கணினி களஞ்சியப் பேரகராதி-1./M
M : எம் (மெகா) : Mega என்பதன் குறும்பெயர், பத்து இலட்சம் என்பது பொருள். சேமிப்புச் சாதனங்களின் திறனைக் குறிக்க அடிக்கடி பயன்படுத்தப்படும் பெயர்ச்சீட்டு.
M68000 : எம் 68000 : மோட்டோரோலா நிறுவனத்தால் தயாரிக்கப்படும் 16-துண்மி நுண்செய்முறைப்படுத்திச் சிப்பு. குறிப்பாக நுண்கணினிகளில் இது பயன்படுகிறது.
. ma : . எம்ஏ : ஓர் இணையதள முகவரி மொராக்கோ நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.
Mac : மேக் : Apple Macintosh Computer என்பதன் சுருக்கம்.
MacBinary : மேக்பைனரி : ஒரு கோப்புப் பரிமாற்ற நெறிமுறை. மெக்கின்டோஷ் கணினிகளில் உருவாக்கப்பட்டு மெக்கின்டோஷ் அல்லாத கணினிகளில் சேமிக்கப்படும் கோப்புகளின் குறிமுறையைப் பாதுகாக்கப் பயன்படுகிறது. இக்கோப்புகளில் கோப்பின் உள்ளடக்கப் பகுதி, தரவுப்
பகுதி, ஃபைண்டர் எனும் தேடு நிரலுக்கான பகுதி எனப் பிரிவுகள் இருக்கும்.
MacDraw : மேக் டிரா : ஆப்பிள் மெக்கின்டோஷ் கணினியின் வரைபடப் பணித்தொகுப்பு. கலைஞர்கள், கட்டடக் கலைஞர்கள், பொறியாளர்கள், வரைபடக் கலைஞர்கள் மற்றும் வரைபடக்கலை தொடர்புடைய தொழில் நுணுக்கக் கலைஞர்கள் ஆகியோருக்காக வடிவமைக்கப்பட்டது.
MAC driver : மேக் டிரைவர் : Media Access Control Driver என்பதன் குறும்பெயர். மைக்ரோசாஃப்ட் என். டி. ஐ. எஸ். தர நிர்ணயத்தை செயல்படுத்தும் கட்டமைப்பு ஏற்பி இயக்கி.
Mach : மேக் : கார்னஜி - மெல்லன் பல்கலைக்கழகம் உருவாக்கிய யூனிக்ஸ் போன்ற இயக்கஅமைப்பு (ஆப்பரேட்டிங் சிஸ்டம்).
machanics : விசையியல்; எந்திரவியல்.
machine address : எந்திர முகவரி.
machine, accounting : கணக்குப்பொறி, கணக்கிடு எந்திரம். machine code : எந்திரக் குறியீடு; பொறிக் குறிமுறை : ஒரு எந்திரம் புரிந்து கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்ட இயக்கக் குறியீடு.
machine cycle : எந்திரச் சுழற்சி; பொறிச் சுழற்சி : குறிப்பிட்ட எண்ணுள்ள உள் நடவடிக்கைகளைச் செய்ய ஒரு கணிணி எடுத்துக்கொள்ளும் நேரம்.
machine dependent : எந்திரச் சார்பு ; பொறி சார்ந்த : ஒரு குறிப்பிட்ட வகைக் கணினியில் மட்டும் செயல்படும் மொழி அல்லது நிரல் தொகுப்பு தொடர்பானது. வன்பொருள் சார்ந்தது என்பதோடு சமமானது. எந்திரம் சார்ந்தது என்பதற்கு எதிரானது.
machine error : எந்திரப் பிழை; பொறித் தவறு : கருவிக்கோளாறு காரணமாக தகவலில் சரியானதிலிருந்து ஏற்படும் திரிபு.
machine independent : எந்திரச் சார்பிலி; பொறி சாரா : 1. கணினி முறைமையின் பண்புகளைச் சார்ந்ததாக இல்லாமல் பெரிதும் மொழி அல்லது நிரல் தொகுப்பு தொடர்பானது. 2. பல தயாரிப்பாளர்கள் உருவாக்கிய கணினிகளில் அல்லது ஒரே தயாரிப்பாளர் உருவாக்கிய பல எந்திரங்களில் நிரல் தொகுப்பு ஒன்றை இயக்கும் திறன். எந்திரச் சார்பு என்பதற்கு மாறானது.
machine instruction : எந்திர ஆணை; பொறி ஆணை : ஒரு கணினி நேரடியாகப் புரிந்து கொண்டு நிறைவேற்றக்கூடிய ஆணை.
machine intelligence : பொறி செயற்கை நுண்ணறிவு.
machine interruption : எந்திரக் குறிக்கீடு; எந்திர இடையீடு.
machine language : எந்திர மொழி; பொறி மொழி : கணினி ஒன்றின் அடிப்படை மொழி. எந்திர மொழியில் எழுதப்பட்ட நிரல் தொகுப்பு. அதனை கணினி மேலும் மொழிமாற்றம் செய்யத் தேவையில்லை.
machine language subroutine : எந்திர மொழி துணை வாலாயம் : சேர்ப்பி மொழியில் எழுதப்பட்ட துணை வாலாயம் (சப் ரொட்டீன்). உயர் நிலை மொழியில் எழுதப்பட்ட நிரல் தொடருடன் சேர்க்கப்படுகிறது. இத்தகைய துணை வாலாயம்களை விரைவாகவும் திரும்பத் திரும்பவும் செய்யப்படும் வேலைகளுக்கு அதிகம் பயன்படுத்துவார்கள். அத்தகைய நிரல் தொடர்கள் குறியீடு செய்யப்பட்டு நினைவகத்திலிருந்து வட்டுக்குத் தனியாக ஏற்றப்படும்.
machine learning : எந்திரம் கற்றல்; பொறியாய்வு : பழைய செயல்களை அடிப்படையாகக் கொண்டு தன் செயல் திறனை மேம்படுத்திக் கொள்ளும் பட்டறிவு சார் (ஹீயரிச) முறை.
machine operator : எந்திர இயக்கர்; பொறி இயக்குநர்.
machine oriented language : எந்திரம் சார்ந்த மொழி; பொறி சார்ந்த மொழி : மனித மொழியைப் போலல்லாமல் எந்திர மொழியை பெரிதும் ஒத்திருக்கும் நிரல் தொகுப்பு மொழி.
machine readable information : எந்திரம் அறிந்துக்கொள்ளக் கூடிய செய்தித் தரவு ; பொறி அறியத்தக்க தரவு : எந்திரம் ஒன்றினால் உணரக்கூடிய அல்லது படிக்கக் கூடிய வகையில் ஏதாவது ஊடகம் ஒன்றில் பதிவு செய்யப்பட்ட தரவு. எந்திரம் உணர்நிலை என்றும் கூறப்படுகிறது.
machine sensible information : பொறியுணர் தரவு.
machine time, available : கிடைக்கக் கூடிய எந்திர நேரம்; கிடைக்கும் பொறி நேரம்.
macintosh : மெக்கின்டோஷ் : ஆப்பிள் கம்ப்யூட்டர் தயாரித்த
macintosh application environment : மெக்கின்டோஷ் பயன்பாட்டுச் சூழல் : எக்ஸ் விண்டோஸின் சிஸ்டம் சாளரத்துக்குள்ளேயே மெக்கின்டோஷ் இடைமுகத்தை வழங்கக்கூடிய, ரிஸ்க் (RISC) செயலி அடிப்படையிலான முறைமைகளுக்குரிய ஒரு செயல்தள அமைப்பு (system shell). இது மேக் மற்றும் யூனிக்ஸ் ஆகிய இருமுறைமைகளுக்கும் ஒத்தியல்பானது. மெக்கின்டோஷில் செயல்படும் அனைத்துவகை செயல்தளத் தயாரிப்புகளுக்கும் ஏற்றது.
macintosh file system : மெக்கின்டோஷ் கோப்பு முறைமை : தொடக்கக் காலங்களில் தட்டைக் கோப்பு முறைமையே (Flat File System) பயன்பாட்டில் இருந்தது. அதன்பிறகு படிநிலைக் கோப்பு முறைமை (Hierarchical File System) அறிமுகப்படுத்தப்பட்டது.
macintosh user interface : மெக்கின்டோஷ் பயன்படுத்துபவர் இடைமுகம் : ஜெராக்ஸ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு 1981இல் ஜெராக்ஸ் ஸ்டாரில் பயன்படுத்தப்பட்ட மெக்கின்டோஷை இயக்கும் முறை. வரைகலையைப் பயன்படுத்தி ஐக்கான்கள் எனப்படும் சிறிய படங்களின் மூலம் நிரல் தொடர்கள், கோப்புகள், மடிப்புகள் மற்றும் வட்டுகளைக் குறிப்பிடுகிறது. சுட்டி பொத்தானை நகர்த்தும்போது திரையில் உள்ள குறும்படம் நகர்ந்து, க்ளிக் செய்ததும் விருப்பப்படுவதைத் தேர்ந்தெடுக்கிறது. இது விண்டோஸ் போன்ற பலவற்றில் பயன் படுத்தப்படுகிறது.
MacIRMA : மெசிர்மா : மெக்கின்டோஷுக்கான தரவுத் தொடர்பு அட்டை. நுண்கணினியிலிருந்து பெருமுகக் கணினிக்கு மாற்றுவது. 3270 முனையத்தைக் கொண்டது.
Mac Lisp : ஆரம்ப கால எம். ஐ. டீ. ஏ. பி. ஐ. திட்டத்தின் பெயர். Machine Aided Cognition என்பதை உணர்த்துகிறது.
Mac OS : மேக் ஓஎஸ் : மெக்கின்டோஷ் இயக்க முறைமை எனப் பொருள்படும் Macintosh Operating System என்ற தொடரின் சுருக்கம். 1994 செப்டம்பரில் வெளியிடப்பட்ட 7. 5 ஆம் பதிப்புக்குப் பின்னரே மெக்கின்டோஷ் இயக்க முறைமை மேக்ஓஎஸ் என அழைக்கப்படலாயிற்று. அப்போதிருந்து தான் ஆப்பிள் நிறுவனம் பிற கணினி உற்பத்தியாளர்களுக்கும் இதனை உருவாக்குவதற்கான உரிமம் வழங்கத் தொடங்கியது.
