இதழியல் கலை அன்றும் இன்றும்/வடசொல் நீக்கி, தனித்
37
மறைமலையடிகளாரின்
மொழி ஆய்வுக் கட்டுரை!
ஒரு மொழியில் பிற மொழிகள் எவ்வாறு கலக்கின்றன, என்று பார்த்தால், பிறமொழியாளர்களுடன் பழுகுவதனாலும், பிறமொழிகளைப் பேசுவதாலும், ஒரு மொழியில் பிறமொழிச் சொற்கள் கலக்கின்றன என்பதை அறியலாம்.
இவ்வாறு கலத்தல் கடலில் காயங் கரைத்ததுபோல, எம்மொழிக்கும் தீங்கு செய்வதில்லை. நம்மை அடுத்துள்ள மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆய மொழிச் சொற்கள் தமிழில் எவ்வளவு கலந்துள்ளன? மிக மிகக் குறைவே. இல்லை என்றுகூடச் சொல்லலாம். அவ்வளவு குறைவு.
ஆனால், அரசியல் பொது மொழிகளாக அல்லது ஆணை மொழிகளாக ஓர் மொழி பிற மொழிகளிற் கலந்தால், அயன் மொழிச் சொற்கள் ஏராளமாய்த் தாய்மொழிகளில் கலந்து விடுகின்றன.
சான்றாக சில நூற்றாண்டுகட்கு முன்பு முகமதியர் ஆட்சியின்போது, அவர்கள் தம் தாய்மொழியாகத் - தெய்வ மொழியாகப் போற்றிய அரபுச் சொற்களும், உருது, இந்திக் சொற்களும் தமிழில் ஏராளமாய்க் கலந்தன என்பதற்கு சில சான்றுகள் இதோ :
‘ஜமீன்தார், மிராஸ்தார், தாலுக்கா, ஜில்லா, முன்சீப், ஜட்ஜ், கச்சேரி, அயன், ரயத், ஜமா பந்தி, அலமார், மேசை, காடிகானா, நாஸ்தா, சலாம், ஜபர்தஸ்து, படே’
போன்ற ஏராளமானச் சொற்கள் தமிழில் கலந்துள்ளன. இவை சிலவே ஆகும்.
தொல்காப்பியத்திலும், திருக்குறளிலும் உள்ள சொற்கள் யாவும் தமிழ் சொற்களே என்பது மொழி ஆய்வாளர்களது கருத்து. நம் கருத்தும் அதுவே.
எனினும், வடமொழிப் பித்தர்கள் நூற்றுக்கு ஐந்து அல்லது ஆறு வடச் சொற்கள் அவற்றில் உளவென்பர். அவை வடமொழி தாம் என்பதற்குப் போலிக் காரணங்கள் காட்டுவர்.
ஆனால், வடமொழியில் ஒரு தமிழ்ச் சொல்கூட இல்லை என வழக்கிடுவர். அவர் கண்களுக்கு எல்லாம் வட மொழிச் சொற்களே. ஆம். பிறமொழிச் சொற்களே அவர்க்குக் கூடாதல்லவா?
சங்க நூல்களில் வடசொற்கள் மிகச் சிலவே. சங்க காலம் ஏறத்தாழ இன்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பு.
சங்க காலத்தை ஒட்டித் தொடர்ந்த நூற்றாண்டுகளில் தமிழிற் கலக்கப்பட்ட வடமொழிச் சொற்களின் தொகை மிகுந்து கொண்டே வந்து, மணிப் பிரவாள நடை தோன்றிய 14, 15, 16 ஆம் நூற்றாண்டுகளில், தமிழில் 100க்கு 60,70 வடசொற்கள் கலந்து, தமிழ்மொழியின் உருவத்தையே மறைத்து விட்டன.
