கலைச் சொல் அகராதி வானநூல்
GLOSSARY OF TECHNICAL TERMS
OF
ASTRONOMY
(MINOR).
கலைச் சொல் அகராதி:
வான நூல்
(பொது அறிவு)
Prepared by:
THE COLLEGE TAMIL COMMITTEE
தயாரிப்பு
கல்லூரித் தமிழ்க் குழு
சென்னை அரசாங்கம்
பதிப்புரிமை அற்றது
இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.
நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.
This is a human readable summary of the legal code found at https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode
No Copyright
The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law including all related and neighboring rights, to the extent allowed by law.
You can copy, modify, distribute and perform the work even for commercial purposes, all without asking permission.( https://ta.wikisource.org ) and Tamil Virtual Academy ( http://tamilvu.org ). More details about this collaboration can be found at https://ta.wikisource.org/s/4kx.
தமிழிலேயே கல்லூரிகளில் கற்பிப்பது ஒரு புது முயற்சி. வகுப்பில் எழும் சூழ்நிலைகளை யெல்லாம் எதிர்பார்ப்பது அருமை. இங்கே அடிப்படை, முட்டுப்பா டுள்ள கலைச் சொற்களை எல்லோரும் ஒப்புக்கொள்ளும் வகையில் அமைப்பதேயாம். முடிவாக ஒரு கொள்கை உருவாகலாம். குழந்தை முதலடி எடுத்து வைக்கும்போது தட்டுத் தடுமாறி நின்று, பின் நன்றாக நடக்கக் கற்றுக் கொள்கிறது. அது தான் இயற்கையோடியைந்த விஞ்ஞானபபோக்கு. இங்கே குறித்துள்ள கலைச்சொற்களின் மூலங்கள் ஆங்கிலப் பாடப் புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்டன. தமிழ்ச சொற்கள் இப்போதைக்கு உதவக்கூடும் என்ற நோக்கிலேயே உருவானவை. இவை குற்றமற்றன என்று யாரும் கருதவில்லை. இவற்றைத் திருத்த முடியும் என்ற நம்பிக்கையிலேயே எல்லோரையும் இவற்றைப்பற்றி எண்ணுமாறும், திருத்தங்களைத் தரு மாறும் கேட்டுக்கொள்ளுகிறோம். பல கல்லூரி ஆசிரியர்களும் பிறரும் இந்த முயற்சியில் ஒத்துழைத்துள்ளார்கள். எல்லாவற்றையும் கலைச் சொல்லாக்காது, இன்றியமையாதவற்றை மட்டும் குறித்துள்ளோம். மாணவர்கள் ஆங்கில நூல்களையும் புரட்டிப் பார்த்து அறிவைப் பெறவேண்டிய சூழ்நிலை க்கு உதவவேண்டும் என்பதனையும் நம் மனத்தில் கொள்ளவேண்டும். இன்று கற்பிக்கும் ஆசிரியர்கள் தமிழில் கற்பிக்கும் முயற்சியில் எளிதாகப்பங்கு பெறவேண்டும் என்ற நோக்கமும் உண்டு. இக்கலைச் சொற்கள் கல்லூரிப் பாட நூல்களுக்கே அன்றிப் பொதுமக்கள் நூல்களுக்காக அல்ல என்பதனையும் வற்புறுத்துகிறோம். சொல்லிக்கொடுக்கும்போதும் நூல்களை எழுதும்போதும் திருத்தங்கள் எழும் என்பதில் ஐயம் இல்லை: நூல் எழுதுவோர்க்கு இது
காரணமாக உரிமை உண்டு. போராட்டம் இன்றி அன்பு வழியே சென்றால் இடர்ப்பாடு நீங்கும், வெற்றியே காண்போம்.திரு. கோ. ர. தாமோதரன், முதல்வர், பூ. சா. கோ. பொறியியல் கல்லூரி, பீளமேடு, கோயமுத்தூர்-4.
" பி. எம். திருநாரணன், முதல்வர், அரசியலார் கலைக்
கல்லூரி, கோயமுத்தூர்-1.
" தெ. பொ. மீனாட்சிசுந்தரம், பேராசிரியர், தமிழ்க் கலைத்துறைத் தலைவர், அண்ணாமலைப் பல்கலைக் கழகம்.
" சி. வேலாயுதம், தலைமைப் பேராசிரியர், 'பொருளாதாரத்துறை, மாநிலக் கல்லூரி, சென்னை.
