நல்ல நண்பர்கள்

விக்கிமூலம் இலிருந்து

உலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0)
இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode என்ற முகவரியில் காணலாம்.


பதிப்புரிமை அற்றது

இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.

நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.

***
இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் ( https://ta.wikisource.org ), தமிழ் இணையக் கல்விக் கழகமும் ( http://tamilvu.org ) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டு முயற்சியைப் பற்றி, https://ta.wikisource.org/s/4kx என்ற முகவரியில் விரிவாகக் காணலாம்.
Universal (CC0 1.0) Public Domain Dedication

This is a human readable summary of the legal code found at https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode


No Copyright

The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law including all related and neighboring rights, to the extent allowed by law.

You can copy, modify, distribute and perform the work even for commercial purposes, all without asking permission.
***
This book is uploaded as part of the collaboration between Global Tamil Wikimedia Community

( https://ta.wikisource.org ) and Tamil Virtual Academy ( http://tamilvu.org ). More details about this collaboration can be found at https://ta.wikisource.org/s/4kx.



ஐந்தாம் பதிப்பு : ஜனவரி, 1985

ஒன்பதாம் பதிப்பு : நவம்பர், 1985


விலை : ரூ. 3—80


தமிழக அரசினர் பரிசு பெற்ற புத்தகம்





பழனியப்பா பிரதர்

சென்னை - 600 014 திருச்சி . 820 002

சேலம் - 636 கோயமுத்துர் - 644 00: மதுரை - 625

ஈரோடு - 623




ஏஷியன் அச்சகம், சென்னை - 600 014.

நல்ல நண்பர்கள்.


மாலை நேரம் : மணி நான்கு இருக்கும்.


வீரன் என்ற நாய் ஓட்டமும் நடையுமாகச் சேரி வழியாக வந்து கொண்டிருந்தது. ஒரு சந்தில் திரும்பியதும், திடீரென்று. அது நின்றது. காரணம், அங்கு ஓர் அழகிய வாத்து தலையைக் குனிந்தபடியே அழுதுகொண்டிருந்தது தான் !

வீரன் அதன் அருகே சென்றது. மிகுந்த இரக்கத்துடன், "ஏன் தங்கச்சி அழுகிறாய் ! என்ன காரணம் ?’ என்று கேட்டது.

ஒன்றுமில்லை, அண்ணா ! என் உயிர் நாளையோடு போகப் போகிறதே என்ற கவலைதான் ” என்றது வாத்து.

“என்ன, நாளையோடு உன் உயிர் போகப்போகிறதா ?”

"ஆம், அண்ணா ! என்னை இவ்வளவு நாளும் வளர்த்து வந்த எஜமானன் அளை என் உயிரை வாங்க போகிறாராம். நாளைக்கு அவருடைய மாப்பிள்ளை ஊரிலிருந்து வருகிறார். அவருக்கு ஒரு விருந்து வைக்கப் போகிறார்களாம். அது தான்...... ” இதற்கு மேல் அதனால் பேச முடியவில்லை. தொண்டை அடைத்துக்கொண்டது. கண்களிலிருந்து ‘மள மள’ என்று கண்ணிர் வந்தது.

“அட பாவமே உன் எஜமானனுக்குக் கொண்டாட்டம உனக்குத் திண்டாட்டமா? சரி, அழாதே. நீ ஏன் இதற்குக் கவலைப்பட வேண்டும் நாளைக்குத்தானே விருந்து இப்பொழுதே எங்கேயாவது கண்காணாத இடத்துக்கு ஓடிப் போய்விட்டால் போகிறது !” என்றது வீரன்.

“ஓடிப்போய்விடலாம். ஆனாலும், எங்கே போனாலும் மனிதர்கள் என்னைச் சும்மா விடவா போகிறார்கள் அத்துடன், இவ்வளவு நாளும் எனக்கு ஏராளமாகத் தீனி போட்டு அருமையாக வளர்த்தாரே, அந்த எஜமானனை மோசம் செய்துவிட்டு ஓடிப்போவது நல்லதா ? அதுதான் யோசிக்கிறேன். நீயே சொல்” என்றது வாத்து.

“அட பைத்தியமே! இவ்வளவு நாளும் உனக்குத் தீனி போட்டார்களே, அது உன் நன்மைக்கா ? இல்லவே இல்லை. நீ கொழுத்தால், அவர்களுக்குத்தாமே லாபம் ! உன்னை அறுத்தால் அதிகமான மாமிசம் கிடைக்கும் என்றுதான் அவர்கள் இப்படி அருமையாக வளர்த்திருக்கிறார்கள். இது உனக்குத் தெரியவில்லையே......சரி, அதைப்பற்றி இப்போது யோசிப்பதில் பயனில்லை. இனி ஆகவேண்டியதைச் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் நீ இங்கேயே இருந்து சாக வேண்டியதுதான்’ என்றது வீரன்.

"நீ தான் ஒரு வழி சொல்ல வேண்டும், அண்ணா ! எனக்கு ஒன்றுமே புரியவில்லையே!” என்று கெஞ்சிக் கேட்டது வாத்து.