MacPaint : மேக்பெய்ன்ட் : மெக்கின்டோஷ் கணினிக்கான நவீன வரைபட நிரல் தொகுப்பு. வரைபட வெளியீட்டுக்கான பல பயன்பாடுகளை உடைய கருவிகளை வழங்கும் நிரல் தொகுப்பு.
macro : பெரும; அதிக : ஒற்றைக் குறியீட்டு நிரல் தொகுப்பு மொழிக்கட்டளை. அதனை மொழி பெயர்க்கும்பொழுது பல வரிசையான எந்திர மொழி கட்டளைகளை உருவாக்குகின்றன.
macro assembler : பெரும தொகுப்பி : பயன்படுத்துவோர் புதிய கணினி நிரல்களை உருவாக்கவும் அனுமதிக்கிற இணைப்பு. அப்புதிய கணினி நிரல்கள் பெரும நிரல்கள் என்றழைக்கப்படுகின்றன.
macro expansion : பெரும விரிவாக்கம் : மூல நிரல் தொடரில் உள்ள நுண் நிரல்களை எந்திர மொழியில் மாற்றும் செயல்முறை.
macro generator : பெரும ஆக்கி, ஜெனரேட்டர்.
macro instruction : பெரும ஆணை : 1. ஆதார மொழி நிரல்கள் - ஒரு குறிப்பிட்ட மொழி ஆணைகளுக்கு சமமானது. 2. பல குறு ஆணைகளால் உருவாக்கப்பட்ட எந்திர மொழி.
macro language : பெரும மொழி : பெரும செயலகம் பயன்படுத்துகின்ற கட்டளை. பெருமக்கட்டளைகளை பயன்படுத்துகிற சேர்ப்பி மொழி.
macro media flash : மேக்ரோமீடியா பிளாஷ்.
macro processor : பெரும செயலகம் : விசைப் பலகையிலிருந்து மேக்ரோக்களை உருவாக்கி செயல்படுத்துகின்ற மென்பொருள். மேக்ரோ அழைப்புகளுக்காக மேக்ரோ துணைவாலாயம்களை மாற்றித் தருகின்ற பொறி மொழியாக்கியின் பகுதி.
macro programming : பெரும செயலாக்கம் : குறும வகைப்படுத்தி ஒன்றுக்கான கட்டுப்பாட்டு நிரல் தொகுப்பு போன்ற பெரும நிரல்களை நிரல் தொகுப்பாக்குதல்.
macro recorder சுருக்க ஆணை; ஆணைச் சுருக்கி : பட்டியல் தேர்வுகள் மற்றும் விசை அடிப்புகளை பெரிதாக 'மேக்ரோ' மாற்றித் தரும் நிரல் தொடர் துணைவாலாயம். ஒருவர் பதிவியைத் திருப்பி, பதிவு செய்ய வேண்டிய செயல் முறைகளைச் செய்து பின்னர் பதிவியை நிறுத்தி பெரியதுக்கு முக்கிய கட்டளையைக் கொடுப்பார். விசைக்கட்டளையை அழுத்தியவுடன், தேர்வுகள் செய்யப்படும்.
macros : குறுமங்கள்.
macro virus : மேக்ரோ நச்சு நிரல்; குறும நச்சுநிரல் : ஒரு பயன்பாட்டு மென்பொருளுடன் தொடர்புடைய குறுமமொழியில் எழுதப்பட்ட ஒரு நச்சு நிரல். ஒர் ஆவணக்கோப்புடன் இந்த மேக்ரோ நச்சுநிரல் எடுத்துச் செல்லப்படும். ஆவணத்தைத் திறக்கும் போது நச்சுநிரல் இயக்கப்படும்.
Mac TCP : மேக் டீசிபீ : மெக்கின்டோஷ் கணினிகளில் பயன் படுத்தப்படும் டீசிபீ/ஐபீ நெறிமுறையின் மேக் வடிவம்.
Macwrite : மேக்ரைட் : சொல்லை வகைப்படுத்தும் செயல்முறை நிரல் தொகுப்பு. மெக்கின்டோஷ் கணினிக்கானது.
Macwrite II : மேக்ரைட் II : கிளாரிஸ் கார்ப்பரேஷன் உருவாக்கிய அனைத்து அம்சங்களும் கொண்ட மெக்கின்டோஷின் சொல் செயலாக்க நிரல் தொடர். மேக் 128 மற்றும் 512 ஆகிய ஒவ்வொன்றுடன் ஒருங்கிணைத்து அனுப்பப்பட்டது.
mag : மேக் : Magnetic என்பதற்கான குறும்பெயர்.
Magazette : மேகசீட் : வட்டில் பதிவு செய்யப்படும் மேகசீன்.
magazine : இதழ்; சஞ்சிகை.
mag card : மேக் அட்டை : ஐபிஎம் கார்ப்பரேஷன் உருவாக்கிய மின்காந்த அட்டை. காந்தப்பொருள் பூசப்பட்டது. அதில் தரவு பதிவு செய்யப்படுகிறது. சொல் வகைப்படுத்து முறைமைகளில் அடிக்கடி பயன் படுத்தப்படுகிறது.
Magellan : மெகல்லன் : லோட்டசிலிருந்து பீ. சி. க்களுக்கான வட்டு மேலாண்மை பயன்பாடு. கோப்புப் பெயர்கள் மற்றும் உள்ளடக்கங்களைத் தேட உதவுகிறது. கோப்பு நோக்கியை இது பிரபலப்படுத்தியது. பல்வேறு தரவுக் கோப்புகளை, அவற்றை உருவாக்கியவரைப் போல நீங்கள் பயன்படுத்துவதற்காகத் தேட உதவுகிறது.
magnet : காந்தம்; மின் காந்தம்.
magnetic : மின் காந்தம் : காந்தத்தை உருவாக்குகிற, அல்லது காந்தத்தால் உருவாக்கப்படுகிற, அல்லது காந்தத்தால் இயக்கப் படுகிறது.
magnetic bubble memory : காந்தக் குமிழ் நினைவகம் : நகரும் காந்தக் குமிழ்களைப் பயன்படுத்தும் நினைவு. குமிழ்கள் என்பது காந்த மேற்றப்பட்ட பகுதிகள். காந்தப் பொருளில் - அதாவது ஆர்த்தோ ஃபெரைட் போன்ற பொருளில் நகரக்கூடியது. காந்தப்பொருளின் உள்ளேயும் வெளியேயும் தோன்றும் காந்தக் குமிழ்களைக் கட்டுப்படுத்து வது. அதன் விளைவாக உயர் திறன் உள்ள நினைவை உருவாக்க முடியும். ஆண்ட்ரூ போபெக், ரிச்சர்டு ஹெர்வுட், அம்பெர்டோ ஜியானோலா, பெல் ஆய்வகத்தைச் சேர்ந்த வில்லியம் ஷாக்லி ஆகியோர் காந்தக் குமிழ் நினைவைக் கண்டு பிடித்தார்கள். ஒரு சதுர அங்குலத்துக்கு 50 இலட்சம் துண்மிகள் திறனைக் கொண்ட சேமிப்பகத்தை உருவாக் கினார்கள். magnetic bubbles : காந்தக் குமிழ்கள் : தளத்துக்கு எதிரான மின்காந்தப் பண்புள்ள வட்ட வடிவ மின்காந்தப் பரப்புகள். அவற்றைத் தூண்டல் கட்டுப் பாடுள்ள மின் முனைகளால் தளத்தில் இடம் விட்டு இடம் பெயரச் செய்யலாம். பொருத்த மான சிறிய வட்டவடிவப் பகுதிகள் அல்லது குமிழ்கள்.
magnetic card : காந்த அட்டை : தட்டு அல்லது காந்தப் பூச்சு உள்ள அட்டைகளைக் கொண்ட சிறு பெட்டி. அட்டைகள் காந்த நாடாவைப் போன்ற பொரு ளால் உருவாக்கப்பட்டவை. காந்த நாடா சிறு துண்டுகளாக வெட்டப்பட்டு ஒன்றின் அரு கில் பிளாஸ்டிக் அட்டை ஒன்றில் அடுக்கப்பட்டு சிறிய பெட்டியில் அடுக்கப்பட்டிருப் பதாக உருவகம் செய்யலாம்.
magnetic cartridge : காந்தப் பொதியுறை.
magnetic cell : காந்தக் கலம்.
magnetic characters : காந்த எழுத்துரு : எழுத்துகளின் தொகுப்பு. காசோலைகள், காப்பீட்டுக் கட்டணங்கள், பயன்பாட்டு கட்டணச் சீட்டு கள், செலவுச் சீட்டுகள் மற்றும் பிறவற்றில் பயன்படுகிறது. அவை எழுத்துகளைப் படிக்கும் சாதனங்களான எம்ஐசி ஆர் படிப்புக் கருவிகள் தாமாக எழுத்துகளைப் படிக்க இட மளிக்கின்றன.
magnetic core : காந்த அச்சு : காந்த உள் மையம்; காந்த வளையம் : குறும் கொட்டை வடி விலான பொருள். காந்தமேற்றக் கூடியது. இரும இயக்கங்களை சேமிக்கும் திறனுடையது.
magnetic core, bistable : இருநிலைக் காந்த அச்சு; இரட்டை நிலை காந்த உள்ளகம்; இரு நிலைக் காந்த வளையம்.
magnetic core memory : காந்த உள் மைய நினைவகம்.
magnetic core plane : காந்த வளைய நினைவுத் தளம்; காந்த அச்சுத் தளம் : காந்த அச்சு இணையம். ஒவ்வொரு அச்சும் ஒவ்வொரு சேமிப்பு இடத்துக்குப் பொதுவானது. பல காந்த அச்சுத்தளங்கள் ஒன்றாகச் சேர்க்கப்பட்டு காந்த அச்சு சேமிப்பு அலகை உருவாக்குகிறது.
magnetic core storage : காந்த அச்சு சேமிப்பகம் : காந்த வளையத் தேக்ககம் : சேமிப்பு முறை. இதில் தரவுகள் இருமஎண் வடிவில் சேமிக்கப்படுகின்றன. குறு மின்காந்தப் புலன்களின் ஒட்ட வழியில் அவை சேமிக்கப்படுகின்றன. வளைந்த டவுட்நட் வடிவிலான காந்த அச்சுகள் மின் இழப்பின்போது தரவுகளைச் சேமித்து வைக்கின்றன. இவை பழைய கணினிகளில் பயன்படுத்தப்பட்டன. தரவுகளை இழக்கும் சேமிப்பகத்துக்கு எதிரானது.
magnetic data storage device : காந்த முறை தரவு சேமிப்புச் சாதனம்.
magnetic disk : காந்த வட்டு; மின்காந்த மென்வட்டு : திண்மையான பொருளினால் ஆன தகடு அல்லது கனத்த மைலாரினால் ஆனது. வட்டின் தளப்பகுதி காந்தமேற்றப்பட்ட தரவுகளை கைக்கொள்கிறது. அவை வட்டில் எழுதப்படுகின்றன. வட்டு இயக்கியினால் வட்டிலிருந்து அவை பெறப்படுகின்றன.
magnetic disk unit : காந்த வட்டு அலகு; காந்த வட்டகம் : புறச் சேமிப்புக் கருவி. இதில் தரவுகள் காந்தமேற்றக்கூடிய வட்டுத் தளப் பகுதியில் பதிவு செய்யப்படுகின்றன.
magnetic domain : காந்தப்பகுதி, காந்தக் களம் : குமிழ் நினைவில் தரவுகளைக் குறிப்பிடும் காந்தமேற்றப்பட்டப் பகுதி.
magnetic drum : காந்த உருளை; காந்தப் பீப்பாய் : புறச் சேமிப்பு கருவி. இது காந்தமேற்ற தளத்தைக் கொண்ட உருளையை உடையது. இந்தத் தளத்தில் தரவுகளைப் பதிவு செய்யலாம்.
magnetic field : காந்த புலம் : ஒரு காந்தத்தினால் உமிழப்படும் புலனாகாத சக்தி. magnetic film storage : காந்த நாடாச் சேமிப்பகம் : சேமிப்புக் கருவி. இதில் 35 மி. மீ. காந்த பிலிம் ஒரு சுருணையில் சுற்றி வைக்கப்பட்டுள்ளது. இந்தச் சுருணையை பிலிம் கையாளும் அலகில் ஏற்ற முடியும்.
magnetic head : காந்தமுனை : காந்த நாடா தகடு அல்லது உருளை போன்ற சாதனங்களில் தகவல்களை எழுதவும் படிக்கவும் உதவுகிற கருவி.
magnetic ink : காந்த மை : காந்தப் பொருள்களைக் கொண்ட மை. அந்த காந்தப்பொருள்களை காந்த உணர்விழைகள் மூலம் அறியலாம்.
magnetic ink character device : காந்த மை எழுத்துச் சாதனம்.
magnetic ink character reader : காந்த மை எழுத்து படிப்பி : காந்த மை எழுத்துகளால் அச்சிடப்பட்ட ஆவணங்களை படிக்கும் உள்ளிட்டுக் கருவி. MICR reader என்றும் கூறுவார்கள்.