" டாக்டர். மு. அறம், முதல்வர், கிராமிய உயர் நிலைக் கல்லூரி, பெரியநாயக்கன்பாளையம், கோயமுத்தூர்.
" கி. ர. அப்புள்ளாச்சாரி, முதல்வர், வ. உ. சி. ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி, தூத்துக்குடி.
" டாக்டர் தேவசேனாபதி, ரீடர், தத்துவநூல் இயல் துறை, சென்னைப் பல்கலைக் கழகம், சென்னை.
" போ. ரா. கிருஷ்ண மூர்த்தி, முதல்வர், பூ. சா. கோ. கலைக்கல்லூரி, பீளமேடு, கோயமுத்தூர்-4. .
- வெ. கண்ணையன், செயலாளர், சென்னை அரசினர் தமிழ் வளர்ச்சி ஆராய்ச்சி மன்றம், செயின்ட் ஜார்ஜ் கோட்டை,
சென்னை.
(MINOR)
வான நூல்
(பொது அறிவு)
A
Aberration .... பழுது, (பிறழ்ச்சி )
Absolute magnitude of stats .... விண்மீன்களின் தனி அளவு
Achromatic telescope .... நிறப் பிறழ்ச்சி நீக்கிய தொலை நோக்கி
Aeries .... மேடம்
Albedo : ஒளி திருப்பும் திறன்
Aldebaran : உரோகிணி
Algebra : இயல் கணக்கு
Algol : அருந்ததி
Alpha Centauri : அல்ஃபா செண்ட்டாரி
Altait : திருவோணம்
Altitude : உச்சி அல்லது ஏற்றக் கோணம்
Altitude, apparent : தோற்ற உச்சி அல்லது தோற்ற ஏற்றக் கோணம்
Altitude of celestical pole : வானத் துருவத்தின் ஏற்றக் கோணம்
Andromeda : ஆண்டிரோமீடா
Angular distance : கோணத் தொலைவு
Annular eclipse of sun : ஞாயிற்றின் வளைய மறைவு அல்லது ஞாயிற்றின் கங்கண கிரகணம்
Antarctic Circle : அண்ட்டார்க்ட்டிக் வட்டம், தென்துருவ வட்டம்
Aphelion-ஞாயிற்றின் சேய்மை நிலை
Apex, Solar-ஞாயிற்று உச்சி
Apogee-பூமியின் சேய்மை நிலை
Apparent-தோற்றம்
Appollo-அப்போலோ (Asteroid) ஒரு சிறு கோள்)
Aquaries-கும்பம்
Aquila-அக்க்விலா
Arctic circle- ஆர்க்ட்டிக் வட்டம் வடமுனை வட்டம்
Arcturus-சுவாதி விண்மீன்,சுவாதி நட்சத்திரம்
Areas, (law of cqual)- சமப் பரப்பு விதி
Argo- கப்பல் மண்டலம்,
Asteriods- சிறுகோள்கள்,(குட்டிக் கோள்கள்)
Astronomy-- வானவியல், வான நூல்
Astrophysics- வானியல் பௌதிகம்
Atmosphere- வளி மண்டலம்
Atom- அணு
" - mass number of-அணு எடையெண்
Neutral and ionised- நடுநிலை, மின்னேறிய
Aariga- தேராளன்
Aurora-துருவ ஒளி
Axle-அச்சு, இருசு ,
Azimuth- அடிவானம் -
Betelgeuse- திருவாதிரை
Binary stars- இரட்டை விண்மீன்கள், இணை மீன்கள்
Bright line spectra- நிறமாலைCalcium- கால்ஷியம்
Calendar- நாட்குறிப்புமுறை, பஞ்சாங்கம்
Canals on Mars- செவ்வாயின் கால்வாய்கள்
Cancer- கடகம்
Cancer, tropic of- கடக ராசி
Canis, major-பெருநாய் மண்டலம்
Canis, minor- சிறுநாய் மண்டலம்
Canopus- அகஸ்தியர்
Capella- க்காபெல்லா
Capticon, tropic of-சுறாக்கோடு, மகர ராசி
Cassiopia-க்காசியோப்பியா
Castor- புனர் பூசம் (மிதுனம்)
Celestial equator- வான நடுக்கோடு
Celestial sphere- வானக் கோளம்
Ceres- சீரஸ்
Chemically active-இயைபு வினைபுரி
Chromosphere- நிற மண்டலம், செந்நிறப் புரை
Chromosphere Solar- ஞாயிற்றின் செந்நிறப் புரை
