உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வேளிர் வரலாறு.djvu/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ருவு வேளிர் வரலாறு. சேர சோழ பாண்டியர்க்கு விநாயகனேழதப் பாடிய வெண்பாக்கள். சேரலர்கோன் சேரல் செழும்பூந் திருக்கோவ லூ ரளவுந் தான்வருக உட்காதே-- பாரிமகள் அங்கவையைக் கொள்ள அரசன் மனமியைந்தான் சங்கியா தேவருக தான். புகார் மன்னன் பொன்னித் திருநாடன் சோழன் தகாதென்று தானங் கிருந்து - நகாதே கடுக வருக கடிக்கோவ லூர்க்கு விடியல் பதினெட்டாம் நாள். வையத் துறைவன் மதுரா புரித்தென்னன் செய்யத் தகாதென்று தேம்பாதே- தையற்கு வேண்டுவன கொண்டு விடியல்பதி னெட்டாநாள் ஈண்டு வருக இயைந்து. மூவரும் வந்தபோது பனந்துண்டத்தைப் பாடியது. திங்கட் குடையுடைச் சேரனுஞ் சோழனும் பாண்டியனும் மங்கைக் கறுகிட *வந்து நின் றார்மணப் பந்தரிலே சங்கொக்க வெண்குருத் தீன்றுபச் சோலை சலசலத்துக் கொங்கிற் குறத்தி குவிமுலை போலக் குரும்பைவிட்டு நுங்குக்கண் முற்றி யடிக்கண் கறுத்து நுனிசிவந்து பங்குக்கு மூன்று பழந்தர வேண்டும் பனந்துண்டமே. அந்தக் கல்யாணத்தில், பெண்ணையாற்றைப் பாடியது. முத்தெறியும் பெண்ணை முதுநீ ரது தவிர்ந்து தத்திவரு நெய்பால் தலைப்பெய்து - குத்திச் செருமலைத்தெய் வீகன் திருக்கோவ லூர்க்கு வருமளவிற் கொண்டாடி வா .

  • அறுகிடுதல்-ஒருமணவினை.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேளிர்_வரலாறு.djvu/74&oldid=990618" இலிருந்து மீள்விக்கப்பட்டது