Magnetic Ink Character Recognition (MICR) : காந்த மை எழுத்தறி சாதனம் (எம்ஐசிஆர்) : எந்திரங்களால் சிறப்புக்காட்டி மையினால் அச்சிடப்பட்ட எழுத்துகளை அறிதல். வங்கிக் கடன் அட்டையிலும் பொதுப் பயன்பாட்டுத் தொழில்களிலும் முக்கியமாகப் பயன்படுத்தப்படுகிறது.
magnetic materials : காந்தப்பொருள்கள்.
magnetic media : காந்த ஊடகம் : செருகு அட்டைகள், நாடாக்கள் மற்றும் பிற தரவு சேமிப்புச் சாதனங்களுக்கான இடைப் பெயர். காந்தத்துண்டல் வடிவில் தரவுகள் சேமிக்கப்படுகின்றன.
magnetic memory : காந்த நினைவகம்.
magnetic printer : காந்த அச்சிடு கருவி; காந்த அச்சுப் பொறி : தொடர் அச்சிடு கருவி. இதில் புள்ளித்தளக் கருவியினால் எழுதப்பட்ட மின்சாரம் ஏற்றப்பட்ட துகள்கள் பயன்படுத்தப்படுகின்றன.
magnetic recording : காந்தப் பதிவாக்கம் : வட்டுகளிலும் நாடாக்களிலும் எண்முறை தரவுகளைப் பதிவு செய்யப்பயன்படுத்தும் தொழில் நுட்பம். பதிவு செய்யும் மேற்பரப்பை மின் சக்தியைச் செலுத்தும் படி/எழுதுமுனை வழியாகக் கொண்டு செல்வதன் மூலம் எழுதப்படுகிறது/பதியப்படுகிறது. இதன் கோட்பாடு மிகவும் எளிமையானது. வட்டு அல்லது நாடா மேற்பரப்பில் பாசிட்டிவ் அல்லது நெகட்டிவ் துருவம் கொண்ட (0 அல்லது 1 துண்மி) ஒரு சிறிய புள்ளி உருவாக்கப்படுகிறது. நாடாக்களைப் பதியும்போது, அழிக்கும்முனை முதலில் மேற்பரப்பைத் தூய்மைப்படுத்துகிறது. வட்டுகளில் இருப்பதுபோல தரவுகளின் பகுதி. இதில் அளவுடன் பொருத்தப்படுவதில்லை. படி/எழுது முனையை அதன் மீது செல்லவிடுவதன்மூலம் துண்மியின் துருவம் உணரப்படுகிறது. குமிழ் நினைவகம் ஒரு வகையான காந்தப்பதிவு முறை. ஆனால் வட்டுகள், நாடாக்கள் போல் அல்லாது இதில் மேற்பரப்பு நகர்வதில்லை.
magnetic resonance : காந்த எதிரொளிப்பு : காந்த ஒத்திசைவு : இம்முறையில் ஒரு துகள் அல்லது துகள் முறைகள் எதிரொலிப்பு முறையில் புறக்காந்தப்புலத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.
magnetic sensing devices : காந்த உணர்வுச் சாதனங்கள்.
magnetic storage : காந்தச் சேமிப்பகம்; காந்தத் தேக்ககம் : நாடா அட்டைகள், உருளைகள், அச்சுகள் மற்றும் பிலிம் போன்ற சேமிப்பு ஊடகங்களில் பொருள்களின் காந்தப் பண்புகளைப் பயன்படுத்தி சேமிக்கும் முறைமை.
magnetic store : காந்த செமிப்பகம்; காந்தத் தேக்ககம்.
magnetic strip card : காந்த வரி அட்டை, காந்தப்பட்டை அட்டை : கடன் அட்டையைப் போன்ற சிறிய அட்டை அதில் காந்த மேற்றப்பட்ட பொருள் பொருத்தப்பட்டிருக்கும். இந்த காந்த மேற்றப்பட்ட துண்டில் தரவுகளை எழுதலாம் அல்லது எழுதப்பட்டிருப்பதைப் படிக்கலாம்.
magnetic tape : காந்த நாடா : காந்தமேற்றப்பட்ட புள்ளிகளைக் கொண்ட குறியீட்டின் வடிவில் தரவுவைச் சேமிப்பதற்கான காந்தமேற்பரப்பைக் கொண்ட பிளாஸ்டிக் நாடா. நாடாவில் 8 துண்மிகளைக் கொண்ட குறியீட்டு அமைப்பு மூலம் தரவுகளைச் சேமிக்கலாம். ஒரு நாடாச் சுருள் என்பது 750 மீட்டர் (2, 400 அடி) நீளமுடையது. இந்த நாடாவின் பரப்பில் தரவு எழுதப்பட்டிருக்கும். இதில் உள்ளத் தரவுகளை நாடா இயக்கிமூலம் பெறலாம்.
magnetic tape cartridge : காந்த நாடாச் சுருணை; காந்த நாடாப்பேழை : காந்த நாடா உள்ள சுருணை. இச்சுருணையில் நாடாச்சுருள் ஒன்று இருக்கும். இந்த நாடாச்சுருளை ஏற்கும் உருளை ஒன்றும் இருக்கும். மாற்றுச் சுழலிப்பொறி கருணை போன்றது. ஆனால் வடிவமைப்பில் சற்று வேறுபாடானது.
magnetic tape cassette : காந்த நாடா பேழை : காந்த நாடா சேமிப்புக் கருவி. 1/8 அங்குல காந்த நாடா பிளாஸ்டிக் கொள்கலன் ஒன்றில் இருக்கும்.
magnetic tape cassette recorder : காந்த நாடாப் பேழை பதிவு கருவி : நாடாக்களை படிக்கிற மற்றும் அதில் எழுதுகிற, சேமிப்புக் கருவி. குறுங்கணினி முறைமைகளில் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது.
magnetic tape code : காந்த நாடாக் குறியீடு; காந்த நாடா குறிமுறை : காந்த நாடாவில் காந்த மேற்றப்பட்ட வடிவங்களை பதிவு செய்யப் பயன்படுத்தப்படும் குறியீட்டு முறைமை. காந்தமேற்றப்பட்ட வடிவங்கள் ஆல்பா எண்ணியல் தரவுகளை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன.
magnetic tape deck : காந்த நாடாத் தொகுப்பு : காந்த நாடா அலகு போன்றது.
magnetic tape density : காந்த நாடாத் திணிவு : காந்த நாடா அடர்த்திப் பதிவு : 2. 54 செ. மீ (1) காந்த நாடாவில் பதிவு செய்யக்கூடிய எழுத்துகளின் எண்ணிக்கை. பொதுவான திணிவுகள் 800 மற்றும் 1600 எழுத்துகள்/ஓர் அங்குலம் என்பதாகும். ஆனால் சில கருவிகள் ஓர் அங்குலத்துக்கு 6, 250 எழுத்துகள் வரை படிக்கக் கூடியனவாகவும் எழுதக்கூடியவைகளாகவும் உள்ளன.
magnetic tape device : மின்காந்த நாடா கருவி.
magnetic tape drive : காந்த நாடா இயக்கி : நாடாவை ஒரு தலை முனையின்மீது நகர்த்தும் கருவி. காந்த நாடாப் போக்குவரத்து கருவி போன்றது.
magnetic tape recorder : காந்த நாடா பதிவி.
magnetic tape reel : காந்த நாடாச் சுருள் : காந்த நாடாவின் இயற்பியல் பண்புகளைப் பாதுகாக்க உதவும் சுழலி. நாடா பொதுவாக 1. 27 செ. மீ (1. 2 அங்குலம்) அகலம் உடையதாகும். 751. 52 மீட்டர் (2, 400 அடி) நீளமுடையதாகும்.
magnetic tapes and discs principle of recording : காந்த நாடாக்கள் மற்றும் வட்டுகளில் பதியும் கொள்கை : காந்த மேற்பரப்பில் தரவுவைச் சேமிக்க பதிவு செய்யும் முறையைப் போன்றதே நாடாவிலும் வட்டுவிலும் பயன்படுத்தப்படுகிறது. இரண்டுக்கும் இடையிலான முக்கிய வேறுபாடு படி/எழுது மின்சுற்று மற்றும் பதிவு செய்யும் ஊடகம் ஆகியவற்றின் எந்திர ஏற்பாடுதான். எழுது முனையில் அதிக காந்தம் ஊடுருவக்கூடிய நடுப்பகுதியைக் கொண்ட பொருளினால் சுற்றப்படுகிறது. நடுப் பகுதியில் காந்தம் செல்வதற்கு காற்று இடைவெளியில் எழுதும் மின்சக்தி காந்த மேற்பரப்பில் செல்லும்போது அது காந்தப்படுத்தப்படுகிறது. எழுதும் மின்சாரத்தை எதிர்த் திசையில் அனுப்பும்போது காந்தசக்தியும் தலை கீழாகி இருமஎண் (பைனரி) அமைப்பு பதிவு செய்யப்படுகிறது.
magnetic tape sorting : காந்தநாடா வகைப்படுத்துதல்; காந்த நாடாவழி வரிசைப்படுத்தல் : வகைப்படுத்துதலின்போது துணை சேமிப்புக்காக காந்த நாடாக்களைப் பயன்படுத்துகிற வகைப்படுத்தும் நிரல் தொகுப்பு.
magnetic tape transport : காந்தநாடாப் போக்குவரத்து.
magnetic tape unit : காந்த நாடா அலகு : காந்த நாடா இயக்கியைக் கொண்ட கருவி. இத்துடன் எழுதுமுனைகளும் படிக்கும் முனைகளும் அவற்றுடன் இணைந்த கட்டுப்பாடுகளும் உடையது.
magnetism : காந்த விசை.
magnetized spots : காந்தமேற்றிய புள்ளிகள்.
magnitizing station : காந்தமேற்றிறும் நிலையம்; காந்தமூட்டு களம்.
magneto-optic : காந்த-ஒளியிழையிலான : அதிக அடர்த்தியுள்ள, அழிக்கக்கூடிய தரவு பதிவு செய்யும் முறை. இதிலும் தரவுகளை காந்த முறையில்தான் பதிவு செய்யப்படும். வட்டுகள் மற்றும் நாடாக்களில் செய்வதுபோல. ஆனால், துண்மிகள் மிகவும் சிறியதாக இருக்கும். ஏனென்றால் துண்மிகளைக் குறிப்பிட லேசர் பயன்படுத்தப்படுகிறது. 300 செல்ஷியஸ் வெப்பத்தில் துண்மிகளை வெப்பப்படுத்தி காந்தப்புலத்திற்கு ஏற்ப மறு வரிசைப்படுத்தப்படுகிறது. அதன் மேற்பரப்பில், புதிய துண்மிகளைப் பதிய வேண்டுமென்றால் இருக்கும் துண்மிகளை முதலில் ஏதாவது ஒரு திசையில் மாற்றி ஒழுங்குபடுத்த வேண்டும்.
magneto optical disc : காந்த ஒளியியல் வட்டு; காந்த ஒளிவ வட்டு. magneto optic disc : காந்த ஒளிவ வட்டு : சிடி ரோம் வட்டுகளை ஒத்த மிக அதிகக்கொள்திறன் உள்ள அழித்தெழுத முடிகிற சேமிப்பகவட்டு. இதில் தரவுவைப் பதிய லேசர் கற்றையைப் பயன்படுத்தி வெப்ப மூட்டி வட்டின் ஒரு புள்ளியில் உள்ள காந்தப்புலத்தின் திசையை மாற்றி தரவு துண்மி (பிட்) யைப் பதிவு செய்வர்.
magneto-optical features : காந்த ஒளியியல் கூறுகள்.
magneto optical recording : காந்த ஒளிவப் பதிவு : ஒளிவ வட்டுகளில் தரவுவைப் பதிவதற்கான ஒரு வகைத் தொழில்நுட்பம். வட்டின் மீது பூசப்பட்டுள்ள காந்தப் பரப்பின் ஒரு மிகச்சிறு பகுதியை லேசர் கற்றை வெப்பமூட்டும். இந்த வெப்பம் பலவீனமான காந்தப் புலத்தின் திசையை மாற்றியமைக்கும். இவ்வாறு தரவுகள் வட்டில் எழுதப்படுகின்றன. இதே நுட்பத்தைப் பயன்படுத்தி வட்டிலுள்ள தரவுவை அழித்து மீண்டும் எழுதவும் முடியும்.
magnification : பெரிதாக்கம் ; உருப்பெருக்கம்.
magnifier : உருப்பெருக்கி; பெரிதாக்கி.
magnitude : திறன் : 1. எண் ஒன்றின் முழுமையான மதிப்பு. 2. ஒன்றின் பரும அளவு.
magstripe : காந்தப்பட்டி : பெரும்பாலான முக்கிய அட்டைகள் மற்றும் கணினிக்கு இயையக்கூடிய பயணச் செலவு அட்டைகளிலும் முதுகுப் பகுதியில் காணப்படும் காந்தநீள் பட்டை. இதில் கணக்கு எண் மற்றும் அட்டைக்கு உரியவரின் பெயர் அல்லது நுழைவு மற்றும் வெளியேற்றப் புள்ளிகள், மீதமுள்ள பயணத்தொகை முதலியன குறிக்கப்பட்டிருக்கும்.
magstripe card : காந்தப் பட்டை அட்டை : ஒரு சிறிய கைப்பை அளவு பிளாஸ்டிக் அட்டை. இதில் காந்த நாடாவின் மேற்பரப்பில் ஒரு பட்டை இருக்கும். வங்கிக்கடன் /செலுத்து அட்டைகளில் இதைப் பரவலாகப் பயன்படுத்துகிறார்கள்.
magtape : காந்த நாடா.