Civil time- நாட்டுக்காலக் குறிப்பு
Clock stars- காலம் குறிக்கும் மீன்கள்
Clocks, celestial - வானக் கடிகாரம்
Comets - வால் மீன்கள், வால் நட்சத்திரங்கள்
Constellation- விண்மீன் மண்டலம்
Continents- கண்டங்கள்
Convex surface- குவி தளம் Coronagraph : ஒளிவளைய வரையி
Corvus : அஸ்தம், காகம்
Cownal : பால்மண்டலம்
Crab nebula : நண்டு, விண்மீன் கரு
Dark nebulae : கரிய விண்மீன் கரு
Date line : நாள் எல்லைக் கோடு
Day, apparent solar : ஞாயிற்று வழித்தோற்ற நாள்
Day, mean solar : சராசரி ஞாயிற்று நாள்
Day, sidereal : விண்மீன் நாள்
Day, solar : ஞாயிற்று நாள்
Declination : சரிவுக்கோணம்
Deimos : டெய்மாஸ்
Density : அடர்த்தி
Diameter of planets : கோள்களின் விட்டம்
Diameter of diffuse nebulae : விரவிநிற்கும் மேகமீனின் விட்டம்
Diameter angular : கோண (அளவு) விட்டம்
Disruption : வெடிப்புச் சிதறல்
Doppler's effect : டாப்ப்ளர் விளைவு
Double stars : இணைமீன்கள்
Dwarf stars : குறுமீன்கள்
Earth Ellipticity of otbit of : பூமியின் தடத்தின் நீள் வட்ட நிலை
Earth shine : நிலத்தின் நிலவு
Earth light : பூமியொளி
Eclipse of jupiter's satellites : வியாழனின் துணைக்கோள்களின் மறைவு
Eclipse frequency of : கிரகணம் வருவீதம் Ecliptic : ஞாயிற்றின் தோற்றப்பாதை
Ecliptic plane of : பூமித் தடத் தளம்
Ellipse : நீள்வட்டம்
Elliptical orbit law : நீள்வட்டத் தட நியதி
Energy radiant : கதிர் வீச்சாற்றல்
Equator : நடுக் கோடு
Equator plane of : நடுக் கோட்டுத் தளம்
Equinox : சம இரவு நாள்
Equinox autumnal and : மாரிச் சம இரவு நாள்,
Equinox vernal : வேனிற் சம இரவு நாள்
Equinox precession of : சம இரவுப் புள்ளியின் பிற்போக்கு, அயனாம்சம்
Expansion of universe : அண்டத்தின் விரிவு
Explosive stars : வெடி மீன்கள்
Eye piece (of telescope) : தொலைநோக்கியின் கண் பக்க வில்லை
Fission : பிளவுக் கொள்கை
Fixed star : நிலை மீன்
Foci : குவியங்கள்
Focus : குவியம்
Foucault's experiment : ஃபோக்கால்ட்ட் ஆய்வு
Fraunhofer lines : ஃப்ரான்ஹோஃபர் கோடுகள்
Frictional force : உராய்வு விசை
Galactic : அண்டம்
Gemini : மிதுனம்
Giant stars : பெரு மீன்கள்
Gravitation : ஈர்ப்பு Gravitational force : ஈர்ப்பு விசை
Great bear : பெருங் கரடி மண்டலம்,
சப்த ரிஷி மண்டலம், ஏழு முனிவர் மண்டலம்
Greenwich prime க்ரீன்விச் வழி செல்லும்
meridian through : உச்சிக் கோடு
Heat rays : கனல் கதிர்கள்
Helium : ஹீலியம்
Horizon : அடிவானம்,
தொடுவானம்
Hydrogen : ஹைட்ரஜன்
Hydrogen
" ,
inter stellar : ஹைட்ரஜன் அண்டத்தூடுள்ள
Hyperbola : ஹைப்பர்போலா
Inclination of an orbit : தடத்தின்
சாய்மானம்
Indian standard time : இந்திய நேரம்
Indigo : அவுரிநீலம் (a colour)
Inverse sphere : தலைகீழ்ப் புரை
Ionisation : அயனியாதல் .
