உள்ளடக்கத்துக்குச் செல்

அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்/விடாக் கண்டரான கவிஞர்

விக்கிமூலம் இலிருந்து


(51) விடாக் ண்டரான விஞர்



தத்துவ மேதை ஜேம்ஸ் டூவர்ட் மில்லும் கவிஞர் கோல்ரிட்ஜும் ஒரு சமயம் வெகு நேரம் உரையாடிக் கொண்டிருந்தனர்.

கவிஞரோ தமது வழக்கப்படிதத்துவ மேதையின் சட்டைப் பொத்தானை ஒரு கையால் பிடித்துக் கொண்டு, கவனத்தை எல்லாம் அருகில் நின்ற விளக்குத் தூணில் செலுத்தியபடி மணிக்கணக்காகப் பேசிக் கொண்டிருந்தார்.

ஆனால் தத்துவ மேதையோ அவசரமாகப் போக வேண்டியதிருந்தது. தமது சட்டைப் பையிலிருந்த சிறு கத்தியை எடுத்து பொத்தானுக்கும் தமக்கும் இருந்த தொடர்பை அறுத்து விட்டு, தப்பித்தது போதும் என்று விரைந்து ஓடிவிட்டார்.

தமது அலுவலை முடித்து விட்டு, வெகுநேரம் கழித்து திரும்பி, அந்த இடத்துக்கு வந்தார் தத்துவமேதை.

கையில் ஒரு பொத்தானைப் பிடித்தவாறு, விளக்குத் தூணைப் பார்த்துப் பேசிக்கொண்டிருந்தார் கவிஞர்.