அவ்வாறு தமிழில் கலந்து விட்ட வடமொழிச் சொற்கள், சொற்றொடர்கள் பலவற்றை இங்கு காண்க! அவை :
“மாதா, பிதா, சகோதரன், புருஷன், சம்சாரம், சகோதரி, சிரசு, தேகம், சிரம், பாதம், கிரகம், பூமி, தாவரம், சங்கமம், நதி, பர்வதம், வர்ஷம், வாரம், மாதம், தேதி, நட்சத்திரம், சூரியன், சந்திரன், ஸ்தலம், திதி, வார்த்தை, பதம், வாக்கியம், வசனம், சாஸ்திரம், புராணம், கவி, கவிதா சக்தி, வித்வான், வேதம், ஆகமம், இதிகாசம், கீதை, மனு, ஸ்மிருதி, சுருதி, யுக்தி,
அனுபவம், வர்த்தமானம், பரமேஸ்வரன், விஷ்ணு, பிரம்மா, இந்திரன், வருணன், வாயு, அக்னி, சனி, சுக்கிரன், சீதம், உஷ்ணம், ரத்தம், வாதம், விரதம், வாந்தி, வைத்தியம், க்ஷயம், ஜ்வாம், குரு, சிஷ்யன், தட்சணை, புஸ்தகம், வாசிப்பு, வாக்கு, புத்தி, சித்தம், அகங்காரம், மாயை, நியதி, வித்தை, ஆத்மா, பஞ்ச பசந்திரியம், கன்மேந்திரியம், ஞானேந்திரியம், அந்தக்கரணம், பாஷ்யம், சூத்திரம், அதிகரணம்,
மரம், பரபக்ஷம், சுபக்ஷம்,கிரமம், அக்கிரமம், நியாயம், நியாதிபதி, நீதி, ஜனனம், அவதாரம், மரணம், சிசு, யௌவனம், யுவன், யுவதி, வாலிபம், வயோதிகம், ஜனசபை, ராஷ்டிரபதி, ஜனாதிபதி, ராஜ்யம், ராஜ்ய சபை, லோக சபை, மந்திரி, அக்கிரசனாதிபதி, பிரசங்கி,
ஜனங்கள், விஷயம், தர்க்கம், வாதம், பிர்சனை, நிருபர், பத்ரிகை, புதினம், நவீனம், சஞ்சிகை, காரியாலயம், அங்கம், ஜன்னல், கபாடம், சங்கம், சமாஜம், கட்சி, பிரதிநிதி, பிரதி, சாதம், சாம்பார், சட்னி, ரசம், பலகாரம், அதிரசம், லட்டுகம், போஜனம், ஜலம், தாகம், ஜீரணம், மலம், மூத்திரம், ஆசை, இஷ்டம், இச்சை,
நஷ்டம், ஞானம், கிரியை, சுகம், துக்கம், ஆனந்தம், பிரமை, சாமி, ஈஸ்வரன், சர்வம், அகிலம், ஜகத்குரு, அண்டம், பிண்டம், சடாச்சரம், பஞ்சாட்சரம், அஷ்டாச்சரம், பிரணவம், விநாயகர், கணபதி, பிரணவ, சொரூபி, மூஷிகம், கஜம், சிங்கம், ரிஷபம், மேஷம், மேடம், பிரஜோற்பத்தி, விகாரி, சர்வதாரி, மாமிசம், மது, சூது, ஸ்திரி, மன்மதன், ரதி, சண்முகம், சுப்பிரமணியம், குகன், கார்திகேயன், ராமன், லட்சுமணன், பரதன், சத்ருக்கனன், கிருஷ்ணன், ராஜகோபாலன், நாராயணன், ஜகந்நாதன்,
விட்டல், லட்சுமி, சரசுவதி, பார்வதி, துர்க்கை, கலியாணம், விவாகம், முகூர்த்தம், யாகம், யக்ஞம், ஓமம், ஆகுதி, நிவேதனம், ஆலயம், மகாமண்டபம், அர்த்த மண்டபம், கர்பக் கிருகம்,
கோபுரம், கும்பம், கலசம், மூர்த்தி, அர்ச்சனை, புஷ்பம், ஆராதனை, விநியோகம், உத்சவம், துவஜாரோகணம், வாகனம், பிரபை, ஷத்காலம், சந்தி, உச்சிக் காலம், சாயரட்சை, அர்த்தசாமம், கற்பூரம், சாம்பிராணி, தூபம், சின்னம், ராமகோபால், ராம்சுந்தரம், வரதராஜன், காமராஜன், கந்தசாமி, கிருஷ்ணசாமி, சீனிவாசன், பத்மாவதி, கற்பகம், ஜாதி, சமூகம், ஜனம், மகாஜனம், ஜனனம், வியாபாரம், ஜீவனம், லட்சம், கோடி, கஜம்,
