கணினி களஞ்சிய அகராதி இரண்டாம் தொகுதி/B

விக்கிமூலம் இலிருந்து
B

back : முந்தைய

bachman diagram : பக்மன் வரைபடம்.

backbone : முதுகெலும்பு; அடியாதாரம் : 1. சிறு சிறு பிணையங்களை ஒருங்கிணைத்து அவற்றுக்கிடையே தகவல் போக்குவரத்தை ஏற்படுத்தும் பெரும் பிணையம். இணையத்தில் ஒவ்வொரு நாட்டிலுமுள்ள இத்தகைய முதுகெலும்புப் பிணையங்கள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவில் மட்டும் ஆறு முதுகெலும்புப் பிணையங்கள் உள்ளன (எ-டு: Sprint, MCl). ஆயிரக்கணக்கான மைல்கள் பரப்பிலுள்ள பகுதிகள் நுண்ணலை (microwave) தடங்கள், நிலத்தடி, கடலடிக் கேபிள்கள் மற்றும் செயற்கைக் கோள்களால் இணைக்கப் படுகின்றன. 2. இணையத் தகவல் தொடர்பில் பெருமளவு தகவல் பொட்டலப் பரிமாற்றங்களைச் செயல்படுத்துகின்ற சிறிய பகுதிப் பிணையங்கள். 3. ஒரு பிணையத்தில் தகவல் தொடர்புப் போக்குவரத்துக்கு ஆதாரமாக விளங்கும் இணைப்புக் கம்பிகள். ஒரு குறும்பரப்புப் பிணையத்தில் பாட்டை (Bus) என்பது முதுகெலும்பாக விளங்கும்.

backbone cabal : முதுகெலும்பு மறை குழு : இணையத்தில் யூஸ்நெட் செய்திக் குழுக்களின் படிநிலை அமைப்பை அறிவித்தல் மற்றும் புதிய செய்திக் குழுக்களை உருவாக்கல் ஆகியவற்றுக்கு பொறுப்பான பிணைய நிர்வாகிகளின் குழுவைக் குறிக்கும் சொல். இப்போது அத்தகைய மறைகுழுக்கள் இல்லை.

B2C : மின் வணிக (e-commerce)நடைமுறையில் வணிக நிறுவனத்துக்கும் (Business) வாடிக்கையாளருக்கும் (Customer) இடையே நடைபெறும் வணிகத் தகவல் பரிமாற்றங்கள்.

back door : பின்வாசல் : பின்கதவு : ஒரு நிரல் அல்லது முறைமையின் பாதுகாப்புக் கட்டுப்பாடுகளை மீறி உள்ளே நுழையும் வழி. நிரலாக்க வல்லுநர்கள் உருவாக்கிக் கொண்டிருக்கும் மென்பொருள்களில், பிழைகளைக் கண்டறியும் நோக்கில் இத்தகைய பின்வாசல்களை அமைப்பர். பின்வாசல் வசதி நிரலர் தவிர ஏனையோர்க்கு தெரிந்துவிட் டாலோ, மென்பொருள் வெளியிடப்படுவதற்கு முன்பு அத்தகைய பின் வாசல் வசதிகள் நீக்கப்படாவிட்டாலோ (கவனக் குறைவாக), பாதுகாப்புக்கு பங்கம் ஏற்பட்டுவிடும்.

back end : பின்னிலை;பின்னணி;பின்அமைவு : 1. கிளையன்/ வழங்கன் (Client/server) பயன்பாடுகளில், வழங்கு கணினியில் செயல்படும் நிரலின் பகுதி.(Client/Server Architecture, Front End என்பதனுடன் ஒப்பிடுக). 2. மொழிமாற்றி (compiler) யின் ஒரு பகுதி. மனிதர்களுக்குப் புரிகிற மூல நிரல் வரைவை (source code), எந்திரத்துக்குப் புரிகிற குறிநோக்கு வரைவாக (object code) மாற்றியமைக்கும் பகுதி.

back end operation : பின் முனைப் பகுதிகள்; பின்னிலைப் பணிகள்; பின் இயக்கப் பணிகள். background application : பின்புலப் பயன்பாடு. background communication : பின்புலத் தகவல் தொடர்பு

background printing : பின்புல அச்சிடல்; பின்னணி அச்சிடு முறை : ஒர் ஆவணத்தை அச்சிட அச்சுப்பொறிக்கு அனுப்பிவிட்டு கணினியில் வேறு பணிகளை மேற்கொள்ளும் முறை.

back-lit display : பின்-ஒளி திரைக்காட்சி : திரைக்குப் பின்னால் ஒளி படுமாறு அமைக்கப்பட்ட எல்சிடி திரைக் காட்சி. உருவங்கள் கூர்தெளிவாகவும், எழுத்துகள் நன்கு படிக்கும் படியும் இருக்கும். குறிப்பாக, சுற்றுப் புறம் மிகவும் ஒளியுடன் விளங்கும்போது இத்தகைய ஏற்பாடு பலன் தரும்.

backplan : பின்தளம்.

backquote : பின்மேற்கோள் குறி.

backspace character : பின் இட எழுத்து.

backup and restore : பாதுகாப்பும் மீட்டளிப்பும் : கோப்புகளை பாதுகாப்பு நகலெடுத்துச் சேமித்தலும், அவற்றை மீண்டும் அந்த இடத்திலேயே மீட்டளித்தலும்.

backup storage : பாதுகாப்புச் சேமிப்பகம்.

background tasks : பின்புலப் பணிகள்.

back volume : முன்தொகுதி.

backup utility : இனப்பெருக்கி: கணினி நச்சுநிரலில் ஒருவகை. தொடர்ந்து தன்னைத் தானே நகலெடுத்துக் கொள்ளும். இறுதியில் முழுக் கணினியையும் (சேமிப்பகம் முழுமையும்) இந்த நச்சுநிரலின் நகலே ஆக்கிரமித்திருக்கும்.

backward reasoning : பின்னோக்குக் காரணியம்.

bad block : பழுதுத் தொகுதி : நினைவகத்தில் பழுதான பகுதி. கணினியை இயக்கி வைக்கும் போது, நினைவகக் கட்டுப்பாட்டு பொறி சுயபரி சோதனை செய்து கொள்கையில் பழுதான தொகுதியை அடையாளங் காண்கிறது.

bad track : பழுதுத் தடம் : ஒரு நிலை வட்டில் அல்லது நெகிழ்வட்டில், பழுதான பிரிவைக் கொண்டுள்ள ஒரு தடம். இவ்வாறு பழுதெனக் குறிக்கப்பட்ட தடத்தை இயக்க முறைமை புறக்கணித்துச் செல்லும்.

balanced line : சமச்சீர் இணைப்புத் தடம் : முறுக்கிணைக் கம்பிகள் போன்ற தகவலனுப்பு தடம். அதிலுள்ள இரு மின்கடத்திகளும், சம அளவுள்ள எதிரெதிர் துருவமும்/ திசையும் கொண்ட மின் அழுத்தத்தையும் மின்னோட்டத்தையும் கொண்டிருப்பின் அது சமச்சீர் இணைப்புத் தடம் எனப்படுகிறது.

bandwidth on demand : தேவைக்கேற்ற அலைக்கற்றை : தொலை தொடர்பில் ஒரு தகவல் தடத்தில் தகவல் பரிமாறிக் கொண்டிருக்கும் போது, அத்தகவல் பரிமாற்றத்தின் தேவைக்கேற்ப கையாள் திறனை அதிகரித்துக் கொள்ளுதல்.

bank, data : தகவல் வாங்கி : தரவு வங்கி.

banner : பட்டிகை, பதாகை : 1. இணையத்தில் விலைப்பக்கத்தின் ஒரு பகுதியில் தோன்றும் விளம்பரப் பட்டிகை. பெரும்பாலும் ஒர் அங்குல அகலத்தில், வலைப்பக்கத்தின் நீளத்தில் காணப்படும். விளம்பரப் படுத்தப்பட்டுள்ள நிறுவனத்தின் வலைத் தளத்துக்கு அப்பட்டிகை யில் ஒரு தொடுப்பு இருக்கும். 2. யூனிக்ஸ் இயக்க முறையில் உள்ள கட்டளை. கணினித் திரையின் ஒரு வரியில் 10 எழுத்துகள் வீதம் பெரிய எழுத்துகளில் செய்திகளைத் திரையிடலாம்.

banner page : பட்டிகைப் பக்கம் : 1. பெரும்பாலான அச்சு மென்பொருள்களினால் ஒவ்வொரு அச்செடுப்பின் போதும் சேர்த்துக் கொள்ளப்படும் முகப்புப் பக்கம். பயனாளர் அடையாளத் தகவல், அச்சுப் பணியின் அளவு, அச்சு மென்பொருளின் தகவல் ஆகியவற்றை இப்பக்கம் கொண்டிருக்கும். ஒரு அச்சுப் பணியை இன்னொன்றிலிருந்து வேறுபடுத்திக்காட்ட இப்பக்கம் பயன்படும். 2. மென்பொருள் தொகுப்பகளில் தொடக்கத்தில் தோன்றும் பக்கம். அத்தயாரிப்பைப் பற்றியும் அதைத் தயாரித்த நிறுவனம் பற்றியும் தகவல் இடம் பெற்றிருக்கும்.

bar : பட்டை.

bare bone : வெற்றெலும்பு; சிக்கனப் படைப்பு வேறெந்தக் கூடுதல் சிறப்புக் கூறுகள் எதுவுமில்லாத, கட்டாயத் தேவையான குறைந்த பட்சக் கூறுகளை மட்டுமே கொண் டுள்ள ஒரு கணினி அல்லது ஒரு மென்பொருள் தொகுப்பு. மென் பொருளெனில், கொடுக்கப்பட்ட பணியை நிறைவேற்றுவதற்கு உரிய செயல்கூறுகளை மட்டுமே கொண்டிருக்கும். ஒரு கணினி எனில் வேறெந்தக் கூடுதல் புறச்சாதனங்களும் இல்லாமல் கணினி இயங்கத் தேவையான மிகக்குறைந்த வன்பொருள் உறுப்புகளையே கொண்டிருக்கும். இயக்க முறைமை தவிர வேறெந்த மென்பொருளும் அக்கணினியில் இருக்காது.

base 2 : ஆதார எண் 2.

base 8 : ஆதார எண் 8.

base 10 : ஆதார எண் 10.

base 16 : ஆதார எண் 16.

base concept, data : தரவுத் தளக் கருத்துரு.

base, data : தகவல் தளம்; தரவுத்தளம்.

Base Management System, Data : தரவுத் தள மேலாண்மை அமைப்பு: சுருக்கமாக டிபிஎம்எஸ் (DBMS) எனக் குறிப்பிடுவர். டிபேஸ், ஃபாக்ஸ் புரோ போன்ற மென்பொருள்களை இந்த வகையில் அடங்குவர்.

based system knowledge : அறிவுவழி அமைப்பு.

base notation: அடிப்படைக்குறிமானம்.

base number : அடிப்படை எண்.

base band coaxial cable : தாழ் அலைக்கற்றை இணையச்சு வடம்.

baseband transmission : தாழ் அலைக்கற்றை செலுத்தி; தாழ் அலைக்கற்றை அனுப்புகை.

basic language : பேசிக் கணினி மொழி.

