ஹெர்க்குலிஸ்/9

விக்கிமூலம் இலிருந்து

9. கிரீட் தீவின் காளையைக் கைப்பற்றுதல்

கிரீட் தீவிலே அட்டகாசம் செய்து சுற்றிக் கொண்டிருந்த வெறி பிடித்த காளை ஒன்றைப் பிடித்துக்கொண்டு வர வேண்டுமென்று யூரிஸ்தியஸ் ஹர்க்குலிஸுக்குக் கட்டளையிட்டான். இது அவனுடைய ஏழாவது பணி.


அந்தக் காலத்தில் அத்தீவை ஆண்டுகொண்டிருந்த மன்னன். மினோஸ் என்பவன். அவன் பட்டத்திற்கு வந்த சமயத்தில் சீயஸ் கடவுளுக்கு ஒரு விலங்கைப் பலி கொடுக்க வேண்டுமென்று கருதி, கடற்கரையில் கற்களால் ஒரு பலிபிடத்தைக் கட்டினான். பின்னர்ச் சமுத்திர ராஜனான போசைடானைத் தொழுது, தேவதேவனுக்கு ஏற்ற ஒரு மிருகத்தைத் தனக்குக் கொடுத்தருள வேண்டுமென்று அவன் பிரார்த்தனை செய்தான். அதன்படி கடலரசனின் அருளால், நடுக்கடலிலிருந்து துாய வெண்மையான அழகுள்ள காளை ஒன்று துள்ளி வெளி வந்தது. அதன் கொம்புகள் குட்டையாயும், வெள்ளியால் அமைந்தவையாயும் இருந்தன. பால் போன்ற நிறம், பனி போன்ற குளிர்ந்த பார்வை. சுழி எதுவுமின்றிக் கம்பீரமான தோற்றம், ஆடு போன்ற அமைதியான குணம் ஆகியவற்றுடன் விளங்கிய அந்தக் காளையைக் கண்டவர் அனைவரும் பாராட்டினர். உலகிலேயே அதைப் போன்ற அழகுள்ள மாடு வேறு இல்லையென்று சொல்லலாம். அத்தகைய காளையை அதற்கு முன் மினோஸ் மன்னனும் கண்டதேயில்லை. ஆகவே, அவன் அதைப் பலியிட விரும்பாமல், அதைத் தன் புல் தரைகளிலே மேயவிட்டுவிட்டு, சியஸுக்குச் சாதாரனமான ஒரு காளையைப் பலியிட ஏற்பாடு செய்தான்.


தெய்வங்களை ஏமாற்ற முடியுமா ? மினோஸ் மன்னன் சீயஸ் கடவுளின் பெயரைச் சொல்லி வாங்கிய காளையைத் தானே வைத்துக்கொண்டதை அறிந்த கடலரசன், மிகுந்த கோபமடைந்து, அந்த வெள்ளைக் காளைக்கு வெறி பிடிக்கும்படி சபித்துவிட்டான். உடனேயே அந்த உயர்ந்த காளைக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது. அது நாட்டுக்குள்ளே வந்து, நகரில் பல இடங்களையும் சுற்றத் தொடங்கிற்று. அது தனக்கு எதிர்ப்பட்டவர்களைக் கொம்புகளால் தாக்கியும் முட்டியும் வதைக்கத் தொடங்கிற்று. ஆண்கள், பெண்கள், குழந்தைகள் பலர் அதற்குப் பலியானார்கள் விளைநிலங்களில் அது புகுந்து, பயிர்பச்சைகளையெல்லாம் பாழாக்கி வந்தது. மன்னனும் அதை மேற்கொண்டு கட்டி வைக்க முடியாதென்று. அதை வெளியே விட்டு விட்டான். கிரீட் தீவில் அது பல இடங்களில் சுற்றித் திரிந்து. பெருவாரியான நஷ்டங்க உண்டாக்கிவிட்டது. முக்கியமாக, டெத்ரிஸ் என்ற நதியின் தீரத்தில் காவுகள் கழனிகளையெல்லாம் அது பாழாக்கியிருந்தது.


அதை உயிரோடு பற்றி வருவதற்க ஹெர்க்குலிஸ் ஓர் ஓடத்தில் ஏறிக்கொண்டு, கடல் மார்க்கமாகக் கிரீட் தீவை அடைந்தான் அங்கே மினோஸ் மன்னன் அவனுக்கு வேண்டிய உதவிகளைச் செய்யத் தயாராயிருந்தான். ஆயினும், ஹெர்க்குலிஸ், தான் மட்டுமே தனியாக அந்தக் காளையைக் கவனித்துக் கொள்வதாகச் சொல்லிவிட்டு, வனங்களிலே அதைத் தேடிக்கொண்டு செல்லத் தொடங்கினான். அடிக்கடி அது சுற்றி வரக்கூடிய இடம் ஒன்றைப்பற்றிக் கேள்வியுற்று. அவன் அங்கே சென்று, ஒரு சுனைப்பக்கத்தில் காத்திருந்தான். அப்பொழுது மாடு கனைக்கும் பேரோசை ஒன்று அவன் செவிகளைத் தாக்கிற்று. சிறிது நேரத்தில் வெள்ளைப் பனிவரை போன்ற கானை ஒன்று மரங்களினிடையே வருவதை அவன் கண்டான். ஒரு கண நேரத்தில் அது தன் தலையை ஆட்டிக் கொண்டு, அவனை நோக்கி ஓடி வந்தது. உடனே அவன். தன் கையிலிருந்த கதையைக் கீழே போட்டு விட்டுத் துள்ளி எழுந்து, அதன் கொம்புகள் இரண்டையும் பிடித்துக்கொண்டான். தன்னை எதிர்த்துப் போராட வல்லமையுள்ள ஒரு மிருகம் கிடைத்த்தை எண்ணி, அவன் மகிழ்ச்சியோடு சிரித்து ஆரவாரம் செய்தான்.

மாட்டுக்கும் மானிட வீரனுக்கும் போராட்டம் தொடங்கிவிட்டது. காலையில் கதிரவன் உதயமானதிலிருந்து ஹெர்க்குலிஸின்

வலிமையைக் காளை நன்றாக உணர்ந்துகொண்டது. இறுதியில் அது அவனுக்குப் பணிந்துவிட்டது. உடனேயே அதன் வெறியும் தணிந்து, அது அவனுக்குப் பின்னால் செல்லத் தொடங்கிவிட்டது.

ஹெர்க்குவிஸ் கிரீஸ் நாட்டுக்குத் திரும்பிச் செல்வதற்காகக் கப்பலில் ஏறிய சமயத்தில், அந்தக் காளையும் சிறு ஆட்டுக்குட்டிபோல், தானாக அதில் ஏறிக்கொண்டு சென்றது. அவனும் அதை அன்புடன் போற்றி அழைத்துச் சென்றான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=ஹெர்க்குலிஸ்/9&oldid=1032758" இலிருந்து மீள்விக்கப்பட்டது