உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வேளிர் வரலாறு.djvu/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 வேளிர் வரலாறு. னைப் பெய்து கொண்டு திறந்து சோறாகவே நல்கினாள் ; ஆதலால் ஒரு துன்பமுறாத மனையில்லை என்றவாறு. அல்லதூஉம், சோறும் அரிதாகிய காலத்துப் பொன்னே சோறாக உதவினாளாதலால், சென் நிரந்தால் ஒரு பயன்படாத மனையில்லை எ - று." - என்னும் அதன் பழைய உரையாலும் அறியப்படும். மேற் கூறியவாறு, ஸ்ரீமத்-ரா. இராகவையங்கார் அவர்களால் ஆராய்ச்சியோடு எழுதப்பட்ட பாரிமகளிர் மணச்செய்தியைப் பெரிய தும் ஆதரித்து நிற்கும் சாஸனமொன்று 'செந்தமிழ்ப்' பத்திரிகையில் ஸ்ரீமாந் - து. அ. கோபிநாதராயர் அவர்களால் வெளியிடப்பட்டுள் ளது * இற்றைக்குத் தொள்ளாயிரம் ஆண்டுகட்கு முன் சோனா டாண்ட முதல் இராஜராஜசோழன் காலத்தே திருக்கோவலூர் வீரட் டானேச்சுரர் கோயிலின் கர்ப்பக்கிரகத்திற் பொறிக்கப்பட்டதும், அகவல் வடிவில் அமைந்ததுமான அச்சாஸனத்திற் கண்ட திருக் கோவலூர் விசேடங்களுள்ளே, இவ்வியாசத்துக்கு இன்றியமையாத சரித்திரப் பகுதியொன்றும் அடியில் வரும் அழகிய அடிகளிற் காணப்படுகிறது. வன்கரை பொருது வருபுனற் பெண்ணைத் தென்கரை யுள்ளது; தீர்த்தத் துறையது ; மொய்வைத் தியலு முத்தமிழ்க் கபிலன் மூரிவண் டடக்கைப் பாரிதன் னடைக்கலப் பெண்ணை மலையற் குதவிப் பெண்ணை யலைபுன லழுவத் தந்தரிக்ஷஞ் செல மினல்புகும் வீடுபே றெண்ணிக் கனல்புகுங் கபிலக் கல்லது, புனல்வளர் பேரெட் டான வீரட்டானம் அனைத்தினு மநாதி யாயது;" இவ் வடிகளிலே, கபிலர், தம்பால் அடைக்கலமாக வைக்கப்பட்ட பாரிமகளை மலையனுக்கு மணம்புரிவித்துப் பசைந்தாரிற் றீர்தலிற் நீப்புகுத னன்று” என்ற மூதுரைப்படி, பெண்ணை நதியின் மத்தியில்

  • "செந்தமிழ்” தொகுதி-ச; பகுதி-ரு; பக்-உ ங.உ.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேளிர்_வரலாறு.djvu/76&oldid=990632" இலிருந்து மீள்விக்கப்பட்டது