ஆத்திரம், அதிருட்டம், கோபம், தாபம், ஹாஸ்யம், துஷ்டன், துரோகி, விரோதி, சத்துரு, பலாத்காரம், புஜம், பலம், பவிக்கிரமம், வீர்யம், ஆக்கிரமிப்பு, ஆதிக்கம், ஆதீனம், சத்யாகிரகம், துராக்கிரகம், சத்யம், அகிம்சை, தானம், சம்பத், தனம், பகிஷ்காரம்,
துவேஷம், பாசம், பிரச்சாரம், உபந்நியாசம், கலாட்பசேஷம், பிரசங்கம், சமத்துவம், சகோதரத்துவம், சமரசம், சமதர்மம், ஆலோசனை, அவசியம், ஜம்பம், காரசாரம், வேகம், குரோதம்,
லோபம், மோகம், மதம், மாத்சர்யம், வாத்சல்யம், பீதி, பயம், லாபம், நஷ்டம், வர்த்தகம், எஜமான், தாசன், யோக்கியன், அதிகாரி, அலங்காரி, அநாமதேயம், சேஷ்டை, பந்து, மித்ரர், சுதேசமித்திரன், தினமணி, தினத்தந்தி, ஆனந்தவிகடன், பிரசண்ட விகடன், குமாரக விகடன், குமுதம், ஜனசக்தி, விஜயா, மஞ்சரி, பௌர்ணமி, அமாவாசை, நவராத்திரி, விநாயக சதுர்த்தி, ஸ்ரீராமநவமி, ஸ்ரீஜெயந்தி, சங்கராந்தி, அன்னம், வஸ்திரம், மோட்சம், நரகம், தர்மம், அதர்மம், பிரமசரியம், கிருகஸ்தம், வனப்பிரஸ்தம், சந்நியாசம், ஸ்தோத்திரம், நமஸ்காரம்,
அகங்காரம், நித்யம், அநித்யம், ஜடம், சித்து, கிரீடம், சிங்காசனம், ஆபரணம், ஆக்ஞா சக்ரம், திருஞானசம்பந்தர், சுந்தரமூர்த்தி, மாணிக்க வாசகர், மதுர கவி, குலசேகர், ராமானுஜர், மத்துவர், சங்கரர், சங்கராசாரி, நீலகண்டர், அகத்தியர், வசிஷ்டர், அரிச்சந்திரன், சந்திரமதி, சிந்தாமணி, தருக்க சங்கிரகம், அலங்காரம்,
ஞானபோதம், திருவாசகம், பிரபந்தம், சயனம், நர்த்தனம், சங்கீதம், பைரவி, ஆனந்த பைரவி, மோகனம், மத்யமாவதி, தயா, தாட்சண்யம், அதிதி, பிச்சை, ஆசீர்வாதம், சாதம், ரசம், ஜலம், ஸ்நானம், புத்திரம், காமகோடி, யாகம், தருமம்
இவை போன்ற சொற்கள் இவை மட்டுமல்ல, பல துறைகளிலும் மேற்கண்டவாறு எண்ணிறந்த சொற்கள் தமிழில் கலக்குமாறு செய்யப்பட்டன. விரிவஞ்சி இத்துடன் விடுகிறோம்.
எனவே, வரும் காலப் புதிய இளைய தலைமுறைத் தமிழ்ப் பெருமக்கள் தங்களது செய்தித் தாட்களிலும், கிழமை, திங்கள் போன்ற பருவ ஏடுகளிலும், கூடுமானவரை வடசொற்களை நீக்கி, தனித் தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்தி எழுதுவது தமிழன்னைக்கு அவர்கள் காட்டும் நன்றியாகும்.
இந்தக் கட்டுரைப் பட்டியிலில் வந்துள்ள சொற்களை நீக்கி எழுதும் பயிற்சியைச் செய்தியாளர்கள் பெற்றால், அறிவு சுழற்சி வேகத்தில் மேலும் எண்ணற்ற வடசொற்களை நீக்கி எழுதும் பழக்க வழக்கம் தானே வந்து சேரும். இது பயிற்சி முறையே.
இதழியல் கலை வளர்க்கும் இளைய தலைமுறையினர், இனியாவது வட சொல்லற்ற, தனித் தமிழ் சொற்களுற்றக் கட்டுரைகளை எழுதிட வேண்டும் என்பதே எமது வேட்கை. அதற்கான சொல்லாய்வுதான் மேலே உள்ள மறைமலையடிகளார் ஆய்வு உருளுச் சொற்கள். இவற்றை நீக்கி எழுதினாலே போதும் ‘தனித்தமிழ்’ வேட்கை தானே உந்தி வரும்.
- “மறைமலையடிகள் வரலாறு” எனும் ஆய்வு
நூலிலிருந்து)