வீரன் சிறிது கேரம் யோசித்தது. பிறகு, “சரி. ஒரு வழி சொல்லுகிறேன், கேள். என் எஜமானரின் பங்களா இந்த ஊரின் கடைசியில் இருக்கிறது. என் எஜமானர் மிகவும் நல்லவர். அவர் மனைவி மிக மிக நல்லவள். அவர்களுடைய குழந்தைகள் மிக மிக மிக நல்லவர்கள். நீ என்னோடு வந்தால், உன்னை என் எஜமானர் வீட்டுக்கு அழைத்துச் செல்கிறேன். அங்கே உனக்கு எந்த விதமான ஆபத்தும் வரவே வராது. அவர்கள் உன்னை அன்போடு வளர்ப்பார்கள், வரச் சம்மதமானால் வா; அழைத்துப் போகிறேன்” எனறு யோசனை கூறியது வீரன்.

'இங்கே இருந்தால், சாவது நிச்சயம். எங்கேயாவது போனால், ஒருவேளை பிழைக்க வழி கிடைத்தாலும் கிடைக்கலாம்’ என்று எண்ணியது வாத்து.

உடனே வீரனிடம், 'சரி அண்ணா, உன் யோசனைப் படியே கடக்கிறேன். கடவுள் விட்ட வழி விடட்டும்’ என்று புறப்பட ஒத்துக்கொண்டது.

உடனே இரண்டும் புறப்பட்டன. வீரன் முன்னாலும் வாத்து பின்னாலும் குறுக்குப்பாதை வழியாகவே சென்றன. வழியெல்லாம் வாத்து பயந்துகொண்டே சென்றது. தன் எஜமானன் எங்கேயாவது கண்டுபிடித்துவிடுவானோ என்ற சந்தேகத்துடன் பின்னால் திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே நடந்தது. ஆனாலும், வீரன் அதற்கு வழி நெடுகத் தைரியம் ஊட்டிக்கொண்டே வந்ததால் வரவரப் பயம் குறைந்தது.

வீரனுடைய எஜமானரின் பங்களா நெருங்கிவிட்டது. பங்களாவின் வாசலில் எஜமானரின் இரண்டு குழந்தைகளும் நின்றுகொண்டிருந்தார்கள்.

வீரனும், அதன்கூட ஓர் அழகான வாத்தும் வருவதை அவர்கள் கண்டார்கள். உடனே, அளவில்லாத ஆனந்தம் அடைந்தார்கள்.

(Upload an image to replace this placeholder.)

வீரன் அவர்களிடம் ஓடி வந்து, குதித்துக் குதித்துத் தன் வாலை ஆட்டி, சந்தோஷத்தைக் காட்டியது. பிறகு வாத்தைச் சுற்றிச் சுற்றி வந்தது. வாத்தும் சந்தோஷமாக, ‘குவாக்’, ‘குவாக்' என்று கத்தியது. குழந்தைகளும் அவைகளுடன் சேர்ந்து ஆடிப்பாடிக் குதித்தார்கள்.

சப்தத்தைக் கேட்ட எஜமானர் வெளியே வந்தார். உடனே குழந்தைகள், 'அப்பா, இந்த வாத்தைப் பாரப்பா ! வீரன் கூட்டி வந்திருக்கிறான். இதை நம் வீட்டிலேயே வைத்து வளர்க்கலாமாப்பா!” என்று ஆவலோடு கேட்டார்கள்.

குழந்தைகளுடைய பேச்சைத் தட்டிச் சொல்லும் வழக்கம் அந்த அப்பாவுக்கு எப்போதுமே இருந்ததில்லை. இப்பொழுது மட்டும் வேண்டாம் என்றா சொல்லுவார் ? வாத்து அன்று முதல் அங்கேயே அருமையாக வளர்ந்து வந்தது.

அந்த அப்பா பெயர் என்ன என்று சொல்ல மறந்தே போய்விட்டேன் அவருடைய பெயர் கருணாகர முதலியார். முரளி, சீதா இருவரும் அவருடைய குழந்தைகள், முரளிக்கு வயது பத்து ; சீதாவுக்கு வயது எட்டு. இருவரும் வீரனுடனும் கஸ்தூரியுடனும் (இதுதான் அவர்கள் வாத்துக்கு வைத்த பெயர்) மிகுந்த சந்தோஷமாகக் காலம் கழித்து வந்தார்கள்.

பள்ளிக்கட்டம் விட்டு வந்ததும், வீரனையும், கஸ்தூரியையும் அழைத்துக்கொண்டு தோட்டத்துக்குப் போய்விடுவார்கள். அங்கே எல்லோரும் சேர்ந்து விளையாடுவார்கள்.

முரளியும், சீதாவும் பூக்களைப் பறித்த மாலைகளாகக் கட்டுவார்கள். கட்டிய மாலைகளைக் கஸ்துனரிக்கும் வீரனுக்கும் போட்டுவிட்டுக் கை தட்டுவார்கள். வீரன் அங்குள்ள வேப்ப மரத்தைச் சுற்றிச் சுற்றி ஓடிவரும். கஸ்துாரி அதை

விரட்டிக்கொண்டு பின்னாலேயே ஓடும். கஸ்தூரியால வீரனைப் பிடிக்க முடியாமல் போய்விடும். அப்போது முரளி தன் கையிலிருக்கும் ரொட்டியை வீரனிடம் காட்டுவான். உடனே வீரன், ஓடுவதை நிறுத்திவிட்டு முன்னங்கால்களைத் தூக்கிக்கொண்டு ரொட்டியைக் கௌவப் பார்க்கும். அப்போது கஸ்தூரி, தன் அலகுகளால் வீரனின் வாலைப் பிடித்துக்கொண்டுவிடும் ! உடனே முரளியும் சீதாவும் கடகட கான்று கைகொட்டிச் சிரிப்பார்கள். இப்படியே தினமும் பொழுது போக்குவார்கள்.

