கணினி களஞ்சியப் பேரகராதி-1./H
H
H : எச் (பதினாறிலக்கம்) : ஒரு பதினாறிலக்க எண்ணைக் குறிக்கும் குறியீடு. எடுத்துக் காட்டு : 09 என்பது 9 என்பதன் எண்மான மதிப்பளவு.
H. 324 : ஹெச். 324 : பாட்ஸ் இணக்கி (POTS modem) வழியாக ஒளிக்காட்சித் தரவு மற்றும் குரல் ஆகியவற்றை ஒரே நேரத்தில் அனுப்புவதற்கான, பன்னாட்டுத் தொலைத் தொடர்புச் சங்கத்தின் தர வரையறைகள்.
hack1 : ஏனோதானோ; சிரத்தை யற்ற, அரைகுறை : 1. நேர்த்தியான தீர்வு காணப் பொறுமையின்றி கணினி நிரலிலுள்ள கட்டளைகளை அவசர கோலமாய் மாற்றியமைத்தல். 2. அரைகுறை வேலை.
hack2 : அரைகுறை : 1. படைப் பாக்கக் கூர்மதியுடன் ஒரு சிக்கலை அல்லது ஒரு திட்டப் பணியை அணுகுதல். 2. ஒர் இயக்க முறைமை அல்லது ஒரு பயன்பாட்டுத் தொகுப்பின் கட்டளையைத் திருத்தி, அதன் இயல்பான செயல்பாட்டை மாற்றியமைத்தல்.
hacker : ஹாக்கர்; ஆர்வலர்; குறும்பர் : 1. கணினியைப் பயன்படுத்துவதில் பட்டறிவு உள்ள, வேறுபாடான சிக்கல்களை கணினி மூலம் தீர்ப்பதில் ஆர்வம் உள்ள, கணினி ஆர்வலர். குறைந்த திட்டமிடலுடன் நிரலாக்கத் தொடர்களை உரு வாக்குபவர். கணினி ஜங்கி என்றும் அழைக்கப்படுபவர். ஆர்வலருக்கு கணினிகள் மற்றும் நிரலாக்கத் தொடர்களில் ஆர்வம் உண்டு. ஆனால் அறிவியல் கோட்பாடுகளில் கவனம் இருக்காது. 2. தீங்கு செய்ய வேண்டுமென்றோ அல்லாமலோ மற்றவரது கணினி அமைப்புகளில் வேண்டு மென்றே நுழைபவர்.
HAGO : ஹேகோ : நல்லதைப் பெறுக என்று பொருள்படும் Have A Good One என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும் பெயர். இணையத்தில் மின்னஞ்சலின் இறுதியிலோ, அரட்டையின் முடிவிலோ பயன்படுத்தப் படும் சொல்.
hairline : மயிரிழை : ஒர் அச்சிட்ட பக்கத்தில் அச்சிடப்படும் மிக மெல்லிய கோடு அல்லது திரையில் காட்டப்படும் குறைந்தபட்ச மெல்லிய கோடு. மயிரிழையின் அளவீடு, பயன்
படுத்தப்படும் மென்பொருள், வன்பொருள் அல்லது தொழில் நுட்பத்தைச் சார்ந்தது. அமெரிக்க நாட்டின் அஞ்சல் துறை மயிரிழை என்பதை 0. 5 பாயின்ட் (ஏறத்தாழ 0. 007 அங்குலம்) என வரையறுத் துள்ளது. ஆனால் கிராஃபிக்ஸ் ஆர்ட்ஸ் டெக்னிக்கல் ஃபவுன்டேஷன் (GATF) மயிரிழை என்பது 0. 003 அங்குலம் என வரையறுத்துள்ளது.
H KEY : ஹெச் விசை : கையாள் விசை எனப் பொருள்படும் Handle Key என்பதன் சுருக்கச் சொல்.
HAL : ஹால் : ஆர்தர் கிளார்க்கின் "2001" என்ற நாவலில் வரும் கொல்லுதற்குரிய கணினியின் பெயர்.
half : பாதியளவு; அரை : ஒர் இடையீடு, பிழை அல்லது அறிவுறுத்தத்தினால் உண்டாக்கப்படும் ஒரு செயல்முறையின் நிறைவேற்றத்தில் ஒரு முடிவு.
half adder : அரைக்கூட்டி : இரண்டு இரும துண்மிகளைக் கூட்டும் திறனுள்ள கணினி மின்சுற்று.
half adder, binary : இரும அரைக் கூட்டி
half-duplex : பாதி இருவழி; அரை இருவழிப்பாதை : இரண்டு திசைகளில் தகவல் தொடர்பை அனுப்பும் திறனுள்ளது. ஆனால் ஒரு நேரத்தில் ஒரு திசையில் மட்டுமே செலுத்தும்.
half-duplex transmission : அரை இருதிசை அலைபரப்பு : ஒரு நேரத்தில் ஒரு திசையில் மட்டும் நடைபெறும் இருவழி மின்னணு உத்தரவு தொடர்பு.
half-height : பாதி உயரம் : ஒரு தாழ்ந்த உயர வட்டு இயக்கி. பழைய பாணி வட்டு இயக்கிகள் 8-10 செ. மீ. உயரம் உடையவை. பாதி உயர இயக்கிகள் 4-5 செ. மீ. உயரமானவை. முதல் தலைமுறை இயக்கிகளின் பாதியளவு செங்குத்து இடைவெளியை கொண்டவை. 5. 2" வட்டு இயக்கி. இது 1⅝" உயரமமும் 5. 75" அகலமும் உடையது
half-height drive : அரை உயர இயக்ககம் : இயக்ககங்களின் தலைமுறையைக் குறிக்கும் சொல். முந்தைய தலைமுறை சார்ந்த இயக்ககத்தின் உயரத்தில் பாதி உயரம் கொண்ட இயக்ககத்தைக் குறிக்கும் சொல் தொடர்.
half information : உதவித் தகவல்.
half instruction : பாதி கட்டளை; நிறுத்தும் ஆணை : ஒரு செயல் முறையினை கையால் நிறுத்தும் வரை அதன் நிறைவேற்றத்தை நிறுத்தி வைக்கிற செயல் முறைக் கட்டளை.
half menu : துணைக் கட்டளைப் பட்டியல்.
half router : அரைத் திசைவி : ஒர் இணக்கியைப் பயன்படுத்தி, ஒரு குறும்பரப்புப் பிணையத்தை தகவல் தொடர்புத் தடத்தில் (இணையத்தில் இணைப்பது போன்று) இணைக்கும் ஒரு சாதனம்.
half subtractor : அரைக் கழிப்பி.
halftone : நுண்பதிவுப் படம் : ஒரு ஒளிப்படத்தை அல்லது உருவப் படத்தை சம இடை வெளியில் அமைந்த வேறுபட்ட அளவுகளில் அமைந்த புள்ளிகளைக் கொண்ட நகலாகப் படியெடுத்தல். ஒளிப் படத்திலுள்ள ஒளி மாறுபாட்டு அளவுகளை சாம்பல் நிறச் சாயையில் காட்டுவது. உருவப்படத்தில் சற்றே இருள் சாயலுள்ள பகுதியிருப்பின், நுண்பதிவுப் படத்தில் அமையும் புள்ளி பெரிதாக இருக்கும். மரபு வழியிலான பதிப்புத் துறையில், உருவங்களை ஒர் இடைத்திரையின் வழியாக ஒளிப்படம் எடுத்து இத்தகைய நுண்பதிவுப் படங்களை உருவாக்குவர். கணினிப் பதிப்புத் துறையில் நுண்பதிவுப்படப்புள்ளி என்பது ஒளியச்சுப்பொறி அல்லது இலக்கமுறை உருச்செதுக்கி (Image setter) யால் அச்சிடப்பட்ட புள்ளிகளின் தொகுப்பாக இருக்கும். இரண்டு முறையிலும் நுண் பதிவுப் படப்புள்ளிகளின் எண்ணிக்கை ஒர் அங்குலத்தில் இத்தனை வரிகள் என அளவிடப்படுகிறது. அதிகத் தெளிவுள்ள அச்சுப்பொறியெனில் அதிகப் புள்ளிகள் இடம் பெற்று படத்தின் தரம் மிகும்.
half toning : மங்கல் முறை : கறுப்பு-வெள்ளை காட்சிப் பின்னணியில் கிரே அளவுகளை உருவாக்க மாறும் அடர்த்தியில் புள்ளி அமைப்புகளைப் பயன் படுத்துதல்.
halfword : அரைச்சொல் : கணினி கையாளும் சொல்லின் பிட் (துண்மி) எண்ணிக்கையில் பாதி. ஒரு சொல் 32 துண்மிகள் (பிட்) எனில் அரைச் சொல் என்பது 16 துண்மி (பிட்) களை அல்லது இரண்டு பைட்டு களைக் கொண்டிருக்கும்.
halt : நிறுத்துகை. halting problem : நிறுத்துச் சிக்கல் : அல்கோரிதம் இல்லாத தீர்வு காணத் திட்டம் இல்லாத சிக்கல்.
halt instruction : நிறுத்துகை ஆணை.
hammer : சுத்தியல் : ஒர் அச்சடிப்பியில், தட்டச்சு முகப்பை நாடாவுக்கும் காகிதத்துக்கு மிடையில் நகர்த்துகிற அல்லது காகிதத்தை நாடாவுக்கும் தட் டச்சு முகப்புக்கும் இடையில் தள்ளிவிடுகிற செயல்முறை.
hamming code : ஹாமிங் குறியீடு; ஹாமிங் குறிமுறை ஹாமிங் சங்கேதம் : தானாகவே பிழை திருத்திக் கொள்ளும் ஏழு துண்மி பிழைதிருத்தும் தரவுக் குறியீடு.
hand calculator : கைக் கணிப்பி : கையில் வைத்துக் கொள்ளக் கூடிய கணிப்பி. சிக்கலான கணக் கீடுகள் உட்பட கணிதச் செயல்பாடுகளைச் செய்ய ஏற்றது.
hand-device : கைச் சாதனம்.
hand-held computer : கையகக் கணினி; கையடக்கக் கணினி : எடுத்துச்செல்லக்கூடிய, பேட்டரியால் இயங்கும் கணினி. பேசிக் மொழி மூலம் நிரலாக்கத் தொடர் அமைத்து பலவகையான பணிகளுக்குப் பயன்படுத்தலாம். Packet Computer என்றும் அழைக்கப்படுகிறது.
hand-held scanner : கைப்பிடி நுண்ணாய்வுக் கருவி : ஒர் உருக் காட்சியை நுண்ணாய்வு செய்வதற்குக் கையினால் இயக்கப்படும் ஒர் ஒளியியல் நுண்ணாய்வுக் கருவி. நுண்ணாய்வுத் தலைப்பின் அடியிலுள்ள சிறிய உருளைகள் கையசைவினை நெறிப்படுத்துகின்றன.
hand pointer : கைச் சுட்டு முனை : விண்டோஸ்-3. 1 மற்றும் பிற விண்டோஸ் சார்ந்த, உள்ளுக்குள் நேரடி உதவிச் சாதனம் கொண்டுள்ள பொருள்களுடன் பணியாற்றுகையில், தொடர் புடைய உதவித் தலைப்புகளுக் கிடையில் நீங்கள் தாவும்போது தோன்றும் சுட்டுமுனை வடிவம்.
hand scanner : கை நுண்ணாய்வுக் கருவி : பிற கணினி மென்பொருள்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள ஆவணங்களுக்காக உருக்காட்சிகளை நுண்ணாய்வு செய்வதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு சாதன்ம். படங்களை வாசகத்துடன் இணைப்பதற்குப் பயன் படுத்தப்படுகிறது.
handle கைப்பிடி : ஒரு கோப்பினை அணுகுவதற்கு இயல்விக்கிற ஒரு மதிப்பளவு (இது ஒரு மாறிலியில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும்). கணினி வரைகலையில், உருக்காட்சியை நகர்த்துவதில் அல்லது மறு உருவாக்கத்தில் ஒர் உருக்காட்சி யுடன் இணைக்கப்பட்டுள்ள ஒரு நுண்ணிய சதுரம். ஒரு சறுக்குச் சட்டத்தை இதன்மீது நகர்த்தி, ஒரு விசையை அல்லது கட்டுப் பொறியினை அழுத்துவ தன் மூலம் கைப்பிடி தேர்ந் தெடுக்கப்படுகிறது. ஒரு கோப்புக்குக் குறித்தளிக்கப்பட்டுள்ள ஒரு தற்காலிகப் பெயர்.
handler : கையாளி : ஒரு குறிப் பிட்ட உள்ளீடு, வெளியீடு, சேமிப்பகச் சாதனம். கோப்பு அல்லது நிறுத்தும் வசதியினைக் கட்டுப்படுத்துவதற்கென்றே உருவாக்கப்பட்ட நிரலாக்கத் தொடர்.
handset : ஒலியுறுப்பு : ஒலி பெருக்கியும், ஒலி வாங்கியும் கொண்டிருக்கிற தொலைபேசியின் உறுப்பு.
handshaking : கைகுலுக்கல்; கைகுலுக்கல் முறை : தரவுத் தொடர்பை ஏற்படுத்திக்கொள்ள இரண்டு கணினிகள் அல்லது ஒரு கணினியும் ஒரு வெளிப் புறச் சாதனமும் ஏற்படுத்திக் கொள்ளும் நடைமுறைகள்.
handsharing logic : கைகுலுக்கல் தருக்க முறை : நிறை வேற்றப்பட்டுள்ள இனங்கள் பற்றிக் கணினி பதில் சைகை அனுப்புகிற ஒருவகைக் கணினி இடை முகப்பு வடிவமைப்பு.
hands-on கைகளால் : கை வைத்த செயல் சார்பான : ஒரு கணினி அமைப்பை நேரடியாகப் பயன்படுத்துவது பற்றியது.
handwriting recognition : கையெழுத்துக் கண்டறிதல், கையெழுத்து அறிதல் : ஒரு கையெழுத்தைச் சோதிக்க அல்லது தரவு உள்ளடக்கத்தைக் கண்டறிய கணினி கட்டுப்பாட்டு துண் ணாய்வுச் சாதனம் (ஸ்கேனர்) மூலம் கையெழுத்தை நுண் ணாய்வு (ஸ்கேனிங்) செய்வது.
hang : தொங்கல் : விசைப் பலகை செயற்படாமல் கணினி திடீரென நின்றுவிடும்போது ஒரு பொறியமைவு தொங்கி விட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் வெளி வரு வதற்கான ஒரே வழி கணினியை நிறுத்திப்பின் திரும்ப இயக்குதல் (Boot) ஆகும்.
hanging indent : தொங்கல் வரிப்பத்தி : ஒரு பத்தியிடும் முறை. இதில், முழு அளவு முதல் வரியும், உள்ளடங்கிய அடுத்த வரிகளும் அடங்கியிருக்கும்.
hanging paragraph : தொங்கல் பத்தி : அச்சுக்கலையில் முதல் வரி இடது ஒரத்திலிருந்து தொடங்கி, இரண்டாவது வரி யும், பின்வரும் வரிகளும் உள் ளடங்கியதாகவும் இருக்கும் வாசகப் பத்தி அமைப்பு.
hang - பp : தொங்க வை : தொங்கல் : ஒரு வாலாயமாக (ரொட்டீன்) நிரலாக்கத்தொடர் அமைக்கப்படாத நிறுத்தம். சிக்கலைச் சரியாகக் குறியீடு செய்யாத தாலோ, எந்திரக் கோளாறாலோ அல்லது சட்டவிரோதமான அல்லது இல்லாத குறியீட்டைப் பயன்படுத்துவதாலோ விரும் பத் தகாத அல்லது எதிர்பாராத ஒரு நிறுத்தம்.
hard card : வன் அட்டை : சொந்தக் கணினியில், ஒரு நிலை வட்டினைக் கொண்டிருக்கிற ஒரு செருகு அட்டை வடிவிலுள்ள துணைநிலை நினைவகம். ஒரு வன்அட்டை 20-40 MB திறம்பாடு உடையது. ஒரு கணினி நினைவகத்தில் விரை வாக விரிவாக்கம் பெறுவதற்கு இது பயனுள்ள வழி.
hard clip area : தாளின் வரை பரப்பு : ஒரு இலக்கவியல் வரைவியில் ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு மேல் கோடு போகாத நிலை.
hard coded : நிலைக் குறியீடு : ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான சாதனங்களை மட்டுமே கொண்டு ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பணிகளைச் செய்கிற மென்பொருள். எடுத்துக்காட்டு : வேறு எந்த, வகைகளையும் அனுமதிக்காமல், இரண்டு வகை அச்சடிப்பி களால் மட்டுமே ஒரு செயல் முறையை எழுதுதல். சிக்கல் களுக்கான நிலைக்குறியீட்டுத் தீர்வுகள் பெரும்பாலும் துரித மானவை. ஆனால், இவை எதிர் கால நெகிழ்திறனை அனுமதிப் பதில்லை.
hard configuration : வன் தகவமைவு.
hard contact : வன் தொடர்பு அச்சுமுறை : தேவையான அழுத்தத்துடன் அழுத்தி தொடர்பு முறையில் அச்சிடுவது.
hard copy : உண்மை நகல்; தாள் படி அச்சு நகல் : அறிக்கைகள், பட்டியல்கள், ஆவணங்கள் அல்லது குறிப்புரைகள் போன்ற படிக்கக்கூடிய வடிவிலுள்ள எந்திர வெளியீட்டின் அச்சிடப்பட்ட பிரதி. Soft Copy-க்கு எதிர்ச் சொல்.
hard disk : நிலை வட்டு : வேகமான துணைசேமிப்பகச் சாத னம். கணினியின் உள்ளே நிரந்தரமாக அமைக்கப்படும் அல்லது
ஒரு தனிப் பெட்டியில் வைக்கப் படும். வாைவியைப்போன்று பல மில்லியன் எழுத்துகள் அல் லது எண்மி (எட்டியல்) களைச் சேமிக்கும் திறன் ஒரு தனி நிலை வட்டுக்கு உள்ளது. Floppy disk என்பதற்கு எதிர்ச்சொல்.