Mahon, Charles : (1753-1816) : மஹோன், சார்லஸ் (1753-1816) : 1777இல் ஸ்டான்ஹோப் செயல்முறை விளக்கியைக் கண்டுபிடித்த ஸ்டான்ஹோப்பின் மூன்றாவது எர்ல். இந்தக் கருவிதான் பற்சக்கரங்களைக் கொண்ட முதல் கணக்கிடு எந்திரமாகும். mail : அஞ்சல்.
mail bomb1 : அஞ்சல் குண்டு1 : மின்னஞ்சல் மூலமாக பயனாளர் ஒருவரின் அஞ்சல் பெட்டியை நிலைகுலையச் செய்தல். பல்வேறு வழிமுறைகளில் இதனை நிறைவேற்றலாம். ஏராளமான மின்னஞ்சல்களை ஒருவருக்கு அனுப்பியோ, மிகநீண்ட மின்னஞ்சலை அனுப்பியோ அவருக்கு இனி வேறெந்த அஞ்சலும் வரவிடாமல் செய்து விடலாம்.
mailbomb2 : அஞ்சல் குண்டு2 : பயனாளர் ஒருவருக்கு அஞ்சல் குண்டு அனுப்புதல். இதில் இரண்டு வகை உண்டு. ஒரேயொரு நபர் ஒரு மிகப்பெரிய மின்னஞ்சலைப் பயனாளர் ஒருவருக்கு அனுப்பலாம். இரண்டாவது வகை, ஏராளமான பயனாளர்கள் சேர்ந்து அறிமுகமில்லாத பயனாளர் ஒருவருக்கு ஒரே நேரத்தில் சாதாரண அளவிலான பலநூறு அஞ்சல்களை அனுப்பி வைத்தல்.
mail bot : மெயில்பாட் அஞ்சல்பாட் : மின்னஞ்சல்களுக்கு தானாகவே மறுமொழி அனுப்பிவைக்கும் ஒரு நிரல். அல்லது அஞ்சல் செய்திகளுக்கு இடையே இருக்கும் கட்டளைகளுக்கேற்ப நடவடிக்கை மேற்கொள்ளும் ஒரு நிரல். அஞ்சல் பட்டியல் மேலாண்மை நிரல் ஓர் எடுத்துக்காட்டு.
mail box : அஞ்சல் பெட்டி : ஒரு சேமிப்புப் பகுதியில் உள்ள இருப்பிடங்களின் தொகுப்பு. குறிப்பிட்ட புறநிலைக் கருவிகள் அல்லது பிற வகைப்படுத்திகளுக்கான தரவு சேமிப்புப் பகுதிகள்.
mailing list : அஞ்சல் பட்டியல் : (சொல் செயலகப் பயன்பாடுகள் போன்று) அச்சிடப்பட்ட ஆவணங்களை விநியோகிக்கப் பயன்படுத்தப்படும் பெயர்கள் மற்றும் முகவரிகள் கொண்ட கணினி மய கோப்பு.
mailing list manager : அஞ்சல் பட்டியல் மேலாளர் : ஓர் இணைய அல்லது அகஇணைய அஞ்சல் முகவரிப் பட்டியலை மேலாண்மை செய்யும் மென்பொருள். வாடிக்கையாளர்கள் அனுப்பும் செய்திகளை இந்த மென்பொருள் ஏற்கும். பயனாளர்களின் கோரிக்கைகளை ஏற்று நடவடிக்கை மேற்கொள்ளும். எடுத்துக்காட்டாக, அஞ்சல் பட்டியலில் பெயரை இணைத்துக்கொள்ளுதல், நீக்கிவிடுதல். லிஸ்ட்செர்வ் (LISTSERV), (major domo) போன்றவை பரவலாகப் பயன்பாட்டில் உள்ள அஞ்சல் பட்டியல் மேலாளர்கள் ஆகும்.
mailing list programme : அஞ்சல் முகவரி நிரல் தொகுப்பு : பெயர்கள் மற்றும் முகவரிகளையும் பிற தொடர்புடைய தரவுகளைப் பராமரிக்கிற நிரல் தொகுப்பு. இது அஞ்சல் மேலொட்டுச் சீட்டுகளைத் தயாரிக்கிறது.
mail merging : அஞ்சல் இணைப்பு : அஞ்சல் பட்டியல் கோப்பில் உள்ள பெயர் மற்றும் முகவரிகளை குறிப்பிட்ட வடிவக் கடிதங்களில் தானாக அச்சிடும் நடைமுறை. அஞ்சல் இணைப்பு நிரல் தொகுப்பு ஒரு கோப்பில் உள்ள முகவரித் தரவுகளை மற்றொரு கோப்பில் உள்ள உரைத் தரவுகளுடன் இணைக்கிறது.
mail recipient : அஞ்சல் பெறுநர்.
mail reflector : அஞ்சல் பிரதிபலிப்பு : ஒரு அஞ்சல் பட்டியலுக்கு அனுப்பப்பட்ட செய்திகளை செய்திக்குழு வடிவத்துக்கு மாற்றியமைத்து வைக்கப்பட்டுள்ள ஒரு செய்திக்குழு.
mail server : அஞ்சல் வழங்கன்.
mailto : மெயில்டூ : ஒரு ஹெச்டீஎம்எல் கோப்பில் மின்னஞ்சல் அனுப்புவதைக் குறிப்பிடும் (Hyperlink) HREF என்னும் குறி சொல்லால் (Tag) இது குறிப்பிடப்படும். எடுத்துக்காட்டாக, குமரேசன் என்பவரின் மின்னஞ்சல் முகவரி kumar@yahoo. com என்று வைத்துக்கொள்வோம். ஹெச்டி எம்எல் ஆவணத்தில்,
<A HREF = "maito : kumar@yahoo. com"> E-mail : Kumaresan </A>
பயனாளர் E-mail : Kumaresan என்ற மீத்தொடுப்பின் மீது சுட்டியால் சொடுக்கினால் போதும். பயனாளரின் கணினியிலுள்ள மின்னஞ்சல் மென்பொருள் இயங்கத் தொடங்கும். அதில் To என்ற இடத்தில் kumar@yahoo. com இடம் பெற்றிருக்கும்.
main body : மையப் பகுதி ; முதன்மைப் பகுதி : ஒரு கணினி நிரலில் துணை நிரல்களை இயக்கும் கட்டளைகளும் பிற இன்றியமையாக் கட்டளைகளும் அடங்கிய நிரலின் முதன்மைப் பகுதி.
main control module : முதன்மைக் கட்டுப்பாடு மாடுல் : நிரல் தொடர் கூறு (மாடுல்) களின் வரிசைக் கிரமத்தில் மிக உயர்ந்த நிலை அதற்குக் கீழே உள்ள கூறு (மாடுல்) களை இது கட்டுப்படுத்துகிறது.
main distribution frames : முக்கிய விநியோகச் சட்டம் : தரவுத்தொடர்பு முறையில் கம்பி மூலம் விநியோகிக்கும் அடுக்கு. பல மாடிக் கட்டிடங்களின் அடித்தளப் பகுதியிலேயே இது பெரும்பாலும் அமைக்கப்பட்டிருக்கும். உள்பகுதி மற்றும் வெளிப்பகுதி தரவுத் தொடர்புக் கம்பிகள் இணையும் இடம் இதுவே. mdf என்று சுருக்கி அழைக்கப்படும்.
mainframe : பிரதம அச்சு; முதன்மைப் பொறியமைவு : பெரும் விலையுயர்ந்த கணினி அமைப்பு. பொதுவாக பெரும் வணிக நிறுவனங்கள், கல்லூரிகள், பிற நிறுவனங்களில் தரவுகளை வகைப்படுத்த உதவுகிறது. துவக்கத்தில் இந்தச்சொற்றொடர் துவக்ககால கணினிகளில் இருந்த பெரிய இரும்புச் சட்ட வரிசைகளையும், வரிசையான இழுப்பறைகளையும் அவற்றில் உள்ள ஆயிரக்கணக்கான வெற்றிடக் குழாய்களையும் குறிக்கும். பிரதம அச்சு அறை முழுக்க ஆக்கிரமித்துக் கொண்டு பெருமளவு தரவுகளைக் கையாளும் திறன் கொண்டதாக இருந்தன. குறுங்கணினி அல்லது சிறு கணினிகளைவிட விலை உயர்ந்தவை. பிரதம அச்சுகள்தான் பெரிய, மிகவும் விரைவான விலையுயர்ந்த கணினி வகைகளாகும். பிரதம அச்சுகளைக் கொண்ட சூப்பர் கணினிகள் பெரியவை, விரைவானவை மற்றும் விலை உயர்ந்தவை.
mainframe computer : முதன்மைப் பொறியமைவுக் கணினி : ஆரம்பத்தில் மையச் செயலகத்தை மட்டுமே குறிப்பிடுவதாக பெருமுகம் என்ற சொல் பயன்படுத்தப்பட்டது. 1960களின் நடுவில் எல்லா கணினிகளும் பெருமுகங்கள் என்று அழைக்கப்பட்டன. ஏனென்றால், எல்லாவற்றிலும் மையச்செயலகம் உண்டல்லவா! இன்று மிகப்பெரிய கணினி அமைப்பையே இச்சொல் குறிக்கிறது. பல்லாயிரம் நேர்முக முகப்புகளைக் கையாளும் பெருமுகங்கள் பல உள்ளன. இவை நூற்றுக்கணக்கான மீமிகு எண்மி (மெகாபைட்) நினைவகங்களுடனும், பல நூறு கிகாபைட் வட்டுச் சேமிப்பகங்களுடனும் உள்ளன.
mainframe system : முதன்மைப் பொறியமைவு.
main function : மூல/முதன்மைப/முக்கிய மையச் செயல்கூறு : ஒரு கணினி நிரலில் முக்கிய பகுதி. செயல்கூறு அடிப்படையிலான நிரலாக்க மொழிகளில் எழுதப்படும் நிரல்களில் செயல்கூறுகளை அழைத்து, பணியை நிறைவேற்றும் முதன்மையான செயல்கூறு. (எ-டு) சி-மொழியில் ஒரு நிரலில் எத்தனை செயல்கூறுகள் வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் main () என்கிற செயல்கூறு கட்டாயம் இருக்க வேண்டும். ஒரு நிரலானது அதில்தான் தொடங்கி முடியும்.
mainline programme : முதன்மைச் செயல்முறை : முதன்மை இணைப்பு நிரல் தொகுப்பு. நிரல் தொகுப்பில் பிற முனையங்களின் இயக்க முறைமையைக் கட்டுப்படுத்தும் பகுதி.