மாதங்கள் நான்கு சென்றுவிட்டன!

அன்று முதலிடம் சீதாவும் பள்ளிக்கூடம் போய்விட்டார்கள். வீரனும் வெளியிலே சுற்றப் போய்விட்டது. கஸ்தூரிமட்டும் எப்போதும் வீட்டுக்குள்ளேயே இருக்கும், இல்லாவிட்டால் வீட்டுக்கு அருகிலேயே திரியும். தூரமான இடத்துக்குப் போவதே இல்லை ; ஏன் தெரியுமா ? தன்னுடைய பாழய எஜமானர் எங்கேயாவது பார்த்துவிட்டால் என்ன செய்வது என்ற பயம்தான் !

அன்று, இது பங்களாவின் முன்னால் இருந்த புளிய மரத்தடியில் நின்று கொண்டிருந்தது. அப்போது அவ்வழியாக வந்தான்; ஒரு துஷடப் பையன், அவனுக்குக் கஸ்தூரியை பார்த்ததும் என்ன தோன்றியதோ! ஒரு கல்லை எடுத்தான். 'விர்ர்.....' என்று விட்டெறிந்தான். ஐயோ, இதுவும் ஒரு விளையாட்டா!

அவனுடைய விளையாட்டு கஸ்துாரிக்கு வினையாக முடிந்தது . அவன் எறிந்த கல், கஸ்தூரியின் தலையில் நன்றாகப் பட்டுவிட்டது. உடனே அது அங்கேயே சுருண்டு விழுந்தது. தலையிலிருந்து இரத்தம், ‘குபுகுபு' என்று வெளியே வந்து கொண்டிருந்தது. கஸ்தூரி கீழே விழுந்ததும், அந்தக் கொலைகாரப் பையன் பயந்து ஓடிப்போய் விட்டான்.

சிறிது நேரம் சென்றது. முதலியாரின் மனைவி "எங்கே, கஸ்தூரியின் சப்தத்தையே காணோம் ?' என்று நினைத்துக் கொண்டே வெளியே வந்தாள். வீட்டுக்கு முன்னால் புளிய. மரத்தடியில் கஸ்தூரி கிடப்பதைக் கண்டாள். உடனே அவளுக்குப் ‘பகீர்’ என்றது.

"ஐயோ’’ என்று அலறிக்கொண்டே அதைப் போய்த் தூக்கினாள். உடம்பெல்லாம் இரத்தமாக இருந்தது. அப்படியே வீட்டுக்குள் கொண்டுவந்தாள். விஷயத்தை அறிந்து மாடியிலிருந்த முதலியாரும் ஓடி வந்தார். இருவரும் சேர்க்து அதற்கு உயிர் கொடுக்க முயன்றார்கள். அதன் முகத்தில் தண்ணீரைத் தெளித்தார்கள் ; வாயைத் திறந்து சிறிது தண்ணீர் ஊற்றிப் பார்த்தார்கள். உயிர் இருக்தால்தானே, அது தண்ணீரைக் குடிக்கும் !

பாவம், கஸ்தூரி இறந்துவிட்டது! முதலியாருக்கும் அவர் மனைவிக்கும் மிகுந்த வருத்தம் ஏற்பட்டது.

"ஐயோ, என்ன பண்ணுவது ? இது முரளிக்கும் சீதாவுக்கும் தெரிந்தால், அவர்கள் மனம் என்ன பாடுபடும்! நமக்கே இப்படி இருக்கிறதே! வீரன்தான் இதனிடத்தில் எவ்வளவு அன்பாக இருந்து வந்தது! அதுதானே இதை இங்கே அழைத்து வந்தது!” என்று கைகளைப் பிசைந்தாள் முதலியாரின் மனைவி.

"சரி, நடந்தது நடந்துவிட்டது. இதை இப்படியே போட்டு வைத்தால் குழந்தைகளும், வீரனும் இதைப் பார்க்க கேரிடும். பார்த்ததும் கதறிவிடுவார்கள். இதை நமது தோட்டத்தில் ஒரு மூலையில் புதைத்துவிடுவதே நல்லது” என்றார் முதலியார்.

"அது சரி, பள்ளிக்கூடம் விட்டு வரும் குழந்தைகளுக்கு நாம் என்ன பதில் சொல்வது ? வீட்டுக்குள் நுழைந்ததும் 'கஸ்தூரி எங்கே ’ என்று கேட்பார்களே !” என்று கலங்கிய கண்களுடன் கேட்டாள் முதலியாரின் மனைவி.