BAT : பேட் : ஒரு கோப்பு வகை

.bat : பேட் : எம்எஸ்-டாஸ் இயக்க முறைமையில் தொகுதி நிரல் கோப்புகளை அடையாளங்காணப் பயன்படும் வகைப்பெயர் (Extention). .பேட் கோப்புகள் இயங்குநிலை கோப்புகளாகும். ஏனைய நிரல் கோப்புகளை அழைக்கும் கட்டளைகள்.பேட் கோப்பில் இடம் பெற முடியும்.

batch file transmission : கோப்புத் தொகுதி அனுப்புகை : ஒரேயொரு கட்டளைமூலம் கோப்புகளின் தொகுதியை அனுப்பி வைக்கப் பயன்படும் கட்டளை.

batch processing mode : தொகுதி. செயலாக்க பாங்கு. batching : தொகுதிப்படுத்தல்; தொகுதியாக்கம்,

batch system : தொகுதி முறைமை: முன்வரையறுக்கப்பட்ட ஊடாடும் வகையிலோ, நிகழ்நேரத்திலோ இல்லாமல், தொகுதி தொகுதியாகச் செயல்படுத்தும் ஒரு முறைமை.

battery : மின்கலத் தொகுதி; மின் வழங்கி : இரண்டு அல்லது மேற் பட்ட மின்கலன்களை ஒரு கொள்கலனில் கொண்ட தொகுதி. மின் சாரக் கரைசலில் கொள்கலன் இணைந்து மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. சொந்தக் கணினிகளுக்கு மின்கலத் தொகுதி, ஒரு மாற்று மின்சார வழங்கியாகப் பயன்படுகிறது. கையேட்டுக் கணினி மற்றும் மடிக் கணினிகளுக்கு இத்தகைய மின்சார வழங்கிகளே (நிக்கல் கேட்மியம், நிக்கல் மெட்டல் ஹைடிரைடு, லித்தியம் அயான் மின் வழங்கிகள்)பயன்படுத்தப்படுகின்றன. கணினிக்குள் இருக்கும் கடிகாரம், அழியா நினைவகத்தின் ஒரு பகுதி (முக்கிய முறைமைத் தகவல்கள் பதியப்பட்டுள்ள சீமாஸ் பகுதி) ஆகியவை எப்போதும் மின்சாரம் பெற இந்த மறுமின்னூட்ட மின் வழங்கிகள் பயன்படுகின்றன.

battery meter : மின்கலமானி: ஒரு மின்கலத்தின் மின்னோட்டத்தை (திறனை) அளக்கப் பயன்படும் கருவி.

bay : வைப்பிடம்; செருகிடம் : ஒரு மின்னணுக் கருவியை ஒர் எந்திரத்தில் பொருத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள இடம் அல்லது செருகுவாய். எடுத்துக்காட்டாக, ஒரு நுண் கணினியின் நிலைப்பெட்டியில் பின்னாளில் கூடுதலாக ஒரு நிலை வட்டினையோ, குறுவட்டகத்தையோ பொருத்துவதற்காக விட்டு வைக்கப்பட்டுள்ள வைப்பிடம்.

.bb : பிபி : இணையத்தில், பார்படாஸ் நாட்டைச் சேர்ந்த இணையதளம் என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப் பெயர்.

BBC : பிபிசி : இங்கிலாந்து நாட்டு வானொலி நிறுவனம்.

BBL : பிபிஎல் : பிறகு திரும்பி வருவேன் என்று பொருள்படும்.Be Back Later என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். இணைய அரட்டையில் பங்கு பெற்றுள்ள ஓர் உறுப்பினர் தற்காலிகமாக அரட்டையிலிருந்து விலகிப் பிறகு இணைந்து கொள்ள எண்ணும்போது பயன்படுத்தக்கூடிய ஒரு சொல்.

BBS : செய்திப் பலகை அமைப்பு: தகவல் பலகை முறைமை : Bulletin Board System என்ற தொடரின் குறும்பெயர். ஒன்று அல்லது மேற்பட்ட, இணக்கிகள் அல்லது வேறெந்த பிணைய அணுகுமுறைச் சாதனங்கள் இணைக்கப்பட்ட கணினி அமைப்பு. தொலை தூரங்களிலிருந்து தொடர்பு கொள்ளும் பயனாளர்கள் தகவல் மற்றும் செய்திகளைப் பெறுவதற்கு இக்கணினி அமைப்பு உதவுகிறது. இதில் வகைப்படுத்தப்பட்ட தகவல்கள், பயன்பாட்டு மென்பொருள்கள் பயனாளர்களின் பார்வைக்கு வைக்கப்படுகின்றன. பயனாளர்கள் தகவல்களைப் படிக்கலாம். தாம் விரும்பும் தகவல்களை பிறரின் பார்வைக்கு வைக்கலாம். பிபிஎஸ் பயனாளர்கள் தமக்குள் மின்னஞ்சல் பரிமாறிக் கொள்ளலாம். அரட்டை (chat) அடிக்கலாம். கோப்புகளை பதிவேற்றம்/பதிவிறக்கம் செய்யலாம். பிபிஎஸ் சேவைகள் கட்டண அடிப்படையிலும்/இலவசமாகவும் அமைகின்றன.

bcc : பிசிசி ; பிறர் அறியா கார்பன் நகல் என்று பொருள்படும் (blind carbon copy) என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர்.(bind courtesy copy என்றும் கூறுவர்)மின்னஞ்சலில் ஒரு மடலை பலருக்கும் அனுப்பலாம். பெறுநர் (TO) முகவரி இருக்குமிடத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட முகவரிகளைக் குறிப்பிடலாம். அல்லது CC என்ற கட்டத்துள் வேறுபலரின் முகவரிகளைக் குறிப்பிடலாம். அல்லது BCC என்ற கட்டத்துள்ளும் குறிப்பிடலாம். TO, CC ஆகியவற்றில் குறிப் பிடும் முகவரிதாரர்களுக்கு இந்த மடல் வேறு யாருக்கெல்லாம் அனுப்பப்பட்டுள்ளது என்பதை அறிந்துகொள்ள முடியும். ஆனால், BCC யில் குறிப்பிட்டுள்ள முகவரிதாரர்க்கு மடலின் நகல் கிடைக்கும். ஆனால் அந்த மடலின் நகல் வேறு யாருக்கெல்லாம் அனுப்பப்பட்டுள்ளது என்பதை அறிய முடியாது.

.bc.ca : .பிசி.சிஏ : ஒர் இணையத் தளம். கனடா நாட்டுப் பிரிட்டிஷ் கொலாம்பியாவைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப் பிரிவுக் களப் பெயர்.

BCNF : பிசிஎன்எஃப் : பாய்ஸ் காடின் இயல்புப் படிவம் என்ற பொருள் தரும் Boyce Codd Normal Form என்னும் தொடரின் தலைப்பெழுத்துச் சுருக்கம். ஆரக்கிள் போன்ற ஆர்டிபி எம்எஸ் தகவல் தளத் தொகுப்புகளில் ஒர் அட்டவணை எப்படி அமைய வேண்டும் என்பதற்கான வரைமுறைகள் உள்ளன. அட்டவணைகள் அந்த வரையறையின்படி அமையவில்லையெனில் பின்னாளில் தகவல் தள மேலாண்மையில் சிக்கல் ஏற்படும். எனவே, அப்படிப்பட்ட அட்டவணைகள் இயல்பு நிலைக்குக் கொண்டுவர வேண்டும். இயல்பு நிலைக்குக் கொண்டுவருதல் நான்கைந்து படிநிலைகளில் மேற்கொள்ளப்படவேண்டும்.பாய்ஸ்-காடின் முறை அதில் ஒரு படிநிலை.

.bd : .பிடி : வங்க தேசத்தைச் சேர்ந்த இணைய தளங்களைக் குறிக்கும் பெருங்களப் பெயர்.

.be : .பிஇ : பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த இணைய தளங்களைக் குறிக்கும் பெருங்களப் பெயர்.

beam splitter : கற்றை பிரிப்பான் .

beep statement : பீப் கூற்று.

bearer channel : தாங்கு தடம் :ஓர் ஐஎஸ்டிஎன் இணைப்பில் நடைபெறும் 64 kbps தகவல் தொடர்புத் தடங்களில் ஒன்று. ஒரு பிஆர்ஐ (Basic Rate Interface) ஐஎஸ்டிஎன் இணைப்பு 2 தாங்கு தடங்களையும் ஒரு தரவுத் (data) தடத்தையும் கொண்டுள்ளது. ஆனால் பிரைமரி ரேட் இன்டர்ஃபேஸ் (PRI) ஐஎஸ்டிஎன் இணைப்பு வட அமெரிக்காவில் 23 தாங்கு தடங்களையும் ஐரோப்பாவில் 30 தாங்கு தடங்களையும் ஒரு தகவல் தடத்தையும் கொண்டுள்ளன.

Be box : பி-கணினி, பி-பெட்டி : ரிஸ்க் (RISC) தொழில்நுட்ப அடிப்படையிலான மிகுதிறனுள்ள பவர்பிசி (PowerPC) நுண் செயலியைக் கொண்ட கணினி. பி நிறுவனம் (Be Inc.) உருவாக்கியது. பி நிறுவனத்தின் இயக்க முறைமையான பிஓஎஸ் (BeOS) நிறுவப்பட்டது. தற்போது மென்பொருள் தயாரிப்பாளர்களுக்கு ஒரு கருவியாக பி-கணினி விற்பனைக்கு வந்துள்ளது.

beginning of file : கோப்பின் தொடக்கம் : 1. ஒரு கோப்பில் முதல் எண்மி (பைட்)க்கு முன்பாக இடப்படும் குறியீடு. கோப்பை உருவாக்கும் நிரல் இக்குறியீட்டை இடுகிறது. கணினியிலுள்ள இயக்க முறைமை இக்குறியீட்டைக் கொண்டுதான் ஒரு கோப்பின் தொடக்கத்தை அறிகிறது. கோப்பின் பிற இடங்களையும் இதனடிப்படையிலேயே கணக்கிட்டு அணுகுகிறது.2. ஒரு வட்டில் எழுதப்பட்டிருக்கும் கோப்பின் தொடக்க இடம். கோப்புகளின் தகவல்களைக் கொண்டிருக்கும் ஒரு கோப்பகம் (Directory) அல்லது திரட்டு இத்தொடக்க இருப்பிடத்தைக் கொண்டிருக்கும்.

Bell communications standards : பெல் தகவல் தொடர்பு தர வரையறை: தகவல் பரிமாற்றத்துக்கான பல்வேறு தர வரையறுப்பு களை 1970 களின் பின்பகுதியிலும் 1980 களின் முன்பகுதியிலும் ஏடீ&டீ நிறுவனம் வகுத்துத்தந்தது. வட அமெரிக்காவில் அவை பெரிதும் ஏற்றுக் கொள்ளப்பட்டன. இணக்கி (modem)களுக்கான சட்டபூர்வ தர வரையறைகளாக அவை காலப்போக்கில் ஏற்றுக் கொள்ளப்பட்டன. 1200 bps வரையிலான இணக்கிகளுக்கு இத்தரவரையறை இருந்தது. இந்த வேக இணக்கிகள் இப்போது வழக்கொழிந்து விட்டன. 1200 bps-க்கு அதிகமான வேகமுள்ள இணக்கிகளுக்கு, சிசிஐடீடீ (CCITT) என்னும் அமைப்பு (இப்போது ITUCT) பரிந்துரை செய்யும் தர வரையறைகளே இப்போது உலகம் முழுவதிலும் பொதுவாக ஏற்றுக் கொள்ளப்படுகின்றன.

Bell compatible modem : பெல் ஒத்தியல்பு இணக்கி : பெல் நிறுவனத்தின் தரவரையறைகளுக்கு ஏற்பச் செயல்படும் ஒர் இணக்கி.

bells and whistles : அணி ஆபரணங்கள்; அலங்கார அணிகள் : ஒரு மென்பொருள் அல்லது வன்பொருளுக்கு அதன் அடிப்படை செயல்பாட்டுக்கும் அதிகமாகக் கவர்ச்சிகரமான வசதிகளை வழங்குவது. எடுத்துக்காட்டாக, ஒரு காரில் அமைக்கப்படும் மின் கதவையும் குளிர்சாதனக் கருவியையும் கூறலாம். கணினிகளைப் பொறுத்தமட்டில் இத்தகைய அலங்கார அணிகலன்கள் எதுவும் இல்லாத கணினியை சாதா வெனில்லா கணினி என்பர்.

benign virus : தீங்கில்லா நச்சுநிரல்:நச்சுநிரல் போன்ற பண்புடைய ஒரு நிரல். தன்னைத் தானே இனப் பெருக்கம் செய்துகொள்ளும் பண்பில் நச்சுநிரலை ஒத்தது. மற்றபடி, அது தொற்றியுள்ள கணினிக்கு வேறெந்த தீங்கும் விளைவிக்காது.