Ionised atoms : அயனியாகிய
அணுக்கள்
Ionosphere : அயனி மண்டலம்
Jupiter : வியாழன்
Leo : சிம்மம்
Libra : சீர்கோல், துலாம்
Light year : ஒளியாண்டு
Luminosities of stars : விண் மீன்களின் வெளிச்ச அளவு
Magnetic fields of sun : காந்தப்புலம்
Magnetic storms : காந்தப்புயல்
Magnitude : அளவு
Magnefying power of telescopes : தொலைநோக்கியின் பெருக்கத்திறன்
Major planets : (பூமியைவிடப்) பெரிய கோள்கள்
Maps of constellations விண்மீன்களின் வரைபடம்
Mars : செவ்வாய்
Martian days செவ்வாய் நாளின் நேரம் (காலம்)
Mass : பொருள்மை
Mean distance : சராசரி தொலைவு
Mercury : புதன்
Meridian : உச்சிக் கோடு
Meridian circle : உச்சி தூரம் அளக்கும் கருவி
Meteors : வீழ் மீன், எரி மீன்
Milky way : பால் மண்டலம்
Mirrots : ஆடிகள் ஒளி மீட்டும், ஆடிகள்
Mizar : வசிட்டர்
Moon : திங்கள், சந்திரன், மதிMoon, full and new : முழு மதியும், இருள்மதியும், பௌர்ணமியும், அமாவாசையும்
Moon, maria on : திங்களில் உள்ள கடல்கள்
Moon, crescent : பிறைமதி
Moon, surface features of : திங்களின் தளத்தின் இயல்புகள்
Moon, rays and rills of : திங்களின் மலைத்தொடர்களும், மலைச்சரிவுகளும்
Moonlight : நிலவொளி
Moon rise : சந்திரோதயம்,திங்களெழுச்சி
Moon, retardation of : சந்திரோதயத்தின் பிற்போக்கு
Moon month : திங்கள் மாதம்
Motion : இயக்கம்
Motion, Kepler's laws of planetary : கெப்ப்ளர் கூறிய கோள்களின் இயக்க முறைமைகள்
Motion, Newton's laws of : நியூட்டன் கூறிய இயக்க முறைமைகள்
Multiple stars : பல் மீன்கள்
N
Nautical almanac : கடல் பஞ்சாங்கம்
Nebula : நெபுலம், நெபுலா
Nebular hypothesis of Laplace : லாப்ப்லாஸின் விண்மீன் கரு
Neptune : நெப்ப்ட்டியூன்
Neptune, satellites of : நெப்ப்ட்டியூனின் துணைக் கோள்கள்
Noctilucent clouds : இரவு ஒளிரும் மேகங்கள்
Node : சந்திப் புள்ளி,கோள சந்தி
Node,ascending : ஏறு கோள சந்தி
Node, descending : இறங்கு கோள சந்தி
North pole : வடமுனை, வடதுருவம்
Novae : புது மீன்கள்
O
Observatory : வானாராய்ச்சி நிலையம்
Oblique : சாய்வு
Omega Centauri : ஒமீகா செண்ட்டாரி
Opposition : எதிர்ப்பாடு,எதிர் நிலை
Orion, great nebula in : விண்மீன் பெருங்கரு
Ozone : ஒஸோன்
P
Parabola : ப்பரபோலா
Parabolic velocity : ப்பராபோலிக் கதி ,ப்பராபோலிக் வேகம்
Parallax : புடை பெயர்ச்சி
Pegasus square : குதிரை மண்டலம்
Perigee : அண்மை நிலைப்புள்ளி
Perihelion : அண்மை நிலை
Period : கால வட்டம்
Periodic : காலாந்திர
Period of totality : முழு மறைவு, நிற்கும் காலம்
Phase angle : பிறைக் கோணம்
Phobos -(the inner moon of mars) : ஃபோபோஸ்(செவ்வாயின் உட்புற நிலா)
Photoelectric photometry : ஒளிமின் ஒளி அளவியல்
Photometry : ஒளி அளவியல்
Photographic : ஒளிவரைத் தரம்,
magnitude : ஒளிவரை அளவு
Photons : ஒளித் துகள்கள், ஃபோட்டான்கள்
Photosphere : ஒளிப்புரை, ஒளி மண்டலம்
Photovisual magnitude : ஒளிகாண் அலகு
Pisces : மீனம்
Plane : தளம்
Planetarium : ப்ப்ளானட்டேரியம்
Planetary motions : கோள்களின் இயக்கம்
Planets : கோள்கள்
Planets outer or exterior : வெளிப்புறக் கோள்கள்
Planetoids : சிறுகோள்கள்
Pleiades : கார்த்திகை
Pluto : ப்ப்ளூட்டோ
Pointer : சுட்டு மீன்
Polar caps : துருவங்களிலுள்ள பரப்புகள் (வெளிகள் )
Polaris : துருவ நட்சத்திரம்
Polarisation : ஒளி முனை கொள்ளல்
Polarities : திசை நோக்கங்கள்
Pollux : புனர்வரை (மிதுனம்)
Precession : பிற்போக்கு
Procyon : ப்ரோசியோன் .
