பக்கம்:முதற் குலோத்துங்க சோழன்.djvu/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அவைக்களப்புலவர்

79

தமிழ் நாவலர் சரிதை உணர்த்துகின்றது. அந்நூல் இது போது கிடைக்கப் பெறாமையின் இறந்ததுபோலும். அன்றியும் ' விழுப்பரையர் ' என்ற ஒரு தலைவர்மீது ' உலாமடல்' என்னும் நூலொன்று பாடியுள்ளனர் என்று தெரிகிறது. சிலப்பதிகார அரும்பத உரையாசிரியர் நமது சயங்கொண்டாரேயாவர் என்று அறிஞர்கள் கருதுகின்றனர்.

இனி, கவிகுமுதசந்திர பண்டிதராகிய திருநாராயண பட்டரென்பார் கி. பி. 1097-ல் குலோத்துங்க சோழ சரிதை என்ற நூலொன்று இவ்வேந்தன் மீது இயற்றி, புதுச்சேரியைச் சார்ந்த திரிபுவனியென்ற ஊரில் இறையிலிநிலம் பரிசிலாகப் பெற்றிருப்பது ஈண்டு அறியத்தக்கதாகும்.[1]


1. Ins. 198 of 1919.

  1. 1. Ins. 198 of 1919.