உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சேரன் செங்குட்டுவன்.djvu/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரசியல்.

149


செங்குட்டுவன் காலத்தே கற்பின் மாட்சியை நிறுவிய பத் தினிகளிடம் தெய்வ பாவனை வைத்து - வீரர்க்குச் செய்வது போலக் - கற்காண்டலும், கல்லெடுத்தலும், அதனை நீர்ப் படுத்துத் தூய்மை செய்தலும், பிரதிஷ்டித்தலும், வாழ்த்து தலும் பெருமாபாயிருந்தன என்பது மேற்குறித்த வஞ்சிக் காண்டப் பகுதிகளால் நன்கறியப்படும். கண்ணகியின் கற் பினை வீரக்கற்பு அல்லது மறக்கற்பு என்றும், அவளை வீர பத்தினி யென்றும் [1]* அடிகள் கூறியதற்கேற்ப, வீரர்க்குரிய தாக நடைபெற்றுவந்த நடுகல் வழக்கத்தைக் கண்ணகிமுத லியோர்க்கும் பண்டையோர் கொண்டனர் போலும். இவ் வாறு வீரசுவர்க்கம் பெற்ற சூரர்கட்குமட்டுமன்றி, சக்கம் னஞ் செய்த பத்தினிகட்கும் கல் நாட்டிவந்த வழக்கமானது, பிற்காலத்தே பிரபலமாகவிருந்த தென்பது, தென்னாட்டின் பல பாகங்களிலும் அத்தகைய வீரக்கற்களும் ஸதிகற்களும் விசேடமாகக் காணப்படுதலால் விசதமாகின்றது. பிற்கூறிய ஸதிகல்லை மாஸ்திகல் என்பர் கன்னட நாட்டார். (இது மஹா ஸதி கல் என்பதன் மரூஉ) ஸ்ரீமாந் - கோபிநாதராயரவர்கள் செந்தமிழ்ப் பத்திரிகையில் எழுதிய சிறந்த ஆராய்ச்சியுரை யொன்றில் அவ்விருவகைக் கற்களின் மாதிரிகைகளாகக் காட்டிய படங்களை அடுத்த பக்கங்களிற் கண்டுகொள்க.


பண்டையரசர்கள் மேற்கூறியவாறு வீரபத்தினிகளைச் சிறப்பித்தற்குரிய சிலைகளை இமயம் பொதியம் போன்ற பெரிய பர்வதங்களினின்றும் எடுத்துவருதலும், அவ் வெடுத்தவற்றைக் கங்கை காவிரி போன்ற புண்ணிய நதிகளில் நீராட்டித் தூய்மை செய்வித்தலும், அம்முயற்சியில் இடையூறு

  1. * ஆரஞருற்ற வீரபத்தினி (பதிக