Prominences, solar : ஞாயிற்றின் சுடர்க்கொழுந்துகள்
Prominences-Quescent : நிலை நின்றெரியும்
Ptolemaic crater : ட்டாலமி எரிமலைவாய்
Pulsating stars : விட்டுவிட்டொளிரும் மீன்கள்
R
Radial velocity : சுற்று விசை
Radial velocity of exterior systems : வெளிப்புறக் கோள்களின் சுற்று விசை
Radial velocity of stars : மீன்களின் சுற்று விசை
Radial velocity of annual : ஒரு ஆண்டில் சுற்று
Radial velocity of variations in : விசையின் மாற்றம்
Radiant energy : கதிர்வீச்சு ஆற்றல்
Radiations of stars : மீன்களின் கதிர்வீச்சு.
Radio reception : ரேடியோ அலைகளால் அறிதல் -
Radio reception from milky way : பாலாறிலிருந்து ரேடியோ அலைப்பிடிப்பு (வெள்ளி வீதி)
Radio reception from spiral : அண்டப்பொருள்களின்
Radio reception arms of galactic Systems : கம்பிச்சுருள் பகுதியிலிருந்து ரேடியோ அலைப்பிடிப்பு
Radio reception from Sun : ஞாயிற்றிலிருந்து ரேடியோ அலைப்பிடிப்பு
Radio telescope : ரேடியோத் தொலைநோக்கி
Radio telescope resolving power of : ரேடியோத் தொலைநோக்கியின் பிரித்தறி திறன்
Radius : ஆரம்
Rainbow : வானவில்
Reddish orange : சிவப்பு அருணம்
Reflecting telescopes : மீட்டொளித் தொலைநோக்கி
Refracting telescopes : ஒளி விலகு முறைத்தொலை நோக்கி
Refraction of light : ஒளி விலகல்
Refraction of light atmosphere : காற்றுச் சூழலால் ஒளி விலகல்
Regression of moon's nodes : திங்களின் சந்திப் புள்ளிகளின் பின்னடைவு
Relativity theory : ஒப்புமைக் கொள்கை
Relativity theory tests of : ஒப்புமைக் கொள்கையின் ஆய்வுகள்
Retrograde motion : பிற்போக்கு, வக்கிரம்
Revolution : சுற்று
Riegel : ரீகல்
Rings of Saturn : சனியின் வளையங்கள்
Rocket : வெடி ஊர்தி, ராக்கெட்
Rotation : சுழற்சி -
Rotation period of : சுழற்சிக் காலம்
S
Sagittarius : வில், தனுசு
Saros : மறைவுத் திருப்பம், மறு கிரஹணம் வரும் கால இடை வெளி
Satellite : துணைக்கோள்
Saturn : சனி
Saturn's rings : சனியின் வளையங்கள்
Scorpius : விருச்சிகம்
Semi major axis of planetary orbit of : கோள் தடத்தின் அரை நெட்டாயம்
Seasons : பருவங்கள்
Shadow moon in earth : பூமியின் நிழலில் திங்கள்
Shooting stars : வீழ் மீன்கள்
Sidereal period of : கோள்களின் மீன் வழிச்
planet : சுற்றுக் காலம்
Sidereal time : மீன் வழிக் காலம்
Sidereal year : மீன் வழி ஆண்டு
Signs of the zodiac : இராசிகளின் அடையாளம்
Sirius : கத்திரி மீன், சீரியஸ்
Size measured in angle : கோணத்தால் பருமனளத்தல்
Solar eclipses : ஞாயிறு மறைவுகள், சூரிய கிரஹணங்கள்
Solar eclipses features of total : ஞாயிற்று முழு மறைவின் இயல்புகள்
Solar eclipse total : ஞாயிற்றின் முழு மறைவு, பூர்ண சூரிய கிரஹணம்
