உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வேளிர் வரலாறு.djvu/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நன்னன் வேண்மான். எக. நின்னை நோவ தெவனோ (வுலவா தட்டார்க் குதவாக்) கட்டி போல நீயு முளையே நின்னன் னார்க்கே யானு முளனே தீம்பா லோர்க்கே குருகினும் வெளியோய் தேத்துப் பருகுபா லன்னவென் சொல்லுகுத் தேனே. இப் பாட்டும், ('எழுவரு ளொருவனுமல்லை' என்பதனால்) அந் நன்ன. னையே ஒளவையார் பாடியது போலும். பிற்காலத்திலும் புலவர்கள் இத் தீயான்னன் செய்கைகளை மறந்தவரல்லர் என்பதை அடியில் வரும் வரலாறொன்றும் காட்டத்தக்கதாம். ஒருநாள் இளங்கண் டீரக்கோ என்னும் அரசகுமரனும், இந்நன்னன் வழியில் வந்த இள விச்சிக்கோ என்பானும் ஒரிடத்துச் சேர்ந்திருந்தபோது, ஆங்குச் சென்ற பெருந்தலைச்சாத்தனார் என்னும் நல்லிசைப் புலவர், முன்ன வனைத் தழுவி மரியாதை செய்து, பின்னவனாகிய இளவிச்சிக்கோவை அவ்வாறு மரியாதை செய்யாதொழிய, அஃதுணர்ந்த இளவிச்சிக் கோ 'என்னை நீவிர் புல்லாமைக்குக் காரணமென்னை?' என்று புல வரைக் கேட்பவும், அவர், "இவன் - பெண்டிரும் தம் தரத்தினின்று பரிசிலர்க்கு யானைக்கொடையளிக்கும் கண் டீரக்கோன் :* ஆதலால் அவனைத் தழுவினேன் ; நீயும்- நன்னன் மரபிலுதித்த பெருமை யுடைமையோடு இயற்கை நற்குணங்களுமுடையையாதலால் என் னாற் றழுவற்கு உரியவனேயாயினும், நின் முன்னோன் பரிசில் வேண்டிச்சென்ற புலவர்க்குத் தன் வாயிற்கதவை அடைத்துவந்த கொடுமைபற்றி நும்மலையை எம்மவர்பாடி மரியாதை புரிதல் தவிர்க் தார்” என்றனர். இதனை - [] இதனுள் அடங்கிய எழுத்துக்கள் பிரதிகளிலே பலபடியாக வேறுபட் டிருப்பினும், உற்றுநோக்கி ஒருவாறு அமைக்கப்பட்டன ; ஆயினும், உண்மைப் பாடம் இன்னதென்று துணியக் கூடவில்லை.

  • கண்டீரக்கோ, கண்டிற்கோ எனவும் வழங்கும். (புறநா - பக் - கசங)

இப்பெயர்கள் வள்ளலாகிய நள்ளிக்கு உரியவை. இவ்விளங்கண்டீரக்கோ, அந் நள்ளியின் மரபினனாதல் வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேளிர்_வரலாறு.djvu/87&oldid=990644" இலிருந்து மீள்விக்கப்பட்டது