உள்ளடக்கத்துக்குச் செல்

அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்/இரண்டும் சொல்லக்கூடியதா?

விக்கிமூலம் இலிருந்து

(4) ரண்டும் சொல்லக்கூடியதா?



பிரபல காதல் நடிகையான அவா கார்டனர் ஒரு சமயம் வானொலி நிகழ்ச்சிக்காக வந்திருந்தபோது, ரசாயனப் பேராசிரியர் ஒருவரைச் சந்திக்க நேர்ந்தது. அப்பொழுது ரசாயனப் பேராசிரியரிடம், "அறிவியலைப் பற்றி எனக்குக் கொஞ்சம் சொல்லுங்களேன்" என்று கேட்டார் நடிகை கார்டனர்.

அதற்குப் பேராசிரியர், “எனக்குக் காதலைப் பற்றிச் சொல்லேன்" என்று பதிலுக்குக் கேட்டாராம்.