hard disk backup programme : நிலை வட்டுக் காப்பு நிரல்.
hard disk controller : நிலை வட்டுக் கட்டுப்படுத்தி : ஒரு நிலை வட்டு இயக்கிக்கு ஒர் இடைமுகப்பினை அளித்து, அதனை மேற்பார்வையிடுகிற மின்னணுவியல் சுற்றுநெறி. சுருக்கம் : HDC இதில் பல வகைகள் பயன்பாட்டில் உள்ளன. எடுத்துக்காட்டு : ESD, MFM, SCSI, ST 506.
hard disk drive : நிலைவட்டு இயக்கி : ஒரு நிலை வட்டுக்கு எழுத்து படிப்புச் செயற்பாடுகளைச் செய்கிற ஒரு மின் எந்திரவியல் சாதனம். இதில் குறைந்தது ஒரு எழுத்து / படிப்பு முனை இருக்கும். இது, வட்டிலுள்ள வட்டினை அணுகி, அதனை நாளது தேதிவரைப் புதுப்பிக்கிறது. வட்டு இயக்கியானது, வட்டின் தட்டினை நிமிடத் திற்கு 3, 600 சுழற்சிகள் என்ற வேகத்தில் சுழற்றுகிறது. இதனால், வட்டின் எல்லாப் பகுதிகளும், துரித இடைவெளி களில் எழுத்து /படிப்பு முனை யின் கீழ் வருகின்றன. சுருக்கப் பெயர் : HDD.
hard disk measurements : நிலை வட்டு அளவைகள் : திறம்பாட்டளவு ஒரு வினாடிக்கு எத்தனை எட்டியல்கள் என்ற வீதத்திலும், மில்லி வினாடிகளிலும் அள விடப்படுகின்றன. இது "அணுகு நேரம்" (Access time) எனப்படும் அதிவேக சொந்தக்கணினி நிலை வட்டு அணுகு நேரங்கள் 12 முதல் 28 ms வரை வேறுபடும். மற்றக் கணினிகளில் வேகம் Ims.
hard disk store : நிலைவட்டுச் சேமிப்பு : தன் அலகுக்குள் முத்திரையிடப்பட்டுள்ள ஒரு வட்டு. இந்த வட்டினை அகற்ற முடியாதாகையால் எழுத்து/ படிப்புமுனை அதன் மேற்பரப்புக்கு மிக அருகில் இருக்கும்; தடங்களை அடர்த்தியாகச் செறிவாக்கம் செய்யலாம். துல்லியத் தொழில் நுட்பம் காரணமாக ஒரு படியெடுப்பு நெகிழ் வட்டினைவிட ஒரு நிலை வட்டு மிக அதிகத் திறம்பாடு கொண்டதாக இருக்கிறது. இது, நுண் சாதனங்களுக்கான 300 அல்லது அவற்றுக்கு மேற்பட்ட மெகா எட்டியல்களைக் கொண்டது. நெகிழ் வட்டுகளைப் போலவே, இதிலும் மென் பொருள் ஆணைகள்மூலம் செய்திக் குறிப்புகளையும், செயல் முறைகளையும் சேர்க்கலாம். நிலைவட்டுகளை"வின்செஸ்டர் வட்டு இயக்கிகள் (Windchester disk drives) என்றும் அழைப்பர்.
hard disk type : நிலை வட்டு வகை : ஒரு நிலைவட்டு எந்த வகையைச் சார்ந்தது என்பதைக் கணினிக்குத் தெரிவிக்கும் ஒரு எண் அல்லது சில எண்கள். நிலைவட்டிலுள்ள எழுத்து/ படிப்பு முனைகளின் எண்னிக்கை, உருளைகளின் (Cylinders) எண்ணிக்கை ஆகியவற்றை அவ்வெண்கள் குறிக்கின்றன. நிலைவட்டின் வகையைக் குறிக்கும் இவ்வெண்கள் வட்டின் மீதுள்ள பெயர்ச் சீட்டை எழுதப்பட்டிருக்கும். கணினியில் வட்டினை நிறுவும்போது அவ்வெண்களை கணினியில் உள்ளீடாகத் தரவேண்டும். சீமாஸ் அமைப்பு நிலை நிரலில் அவற்றைத் தர வேண்டியிருக்கும்.
hard error : வன் பிழை : கருவிப் பிழை : வன்பொருளில் ஏற்படும் கோளாறால் உண்டாகின்ற பிழை.
hard failure : கருவிப் பழுது; கருவிக் கோளாறு : கருவியின் ஒரு பகுதியில் ஏற்படும் கோளாறு. அதை மீண்டும் பயன்படுத்த வேண்டுமானால் பழுது பார்க்க வேண்டும்.
hard hyphen : எந்திரக்கோடு : வன் இணைகுறி, கட்டாய
ஒட்டுக் குறி : எழுத்துக்கூட்டும் போது போட வேண்டிய சிறிய இடைக்கோடு. 11 துளை போன்றவற்றில் இதைப் பயன் படுத்துவார்கள். எப்போதும் அச்சிடப்படும். Soft Hyphen-க்கு எதிர்ச்சொல்.
hard page break : வன்பக்க முறிப்பு.
hard return : வன் மீள்வு; கட்டாய முறி : மீள்வு விசையை அழுத்தி ஒரு வாசக ஆவணத்தில் பதிவு செய்யப்படும் குறியீடு. DOS, OS/2 வாசகக் கோப்பு கள் ஒரு CRILF இணையினைப் பயன்படுத்துகின்றன. இதனைத் திரையில் கண்ணுக்குப் புலனா கும் ஒரு மாறி குறியீடாகக் காட் டலாம். அல்லது கண்ணுக்குப் புலனாகாத குறியீடாகவும் இருக்கலாம். இது, "மென் மீள்வு" (soft return) என்பதிலிருந்து மாறுபட்டது.
hard sector : வன் பகுதி : நெகிழ்வட்டில், உற்பத்தி செய்யப்படும்போதே அமைக்கப்படும் ஆப்பு வடிவ சேமிப்புப் பிரிவு. பல்வேறு பதிவுகளைக் குறிப்பிட வட்டில் துளைகளிட்டு அடையாளப்படுத்தப்படுகிறது. soft sector-க்கு எதிர்சொல்.
hard SectOred diSk : வட்டப் பிரிவு துளைவட்டு : வட்டிலுள்ள ஒவ்வொரு வட்டப் பிரிவின் தொடக்கத்தையும், உணர்விகள் (sensors) அடை யாளம் காண்பதற்கு ஏதுவாக, துளையிடப்பட்டுள்ள நெகிழ் வட்டு.
hard space : கட்டாய இடைவெளி; வன் இடவெளி : சொல் பகுப்பானில் இந்த இடவெளி, வாசகத்தின் பொருளுக்கு மிக முக்கியமானதாகும். எடுத்துக் காட்டு : "திரு ரஜ்னி" என்ற பெயரை இரண்டு வரிகளாகப் பிரிப்பது தவறான முறை யாகும். இரு சொற்களுக்கு மிடையில் ஒரு கட்டாய இட வெளியைச் செருகுவதன்மூலம் இரு சொற்களையும் ஒரே சொல்லாகக் கருத முடியும்.
hardvard mark - | : ஹார்ட்வர்ட் மார்க் | : "ஹார்ட்வர்ட்ஸ் ஹோ வர்ட்" (அய்க்கென்) என்ற அமைவனத்தின் கோட்பாட்டினை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட ஒரு மின் எந்திரவியல் கணினி.
hardware : வன் பொருள்; வல்லியல்பு; வன்சாதனம் : உருப் பொருள், இயங்கு பொருள், செயல் உறுப்பு, மின்னணு, காந்த, மற்றும் எந்திரச் சாதனங்கள் போன்ற பருப்பொருள், Software - உடன் வேறுபடுத்திப் பார்க்க.
hardware abstraction layer : வன் பொருள் கருத்தியல் அடுக்கு : விண்டோஸ் என்டி போன்ற உயர்நிலை இயக்க முறைமை களில், சில்லு மொழிக் (Assembly Language) கட்டளைகளை பிரித்துத் தரும் அடுக்கு. வன்பொருள் கருத்தியல் அடுக்கு, பயன்பாட்டு நிரலாக்க இடைமுகம் (Application Programming Interface-API) போலவே செயல்படுகிறது. சாதனம் சாரா (device independent) பயன்பாடுகளை உருவாக்க நிரலர்கள் இவ் வடுக்கினைப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.
hardware cache : வன் பொருள் இடை மாற்றகம்.
hardware check : வன்பொருள் சரிபார்ப்பு : கணினியின் உள் செயல்பாட்டில் ஏற்படும் பிழை அல்லது சிக்கலைக் கண்டறிய கணினி வன்பொருள் தானா கவே மேற்கொள்ளும் சரிபார்ப்பு (பரிசோதனை) நடவடிக்கை.
hardware configuration : வன்பொருள் அமைப்பு; வன்சாதன உருவமைப்பு : கணினி அமைப்பை உருவாக்கும் பல் வேறு கருவிகளின் பகுதிகளை ஒழுங்குபடுத்துவதும் அவற்றுக் கிடையிலான உறவுகளும். இதில் கம்பிகளும், தரவுத் தொடர்புப் பாதைகளும் அடங்கும்.
hardware conflict : வன்பொருள் முரண்பாடு.
hardware-dependent : வன்பொருள் சார்பி; வன்பொருள் சார்ந்த : ஒரு குறிப்பிட்ட கணினி அமைப்பில் மட்டுமே செயல்படக்கூடிய நிரல்கள், மொழிகள், சாதனங்கள் மற்றும் பிற கணினி உறுப்புகள். எடுத்துக்காட்டாக, சில்லு மொழி (Assembly Language) ஒரு வன் பொருள் சார்பியாகும். பொறி மொழி (Machine Language), ஒரு குறிப்பிட்ட வகை நுண்செயலிக் கென உருவாக்கப்பட்டு அதில் மட்டுமே செயல்படக்கூடியதாகும்.
hardware description language : வன்பொருள் விவரிப்பு மொழி : இலக்கமுறை கணினி அமைப்புகளுக்கு ஆவணப்படுத்தல், வடி வமைப்புபோல அமைத்தல் மற்றும் உற்பத்தி செய்தலுக்கு உதவும் மொழி மற்றும் எண்களமைப்பு.
hardware dump, automatic : தானியங்கு வன்பொருள் திணிப்பு : தானியங்கு வன் பொருள் கொட்டல்.
hardware failure : வன்பொருள் செயல் நிறுத்தம் : மின்னணு வியல் சுற்றுவழிகளில் அல்லது
மின் - எந்திரவியல் உறுப்புகளில் (வட்டுகள், நாடாக்கள்) அல்லது ஒரு கணினிப் பொறியமைவில் செயற்பணிகள் தவறாக நடைபெறுதல். இது "மென்பொருள் செயல் நிறுத்தம்" (software failure) என்பதிலிருந்து மாறுபட்டது.
hardware flow control : வன்பொருள் பாய்வுக் கட்டுப்பாடு.
hardware interrupt : வன் பொருள் குறுக்கீடு : வன் பொருள் செயற்பாட்டினால் ஏற்படும் இடைத் தடுப்பு. இது புற நிலைச் சாதனத்தால், ஆதாரச் சிப்புகளில் அல்லது மையச் செயலகத்தில் (CPU) ஏற்படலாம்.
hardware key : வன்பொருள் விசை; வன்பொருள் சாவி : சட்ட விரோதமாக மென்பொருளைப் படியெடுத்துக் கொள்வதைத் தடுக்கும் வழி. ஒரு கணினியின் விரிவாக்கப்பகுதி அல்லது போர்ட்டில் பொருத்தி, நிரலாக்கத் தொடர் களவுத் தடுப்பு மென்பொருளுடன் சேர்ந்து மட்டும் இயங்கக்கூடியது.
hardware monitor : வன்பொருள் திரையகம் : ஒரு கணினியின் செயல்திறனைப் பகுப்பாய்வு செய்வதற்காக அதனுடன் சுற்று வழிகளுடன் இணைக்கப்பட்டுள்ள சாதனம்.
hardware profile : வன்பொருள் குறிப்புரை : ஒரு கணினிக் கருவி பற்றிய வரையறைகள் மற்றும் பண்பியல்புகள்பற்றிய ஒரு தரவுத் தொகுப்பு. புறச்சாதனங்களைக் கணினியுடன் இணைத்துச் செயல்பட வைக்க, இந்தத் தரவுக் குறிப்புரையின் அடிப்படையிலேயே கணினியில் வரையறுப்புகள் செய்து தயார் படுத்த வேண்டும்.
hardware reliability : வன் பொருள் நம்பகம் : வன்பொருள் தன் செயற் பணிகளை குறிபபிட்ட கால அளவுகளுக்குச் செய்யும் திறம்பாடு உடையது எனக் கூறும் ஒர் அறிக்கை.
hardware reset : வன்பொருள் மீட்டமை.
hardware resources : வன் பொருள் மூலாதாரங்கள்; வன் பொருள் வளம் : மையச் செயலக நேரம், உள் சேமிப்பக இடம், நேரடி அணுகு இருப்பக இடம், உள்ளீடு, வெளியீடு சாதனங்கள் ஆகிய அனைத்தும் இருந்தால்தான் தரவு செயலாக்கம் தானியங்கியாகவும், திறனுடையதாகவும் இருக்கும்.
hardware scrolling : வன் பொருள் சுருளாக்கம் : ஒளிப் பேழைச் செங்குத்துச் சுருளாக்க உத்தி. இது, தரவுக் காட்சியாகக்
காட்டும் ஒளிப்பேழை இடைத் தடுப்பில் உள்ளடக்கங்களை மாற்றுவதற்குப் பதிலாக, தொடக்க நிலையை மாற்று வதன் மூலம் செயற்படுகிறது.
hardware security : வன்பொருள் பாதுகாப்பு : கணினிக்குப் பாதுகாப்பளிப்பதற்காக வரம்புகள், பதிவேடுகள், பூட்டுகள் போன்ற வன்பொருள்களைப் பயன் படுத்துதல்.
hardware specialist : வன் பொருள் வல்லுநர் : ஒரு கணினி அமைப்பின் கருவிகளைப் பராமரித்து, பழுதுகளைக் கண்டறிந்து சரி செய்யும் நபர்.
hardware tree : வன்பொருள் மரவுரு : விண்டோஸ் 95 இயக்க முறையில், கணினி அமைப்பின் வன்பொருள் சாதனங்களின் வரையறைகள், தேவைகள் பற்றிய தரவுகள் அடங்கிய ஒரு தரவுக் கட்டமைவு (data structure). ஒரு மரத்தில் வேரில் தொடங்கி, கிளை பிரிவது போன்ற கட்டமைப்பைக் கொண்டிருக்கும். அதிலுள்ள ஒவ்வொரு கணுவும் (nodes) இயங்கும் ஒரு சாதனத்தைச் சுட்டுகிறது. இந்த வன்பொருள் மரவுரு அமைப்பு இயங்குநிலை யிலேயே வடிவமைக்கப்படு கிறது. ஒவ்வொருமுறை விண்டோஸ் 95 இயக்கப்படும் போதும் இந்தப் பட்டியல் புதுப் பிக்கப்படுகிறது. இந்த மரவுருப் பட்டியலே விண்டோஸ் 95 முறைமையின் இணைத்து இயக்கு (plug and play) திறனை or இயல்விக்கிறது.
hardware virtual memory : வன் பொருள் நடைமுறை நினைவகம் : ஒரு சிப்புவினுள் அமைக்கப்பட்டுள்ள நடைமுறை நினைவக மேலாண்மை. நடைமுறை நினைவகத்தை மென்பொருளி னால் மட்டுமே இயக்கமுடியுமாயினும் இதனை வன்பொருளால் செய்வது அதிகத் திறனுடையதாக இருக்கும்.
hardware windowing : வன் பொருள் சாளரமாக்கும்.
hardwired : கம்பிவழி; கம்பி மூலம் : இரண்டு மின்னணுக் கருவிகளுக்கிடையில் கம்பி மூலம் இணைப்பு அளிப்பது குறித்தது.
hardwired logic : வன்கம்பியாகக்கிய தருக்கமுறை : ஒருங்கிணைந்த சுற்று வழியில் (அல்லது சிப்பு வில்) உற்பத்தியாளரினால் உள் முகமாக அமைக்கப்பட்டுள்ள தருக்கமுறை. இது வாயில்களுக் கிடையிலும், வாயில்களிலும் அமைக்கப்பட்டுள்ள கம்பியிணைப்பினைக் குறிக்கிறது. harmonic distortion : ஒத்திசைவுத் திரிபாக்கம் : செய்தித் தொடர்புகளில், அனுப்பீட்டுக் கம்பிகளில் சீர்கேடு காரணமாக மூல அலைவெண்ணின் மடங்குகளாக உருவாக்கப்பட்ட அலை வெண்கள்.
harness : வடக்கம்பிக்கட்டு; வடக் கம்பித் தொகுதி : தனிக் கம்பிகளை ஒன்றாக இணைத்த தொகுதி.
Harvard architecture : ஹார்வார்டு கட்டுமானம் : நுண் செயலிக் கட்டுமானத்தில் ஒரு வகை. நினைவகத்திலிருந்து ஆணைகளைக் கொணரவும், தரவுவை எழுத/படிக்கவும் தனித்தனிப் பாட்டைகளைக் கொண்டிருக்கும். ஒரேநேரத்தில் நினைவகத்திலிருந்து ஆணையைக் கொணரவும், தரவுவை எழுத/படிக்கவும் முடியும் என்பதால், செயலியின் செய்திறன் வீதம் அதிகரிக்கிறது. இக்கட்டு மானமுறை நினைவக வடிவமைப்பை உச்சதிறன் உடைய தாக்கவும் வழி வகுக்கிறது. எப்படியெனில், ஆணைகள் எப்போதும் ஒன்றன்பின் ஒன்றாக வரிசையாய்க் கொணரப்படுகின்றன; ஆனால் தரவுவைப் படிப்பதோ எழுதுவதோ குறிப்பின்றி (Randomly) நடைபெறுகிறது.