BeOS : பீஓஎஸ் : பீ ஆப்பரேட்டிங் சிஸ்டம் (BeOS) என்பதன் குறும்பெயர். பீ நிறுவனம் (Be Inc) உருவாக்கிய பொருள் நோக்கிலான இயக்க முறைமை. பி-கணினி மற்றும் பவர் மெக்கின்டோஷ் கணினிகளுக்காக வடிவமைக்கப்பட்டது. இந்த இயக்க முறைமை சமச்சீர் பல் செயலாக்கம், பல்பணி மற்றும் பாதுகாக்கப்பட்ட நினைவகம் ஆகிய வசதிகளைக் கொண்டது. பல்லூடகம், அசைவூட்டம் மற்றும் தகவல் தொடர்புக்கு ஏற்றது.

bernoulli box : பெர்னவுலி பெட்டி : சொந்தக் கணினிகளில் பயன்படுத்தக்கூடிய, எளிதாகச் செருகி எடுக்கக்கூடிய நெகிழ்வட்டகம். அதிகமான சேமிப்புத்திறன் கொண்ட பேழையைக் கொண்டது. 18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த டேனியல்பெர்னவுலி (Daniel Bernoulli) என்ற இயற்பியல் அறிஞரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. காற்றியக்கத்தில் செயல்படும் இயங்கேணி (lift) பற்றிய கோட்பாட்டை முதன் முதலில் செயல்படுத்திக் காட்டியவர். பெர்னவுலிப் பெட்டி, மிகு வேகத்துடன் சுழலும் நெகிழ்வட்டை வட்டின் எழுது/படிப்பு முனைக்கு அருகில் கொண்டுவரும்.

Bernoulli Box drive : வட்டு இயக்ககம்.

Bernoully drive : பெர்ண்வுலி இயக்ககம்.

Bernoulli process : பெர்னவுலி செயலாக்கம் : பெர்னவுலி தேர்வாய்வு முறையை உள்ளடக்கிய ஒரு கணிதமுறைச் செயலாக்கம். புள்ளியியல் பகுப்பாய்வில் மிகவும் பயன்படுகிறது. வெற்றி, தோல்வி என்கிற இரண்டே இரண்டு முடிவுகளை மட்டுமே கொண்ட ஒரு பரிசோதனையை திரும்பத்திரும்ப செய்வதால் ஏற்படக்கூடிய முடிவுகளை அடிப்படையாக வைத்து ஆய்வு செய்தல்.

Bernoulli sampling process : பெர்னவுலி மாதிரிகாண் செயலாக்கம் : ஒவ்வொரு முயற்சியிலும் இரண்டிலொரு முடிவைத் தரக்கூடிய ஏதேனும் ஒரு பரிசோதனையை, தொடர்ச்சியாக n தடவைகள், ஒன்றையொன்று சாராத, ஒரே மாதிரியான தேர்வாய்வுக்கு உட்படுத்தும்போது வரக்கூடிய முடிவுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் புள்ளியியல் ஆய்வு. (எ-டு): ஒரு நாணயத்தைச் சுண்டினால் பூ அல்லது தலை விழும். 10 முறை சுண்டினால் எத்தனை முறை தலை விழும்? எத்தனை முறை பூ விழும்?

best of breed : உள்ளதில் சிறப்பு ; ஆயிரத்தில் ஒன்று : குறிப்பிட்ட வகைப்பிரிவில் மிகச்சிறந்த பொருளைக் குறிக்கும் சொல். வன் பொருளாகவோ மென்பொருள் தொகுப்பாகவோ இருக்கலாம்.

beta test : பீட்டா சோதனை : மென் பொருள் அல்லது வன்பொருள், இறுதியாகப் பயன்பாட்டுக்கு வருவதற்கு முன்பாக பலகட்டச் சோதனைக்கு உட்படுத்தப்படும். அவற்றுள் வெளியீட்டுக்கு முந்தைய இறுதிக் கட்டச் சோதனை 'பீட்டா சோதனை எனப்படுகிறது.

beta site : பீட்டா தளம் : ஒரு மென்பொருளின் பீட்டா சோதனையை மேற்கொள்ளும் ஒரு தனி நபர் அல்லது ஒரு நிறுவனம். மென் பொருளை உருவாக்கிய நிறுவனம், பெரும்பாலும் பட்டறிவுமிக்க வாடிக்கையாளர், தன்னார்வலர்களின் குழுவில் சிலரையே பீட்டாத் தளமாகத் தேர்வு செய்யும். பெரும்பாலான பீட்டாத் தளத்தினர் இச் சேவையை இலவசமாகவே செய்வர். வெளியீட்டுக்கு முன் பயன்படுத்தும் வாய்ப்பு, மென்பொருளின் இலவச நகல் இவர்களுக்குக் கிடைக்கிறது. வெளியிடப்பட்ட பின்பு, இறுதிப் படைப்பின் இலவசநகலும் இவர்களுக்குக் கிடைக்கும்.

beta version : பீட்டா பதிப்பு : வெளியீட்டுக்கு முந்தைய பரிசோதனைப் பதிப்பு.

between : இடையில் .

Bezier curve : பெஸியர் வளைவு : ஒரு குறிப்பிட்ட கணித முறைப்படி இரண்டு தனிப்புள்ளிகளை இணைத்து வரையப்படும் இழைவான வளைகோடு மற்றும் வரை தளம். கேட் உருமாதிரி (CAD model) களுக்கு தேவையான ஒன்று. ஒரு வடிவத்தை தோராயமாக வடிவமைக்க ஏனைய கணிதவியல் மாதிரி

பெஸியர் வளைவு

களைவிடச் சிறந்தது. ஏனெனில் மிகக்குறைந்த எண்ணிக்கையிலான புள்ளிகளைக் கொண்டே அதிக எண்ணிக்கையிலான வடிவங்களைப் பெறமுடியும்.

.bg : .பிஜி : பல்கேரிய நாட்டைச் சேர்ந்த இணைய தளம் என்பதைக் குறிக்கும் பெருங்களப் பெயர்.

.bh : பிஹெச் : ஒர் இணைய தளம் பஹ்ரைன் நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெருங்களப் பெயர்.

bidirectional parallel port : இரு திசை இணை வாசல்; இருதிசை இணை நிலைத் துறை:கணினிக்கும் இன்னொரு புறச் சாதனத்துக்கும் இடையே இருதிசையிலும் இணை நிலைத் தகவல் தொடர்புக்கு வழியமைத்துத் தரும் ஒர் இடைமுகம்.

bi-endian : இரு முடிவன் ; இரு முனையன் : சிறு முடிவன், பெரு முனையன்(காண்க Little Endian and Big Endian) ஆகிய இரண்டு முறைகளில் எந்த முறையில் வேண்டுமானாலும் செயல்படும் திறனுள்ள ஒரு நுண்செயலி அல்லது வேறெந்த சிப்புகளின் பண்புக் கூறு. பவர்பிசி(PowerPC) நுண்செயலி இத்தகைய இரு முடிவன் திறனைக் கொண்டுள்ளது. சிறுமுடிவன் விண்டோஸ் என்டி, பெரு முடிவன் மேக் ஓஎஸ்/பீபீஜி ஆகிய இரு இயக்க முறைமைகளும் இயங்க அனுமதிக்கிறது.

bifurcation : இருகூறாக்கள் ; இரண்டாகப் பிரித்தல் : 0 அல்லது 1, இயக்கு அல்லது நிறுத்து என்ற இரண்டிலொரு விடை கிடைக்கு மாறு, ஒன்றை இரண்டாகப் பிரித்தல்.

Big endian : ஒரு முடிவன், பெருமுனையன் : ஒர் எண்ணை பதிவகங்களில் (registers) பதிவு செய்து வைக்கும் முறை. இம்முறையில் ஒர் எண்ணின் பெருமதிப்புள்ள பைட் (most significant byte) (yogeSlau இடம் பெறும். (எ-டு) A02B என்றபதின் அறும(Hexadecimal)எண் A02B என்று பதியப்படும். சிறு முடிவன் முறையில் 2BA0. பெரு முடிவன் முறை மோட்டோரோலா நுண் செயலிகளில் பின்பற்றப்படுகிறது. இன்டெல் நுண்செயலிகள் சிறு முனைய முறையைப் பயன்படுத்துகின்றன. பெரு முடிவன் என்ற சொல் ஜோனாதன் ஸ்விஃப்ட் எழுதிய கல்லிவர்ஸ் டிராவல்ஸ் என்ற நாவலிலிருந்து எடுக்கப்பட்டது. அதில் பெரு முடிவன் என்ற சொல், ஒரு குறிப்பிட்ட மக்கள் குழுவைக் குறிக்கிறது. அக்குழுவினர், முட்டையை உண்ணும்போது அதனைச் சிறு முனைப் பக்கம் உடைக்க வேண்டும் என்ற சட்டத்தை எதிர்ப்பவர்கள்.

big red switch : பெரும் சிவப்பு விசை : கணினியை இயக்க/நிறுத்த (மின்சாரம் செலுத்த/நிறுத்த) பயன்படும் விசை. கணினி திடீரென செயல்படாமல் விக்கித்து நிற்கும்போது, கடைசி முயற்சியாக இந்த விசையைப் பயன்படுத்தி கணினிக்கு மீண்டும் புத்துயிர் அளிக்கலாம் (Re-booting), ஐபிஎம் பீசி மற்றும் பல கணினிகளிலும் தொடக்க காலங்களில் இந்த விசை பெரிதாக சிவப்பு வண்ணத்தில் இருந்தது கணினி நடுவில் நின்று விடும்போது, இந்த விசையைப் பயன்படுத்தி கணினிக்குப் புத்துயிர் ஊட்டுவதில் ஒர் ஆபத்தும் உள்ளது. நிலையா நினைவகத்தில் (RAM) உள்ள தகவல்கள் அழிக்கப்பட்டு விடும். நிலை வட்டும் பழுதுபட வாய்ப்புள்ளது. எனவேதான் இவ்விசையை இறுதி ஆயுதமாகப் பயன்படுத்த வேண்டும்.

binary arithmetic : இருமக் கணக்கீடு

binary arithmetic operation : இரும பூலியன் செயற்பாடு.

binary boolian operation : இருமக் கணக்கீட்டுச் செயல்பாடு.

binary chop : இரும வெட்டு.

binary coded decimal notation : இருமக் குறியீட்டு பதின்மக் குறிமானம்.

binary coded decimal representation : இருமக் குறியீட்டு பதின்ம உருவகிப்பு.

binary coded digit : இருமக் குறியீட்டு இலக்கம்.

binary conversion : இரும எண் மாற்றம் : ஒரு பதின்ம (decimal) எண்ணை இரும எண்ணாக மாற்றலும், ஒர் இரும எண்ணை பதின்ம எண்ணாக மாற்றலும்.

binary digits : இரும எண்முறை : இருமநிலை இலக்கங்கள்.

binary file transfer : இரும கோப்புப் பரிமாற்றம் : இரும வடிவில் தகவல் பதியப்பட்டுள்ள கோப்புகளை கணினி வாயிலாகப் பரிமாற்றம் செய்தல். உரைவடிவக் கோப்புகளைப் பரிமாறிக் கொள்வதிலிருந்து மாறுபட்டது. தற்போதைய நவீன கணினி இயக்க முறைமைகளில் ஓர் உரைக் கோப்பே, அச்சிடத்தக்க எழுத்துகளடங்கிய இருமக் கோப்பாகவே கருதப்படுகிறது. ஆனால் பழைய முறைமைகளில் இவற்றை வேறுபடுத்திப் பார்க்கும் முறை இருந்தது.