main loop (main line) : முக்கிய/மைய மடக்கி : ஒரு கணினி நிரலில் முதன்மைப் பகுதியில் இடம் பெற்றுள்ள மடக்கி. நிரலின் முக்கிய பணியை இந்த மடக்கிதான் நிறைவேற்றும். ஒரு குறிப்பிட்ட நிபந்தனை சரி அல்லது தவறாக இருக்கும்வரை இந்த மடக்கி செயல்பட்டுக் கொண்டிருக்கும். நிகழ்வு முடுக்க நிரலாக்கத்தில் (Event Driven Programming) இந்தப் பிரதான மடக்கி, இயக்கமுறைமையிடமிருந்து பெறப்படும் நிகழ்வுகளுக்காகக் காத்திருந்து அவற்றைப் பெற்றுச் செயல்படுத்தும்.
main memory : முதன்மை நினைவகம், முகமை நினைவகம்; முதன்மை நினைவுப் பதிப்பி; தலைநிலை; நினைவுப் பதிப்பி.
main method : முதன்மை வழி முறை.
main segment : முக்கிய/ முதன்மை/மையத் துண்டம் : மெக்கின்டோஷ் கணினிகளில் ஒரு நிரலின் முதன்மையான குறிமுறைப் பகுதி. அந்த நிரல் நிறைவேற்றப்பட்டு முடியும்வரை இப்பகுதி நினைவகத்தில் ஏற்றப்பட்டு அழியாமல் இருக்கும்.
main storage : முதன்மைச் சேமிப்பு : முதன்மைத் தேக்ககம் : மையச் செயலகத்தினால் நேரடியாகக் கட்டுப்படுத்தப்படுகிற நேரடியாக அணுகக்கூடிய சேமிப்பகம். நிரல் தொகுப்புகளை நிறைவேற்றும்பொழுதே அவற்றைச் சேமிக்க உதவுகிறது. தரவுகளை முறைப்படுத்தும் பொழுதே சேமிக்க உதவுகிறது.
maintainability : பராமரிப்பு இயைபு : பேணு திறன் : பழுது ஒன்றினைச் சீர் செய்தல் மற்றும் தனித்து விடலுடன் தொடர்புடைய பண்பு.
maintenance : பேணல்; பராமரிப்பு : தவறுகளைக் களைய அல்லது வன்பொருள் அல்லது நிரல் தொகுப்புகளை திருப்திகரமான பணிநிலைமையில் வைத்திருக்க மேற்கொள்ளப்படும் நடிவடிக்கைகள். இவற்றில் சோதனைகள், அளவில், மாற்றல், சீர் செய்தல் மற்றும் பழுது பார்த்தல் ஆகியவையும் அடங்கும்.
maintenance, file : கோப்புப்பராமரிப்பு.
maintenance programmer : பராமரிப்பு ஆணையர்; பேணல் ஆணையர் : ஏற்கெனவே தகவல் முறைமை ஒன்றில் சேர்க்கப்பட்ட நிரல் தொகுப்பு ஒன்றுடன் பணியாற்றுகிறவர். தேவையான மாற்றங்களை அவ்வப்போது செய்கிறவர்.
maintenance programming : பராமரிப்பு நிரலாக்கம்.
maintenance routine : பராமரிப்பு வழமை ; பேணல் முறைமை : கணினி முறைமை ஒன்றில் வழமையான தடுப்புப் பராமரிப்புப் பணிகளை வாடிக்கையாளரான பொறியாளர் ஒருவர் நிறைவேற்ற உதவும் வாடிக்கையான நடவடிக்கைகள்.
maintenance service : பராமரிப்புப் பணி ; பேணுதல் பணி : ஒரு பொருளை நன்றாக இயங்கும் நிலையில் வைத்திருக்க அளிக்கப்படும் சேவை.
maintenance, updating and file : இற்றைப்படுத்தலும் கோப்புப் பேணலும்.
maintenance wizard : பராமரிப்பு வழி காட்டி.
MAIT : மைட் : Manufacturer's Associaton of Information Technology, India என்பதன் குறும்பெயர்.
Majordomo : மேஜர்டோமோ : இணையத்தில் அஞ்சல் பட்டியல்களை மேலாண்மை செய்யும் செல்வாக்குப் பெற்ற மென்பொருள்.
major geographic domain : பெரும் புவிப்பிரிவுக் களம் : இணைய களப் பெயர்களில் (Domain names) ஈரெழுத்து முகவரி. இணைய தளப் புரவன் (Host) அமைந்துள்ள நாட்டின் பெயரைக் குறிக்கும். தளப்பெயர்களில் புவிப்பிரிவுக் களப்பெயர் பெரும்பாலும் இறுதியில் இடம் பெறும். (எ-டு) uiuc. edu. us - அமெரிக்காவில் உள்ள இல்லினாய்ஸ் பல்கலைக் கழக இணைய தளம். cam.ac.uk - இங்கிலாந்திலுள்ள கேம் பிரிட்ஜ் பல்கலைக் கழகத் தளப்பெயர். நாட்டுக் குறிமுறை என்றும் அழைக்கப்படும்.
major sort key : வரிசையாக்க விசைத் திறவு: முக்கியமான வகைப்படுத்தும் விசை : தரவுகளைக் கொண் டுள்ள பகுதி (இறுதிப் பெயர் போன்றது) அதனைக் கொண்டு பெரும்பான்மையான தரவு வகைகளை வேறுபடுத்துதல் மற்றும் வகைப்படுத்துதல் இயலக்கூடியது. இக்களத்தில் இரட்டிப்பு நிகழும் பொழுது ஒரு கண்காணிப்பு வகைப் படுத்தும் விசை (முதல் பெயர் போன்றது) தேவையான வேறு பாட்டை வழங்க முடியும்.
make code : குறியீட்டை உரு வாக்கு : ஒரு விசையை அழுத் தியவுடன் உருவாக்கப்படும் நுண்ணாய்வுக் (ஸ்கான்) குறி யீடு. (பின்னர் விசை விடு விக்கப்பட்டவுடன் தடைக் குறி யீடு வருகிறது).
make MDE file: உருவாக்கு. எம்எஸ் அக்செஸில் உள்ள பட்டித் தேர்வு.
make new connection : இணைப்பை உருவாக்கு.
male connector செருகு இணைப்பி : மின் இணைப்பு களை உருவாக்க ஒரு செருகியில் பொருந்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட செருகு . Female connectorக்கு எதிரானது.
malfunction : பிறழ் வினை மையச் செயலகத் தில் அல்லது புறக் கருவியின் செயல்பாட்டில் ஏற்படும் பிழை. தவற்றின் விளைவு.
malice programme :தீய நிரல். தீச் செயல்முறை, தீயகட்டளைத் தொடர்.
maltron keyboard : விசைப்பலகை : மேலும் விரை வாகப் பணிகளை நடத்த உதவு கிற விசைப் பலகை வரிசை முறை. மரபு வழியான விசைப் பலகை முறைமையை விட எளிதாகக் கற்றுக் கொள்ளலாம். MAN : எம்ஏஎன் மாநகர இணையம் : Metropolitan Area Network என்பதன் குறும்பெயர்.
management graphics : மேலாண் வரைவியல்; நிர்வாக வரைபடம் : வணிகம் ஒன்றின் பெயர் மற்றும் கள முக்கியத்துவம் வாய்ந்த அம்சங்களை விளக்கும் பட்டியல். வரைபடம் மற்றும் காட்சி வெளியீடுகள். வணிகத் தரவுகளை உணரவும் வெளியிடவும் உதவும் நோக்குடன் தயாரிக்கப்படுகிறது.
management information service : மேலாண்மைத் தகவல் சேவை : ஒரு நிறுவனத்தில் ஒரு பணிப்பிரிவாக இயங்கும் துறை. தகவல் தொடர்பான அனைத்துப் பணிகளையும் கவனித்துக் கொள்ளும்.
Management Information System (MS) : நிர்வாகத் தகவல் முறைமை மேலாண் தகவல் அமைவு : MS : அமைப்பு மேலாளர்களுக்குத் திட்டமிட, தொழிலாளர்களை அமைக்க, ஆணையிட மற்றும் நிறுவனத்தின் செயல்பாட்டைக் கட்டுப்படுத்த, தேவையான தகவல்களை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட தகவல் முறைமை.
management report : நிர்வாக அறிக்கை ; மேலாண் அறிக்கை : மேலாளர்களும், முடிவுகளை எடுப்போரும் தங்கள் பணிகளைச் செய்ய உதவும் வகையில் வடிவமைக்கப்பட்ட அறிக்கை.
management science : நிர்வாக அறிவியல்; மேலாண்மை இயல் : வணிகம் ஒன்றின் ஆதாரங்களை வழமையாக கணினி ஒன்றின் உதவியோடு நிர்வகிப்பது தொடர்பான கணிதவியல் அல்லது அளவீட்டு முறையிலான ஆய்வு.
manager : மேலாளர் : கணினி மையம், நிரல் தொகுப்புக் மென்பொருள் வளர்ச்சிக்குழு, சேவை நிறுவனம் மற்றும் பிறவற்றின் நடவடிக்கைகளை வழிகாட்டுகிற பொறுப்புள்ள மனிதர்.
managerial end user : நிர்வாக இறுதிப் பயனாளர் : தரவு அமைப்பைத் தனிப்பட்ட முறையில் பயன்படுத்தும் முதலாளி, மேலாளர் அல்லது மேலாளர்-நிலை தொழில் வல்லுநர். தரவு அமைப்புகளைச் சார்ந்துள்ள துறை அல்லது நிறுவனப் பிரிவின் மேலாளர்.
Manchester code : மான்செஸ்டர் குறியீடு : தானே நேரம் அமைக்கும் தரவு குறியீட்டு அமைப்பு. துண்மியை வரையறுக்கத் தேவைப்படும் நேரத்தை இரண்டு சுழற்சிகளாக இது பிரிக்கிறது. முதல் சுழற்சி தரவு மதிப்பினையும், (0 அல்லது 1) இரண்டாவது சுழற்சி எதிர்நிலைக்கு மாற்றி நேரத்தையும் அளிக்கிறது.
mancos : மான்கோஸ் : பி. சி. க்களுக்கான சக்தி மிக்க, முழுமையான மேலாண்மைக் கட்டுப்பாட்டு அமைப்பு. உற்பத்தி செய்தல் மற்றும் விநியோகிப்பதில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களின் தேவைகளை இது கவனிக்கிறது.