Solar eclipse annular : ஞாயிற்றின் வளைய மறைவு, சூரியனின் கங்கண கிரஹணம்
Solar flares : ஞாயிற்றின் தீக் கொழுந்துகள்
Solar flares motion : ஞாயிற்றின் இயக்கம்
Solar flares spectrum : ஞாயிற்றின் நிற அடுக்கு
Solar spectrum in ultra violet region : ஞாயிற்றின் புற ஊதா நிற அடுக்கு
Solar spectrum, in infra red region : ஞாயிற்றின் கீழ்ச்சிவப்பு நிற அடுக்கு
Solar spectrum, in visible region : ஞாயிற்றின் கண்காண் நிற அடுக்கு
Solar system : ஞாயிற்றுக் குடும்பம்
Solar time : ஞாயிற்று (வழி)க் காலம்
Solar time apparent : ஞாயிற்று வழித்தோற்றக் காலம்
Solar time mean : சராசரி ஞாயிற்றுக் காலம்
Solstices : நிலை, விஷு
Solstices, summer : தட்சணாயன சந்தி, கோடை நிலை
Solstices, summer winter : குளிர் நிலை
Spectra : நிறமாலை
Spectra of Jupiter : வியாழனின் நிற மாலை
Spectroheliogram : ஞாயிற்று ஒளி நிற அளவி
Spectroheliograph : ஞாயிற்று நிற மாலை வரைவி
Star of the first magnitude : முதல்தர விண் மீன்
Stefan's law : ஸ்ட்டீஃபான் முறைமை
Stratosphere : அடுக்கு மண்டலம்
Structure : அமைப்பு
Sun : ஞாயிறு
Sunspot cycle : ஞாயிற்றுக் கறைகளின் திருப்ப வீதம்
Supergiant stars : மீப் பெரு விண் மீன்கள்
Synodic month : அண்ட வழி மாதம்
T
Tarus : காளை, ரிஷபம்
Thermal ionization : வெப்பத்தால், அயனியாதல்
Tides : அலைகள்
Time : காலம், நேரம்
Time zone : கால எல்லை
Titan [largest satellite of Saturn) : ட்டைட்டன் (சனியின் மிகப் பெரிய துணைக்கோள்)
Tower telescope : கோபுர அமைப்புத் தொலைநோக்கி
Transit : கடத்தல், ஒன்றையொன்று கடத்தல்
Transit mounting : நகரும் அமைப்பு
Transmutation of density : மூலகங்களின் மாற்றம்
Twinkling of stars : மீன்களின் சிமிட்டல்
U
Umbra of shadow : கரு நிழல், அக நிழல்
Uranus : யூரேனஸ்
Ursa major : பெருங்கரடி மண்டலம், ஏழு முனிவர் மண்டலம், சப்தரிஷி மண்டலம்
v
Venus (as morning and evening star) : வெள்ளி (விடிவெள்ளி,அந்தி வெள்ளி)
Virgo : கன்னி
w
White dwarf stars : வெண்ணிறக் குறுமீன்கள்
X
X-rays : எக்ஸ்-கதிர்கள், எக்ஸ்-ரே
Y
Year : ஆண்டு
Year, lunar : மதியாண்டு
Year, eclipse year : மறைவுகொள் ஆண்டு
Year, leap : லீப் வருஷம், லீப் ஆண்டு
Year,sidereal, : மீன் ஆண்டு
Year, mean solar : சராசரி, ஞாயிறு ஆண்டு
Yerkes observatory : எர்க்க்ஸ் வானாராய்ச்சி நிலையம்
Z
Zenith : உச்சிப் புள்ளி
Zodiac, signs and constellations : ராசி, உருவங்கள், மண்டலங்கள், விண்மீன் கூட்டங்கள்
Zodiac path : ஓரை, ஓரை வழி
Zodiacal light : ஓரை வட்ட ஒளி
LIST OF AGENTS FOR THE SALE OF MADRAS
GOVERNMENT PUBLICATIONS
---
IN MADRAS CITY
Afessis. Account Test Institute, Egmore, Maclras,
Messrs. City Book Company, Madras-4.