binary half adder : இரும அரைகூட்டி.

binary language : இரும மொழி.

binary operation : இரும செயற்பாடு.

binary representation : இரும உருவகிப்பு.

binary row : இரும வரிசை : இருமக் கிடக்கை.

binary time : இரும நேரம்.

binary decimal conversion : இரும பதின்ம மாற்றம்.

binary transfer : இருமப் பரிமாற்றம் : இயக்குநிலை (executable) கோப்புகள், பயன்பாட்டு தகவல் கோப்புகள் மற்றும் மறையாக்கம் செய்யப்பட்ட கோப்புகளை கணினி வழியாகப் பரிமாற்றம் செய்து கொள்வதற்கு உகந்த மின்னணுத் தகவல் பரிமாற்ற முறை.

binhex : பின்ஹெக்ஸ் : 1. இருமத் தகவல் கோப்புகளை, மின்னஞ்சல் மற்றும் செய்திக் குழுக் கட்டுரையாக மற்றொரு கணினிக்கு அனுப்பு வதற்கு உகந்த வகையில் ஆஸ்கி (ASCII) உரைக் கோப்பாய் மாற்று வதற்கான குறிமுறை. இணையத்தில் ஆஸ்கிக் குறியீட்டு வடிவில் தகவல் அனுப்ப வேண்டிய தேவைகளுக்கு இம்முறை உகந்தது. பெரும்பாலான மேக் (Mac) கணினிப் பயனாளர்கள் பின்ஹெக்ஸ் முறையை அடிக்கடி பயன்படுத்துகின்றனர். 2. ஒர் இருமத் தகவல் கோப்பை, ஆஸ்கி உரைக் கோப்பாகவும், ஒர் ஆஸ்கிக் கோப்பை இரும வடிவக் கோப்பாகவும் மாற்றித் தருகின்ற ஆப்பிள் மெக்கின்டோஷ் நிரல்,

biodata : தகுதிக்குறிப்பு : தன்விவரக் குறிப்பு.

biosensors : உயிர் உணரிகள்.

biomic chips : உயிரியல் சிப்பு : உயிரியல் சில்லு,

bipolar read only memory : இரு துருவ படிக்கமட்டுமான நினைவகம்.

bistable circuit : இருநிலை மின்சுற்று : இரண்டே இரண்டு நிலைகளில் ஏதேனும் ஒன்றில் நிலைக்கும் மின் சுற்று. ஒரு நிலையிலிருந்து இன்னொரு நிலைக்கு மாற, மின்சுற்றுக்கு வெளியிலிருந்து தூண்டப்பட வேண்டும். ஒர் இருநிலை மின்சுற்று, ஒரு துண்மி(பிட்) தகவலை இருத்தி வைக்கும் திறனுடையது.

bistable magnetic core : இருநிலை காநத உள்ளகம.

bit newsgroups : துண்மி செய்திக் குழுக்கள், துண்மி செய்தி அரங்குகள் : பிட் நெட்டிலுள்ள சில அஞ்சல் பட்டியல் அல்லது அஞ்சல் குழுக் களின் (maing list) உள்ளடக்கத்தைப் பிரதிபிம்பமாய் தம்மகத்தே கொண்டுள்ள இணைய செய்திக் குழுக்களின் படிமுறை.

bit block : துண்மித் தொகுதி பிட் தொகுதி : கணினி வரைகலையிலும் திரைக்காட்சியிலும் ஒரு செவ்வகப் பகுதிக்குள் அடங்கிய படப்புள்ளிகள் (pixels) ஒர் அலகாகக் கருதப்படுகின்றன. படப்புள்ளிகளின் நிறம், செறிவு ஆகிய காட்சிப் பண்பியல்புகளைக் குறிக்கும் துண்மிகளின் தொகுப்பு என்பதால் இப்பெயர் பெற்றது. நிரலர்கள் துண்மித் தொகுதிகளையும், துண்மித் தொகுதி இடமாற்ற நுட்பத்தையும் பயன்படுத்தி, கணினித் திரையில் மின்னல் வேகத்தில் உருவங்களை அடுத்தடுத்துத் திரையிடுவதன் மூலம், பட உருவங்கள் இயங்குவதுபோலச் செய்ய முடியும்.

bit block transfer : துண்மித் தொகுதி இடமாற்றம் : வரைகலைத் திரைக் காட்சியிலும், இயங்குபடங்களிலும் செவ்வகத் தொகுதியாய் அமைந்த படப்புள்ளிகளின் பண்பியல்புகளை மாற்றவும், கையாளவும் பயன்படும் ஒரு நிரலாக்கத் தொழில்நுட்பம். பட உருவம் ஒரு சிறிய சுட்டுக்குறி (cursor) யாகவோ, ஒரு கார்ட்டுன் படமாகவோ இருக்கலாம். இத்தகைய துண்மித் தொகுதியை ஒற்றை அலகாக ஒளிக்காட்சி நினைவகத்தில் நகர்த்துவதன் மூலம் கணினித் திரையில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் அதிவேகமாய் திரையிட முடியும். துண்மிகளின் மதிப்புகளை மாற்றுவதன் மூலம் உருவப்படங்களில் ஒளிப்பகுதியை மாற்ற முடியும். தொடர்ச்சியாக அடுத்தடுத்துத் திரையிடுவதன் மூலம் பட உருவங்களின் தோற்றத்தை மாற்ற முடியும். நடமாடுவது போலச் செய்யவும் முடியும்.

bit bucket : துண்மிக் கூடை, துண்மிக் குப்பைத் தொட்டி : தகவலை கழித்துக்கட்டப் பயன்படுத்தப்படும் ஒரு கற்பனை இடப்பகுதி. வெற்று (null) உள்ளிட்டு/வெளியீட்டுச் சாதனம் எனலாம். இதில் போடப்படும் விவரங்களைப் படித்தறிய முடியாது. டாஸ் இயக்க முறைமையில் இந்தத் துண்மிக் குப்பைத்தொட்டி நல் (null) என்று அறியப்படு கிறது. யூனிக்ஸ் இயக்க முறைமையில், /dev என்னும் கோப்பகத்தில் இத்தகைய வெற்றுச் சாதனக் கருத்துரு உண்டு. ஒரு கோப்பகத்திலுள்ள கோப்புகளின் பட்டியலை வெற்றுச் சாதனத்துக்கு அனுப்பும் போது, பட்டியல் திரையில் தெரியாமல் மறைந்து விடுகிறது. இயக்க முறைமை தருகின்ற பிழைசுட்டும் அல்லது பிறவகைச் செய்திகளை திரையில் காட்டப்படாமலிருக்கும் பொருட்டு அச்செய்திகளை வெற்றுச் சாதனம் என்னும் குப்பைத் தொட்டிக்கு அனுப்பி வைப்பதுண்டு. C:\>Copy File1 File2 > NUL என்ற டாஸ் கட்டளை கோப்பை நகலெடுத்த பிறகு 1 File(s) copied என்னும் செய்தியைத் திரையில் காட்டாது.

bit check : துண்மிச் சரிபார்ப்பு.

bit depth : துண்மி ஆழம் : வரைகலைக் கோப்பில் நிறத் தகவலைப் பதிவுசெய்ய ஒரு படப் புள்ளிக்கு ஒதுக்கப்படும் துண்மி களின் எண்ணிக்கை.

bit error rate : துண்மி பிழைவீதம்.

bit error single : துண்மி தனிப்பிழை.

bit image : துண்மிப் படிமம்.

bit length : துண்மி நீளம்.

bit location : துண்மி இருபிடம்.

bitபmap display : துண்மி நிலைப்படக்காட்சி.

bitmap scanning : துண்மி நிலைப்பட வருடல்.

BitNet : பிட்நெட் : ஏனெனில் அது நேரப் பிணையம் என்ற பொருள் தரும் Because it's Time Network என்ற சொல் தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். 1981ஆம் ஆண்டில் வாஷிங்டன் நகரில் அமைக்கப்பட்ட விரிபரப்புப் பிணையம் (WAN). ஆராய்ச்சி மற்றும் கல்விப் பிணையக் கழகம் (CREN - Corporation for Research and Educational Networking) இதனைப் பராமரித்து வந்தது. வட அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான் ஆகிய நாடுகளிலுள்ள கல்வி மற்றும் ஆய்வு நிறுவனங்களின் பெருமுகக் கணினி அமைப்புகளிடையே (main frames) மின்னஞ்சல் மற்றும் கோப்புப் பரிமாற்றங்களுக்காக இப் பிணையம் பயன்பட்டது. பிட்நெட், டிசிபீ/ஐபீ நெறிமுறைக்குப் பதிலாக,ஐபிஎம்மின் பிணையப் பணி உள்ளீடு என்ற பொருள்படும் Network Job Entry (NJE)என்னும் தகவல் பரிமாற்ற நெறிமுறையைப் பயன்படுத்தியது. இன்றைக்கு இணையத்தில் அஞ்சல் குழுக்களைப் (mailing lists) பராமரிக்கப் பயன்படும் லிஸ்ட்செர்வ் (Listserve) என்னும் மென்பொருள் தொகுப்பு பிட்நெட்டில் உருவாக்கப்பட்டது.

bit parity : துண்மிப் பொருத்தம் ; துண்மிச் சமநிலை.

bit position : துண்மி இட நிலை.

bit sign : துண்மி அடையாளம்.

bit slice microprocessor : துண்மித் துண்டு நுண்செயலி : பொதுவாக நுண்செயலிகள் எட்டுத்துண்மித் தொகுதிகளையே (ஒரு பைட் = 8 பிட்டுகள்) கையாள்கின்றன. 2 பிட்டு கள், 4 பிட்டுகளில் ஆன தகவல்களைக் கையாளவும் முடிகிற நுண்செயலி துண்மித் துண்டு நுண்செயலி எனப்படுகிறது. ஏனைய நுண்செயலிகள் செய்கின்ற அதே பணிகளை இந்த நுண்செயலிகள் செய்து முடிக்க, ஆணைத் தொடர் அமைக்க முடியும்.

bits per inch : அங்குலத்துக்கு இத்தனை துண்மிகள் : தகவல் சேமிப்புத் திறனை அளக்கும் அலகு. ஒரு வட்டில் ஒரு வட்டத்தடம் (track) சுற்றில் கொள்ளுகின்ற துண்மிகளின் எண்ணிக்கை.

bit synchronous protocol : துண்மி ஒத்தியங்கு நெறிமுறை.

bitonal : இரு வண்ண.

BIX : பிக்ஸ் : எண்மித் தகவல் பரிமாற்றம் என்று பொருள்படும் Byte Information Exchange என்பதன் தலைப்பெழுத்துக் குறும்பெயர். பைட் (Byte) இதழ் தொடங்கிவைத்த ஒர் இணையச் சேவை. இப்போது டெல்ஃபி இணையச் சேவைக் கழகம் (Delphi Internet Services Corporation) இதனை வாங்கிச் செயல் படுத்தி வருகிறது. மின்னஞ்சல், மென்பொருள் பதிவிறக்கம், மென் பொருள்/வன்பொருள் தொடர் புடைய கருத்தரங்குகள்-போன்ற சேவைகளை பிக்ஸ் வழங்கி வருகிறது.

biz newsgroups : வணிகச் செய்தி அரங்கம் : வணிகச் செய்திக் குழுக்கள் : இணையத்திலுள்ள செய்திக் குழுக்களில் ஒருவகை. வணிகம் பற்றிய விவாதங்களே இக்குழுக்களில் நடை பெறுகின்றன. ஏனைய செய்திக் குழுக்களில் இருப்பதுபோன்று அல்லாமல், இவற்றில் விளம்பரம் மற்றும் ஏனைய விற்பனை தொடர்பான தகவல்களை வெளியிடவும் அனுமதி உண்டு.