Maniac : மேனியாக் : வான் நியூமென்னால் உருவாக்கப்பட்ட சொல். ஹைட்ரஜன் குண்டினை உருவாக்குவதற்காக வடிவமைக்கப்பட்ட இராட்சத கணினி.
manipulating : முனைப்படுத்துதல் ; கையாள்தல் : பயன்படுத்துவோருக்கு கூடுதல் பொருள் உள்ள வடிவில் தரவுகளைக் கையாளும் பணி.
manipulation instruction, data : தரவு முனைப்படுத்தல் ஆணை; தரவு கையாள்தல் ஆணை.
man-machine interface : மனித எந்திர இடையிணைப்பு.
manpower loading chart : மனிதசக்தியை ஏற்றும் பட்டியல்; பணியாளர் பயன்பாட்டு வரைவு : கால அடிப்படையில் தொழிலாளர்கள் ஒதுக்கீடு செய்யப்படுவதைக் காட்டும் பட்டியல்.
mantissa : அடி எண் மடக்கையின் பதின்மக் கூறு : 0. 64321 x 103 64321 இல் மிதவைப் புள்ளி எண்களைக் குறிப்பிடும் பகுதி எண்.
manual : கை நூல்; செயல் விளக்க நூல்.
manual data processing : மனிதர் மூலமான தரவு செயலாக்கம் : தொடர்ச்சியான மனித இயக்கமும் தலையீடும் தேவைப்படும் தரவு செயலாக்கம். காகிதப்படிவங்கள், பென்சில்கள் நிரப்பும் பெட்டிகள் போன்ற எளிய தரவு செயலாக்கக் கருவிகளை இது பயன்படுத்துகின்றது. தட்டச்சுப் பொறிகள், கணிப்பிகள் போன்றவற்றைப் பயன்படுத்தினாலும்கூட எல்லா தரவு செயலாக்கங்களும் தானியங்கியானவை என்று சொல்ல முடியாது.
manual device : கையாள் இயக்கும் சாதனம்.
manual input : கைமுறை உள்ளீடு; இயக்க உள்ளீடு : திருத்த, பணியைத் தொடர, கணினி நிரல் தொகுப்பு ஒன்றை வகைப்படுத்துவதைத் தொடர கணினியைக் கையாள்வோர் கையால் பதிவுசெய்யும் தரவுகள்.
manual operation : கை முறை இயக்கம் : ஒரு முறைமையில் நேரடி கையால் இயக்கும் உத்திகளால் தரவுகளை வகைப்படுத்துதல்.
manual speed : கைமுறை வேகம், கைச்செயல் வேகம்.
manufacturer's software : தயாரிப்பவரின் மென்பொருள் : கணினி ஒன்றில் கணினித் தயாரிப்பாளர் வழங்குகிற அல்லது கிடைக்கச் செய்கிற நிரல் தொகுப்பு துணைக்கருவிகள்.
manufacturing information system : உற்பத்திக்கான தகவல் அமைப்பு : உற்பத்தி செயல்பாடுகளுக்கான திட்டமிடல், கட்டுப்பாடு மற்றும் நிறைவேற்றுதலை செய்யும் தகவல் அமைப்புகள். கணினி ஒருங்கிணைந்த உற்பத்தி முறை (சிஐஎம்) மற்றும் கேட், கேம் (CAD. CAM) போன்ற தொழில் நுட்பங்களும் இதில் உள்ளடக்கம்.
map : படம் : நிரல் தொகுப்பு ஒன்றின் பல்வேறு அம்சங்களும் அதன் தரவுகளும் சேமிப்புப் பகுதியைச் சுட்டிக்காட்டும் பட்டியல். இதனைச் சேமிப்புப் படம் என்றும் கூறுவார்கள்.
MAPI : மாப்பி; எம்ஏபீஐ : செய்தி வழி பயன்பாட்டு நிரலாக்க இடைமுகம் என்று பொருள் Messaging Application Programming Interface தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஒற்றைக் கிளையன் வழியாக மின்னஞ்சல், குரலஞ்சல் தொலைநகல் போன்ற வெவ்வேறு செய்திப்பரிமாற்ற மற்றும் பணிக்குழு பயன்பாடுகள் செயல்பட வழிவகுக்கும், மைக்ரோசாஃப்ட் வகுத்துள்ள இடைமுக வரன்முறை. விண்டோஸ் 95/என்டீ முறைமைகளில் மைக்ரோசாஃப்ட் எக்ஸேஞ்ச் என்ற பெயரில் இவ்வசதி உள்ளது.
map memoray : தொடர்புறுத்து நினைவகம்.
mapped drives : தொடர்புறுத்திய இயக்ககங்கள்/வட்டகங்கள் : 1. விண்டோஸ் சூழலில், உள்ளக இயக்கக (Local drive) எழுத்துகளைத் தாங்கியுள்ள பிணைய வட்டகங்கள் அங்கிருந்தே அணுக முடியும். 2. யூனிக்ஸில், இயக்க முறைமைக்கு அறிமுகப்படுத்தபட்டுச் செயல்படும் நிலையிலுள்ள வட்டகங்கள்.
mapping : பதிலிடல்; விவரணையாக்கம் ஒரு ஒருங் கிணைப்பு முறையினை மற் றொரு ஒருங்கிணைப்பு முறை மையில் பயன்படக் கூடியதாக மாற்றியமைத்தல்.
mar : மார் : Memory Address Register என்பதன் குறும்பெயர்.
Margie : : Memory Analysis and Response Generation in English என்பதன் குறும்பெயர்.
margin : விளிம்புக்கோடு : ஓரம் இடம் : பக்கம் அல்லது சாளரம் ஒன்றின் வலது அல்லது இடது முனைக்கும் உரைத்தொகுப்பு துவங்கும் இடத்துக்கும் இடையே உள்ள தூரம்.
marginal checking : கோடு சோதனை : தடுப்புப் பராமரிப்பு நடைமுறை. இதில் சோதிக்கப்படும் அலகு அதன் இயல்பான மதிப்பீட்டிலிருந்து வேறுபட்டதாக அமைகிறது. விளிம்பு நிலையில் இயங்கும் உதிரிபாகங்களைக் கண்டறிவதும் அவற்றின் இருப்பிடத்தை உறுதி செய்யும் முயற்சியில் இப்பணி மேற்கொள்ளப்படுகிறது.
marginal max. value : அதிகபட்ச மதிப்பு.
marginal min. value : குறைந்தபட்ச மதிப்பு.
marginal test : விளிம்பு நிலை சோதனை : எதிர்பார்க்கப்படும் மதிப்புகளுக்கு மிகவும் அதிகமானதும் மிகவும் குறைவானதுமான மதிப்புகளை அறிமுகப்படுத்தும் அமைப்புச் சோதனை.
mark : குறியீடு : காலம் அல்லது இடத்தில் ஒரு நிகழ்வைச் சுட்டிக்காட்டுகிற அல்லது குறிப்பிடுகிற அடையாளம் அல்லது குறியீடு.
marker : சுட்டி அடையாளங்காட்டி ; அடையாளக் குறி : வரிக்கோட்டுப் பட்டியலில் புள்ளி விவர முனைகளைக் குறிப்பிட உதவும் குறியீடு. இக்குறியீடு வடிவங்களில் வட்டங்களும், x, பெட்டிகள், நட்சத்திரங்கள், மற்றும் புள்ளிகளும் அடங்கும்.
marker, end of file : கோப்பு இறுதிக் குறியீடு.
mark sense card : குறியீட்டு உணர்வு அட்டை : கணினி படிக்கக்கூடிய அட்டை. மின்சாரம் கடத்தும் பென்சிலின் மூலம் இதை அடையாளப்படுத்தலாம்.
mark sensing : அடையாள உணர்திறன்; குறி உணர்தல் : அட்டைகள் அல்லது பக்கங்களை பென்சில் ஒன்றினால், அடையாளம் உணர்திறன் கருவி ஒன்றினால் கணினி நேரே படிக்கும் வகையில் குறிக்கும் திறன். காலம் வீணாவதையும், விசைகளைக் கையாளும் பொழுது ஏற்படும் தவறுகளையும் தவிர்க்க கையால் தரவுகளைப் பெறும், மிகவும் பயனுள்ள உத்தி.
mark, tape : நாடா குறியீடு.
markup language : குறியீட்டு மொழி : ஒர் உரைக் கோப்பில் உரைப் பகுதியை எந்த வடிவமைப்பில் அச்சுப்பொறியிலோ அல்லது திரைக் காட்சி யாகவோ வெளிக்காட்ட வேண்டும், எவ்வாறு வரிசைப்படுத்தி அதன் உள்ளடக்கத்தை தொடுத்துக் காட்டவேண்டும் என கணினிக்கு அறிவுறுத்தும் குறியீடுகளின் தொகுதியைக் கொண்ட மொழி. (எ-டு) மீவுரைக் குறியீட்டு மொழி (HTML) வலைப்பக்கங்களை வடிவமைக்கப் பயன்படுகிறது. 2. செந்தரப் பொதுமைக் குறியீட்டு மொழி (SGML) அச்சுக் கோத்தல் மற்றும் கணினிப் பதிப்பகப் பணிகளுக்கும் மின்னணு ஆவணங்களுக்கும் பயன்படுகிறது. இது போன்ற குறியீட்டு மொழிகள் பணித்தளம் சாரா ஆவணங்களை/கோப்புகளை உருவாக்கப் பயன்படு கின்றன. பல்வேறு பயன்பாடு களுக்கிடையே கையாண்டு கொள்ளவும் வழி செய்கின்றன.
marquee : நகர் தொடர் : திரையில் இடவலமாக வலஇடமாக நகர்ந்து செல்லும் சொல் தொடர்.
maser : மாசர் : Microwave amplification by the stimulated emission of radiation என்படன் குறும் பெயர். வானொலி அலை வரிசை. வெளியீட்டை மிகைப் படுத்தக்கூடிய ஒரு சாதனம். செயற்கைக்கோள் தகவல் தொடர்பு தரை நிலையங்களில் மாசர் பெருக்குக் கருவிகள் தகவல் தொடர்புச் செயற்கைக் கோள்களிலிருந்து பெறப்பட்ட மிகவும் வலுவிழந்த சமிக்கை களை பெரிதுபடுத்த பயன் படுத்தப்படுகிறது.
mask : மூடி : 1. எந்திரச்சொல். இதில் துண்மிகள் அல்லது எண்மிகள் அல்லது எழுத்துகள், நிரல் ஒன்றைக் கட்டுப்படுத்துவதன் மூலம் தேர்ந் தெடுக்கப்பட்ட எட்டியல்கள் அல்லது துண்மிகளை அல்லது எழுத்துகளை இருத்திக் கொள்ளுதல் அல்லது நீக்குதல் ஆகிய பணிகளைச் செய்கிறது. உற்பத்தி நடைமுறையில் பயன்படும் முறைமை ஒன்றில் உள்ள இணைப்பு ஒன்றின் இன்டியோ கிராஃபிக் பிரதிநிதித்துவம்.
maskable interrupts : மூடக்கூடிய தலையீடுகள் : மென் பொருளால் செய்யக் கூடியதும், செய்யாமல் தடுக்கக்கூடியதுமான வன்பொருள் தலையீடுகள்.
mask bit : மறைப்பு துண்மி : கணக்கீட்டில் இடம்பெறும், இரும துண்மிகளால் (Binary Bits) ஆன ஒரு தரவு மதிப்பினை ஒரு குறிப்பிட்ட தருக்கச் செயற்குறி (logical operator) மூலம் செயல்படுத்தும்போது, தரவு மதிப்பிலுள்ள அனைத்து 1-களையும் அப்படியே தக்க வைக்குமாறு செய்ய முடியும் அல்லது அனைத்து 1-களையும் 0ஆக மாற்றிவிடவும் முடியும். மறைப்பு மதிப்பில் இப்பணியைச் செய்யும் அந்தக் குறிப்பிட்ட துண்மி, மறைப்புத் துண்மி எனப்படுகிறது. (எ-டு) : தரவு மதிப்பு 00001111 என்க. மறைப்பு எண் 11111111 என்க. இந்த இரண்டு எண்களையும் (உ-ம்) (AND) செய்வோம் எனில் விடை, 00001111 எனக் கிடைக்கும். இங்கே மறைப்பு எண்ணில் உள்ள கடைசி நான்கு துண்மி (bits) களும் மறைப்பு துண்மிகளாக செயல்படுகின்றன. இவை தரவு மதிப்பிலுள்ள நான்கு 1-களையும் மாற்றமின்றி அனுமதிக்க உதவுகின்றன.