“என்ன சொல்வது கஸ்தூரி எங்கிருந்தோதானே வந்தது . அது வந்த இடத்திலிருந்து ஆட்கள் வந்தார்கள் ; வாங்கிக்கொண்டு போய்விட்டார்கள், என்று சொல்லிவிட்டால் போகிறது. வேறு வழியில்லை” என்றார் முதலியார்.

பிறகு, முதலியார் தோட்டத்திற்குச் சென்றார். ஓர் இடத்தில் ஒரு குழியைத் தோண்டினார்; அங்கே கஸ்தூரியைப் புதைத்துவிட்டார்.

மாலை மணி ஐந்தரை இருக்கும்.

பள்ளிக்கூடம் விட்டு முரளியும், சீதாவும் வந்தார்கள். வீட்டுக்குள் நுழையும்போதே 'கஸ்தூரி!' என்று கூப்பிட்டாள் சீதா.


எங்கே இந்த நேரத்தில் வாசலில்தானே நிற்கும் ? எங்கே போய்விட்டது? கஸ்தூரி ! கஸ்தூரி ! என்று பலமாகச் சத்தம் போட்டு அழைத்தான் முரளி.

கஸ்தூரி வரவில்லை. இருவரும் புத்தகப் பைகளை வைத்துவிட்டுத் தோட்டத்துக்கு ஓடினார்கள். அங்கேயும் கஸ்தூரியைக் காணோம் ! 

“எங்கே அம்மா கஸ்தூரி ? வீரனுடன் வெளியே போயிருக்கிறதா ?” என்று கேட்டாள் சீதா.

'இல்லை.பம்மா கஸ்தூரி யாரோ ஒருவருடையதாம். அவர் வந்து, அதை வாங்கிக்கொண்டு போய்விட்டார்” என்றாள் அம்மா.

இதைக் கேட்டதும் சீதாவும் முரளியும் திடுக்கிட்டார்கள்.

"நிஜமாகவா, அம்மா அவர் யாரம்மா ? நான் போய் வாங்கிக்கொண்டு வந்துவிடுகிறேன். பணம் கொடுத்தால் தரமாட்டாரா அம்மா ? ஏனம்மா கொடுத்தாய்?” என்று கோபத்துடன் கேட்டான் முரளி.

"வா அண்ணா அப்பாவிடம் போய் ரூபாய் வாங்கிக் கொண்டு நாம் போகலாம். கஸ்தூரியை வாங்கிப்போனவர் எங்கே அம்மா இருக்கிறார் சொல்லம்மா !” என்று அம்மாவின் தோளைப் பிடித்துக் குலுக்கிக்கொண்டே கேட்டாள் சீதா.

"அவர் யாரோ, எனக்குத் தெரியாது. வாத்து என்னுடையது. அதை நீங்கள் தருகிறீர்களா, அல்லது போலீஸில் சொல்லட்டுமா ?’ என்று கேட்டார் ; பயந்து போய்க் கொடுத்துவிட்டோம்!” என்றாள் அம்மா.

சீதாவுக்கும் முரளிக்கும் என்ன செய்வதென்றே தெரியவில்லை. கலங்கிய கண்களோடு வாசலில் நின்று கொண்டிருந்தார்கள். அந்தச் சமயம் வந்துவிட்டது வீரன். அது தாவிக்கொண்டு சந்தோஷமாக அவர்கள் அருகில் வந்தது. ஆனால், அதை அவர்கள் ஓடிப்போய் எதிர் கொண்டு அழைக்கவும் இல்லை; மகிழ்ச்சியோடு வரவேற்கவும் இல்லை ! 

இதைக் கண்டதும் வீரனுடைய முகம் சிறுத்துவிட்டது. அருகே வந்து சிறிது நேரம் நின்றது. அதை அவர்கள் தொடக்கூட இல்லை வீரனுக்கு இது புதிதாக இருந்தது என்ன காரணம் என்று அதற்குத் தெரியவில்லை. பிறகு, உள்ளே நுழைந்தது. அங்கே கஸ்தூரியையும் காணோம் !

உடனே அது கஸ்தூரியைத் தேட ஆரம்பித்தது. அங்குமிங்கும் ஓடியது. கஸ்தூரி வழக்கமாக இருக்கும் இடம், படுக்கும் இடம், சுற்றும் இடம் எல்லாம் தேடிவிட்டது. காணோம் ஆனாலும், அது விடவில்லை. சுற்றிச் சுற்றிப் பார்த்துக்கொண்டே இருந்தது.

வீரன் சுற்றுவதைப் பார்க்கப் பார்க்க முரளிக்கும், சீதாவுக்கும் அழுகை அழுகையாக வந்தது. அவர்களுடைய பெற்றோர்களின் கண்களும் கலங்கின. ஆனாலும், என்ன செய்வது ? இறந்த வாத்தை எப்படிக் கொண்டுவருவது ? முதலியாருக்கும், அவர் மனைவிக்கும் ஒன்றுமே தோன்றவில்லை.

மணி எட்டு ஆகிவிட்டது.

சாப்பாட்டு நேரம். அம்மா தட்டுக்களை எடுத்து வைத்துவிட்டு, முரளியையும், சீதாவையும் சாப்பிட அழைத்தாள். ஆனால், இருவரும் அழுதுகொண்டே இருந்தார்கள். சாப்பிட மறுத்துவிட்டார்கள்.