.bi: பிஜே : இணையத் தளங்கள் (sites) பல்வேறு களங்களாக (domain) வகைப்படுத்தப்படுகின்றன. பெருங்களம் (major domain),உட்களம் (minor domain) என்ற பிரிவுகளும் உண்டு. இணைய தள முகவரியின் இறுதிப் பகுதியில் இருப்பது பெருங்களப் பிரிவு. .com, .org, .edu, ..என்று இவை அமையும். ஒரு நாட்டின் பெயரைக் குறிக்கும் சொல்லும் பெருங்களப் பிரிவைக் குறிப்பது உண்டு. முகவரியின் இறுதியில் .in என்று அமைந்தால் இந்தியாவைக் குறிக்கும். .bi என்பது பெனின் (Benin) நாட்டைக் குறிக்கிறது.

blank database : வெற்றுத் தரவுத் தளம்.

blank lines : வெறுங்கோடுகள்.

blank space : வெற்றிடம்.

blickering : பளிச்சிடுதல்.

blind carbon copy : அறியா நகல். காண்க : bcc

blink speed : மின்னும் வெகம்; துடிக்கும் வேகம் : கணினி இயங்கிக் கொண்டிருக்கும்போது, ஒரு பயன்பாட்டுத் தொகுப்பைத் திறந்தவுடன், எடுத்துக்காட்டாக, ஒரு சொல் செயலியைத் திறந்தவுடன், திரையில் நாம் தகவலைத் தட்டச்சுச் செய்ய வசதியாக ஒரு குறிப்பிட்ட இடத்தில் சுட்டுக்குறி (cursor) துடித்துக் கொண்டிருக்கும். சுட்டுக்குறி மின்னுகின்ற, துடிக்கின்ற வேகத்தைக் குறிக்கும் சொல் இது.

bloat : உப்பல்.

bloatware : உப்பிய மென்பொருள் : பயனாளரின் நிலைவட்டில் இயல்புக்கு அதிகமாய் ஏராளமான இடத்தை அடைத்துக் கொண்டிருக்கும் கோப்புகளையுடைய மென்பொருள். குறிப்பாக, அதே மென்பொருளின் முந்தைய பதிப்போடு ஒப்பிடுகையில் இப்போதைய பதிப்பு ஏராளமான இடத்தை எடுத்துக் கொண்டால் இப்பெயரிட்டு அழைப்பதுண்டு.

Block Check Character (BCC) : தொகுதி சோதனை எழுத்து.

block cipher : தொகுதி மறையெழுத்து தொகுதி மறைக்குறி : இணைய தகவல் பரிமாற்றத்தில் பாதுகாப்பு முக்கியத்துவம் உள்ள தகவல்கள் மறையாக்கம் (Encryption) செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்படுகின்றன. மறுமுனையில் மறை விலக்கம் (decryption) செய்யப்பட்டு மூலத் தகவல் பெறப்படுகிறது. இதற்குப் பல்வேறு மறையாக்க முறைகள் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றுள் ஒன்று தனி பொது மறைக்குறி முறை. ஒரு தனி மறைக் குறியைப் பயன்படுத்தித் தகவலை மறையாக்கம் செய்வர். அதற்குரிய பொது மறைக்குறியைப் பயன்படுத்தி மறைவிலக்கம் செய்வர். தகவலை குறிப்பிட்ட துண்மி எண்ணிக்கையுள்ள (எடுத்துக்காட்டாக 64-துண்மிகள்) தொறாகுதிகளாகப் பிரித்து அத்தொகுதியை தனிமறைக் குறி மூலம் மறையாக்கம் செய்யலாம். மறையாக்கம் செய்யப்பட்ட தகவலிலும் மூலத் தகவலிலிருந்த அதே எண்ணிக்கையிலான துண்மிகளே இருக்கும். இம்முறைக்கு தொகுதி தனிமறைக்குறி என்று பெயர்.

block cursor : கட்டச் சுட்டுக்குறி : உரைக் காட்சித் திரையில் (text screen) வரிக்கு 80 எழுத்துகள் வீதம் 25 வரிகள் திரையிட முடியும். ஒவ்வோர் எழுத்தும் ஒரே அகல, உயரத்தில் அமைந்த கட்டத்துக்குள் படப் புள்ளி களால் திரையில் காட்டப் படுகிறது.உரை அடிப்படையிலான பயன்பாட்டுத் தொகுப்புகளில் சுட்டி (mouse) நிறுவப்படும்போது, அதன் சுட்டுக்குறி ஒர் எழுத்தை உள்ளடக்கும் கட்டத்துக்குள் அமையும் வகையில் உருவாக்கப்படுகிறது.

block gap : இடைவெளி : சேமிப்பக நாடாக்களிலும், வட்டுகளிலும் தகவல், தொகுதி தொகுதியாகத்தான் எழுதப்படுகிறது. அவ்வாறு எழுதப்படும் பொழுது இரு தொகுதிகளுக்கிடையே சிறிது இடைவெளி விடப்படுகிறது. இவ்வாறு இரு தகவல் தொகுதிகளைப் பிரிக்கும் இடைவெளி தொகுதி இடைவெளி எனப்படுகிறது.

block leader : தொகுதி தொட்க்கம்.

block length, fixed : மாற தொகுதி நீளம்.

block operator : தொகுதிச் செயற்குறி

block protection : தொகுதிக் காப்பு.

block quote : தொகுதி வினா.

block size : தொகுதி அளவு : கோப்புப் பரிமாற்றத்தில் அல்லது இணக்கி வழியிலான தகவல் பரிமாற்றத்தின் போது கணினிக்குள் ஒரிடத்திலிருந்து இன்னோர் இடத்துக்கு இடமாற்றம் நடக்கும்போது கையாள வேண்டிய தகவல் தொகுதியின் அளவு முன்கூட்டியே தீர்மானிக்கப் படுகிறது. தகவல் பரிமாற்றத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து வன்பொருள் சாதனங்களையும் திறன்மிக்க முறையில் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் இந்த அளவு தீர்மானிக்கப் படுகிறது.

block, storage : சேமிப்புத் தொகுதி.

blocking : தொகுதியாக்கம்.

blocking factor : தொகுதியாக்க காரணி. blue screen : நீலத் திரை : திரைப்படங்களில் ஒர் உருப்படத்தின் மீது இன்னோர் உருப்படத்தைப் பொருத்தி இணைத்து சிறப்பு விளைவுக் காட்சிகளை அமைக்கப் பயன்படுத்தப்படும் ஒரு நுட்பம். முதலில் ஒரு நீலத்திரைக்கு முன்னால் ஒரு காட்சியை அல்லது ஒருவரின் நடிப்பைப் படம் பிடித்துக்கொள்வர். அடுத்து, விரும்புகின்ற பின்புலத்தைத் தனியாகப் படமெடுப்பர். முதலில் எடுத்த காட்சியை இந்தப் பின்புலத்தின் மீது பதியச் செய்வர். இப்போது குறிப்பிட்ட பின்புலத்தில் அக்காட்சி நடைபெறுவதுபோல இருக்கும். ஒருவர் நடந்துசெல்வதையும் பாலைவனத்தையும் தனித்தனியே படம்பிடித்து, அவர் பாலைவனத்தில் நடப்பது போலக் காட்டி விட முடியும்.

block structured language : தொகுதிக் கட்டமைப்பு மொழி.

block, variable : மாறு தொகுதி

.bm , பிஎம் : ஒர் இணையதள முகவரியில், அத்தளம் பெர்முடா நாட்டில் அமைந்துள்ளது என்பதைக் குறிக்கும் பெருங்களப் பிரிவு.

.bmp : .பி.எம்.பீ : துண்மி வரைபடக் கோப்புப் படிவத்தில் சேமிக்கப்பட்டுள்ள, ராஸ்டர் வரைகலைக் படத்தைச் சுட்டும் ஒரு கோப்பின் வகைப் பெயர் (extension).

.bn : பிஎன் : ஒர் இணைய தளம் புரூணை தாருஸ்ஸலாமில் அமைந்துள்ளது என்பதைச் சுட்டும் பெருங்களப் பிரிவின் பெயர்.

BNC connector : பிஎன்சி இணைப்பி : கோ-ஆக்சியல் கேபிள் எனப்படும் இணையச்சுக் கம்பி வடத்தின் முனையைச் சாதனங்களில் இணைக்கப்பயன்படுகிறது. வண்ணத் தொலைக்காட்சிகளில் அலைவாங்கிகளை இணைக்க இத்தகைய இணைப்பிகள் பயன்படுத்தப்படுகின்றன. இணைப்பியை அதற்குரிய செருகுவாயில் செருகி 90 திருப்பினால் சரியாகப் பொருந்திக் கொள்ளும்.

.bo : .பிஓ : ஒர் இணைய தளம் பொலீவியா நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்க, முகவரியின் இறுதியில் குறிக்கப்படும் பெருங்களப் பெயர்.

body ; உடற்பகுதி : இணையத்தில் மின்னஞ்சல் மற்றும் செய்திக்குழுத் தகவல்களில் தலைப்பகுதி மற்றும் உடற்பகுதிகள் உண்டு. அனுப்புபவரின் பெயர், இடம், சென்று சேரும் முகவரி போன்றவை தலைப்பகுதியிலும், உள்ளடக்கத் தகவல் உடற்பகுதியிலும் இடம் பெறுகின்றன.

body face : உடற்பகுதி எழுத்து வடிவம் : ஒர் ஆவணத்தை உருவாக்கும்போது முகப்புத்தலைப்பு, ஆவணத்தலைப்பு, பத்தித்தலைப்புகள் பெரிய/தடித்த எழுத்தில் அமைகின்றன. உடற்பகுதியில் அமையும் தகவல்கள் ஒரளவு சிறிய எழுத்தலேயே அமைய வேண்டும். உடற்பகுதிக்கு ஏற்ற வடிவத்தை உடற்பகுதி வடிவம் என்கிறோம். சேன் செரீஃப், டைம்ஸ் நியூரோமன் போன்ற எழுத்துருக்கள் (fonts) உடற்பகுதிக்கு ஏற்றவை.

body type : உடல்வகை மாதிரி

boiler plate : கொதிகலத்தகடு

boldface : தடித்த எழுத்து : சாதாரண எழுத்தைவிடத் தடித்துத் தோன்றும் எழுத்து. ஆவணத்தில் உள்ள உரை யில் ஒரு குறிப்பிட்ட பகுதியைத் தேர்வு செய்து தடிமன் என்ற கட்டளை தரும்போது, அப்பகுதி முழுவதும் தடித்த எழுத்துகளாகி விடும்.

bold italics : தடித்த சாய்வெழுத்து .

bold printing : தடித்த அச்சடிப்பு.

book keeping : கணக்கு வைப்பு.

bookmark : பக்க அடையாளக்குறி : நினைவுக்குறி : 1. பின்னால் எளிதாக அடையாளம் காணும்பொருட்டு ஒர் ஆவணத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் இட்டுவைக்கும் அடையாளக் குறி. 2. நெட்ஸ்கேப் நேவிக்கேட்டர், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் போன்ற இணைய உலாவிகளில் ஒரு குறிப்பிட்ட இணையப் பக்கம் அல்லது இணைய முகவரிக்கு, பின்னால் மீண்டும் காணும் பொருட்டு ஒரு தொடுப்பினை நிலைவட்டுக் கோப்பில் குறித்து வைத்துக் கொள்வது.

bookmark file : அடையாளக் குறிக்கோப்பு : 1.நெட்ஸ்கேப் நேவிக்கேட்டர் உலாவியில் இது ஒரு கோப்பு. நமக்குப் பிடித்தமான வலையகங்களின் முகவரிகளைக் கொண்டது. இன்டர்நெட் எக்ஸ் புளோரரில் விருப்பத் தளங்களின் கோப்புறை (Favourites Folder) எனப்படுகிறது. சூடான பட்டியல் (hotlist) என்றும் அழைக்கப்படுவதுண்டு. 2.யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்பதற்கேற்ப, ஹெச்டிஎம்எல் வடிவத்தில் ஒரு பக்கத்தில் வெளியீடு செய்யப் படுகின்ற, நாம் விரும்பிப் பார்த்த வலையகங்களின் முகவரிகள் அடங்கிய கோப்பு.