Harvard Graphics : ஹார்வார்ட் வரைகலை : "சாஃப்ட்வேர் பப்ளிஷிங் கார்ப்பரேஷன்" என்ற அமைவனம் உருவாக்கியுள்ள சொந்தக் கணினி வணிக வரை கலை. இது முதலில் தயாரான வணிக வரைகலைத் தொகுதிகளில் ஒன்றாகும். இது, வாசக வரைபடங்களிலிருந்து விடு பட்ட பத்தியை உருவாக்கு கிறது.
HASCI : ஹஸ்கி : Human Applications Standard Computer interface என்பதன் குறும்பெயர். இது ஒரு விசைப்பலகை அமைப்பு முறையாகும்.
hash : ஹாஷ் : திரையில் காட்சி அசையாது நிற்றல்.
hashed random file organisation : கதம்பக் குறிப்பற்ற கோப்பு அமைப்பாக்கம் : தரவுகளைச் சேமிப்பதற்கான/மீட்பதற்கான ஒரு முறை.
hashing : அடையாள வழிகாட்டல்; துண்டாடல் : முகவரி மாற்றலுக்கான விசை. இதில் தரவுகளில் இருப்பிடத்தை விசையே முடிவு செய்யும்.
hashing algorithm : தற்சார்பு முகவரியாக்க படிநிலை முறை : 'k' என்ற ஒரு குறிப்பிட்ட விசைக்கு f (k). என்ற செயற்பணிகளைக் கொடுக்கிற ஒரு படி நிலைமுறை. Hash Coding என்றும் அழைக்கப்படும்.
hash search : புலத்தேடல்; அடையாள வழி தேடல் : ஒரு தேடல் படிமுறை. ஒரு பட்டியலிலுள்ள ஒர் உறுப்பினை அதன் தற்சார்பு முகவரி கொண்டு கண்டறியும் முறை. இத்தேடல் முறையில் ஏறத்தாழ நேரடியாகவே தேடும் உறுப்பினை அணுக முடியும் என்பதால் இம்முறை மிகவும் திறன்மிக்கதாகக் கருதப்படுகிறது.
hash totals : ஹாஸ் மொத்தங்கள்; புல எண்ணிக்கைகள் : புலங்களை அடையாளம் காணும் எண்களின் மொத்தங்கள். பிழை சோதிப்பதில் பயன்படுத்தப்படுகிறது.
hatching : வரிவேய்தல் : வரிவேய்தல் திசையில் இணைக்கோடுகளில் ஒர் ஒவியத்தின் சில பகுதிக்கு மட்டும் நிழலடித்தல், ஒன்றின் மேல் வேறொரு நிறம் அடிப்பது பல குறுக்கு ஹாட்சிங் எனப்படும்.
hayes compatible : “ஹேய்ஸ்” ஒத்தியல்பு : ஹேய்ஸ் நிரல் மொழியினால் கட்டுப்படுத்தப்படும் மோடெம்களைக் குறிக்கிறது.
hayes smart modem : ஹேய்ஸ் அறிவுத்திறன் மோடெம் : "ஹேய்ஸ் மைக்ரோ கம்ப்யூட்டர் புராடக்ட்ஸ்" என்ற அமை வனம் தயாரித்துள்ள சொந்தக் கணினிகளுக்கான அறிவுத்திறன் மோடெம் குடும்பம். இதனை 1958இல் முதல் தலைமுறை சொந்தக் கணினிகளுக்காக ஹேய்ஸ் உருவாக்கினார். இதன் நிரன்மொழி, தொழில்துறைக் குரிய செந்திற மொழியாகியது. இது ஒர் நிரல் நிலையை உடையது; இது அறிவுறுத்தங்களை ஏற்றுக்கொள்கிறது. நேரடிநிலையில் இது சுழற்றுகிறது, பதிலளிக்கிறது; அனுப்புகிறது; ஏற்கிறது.
hazard : இடர்ப்பாடு : உட்பாட்டு மாறிகளின் நிலை மாறுகிறபோது ஒரு தருக்க முறைச் சுற்று வழி தவறாகச் செயற்படுதல்.
ΗDΒΜS : எச்டிபிஎம்எஸ் : Hierarchical Database Management System என்பதன் குறும்பெயர்.
head : முனை : தலைமுனை : 1. சிறிய மின்காந்த வட்டு, நாடா போன்ற சேமிப்பு ஊடகத்தில் தரவுகளை அழிக்கவும், பதிவு களைப் படிக்கவும் பயன்படும் உறுப்பு. காந்தத் தட்டில் தரவுகளைப் படிக்கவும், எழுதவும், அழிக்கவும் பயன்படுவது. 2. ஒரு பட்டியலின் ஆரம்பத்தை அடை யாளம் காட்டும் சிறப்புத் தரவு.
head cleaning device : முனை தூய்மைப்படுத்தும் சாதனம் :
தூசு நீக்கும் பொருள். நாடா இயக்கி அல்லது ஒரு நெகிழ் வட்டு இயக்கியின் படி/எழுது முனையைத் தூய்மைப்படுத்த அனுமதிக்கிறது.
head crash : முனை மோதல் : ஒரு நிலைவட்டின் பதிவிடும் பரப்புடன் படி/எழுது முனை யுடன் மோதுதல். சிறிய புகை அல்லது தூசு அல்லது விரல் படுவதுபோன்ற சிறிய பொருளால் வட்டு கெட்டுப்போதல்.
header : வழிகாட்டி தலைப்புச் செய்தி : 1. ஒரு செய்தியை அது போய்ச்சேர வேண்டிய இடத்திற்கு வழிகாட்டுவதற்குரிய அனைத்து தரவுகளும் கொண்டுள்ள ஒரு செய்தியின் முதல் பகுதி. 2. ஒரு பக்கத்தின் மேற் புற மூலை.
header card : வழிகாட்டி அட்டை தலைப்பு அட்டை : தொடர்ந்து வரும் அட்டைகளில் உள்ளதைப் பற்றிய தரவுவைத் தரும் அட்டை.
header file : தலைப்புக்கு கோப்பு : ஒரு கோப்பு பற்றிய குறிப்புரையைக் கொண்டிருக்கும் செயல்முறைக்குள் அதன் உள்ளடக்கங்கள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ள ஒரு கோப்பு.
header label : தலைப்பு முகப்புச் சீட்டு : ஒரு காந்த நாடாவிலுள்ள ஒரு கோப்பின் தொடக்கத்தில் சேமித்துவைக்கப்பட்டுள்ள ஒரு முகப்புச் சீட்டுப்பதிவு. இது, கோப்புப் பற்றிய விவரிப்புத் தரவுகளைக் கொண்டிருக்கிறது.
header record : வழிக்காட்டிப் பதிவேடு : தொடர்ந்து வரும் பதிவேடுகளின் தொகுதி பற்றிய நிலையான, பொதுவான அல்லது அடையாளம் காட்டும் தரவு வைக்கொண்டுள்ள பதிவேடு.
head-per-track disk : தடவாரித் தலைப்பு வட்டு : ஒவ்வொரு தடத்தின்மீது நிலைநிறுத்தப்பட்டுள்ள படி/எழுது முனையைக் கொண்டுள்ள வட்டு இயக்கி. இதன் மூலம், தடத்திலிருந்து தடத்திற்கு அணுகு கரம் நகர்வது ஒழிக்கப்படுகிறது.
head-per-track disk drive : தடவாரித் தலைப்பு வட்டு இயக்ககம்; தடத்துக்கொரு முனை வட்டு இயக்ககம் : வட்டி லிலுள்ள ஒவ்வொரு தடத்துக் கும் தனியான படிப்பு/எழுது முனை கொண்ட ஒரு வட்டு இயக்ககம். தகவலைப் படிக்கவும் எழுதவும் ஒரு குறிப்பிட்ட தடத்தை அணுக, வட்டு முனை நகரவேண்டிய தேவையில்லாத காரணத்தால், இத்தகைய வட்டு களில் தேடு நேரம் (seek time) மிகவும் குறைவு. ஆனால்,
படிப்பு/எழுது முனைகளுக்கு செலவு அதிகம் என்பதால், இது போன்ற வட்டு இயக்ககங்கள் அதிகமாகப் புழக்கத்திலில்லை.
head positioning : முனை சரியமர்த்துதல் : நேரடி அணுகு சேமிப்பகச் சாதனத்தில் தரவுகளைப் படி/எழுது முனையைப் பொருத்துதல். ஒரு நகரும் அணுகு கரத்தின் மூலம் செய்யப்படுகிறது.
head, read : படிப்பு முனை
head, read/write : எழுது/படிப்பு முனை .
head set : தலைத் தொகுதி : ஒலிச் சாதனங்கள் உண்டாக்கும் இசையை அல்லது ஒலியைக் கேட்பதற்கு தலையில் பொருத்திக் கொள்ளும் ஒலிச் சாதனம். இது கணினிகளுடனும், பிற மின்னணுவியல் சாதனங்களுடனும் சேர்த்துப் பயன்படுத்தப்படுகிறது.
head skew : தலைப்புக் கோட்டம் : தகட்டின் உச்சிப்பகுதியிலிருந்து அடிப்பகுதிக்குத் தலைப்பு மாறிக் கொள்ளும் வகையில் முந்திய தடத்தின் தொடக்கத்திலிருந்து மாறி புதிய தடத்தில் இருக்கும் தூரம்.
head slot : முனை இடம்; தலைத் துணை : வட்டுப் பரப் பினை படி/எழுது முனைக்குக்
- : : முனை இடம் ( படம் இணைக்கவேண்டும் )
காட்டும் நெகிழ் வட்டு உறை யின் மீதுள்ள திறந்த இடம்.
head switching : முனை பொத்தானிடம் தலைநிலை மாற்றல் : தரவுகளை நேரடி அணுகு சேமிப்பகச் சாதனத்தில் படிக்கும் போது படி/எழுது முனையை இயங்க வைத்தல்.
head, write : எழுது முனை. heap : தொகுதி : கணிப்புக்காக ஒரு நிரலாக்கத்தொடர் கடன் வாங்கி பின்னர் திருப்பியளிக்கிற சேமிப்பக இடங்களின் தொகுதி.
heap sort : குவியல் வரிசை யாக்கம்.
hearsay : கேள்வியறிவு : CMU தயாரித்துள்ள ஒரு செயற்கை நுண்ணறிவுத் திறன் (Al) செயல் முறை. இது, அடுத்தடுத்து இரண்டு செயல்முறை களைக் கொண்டிருக்கும்.
heatex : வெப்பக் குறைப்பி : பல்வேறு செய்முறைத் தொகுதிகளிடையே வெப்பத்தைப் பரி மாற்றிக் கொள்வதற்கு அனுமதிக்கிற, எரியாற்றல் தேவையைக் குறும அளவுக்குக் குறைக்கிற இணையத்தை உருவாக்குவதில் உதவிபுரிகிற நிபுணத்துவப் பொறியமைவு.
heath/zenith : ஹீத்Hr/ஸெனித் : நுண் கணினி கருவி மற்றும் மின்னணுப் பெட்டிகள் போன்ற பொருள்களை உற்பத்தி செய்பவர்.
heating elements : வெப்ப மூட்டும் தனிமங்கள்.
heat sink : வெப்ப வடிகால் : சுற்றுப்புறச் சூழலுக்கு வெப்பத்தைச் சிதறும்படி செய்கிற ஒரு மின்கடத்தாப் பொருளுடன் வெப்ப வடிகால் அல்லது அதன் பகுதியுடன் இணைக்கப்படும் ஒரு கட்டமைவு. இது பொதுவாக உலோகத்தில் அமைந்திருக்கும்.
heavy client : பருத்த கிளையன்.
hecto : ஹெக்டோ : எண்ணின் முன்பகுதியில் எப்போதாவது பயன்படுத்துவது. இதன் பொருள் "நூறு".
height : உயரம்.
helical scan : திருகு சுழல் நுண்ணாய்வு (வருடல்) : ஒளிப்பேழை நாடாவிலும், இலக்க முறை ஒலிப்பேழை நாடாவிலும் பயன்படுத்தப்படும் மூலை விட்டத் தடத் தொடர்பு. இது ஒரு போகு முறைகளில் சேமிப்புத் திறம்பாட்டினை அதிகரிக்கிறது.
helical wave guide : சுருள் அலை வழிப்படுத்தி.
help : உதவி : பலமுறைகளில் உடனடியாக கிடைக்கக்கூடிய செயல். முறைமை அல்லது நிரல் தொகுப்பு எப்படிச் செயல் படுகிறது என்பதைப்பற்றிய கூடுதல் தரவுகளைப் பயனாள ருக்கு வழங்குகிறது. சூழ் நிலைக்கு ஏற்ற வகையில் உதவுகிற விசை என்பதைப் பார்க்கவும்.
help applet : உதவி குறுநிரல்.
hełp controller : உதவித் தொகுப்பி : வாசகங்களையும், தொகுப்பி கட்டளைகளையும் ஒரு நேரடி உதவிப் பொறியமைவாக மொழி பெயர்க்கிற மென் பொருள்.
helper application : உதவி பயன்பாடுகள்.
help menu : உதவிப்பட்டியல் : பயனாளருக்கு உதவக்கூடிய தரவுகளை திரையில் நேரடிக் காட்சியாகக் காட்டுதல். மென் பொருள் பற்றிய கேள்விகளுக்கு கட்டளைக் கையேடுகளின் துணையின்றி மென்பொருள் பயன்படுத்துவோர் பதிலளிப் பதற்கு இது உதவுகிறது. தனி யொரு விசையை (பெரும் பாலும் F1) அழுத்துவதன் மூலம் உதவிப் பட்டியல்கள் வர வழைக்கப்படுகின்றன.
henry : ஹென்றி (மின் தூண்டல் அலகு) : மின் வலிமையை அளப்பதற்கான அலகு. ஒரு ஹென்றி என்பது, ஒரு இணைப்பில் உள்ள மின்சாரத் தினால் ஒரு வோல்ட் மின் இயக்க சக்தியைப் பெறுகிற மின் இணைப்பின் மின் வலிமை ஆகும். அம்மின்சக்தி ஒரு வினாடிக்கு ஒரு ஆம்பியர் என்ற அளவில் மாறுபடுகிறது.
hercules adapter : ஹெர்குலஸ் தகவமைவு : ஒரு நிறப்படச் செய்தி அறிவிப்பியில் உயர்ந்த செறிவளவுகளில் வரைகலை களைக் காட்சியாகக் காட்டுகிற ஒரு மென்பொருள் பொறியமைவு.
hercules card : ஹெர்குலஸ் அட்டை உயர்செறிவளவு ஒளிப்பேழை (செய்தி அறி விப்பி) கட்டுப்படுத்தி அட்டை. இது பெரும்பாலும், உயர் செறி வளவு ஒரு நிறப்படக் காட்சி யில் பயன்படுத்தப்படுகிறது.
hercules graphics : ஹெர்குலஸ் வரைகலை ஹெர்குலஸ் கம்ப்யூட்டர் டெக்னாலஜி" என்ற அமைவனம் சொந்தக் கணினிகளுக்காகத் தயாரித்துள்ள ஒளிப் பேழைக் காட்சித் தர அளவு. இந்த அமைவனம், 720 x 348 படக்கூறுகள் கொண்ட செறி வளவுடன் நிறப்பட வரைகலை களையும், வாசகங்களையும் தயாரிக்கிறது.
hermaphroditic : இருபாற்கூறுகளுடைய : நீட்டப்பகுதியும், செருகு பகுதியும் ஒருங்கேயுடைய இணைப்பி. இது ஆண் பகுதி தனியாகவும், பெண் பகுதி தனியாகவும் உள்ள இணைப்பி களிலிருந்து வேறுபட்டது.
hertz ஹெர்ட்ஸ் (அதிர்வெண் அலகு) : ஒரு விநாடிக்கான மின்காந்த அலைச் சுற்றுகள் அல்லது சுழற்சிகள். சுருக்கமாக Hz என்று அழைக்கப்படுகிறது.
heruistic programme : தன் மேம்பாட்டுச் செயல்வரைவு : ஒரு செயல்முறை ஒவ்வொருமுறை ஒடும்போதும் தன் சொந்தச் செயல்களின் விளைவுகளிலிருந்து கற்றுக் கொண்டு, அடுத்த தடவை தனது பணியை மேம்படுத்துவதற்குத் தக்க மாற்றங்களைச் செய்து கொள் ளும் வகையில் எழுதப்பட்டுள்ள செயல்வரைவு.
heterogeneous environment : கதம்பச் சூழல் பல்வேறு தயாரிப்பாளர்கள் தயாரித்துள்ள சாதனம்.
heuristic : பட்டறிவு சார்ந்த : பிரச்சினை ஒன்றுக்கு தீர்வு காண்பதற்கான ஆய்வு வழி. இம்முறையில் இறுதி முடிவுகளை அடைவதற்கான ஒவ் வொரு நடவடிக்கையையும் படிப்படியாக மதிப்பிட்டு தீர்வு எட்டப்படுகிறது. கண்டுபிடிப்பு ஒன்றில் உதவும் பொதுவான அறிவின் பயன்பாடு பற்றியது. Algorithm என்பதற்க்கு எதிர் நிலையானது.
heuristic learning : பட்டறிவு வழி கற்றல் : அனுபவத்திலிருந்து கண்டுபிடிக்கும் வழி. தங்கள் தவறுகளில் இருந்து கணினிகள் கற்றுக்கொள்ளும் வழி. தங்கள் நடவடிக்கைகளில் இருந்து, வெற்றியைத் தராத, பயனைத் தராத நடவடிக்கைகளை நீக்குதல்.