Mask design : மூடி வடிவமைப்பு : ஒருங்கிணைந்த இணைப்பு வடிவத்தின் இறுதிக்கட்டம், அதன் மூலம் ஒருங்கிணைந்த இணைப்பு ஒன்றில் ஒன்றுக்கு மேற்பட்ட அடுக்குகளுக்கு இணையான ஒன்றுக்கு மேற்பட்ட மூடிகள் பெறப்படுகின்றன. நடைமுறை தொடர்பான கட்டுப்பாடுகள் அனைத்தையும் முகமூடி அமைப்பு முறை காட்ட வேண்டும். இணைப்பு இடம்பெறும் பரப்பளவைக் குறைக்க வேண்டும்.
masked : மூடப்பட்ட : முடக்கப்பட்ட அல்லது துண்டிக்கப்பட்ட நிலை.
massage : செய்தி ; விவரம் : தகவல்களை வகை செய்ய.
massively parallel processing : பெருமளவு இணைநிலைச் செயலாக்கம் : ஏராளமான செயலிகள் இணைக்கப்பட்ட ஒரு கணினிக் கட்டுமானத்தில் நடைமுறைப் படுத்தப்படும் செயலாக்க முறை. ஒவ்வொரு செயலிக்கும் தனித்த ரேம் (RAM) நினைவகம் இருக்கும். அதில் இயக்க முறைமையின் நகல் இருக்கும். பயன்பாட்டு மென்பொருளின் நகலும் அதில் ஏற்றப்பட்டிருக்கும். அவை தனித்துச் செயல்படுத்தக்கூடிய தரவுப் பகுதி, ரேமில் இருக்கும்.
mass storage : பெரும் சேமிப்பகம்; பெரும் தேக்ககம் : நேர் முக ஆதரிப்புச் சேமிப்பக அமைப்பு. வழக்கமான துணை நிலை இருப்பகத்தைவிட அதிக அளவுகளில் தரவுகளை சேமிக்கும் திறன் கொண்டது.
mass storage device : பெருஞ் சேமிப்புக் கருவி : பெருமளவு தரவுகளைச் சேமிக்க, சிக்கனமான சேமிப்பகங்களை வழங்குகிற கருவி. எடுத்துக்காட்டு : வன்வட்டுகள், ஒளி நாடாக்கள், குமிழ் நினைவு பெரும் காந்த வட்டு அமைப்புகள் மற்றும் பெருமளவு சேமிப்புச் சுருணை முறைமைகள். 500 பில்லியன் எழுத்துகளுக்கு மேல் ஏற்கக்கூடியது.
master : முதன்மையாளர் : ஒன்று அல்லது மேற்பட்ட பிற சாதனங்களின் இயக்கத்தைக் கட்டுப்படுத்தும் சாதனம்.
master boot record : முதன்மை ஏற்றும் பதிவேடு : நிலை வட்டில் உள்ள ஏற்றும் பதிவேடு. பல்வேறு வட்டுப் பிரிவுகளைக் காட்டும், பிரிவினைப் பட்டியல் இதில் உள்ளது. ஒவ்வொரு பிரிவும் ஏற்றுப் பதிவேட்டுடன் துவங்குகிறது. இது துணை இயக்க அமைப்புகளை ஏற்றுவதைத் தொடங்கி வைக்கிறது.
master card : முதன்மை அட்டை : துளையிடப்பட்ட அட்டை படிவத்தில் மாஸ்டர் அட்டை.
master clear : முழுமையும் அழித்தல் : முற்றும் அழித்தல். சில கணினி முனையங்களை இயக்கி வைக்கும் சாதனம். அது சில நடைமுறைப் பதிவுகளை விலக்கி புதிய இயக்கத்துக்கு தயார் செய்யும்.
master clock : முதன்மை கடிகாரம் : கணினி ஒன்றின் அடிப்படையான நேரத் துடிப்பைக் கட்டுப்படுத்தும் சாதனம்.
master console : முதன்மை முகப்பு : கணினிக்கு ஆணையளிக்க கணினி இயக்குபவர் அல்லது அமைப்பிற்கு நிரல் தொடர் அமைப்பவர் பயன்படுத்தும் முதன்மை முகப்பு.
master copy : மூலப்படி.
master data : முதன்மைத் தரவு : அடிக்கடி மாற்றப்படும் தரவு தொகுப்பு. இது வகைப்படுத்தும் நடவடிக்கைகளுக்கான அடிப்படைத் தரவுகளை வழங்குகிறது.
master file : முதன்மைக் கோப்பு ; தலைமைக் கோப்பு : ஒப்பு நோக்கில் நிரந்தரமான தரவுகளைக் கொண்ட கோப்பு. உசாவலுக்கும் உரிய ஆதாரமாக உள்ளது. பொதுவாக குறிப்
பிட்ட கால இடைவெளியில் காலத்துக்கு ஏற்ற வகையில் மேம்படுத்தப்படுகிறது.
master file maintenance : முதன்மைக் கோப்பு பராமரிப்பு : காலத்துக்கேற்ற வகையில் மேம்படுத்துதல், மாற்றுதல் அல்லது முதன்மைக் கோப்புகளை திருத்தி அமைத்தல்.
master key : முதன்மை விசை ; முதன்மைத் திறவி : மென்பொருள் அல்லது தரவு பாதுகாப்புக்கான வழங்கன் (server) அடிப்படையிலான ஆக்கப் பொருள்கூறு (component). சில கணினி அமைப்புகளில் தரவு அல்லது பயன்பாடுகள் ஒரு வழங்கன் கணினியில் சேமிக்கப்பட்டிருக்கும். கிளையன் (Client) கணினியில் அவற்றைப் பதிவிறக்கிப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஒரு கிளையன் கணினி தரவு கேட்டு கோரிக்கை அனுப்பும்போது தொடர்வுத் திறவியை (session key) அனுப்பி வைக்கும். தொடர்வுத் திறவி, முதன்மைத் திறவியுடன் பொருந்தியிருப்பின், கிளையன் கேட்ட தரவுப் பொதியை வழங்கன் அனுப்பி வைக்கும்.
master link : முதன்மை இணைப்பு : மெக்டொனால்டு டக்ளஸ் உருவாக்கிய விநியோகிக்கப்பட்ட எண் முறைக் கட்டுப்பாட்டு அமைப்பு. துளையிட்ட அட்டையின் தொடர்பான பிரச்சினைகள் இன்றி வடிவமைப்பிலிருந்து பொருத்துவதற்கு நேரடியாக மின்னணு தரவுகளை வழங்குகிறது.
master menu : முதன்மைப் பட்டியல் : சிறு அல்லது நுண் கணினிகளில் பயன்படுத்தப்படும் எதிர்வினையாற்றும் செயலாக்க அமைப்பு. காட்சித் திரையில் பட்டியலைக் காட்டும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது. பல மாற்று வழமைகளில் விரும்பப்படும் நிரலைத் தேர்ந்தெடுக்க இது உதவுகிறது.
master record : முதன்மைப் பதிவேடு : வாடிக்கையாளர் பணியாளர் அல்லது விற்பனையாளர் போன்ற தனிப்பட்ட தலைப்புகளுக்கான தரவுகளின் தொகுதி.
master/slave arrangement : தலைமை/அடிமை அமைப்பு முறை; தலைவன்/பணியாள் அமைப்பு முறை : (எ-டு) கணினியானது ஏனைய புறச் சாதனங்களைக் கட்டுப்படுத்தும் முறை.
master/slave computer system : தலைமை/அடிமை கணினி முறைமை : ஒரு தலைமைக் கணினியுடன் இணைக்கப்பட்ட ஒன்றுக்கு மேற்பட்ட அடிமைக் கணினிகளைக் கொண்ட கணினி முறைமை. தலைவர் கணினி இணைக்கப்பட்டுள்ள அடிமைக் கணினிக்குப் பட்டியல் பணிகளையும் பிற வேலைகளையும் வழங்குகிறது.
master/slave system : தலைமை/அடிமை முறைமை.
master volume : முதன்மைத் தொகுதி.
match : இணை; பொருத்தம் : இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வகை தரவுகளுக்கு இடையிலான பொருத்தத்தைச் சோதித்தல்.
match case : வடிவப் பொருத்தம் பார்.
matching : இணைவு பார்த்தல் ; பொருத்தம் பார்த்தல் : இரண்டு கோப்புகளை அவற்றில் இணையான வகைத் தரவு அல்லது தரவுகள் இருக்கின்றனவா என்பதை உறுதி செய்ய சோதிக்கும் தரவுகளை வகைப்படுத்தும் நடைமுறை.
material requirements planning : பொருள் தேவையைத் திட்டமிடல் : சார்ந்து நிற்கும் பொருள் வகைகளுக்கான இருப்பறியும் கணினி சார்ந்த உத்திகள்.
Math coprocessor : கணித இணைச் செயலகம் : 386 நிரல் தொகுதிக்கும் அதற்கு முந்தையவற்றுக்கும் பயன்படுத்தக் கூடிய இணைச் சிப்பு. அமைப்பின் கணிப்புச் செயல் திறனைக் கூட்டுவதற்கும், ஆணைகளுக்கும் இதைப் பயன்படுத்தலாம். தொகுதி கூட்டுச் செயலகங்கள் எத்தகைய பயன்பாடுகளுக்கு பலன் தர வல்லது என்பதில் மிகுந்த வாக்கு வாதங்கள் உள்ளன. அதைத் தன்னுடைய சிப்புவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் 486 செயலகங்கள் இக்கேள்வியை மழுங்கடித்து விட்டன.
mathematical expression : கணிதத் தொடர், கணிதக் கோவை : முழு எண்கள், நிலைப் புள்ளி எண்கள் மற்றும் மிதவைப் புள்ளி எண்களையும் கூட்டல்/ கழித்தல்/பெருக்கல்/வகுத்தல் போன்ற கணிதச் செயற்குறிகளையும் கொண்ட ஒரு தொடர் அல்லது கோவை. 5+1. 2x4-8/ 2+ 1. 3× 10-3.
mathematical functions : கணிதச் செயற்கூறு ; கணிதவியல் பணிகள் : பெரும்பாலான நிரல் தொகுப்பு மொழிகளில் கிடைக்கக்கூடிய வாலாயமான கணிதத் தொகுப்பு. மொழியின் ஒரு பகுதியாக பொதுவாக வழங்கப்படுகிறது. mathematical logic : கணித அளவையியல் : மொழி மற்றும் அதன் வகைப்படுத்தும் நடை முறைகளைப் பிரதிநிதித்துவப்படுத்த கணிதவியல் குறியீடுகளைப் பயன்படுத்துதல். ஒரு அறிவிக்கை அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட அறிவிக்கை வரிசைகள் உண்மையானவையா? பொய்யானவையா? என்பதைத் தீர்மானிக்க கணித விதிகளுக்கு இயைந்த வகையில் இந்தக் குறியீடுகள் கையாளப்படுகின்றன.
mathematical model : கணிதவியல் மாதிரி ; கணிதவியல் படிமம் : ஒரு குழுக் கணித வெளியீடுகள். இவை ஒரு முறைமை நடவடிக்கையைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன அல்லது ஒரு கருவியின் செயல்பாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன.
mathematical symbols : கணிதக் குறியீடுகள் : சூத்திரங்கள், சமன்பாடுகள் மற்றும் பட்டியல் தொகுப்புகளில் பயன்படுத்தப்படும் குறியீடுகள்.
mathematics : கணிதம் : பொருள்களுக்கிடையிலான அல்லது அளவுகளுக்கிடையிலான உறவுகள் பற்றிய ஆய்வு. இதன் மூலம் தருக்க முறை வழிகளைப் பயன்படுத்தி சில உண்மைகளை நிரூபிக்க அல்லது பெற இயலும்.
matrix : அணி; அடித்தளப் பரப்பு : தொடர்புள்ள உருப்படிகளை (எண்களாக இருக்கலாம், விரிதாள் கலங்களாக இருக்கலாம், மின்சுற்று உறுப்புகளாக இருக்கலாம்) கிடக்கைகளாகவும் நெடுக்கைகளாகவும் (Rows and Columns) அடுக்கி வைக்கும் ஓர் ஒழுங்கமைப்பு. செவ்வக வடிவிலான எண் தொகுதிகளைக் கையாளக் கணிதத்தில் அணிகள் பயன்படுத்தப்படுகின் கணிப் பணி (Computing) யிலும் கணினிப் பயன்பாடுகளிலும் (Computer Applications) தரவுவை அட்டவணை வடிவில் கையாள அணிகள் பயன்படுகின்றன. கணினி வன்பொருள்களிலும் அணிகளின் பயன்பாடு உண்டு. திரைக்காட்சியில் எழுத்துகள் படப் புள்ளிகளின் (pixels) அணியாகவே காட்சியளிக்கின்றன. அச்சுப்பொறியில் எழுத்துகள் புள்ளிகளின் அணியாகவே அச்சிடப்படுகின்றன. மின்னணுவியலில் டயோடு, டிரான்சிஸ்டர்களின் அணி அடிப்படையில் தருக்க மின்சுற்றுகளின் பிணைய அமைப்பு உருவாக்கப்படுகிறது. தகவலின் குறியாக்க (Encoding), குறி விலக்கப் (Decoding) பணிகளுக்கு இவை பயன்படுகின்றன.
matrix data : அணித் தரவு. matrix notation : அடித்தளப் பரப்புக் குறியீடு : 1858இல் ஆர்தர் கெய்லி என்னும் ஆங்கிலேய கணிதவியலாளரால் அறிமுகப்படுத்தப்பட்டது. அவர் ஒரு குறுங்குறியீட்டு முறையை அதாவது ax என்பது b-க்குச் சமம் எனும் நீள் சமன்பாட்டு வெளியீட்டு முறைமைகளைப் பயன்படுத்தினார்.
matrix printer : புள்ளியணி அச்சுப்பொறி : அடித்தளப்பரப்பு அச்சிடு கருவி : எழுத்து அச்சிடு கருவி. இது புள்ளி அடித்தளப் பரப்பை அச்சிடும் எழுத்தின் வடிவத்தைப் பெறப் பயன்படுத்தினார்.
mature system : முதிர்ந்த முறைமை : என்னென்ன பணிகளைச் செய்ய வடிவமைக்கப் பட்டதோ அந்தப் பணிகள் அனைத்தையும் நிறை வேற்றக் கூடிய, முழுமையாக இயங்கக்கூடிய முறைமை.