bool type : தருக்க இனம்,

boolean : பூலியன் : பெரும்பாலான கணினி மொழிகளில் பயன்படுத்தப்படும் தரவு இனம் (data type), உண்மை/பொய், சரி/தவறு, ஆம்/ இல்லை என்பதுபோன்ற இரண்டிலொரு மதிப்புகளையே இந்தத் தரவு இனம் ஏற்றுக் கொள்ளும்.சில மொழிகளில் நேரடியாகவே பூலியன் என்னும் தகவல் இனம் உண்டு. சரி, தவறு ஆகிய மதிப்புகளில் ஒன்றை இருத்திவைக்க முடியும். வேறுசில மொழிகளில் நேரடியான பூலியன் இனம் கிடையாது. சுழி என்னும் பூஜ்யம் தவறு எனவும், சுழியல்லாத மதிப்பு சரி எனவும் கையாளப்படுகிறது. பூலியன் குறிக்கணிதத்தை உருவாக்கிய ஆங்கிலக் கணிதமேதை ஜார்ஜ் பூல் (George Bool) அவர்களின் பெயரில் இது அமைந்துள்ளது.

boolean calculus : பூலியன் கணக்கீடு.

boolean complementation : பூலியன் நிரப்புகை.

boolean operation, binary : இரும பூலியன் செயற்பாடு.

bootable : இயக்க முறைமை ஏற்றிய: இயக்க முறைமைக் கோப்புகள் பதியப்பட்டு கணினியை இயக்கி வைக்கப் பயன்படுகின்ற நெகிழ்வட்டைக் குறிக்கும்.

boot block : இயக்கத்தொடக்கப்பகுதி : இயக்க முறைமையை நினைவகத்தில் ஏற்றும் ஆணைகளையும், கணினியை இயக்கிவைக்கும் ஏனைய தகவல்களையும் பதித்து வைத்துள்ள வட்டுப் பகுதி.

boot failure : இயக்கத்தோல்வி : கணினியை இயக்க முற்படும்போது, இயக்க முறைமையை வட்டில் கண்டறிந்து நினைவகத்தில் ஏற்றிக் கணினி இயக்கத்தைத் தொடக்கி வைக்க முடியாமல் போகும்போது இத்தகைய தோல்வி நேருகிறது. boot partition : இயக்க பாகப்பிரிவு : இயக்க முறைமைக் கோப்புகள் மற்றும் துணைக்கோப்புகள் எழுதப்பட்டுள்ள வட்டுப்பகுதி. கணினியை இயக்கும்போது அல்லது புத்துயிரூட்டும் போது இக்கோப்புகள் நினைவகத்தில் ஏற்றப்படுகின்றன.

boot protocol : இயக்க நெறிமுறை : ஆர்எஃப்சி 951 மற்றும் 1084 ஆகியவற்றில் வரையறுக்கப்பட்டுள்ள நெறிமுறை. வட்டில்லாத பணி நிலையக் கணினிகளை இயக்க வைக்கப்பயன்படுகிறது. பூட்பீ (BootP) என்றும் கூறுவர்.

boot sector : இயக்க வட்டக்கூறு : இயக்க வட்டுப்பிரிவு : ஒரு வட்டு பல்வேறு வட்டக்கூறுகளாகப் பிரிக்கப்படுகிறது. இயக்க முறைமையை வட்டிலிருந்து நினைவகத்தில் ஏற்றும் எந்திரமொழி ஆணைத்தொடர் பதிவு செய்யப்பட்டுள்ள பகுதி இயக்க வட்டக்கூறு எனப்படுகிறது. கணினிக்கு மின்சாரம் வழங்கியதுமே இந்த ஆணைத்தொடர் தானாகவே செயல்படும். வட்டில் பதியப்பட்டுள்ள இயக்க முறைக்கோப்புகளைக் கண்டறிந்து அவற்றை நினைவகத்தில் ஏற்றும் பணியை இச்சிறிய நிரல் செய்து முடிக்கிறது.

bootup disk : இயக்கும் வட்டு .

Border Gateway Protocol : எல்லை நுழைவி நெறிமுறை : இன்றைய இணையத்தின் முன்னோடியாக விளங்கிய என்எஸ்எஃப்நெட் பிணையத்தில் பயன்படுத்தப்பட்ட தகவல் பரிமாற்ற நெறிமுறை. புறநுழைவி நெறிமுறை (External Gateway Protocol)யின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது.சுருக்கச்சொல் பிஜிபீ(BGP) ஆகும்.

border layout : கரை உருவரை.

border properties : கரைப் பண்புகள்.

boss screen : முதலாளியின் திரைக்காட்சி ; மேலதிகாரியின் திரைத்தோற்றம் : அனைத்துக் கணினி இயக்க முறைமைகளிலும் கணினி விளையாட்டுகள் உள்ளிணைக்கப்பட்டுள்ளன. சொந்தக் கணினிகளின் வருகைக்குப்பின் கணினி விளையாட்டுகள் பலரையும் ஈர்த்தன. அலுவலகங்களில் கணிப்பொறிகள் புகுத்தப்பட்டபின், அலுவலக ஊழியர்கள் பணிநேரத்தில் கணினி விளையாட்டுகளில் மூழ்கி விடுவது வாடிக்கையாக நிகழும் ஒன்று. அந்த நேரம் முதலாளி அல்லது மேலாளர் அங்கே வந்து விட்டால், உடனடியாக கணினித் திரையில் ஒரு புதிய தோற்றத்தை வரவழைத்துவிடுவர். இது போல முதலாளி/மேலதிகாரி வரும்போது காட்டுவதற்கென்றே டாஸ் விளையாட்டுகளில் தனிச்சிறப்பான திரைத் தோற்றங்கள் இருந்தன. அதில் பெரும்பாலும் வணிகம் தொடர்பான விவரங்கள் காணப்படும். இப்போதுள்ள மேக், விண்டோஸ், லினக்ஸ் பணித்தளத்தில் இத்தகைய சிக்கல் இல்லை. நொடியில், ஒரு சுட்டிச் சொடுக்கில் திரைத் தோற்றத்தை மாற்றிவிட முடியும்.

boot sequence : இயக்கும் முறை விசை .

bottleneck : இடர்ப்பாடு.

bottom-up design : கீழிருந்து-மேல் வடிவமைப்பு : ஒரு மென்பொருள் பயன்பாட்டை உருவாக்குவதில் பின்பற்றப்படும் வடிவமைப்புச் செயல்முறை. முதலில் கீழ்நிலைப் பணிகளுக்கான நிரல்வரைவும், பிறகு அவற்றை அடிப்படையாகக்கொண்டு உயர்நிலைப்பணிகளுக்கான நிரல் வரைவும் வடிவமைக்கப்படும்.

bottom-up programming : கீழிருந்து -மேலான நிரலாக்கம்:பெரும்பாலான நிரலர்கள்,மேலிருந்து கீழ் ,கீழிருந்து மேல் ஆகிய இரண்டு முறைகளின் சரியான கலவையே சிறந்த முறை என்று நம்புகின்றனர்.

bounce : திருப்புகை : திருப்பிவிடும் : திருப்பியனுப்பு : நமக்கு வரும் மின்னஞ்சலை நமது கருத்துரை எதுவுமின்றி,மேலொப்பம் எதுவுமின்றி அப்படியே இன்னொருவருக்கு திருப்பி அனுப்புதல் .அந்த மின்னஞ்சலைப் பெறுபவருக்கு நாம் திருப்பியனுப்பிய மடல் என்பதை அறிய முடியாது .நமக்கு அஞ்சல் அனுப்பியவரிடமிருந்து அது வந்துள்ளதாகவே எண்ணிக் கொள்வர் .

bounce keys : திருப்பு விசைகள் : விண்டோஸ் 95/98இல் உள்ள ஒரு சிறப்புக்கூறு.விசைப்பலகையில் ஒரே விசையை இருமுறையோ,அறியாமல் தவறுதலாக வேறுசில விசைகளையோ சேர்த்து அழுத்தும்போது ,அவற்றைப் புறக்கணிக்குமாறு நுண்செயலிக்கு ஆணை இடலாம் .

bound controls : கட்டுண்ட இயக்குவிசைகள் .

bound column : கட்டுண்ட நெடுக்கை .

boundary of input : உள்ளீட்டு எல்லை.

Bourne Shell : போர்ன் செயல்தளம் : யூனிக்ஸ் இயக்க முறைமைக்காக முதன் முதலாக உருவாக்கப்பட்ட செயல் தளம் அல்லது ஆணைமாற்றி எனலாம்.ஏடீ&டீ சிஸ்டம்-V-யூனிக்சின் அங்கமாக இடம் பெற்றது.1979ஆம் ஆண்டில் ஏடீ&டீ பெல் ஆய்வுக்கூடத்தில் ஸ்டீவ் போர்ன் (Steve Bourne) இதனை உருவாக்கினார்.ஏனைய யூனிக்ஸ் செயல்தளங்களில் இருக்கின்ற சில வசதிகள் (கட்டளை வரியில் ஒரு கோப்பினை திருத்தியமைப்பது,முந்தைய கட்டளைகளை திரும்ப வரவழைப்பது) இல்லாதபோதும் ,செயல்தள நிரல்கள் பெரும்பாலானவை போர்ன் செயல்தளத்தில் இயங்குபவையாகவே உள்ளன.

box class : பெட்டி இனக்குழு .

box layout : பெட்டி உருவரை .

bozo:போஸோ : இணையத்தில் குறிப்பாக செய்திக் குழுக்களில் முட்டாள்தனமான ,பிறழ்மனப்போக்குடையவர்களைக் குறிக்கப் பயன்படும் கொச்சைச் சொல்:பேச்சு வழக்குச் சொல்.

bozo filter : போஸோ வடிகட்டி : இணையப்பயனாளரின் கணினியில் மின்னஞ்சல் மற்றும் செய்திக்குழுவுக்கான மென்பொருள் தொகுப்பில் இருக்கும் வசதி .இதன் மூலம் ஒருவர் தனக்கு ,குறிப்பிட்ட சிலரிடமிருந்து வரும் மின்னஞ்சல்களையும் செய்திக்குழுக் கட்டுரைகளையும் வடிகட்டிப் புறக்கணித்து விடலாம்.பெரும்பாலும், போஸோக்களிடமிருந்து வரும் தகவல்களைத்தான் இவ்வாறு தடுப்பர் .

box,decision : தீர்வுப்பெட்டி

bracket : அடைப்புக்குறி.

brain dump : குப்பைத்தகவல் : மின்னஞ்சல் அல்லது செய்திக்குழு வழியாகக் கேட்கப்பட்ட கேள்விக்கு வந்து குவிந்த முறைப்படுத்தப்படாத ஏராளத் தகவல் குப்பை .அவற்றைப் புரிந்து கொள்வதும் பொருளறிவதும் மிக்க கடினமான செயல் . broadband research network : அகலக்கற்றை ஆய்வுப் பிணையம்.

branded : முத்திரைப் பெயர்.

branching : கிளைத்தல்; கிளைபிரித்தல்.

branch instruction : கிளைபிரி ஆணை.