Hewlett-Packard : ஹீவ்லெட்- பேக் கார்ட் : கலிபோர்னியாவிலுள்ள மின்னணுவியல் கருவிகள், கணிப்பிகள், கணினிகள் உற்பத்தியாளர்கள். பெயர்ச் சுருக்கம் : HP.
hexadecimal : பதினாறிலக்கமுறை : "16"- ஐ ஆதாரமாகக் கொண்ட எண்மான முறை. இதனை "அறுபதின் மானம் (Hexadecimal) என்றும் கூறுவர்.
hexadecimal notation : பதிளாறிலக்கக் குறிமானம் பத்து களுக்குப் பதிலாக பதினாறு களைக் கொண்ட குறிமானம். இதில், 0 முதல் 9 வரையிலான இலக்கங்கள் பயன்படுத்தப் படுகின்றன. A, B, C, D, E, F, என்ற
எழுத்துகள் 10, 11, 12, 13, 14, 15 என்ற எண்களைக் குறிக்கின்றன. பதின்மானக் குறிமானத் தில் ஒரு நான்கு இலக்க எண் ணில் ஒவ்வொரு இலக்கமும் ஆயிரங்கள். நூறுகள், பத்துகள், ஒன்றுகள் ஆகியவற்றைக் குறிக் கின்றன. பதினாறிலக்கக் குறி மானத்தில் ஒவ்வொரு இலக்க மும் 09டுகள், 256கள், 16கள், ஒன்று கள் ஆகியவற்றைக் குறிக் கின்றன. இவ்வாறு
A60B = (10 x 163) + (6 x 162) + (0 x 161) + (11 x 160) = (10 x 4096) + (6 x 256) + (0 x 16) + (11 x 1) = 40960 + 1536 + 0 + 11 = 42507 (பதின்மானம்) கணினிகளில் பதினாறிலக்க முறை பயன்படுத்தப்படுவதற்குக் காரணம், எண்களைச் சேமித்துவைக்கும் முறை யாகும். ஈரிலக்க முறையில் 0 முதல் 9 வரையிலான இலக்கங்களைச் சேமிக்க 0000 முதல் 0101 வரையிலான இலக்கங்கள் தேவை. இதனால் நமது இயல்பு எண்களுக்கு நான்கு ஈரிலக்க எண்களைப் பயன்படுத்த வேண் டும். ஆனால் நான்கு ஈரிலக்க இலக்கங்களைக் கொண்டு 0 முதல் 9 வரையில் மட்டுமின்றி 0 முதல் 15 வரையிலும் சேமிக்க லாம். அதாவது, 0000 முதல் 1111 வரைச் சேமிக்க முடியும். எனவே, பதினாறிலக்க முறை யில், கணினியிலுள்ள சேமிப்புக் குறியீடுகள், அனைத்தையும் நாம் பயன்படுத்தலாம்.
hexadecimal number : அறுபதின்ம எண் : ஒற்றை இலக்கத்துக்கும் கூடுதலான எண். ஒரு மொத்தத் தொகையைக் குறிப்பது. அதில் ஒவ்வொரு எண்ணும் அளவை 16 இன் மூலத்தை அடிப்படையாகக் கொண்டு குறிப்பிடப்படுகிறது. பயன்படுத்தப்படும் எண்கள். 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, A, B, C, D, E & F.
hexadecimal point : அனுமதியின்றி புள்ளி : அறுபதின்மக் கலவை எண் ஒன்றில் முழு எண்ணையும் பின்னப் பகுதிகளையும் பிரித்துக்காட்டும் மூலப்புள்ளி. அறுபதின்ம எண் 3F மற்றும் 6A7இல் அறுபதின்மப் புள்ளி எண்கள் 'F' -க்கும் 6-க்கும் இடையே உள்ளது.
HGC plus : ஹெச்ஜிசி பிளஸ் : ஹெர்க்குலிஸ் கம்ப்யூட்டர் டெக்னாலஜி நிறுவனம் 1986ஆம் ஆண்டு அறிமுகப்படுத் திய 36 ஒளிக்காட்சித் தகவி அட்டை. இதில், 256 எழுத்து களை 12 எழுத்துருக்களில் இருத்தி வைக்கக் கூடுதலான இடைநிலை நினைவகம் கொண்டது. வரைகலை வடி
விலான எழுத்துருக்களை பெற முடியும்.
HHOK : ஹெச்ஹெச்ஓகே ஹா, ஹா. சும்மா விளையாட்டுக்கு என்று பொருள்படும் Ha, Ha Only Kidding என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். மின்னஞ்சல் மற்றும் நிகழ்நிலை (online) தகவல் தொடர்புகளில் நகைச்சுவையை அல்லது குறும்புத் தனத்தை வெளிப்படுத்த பயன்படுத்தப்படும் சொல்.
hide : மறை : ஒரு பயன்பாட்டு மென்பொருள் இயங்கிக் கொண்டிருக்கும் நிலையில் அதன் இயக்கச் சாளரத்தை மறைத்து வைத்தல். இயக்க முறைமையின் ஒரு குறிப்பிட்ட கட்டளையைத் தந்தவுடன் மறைக்கப்பட்ட சாளரம் மீண்டும் தோற்றமளிக்கும்.
hide column : நெடுக்கை மறை.
hide document : ஆவணம் மறை
hidden character : மறைநிலை எழுத்து.
hidden codes : மறைநிலை குறியீடுகள் : நேரடித் திரை உரு வமைவுச் செயல்முறை மூலம் ஒர் ஆவணத்தில் இணைக்கப்பட்டுள்ள மறைநிலை வாசக உருவமைவுக் குறியீடுகள்.
hidden file மறைநிலைக் கோப்பு : ஒரு கோப்புப் பட்டியலில் பார்வைக்குக் காட்டப்படாத ஒரு கோப்பு. எடுத்துக் GTLG) MS-DOS; VAX DIR з), сраг МS-DOSG) se to SYS, DOS-SYS என்பவை மறைமுகக் கோப்புகள்.
hidden-line algorithm : மறைகோட்டு படிநிலை நடைமுறை : வரைபடம் வரைவதில், ஒரு முப்பரிமாணப் பரப்பு வரையப் படும்போது எந்தக் கோடுகள் கண்ணுக்குப் புலனாகக் கூடாது என்பதைத் தீர்மானிக்கப் பயன் படுத்தப்படும் ஒரு படிநிலை நடைமுறை.'
hidden line removal : மறை கோடு நீக்குதல் : திட முப்பரி மாணம் உடையதாக காட்சிக்கு வைக்கப்பட்ட ஒரு பொருளைக் காணும்பொழுது மறைக்கப் படக்கூடிய கோட்டுப் பகுதி களை படத்திலிருந்து நீக்குதல். கணினி வரைபட மென் பொருள்களும், வன்பொருள் களும் அத்தகைய மறைந்துள்ள கோடுகளை தானாகவே நீக்கக் கூடிய திறனைப் பெற்றுள்ளன.
hidden lines : மறைநிலை வரிகள் : ஒரு முப்பரிமாணப் பொருளை திரையில் காட்டும் போது, பொருளின் பொருண்மையினால் பார்வையாளர் பார்வையிலிருந்து மறைக்கப் பட்டிருக்கும் வரி. திரையில் பின்புல வண்ணங்களில் வரையப்படும் கோடுகள். அந்த வண்ணங்கள் மறையும்வரைக் கண்ணுக்குப் புலனாவதில்லை. ஒரு வரைபடத்தில் கண்ணுக்குப் புலனாகாத கோடுகள்.
hidden objects : மறை பொருள்கள்' : தெளிவான உருக்கொண்ட பொருள் திடப்பொருளாக வைக்கப்பட்டால் அவை மற்ற பொருள்களால் மறைக்கப்படலாம்.
hidden surface : மறைதளம் : வரைபடத்தில் முப்பரிமாண திடப்பொருளாகக் காட்டப்பட்டால் பார்வையிலிருந்து மறையக்கூடிய வெளிப்பகுதி அல்லது தளப்பகுதி.
hide window : சாளரம் மறை.
hierarchical : படிநிலை முறை : ஒரு பெற்றோரின் வாயிலாக மட்டுமே பொருள்கள் அணுகத் தக்கவை என்பதை வலியுறுத்தும் கண்டிப்பான படிநிலை முறை. ஒரு நிறுமத்தில் அமைவன வரைபடம் போன்ற, பல்வேறு படிநிலை களைக் கொண்ட கட்டமைவு, உயர்மட்ட நிலைகள், கீழ்மட்ட நிலைகள் மீது கட்டுப்பாடு அல்லது ஆதிக்கம் கொண்டிருக்கும். செய்தித்தொடர்புகளில், படிநிலை என்பது, அதனுடன் இணைக்கப்பட்டுள்ள அனைத்து மைய முனைகள் மீதும் கட்டுப்பாடு கொண்டுள்ள தனியொரு கணினியைக் குறிக்கும்.
hierarchical communication : படிநிலைமுறைச் செய்தித் தொடர்புகள் : எல்லா இணைப்புகளை யும் மேலாண்மை செய்யும் பொறுப்புடைய ஒரு தாய்க் கணினியினால் கட்டுப்படுத்தப்படும் இணையம். இது "சரியிணைச் செய்தித் தொடர்பு கள்" (Peer-to Peer Communication) என்பதிலி ருந்து மாறுபட்டது.
hierarchial computer network : படிநிலை கணினிப் பிணையம் : 1. ஒரு தலைமைப் புரவன் (Host) கணினி பல சிறிய கணினிகளை மேலா ண்மை செய்யும். ஒவ்வொரு சிறிய கணினியும் பல்வேறு பீசி பணிநிலையங்களின் வழங்கனாகச் செயல்படும். இத்தகைய பிணையம் படிநிலைப் பிணையம் எனப்படுகிறது. 2. தரவு செயலாக்கப் பணிகள் பகிர்ந்தளிக்கப்பட்டும், கட்டுப்பாட்டுப் பணிகள் அதிகாரப் படிநிலைப்படி ஒழுங்கமைக்கப் பட்டும் இருக்கும் ஒரு பிணையம்.
hierarchical database : படிநிலைத் தரவுத் தளம் : பல்வேறு தரவுக் கூறுகளிடையே ஒன்று டன் ஒன்றின் தொடர்புகள், ஒரு மரத்தின் இலைகளுக்கும் மிலாறுகளுக்கும், கிளைகளுக்கும், பெரிய கிளைகளுக்கும், மரத்தின் துருக்குமிடையிலானதும், மற்றக் கிளைகளுக்கும் இலைகள், மிலாறுகளுக்கிடை யிலானதுமான தொடர்பினை ஒத்திருக்கும் தரவுத் தளம்.
hierarchical database management system (HDBMS) : தொடர் வரிசை தரவுத் தள நிர்வாக முறைமை : தலைகீழாகக் கவிழ்க்கப்பட்ட மரம் போல கிளைகளாகவும் இலைகளாகவும் தரவு இணைக்கப்பட்ட தரவுத் தளம் ஒன்றை, கணினியில் ஏற்றவும் அணுகவும் கட்டுப்படுத்தவும் உதவுகிற சம்பந்தப்பட்ட நிரலாக்கத் தொகுப்புகளின் குழுமம். Network Database Management System மற்றும் Relational Database Management System-களுக்கு மாறுபட்டது.
hierarchical data format : படிநிலைத் தரவு வடிவம்.
hierarchical file system : படிநிலைக் கோப்பு முறை : மேலிருந்து கீழான அமைவாக்கக் கட்டமைவில் தரவு கவைச் சேமித்து வைக்கும் கோப்பு. அமைப்பாக்க முறை. செய்திக் குறிப்புகளை அணுகுதல் உச்சியில் தொடங்கி படி நிலைகள் அனைத்து வழியாகவும் செல்கிறது. DOS, OS/2 ஆகியவற்றில் மூலத் தரவு தொடக்க நிலையாகும். மெக்கின்டோஷில் வட்டுப் பலகணி தொடக்க நிலையாகும்.
hierarchial menu : படிநிலைப் பட்டி : ஒன்று அல்லது மேற்பட்ட துணைப் பட்டிகளைக் கொண்ட ஒரு பட்டி. துணைப் பட்டி அதன்கீழ் துணைப் பட்டி களைக் கொண்டிருக்கலாம். இதுபோன்ற பட்டி/துணைப் பட்டி அமைப்புக்குப் படிநிலைப் பட்டி எனப் பெயர்.
hierarchical model : தொடர் வரிசை மாதிரி : தரவுத் தளம் மாதிரி இதில் ஒவ்வொரு பொருளும் ஒரு மர அமைப்பில் ஒரு குறிப்பிட்ட தொடர் முறையில் அமைந்திருக்கும்.
hierarchical network : தொடர் வரிசை இணையம் : கணினி இணையம். இதில் தரவு வகைப்படுத்துதல், கட்டுப்படுத்துதல் ஆகிய பணிகள் ஒவ்வொன்றுக்கும் என சிறப்பாக அமைக்கப்பட்ட கணினியால் நிறைவேற்றப் படுகின்றன.
hierarchical structure : தொடர் வரிசை வடிவமைப்பு : படிநிலைக் கட்டமைப்பு : தரவுத் தளம் ஒன்றின் நிர்வாக முறைமைகளில், மிகவும் எளிமையான கோப்பு அமைப்பு முறை, இதில் பல்வேறு நிலைகளில் உள்ள ஆவணங்கள் ஒன்றுக் கொன்று வழங்குகின்றவையாகவோ, தெடார்புடையவையாகவோ இருந்தால், இதனை மர அமைவு என்றும் கூறுவர்.
hierarchy : தெடார்புமுறை; படிநிலை; வழிமுறை : 1. ஒரு சூத்திரம் அல்லது அறிக்கை ஒன்றில் எண்களின் செயல்கள் அமைகிற வரிசை முறை Order of Operations என்பதைப் பார்க்க வும். 2. அடுக்குவரிசையில் அமைப்பு முறை.
hierarchy chart : படிநிலை வரைபடம் : ஒரு செயல்முறை தகவமைவுகள் அமைப்பாக்கத்தினை வரைபடமாகச் சித்திரித்தல். இது, பெருந்திட்டமிடுதலிலும், ஆவணமாக்கத்திலும் படுகைகளாகவுள்ள செயல் முறைப் பணிகளை காட்டுகிறது. இதனை மேல்கீழ் வரைபடம் என்றும் கூறுவர்.
hierarchy of operations : செயற்பாடுகளின் படிநிலை : கணிதச் செயற்பாடுகளை எந்த வரிசை முறையில் நிறைவேற்ற வேண்டும் என்பதைக் காட்டும் விதிகளின் தொகுதி.
hierarchy plus input process output (HIPO) : தொடர் வரிசை மற்றும் உள்ளிட்டு வெளியீட்டு நடைமுறை (ஹிப்போ) : வடிவ மற்றும் நிரல் தொகுப்பு ஆவண முறை. அது செயல்முறை மற்றும் மூன்று வகையான வரை படங்களில் தரவுகள் வெளியாவதைக் குறிப்பிடுகிறது. நிரலாக்கத் தொகுப்பு கற்றைகளையும் அவற்றின் தொடர் வரிசை முறைகளையும் பாதி காட்டுகிற உள்ளடக்கப் பட்டியல். தொடர் வரிசையில் உள்ள உறுப்பினர்களுக்கான உள்ளிட்டு வகைப் படுத்துதல் மற்றும் வழங்கு தலை விவரிக்கிற வரைபடங்கள் மற்றும் விரிவான வரைபடங்கள். இவை மேலோட்டமான வரைபடங்களை குறிப்பான உள்ளீடு, வகைப்படுத்துதல் மற்றும் வெளியீடு விவரங்களை, விளக்கத்துடன் வெளியிடுகின்றன.
high bandwidth : உயர்நிலை அலைக்கற்றை; விரிந்த அலைக் கற்றை.
High-bit-rate Digital Subscriber Line : உயர்துண்மி வீத இலக்க முறை சந்தாதாரர் தடம் : தொலை பேசியின் சாதாரண செப்புக் கம்பி மூலமாகவே இலக்க முறைத் தரவு பரப்புக்கான ஒரு நெறிமுறை.
high byte : மேல் பைட் : இரண்டு பைட் அல்லது 16 பிட்களில் ஒரு மதிப்பினைக் குறிக்கும் அமைப்புகளில், 8 முதல் 15 வரையிலான பிட்டுகளைக் கொண்ட பைட் மேல் பைட் எனப்படும். 0 முதல் 7 வரையுள்ள பைட் கீழ் பைட் ஆகும்.
high colour : உயர் வண்ணம் : 32, 768 வண்ணங்களை (15 துண்மிகள்) அல்லது 65, 536 வண்ணங்களை (16 துண்மிகள்) உருவாக்கும் திறன். அதிக எண்ணிக்கையிலான வண்ணங்களை உருவாக்கும் திறன்.
high density : மிகு அடர்த்தி; உயர் கொள்ளளவு : ஒர் "உயர் அடர்த்தி" நெகிழ்வட்டில், காந்தப் பூச்சின் அளவு (பரப்பு அடர்த்தி) ஒற்றை அல்லது இரட்டை அடர்த்திப் பூச்சினை விட அதிகமாக இருத்தல். இது, வட்டின் சேமிப்புத் திறனை அதிகரிக்கிறது. ஒற்றைப் பக்க 5. 25 வட்டு, 160 KB திறனுடையது; இரட்டைப் பக்க உயர் அடர்த்தி வட்டு (DSHD) 1. 2 MB அல்லது 1. 6 MB திறன் கொண்டது.
high end : உயர்நிலை; உயர் திறன் : செயல்திறனை மேம்படுத்தும் நவீனத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தும் எந்த ஒன்றையும் இச்சொல்லால் குறிப்பிடுவர். உயர்திறன் தொழில் நுட்பம் எனில் அதிக விலை என்பது நிலவும் சூழ் நிலையாகும்.
higher level software : உயர்நிலை மென்பொருள்.
highlight : முனைப்பாக்கப் பகுதி : CRT இல் அமைப்பு, அடிக்கோடு, மறிநிலை ஒளிப்பேழை, செறிவாக்கம் போன்ற உத்திகள் மூலம் ஒர் உருக்காட்சியின் பகுதியை முனைப்பாகக் காட்டுதல்.
highlight bar : முனைப்பாக்கச் சட்டம் : ஒரு நேரடித் திரைப் பட்டியலில் மறி நிலை ஒளிப் பேழையில் அல்லது மாறுபட்ட வண்ணத்தில், தற்போதைய தேர்வு/சறுக்கச் சட்டநிலையைக் குறியீடாகக் காட்டுவதற்கான வரி.
