அண்ணா சில நினைவுகள்/பொத்தானை மாற்றிப் போட்ட புஷ்கோட்

விக்கிமூலம் இலிருந்து
பொத்தானை மாற்றிப் போட்ட புஷ்கோட்

ந்த முறை அண்ணா திருவிழந்தூரில் தங்கியிருந்தார்கள். இடம் ஏற்பாடு, புதியவர் குடவாயில் சி. கிருஷ்ண மூர்த்தி. ஒரு அம்பாசிடர் காரும் அவரிடமிருந்தது. போக வர அவர் உதவியாயிருந்தார். இது 1951ல் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தஞ்சை மாவட்ட முதல் மாநாடு, மாயவரம் நகரம், கூறைநாடு திரும்ஞ்சன வீதியில் பந்தலிட்டு நடந்தபோது. மாவட்டச் செயலாளரான கே. கே. நீலமேகம் வரவேற்புக் குழுத் தலைவர். உள்ளூர் பிரமுகர் ஆர். பழனிச்சாமி செயலாளர். அனுபவமில்லாத தால் 17 ரூபாய்தான் மாநாட்டில் மீதியாயிற்று. சாப்பாடு மட்டும் பிரமாதம் எல்லாருக்கும்!

இந்த மாநாட்டின் அமைப்புப் பணிகளில் உள்ளூரி விருந்தாலும், எனக்கு முக்கிய பங்கில்லை. காரணம், நான் அப்போது அய்யாவிடமும் தொடர்போடு இருந்தவன். அதனால், தலைவர்களோடு வெறும் பார்வையாளராகவே மாநாட்டுக்குச் சென்றேன். இந்த மாநாடு பலவகையிலும் மறக்கவொண்ணாதது. என் மூத்த மகள் ராணி, பிறந்திருந்த நேரம். அதற்காக என் துணைவியார் மன்னார்குடி சென்றுவிட்டதால், என் வீட்டில் யாரையும் தலைவர்களை அழைத்துத் தங்கவைக்க முடியவில்லை. கலைஞர் புளுரசி நோயால் அவதிப்பட்டுத் திருவாரூரில் படுக்கையிலிருந்தார். புதியவரான கவிஞர் கண்ணதாசன், சென்னையிலிருந்து அரங்கண்ணலோடு ரயிலில் முதல் வகுப்பில் வந்தபோது, அந்தப் பெட்டி Hot Axle ஆகித் தீப்பிடித்து விட்டது. அதனால் தனது பெட்டியை (Suit case ஐ)ப் பறிகொடுத்த கட்டிய வேட்டி சட்டையுடன் வந்து இறங்கினார். அவருக்கு என் நண்பர் காந்தியின் திருமண உடைகளான பட்டுவேட்டி சில்க் சட்டை கொடுத்து, அணிந்துகொள்ளச் செய்தேன். இரவு “சந்திர மோகன்” நாடகத்தில், அப்போதெல்லாம் சிவாஜியாக நடித்துக் கொண்டிருந்த இலட்சிய நடிகர் எஸ். எஸ். இராஜேந்திரனை, “நீ வேண்டாம். நான் இங்கு சிவாஜி வேடம் போடுகிறேன்” என்று நண்பர் E. V. K. சம்பத் விலக்கிட, அவர் தன் மனக் குமுறலை என்னிடம் வெளியிடும் நிலைமை, இண்ட்டர் மீடியட் படித்துவிட்டு, நாகர்கோயிலில் சும்மாயிருந்தவர், அங்கே இருந்துவந்து, முதன்முதலாகக் கழக மாநாட்டில் மலையாளத்திலும், பிறகு தமிழிலும் பேசிக் கவனத்தை ஈர்த்துக் கைதட்டல் பெற்றார் இங்கே ஒரு வாலிபர் : பெயர் நாஞ்சில் கி. மனோகரன். S.S.L.C. முடித்து, முதன் முதலாகக் கழகத் தொண்டர் படையில் இணைந்து இரெ. ஜோசப் தலைமையில், அருந்தொண்டாற்றினார் ஒர் இளைஞர்; அவர், என். கிட்டப்பா.