அம்மாவுக்குத் தர்மசங்கடமாகிவிட்டது. உடனே அவள் முதலியாரிடம், “நீங்கள் நாளைக் காலையில் கஸ்தூரியைக் கொண்டுவந்துவிட வேண்டும். கொண்டு வருவதாகச் சொன்னால்தான் இவர்கள் இப்போது சாப்பிடுவார்கள். என்ன சரிதானா?” என்று குழந்தைகள் எதிரிலேயே கேட்டாள்.

“ஓ! நான் காலையில் எழுந்தவுடனேயே புறப்பட்டுப் போகிறேன். போய், கஸ்தூரியைக் கையோடு கொண்டு வந்துவிடுகிறேன். நீங்கள் இப்போது முரண்டு பண்ணாமல் நீங்கள் சாப்பிட்டால்தான், நான் கஸ்துாரியை வாங்கி வருவேன். என்ன, சாப்பிடுகிறீர்களா ?” என்று குழந்தைகளைப் பார்த்துக் கேட்டார் முதலியார்.



உடனே, முரளியும் சீதாவும், “ஏனப்பா, நிஜமாகவா ? அப்படியானால் சாப்பிடுகிறோம்” என்று சந்தோஷமாக தயாராக இருந்தது, ஆனால், வீரன் வரவில்லை. அங்கும் இங்குமாக ஓடிக்கொண்டே இருந்தது. 

“சரி, வீரன் சுற்றட்டும். நீங்கள் சாப்பிடுங்கள். நாளைக் காலைவரைதானே அது இப்படிச் சுற்றிக்கொண்டிருக்கும்? அப்புறம்தான் கஸ்தூரி வந்துவிடுமே !” என்று சமாதானம் கூறினார் முதலியார்.

முரளியும், சீதாவும் சாப்பிட்டுக்கொண்டிருக்தார்கள். முதலியார் சீக்கிரம் சாப்பிட்டுவிட்டு வீரன் எங்கே இருக்கிறது என்று தேடிப் பார்த்தார். வீட்டுக்குள் இல்லை. தோட்டப் பக்கம் சென்று பார்த்தார். அங்கும் வீரன் இருப்பதாகத் தெரியவில்லை.

'தூங்கிவிட்டதோ !” என்று எண்ணினார். விளக்கை எடுத்துக்கொண்டு தோட்டத்துக்குள் சென்று பார்த்தார். வீரன் அங்கேதான் படுத்திருந்தது. ஆனால், எந்த இடத்தில் தெரியுமா ? கஸ்தூரியைப் புதைத்து வைத்தார்களே, அந்த இடத்துக்கு நேராகவே படுத்துக்கொண்டிருந்தது! புதைத்த இடத்தின்மேல் அது தலையை வைத்திருந்தது! முதலியாருக்கு இது மிகுந்த ஆச்சரியமாக இருந்தது. அருகே சென்று பார்த்தார். வீரனின் கண்களிலிருந்து கண்ணிர் பெருகிக்கொண்டிருந்தது. கஸ்தூரியை மூடியிருக்த இடம் முழுவதும் வீரனின் கண்ணீரால் நனைந்து போயிருந்தது. முதலியாரை அது ஏறிட்டும் பார்க்கவில்லை.

“வீரன் எப்படி அந்த இடத்தைக் கண்டுபிடித்தது ?" என்ற சந்தேகம் முதலியாருக்கு ஏற்பட்டது.

முதலியார், முரளியுடனும் சீதாவுடனும் சாப்பிட்டுக் கொண்டு இருந்தாரல்லவா ? அப்போது, வீரன் தோட்டத்தில் சுற்றிக்கொண்டே இருந்தது. ஏதோ மாமிச வாசனை அடிப்பதை அது மோப்பத்தால் கண்டுபிடித்துவிட்டது. உடனே, வாசனை வந்த இடத்தைத் தோண்டிப் பார்த்தது. உள்ளே இருந்தது, அதன் அருமைக் கஸ்தூரி ! கஸ்தூரியைப் பார்த்ததும், வீரனின் தலை சுற்றியது ; நெஞ்சு துடிதுடித்தது.

“ஐயோ! உன் எஜமானன் கொன்றுவிடுவான் என்று தானே என்னோடு நீ இங்கு வந்தாய்? உனக்கு இந்தக் கதி எப்படி நேர்ந்ததோ !” என்று அழுதது. உயிரில்லாத உடலை வைத்துக்கொண்டு என்ன செய்வது ! அதை மறுபடியும் அங்கேயே புதைத்தது; புதைத்த இடத்திலேயே தலையை வைத்துக்கொண்டு, வருத்தம் தாங்காமல் அழுதுகொண்டிருந்தது.

இந்தச் சமயத்தில்தான் முதலியாரும் வந்தார். அவருக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. "வீரா, வீரா” என்று அழைத்தார். தட்டிக்கொடுத்துப் பார்த்தார். வீரன் எழுந்திருக்கவில்லை ; அழுதுகொண்டே இருந்தது. மூச்சுமட்டும் ஒடிக் கொண்டிருந்ததை முதலியார் அறிந்தார்.