Alfessrs. Higginbothams Limited, Madras-2.
Messrs. New Century Book Houise, Madras-2.
Messrs. P. Varadachari & Co., Madras-1.
Messts. The South India Saiva Siddhantha Works Publishing Society, Madras-1.
Messrs. Venkatarama & Co, Madras-1.
Messis. V. Perumal Chetty & Sons, Madras-1.
Messrs, M. Doraiswamy Mudaliar & Co., Madras-1.
Alessrs. C. Subbiah Chetty & Sons, Madras-5.
Sri S. S. Srinivasaragavan, Royapeta, Madras-14.
Mesars. The Free India Co-operators' Agency, Madras-4.
Messrs, Palani & Co. Triplicane, Madras-s.
Messrs. Moorthy Publications, Alwarpet, Madras-18.
IN MUFASSAL OF MADRAS STATE
Mcssrs. Anuthu Book Depot, Booksellers, Dasarpuram, P. O.,
Chingleput district.
Sti E. M. Gopalakrishna Kone, Madurai, Madurai district.
Messrs, The Oriental Book House, Madurai.
Sri A. Venkatasubban, Vellur, North Arcor district.
Messes. Muthamizh Manam; Mayuram.
Messts. Bharatha Matha Book Depot, Tanjore, Tanjore district.
Messrs. P. V. Nathan & Co., Kumbakonam, Tanjore district.
Messrs Appar Book Stall, Tanjore.
Messrs, P. N. Swarninathasivam & Co., Pudukkottai, Tiruchirappalli dist.
Messrs. M. Palani & Co , Booksellers, Clock Tower, Pudukkottai.
Messts. S. Krishnawamy & Co., Tiruchirappalli district.
Messrs. Palaniappa Brothers, Tiruchirappalli district.
Sri S. S. Sultan Mohamed, Alangudi, Tiruchirappalli district.
Sri S. R. Subramania Pillai, Tirunelveli, Tirunelveli district.
Sri B. Aruldoss, Villupuram Town, South Arcot district,
Sri V. B. Ganesan, villupuram, South Arcot district,
Mcssis. C. P. S. Book Shop, Chidambaram.
Messis. The Educational Supplies Company, Coimbators (R. S. Puram).
Messrs. Vasanthan Stores, Booksellers, Cross Cut Road, Coimbatore.
Messrs. Mercury Book Company; 223, Raja Street, Coimbatore,
Messrs. Sivalinga Vilas Book Depot Erode, Coimbatore district.
Messrs. Arivu Noolagam, Booksellers, Market, Ootacamund, Nilgiris.
Sri S. M. Jaganathan, Bookseller & Pablisher, Nagarcoil, Kanyakumari Dt.
IN OTHER STATES
Messrs. U. R. Shenoy & Sons, Mangalore, Sonth Kanarn district.
Messrs. Hajee K.P. Ahmed Kunhi & Bros., Cannanors, North Malabar Dt.
Messrs. The s. S. Book Emporium, Booksellers, “ Mount-Joy" Road, Basavangudi, Bangalore-4.
Messrs, Peolpe's Book House, Mysore.
Mcssrs. H. Venlkatramiah & Sons, Vidyanidhi Book Depot, Mysore South India.
Messes. Panchayat Samachar, Gutala, West Godavari district.
Mcssrs, Book-Lovers' Private, Limited, Guntur and Hyderabad.
Sri D. Sreekrishnamurthy, Ongole, Guntur districts
Messrs, Janatha Agencies, Booksellers, Gudar. -
Messes. M. Sheshachalam & Co., Masalipatnam, Krishna district.
Messrs. The Commercial Links, Goscrnorpet, Vijayavada, Krishna district
Messts. Triveni Publishers, Masulipatnam, krishna district.
Mcssrs. Jain Book Agency, New Delhi-1,
Messrs. International Book House, Trivandrum.
Messrs. The Crystal Press Booksellers, Marthandam P.O., S. Travancore.
Messrs. The Book and Review Centre, Vijayavada.
Messes. The B.H.U. Press Book Depot, Banares.
Mcssrs. B. S. Jain & Co., 71, Abupura, Muzafarnagar (U. P.)
Messrs. Andhin University General Co-operative Stores Limited, Waltir.
Messrs. Balakrishna Book Co., Karatganj, Lucknow.
கலைக்கதிர் அச்சகம், கோயமுத்தூர்-1.