highlight changes : மாற்றங்கள் முனைப்புறுத்துக.
highlighting : முனைப்பாகக் காட்டுதல் : நேரடித் திரைவாசகத் தேர்வு மற்ற வாசகங்களிலிருந்து வேறுபட்டிருக்கும் போது, விசையை நிரல்கள் அல்லது நுண்பொறி மூலமாக அதனை முனைப்பாகக் காட்டுதல். தேர்ந்தெடுக்கப்பட்ட வாசகம், ஏதாவதொரு வழியில் வேறு படுத்திக் காட்டப்படுகிறது. எடுத்துக்காட்டு : வாசகத்தின் வண்ணத்தை மாற்றிக் காட்டுதல். high-level format : உயர்நிலை உருவமைவு; மேல்நிலை உருவமைவு : ஒரு குறிப்பிட்ட செயற்பாட்டு முறைக்குத் தேவைப்படும் தரவுகள் (பொருட் குறிப்பு அகராதிகள், அட்டவணைகள் முதலியன) ஒரு வட்டில் பதிவு செய்யப்பட்டிருத்தல்.
high-level language : உயர்நிலை மொழி; மேல்நிலை மொழி : இது ஒரு வகைச் செயல் முறைப்படுத்தும் மொழி. இது, மனித மொழியை அல்லது கணித குறிமானத்தைப் பெரிதும் ஒத்திருக்கிற பேரளவு அறிவுறுத்தங்களையும் கட்டளைகளையும், தீர்க்கப் படவேண்டிய சிக்கல்களை அல்லது பயன்படுத்த வேண்டிய நடைமுறையை விவரிப்பதற்குப் பயன்படுத்துகிறது. இதனைத் தொகுப்பி மொழி, எந்திரம் சாராத செயல்முறைப்படுத்தும் மொழி என்றும் கூறுவர். எடுத்துக்காட்டு : FORT- RAN; BASIC; COBOL, PASCAL; C. இது தாழ்நிலை மொழிகளைப்போல் எந்திரத்தின் கட்டமைவில் கவனம் செலுத்தாமல், தீர்க்கப்பட வேண்டிய சிக்கலின் தருக்க முறையில் கவனம் செலுத்த உதவுகிறது.
high-level network : உயர்நிலைப் பிணையம்.
high level programming language : உயர்நிலை நிரலாக்க மொழி.
high memory : உயர்நிலை நினைவகம் : 1. நினைவகத்தில் மிக உயர்ந்த திறனளவு. 2. சொந்தக் கணினிகளில், 640 K-க்கும் 1 M அல்லது 64k-க்குமிடையிலான பரப்பளவு. 1024-க்கும் 1088 K-க்கும் இடையிலான HMA பரப்பளவு.
high memory area : மேல் நிலைவகப் பரப்பு : ஐபிஎம் பீசி மற்றும் ஒத்தியல்புக் கணினிகளில் ஒரு மெகாபைட் எல்லைக்கு அடுத்துள்ள 64 கிலோ பைட்டு பரப்பைக் குறிக்கிறது. டாஸ் 5. 0 மற்றும் பிந்தைய பதிப்புகளில் HIMEM. SYS என்னும் நிரல், டாஸ் இயக்க முறைமையின் சில தரவுகளை மேல் நினைவகப் பரப்பில் மாற்றிக் கொள்ளும். இதன் காரணமாய் பயன்பாட்டுத் தொகுப்புகளுக்குக் கிடைக்கும் மரபு நினைவகப் பரப்பின் அளவு அதிகரிக்கும். சுருக்கச் சொல். ஹெச்எம்ஏ (HMA).
high order : உயர்மதிப்பு நிலை : எண் ஒன்றின் கூடுதல் மதிப்பு அல்லது முக்கியத்துவமுடைய இலக்கம் அல்லது இலக்கங்கள் தொடர்பானது. 7643215 என்ற எண்ணில் உயர் ஒழுங்கில் இருப்பது 7 அடி நிலை ஒழுங்கு என்பதற்கு மாறானது. Most Significant Digit என்பதைப் பார்க்க. high-order bit : உயர் நிலை துண்மி : ஒரு கணினியின் அடிப் படைச் சேமிப்பு அலகில் (Word) இடது ஒரமாகவுள்ள துணுக்கு.
high-order column : உயர் ஒழுங்கு நிரை; உயர் மதிப்பு நிரை : துளையட்டையின் பரப்பில் இடது ஒரத்திலுள்ள நிரை.
highpass filter : மேல்அலை வடிகட்டி; உயரலை சல்லடை : தரவு சமிக்கையில் ஒரு குறிப்பிட்ட அலைவரிசைக்கு மேல் உள்ள அலைவரிசைகளை அனுமதிக்கும் ஒரு மின்னணு வடிகட்டி மின்சுற்று.
High Performance Serial Bus (1394) : உயர் செயல்திறன் நேரியல் பாட்டை : பீசி மற்றும் மெக்கின்டோஷ் கணினிகளுக்கான நேரியல் பாட்டை இடை முகம். வினாடிக்கு 100, 200, 400 மெகாபிட் தரவு பரிமாற்றம் சாத்தியம். 63 சாதனங்கள் வரை டெய்சிச் சங்கிலி அமைப்பில் இணைக்க முடியும். இவ்வாறு இணைக்கப்படும் சாதனங்கள் இடைமுகத்தின் வழியாக நேரடியாக மின்சாரத்தைப் பெற முடியும்.
high-persistence phosphor : கூடுதல் பாஸ்பரஸ் பூச்சு : கண்காணிப்புக் கருவியில் உள்ள திரைகளில் உள்ள பாஸ்பரஸ் பூச்சு, இயல்பான தொலைக்காட்சித் திரைகளில் உள்ள பூச்சுகளைவிடக் கூடுதலான நேரத்துக்கு உருவங்களை நிலைக்கச் செய்யக்கூடியது.
high pitch : உயர் தொனி.
high punch : உயர்துளை : பன்னிரு துளை அல்லது ஒய் (Y) துளை போன்றது.
high resolution : உயர்நுணுக்கத் தெளிவு; மிகைத் தெளிவு; அதி நுட்ப வரைமுறை : வெளியிடப்படும் விவரங்கள், துல்லியம் ஆகியவற்றின் அடிப்படையிலான தரம் தொடர்பானது. ஒரு பட வரைவு ஒன்றுக்குள் எத்தனை உரு உணர்த்தும் அலகுகள் உள்ளன என்பதைப் பொறுத்து படத்தின் தரம் அமைகிறது. படம் உணர்த்தும் அலகுகளின் எண்ணிக்கை எவ்வளவு அதிகம் உள்ளதோ அத்தனைக்கு உயர் நுணுக்க விவரம் கூடுதலாக அமையும். உயர் நுணுக்க விவரம் கூடுதலான படங்கள் உயர் துணுக்க விவரம் குறைந்த படங் களைவிட தெளிவாக அமையும்.
high resolution graphics : உயர் செறிவு வரைகலை; அதிநுட்ப வரைமுறை கலை : பெரும்பாலான நுண் கணினிகள், புள்ளிகளையும், கோடுகளையும் செயல்முறை மூலம் வரைவதற்குரிய ஒரு வகை வரைகலை முறைகளை அளிக்கின்றன. வரைகலைத் திரை, 'x' கிடை மட்ட அச்சு, 'y' செங்குத்து அச்சு என்று பகுக்கப்பட்டிருக்கும். பரப்பளவு முழுவதும் படக்கூறுகளால் அமைந்திருக்கும். ஏறத்தாழ 640 x 180 படக்கூறுகள் உயர் செறிவு என்றும் 320 x 240 படக்கூறுகள் தாழ்செறிவு என்றும் கருதப்படுகின்றன. அச்சடிப்பிக்கு அல்லது வரை விக்கு படக்கூறு தரவுகளை அனுப்புவதற்கும், திரையில் படிப்பதற்கும் தனிவகை வரை கலைச் செறிவுகள் தேவை.
high sierra : உயர் சியாரா : (p3out வது CD-ROM தர அளவு. டாஹல் ஏரியின் அருகிலுள்ள ஒரு பரப்புக்காக 1985-இல் இது வகுக்கப்பட்டது. அந்தப் பகுதியின் பெயரே இதற்குச் சூட்டப்பட்டது. பின்னர், இது ISO 9660 தர அளவாக உருவாக்கப்பட்டது.
high sierra group : உயர் சியாரா குழுமம் : CD-ROMஇல் தரவு சேமிப்பதற்கான தர அளவு. இது, அமெரிக்காவில் நெவடாவில் டாஹ ஏரி அருகிலுள்ள உயர் சியரா உணவகத்தில் 1985 -இல் நடைபெற்ற தொழில் துறைச் சார்பாளர்களின் கூட்டத்தில் வகுக்கப்பட்டது. இப்போது, இது CD-ROMஇன் ஒரு பகுதியாகும்.
High Sierra Specification : உயர் நிலை சியாரா வரன்முறை : ஒரு குறுவட்டில் பதியப்படும் தருக்கக்கட்டமைப்பு, கோப்புக் கட்டமைப்பு மற்றும் ஏட்டுக் கட்டமைப்பு ஆகியவற்றின் தொழில்முறை வடிவாக்க வரையறைகள். 1985 நவம்பரில் டாஹோ ஏரிக்கு அருகிலுள்ள சியாரா என்னுமிடத்தில் நடை பெற்ற குறுவட்டு தொடர்பான கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் என்பதால் இப்பெயர் ஏற்பட்டது. ஐஎஸ்ஓ 9660 பன்னாட்டுத் தரக்கட்டுப் பாட்டுக்கான அடிப்படையாக விளங்கியது.
high speed networks : உயர்வேக கணினி இணையங்கள் : வினாடிக்கு இரண்டு கோடி துண்மிகளுக்கு (MBps) மேற்பட்ட வேகத்தில் அனுப்பீடு செய்யக்கூடிய வளாகக் கணினி இணையங்கள் (LAN).
high speed printer : மிகைவேக அச்சிடு கருவி; அதிவேக அச்சுப் பொறி : ஒரு நிமிடத்தில் 300 முதல் 3, 000 வரிகள் அச்சிடக் Line printer arası பதைப் பார்க்கவும்.
high storage : உயர்சேமிப்புத் திறன் : கணினி ஒன்றின் நினைவக மேல் முகவரி வரிசை. பெரும்பாலான எந்திரங்களில் அதில் இயக்க முறைமை அமைந்திருக்கும்.
high tech : உயர்தொழில் நுட்பம் : கணினிகளிலும், மின்னணு வியலிலும், சமூக-அரசியல் சூழல்களிலும் மிக அண்மையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களையும், நவீன எந்திரங்களினால் ஏற்பட்டுள்ள விளைவுகளையும் குறிக்கும் சொல்.
hightech city : மாநுட்ப நகரம்; பெரும் தொழில்நுட்ப நகரம் : இந்தியாவில் ஆந்திர மாநிலம் ஹைதராபாத் நகருக்கு அருகில் புறநகராக உருவாகியுள்ள ஒரு பகுதி இவ்வாறு அழைக்கப்படுகிறது. ஏராளமான கணினி நிறுவனங்கள் அங்குள்ளன.
high volatillity : உயர் மாறுதிறன் ; வேக அழிவு : கோப்பு ஒன்றில் குறிப்பிட்ட நேரத்தில் ஏற்படும் உயர்வேக மாறுதல்கள்.
high voltage : உயர்மின்னழுத்தம்; அதிக மின்னழுத்தம்.
highway : பெருவழி; நெடுந் தடம் : ஒரு கணினியமைவில், நினைவகம், பிற புறநிலச் சாதனங்கள் ஆகியவற்றுக்கும், அவற்றிலிருந்தும் உட்பாட்டு/ வெளிப்பாட்டு மாற்றங்களைக்கையாள்வதற்கான குறியீடுகளைக் கொண்ட வழி.
hints : நினைவுக் குறிப்புகள் : அச்செழுத்து வடிவளவின், குறிப்பாகச் சிறிய முகப்பு அளவுகளின் அடிப்படையில் இடைவெளியையும் மற்ற முகப்பு அம்சங்களையும் மாற்றும்படி உருவமைப்புச் சாதனத்திற்கு அறிவுறுத்துகிற பின் குறிப்பு எழுத்து முகப்புகளுக் கான தனிவகைக் கூடுதல் சேர்மானங்கள்.
HIPO : Hierarchy Plus input-Output Process என்பதன் குறும்பெயர்.
HIPP ; ஹிப்பி : உயர் செயல்திறன் இணைநிலை இடைமுகம் என்று பொருள்படும் High Performance Parallel Interface என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். மீத்திறன் (super) கணினிகளில் பயன்படுத்தக்கூடிய அன்சி தகவல் தொடர்பு தர வரையறை.
hi-res graphics : : High resolution graphics என்பதன் குறும்பெயர். நெருடலற்ற உண்மையானது போன்று வெளியீட்டுத் திரையில் தோன்றும் படம். ஏராளமான பட உருவாக்கக் கூறுகளால் உருவாக்கப்படுகிறது. Low-res graphics என்பதற்குமாறானது.
HIS : : Hospital Information System என்பதற்கான குறும்பெயர். மருத்துவமனைத் தகவல் முறைமைக்கான ஆங்கிலக் குறும்பெயர்.
histogram : பட்டை வரைபடம் : செங்குத்தான குறுக்குப் பட்டியல் புள்ளி விவரத் தகவல்களை வரைபடமாக வழங்க அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது. செங்குத்துக் களங்களுக்கான அகலம், இடைவெளி அளவு கூட்டெண்னிக்கை ஆகியவற்றைக் குறிப்பிடுகிறது.
history : வரலாறு : கணினியில் ஒரு மென்பொருளில் பயனாளர் மேற்கொள்ளும் தொடர்ச்சியான பணிகளின் பட்டியல். (எ-டு) 1. இயக்க முறைமையில் உள்ளீடு செய்யும் கட்டளைகளின் தொகுப்பு. 2. கோஃபர் கணினிகளில் ஒன்றன்பின் ஒன்றாய்க் கடந்துவரும் பட்டித் தேர்வுகள் (menu options). 3. இணைய உலாவியில் அடுத்தடுத்து தொடர்ந்து வந்த தொடுப்புகள். (links).
history list : வரலாற்றுப் பட்டியல்.
history settings : வரலாற்று அமைப்புகள்.
hit : கிடைத்தல் : இரண்டு வகையான தரவுகளை வெற்றிகரமாக ஒப்பிடல்; இணைகளை ஒப்பிடல்.
hi-tech : உயர்-தொழில்நுட்பம் : உயர் தொழில் நுட்பம் என்பதன் சுருக்கப் பெயர். அண்மைக் காலத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தும் எல்லா வகை வன்பொருள்களையும் இது குறிக்கிறது.
hit rate : மறைவிட நினைவக விழுக்காடு : இது மறைவிட நினைவக மேலாண்மை தொடர்புடையது. மையச் செயலகத்துக்கு (CPU) தேவைப்படும் மறைவிட நினைவக விழுக்காட்டினை இது குறிக்கிறது. பெரும்பாலான மறைவிடக் கட்டுப்பாட்டாளர்கள் 90% வீதத்தை விரும்புவார்கள்.
hit ratio : வெற்றி விகிதம் : முதன்மை நினைவகத்தில் தரவுகள் எத்தனை முறை வெற்றிகரமாக இட அமைவு செய்யப்பட்டிருக்கின்றன என்பதற்கும், ஒரு குறிப்பிட்ட கால அளவின் போது மேற்கொண்ட முயற்சிகளின் மொத்த எண்ணிக்கைக்கு மிடையிலான விகிதம்.
. hk : . ஹெச்கே : ஒர் இணைய தள முகவரி ஹாங்காங்கைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப் பெயர்.
. hn : . ஹெச்என் : ஒர் இணைய தளம் ஹொண்டுராஸ் நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவு களப் பெயர்.
Hoff. Ted : ஹோஃப் டெட் : 1971இல் இன்டர் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் பொறியாளரான ம்ஹாஃப் முதல் குறும் நுண் செயலியை (4004) வடிவமைத்தார். அந்த ஒற்றைச் சில்லில் 2250 டிரான்ஸ்சிஸ்டர்கள் இருந்தன. ஒரு முழு மையச் செயலியின் எல்லாக் கருவிகளும் இருந்தன. இந்த குறும்சில் கணினித் தொழிலையும் அதன் விநியோகிப்பாளர்களையும் கணினியின் எதிர்காலப் பங்கு குறித்து சிந்திக்க வைத்தது.
hog : பன்றிப் பண்பு : முதன்மை நினைவகம் போன்ற கிடைக்கக் கூடிய ஆதாரங்களை மிகப் பெருமளவில் அல்லது தன்னந்தனியாகப் பயன்படுத்துகிற ஒரு செயல்முறை.
hold : பிடித்திரு.
holding time : பிடிமான நேரம் : ஒரு செய்தியை அனுப்புவதற்கு ஒரு செய்தித் தொடர்புச் சாதனம் பயன்படுத்தப்படும் காலஅளவு.
hold variable : பிடிமான மாறிலி : ஒரு மதிப்பளவினை இருத்தி வைத்துக் கொள்வதற்குப் பயன் படுத்தப்படும் ஒரு மாறிலி. எடுத்துக்காட்டு : கட்டுப் பாட்டுப் இடைமுறிவுத் தருக்க முறைக்காக முந்திய பதிவேட்டிலிருந்து மதிப்பளவினை இருத்தி வைத்தல்.
holes, procket : வழிப்படுத்து துளைகள்.
Hollerith card : ஹோலிரித் அட்டை : 80 செங்குத்து நிரைகளைக் கொண்ட துளையிடப் பட்ட அட்டை. ஒவ்வொன்றும் மேலிருந்து கீழாக 12 துளையிடு நிலைகளைக் கொண்டது. 80 எழுத்து, எண் தரவுகளை ஏற்கக் கூடியது. 90 செங்குத்து நிரைகள் மற்றும் 96 செங்குத்து நிரைகளைக் கொண்ட அட்டைக்கு மாறானது.
