________________
50 தமிழ் இலக்கிய வரலாறு சங்கத்தில் உறுப்பினராகி மாணவர் பலர்க்குத் தமிழ் நூல்களைக் கற்பித்து வந்த ஒரு நல்லாசிரியராக அம் மாக்காயனார் இருந்திருத் தல் வேண்டும் என்பது திண்ணம். அவர்பால் கல்வி பயின்று புலமை எய்தியவரே, திணைமாலை நூற்றைம்பது ஏலாதி என்னும் இரு நூல்களும்' இயற்றியுள்ள கணிமேதாவியார் என்பார். ஆகவே, சிறுபஞ்சமூலம் என்ற இந்நூலின் ஆசிரியராகிய காரி யாசானும் கணிமேதாவியாரும் ஒருசாலை மாணாக்கர்கள் என்பது தெள்ளிதிற் புலனாதல் காண்க. எனவே, காரியாசான் மதுரை யிற் பிறந்து வளர்ந்தவராகவும் இருக்கலாம் ; அன்றேல் கல்வி கற்றற் பொருட்டு மதுரைக்குச் சென்று, சமயத் தொண்டு குறித்து அங்குத் தம் வாழ்நாள் முழுமையும் வதிந்தவராதல் வேண்டும். இவரது நூலில் சைனருடைய சிறப்பு நீதிகள் சிறுபான்மையாகவே காணப்படுகின்றன. எனவே, இவர் தம் நூலில் பெரும்பான்மையாகக் கூறியுள்ளவை, எல்லாச் சமயத் தினரும் படித்தற்கேற்ற பொது நீதிகளே என்று கூறலாம். இவர் செல்வம் மிகுந்தவராகவும், பெருங் கொடையாளராகவும் இருந்திருத்தல் வேண்டும் என்பது இந் நூற்பாயிரத்தால் அறியக் கிடக்கின்றது. இவர் ஆயுர்வேத நூற்பயிற்சியும், வடமொழிப் புலமையும் ஒருங்கே யுடையவர் என்பது ஆராய்ச்சியாளர்களின் கருத்து. பொதுவாகப் பார்க்குமிடத்து, சமண சமயப் புலவர் எல்லோரும் வடமொழிப் பயிற்சியுடையவராக இருந்தனரென்று தெரிகிறது. இவரைப் பற்றிய பிற வரலாறுகள் புலப்படவில்லை. இனி, சிறந்த கவிஞனுக்குரிய இலக்கணம் யாது என்பதை இவ்வாசிரியர் தம் சிறுபஞ்சமூலத்தில் ஒரு பாடலில் | நன்கு விளக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். அப்பாடலின் கருத்து: பல நூல்களையும் தக்க ஆசிரியர்பால் கேட்டுப் பொருள் உணர்ந் தவனே பெரும்புலவன் ஆவன் ; அவன் சிந்தையின் பெருமையி னாலே தான் அவன் பாடும் பாட்டுச் சிறப்படையும் --என்பதாம் மற்றொரு பாடலில் செந்தமிழ் நன்கறியாதவன் கவிபாடும் நகைப்பிற்கு இடமாகும் என்னும் பொருள்பட, ' செந்தபு தேற்றான் கவிசெயலும் - நாவகமே நாடின் நகை ' என்று இ 1. சிறுபஞ்சமூலம், பா. 33