BRB : பிஆர்பி : நான் மீண்டும் வருவேன் என்று பொருள்படும் I'll be Right Back என்பதுன் தலைப்பெழுத்துச் சுருக்கம். இணைய அரட்டை மற்றும் இணைய தகவல் சேவைகளில் கலந்து கொள்வோர் தற்காலிகமாக அக்குழுக்களிலிருந்து பிரியும்போது தரும் செய்தி.

break : முறி ; நிறுத்து.

break,control : கட்டுப்பாட்டு முறிப்பு. கணினியில் ஒரு நிரல் செயல்பட்டுக் கொண்டிருக்கும்போது ctrl., Break ஆகிய இரு விசைகளையும் அழுத்தி நிரலின் ஒட்டத்தை நிறுத்தலாம்.

break down : நிலைகுலைவு.

break mode : முறிவு பங்கு.

breakpoint instructions : நிறுத்துமிட ஆணைகள்.

breakout box : அவசரஉதவிப்பெட்டி : கணினியில் இரண்டு சாதனங்களுக்கு (கணினியும் இணக்கியும்) இடையில் ஒரு வடம் மூலம் இணைக்கப்படும் ஒரு வன்பொருள் சாதனம். தேவையெனில், வடத்தின் தனித்த கம்பிகளின் வழியாகவும் சாதனங்களைக் கட்டுப்படுத்த முடியும்.

BRI : பிஆர்ஐ : அடிப்படைக்கட்டண இடைமுகம் என்ற பொருள் தரும் Basic Rate Interface என்பதன் தலைப்பெழுத்துச் சுருக்கம். ஐஎஸ்டிஎன் தகவல் தொடர்பில் இரண்டு பி (64 கேபிபீஎஸ்) தடங் களையும் ஒரு டி (64 கேபிபீஎஸ்) தடத்தையும் பயன்படுத்தி குரல், ஒளிக்காட்சி மற்றும் கணினித் தகவல் ஆகியவற்றை ஒரே நேரத்தில் அனுப்பப் பெறக்கூடிய வசதி.

bridge : இணைவி.

bridge router : இணைவித் திசைவி: பிணையத்தில் இணைவியாகவும் திசைவியாகவும் செயல்படும் ஒரு சாதனம். ஒரு குறும்பரப்பு அல்லது விரிபரப்பு பிணையத்தின் இரு கூறு களை இது இணைக்கிறது. இரு கூறு களுக்கிடையே தகவல் பொதிகளை வழிச்செலுத்த இரண்டாம் நிலை முகவரிகளைப் பயன்படுத்திக் கொள்கிறது.

briefcase : கைப்பெட்டி : விண் டோஸ் 95/98 இயக்க முறைமை யில் இருக்கும் ஒரு கோப்புறை (folder). பொதுவாக இரண்டு கணினிகளுக்கிடையே (குறிப்பாக மேசைக் கணினிக்கும் மடிக் கணினிக்கும் இடையே) கோப்புகளை ஒத்திசைவுப்படுத்திக் கொள்ளப் பயன்படுகிறது. இந்தக் கோப்புறையிலுள்ள கோப்புகளை வேறொரு கணினிக்கு வட்டின் மூலமோ, கம்பிவடம் மூலமோ பிணையம் மூலமாகவோ மாற்ற லாம்.அவ்வாறு நகலெடுத்த கோப்புகளை மீண்டும் முந்தைய கோப்புறையில் மாற்றும்போது, திருத்தம் செய்யப்பட்ட கோப்புகளை நாளதுவரை புதுப்பித்துக் கொள்ளும். மேசைக்கணினி, மடிக்கணினி இரண்டையும் தம் அலுவலகப் பயணிகளுக்காகப் பயன்படுத்துவோர்க்கு இது மிகவும் உதவியாக இருக்கும்.

broadband coaxial cable : அகலக்கற்றை இணை அச்சு வட்டம்.

Bright : பொலிவு ; ஒளிர்வு.

bring to front : முன்னால் கொண்டு வா.

brittle : நொறுங்கக் கூடிய.

broadband modem : அகலக்கற்றை இணக்கி: அகல அலைக்கற்றையில் செயல்படும் பிணையத்தில் பயன்படும் இணக்கி. ஓரே வடத்தில் பல்வேறு பிணையங்களின் தகவல் பறிமாற்றம் நடைபெற அகலக்கற்றைத் தொழில்நுட்பம் அனுமதிக்கிறது.வானொலிச் செயல்பாடு போல இரண்டு பிணையங்களுக்கிடையேயான உரையாடல் வெவ்வேறு அலைவரிசைகளில் நடைபெறுவதால், ஒரு பிணையத்தின் தகவல் போக்குவரத்து இன்னொரு பிணையத்தின் போக்குவரத்தில் குறுக்கிடுவதில்லை.

broadband network : அகலக் கற்றை பிணையம் : தகவல் போக்குவரத்து ரேடியோ அலைவரிசையில் உள்கற்றையிலும் வெளிக் கற்றையிலும் தனித்தனியாக நடைபெறக்கூடிய குறும்பரப்புப் பிணையம்.அகலக்கற்றைப் பிணையத்திலுள்ள பணி நிலையங்கள் இணையச்சு அல்லது ஒளியிழை வடங்களினால் பிணைக்கப்பட்டுள்ளன.இவற்றின் வழியாக சாதாரணத் தகவல், குரல் மற்றும் ஒளிக்காட்சி ஆகியவற்றை ஒரே நேரத்தில் வெவ்வேறு அலைவரிசைகளில் அனுப்ப முடியும்.அகலக்கற்றைப் பிணையம் உயர்வேகத்தில் செயல்பட முடியும் (வினாடிக்கு 20மெகாபைட்டுக்கும் மேல்).ஆனால் சாதாரண அடிக்கற்றைப் பிணையங்களைவிட செலவு அதிகமாகும்.நிறுவுவது கடினம்.வடத் தொலைக்காட்சியின் தொழில்நுட்பமே இப்பிணையத்தில் பின்பற்றப்படுகிறது.

broadband & video : அகல அலைக்கற்றை மற்றும் ஒளிக்காட்சிக் கலந்துரையாடல் (conferencing).

broadcast storm : அலைபரப்புப் புயல் : ஒரு பிணையத்தில் நடைபெறும் தகவல் ஒலிபரப்பு, பல்வேறு சேவைமையக் கணினிகளை ஒரே நேரத்தில் பதிலிறுக்கத் தூண்டும்போது ஏற்படுகின்ற போக்குவரத்து நெரிசல்.ஒரு பிணையத்தில் பழைய டீசிபீ/ஐபீ திசைவிகளையும், புதிய நெறிமுறைகளை ஏற்கும் திசைவிகளையும் கலந்து பயன்படுத்துவதால் அலைபரப்புப் புயல் ஏற்படுகிறது. பிணையம் உருகிக் கரைதல் (network meltdown) என்றும் கூறுவர்.

browse button : உலாவு பொத்தான்.

browse option : உலாவுத் தேர்வு.

browse mode : உலாவுப் பாங்கு.

browse stylesheets : உலாவி பாணித்தாள்கள்.

browse view : உலாவுத் தோற்றம்.

.bs : .பிஎஸ் : ஓர் இணையதளம் பஹாமஸ் நாட்டில் உள்ளது என்பதைக் குறிக்கும் பெருங்காலப் பெயர். தள முகவரியின் இறுதியில் இடம்பெறும். BSD Unix : பிஎஸ்டி யூனிக்ஸ் : யூனிக்ஸ் இயக்க முறைமை ஏடீ&டீ பெல் ஆய்வுக் கூடத்தில் உருவாக்கப்பட்ட போதிலும், உலகின் பல்வேறு நிறுவனங்களும் பல்கலைக்கழக ஆய்வுக் கூடங்களும் யூனிக்ஸ் முறைமையை பல்வேறு வடிவங்களில் மேம்படுத்தி உருவாக்கி வெளியிட்டுள்ளனர். அவற்றுள் குறிப் பிடத்தக்கது, கலிஃபோர்னியாவிலுள்ள பெர்க்கிலி பல்கலைக்கழகத்தின் பெர்க்கிலி சாஃப்ட்வேர் டிஸ்ட்ரிபியூஷன் என்ற அமைப்பின் மூலம் வெளியிடப்பட்ட யூனிக்ஸ் பதிப்பு ஆகும். இதுவே சுருக்கமாக பிஎஸ்டி யூனிக்ஸ் என்று அழைக்கப்பட்டது. இன்று யூனிக்ஸில் இருக்கின்ற பிணையத் திறன், கூடுதல் புறச் சாதன ஏற்பு, நீண்ட கோப்புப் பெயர், சி-செயல்தளம், விஐ தொகுப்பான், டீசிபி/ஐபீ ஆகிய பல கூடுதல் வசதிகள் பிஎஸ்டி யூனிக்ஸின் பங்களிப்பாகும். இன்றைக்கு யூனிக்ஸின் பரவலுக்கும், கல்விக் கூடங்களை இணையத்தில் இணைப்பதற்கும் காரணமாக அமைந்தது பிஎஸ்டி யூனிக்ஸ். 1பிஎஸ்டி என்ற பதிப்பில் தொடங்கி 4.3பிஎஸ்டி பதிப்புவரை வெளியிடப்பட்டது. 1993-ஆண்டு டன் பிஎஸ்டி யூனிக்ஸின் வெளியீடு நிறுத்தப்பட்டு விட்டது.

.bt : பிடீ : ஒர் இணைய தள முகவரியின் இறுதியில், பூட்டான் நாட்டைச் சார்ந்த தளம் என்பதைக் குறிக்க இணைக்கப்படும் பெருங்களப் பிரிவுப் பெயர்.

B-tree : பி-மரம் : இரும வடிவிலான மரக் கட்டமைப்பு என்று பொருள்படும். இது, ஒரு தகவல் தளத்திலுள்ள விவரங்களை அகரவரிசைப்படுத்தி சேமிக்கப்பயன்படும் ஒரு தரவுக் கட்டமைப்பு முறை ஆகும்.

BTW : பிடீடபிள்யூ : இந்த வழியே என்று பொருள்படும் By The Way என்பதன் தலைப்பெழுத்துச் சுருக்கம். இணையத்தில் மின்அஞ்சல் மற்றும் செய்திக்குழுக் கட்டுரைகளில் குறிப்புரையைச் சுட்டும் சொல் தொடராக இது அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது.

bubble jet printer : குமிழி பீச்சு அச்சுப்பொறி : தொடா அச்சுமுறை சார்ந்த அச்சுப்பொறி. மைபீச்சு அச்சுப் பொறியில் அமைந்துள்ளது போன்ற நுட்பமே இதிலும் பயன் படுத்தப்படுகிறது. தாளின்மீது ஊசித்துளை வழியே மை பீச்சப்பட்டு எழுத்துகள் அச்சிடப்படுகின்றன. மையைத் தயாரிக்க தனிச் சிறப்பான சூடாக்கும் கம்பிகளைக் கொண்டுள்ளது. ஆனால் மைபீச்சு அச்சுப் பொறியில் பீஸோ மின்படிகங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

bubble memory : குமிழி நினைவகம்.

bubble sort : குமிழி வரிசைப்படுத்தல் : ஒரு பட்டியலை வரிசைப் படுத்தப்பயன்படும் தருக்கமுறை. ஒரு பட்டியலில் அடுத்தடுத்துள்ள இரண்டு உறுப்புகளை எடுத்துக் கொண்டு அவை சரியான வரிசையமைப்பில் இல்லாவிடில் அவற்றை இடமாற்றம் செய்யும் முறை. இந்த முறையில் n உறுப்புகள் உள்ள பட்டியலில் ஒர் உறுப்பு n-1 உறுப்புகளுடன் ஒப்பிடப்பட்டு மிகச்சிறிய உறுப்பு, பட்டியலின் உச்சிக்குக் கொண்டு வரப்படுகிறது. இச்செயல் முறை அடுத்தடுத்துள்ள ஒவ்வொரு உறுப்புக்கும் மேற்கொள்ளப்படுகிறது. நீரின் அடிப்பாகத்திலிருந்து எடைகுறைந்த காற்றுக் குமிழ் உந்தியுந்தி நீரின் மேற்பரப்புக்கு வருவதுபோல குறைந்த மதிப்புள்ள உறுப்பு பட்டியலின் உச்சிக்குக் கொண்டுவரப்படுவதால் இப்பெயர் ஏற்பட்டது.