Hollerith code : ஹோலிரித் குறியீடு : துளையிடப்பட்ட அட்டைகளில் எழுத்து மற்றும் எண்ணைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு வகையான குறியீடு. ஹெர்மன் ஹோலிரித் என்பவரால் பெயரிடப்பட்டது. இவர் தான் துளையிடப்பட்ட அட்டை கணக்கீட்டு முறையை உருவாக்கியவர். ஒவ்வொரு அட்டை நிரையும் ஒரு எழுத்தைக் கொண்டது. ஒவ்வொரு பதின்ம எண்ணும் எழுத்தும், சிறப்பு எழுத்துகளும், ஒன்று, இரண்டு, மூன்று துளைகளால் குறிப்பிடப் படுகின்றன. இவை நிரையின் குறிப்பிட்ட வரிசை நிரல்களில் அமைக்கப்படுகின்றன.
Hollerith, Herman (1860-1929) : ஹோலரித். ஹெர்மன் (1860-1929) : புள்ளி விவர வல்லுநர் மற்றும் மக்கள் தொகைக் கணக் கெடுப்பு ஊழியர் என்ற வகையில், 1890ஆம் ஆண்டு கணக் கெடுப்பின்போது எளிமையான கூட்டல் மற்றும் வகைப்படுத்துதலுக்கு மின் எந்திரவியல் கருவிகள் மூலம் துளையிடப் பட்ட அட்டைகளைப் பயன்படுத்தும் முறையைப் பரிந்துரைத்தார். அவருடைய துளையிடப்பட்ட அட்டை கணக்கிடு கருவியை உற்பத்தி செய்ய அவர் அமைத்த நிறுவனம் ஐ. பி. எம். கார்ப்பரேஷன் நிறுவனத்தின் முன்னோடி ஆனது.
Hollerith machine : ஹோலரித் எந்திரம் : முதலாவது தானியங்கித் தரவு பகுக்கும் சாதனம். இது 1890இல் அமெரிக்காவில் மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்குப் பயன்படுத்தப்பட்டது. இதனை ஹெர்மன் ஹோலரித் என்பவர் கண்டுபிடித்தார். இது, கையினால் துளையிடும் அட்டையினையும், எண்ணுவதற்கு ஒர் அட்டவணைப்படுத்தும் எந்திரத்தையும் பயன்படுத்தியது. 1890இல் 10 ஆண்டுகளில் செய்திருக்கக்கூடிய பணியை, ஹோலரித் எந்திரத்தின் மூலம் ஈராண்டுகளில் முடிக்க முடிந்தது. இதனால், 50 இலட்சம் டாலர் மிச்சமாகியது. ஹோலரித் பின்னர் ஒரு நிறுவனத்தைத் தொடங்கி தமது எந்திரத்தை உலகெங்கும் விற்பனை செய்தார். இந்நிறுவனம் 1911 இல் IBM நிறுவனமாக உருமாறியது.
Hollerith tabulating/recording machine : ஹோலரித் அட்ட வணையிடும்/பதிவுசெய்யும் எந்திரம் : 1800களின் பிற்பகுதியில் ஹெர்மன் ஹோலரித் கண்டுபிடித்த மின் எந்திரப் பொறி. குறிப்பிட்ட இடங்களில் துளையிடப்பட்ட அட்டைகளில் பதியப்பட்ட தரவுகளைச் செயலாக்கும் எந்திரம். துளைகளின் மூலமாக மின்சுற்று நிறைவடைந்து சமிக்கைகள் உருவாக்கப்பட்டு எண்ணுகின்ற மற்றும் அட்டவணையிடும் எந்திரங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த எந்திரம் 1890ஆம் ஆண்டு அமெரிக்காவில் எடுக்கப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் பணிகளை மூன்றில் இரண்டு பங்கு குறைத்தது. பின்னாளில் ஹோலரித், டேபுலேட்டிங் மெஷின் கம்பெனியைத் தொடங்கினார். 1911ஆம் ஆண்டு இந்தக் குழுமம் இன்டர் நேஷனல் பிஸினஸ் மெஷின்ஸ் (IBM) என்னும் புகழ்பெற்ற நிறுவனமாக உருவெடுத்தது.
hologram : முழுமைப் படிமம் : லேசர் கதிர்கள் ஒன்றுடன் ஒன்று வெட்டிக் கொள்வதால் மெல்லிய காற்றில் உருவாக்கப்படும் முப்பரிமாண உருவங்கள்.
holographic : முழுமைப் படிமச்சேமிப்பு : ஒரு படச்சுருளில் பெருமளவுத் தரவுகளைச் சேமித்து வைத்தல்.
holographic store : முழுப் படிமச் சேமிப்பி : ஒளிப்பட முறையில் சேமித்து வைத்தல்.
holography : முழுமைப் படிமவியல் : ஒரு சேமிப்பு ஊடகத்தில் பன்முகப் பரிமாண ஒளிப் படங்கள் எடுப்பதன்மூலம் தரவுகளைச் சேமித்துவைக்கும் உத்தி.
holy war : புனிதப் போர் : 1. கணினித் துறையில் ஒரு குறிப்பிட்ட கருத்துரு அல்லது கோட்பாடு பற்றி கணினி வல்லுநர்களிடையே பரவலாக நடைபெறும் கசப்பான விவாதம். (எ-டு) நிரலாக்க மொழிகளில் பயன்படும் goto கட்டளை பற்றியது அல்லது எண்களை இரும எண் முறையில் (Binary format) சிறு முடிவன்/பெரு முடிவன் முறையில் பதியும் முறை பற்றியது. 2. அஞ்சல் பட்டியல், செய்திக்குழு மற்றும் ஏனைய நிகழ்நிலைக் கலந்துரையாடல்களில் உணர்வுபூர்வமான சர்ச்சைக்கிடமான பொருள் பற்றி நடைபெறும் விவாதம். (எ-டு) பாபர் மசூதி, வட அயர்லாந்து, கருக்கலைப்பு, கருணைக் கொலை போன்றவை. எடுத்துக் கொண்ட தலைப்புக்குப் புறம்பாகப் புனிதப் போருக்கு வழி வகுக்குமாறு கருத்துகளை முன் வைப்பது இணைய நாகரிகத் துக்கு (Netiguette) எதிரானது.
home : இல்லம்; தொடக்கம் : முனையத் திரை ஒன்றின் இடது புற மேல் மூலையில் உணர்த்து குறியீடு தோன்றும் துவக்க இடம்.
home address : இருப்பிட முகவரி : பன்முக வட்டு நினைவகத்தின் நேர்வுகளில், ஒவ்வொரு தடத்திலும் சேமித்து வைக்கப்பட்டுள்ள ஒரு புலம். இதில், அந்தத் தடத்திலுள்ள தரவுவை அணுகுவதற்குப் பயன்படுத்தப்படும் எழுத்து/படிப்பு முனைகளின் எண்ணும், நீள் உருளையின் எண்ணும் அடங்கியிருக்கும்.
home button : பிறப்பகக் குமிழ் : ஒரு கோப்பின் அல்லது ஒரு செயற்பாட்டுத் தொகுதியின் தொடக்கத்தைக் குறிக்கும் உருவப்படம். home computer : குறுங்கணினி : ஆட்டங்களை விளையாட இல்லங்களில் பயன்படுத்தப்படுகிறது. வீட்டுப் பயன்பாட்டுச் சாதனங்களைக் கையாளவும், மாணவர்களுக்கு வீட்டுப் பாடங்களைச் செய்யவும் வணிகக் கணக்குகளைப் போடவும் மேலும் பலவகையான பணிகளைச் செய்யவும் பயன்படுகிறது.
home-grown software : தாமே ஆக்கிய மென்பொருள் : கணினி முறைமை ஒன்றைப் பயன் படுத்துவோரால் எழுதப்பட்ட நிரலாக்கத்தொகுப்பு.
home key : ஆரம்பச் சாவி : உணர்த்து குறியீட்டைத் தனது இல்ல நிலைத் திரையின் இடது மேல்மூலைக்குக் கொண்டு வருவதற்கான விசைப்பலகை இயக்கம்.
homeostasis : சமநிலை : ஒரு பொறியமைவில் உட்பாட்டு வெளிப்பாட்டுத் தேவைகள் சரி நிகராக இருக்கும்போது ஏற்படும் சமநிலை.
home management software : இல்ல மேலாண் மென்பொருள் : வீட்டைப் பராமரிக்கவும், திட்ட மிட்ட வகையில் கண்காணிக்கவும் தயாரிக்கப்பட்ட நிரலாக்கத் தொகுப்பு. எடுத்துக்காட்டாக சரிபார்த்தல், உணவுக் கோப்பு, இருப்புச் சரிபார்த்தல், கணக்கிடு நிரலாக்கத் தொகுப்பு ஆகியவற்றைக் கொண்டது.
home office : இல்ல அலுவலகம்; வீட்டு அலுவலகம் : 1. வீட்டிலேயே அமைத்துக் கொள்ளும் அலுவலகம். 2. ஒரு நிறுவனத்தின் தலைமை அலுவலகம். 3. ஓர் அலுவலகத்துக்குத் தேவையான அனைத்து வகை வசதிகளும் உள்ளடங்கிய கணினியைக் குறிக்கவும் இச்சொல் பயன்படுகிறது.
home page : முகப்புப் பக்கம் : 1. வைய விரி வலையில் (World Wide Web) ஒரு மீவுரை (hypertext) முறைமையில் தொடக்கப் பக்கமாக அமைக்கப்படும் ஒர் ஆவணம். 2. மைக்ரோ சாஃப்டின் இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் தொடக்கப் பக்கம் இவ்வாறு அழைக்கப்படுகிறது. 3. ஒரு வலைத்தளத்தில் நுழையும் போது காட்சியளிக்கும் முதல் பக்கம்.
home record : இல்ல ஆவணம் : நிறுவனம் ஒன்றின் இணைப்பு முறையில் உள்ள ஆவணத் தொடரில் முதல் ஆவணம்.
home row : இல்ல வரிசை : விசைகளை இயக்குவதற்கு இடையில் பயனாளர் தங்கள்
45 விரல்களை ஒய்வாக வைக்கும் விசை வரிசை.
home server : முதன்மை வழங்கன்.
homogeneous : ஒரு படித்தான; ஒரு முகப்பட்ட
homogeneous environment : ஒரு படித்தான சூழல் : ஒரு நிறுவனத்துக்குள் ஒரே தயாரிப்பாளரின் வன்பொருளையும் ஒரே தயாரிப்பாளரின் மென்பொருள்களையும் பயன்படுத்துகின்ற ஒரு மென்பொருளாக்கச் சூழல்.
homogeneous network : ஒரு படித்தான பிணையம் : அனைத்து வழங்கன் கணினிகளும் ஒன்றுபோல இருந்து, ஒரேயொரு நெறிமுறையில் (protocol) இயங்குகின்ற கணினிப் பிணையம்.
homunculus : மூளையியக்கப் படிவம் : எண்ணற்ற, மீள் வளைவுகளைக் கொண்ட மூளையின் மாதிரி. செயற்கை நுண்ணறிவு ஆய்வுகளில் பயன்படுத்தப்படுவது.
Honeywell : ஹானிவெல் : கணினி கருவிகளைத் தயாரிக்கும் பெரிய நிறுவனம்.
hook : கொக்கி : செயல் வரைவுகளில், எதிர்கால விரிவாக்கத்திற்கான தருக்க முறை இடையீடுகள். இந்தக் கொக்கிகளை ஒரு சில புறவாலாயங்களை அல்லது செயற்கூறு வரவழைக்க மாற்ற லாம். அல்லது கூடுதல் செயல் விரைவுகள் சேர்க்கப்படும் போது சரியான இடத்தில் அமைக்கலாம்.
hooked vector : கொக்கியிட்ட அளவுச் சரம் : ஒரு சொந்தக் கணினியிலுள்ள (PC) அகப்படுத்தப்பட்ட இடையீடு. இடையீட்டு அளவுச் சர அட்டவணையில் ஒரு குறிப்பிட்ட இடையீட்டுக்கான சுட்டு முனை, அந்த இடையீட்டினைச் சீர் செய்வதற்காக ஒரு புதிய வாலாயத்திற்குத் தாவு மாறு மாற்றமைவு செய்யப்படுகிறது.
hookemware : தடையற்ற மென் பொருள் : மென்பொருளின் அதிக விரிவான பதிப்பினை வாங்குவதற்குப் பயனாளரை ஈர்ப்பதற்காக வடிவமைக்கப் பட்டுள்ள குறிப்பிட்ட எண் ணிைக்கையிலான அம்சங்களைக் கொண்ட தங்குதடையற்ற மென்பொருள்.
hopper : தத்தி.
hopper, card : அட்டைத் தத்தி.
Hopper, Grace : ஹோப்பர் கிராஸ் : கணித வல்லுநர், மார்க் -1 மற்றும் யுனிவாக் கணினிகளுக்கான நிரலாக்கத் தொகுப்பை உருவாக்கியவர். பின்னர் கணினி மொழியில் பேரும் புகழும் பெற்றார். முதல் நடைமுறையில் பயன்படும் compiler நிரலாக்கத் தொகுப்பை உருவாக்கினார். Cobol-ஐ உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்தார்.
horizontal feed : கிடைமட்ட ஊட்டு.
horizontal frequency : கிடைமட்ட அலைவரிசை.
horizontal market software : கிடைமட்டச் சந்தை மென் பொருள் : அனைத்து வகையான தொழில், வணிக நடைவடிக்கைகளுக்கும் பயன்படுத்தக் கூடிய சொல்செயலி (Word Processor) போன்ற பயன்பாட்டு நிரல்கள். வேறுசில மென்பொருள்கள் குறிப்பிட்ட தொழில் துறைக்கு மட்டுமே பயன்படும்படி தயாரிக்கப்படுகின்றன.
horizontal motion index : கிடைமட்ட இயக்கக் குறி; கிடைமட்ட இயக்கக் குறி அட்டவணை : ஒரு கிடைமட்டத் திசையில் ஒர் அச்சுச் சுருள் முனை முன்னே நகர்த்தக்கூடிய பெருமத் தொலைவு. இது அச்சடிப்பான் சுழற்சியின் அளவீடாகும். பெயர்ச் சுருக்கம் : HMI.
horizontal resolution : கிடைமட்டத் தெளிவு : ஒரு கிடைமட்டக் கோட்டின் மீதுள்ள கூறுகளின், அல்லது புள்ளிக் குறிகளின் (ஒரு அச்சு வார்ப்புருவிலுள்ள நிரைகளின்) எண்ணிக்கை. இது, செங்குத்துத் தெளிவிலிருந்து மாறுபட்டது.
horizontal retrace : கிடைமட்ட பின் வாங்கல் : பரவல் வருடு ஒளிக்காட்சி திரைக்காட்சியில் ஒரு வருடுவரியின் வலது ஒரத்திலிருந்து அடுத்த வரியின் இடப்புற ஒரம்வரை (வரியின் தொடக்கம்வரை) மின்னணு ஒளிக்கற்றை நகர்வது.
horizontal scan frequency : கிடை நுண்ணாய்வு அலை வெண் : ஒளிப்பேழைத் திரையில் ஒரு வினாடி நேரத்தில் ஒளிர்வூட்டப்படும் வரிகளின் எண்ணிக்கை. எடுத்துக்காட்டு : வினாடிக்கு 60 மடங்கு வலுவூட்டப்பட்ட 400 வரிகளின் தெளிவுக்கு 24KHz நுண்ணாய்வு விகிதம் தேவைப்படுகிறது. இது, தொலைக்காட்சியில் கிடைமட்ட ஒருங்கிசைவு அலைவெண் போன்றது. இது செங்குத்து நுண்ணாய்வு அலை வெண்ணிலிருந்து மாறுபட்டது.
horizontal scan rate : கிடைமட்ட வருடி வேகம். horizontal scrolling : இட, வல நகர்த்தல்; கிடைமட்ட நகர்த்தல் : திரையில் ஒரு நேரத்தில் கொள்ளும் தகவல்களைவிட கூடுதலான தகவல்களைப் பயனாளர் காணும் வகையில் கிடைநிலை தகவல் அல்லது உரையை நகர்த்துதல்.
horizontal synchronization : கிடைமட்ட ஒத்திசைவு : பரவல் திரைக்காட்சி (Raster display) முறையில் மின்னணுக் கற்றை இடப்புறமிருந்து வலப்புறம், மறுபடி வலப்புறமிருந்து இடப்புறம் நகர்ந்து வரிவரியாக ஒர் உருத்தோற்றத்தை உருவாக்குவதில் பின்பற்றப்படும் நேரக் கட்டுப்பாடு. கோணம் நிலைத்த மடக்கி (phase locked loop) எனப்படும் மின்சுற்று கிடைமட்ட ஒத்திசைவு சமிக்கையைக் கட்டுப்படுத்துகிறது.
host : ஒம்புநர்; புரவலர் : ஒர் இணையத்திலுள்ள ஒரு நுழைவாயில் கணினி. ஒரு விருந்தில் விருந்தளிப்பவரையும் குறிக்கிறது.
host adapter : ஒம்பு தகவமைப்பி : எந்த வடிவளவையும் கொண்ட ஒரு கணினியுடன் ஒரு புறநிலை அலகினை இணைக்கிற சாதனம். இதில் ஒரு கட்டுப்படுத்தியைவிடக் குறைவான மின்னணுவியல் அடங்கியுள்ளது. எடுத்துக் காட்டு : IDE வட்டு, உள்ளமைந்த கட்டுப்படுத்தியைக் கொண்டிருக்கிறது. இது, ஒரு IDE அல்லாத ஆயத்தத் தாய்ப் பலகையுடன் ஒரு IDE ஒப்பு தகவமைப்பியின் மூலம் இணைக்கப்பட்டிருக்கிறது.
host based : ஒம்புநர் அடிப்படை : ஒரு பெரிய, மையக் கணினி யமைவு மூலம் கட்டுப்படுத்தப் படுகிற செய்தித் தொடர்புப் பொறியமைவு.