உடனே அவர் வீட்டுக்குள்ளே சென்றார். தம் மனைவியிடம் விஷயத்தை இரகசியமாகக் கூறினார். உடனே, அவள் குழந்தைகளைப் பார்த்து, “நீங்கள் இங்கேயே இருங்கள். இதோ வந்துவிடுகிறேன்" என்று சொல்லிவிட்டு, முதலியாருடன் தோட்டத்துக்குள் சென்றாள்.

முரளிக்கும் சீதாவுக்கும் உடனே ஏதோ சந்தேகம் தோன்றிவிட்டது. அவர்களும் பின்னாலேயே ஓடினார்கள். எல்லோரும் வீரன் படுத்துக்கிடந்த இடத்துக்கு வந்தார்கள். கண்ணீர் விட்டுக் கொண்டு வீரன் அங்குப் படுத்திருப்பதைக் கண்ட முரளிக்கும் சீதாவுக்கும் 'வீரன் எதற்காக அழுகிறது?' என்பது புரியவில்லை.

“வீரா, வீரா”! என்று அழைத்தார்கள். முகத்தைத் தூக்கிப் பார்த்தார்கள். ஆனால், வீரன் அவர்களைப் பார்க்கவே இல்லை. கண்களிலிருந்து மட்டும் நீர் வழிந்துகொண்டிருந்தது.

“அப்பா, வீரன் செத்துவிட்டதோ!” என்று அழுது கொண்டே கேட்டாள் சீதா.

“இல்லை. மூச்சு ஓடிக் கொண்டுதான் இருக்கிறது. கஸ்தூரியைக் காணவில்லையல்லவா? அதுதான் வருத்தமாக இருக்கிறது” என்றார் முதலியார். ஆனால், உண்மையை மட்டும் கூறவே இல்லை.

எல்லோரும் சேர்ந்து அழைத்தும் வீரன் வரவில்லை. முதலியார் இழுத்துப் பார்த்தார் ; இழுக்க முடியவில்லை . உடனே அப்படியே இரண்டு கைகளாலும் அதைத் தூக்கிக் கொண்டு மிகுந்த சிரமத்துடன் வந்தார். பின்பக்கமாக இருந்த ஓட்டுக் கொட்டகையில் அதை வைத்தார்.

“அம்மா ! சோறு கொண்டுவா ; வீரனுக்குக் கொடுக்கலாம்” என்று சொன்னான் முரளி. “நான் போய்க் கொண்டு வருகிறேன்” என்று கூறிவிட்டுச் சீதா அடுப்பங்கரைக்கு ஓடினாள். அம்மாவும் கூடச் சென்றாள்.

சோற்றை எடுத்து வந்ததும், வீரனின் முன் வைத்தாள் சீதா. அப்பொழுதும் வீரன் கண்னை விழித்துப் பார்க்கவே இல்லை முரளியும் சீதாவும் எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தார்கள் ; கொஞ்சிப் பார்த்தார்கள். ஒன்றும் பயனில்லை.

நேரமோ அதிகமாகிவிட்டது.

இரவு மணி பதினொன்று இருக்கும்.

"சரி, நேரமாகிவிட்டது. போய்ப் படுத்துக்கொள்ளுங்கள். நாளைக்கு எல்லாம் சரியாய்ப் போய்விடும். காலையில் தான் நான் கஸ்தூரியை வாங்கிவரப் போகிறேனே !” என்று குழந்தைகளிடம் கூறினார் முதலியார்.

ஆனால், அவர்கள் கேட்கவில்லை. வீரனின் அருகிலேயே கவலையோடு உட்கார்ந்திருந்தார்கள். முதலியார் உடனே, "போய்ப் படுக்கிறீர்களா என்ன?” என்று கோபப்படுவது போல் கூறினார்.

வேறு வழியில்லை. இருவரும் மனமில்லாமல் உள்ளே சென்றார்கள்; படுத்துவிட்டார்கள்.

முதலியாருக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. “அந்த வாத்துத்தான் இறந்துவிட்டது. இதுவும் இப்படியா இருக்க வேண்டும் விழித்துக்கூடப் பார்க்க மாட்டேன் என்கிறதே! நாளை விடிந்ததும், முரளியும் சீதாவும் 'கஸ்தூரி எங்கே'? என்று கேட்பார்களே! அவர்களுக்கு என்ன பதில் சொல்லுவது?” என்று மூளையைப் போட்டுக் குழப்பிக்கொண்டிருந்தார்.

“சரி, என்ன செய்வது ? நேரமோ அகாலமாகிவிட்டது. நாளைக் காலையில் பார்த்துக்கொள்ளலாம். போய்ப்படுங்கள்” என்று கூறினாள் முதலியாரின் மனைவி.

முதலியார் வேறு வழியின்றி போய்ப் படுத்துவிட்டார். அவருடைய மனைவியும் சாமான்களையெல்லாம் துலக்கிப் போட்டுவிட்டுப் படுத்துக்கொண்டாள் .

முதலியார் -அசதியால் நன்றாகத் தூங்கிவிட்டார், அவருடைய மனைவிக்கும் நல்ல தூக்கம், ஆனால், முரளியும், சீதாவும் இன்னும் தூங்கவில்லை. படுத்தபடியே பேசிக் கொண்டிருந்தார்கள்.

“ஏனண்ணா, கஸ்தூரி நாளைக் காலையில் வந்து விடுமா?” என்று கேட்டாள் சீதா.

