடும்? இனி, வஞ்சியிலி ருந்த செங்குட்டுவன் 'மஞ்சு சூழ்சோலை மலை காண்குவம் என்று, தன் பரிவாரங்களுடன் புறப்பட்டுப் பேரியாற்றை யடைந்தானென்று முன்னமே சொன்னோம். இதனால், மலை வளமில்லாததோர் இடத்தே அவன் தலைநகர் அமைந்திருந்த தாதல் வேண்டுமன்றோ? மேற்குமலைத்தொடரின் அடிவா ரத்துள்ள திருக்கரூரே செங்குட்டுவன் தலைநகராயின், மலை வளங் காண்டல் வேண்டி அவன் பேரியாற்றங்கரை சென்றா னென்று சிலப்பதிகாரங் குறிப்பதில் வியப்புத்தான் என்னை? இதனால், வஞ்சியென்பது, ஆம்பிராவதி அல்லது ஆன்பொ ருநைப் பக்கத்ததும், மலைவளமில்லாததுமான கருவூரேயா தல் திண்ணமென்க. இங்ஙனமாயின், இக்கருவூரிலிருந்து செங்குட்டுவன் பிரயாணித்த பேரியாற்றங்கரை உத்தேசம் 300-மைல் தூரமுடையதாகல்வேண்டும்[1]. * இவ்விடத்தே ஓர் ஆக்ஷேபத்தைச் சிலர் கூறுகின்றனர்; அஃதாவது - மலை வளங் காணச் சென்ற செங்குட்டுவன் 300-மைல் பிரியாணித் தவனாயின், அந்நெடும் பிரயாணத்தில் அவன் இடையிற்றங்
கியே சென்றிருத்தல் வேண்டும்; அங்ஙனஞ் சென்ற செய்
- ↑ * அறுபதின் காத தூரமென்பர், அடியார்க்குநல்லார். (சிலப். பதிகம். 3. உரை).