மாநாட்டின் இரண்டாவது நாள், மாலை நேரம், மதிய உணவு இடைவேளைக்குப் பின், அண்ணா அவர்கள் குடவாசல் கிருஷ்ணமூர்த்தியுடன் சென்று, திருவிழந்தூரில் அந்த இல்லத்தில் ஒய்வெடுத்துக்கொண்டிருந்தார். காஞ்சி கல்யாணசுந்தரமும் நானும் அங்கு சென்றோம். “என்னாண்ணா, இன்னும் ஒக் காந்துகினு இக்கிறே? புறப்படு!” என்றார் காஞ்சி கல்யாணசுந்தரம். அவர் அண்ணாவுடன் பள்ளித் தோழர். கழகத் தோழர் களிலேயே, அவர் ஒருவர்தான், அண்ணாவை “வா போ“ என ஒருமையில் அழைப்பவர்.

சம்பத் அங்கேதான் தங்கியிருந்தார். அவர் தன் னுடைய bush coat ஒன்றை அண்ணாவிடம் தந்து, “இதைப் போட்டுக்கிட்டு வாங்கண்ணா, மாநாட்டுக்கு!” என்ற பரிவுடன் உரைத்தார். என்ன சம்பத்து! நீங்க தான் இண்ணக்கி சிவாஜி போடlங்களாமே?” என்று குறும்பாகக் கேட்டேன். “இது இரண்டாவது நாடகமல்லவா!” என்று பதில் சொல்லிச் சரித்திரகால சிவாஜி ஒல்லியானவன் என்ற வரலாற்று. உண்மையைத் தகர்த் தெறிந்தார் சம்பத்!

அண்ணா புஷ்கோட் அணிந்துகொண்டு, மேலே அங்கவஸ்திரம் தரித்து, வழக்கமான பரபரப்புடன் போய்க் காரில் ஏறிக்கொள்ளவும், நாங்கள் தொடர்ந்து ஒடினோம், வண்டியில் ஏற. மாநாட்டுப் பந்தல் வந்ததும், அண்ணா மேடைக்குச் செல்ல, நாங்கள் அண்ணாவின் பேச்சைக் கேட்பதற்காக, எதிரே முன்வரிசையில் தரையில் அமர்ந்திருந்தோம்.

அண்ணா மேடையில் நாற்காலியில் வீற்றிருந்தபோது எங்களுக்குப் புலப்படாத ஒரு குறை, அவர்கள் சொற். பொழிவாற்ற எழுந்துவந்து மைக் முன்னர் நின்றபோது தெரிந்துவிட்டது! அதாவது, புதிதாக புஷ்கோட்-அதிலும் இரவல்-அணியும்போது, அண்ணா முதல் பொத்தானை இரண்டாவது துளையில் மாட்டி, அதுபோலவே மற்றவற்றையும் தள்ளித் தள்ளிப் போட்டுக்கொண்டதால், சட்டையின் முன்புறத்தில் ஒருபகுதி ஏற்ற்மாகவும் இன்னொரு பகுதி இறக்கமாகவும் தோன்றியதால் எங்களுக் கெல்லாம் அடக்கமாட்டாத சிரிப்பு! கை தட்டிக் கேலி செய்ய, அது தனியிடம் அல்ல! பேசத் தொடங்கிய பின் மேடைக்குப் போய்ச் சொல்வதும் நாகரிகமல்ல. எனவே சிரமப்பட்டு வாயை மூடி, எங்கள் கிண்டலை வெளிக் காட்டாமல் சேர்த்துவைத்திருந்து, மாநாடு முடிந்தவுடன், ஒடிச் சென்று அண்ணாவிடம் சொல்லி, ஒயாச் சிரிப்பில் ஆழ்ந்தோம்.

பெரியாரின் வழியிலேயே அண்ணாவும், தமது ஆடை அலங்காரங்களில் எப்போதுமே கவனம் செலுத்துவதில்லை என்பது நாடறிந்த உண்மை என்பதற்கு, இந்தச் சம்பவம் ஒர் எடுத்துக்காட்டாகும்.