“வராமலென்ன? அப்பாதான் வாங்கி வருவதாகச் சொல்லியிருக்கிறாரே! அவசியம் வாங்கிக்கொண்டு வந்து விடுவார்” என்று கூறினான் முரளி.

“ஆமாம், அண்ணா ! கஸ்தூரியை வாங்கிப்போனவன் அதைப் பத்திரமாக வைத்திருப்பானா ? சாகடித்திருக்க மாட்டானே, அண்ணா ?” என்று திகிலுடன் கேட்டாள் சீதா.

“சேச்சே, அது எவ்வளவு அழகானது ! எவ்வளவு அன்பாக இருக்கும் ! அதைக் கொல்ல யாருக்காவது மனம் வருமா! நிச்சயம் அவன் அதைக் கொன்று இருக்கவே மாட்டான்” என்று சமாதானம் கூறினான் முரளி.

“அண்ணா , கஸ்தூரி இங்கே இல்லாமல் என்னவோ போல இருக்கிறதே ! அம்மா அப்பாவுக்குக்கூட இன்றைக்கு அழுகை வந்துவிட்டது, பார்த்தாயா! கஸ்தூரி வந்தால்தான் வீரனுக்கும் சந்தோஷம் வரும் போல இருக்கிறது. அதுவரை யில் என்ன சொன்னாலும், கேட்கவே கேட்காது. நிச்சயமாக அப்பா காளைக்கு வாங்கி வந்துவிடுவாரல்லவா ?” என்று மறுபடியும் சீதா கேட்டாள்.

“வாங்கிக்கொண்டு வராவிட்டால் அப்பாவைச் சும்மா விடுவோமா ?” என்றான் முரளி.

இருவரும் இப்படியே சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தார்கள். முரளிக்குக் கொஞ்சம் கொஞ்சமாகத் தூக்கம் வந்துவிட்டது ; தூங்கிவிட்டான். சீதாவும் பேசுவதற்குத் துணையில்லாததால், கண்களை இறுக மூடிக்கொண்டு படுத்துவிட்டாள். அவளுக்கும் தூக்கம் வந்துவிட்டது.

கொஞ்ச நேரம் ஆனதும் மழை பெய்ய ஆரம்பித்தது. மழை என்றால் சாதாரண மழை அல்ல ; பலத்த மழையாக இருந்தது. மழையுடன், இடியும் மின்னலும் சேர்ந்து கொண்டன. புயல் காற்று வேறு பலமாக அடித்தது.

சுமார் இரண்டு மணி நேரம் சென்றுதான் மழை நின்றது ; காற்றும் ஓய்ந்தது. அன்று இரவு எப்படியோ கழிந்துவிட்டது.

அதிகாலை

"கொக்கரக்கோ ! என்ற சப்தம் கேட்டது. சீதா எழுந்துவிட்டாள். அண்ணா அண்ணா !” என்று கூப்பிட்டாள். முரளியும் எழுந்தான்.

“வா அண்ணா, வீரனைப் போய்ப் பார்க்கலாம். பாவம், இரவு முழுவதும் சாப்பிடவேயில்லை” என்று கூறிக் கொண்டே சீதா பின்புறத்துக்குச் சென்றாள். முரளியும் கூடவே ஓடினான்.

இருவரும் ஆவலாக ஓட்டுக் கொட்டகைக்குச் சென்றார்கள். அங்கு வீரனைக் காணோம் !

"எங்கே அண்ணா வீரன் போயிருக்கும்:” என்று ஆவலாகக் கேட்டாள் சீதா.

“வா, தோட்டத்துப் பக்கம் பார்க்கலாம்” என்றான் முரளி.

இருவரும் தோட்டத்துப் பக்கம் ஓடினர். சுற்றுமுற்றும் பார்த்தனர். அங்கே கண்ட காட்சி அவர்களைத் திடுக்கிடச் செய்தது !

“ஐயோ! என் அருமை வீரா!” என்று உரக்கக் கத்தினாள் சீதா.


 “ஐயோ! வீரன் மேல் தென்னை மரம் அல்லவா விழுந்து கிடக்கிறது! இறந்துபோய்விட்டதோ!” என்று கூறிக்கொண்டே முரளி வீரனின் அருகே ஓடினான். 

"ஐயோ! இந்தப் பாழாய்ப்போன புயல் காற்று ஏன்தான் அடித்ததோ?” என்று கூறிக்கொண்டே அழுதாள் சீதா.

வீரனுடைய தலை, முகம் எல்லாம் ஒரே இரத்தமாக இருந்தது. அடையாளமே தெரியவில்லை உடனே இருவர் கண்களிலும் ‘மளமள’ என்று கண்ணீர் வழிய ஆரம்பித்தது. ‘ஓ!’ வென்று அழுதனர்.

"அப்பா ! அப்பா ! என்று கதறிக்கொண்டே அப்பாவை அழைத்துவர ஓடினாள் சீதா. முரளியோ தென்னை மரத்தைத் தூக்கிவிட்டு, வீரனின் முகத்தைப் பார்க்கத் துடியாய்த் துடித்தான். ஆனால், தென்னை மரத்தை அவனால் நகர்த்தக்கூட முடியவில்லை !