bucket sort : கலன் வரிசையாக்கம்.

budgeting : வரவுசெலவுத்திட்டமிடல்.

buffer amplifier : இடையகப் பெருக்கி.

buffer card punch : இடையக துளை அட்டை.

buffer storage : இடைநிலைச் சேமிப்பு : இடைநிலை தகவல் தேக்கம் : 1. ஒரு குறிப்பிட்ட தகவல் தொகுதியை, இயக்க முறைமையோ, ஒர் ஆணைத் தொடரோ பயன்படுத்திக் கொள்ளத் தயாராகும் நேரம்வரை, கணினி நினைவகத்தின் ஒரு பகுதியில் தற்காலிகமாகச் சேமித்து வைக்கும் முறை. 2. ஒரே வேகத்தில் செயல்படாத இரண்டு சாதனங்களுக்கிடையே தகவல் பரிமாற்றம் நடைபெறும்போது, தகவல் எடுத்தாளப்படும் வரை சிறிதுநேரம் தற்காலிகமாகத் தேக்கி வைக்கும் இடம். விசைப் பலகையிலிருந்து வரும் தகவலை செயலி படிக்கும்போது, அச்சுப் பொறிக்குத் தகவல் அனுப்பப்படும்போது, வட்டிலிருந்து தகவலைப் படிக்கும் போது, வட்டில் தகவல் எழுதப்படும் போது மற்றும் இதுபோன்று வேக வேறுபாடுள்ள இரு சாதனங்களுக்கிடையே தகவல் பரிமாற்றத்துக்கு இடைநிலை தகவல் தேக்கம் அவசியமாகும்.

buggy : முற்றப் பிழையான ; முழுக்கப் பிழையான ; பிழைகள் மலிந்த மென்பொருளைக் குறிக்கப்பயன்படும் சொல்.

building block principle : உறுப்புத் தொகுதிக் கோட்பாடு.

built-in : உள்ளிணைக்கப்பட்ட.

built-in check : உள்ளிணைந்த சரிபார்ப்பு.

built-in font : உள்ளிணைந்த எழுத்துரு.

built-in function : உள்ளிணைந்த செயற்பாடு.

built-in groups : உள்ளிணைந்த குழுக்கள் ; உள்ளிணைந்த உரிமைத் தொகுதிகள் : விண்டோஸ் என்டி வழங்கன், விண்டோஸ் என்டீ உயர் நிலை வழங்கன் அமைப்பில் உள்ளிருப்பாய் உள்ள உரிமைத் தொகுதிகள். பிணைய அமைப்பில் ஒவ்வொரு பயனாளருக்கும் குறிப்பிட்ட பணிகளைச் செய்வதற்கான அனுமதியும் உரிமைகளுமே வழங்கப்படுகின்றன. அத்தகைய உரிமைகளுள் குறிப்பிட்ட சிலவற்றை ஒரு தொகுதியாக வைத்துக்கொள்வதால், ஒரு பயனாளருக்கு அத்தொகுதி உரிமையை வழங்குவது எளிமையாக இருக்கும். குறிப்பிட்ட பொது வான உரிமைகள் பெற்ற பயனாளர் குழுக்களை உருவாக்குவதும் எளிதானது.

built-in pointing device : உள்ளிணைந்த சுட்டு சாதனம்.

bulk eraser : முழுக்க நீக்கல் ; முற்றத் துடைத்தல் ; ஒட்டுமொத்தமாய் அழித்தல் : நெகிழ்வட்டு, நாடா போன்ற சேமிப்பு ஊடகங்களிலுள்ள தகவல் அனைத்தையும் ஒட்டு மொத்தமாய் அழிக்கப் பயன்படும் செயல்முறை அல்லது ஒரு சாதனம். வட்டு, நாடா ஆகியவற்றில் மின் காந்த முறையில் தகவல் பதியப்படுகிறது. எனவே, சக்திவாய்ந்த மின்காந்தப் புலத்தை உருவாக்கு வதன் மூலம் மின்காந்த ஊடகத்திலுள்ள இரும்புத் துகள்களைச் சிதைத்து தகவலனைத்தையும் துடைத்திட முடியும்.

bullet proof : பிழைதடுப்புத் திறன் : வேறொரு கணினியின் வன்பொருள் குறைபாடுகளால் நல்லபடியாக இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு கணினிச் செயல்பாட்டுக்கு இடையூறு ஏற்படா வண்ணம் தடுத்துக் காக்கும் திறன்.

bullets and numbering : பொட்டும் எண்ணிடலும்.

burst mode : வெடிப்பு முறை : தகவல் அனுப்பும் முறைகளுள் ஒன்று. இம்முறையில் பல்வேறு பிரிவுகளிலிருந்து வரும் தகவல் களை ஒருங்கிணைத்து ஒரே தொகுதியாக அதிவேகத்தில் அனுப்பி வைக்கப்படுகிறது. தகவல் தொடர்பிலும் கணினிகளுக்கிடையேயான தகவல் பரிமாற்றத்திலும் வெடிப்பு முறை பயன்படுத்தப்படுகிறது.

burst speed : வெடிப்பு வேகம் : 1. வெடிப்பு முறை தகவல் பரிமாற்றத்தில், ஒரு சாதனம் இடையூறின்றி தகவலை அனுப்பக் கூடிய உச்ச அளவு வேகம். பல்வேறு தகவல் தொடர்புச் சாதனங்கள் வெடிப்பு முறையில் தகவலை அனுப்ப வல்லவை. வெடிப்பு முறையில் தகவல் பொட்டலங்களை அனுப் பும்போது அதன் தகவல் பரிமாற்ற வேகம் அதிகரிக்கப்படுகிறது. 2. ஒர் அச்சுப்பொறி அடுத்தவரிக்கு வராமல் ஒரே வழியில் ஒரு வினாடி நேரத்தில் அச்சடிக்கும் எழுத்துகளின் எண்ணிக்கை. தாளைத் தள்ளும் நேரம், அச்சுமுனை அடுத்தவரிக்கு வர எடுத்துக்கொள்ளும் நேரம் இவற்றைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் கணக்கிடப்படும் வேகம் இது. அச்சுப்பொறி உற்பத்தியாளர்கள் கூறிக்கொள்ளும் அச்சிடும் வேகம் உண்மையில் அதன் வெடிப்பு வேகத்தைத்தான். ஆனால், உண்மையில் அச்சுப்பொறியின் செயல்திறன் ஒரு பக்கம் முழுமையும் அடிக்க எடுத்துக் கொள்ளும் மொத்த நேரத்தைக் கொண்டே கணக்கிடப்படும்.

bursty : வெடிப்பி ; வெடிப்பு முறை : தகவல் பரிமாற்றத்தில் தொடர்ச்சியாகத் தரவை அனுப்புவதற்குப் பதில் வெடிப்பு முறையில் துண்டு துண்டாக அனுப்பும் முறை.

bus architecture : மின்பாட்டைக் கட்டுமானம்.

bus enumerator : மின்பாட்டைக்கணக்கெடுப்பி : ஒரு குறிப்பிட்ட மின்பாட்டையில் இணைக்கப்பட்டுள்ள அனைத்து சாதனங்களையும் கண்டறிந்து ஒவ்வொன்றுக்கும் தனித்த அடையாளக் குறியீடு அளிக்கவல்ல ஒரு சாதன இயக்கி (device driver) ஆணைத்தொகுப்பு. ஒரு கணினியை இயக்கியவுடன், கணினியில் பொருத்தப்பட்டுள்ள அனைத்து சாதனங்களின் தகவல்களையும் நினைவகத்தில் ஏற்றும் பணியை இக்கணக்கெடுப்பியே கவனித்துக் கொள்கிறது.

business information system : வணிகத் தகவல் முறைமை ; வணிகத் தகவல் அமைப்பு : ஒரு நிறுவனத்திலுள்ள கணினிகள், அச்சுப்பொறிகள், தகவல் தொடர்பு சாதனங்கள் மற்றும் தகவலைக் கையாளும் ஏனைய சாதனங்களையும் உள்ளடக்கிய ஒர் அமைப்பு. முற்றிலும் தானியங்கி மயமாக்கப்பட்ட வணிகத் தகவல் அமைப்பு, தகவலைப் பெறுகிறது ; அலசி ஆய்கிறது; சேமிக்கிறது. தேவையானபோது அனுப்பி வைக்கிறது. தேவைப்படும்போது அறிக்கைகளையும் தருகிறது. BIS என்பது தலைப்பெழுத்துச் சுருக்கம்.

business mini computer : வணிகச் சிறு கணினி.

bus network: மின்னபாட்டை பிணையம்.

bus system : மின்பாட்டை முறைமை.

bus topology : மின்பாட்டை இடவியல்.

button bomb : குண்டு பொத்தான் : பொத்தான் குண்டு : இணையத்திலுள்ள வலைப்பக்கத்தில் பல்வேறு செயல்முறைகளை இயக்க பல்வேறு உருவங்களில் பொத்தான்கள் அமைக்கப்படுவது உண்டு. சுட்டியின் சுட்டுக்குறியை ஒரு பொத்தான்மீது வைத்துச் சொடுக்கும் போது அதற்குரிய பணி செயல்படுத்தப்படும். குண்டின் உருவத்தில் தோற்றமளிக்கும் பொத்தான், பொத்தான் குண்டு எனப்படுகிறது.

business oriented language : வணிக நோக்கு மொழி.

business systems planning(BSP) : வணிக முறைத்திட்டமிடல்.

bussy hour : மிகைவேலை நேரம்.

button bar : பொத்தான் பட்டை

button, help : உதவிப் பொத்தான் : பயனாளர் கணினித் திரையில் ஒரு பயன்பாட்டுத் தொகுப்பினை பார்வையிட்டுக் கொண்டிருக்கும் போது, ஏதேனும் விளக்கம் தேவைப் பட்டால் திரையில் தோன்றும் ஒரு பொத்தான் அல்லது ஒரு சின்னத்தின் மீது சுட்டுக் குறியை வைத்துச் சொடுக்கினால் உதவிக் குறிப்புகள் திரையில் விரியும். வைய விரி வலைப் பக்கங்கள், பல்லூடகச் சேவை நிலையங்கள், கணினி வழியாகக் கற்பித்தல் ஆகியவற்றில் பயனாளர் தாமாக அறிந்து கொள்ளும் வகையில் இத்தகைய பொத்தான்கள்/சின்னங்கள் அமைக்கப்படுகின்றன.

.bw : .பிடபிள்யூ : இணையத்தில் குறிப்பிட்ட தளம் போட்ஸ்வானா நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்க தளமுகவரியில் இடம் பெறும் பெருங்களப் பெயர்.

by default : உள்ளிருப்பாய் ; இயல்பாகவே.

byte code : பைட் குறிமுறை.

byte oriented protocol : எண்மி சார்ந்த நெறிமுறை : எண்மி சார் நெறிமுறை : துண்மிசார்ந்த அதாவது பிட் சார்ந்த தகவல் பரிமாற்ற நெறி முறைக்கு மாறானது. தகவல்கள் பிட் நிலையில் இல்லாமல் பைட்டுகளின் தொடர்ச்சியான சரமாக அனுப்பப்படுவது. ஆஸ்கிக் குறியீடு போன்ற ஏதேனும் ஒரு குறியீட்டுத் தொகுதி பயன்படுத்தப்படுவதுண்டு. இணக்கிகளில் பெரும்பாலும் பயன்படுத்தப்படும் ஒத்தியங்காத் தகவல் தொடர்பு நெறிமுறைகளிலும், ஐபிஎம்மின் பைசிங்க் (BISYNC) நெறி முறையிலும் பைட்டு சார்ந்த நெறிமுறையே பின்பற்றப்படுகிறது.

.b2 : .பிஇஸட் : இணைய தள முகவரியில் பீலைஸ் நாட்டைச் சேர்ந்த தளம் என்பதைக் குறிக்கும் பெருங்களப் பெயர்.