உள்ளடக்கத்துக்குச் செல்

அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்/அவர் எங்கே போகிறார்?

விக்கிமூலம் இலிருந்து


(59) வர் ங்கே போகிறார்?



ட்வைட் மாரோ என்பவர் அமெரிக்காவில் பிரபலமான சட்ட நிபுணர். ஆனால், அவருக்கு ஞாபகமறதி சற்று அதிகம்.

ஒரு நாள், சட்ட நிபுணர் ரயிலில் அமர்ந்து, புத்தகத்தைப் படிப்பதில் ஆழ்ந்து விட்டார்.

டிக்கட் பரிசோதகர் வந்து டிக்கட் கேட்டபோது தான் சட்ட நிபுணர் பரபரப்போடு சட்டைப் பையில் டிக்கட்டைத் துழாவினார். ஆனால் அகப்படவில்லை.

அவரைப் பரிசோதகர் அறிந்தவராகையால் "பரவாயில்லை; டிக்கட் கிடைத்ததும் பிறகு அதை தபாலில் அனுப்பினால் போதும்” என்று கூறினார்.

டிக்கட் வாங்கினேன், அது எனக்கு நன்றாக நினைவு. இருக்கிறது. ஆனால், நான் எங்கே போகிறேன் என்பதுதான் இப்போது மறந்துபோய்விட்டது. டிக்கெட் அகப்பட்டால்தானே இதை நான் தெரிந்து கொள்ள முடியும்” என்றாராம் அந்தச் சட்ட நிபுணர்.