இதற்குள், சீதாவுடன் அப்பாவும், அம்மாவும் அந்த இடத்துக்கு ஓடோடியும் வந்தார்கள். அந்தக் காட்சியைக் கண்டதும், அவர்களுக்குத் துக்கி வாரிப்போட்டது எல்லோரும் வாய்விட்டுக் கதறிவிட்டார்கள்.

சப்தத்தைக் கேட்டு, வீதியில் சென்றுகொண்டிருந்தவர்கள் கூட வந்துவிட்டார்கள். அவர்களின் உதவியால் தென்னை மரம் அப்புறப்படுத்தப்பட்டது. தென்னை மரத்தைத் துக்கியதும் சீதாவும், முரளியும் வீரன் அருகில் சென்றார்கள். முகத்தைக் கூர்ந்து பார்த்தார்கள்.

"வீரன் இறந்து போய்விட்டதா, அப்பா ? மூச்சைக் காணோம் !" என்று அழுதுகொண்டே கேட்டாள் சீதா.

"இவ்வளவு பெரிய மரம் விழுந்தால், எப்படிப் பிழைக்கும்?” என்று முதலியாரின் வாய் முணுமுணுத்தது.

"ஐயோ, வீரா ! நீ எங்களை விட்டுப் பிரிந்துவிட்டாயே!. இனி, எப்படி எங்களுக்குப் பொழுது போகும்? இனிமேல்வீரனைப் பார்க்கவே முடியாதா?” என்று அதன் முகத்தைத் தூக்கிப் பிடித்துக்கொண்டே அழுதான் முரளி.

"ஐயோ ! நீ ஏன் இந்த இடத்துக்கு வந்தாய்? சாகவா வந்தாய்?” என்று வீரன்மீது தலையைச் சாய்த்துக் கொண்டே அழுதாள் சீதா.

இனிமேலும் உண்மையை ஒளித்துவைக்க முதலியாரால் முடியவில்லை. உடனே அவர், மெதுவாக வீரனைத் தூக்கி அப்புறம் வைத்துவிட்டு, அங்கிருந்த குழியைத் தோண்டினார். உள்ளேயிருந்த வாத்தை வெளியே எடுத்தார்.

வாத்தைப் பார்த்ததுதான் தாமதம் : முரளிக்கும் சீதாவுக்கும் தலை சுற்ற ஆரம்பித்தது!

“ஐயோ, கஸ்தூரி ! நீயுமா இறந்தாய்?” என்று கதறினான் முரளி.

“என்ன இது கஸ்தூரி, எப்படி இறந்தது எப்படி இங்கே வந்தது” என்று ஆச்சரியத்துடன் கதறிக் கொண்டே கேட்டாள் சீதா.

நடந்தவற்றையெல்லாம் முதலியார் ஆதியிலிருந்து ஒன்று விடாமல் கூறினார். கேட்கக் கேட்க இருவருக்கும் வருத்தம் அதிகமாகிக்கொண்டே வந்தது. துக்கம் அதிகமாகித் தொண்டையை அடைத்துக்கொண்டது. பேசவே முடியவில்லை.

நடந்ததையெல்லாம் கேட்ட போது, அங்கே கூடியிருந்தவர்களின் கண்களும் கலங்கிவிட்டன.

“அடடா ! இந்த மாதிரி ஒரு நாயை எப்போது பார்க்கப்போகிறோம் ! அந்த வாத்துக்காகவே இது உயிர் விட்டிருக்கிறதே நட்பு என்றால் இதுவல்லவா நட்பு ! தியாகம் என்றால் இதுவல்லவா தியாகம்! இந்தக் குழந்தைகள்தாம் அவற்றினிடத்தில் எவ்வளவு அன்பாக இருந்தார்கள் ! ஐயோ, பாவம் இனி இவர்களுக்கு எப்படித் தான் பொழுது போகுமோ ! அவை இருந்தால் இந்த வீடு எவ்வளவு கலகலவென்று இருக்கும் !” என்று பேசலானார்கள்.

அந்தத் தோட்டத்திலேயே வீரனையும் கஸ்தூரியையும் புதைத்து வைத்தார்கள்.

அன்று முதல், முரளியும் சீதாவும் மாலை நேரங்களில் வெளியில் விளையாட்ப் போவதே இல்லை. வீரனையும், கஸ்தூரியையும் புதைத்த இடத்திலே தான் இருந்து வருகிறார்கள். அங்கே, அவர்கள் ஆளுக்கொரு செடி நட்டு வைத்திருக்கிறார்கள். ஒரு செடிக்குப் பெயர் வீரன் செடி : இன்னொரு செடிக்குப் பெயர் கஸ்தூரிச் செடி. அந்தச் செடிகளுக்குத் தினமும் தண்ணீர் ஊற்றி, அவர்கள் அருமையாக வளர்த்து வருகிறார்கள்.

இப்போதுதான் அந்த இரு செடிகளும்

புஷ்பிக்க ஆரம்பித்திருக்கின்றன.

(Upload an image to replace this placeholder.)

பழனியப்பா பிரதர்ஸ்

"https://ta.wikisource.org/w/index.php?title=நல்ல_நண்பர்கள்&oldid=1548096" இலிருந்து மீள்விக்கப்பட்டது