host computer : புரவலர் கணினி ; ஒம்பு கணினி : 1. தொலைவில் முனையங்களுக்கும் அதனுடன் இணைக்கப்பட்டுள்ள கருவிகளுக்கும் கணினித் திறனை வழங்குகிற மைய வகைப்படுத்தும் அலகு. 2. தொலைத் தகவல் தொடர்புக்கு அல்லது வளாக இணைய இணைப்புக்குப் பொறுப்பான கணினி. 3. கணினி இணையம் ஒன்றில் மையக் கட்டுப்பாட்டுக் கணினி.
host language : புரவலர் மொழி; ஒம்பு மொழி : மற்றொரு மொழி பொதிந்துள்ள அல்லது உள்ளடங்கிய நிரலாக்கத் தொகுப்பு மொழி.
host mode : ஒம்பு முறை : மனிதர் உதவியின்றி வருகிற தொலைபேசி அழைப்புக்குப் பதிலளிக்கவும், தகவல்களைப் பெறவும் ஒரு கணினியை அனுமதிக்கிற செய்தித் தொடர்பு முறை.
host name : புரவன் பெயர்; புரவலர் பெயர்; ஒம்புநர் பெயர் : இணையத்திற்குள் இயங்கும் ஒரு குறிப்பிட்ட பிணையத்திலுள்ள ஒரு குறிப்பிட்ட வழங்கன் கணினியின் (Server) பெயர். ஒர் இணைய தள முகவரியிலுள்ள சொற்களில் இடக்கோடியில் உள்ள பெயர் பெரும் பாலும் அத்தளத்துக்குரிய புரவன் கணினிப் பெயராய் இருக்கும். (எ-டு) chn. vsnl. net. in என்ற முகவரியில் chn என்பது, விஎஸ்என்எல் நிறுவனத்துப் புரவன் கணினிப் பெயர்.
host timed out : புரவன் நேரக் கடப்பு : ஒரு டீசிபி/ஐபி (TCP/IP) பிணைய இணைப்பில் தரவு பரிமாற்றம் நடைபெறும்போது, ஒரு குறிப்பிட்ட நேர எல்லைக்குள் (சில நிமிடங்கள்) தொலை நிலைப் புரவன் கணினி பதிலிறுக்கத் தவறுகையில் ஏற்படும் பிழைநிலை. இந்நிலை பல்வேறு காரணங்களினால் ஏற்படலாம். புரவன் கணினி செயலிழந்து போவதால் அல்லது பிணையத்திலிருந்து துண்டிக்கப்பட்டிருப்பதால் ஏற்படலாம். ஆனால் பயனாளருக்குக் கிடைக்கும் பிழை சுட்டும் செய்தி, பிழைநிலைக் காரணத்தைத் துல்லியமாகச் சொல்லும் என்று எதிர்பார்க்க முடியாது.
host unreachable : புரவன் எட்டா நிலை : ஒரு டீசிபி/ஐபீ (TCP/IP) பிணைய இணைப்பில் பயனாளர் அணுக விரும்பும் குறிப்பிட்ட புரவன் கணினியுடன் இணைப்பு ஏற்படுத்திக் கொள்ள முடியாதபோது நிகழும் பிழைநிலை. பிணையத் திலிருந்து துணிக்கப்பட்டதாலோ, செயலிழப்பின் காரண மாகவோ இந்நிலை ஏற்படலாம். பிழை சுட்டும் செய்தி, காரணத்தை துல்லியமாகத் தெரிவிக்கலாம், தெரிவிக்காமலும் போகலாம்.
hot : சூடான : தனிச்சிறப்பான, அவசர ஆர்வமூட்டும், மிகவும் புகழ்பெற்ற.
hot docking : சூடான இணைப்பு; நடமாடும் இணைப்பு : பயணம் செய்துகொண்டிருக்கும்போதே ஒரு மடிக்கணினியை வேறொரு தலைமைக் கணினியுடன் பிணையமுறையில் இணைத்துக் கொள்ளல். அவ்வாறு இணைத்துக் கொண்டு தலைமைக் கணினியில் ஒளிக்காட்சி, திரைக் காட்சி மற்றும் ஏனைய பணிகளையும் இயக்குதல். hot insertion : சூடாய்ச் செருகல் : ஒரு கணினி அமைப்பு இயக்கத்தில் இருக்கும்போதே ஒரு புறச் சாதனத்தை அல்லது விரிவாக்க அட்டைகளைச் செருகுதல். தற்காலத்திய புதிய மடிக் கணினியில் பீசிஎம்சிஐஏ கார்டுகளை இவ்வாறு செருக முடியும். உயர்நிலை வழங்கன் கணினிகளும் (servers) இத்தகைய செருகலை அனுமதிக்கின்றன. இதனால் இயங்காநேரம் குறைகிறது.
Hot Java : ஹாட்ஜாவா : சன் மைக்ரோசிஸ்டம்ஸ் நிறுவனம் உருவாக்கிய ஒர் இணைய உலாவி. வலைப் பக்கங்களில் உள்ளுறையும் ஜாவா பயன்பாடுகள் மற்றும் குறு நிரல்களை (applets) இயக்கும் வகையில் உருவாக்கப்பட்ட உலாவி.
hot key : தூண்டு விசை : கணினியில், தற்போது என்ன ஒடிக்கொண்டிருப்பினும் அதைப் பொருட்படுத்தாமல் ஒரு சில செயற்பணிகள் நிகழும்படி செய்கிற விசை அல்லது விசை களின் கூட்டு இணைப்பு. இது பொதுவாக, நினைவகத்தில் அமைந்திருக்கும் ஒரு செயல் முறையைத் தூண்டி விடுகிறது.
hot link : நேர் இணைப்பு : செயல் முறைகளிடையே முன்னரே வரையறுக்கப்பட்ட இணைப்பு. இதனால், ஒரு தரவு தளத்தில் அல்லது கோப்பில் உள்ள தரவுகள் மாற்றப்படும் போது, மற்ற தரவுத் தளங்களிலும், கோப்புகளிலுமுள்ள தொடர்புற்ற தரவுகளும் புதுப் பிக்கப்படுகின்றன.
hot list : சூடான பட்டியல் : பயனாளர் ஒர் இணைய உலாவி மூலம் அடிக்கடி பார்வையிடும் வலைப் பக்கங்களின் முகவரித் தொகுப்பு. பட்டியலிலிருந்து பயனாளர் விரும்பும் பக்கத்தை ஒரே சொடுக்கில் அணுக முடியும். இத்தகைய பட்டியல் நெட்ஸ்கேப் நேவிக்கேட்டர் மற்றும் லின்ஸ்க்கில் புத்தகக் குறி (Book mark) எனவும், மைக்ரோசாஃப்ட் இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் விருப்பத் தளக் கோப்புறை (Favourites Folder) எனவும் வழங்கப்படுகிறது.
hot plugging : சூடான இணைப்பு : இயங்கிக் கொண்டிருக்கும்போதே ஒரு பொறியில் இன்னொரு புறச் சாதனத்தை இணைத்தல். கணினி இயங்கிக் கொண்டிருக்கும்போதே ஒரு விரிவாக்க அட்டை அல்லது இணக்கி, அச்சுப்பொறி போன்ற புறச் சாதனத்தைப் பொருத்துதல்.
hot site : முழுத் தளம் : முழுமையான தயாரிப்புகளைக் கொண்ட கணினி மையம். நெருக்கடி நிலையின்போது பயன்படுத்தத் தயார்நிலையில் இருப்பது.
hot spot : சுட்டு நுனி : சுட்டியைச் சொடுக்கும்போது பாதிக்கப்படுகிற ஒரு திரையின் மீது படக் கூறுகளின் துல்லிய மான அமைவிடம். எடுத்துக்காட்டு : ஒர் அம்புச் சுட்டு முனையின் நுனிப்பகுதி. ஒரு விரல் சுட்டு முனையின் நுனி.
hot wired : ஹாட் ஒயர்டு : ஒயர்டு இதழின் வலைத்தளம். இணையப் பண்பாடு குறித்த கிகசிசுக்கள் மற்றும் பிற தரவுகள் அடங்கிய தளம் முகவரி : http : //www. hotwired. com/frontdoor.
hot zone : வெம்மை மண்டலம் : சில சொல் பகுப்பிகளில் பயனாளர் வகைப்படுத்தும் பகுதி. பக்கத்தின் வலது விளிம்பில் தொடங்கி, பக்கத்தின் இடது பக்கத்தில் 7 இடைவெளிகள் வரை நீள்கிறது. அந்த வெப்பப் பகுதியில் ஒரு சொல் முடிவடைந்தால், அடுத்த எழுத்தை அடுத்த வரியின் தொடக்கத்தில் தானாகவே, முறைமை பொருத்துகிறது.
housekeeping : இல்லப் பராமரிப்பு; ஒழுங்கமைப்பு : விரும்பும் பயனைத் தர நேரடியாகப் பங்களிக்காத கணினியின் இயக்கச் செயல்கள். ஆனால் அவை நிரல் தொகுப்பு ஒன்றின் பகுதியாகும். செயல்முறையை தொடங்குதல் மற்றும், நூல் பராமரிப்பு எனும் இயக்கங்களை தூய்மைப்படுத்தும் செயல்கள் தேவையற்ற கோப்புகளை வட்டுச் சேமிப்பகத்திலிருந்து நீக்குதல் ஆகியவை இதற்கு எடுத்துக்காட்டுகளாகும்.
housekeeping tasks : துப்புரவுப் பணிகள் : ஒரு மென்பொருள் பயன்பாட்டினால் அல்லது செயற்பாட்டுப் பொறியமைவினால் செய்யப்படும் பின்னணிப் பணிகள். எடுத்துக் காட்டுகள் : தற்காலிகச் சேமிப்பு அமைவிடங்களுக்குத் தரவுகளைப் படித்தல் மற்றும் எழுதுதல்; கோப்புகளை உருவாக்குதல்; குறிப்பின்றி அணுகும் நினைவகத்தின் (RAM) பரப்புகளைத் துப்புரவாக்குதல்.
housing : உறை; கூடு : காபினெட் அல்லது பிற மேல்உறை.
HPFS : ஹெச்பீ. எஃப்எஸ் : உயர் செயல்திறன் கோப்பு முறைமை என்று பொருள்படும் High Performance File System என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஒஎஸ்/2 இயக்க முறைமையின் 1. 2 மற்றும் அதற்குப் பிந்தைய பதிப்புகளில் இருக்கும் கோப்பு முறைமை. HPGட : ஹெச்பீஜிஎல் : ஹீவ்லெட் - பேக்கார்டு வரைகலை மொழி எனப் பொருள்படும் Hewelet Packard Graphics Language என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். வரைவு பொறிகளில் (Plotters) படிமங்களை அச்சிடுவதற்காக உருவாக்கப்பட்ட மொழி. ஒரு ஹெச்பீஜிஎல் கோப்பு, ஒரு வரைகலைப் படிமத்தை மீட்டுரு வாக்கம் செய்வதற்கான ஆணைகளையும் கொண்டிருக்கும்.
HPIB : ஹெச்பீஐபி : ஹீவ்லெட் - பேக்கார்டு இடைமுகப் பாட்டை என்று பொருள்படும் Hewlest-Packard Interface Bus என்ற தொடரின் தலைப் பெழுத்துக் குறும்பெயர்.
HP/UX or HP-UX : ஹெச்பி/யுஎக்ஸ் அல்லது ஹெச்பி-யுஎக்ஸ் : ஹீவ்லெட்-பேக்கார்டு யூனிக்ஸ் என்று பொருள்படும் Hewlett Packard UNIX என்ற தொடரின் சுருக்கம். யூனிக்ஸ் இயக்க முறைமையின் ஒரு வடிவம். குறிப்பாக, ஹீவ்லெட் பேக்கார்டின் பணிநிலையக் கணினிகளில் இயக்குவதற்காக வடிவமைக்கப்பட்டது.
. hqx : . ஹெச்கியூஎக்ஸ் : பின்ஹெக்ஸ் (BinHex) எண்முறையில் குறிமுறைப்படுத்தப்பட்ட கோப்பின் வகைப்பெயர் (Extension).
. hr : . ஹெச்ஆர் : ஒர் இணைய தளம் குரோசியா நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப் பெயர்.
HREF : ஹெச்ரெஃப் : மீவுரை மேற்குறிப்பு என்று பொருள்படும் Hypertext Reference என்ற தொடரின் சுருக்கச்சொல். ஒரு ஹெச்டிஎம்எல் ஆவணத்தில் பயன்படுத்தப்படும் ஒரு குறி சொல் (tag). இணையத்திலிருக்கும் இன்னோர் ஆவணத்தைச் சுட்டும் தொடுப்பு.
HSB : ஹெச்எஸ்பி : நிறப் பூரிதம் - ஒளிர்மை (பிரகாசம்) என்று பொருள்படும் (Hue Saturation Brightness) என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். சக்கர வடிவில் அமைந்த ஒரு நிறமாலை அமைப்பு. 0° என்பது சிவப்பு; 60°-மஞ்சள்; 120° -பச்சை; 180° -வெளிர்நீலம்; 240° -நீலம், 300° -செந்நீலம். வெண்மை நிறத்தின் விழுக்காடு அளவு பூரிதத்தைக் குறிக்கிறது.
HSP : ஹெச்எஸ்பீ (உயர்வேக அச்சிடு கருவி) : High Speed Printer என்பதன் குறும்பெயர்.
HSV : ஹெச்எஸ்வி : நிறப் பூரித மதிப்பு எனப் பொருள்படும் Hue Satuaration Value என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர்.
. ht : . ஹெச்டி : ஒர் இணைய தள முகவரி ஹைத்தி தீவைச் சார்த்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப் பெயர்.
. htm : . ஹெச்டிஎம் : வலைப் பக்கங்களாகப் பயன்படும் ஹைப்பர் டெக்ஸ்ட் மார்க்அப் மொழியின் (HTML) கோப்புகளை அடையாளம் காட்டும் எம்எஸ்-டாஸ்/விண்டோஸ் 3. எக்ஸ் கோப்புவகைப் பெயர். எம்எஸ்-ட்ாஸ் மற்றும் விண்டோஸ் 3. எக்ஸ் ஆகியவை மூன்றெழுத்து வகைப்பெயர்களையே புரிந்து கொள்ளும் என்பதால் . html என்னும் நான்கெழுத்து வகைப் பெயர் மூன்றெழுத்தாகக் குறுக்கப்பட்டு விடுகிறது.
. html : . ஹெச்டிஎம்எல் : வலைப் பக்கங்களாகப் பயன்படும் ஹைப்பர் டெக்ஸ்ட் மார்க்அப் மொழியின் (HTML) கோப்புகளை அடையாளங் காட்டும் வகைப் பெயர்.
HTML document : ஹெச்டிஎம்எல் ஆவணம்.
HTML editor : ஹெச்டிஎம்எல் உரைத் தொகுப்பி.
HTTP : ஹெச்டீடீபீ : மீவுரைப் பரிமாற்ற நெறிமுறை என்று பொருள்படும் Hypertext Transfer Protocol என்ற தொடரின் தலைப் பெழுத்துக் குறும்பெயர். வைய விரிவலையில் தரவுவைப் பெறுவதற்குப் பயன்படும் கிளையன் /வழங்கன் (Client/Server) நெறிமுறை ஆகும். '
HTTPD : ஹெச்டீடீபீடி : மீவுரை பரிமாற்ற நெறிமுறை ஆவியுரு எனப் பொருள்படும் Hypertext Transfer Protocol Daemon என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஒரு சிறிய வேகம் மிக்க ஹெச்டீடீபீ வழங்கன் (server) கணினி. இது என்சி எஸ்ஏ நிறுவனத்தின் இலவசச் சேவையகம்.
HTTPS : ஹெச்டீடீபீஎஸ் : விண்டோஸ் என்டியில் வலை வழங்கனாகச் செயல்படும் மென்பொருள். ஐரோப்பிய மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் என்டீ அகாடெமி சென்டர் (EMWAC) ஸ்காட்லாந்து நாட்டு எடின்பரோ பல்கலைக் கழகத்தில் உருவாக்கியது. இணையத்திலிருந்து இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். வெய்ஸ் (WAIS) எனப்படும் தேடு திறனைக் கொண்டது.
HTTP server : ஹெச்டீடீபீ வழங்கன் : 1. இணைய உலாவியான கிளையன் மென்பொருளின் கோரிக்கையை ஏற்று ஹெச்டீ எம்எல் ஆவணங்களையும் தொடர்புடைய கோப்புகளையும் ஹெச்டிடிபீ நெறிமுறையைப் பயன்படுத்தி அனுப்பிவைக்கும் வழங்கன் மென்பொருள். கேட்கப்பட்ட ஆவணம் அல்லது கோப்பு வழங்கப்பட்டவுடன் கிளையனுக்கும் வழங்கனுக்கும் இடையே உள்ள தொடர்பு முறிந்துவிடும். வைய வலை மற்றும் இணைய தளங்களில் ஹெச்டீடீபீ வழங்கன்கள் பயன்படுத்தப்படுகின்றன.
HTTP status codes : ஹெச்டீடீபீ நிலைமைக் குறியெண்கள் : தரவு பெறுவதற்கான கோரிக்கையின் விடைகுறித்து ஹெச்டீடீபீ வழங்கன் (server) அனுப்பிவைக்கும் மூன்றிலக்கக் குறியெண். குறியெண் 1இல் தொடங்கினால், கிளையன் கணினி தான் அனுப்பும் விவரங்களை இன்னும் அனுப்பி முடிக்கவில்லை என்றும், 2-எனில் வெற்றிகரமான விடை என்றும், 3 எனில் கிளையன் இனி, மேல்நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது என்றும், 4 எனில் கிளையன் பிழை காரணமாய் விடைபெறும் முயற்சி தோற்றது என்றும், 5 எனில் வழங்கன் பிழை காரணமாய்த் தோற்றது என்றும் பொருள்.
