வேளிர் வரலாறு. இனி, சளுக்கரும் வேளிரும் ஒரேகுலத்தவர் என்பதை மற் றொரு தக்க ஏதுவும் வலியுறுத்துகின்றது. முற்காலத்தே மகத நாடாண்ட ஆந்திர சக்கரவர்த்திகளின் வழியினராய்த் தக்ஷிணத் துக்கு வந்த யாதவக்கிளைகளில் சளுக்கரும் ஒருவரென்பது முன் குறிக்கப்பட்டதன்றோ , ஆந்திரராகிய இச்சளுக்கரைப் பழைய தமிழ் நிகண்டுகள் வேள்குலத்தவர் என்று கூறுதற்கேற்ப, இவ் வேளிர் மரபினனும் கடையேழுவள்ளல்களில் ஒருவனுமாகிய வேள் - ஆய் என்பவனை அண்டிரன் என்ற பெயராற் சங்கச் செய்யுள்கள் குறிக் கின்றன.* இவ் அண்டிரன் என்ற சொல்லை நோக்குமிடத்து, அதற்கு வேறு சிறந்த தமிழ்ப்பொருள் காணப்படாமையின், அப் பதம்- வேள் - ஆயின் குலப்பெயராகிய ஆந்திர சப்தத்தின் திரிபாக வழங் கியதென்றே சொல்லலாம். ஆந்திரன், மேலோன் என்னும் பொரு ளுடையது என்பர். இவ் ஆந்திர பதம் பழைய கிரேக்காசிரியரால் அண்டg (Andarae) என மருவி வழங்கப்பட்டிருத்தலுங் காண்க. எனவே, ஆந்திர ஜாதியினராகிய சளுக்கர் பண்டைத் தமிழ் வேளி ரின் வேறன்றி ஒரு குலத்தவரென்ற கொள்கையே பல்லாற்றானும் தெளிவாகின்றது. இத்துணையுங் கூறிப்போந்தவைகளால், வேளிர் எனப் பழைய தமிழ் நூல்களிற் குறித்த கூட்டத்தார், யாதவ - வமி சத்தவராய்த் துவாரகையினின்று வந்து தென்னாடாண்டவர் - என் றெழுதிய ஆசிரியர் - நச்சினார்க்கினியர் செய்தி, பல்வேறு சான்றுக ளாலும் உறுதிபெற்று விளங்குதல் கண்டுகொள்க. இனி, செந்தமிழ் நிலத்தைச் சூழ்ந்துள்ளனவாகச் சொல்லப் படும் பன்னிரண்டு கொடுந்தமிழ் நாடுகளில் 'வேணாடு' என்பது மொன்றாம். இஃது யாதவரது பழந்தேயமாகிய வேள்புலம் என்று கருதப்படுகிறது. + வேள்புலம் என்பது, இப்போது 'கொங்கணம்'
- இவ்வள்ளலின் வரலாற்றை, இந்நூலுள் 'வேள் - ஆய்” என்னுந்தலைப்
பின்கீழ்வரும் விஷயத்துக் கண்டுகொள்க.
- ஸ்ரீமத்: வி. கனகசபைப்பிள்ளையவர்கள், வேணாடு என்பது, பாண்டிநாட்
டின் தென்மேற்கில் பேரியாற்றுக்கும் குமரிமுனைக்கும் இடையில் உள்ளதென் றும், மூங்கிற்காடு மிக்குள்ளமையின் வேணு (மூங்கில்) நாடு எனப் பெயர் பெற்று, அதுவே வேணாடு எனத் தமிழில் திரிந்ததென்றுங் கூறினர்.