. hu : . ஹெச்யூ : ஒர் இணைய தளம் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.
hub : குவியன் இணைப்பு மையம் : ஒர் நட்சத்தி அமைவிடத்தில் செய்தித் தொடர்பு இணைப்புகளுக்கான மைய விசையமைப்புச் சாதனம். இது, அனுப்பீட்டுக்கு உதவி புரியவோ, செய்திப் பரிமாற்ற நடவடிக்கைக்கு வலுவூட்டும் குறியீடுகளை மறு உருவாக்கம் செய்யவோ செய்யாது. இந்த குவியன்கள், ஒரு மின் இணைப்புத்தொகுதி அமைவிடங்களுடன் சேர்க்கப்படலாம். எடுத்துக் காட்டு : இடர்ப்பாடுகளை அகற்றும் திறனை அதிகரிப்பதற்காக ஒர் ஈதர்னெட் கணினி இணைப்பை ஒர் ஸ்டார் அமைப்பாக மாற்றவல்லது.
hub, remote access : சேய்மை குவியம்; தொலை அணுகு குவியம்.
hub ring : குவிய வளையம்; அச்சு மைய வளையம் : 5. 25" நெகிழ்வட்டின் துளையினுள் விறைப்புத் தன்மைக்காக அழுத்தி வைக்கப்படும் தட்டையான வளையம். இயக்கியின் பற்று வளையம், அச்சு மைய வளையத்தைக் கதிர்மீது அழுத்துகிறது.
hue : வண்ணச் சாயல்; நிறம் : கணினி வரைகலையில், ஒரு குறிப்பிட்ட வண்ணத்தின் ஒரு குறிப்பிட்ட வண்ணச் சாயல்.
Huffmann coding : ஹஃப்மன் குறியீட்டு முறை : இடப்பரப்பு வடிவங்களில் செயற்படுகிற உருக்காட்சி அடர்த்திச் செய்முறை. இது JPEG படிநிலை நெறிமுறையின் ஒரு பகுதி. புள்ளியியல் அடர்த்தியாக்கமுறை. இது மாறுகிற நீளத் துண்மிச் சரங்களாக எழுத்துகளை மாற்றுகிறது. அடிக்கடி வரும் எழுத்துகள், மிகக் குறுகிய துண்மிச் சரங்களாக மாற்றப்படுகின்றன. மிக அருகில் வரும் எழுத்துகள், மிக நீளமான சரங்களாக மாற்றப்படும். அடர்த்திச் செய்முறை இருவழிகளில் செயற்படுகிறது. முதல் வழியில் தரவு தொகுதிப் பகுப்பாய்வு செய்யப்படுகின்றது. இது, அதன் உள்ளடக்கங்களின் அடிப்படையில் ஒரு மர உருமாதிரியை உருவாக்குகிறது. இரண்டாவது வழியில், இந்த உருமாதிரி வழியாக தரவுகள் அடர்த்தியாக்கம் செய்யப்படுகின்றன.
Huffman tree : ஹஃப்மன் மரம்; ஹஃப்மன் மரவுரு : குறைந்த பட்ச மதிப்பீடுகளைக் கொண்ட மரம். Minimal tree and optimal merge tree என்பதைப் பார்க்கவும்.
human biocomputer : மனித உயிரியல் கணினி : ஒரு கணினி போல் செயற்படும் மனித மூளை. இதில் மூளையின் முக்கிய பகுதி, ஒரு பகுத்தறிவு அல்லது உள்ளுணர்வு அறிவாற்றலின் பல்வேறு கூறுகளுக்கு ஆதரவாகத் தனிப்பண்பாக்கம் செய்யப்படுகிறது.
human/engineering : மாந்தப் பொறியியல் : மனிதர்கள் எளிதாகவும் வசதியாகவும் கையாளத் தக்கவகையில் பொருள்களை வடிவமைத்தல் தொடர்பான ஆய்வு. ergonomics என்றும் கூறுவர்.
human / machine interface : மாந்த/எந்திர இணைமுக எல்லை ; மனிதன்/பொறி இடை முகம் : எந்திரங்களுடன் மனிதர்கள் இணைந்து செயல்படும் எல்லை.
human mind model : மனித அறிவு மாதிரியம்.
human oriented language : மனிதர் சார்ந்த மொழி : ஒரு கணினிச் செயல் முறைப்படுத்தும் மொழி. இது, அன்றாடம் பேசப்படும் மொழியில் உள்ளது போன்ற சொற்களை உடையது. எடுத்துக்காட்டு : Basic, Cobol. humanware : மனிதப் பொருள்
hung : தொங்கல் : கணினி செயற்படுவது திடீரென நின்று விடுவதைக் குறிக்கப் பயன்படும் சொல்.
hybrid circuit : கலப்பு மின்சுற்று : அடிப்படையிலேயே முற்றிலும் வேறுபாடான உறுப்புகளைப் பயன்படுத்தி ஒரே மாதிரியான பணியைச் செய்தல். வெற்றிடக் குழாய்கள் (Vacuum tubes) மற்றும் மின்மப் பெருக்கிகளை (Transisters) பயன்படுத்தி உருவாக்கப்படும் தொகுப்பிசை பெருக்கிகளை (Stereo amplifier) எடுத்துக்காட்டாகக் கூறலாம்.
hybrid computer : கலப்பினக் கணினி : இலக்கமுறை (Digital) மற்றும் தொடர்முறை (analog) மின்சுற்றுகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட கணினி.
hybrid computer system : கலப்பின கணினி முறைமை : அலை நிலை மற்றும் எண்ணியல் கருவிகளைப் பயன்படுத்தும் முறைமை.
hybrid microcircuit : கலப்பு நுண் மின்சுற்று வழி : பல்வேறு ஒருங்கிணைந்த மின்சுற்று வழிகளையும் தனிவேறு அமைப்பிகளையும் ஒரு மண்பலகை மீது ஏற்றி அமைக்கப்பட்டுள்ள மின்னணுவியல் மின்சுற்று வழி. இது, இராணுவ மற்றும் செய்தித் தொடர்புப் பயன்பாடுகளில் பயன்படுத்தப்படுகிறது.
hybrid network : கலப்பு இணையம் : செய்தித் தொடர்புகளில், பல்வேறு விற்பனையாளர்களிடமிருந்து வாங்கப்பட்ட சாதனங்களினாலான ஒர் இணையம்.
hybrids : கலப்பின வகை : பல்வேறு தொழில் நுணுக்க வல்லுநர்களின் சிறு இணைப்புகளை இணைத்து ஒரே தளத்தில் உருவாக்கப்பட்ட இணைப்புகள். ஓரின ஒருங்கிணைப்பு என்பதற்கு மாறானது.
hydra (Hybrid Document Reproduction Apparatus) : ஹைட்ரா (கலப்பு ஆவணப் படிப் பெருக்கக் கருவி) : ஒரே எந்திரத்தில் அமைந்துள்ள ஒர் அச்சடிப்பி, ஒளிப்படப் படியெடுப்பி, நுண்ணாய்வுக் கருவி, தொலைநகல் ஆகியவற்றின் தொகுதி. இது ஒத்தியல்பான குறியீடுகளை ISDN, BRI குறியீடுகளாக மாற்றுகிறது. "ஆஸ்டின் மாக் டெவலப்மென்ட் அசோசி யேஷன்" தயாரித்துள்ள இந்தச் சாதனம், மெக்கின்டோஷ் வரை கலை அட்டைப் பணித்திறனைச் சோதனை செய்கிறது.
hyper - access : மிகை அனுகுதல் : ஹில்கிரேவ்" என்ற அமை வனம் தயாரித்துள்ள சொந்தக் கணினி (PC) செய்தித்தொடர்புச் செயல்முறை. இது தரவு செறிவாக்கத்தை அளிக்கிறது. தனக்கென ஒரு வரிவடிவ மொழியை உடையது. இது, ஏராளமான முனையங்களுக்கும், தரவு தொடர்பு நெறிமுறைகளுக்கும் உதவுகிறது.
hyperCard : மிகை திறன் அட்டை : "ஆப்பிள்" (Apple) என்ற கணினி அமைவனம் தயாரித்துள்ள பயன்பாட்டு மேம்பாட்டுப் பொறியமைவு. இது, மெக்கின்டோஷ் மற்றும் ஆப்பிள் 11 GSஇல் செயல்படுகிறது. மிக முற்போக்கான ஒருங்கிணைந்த கூறுகளின் ஒரு தொகுதியை அளிக்கிறது. ஒரு தரவு தளப் பொறியமைவு என்ற முறையில், தரவுகளையும், வாசகங்களையும், வரைகலைகளையும் இருத்திவைத்துக் கொள்ளக்கூடிய அட்டை அடுக்குகளின் வடிவில் கோப்புகளை உருவாக்க இது பயனாளருக்கு உதவுகிறது. ஒரு கட்டுப்பாட்டுப் பொறியமைவு என்ற முறையில், பயன்பாடுகளைத் தொடங்குவதற்கான முதன்மைப் பட்டியலாக இது பயன்படுகிறது. CD ROM, ஒளிப் பேழை வட்டு போன்ற பன்முகச் செய்தித் தொடர்புச் சாதனங்களை இது கட்டும் படுத்துகிறது. கல்விப் பயன் பாடுகள் உருவாக்கத்துக்கு உதவுகிறது.
hypercube : மிகை கனசதுரம் : ஈரிலக்கப் பன்முகக் கணினிகளினாலான (4, 8, 16 முதலியன) ஒருபோகு செய்முறைப்படுத்தும் கட்டமைவு. இதில் தரவுகள் மிகக் குறைந்த அளவு பயணஞ் செய்கிற வகையில் கணினிகள் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டிருக்கின்றன. எடுத்துக்காட்டு : இரு 8-மையமுனைக் கனசதுரங்களில், கன சதுரத்திலுள்ள ஒவ்வொரு மைய முனையையும் மற்றொன்றிலுள்ள அதற்கு நேரிணையான மைய முனையுடன் இணைக்கலாம்.
hypercube topology : மிகை கன சதுர அமைவிடம் : பன்முக நுண்செயலிகளைப் பயன்படுத்தும் பேரளவு ஒருபோகு செய்முறைப்படுத்தும் மீமிகைக் கணினிகளுக்காக அண்மையில் உருவாக்கப்பட்டுள்ள கட்டமைவு.
hyperline : மிகைஇணைப்பு; மீத்தொடுப்பு.
hyperlink : மீத்தொடுப்பு : ஒரு மீவுரை ஆவணத்திலுள்ள ஒரு சொல், ஒரு சொல் தொடர். ஒரு குறியீடு அல்லது ஒரு படிமம் ஒர் உறுப்புக்கும், அதே ஆவணத்திலுள்ள வேறோர் உறுப்பு அல்லது வேறொரு மீவுரை ஆவணம் அல்லது வேறொரு கோப்பு அல்லது உரைநிரல் (Script) இவற்றுள் ஏதேனும் ஒன்றுக்கும் இடையேயுள்ள தொடர்பு. இத்தகைய தொடுப்புகள் பெரும்பாலும் நீல நிற எழுத்துகளில் (ஆவண எழுத்து நிறத்திலிருந்து மாறுபட்ட நிறத்தில்) அடிக்கோடிடப்பட்டிருக்கும். சுட்டிக் குறியை அருகில் கொண்டு சென்றால் கை அடையாளமாக மாறும். இந்த அடையாளங்களைக் கொண்டு அது ஒரு மீத்தொடுப்பு என்பதை அறியலாம். சுட்டியைக் கொண்டு தொடுப்பின்மீது சொடுக்கியதும், தொடுப்பில் சுட்டப்பட்டுள்ள ஆவணம் திறக்கும். எஸ்ஜி எம்எல், ஹெச்டிஎம்எல் போன்ற மீவுரைக் குறிமொழிகளில் உருவாக்கப்படும் மீவுரை ஆவணங்களில், பல்வேறு வகையான குறி சொல்கள் (tags) கொண்டு மீத்தொடுப்புகளைக் குறிப்பிடுகின்றன.
hyper media : மிகைத் தொடர்பு ஊடகங்கள் : ஒரு மிகையுரை முறைமையில் தரவு, உரை, வரைகலை, ஒளிப்படம், நகல் படம், ஒலி ஆகியவற்றைக் கூறுகளாகப் பயன்படுத்துதல். பல்வேறு தரவு வடிவங்கள் அனைத்தும், பயனாளர் ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு எளிதாகச் சென்றிடும் வகையில் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளன.
hyperPAD : மிகைத் திண்டு : "பிரைட் பில்-ராபர்ட்ஸ் கம்பெனி" என்ற அமைவனம் தயாரித்துள்ள சொந்தக் கணினிகளுக்கான (PC) பயன்பாட்டு மேம்பாட்டுப் பொறியமைவு. இது மிகை அட்டை போன்ற செயல் முறை. இது உரை வடிவமுறையில் செயற்படுகிறது. இதில், PAD உரை வரி வடிவமொழி உள்ளடங்கியுள்ளது.
HyperScript : மிகை வரிவடிவம் : "WINGE" விரிதாள் தொகுப்புடன் வழங்கப்படும் ஒரு முன்னேறிய பெரும (வரிவடிவ) மொழி.
hyperspace : மீவெளி : வைய விரிவலையில் (WWW) மீத் தொடுப்புகளின் (Hyperlinks) மூலம் அணுகும்படியான மீவுரை ஆவணங்கள் அனைத்தின் தொகுப்பு.
hypertalk : மிகைபேச்சு : மிகை உரை / மிகைச் சாதனம் எழுதுவதற்கு அல்லது மரபான செயல் முறைப்படுத்துதலுக்குப் பயன்படுத்தப்படும் மிகை அட்டைக் குரிய மொழி. hypertape : மீதுயர் நாடா : மின் காந்த அலகு. நாடாப் பொதிந்த குடுவையாகப் பயன்படுத்தப் படுகிறது. நாடாச் சுருளாகப் பயன்படுத்தப்படுவதில்லை. நாடாப்பொறி குடுவையில் நாடாச்சுருளும் ஏற்பு நாடாச்சுருளும் உள்ளன.
hyper terminal : ஹைப்பர் டெர்மினல் - ஒரு மென்பொருள்.
hypertext : மிகையுரை; மீவுரைப் பரிமாற்ற நெறிமுறை; பிணைப்பு உரை : சொல் பகுப்பி பொறியமைவுகளில் பயன்படுத்தப்படும் ஒரு சொல். மிகை உரை பற்றிய தரவு. எடுத்துக்காட்டு : ஒரு சொற்றொடரிலுள்ள ஒரு சொல்லைத் தேர்ந்தெடுப்பதன்மூலம், அந்தச் சொல் தொடர்பான தரவு வேறு கோப்பில் இருக்குமானால் அது மீட்கப்படுகிறது; அல்லது அந்தச் சொல்லின் அடுத்த நிகழ்வு கண்டறியப்படுகிறது. மனிதச் சிந்தனைக்குக் கணினி பதிலளிக்கும்படி செய்கிற ஒரு முறையாக இந்தக் கோட் பாட்டினை டெட் நெல்சன் உருவாக்கினார்.
hyper text markup language (HTML) : மீவுரைக் குறியிடு மொழி.
hyper text transfer protocol (HTTP) : மீவுரைப் பரிமாற்ற நெறிமுறை.
hyperware : மிகைச் சாதனம் : மிகை உரைத் தரவுத் தொடர்புச் சாதனங்கள்.
hyphenation : இணைப்புக் குறியிடல் : வலது ஒர விளிம்பைத் தாண்டி நீண்டுசெல்லும் சொற்களைப் பிளவு செய்து இணைப்புக் குறியிடுதல். சொற்களை ஒரு இணைப்புக் குறியீட்டு அகராதி அடிப்படையில் இணைத்து வைப்பதன் மூலம் அல்லது உள்ளமைந்த விதித் தொகுதிகள் அல்லது இரண்டின் மூலமாக மென்சாதனம் சொற்களுக்கு இணைப்புக் குறியிடுகிறது.
hyphenation dictionary : இணைப்புக் குறியீட்டு அகராதி : முன்னரே வரையறுத்த சொல்லிடை இணைப்புக் குறி அமைவிடங்களுடன்கூடிய சொற் கோப்பு.
hyphenation programme : சொல் ஒட்டு நிரல்; சொல்வெட்டு நிரல் : பெரும்பாலும் சொல்செயலிப் பயன்பாடுகளில் சேர்க்கப்படும் ஒரு நிரல். ஒவ்வொரு வரி முடிவிலும் இடம் போதாத சொற்களை இருகூறாக்கி இறுதியில் ஒர் ஒட்டுக் குறியைச் சேர்க்கும் வசதி விருப்பத் தேர்வாக இருக்கும். ஒரு நல்ல சொல்லொட்டு நிரல், ஒரு பத்தியில், தொடர்ச்சியாக மூன்று வரிகளுக்கு மேல் வரி இறுதியில் சொற்களைப் பிரிக்காது. அப்படித் தேவைப்படின் பயனாளருக்குத் தெரிவித்து அவரின் ஒப்புதலின் பேரில் முடிவு செய்யும்.
hyphenation zone : இணைப்புக் குறியீட்டு மண்டலம் : வலது ஒர விளிம்பிலிருந்தான தொலைவு. இதனுள் ஒரு சொல்லுக்கு இணைப்புக் குறியிடலாம்.
hypothesis : ஊகம்; தற்கோள்; விளக்கம்.
hysteresis : தயக்கம் : ஒரு விளைவு ஒன்றுக்கான மொழி. அந்த விளைவுக்கான காரணத்தின் பின்புலமாக உள்ளது. அதேபோல மின்காந்தப் பொருளை துருவ நெறிப்படுத்த மொழி இயலாததாக உள்ளது. மின்காந்தமயமாக்கும் சக்தி அதற்கு இல்லை.
hytelnet : ஹைடெல்நெட் : டெல் நெட் மூலமாக இணைய வளங்களைத் தேடிப் பெற ஒரு பட்டித் தேர்வு மூலம் வாய்ப்புத் தரும் நிரல் மூலம் இயக்க முடியும்.
Hz : ஹெச் இலட் : ஒரு வினாடிக்கான மின்காந்த அலைச்சுற்று என்பதைக் குறிக்கும் ஹெர்ட்ஸ் என்பதன் குறும் பெயர்.