MAU : மாவ் : Multi-station Access Unit என்பதன் சுருக்கம். குறும்பரப்பு இணையத்தில் அடையாள வளையத்தின் மையஅச்சு.
Mauchly, John 1907-1980 : மக்லி, ஜான் : 1907-1980 : இனியாக் கணினியின் கூட்டுக் கண்டுபிடிப்பாளர். இதுவே மின்னணுவியல் கணினிகளில் பெரியதாகும். பென்சில்வேனி யாவில் உள்ள உர்சினஸ் கல்லூரியின் இயற்பியல் துறைத் தலைவராக 1930ஆம் ஆண்டில் கணினி மற்றும் மின்னணுவியல் தொடர்பான சோதனை களை மக்லீ துவக்கினார். பள்ளியில் எட்டாண்டு கள் இருந்த காலத்தில் பருவ நிலை ஆய்வுத் திட்டம் ஒன்றில் அவர் பணியாற்றினார். சிக்கலான சுற்றுச் சூழல் தொடர்பான கணக்கு கிளைச் செய்ய விரைவாகச் செயல்படக்கூடிய மின்னணுவியல் கருவி ஒன்று அவசியம் என்ற முடிவுக்கு வந்தார். 1941இல் அவர் பென்சில் வேனியா பல்கலைக்கழகத்தில் உள்ள மின் பொறியியல் பள்ளியில் சேர்ந்தார். அங்கு 1943ஆம் ஆண்டின் துவக்கத்தில் ஜே. பிரெஸ் பெர் ஈக்கெர்ட்டைச் சந்தித்தார். இருவரும் சேர்ந்து இராணுவ ஆயுதப் படைப் பிரிவுக்கு மின்னணுவி யல் கணினி ஒன்றைத் தயாரிப்பதற்கான திட்டத்தைத் தயாரித்தார். இராணுவத்தின் ஆயுதப் படைப் பிரிவு அவருக்கு அந்த எந்திரத்தைத் தயாரிப்பதற்கான ஒப்பந்தத்தை வழங்கியது. இராணுவத்துக்கு இரண்டாவது உலகப் போருக்காக புதிதாக உருவாக்கப்பட்ட பீரங்கிகளின் இலக்கு களை நிர்ணயிப்பதற் கான கணிதப் பட்டியல்களைத் தயாரிக்க வேண்டியிருந்தது. இத்தகைய பட்டியல்களை மூர் பள்ளி ஏற்கனவே பயன்படுத்தி வந்தது. 1943-க்கும் 1946-க்கும் இடைப்பட்ட காலத்தில் இவை மிகவும் மெதுவாக இயங்கின. ஈக்கெர்ட்டும், மக்லீயும் மின் னணுவியல் எண் ஒருங்கிணைப்பி மற்றும் கணினி ஒன்றை உருவாக்கினார்கள். எதிர்காலத்தில் பல கணினி வடிவமைப்புகளை உருவாக்குவதற்கான முன்னோடியாக இது அமைந்தது. ஈனியாக் உண்மையிலேயே ஒரு பெரிய ராட்சதன் ஆகும். அது 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெற்றிடக் குழாய்களைக் கொண்டது. அதன் எடை 30 டன்கள். அது மூன்று படுக்கையறைகளைக் கொண்ட ஒரு வீட்டின் பரப்பளவைக் கொண்ட அறையில் அமைக்கப் பட்டிருந்தது. ஈனியாக் உருவானதைத் தொடர்ந்து ஈக்கெர்ட் டும் மக்கிலீயும் தங்கள் சொந்தக் கம்பெனியை நிறுவினார்கள். அவர்கள் பினாக் என்ற பெயரில் தங்கள் இரும எண் தானியங்கிக் கணினியை அமைத்தார்கள். அது சோதனை முயற்சியாக அமைந்தது. பொது நோக்கங்களுக் கான உலகின் முதலாவது வணிகக் கணினி யுனிவாக், அமெரிக்காவின் மக்கள் தொகைக் கணக்கெடுப் புக் கழகத்தில் நிறுவப்பட்டது. ஈக்கெர்ட்டும் மக்லீயும் துவக்கிய நிறுவனம் இப்பொழுது ஸ்பெரி கார்ப்பரேஷனின் ஒரு அங்கமாக உள்ளது. இந்நிறுவனம் உலகின் மிகப் பெரிய கணினி சாதனங்களைத் தயாரிக்கும் நிறுவனமாக உள்ளது.
. ma. us : . எம். ஏ. யு. எஸ் : ஓர் இணைய தள முகவரி அமெரிக்க நாட்டு மாசாசூஸ்ட்ஸ் மாநிலத் தைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.
maximinicomputer : பெரிய குறுங்கணினி : 16 துணுக்குச் சொற்களைப் பயன்படுத்தும் பெரிய குறுங்கணினி, Minimini computer, Midimini computer and Superminicomputer ஆகியவற்றுக்கு எதிரானது.
maximize : பெரிதாக்கு : உச்சப்படுத்து : வரைகலைப் பயனாளர் இடைமுகத்தில் (GUI) ஒரு சாளரத்தை விரிவாக்கி தாய்ச் சாளரம்அல்லது கணினித் திரை முழுமையும் பரவும் வண்ணம் செய்தல்.
maximize and minimize buttons : பெரிது. சிறிதாக்கும் பொத்தான்கள்.
maximize button : பெரிதாக்கு பொத்தான் : விண்டோஸ் 3. x, விண்டோஸ் 95/98 மற்றும் விண்டோஸ் என்டி ஆகியவற்றில் ஒரு சாளரத்தின் மேல் வலது மூலையில் அமைந்துள்ள ஒரு பொத்தான். தாய்ச் சாளரம் அல்லது கணினித் திரை முழுமையும் பரவும் வண்ணம் ஒரு சாளரத்தைப் பெரிதாக்க, இந்தப் பொத்தான் மீது சொடுக்கினால் போதும்.
maximum value : அதிக பட்ச மதிப்பு.
mb : எம்பி : Megabyte என்பதன் குறும்பெயர்.
. mb. ca : . எம். பி. சி. ஏ : ஓர் இணையதள முகவரி கனடா நாட்டின் மின்டோப் மாநிலத்தைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.
MBONE or Mbone : எம்போன் : பல்முனைப் பரப்புகை முதுகெலும்பு என்று பொருள்படும் Multicast backBONE என்ற தொடரின் சுருக்கம். பல் இணைய தளங்கள் இணைந்த சிறிய தொகுதி. ஒவ்வொரு தளமும் நிகழ் நேர கேட்பொலி மற்றும் ஒளிக்காட்சித் தரவுகளை பிற தளங் களுக்கு ஒரே நேரத்தில் பரப்பும் திறன் பெற்றவை. ஒன்றிலிருந்து பலவற்றுக்கு பல்முனைப் பரப்பை ஐ. பீ (Multicast-IP) நெறிமுறையைப் பயன்படுத்தி அதிவேகத் தரவு பொதிகளை அனுப்பவும் பெறவும் உதவும் தனிச்சிறப்பான மென்பொருளை எம்போன் தளங்கள் பெற்றுள்ளன. ஒளிக்காட்சிக் கலந்துரை யாடல்களுக்கு (video conferencing) பயன்படுகிறது.
Mbps : எம்பிபீஎஸ் : ஒரு வினாடியில் இத்தனை மெகா பிட்டுகள் என்று பொருள்படும் Megabits per second என்பதன் சுருக்கம். ஒரு மெகாபிட் என்பது ஏறத்தாழ பத்து இலட்சம் துண்மிகளைக் கொண்டது.
. mc : எம்சி : ஓர் இணைய தள முகவரி மொனாக்கோ நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.
MCC : எம்சிசி : Microelectronics and Computer Technology Corporation என்பதன் குறும்பெயர். மிக நவீன கணினி குறித்து ஆய்வு நடத்த 13 நிறுவனங்கள் இணைந்து உருவாக்கிய ஒரு அமெரிக்கக் கூட்டமைப்பு.
McCarthy, John : மெக்கார்த்தி, ஜான் : LISP நிரல் தொகுப்பு மொழியை 1958இல் உருவாக்கி யவர். மேலும் எதிர்வினைக் கணினி எனும் கருதுகோளை எம்ஐடியில் பணிபுரியும் பொழுது உருவாக்கியவர். செயற்கைப் புலனாய்வு எனும் சொற்றொடரை முதலில் உரு வாக்கியவர். செயற்கைப் புலனாய்வு தொடர்பான தனது பணிகளுக்காக நன்கு அறியப்பட்டவர்.
MCGA : எம்சிஜிஏ : பல்வண்ண வரைகலைக் கோவை எனப் பொருள்படும் Multicolour Graphics Array glassip என்ற தொடரின் தலைப் பெழுத்துக் குறும்பெயர். கணினித் திரைக் காட்சிக்கான மின்சுற்று அட்டை.
MCI : எம்சிஐ : 1. ஊடகக் கட்டுப்பாட்டு இடைமுகம் எனப்பொருள்படும் Media Control Interface என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். விண்டோஸ் இயக்க முறைமையின் பயன்பாட்டு நிரலாக்க இடைமுகம் (Windows AP). பல்லூடகச் சாதனங்களை நிரல் மூலமாகக் கட்டுப்படுத்த உதவுகிறது. 2. தொலைதுாரத் தொலைபேசி சேவை வழங்கும் ஒரு மிகப்பெரும் நிறுவனம். Microwave Communications Inc., என்பது அந்நிறுவனப் பெயர்.
md : எம்டி : ஓர் இணைய தள முகவரி மால்டோவாக் குடியரசைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப் பெயர்.
MDA : எம்டிஏ : ஒற்றைநிறத் திரைக்காட்சித் தகவி என்று பொருள்படும் Monochrom Display Adapter என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும் பெயர். 1981-ல் ஐபிஎம் பீசிகளில் அறிமுகப் படுத்தப்பட்ட ஒளிக்காட்சித் தகவி. எம்டிஏயில் ஒரேயொரு ஒளிக்காட்சிப் பாங்கு மட்டுமே உண்டு. 25 வரிகள் 80 எழுத்துகள். ஒவ்வொரு எழுத்து களுக்கும் அடிக்கோடு உண்டு; மின்னுதல் மற்றும் ஒளிர்தல் (Bright) பண்புகளும் உண்டு.
MDI : எம்டிஐ : பல் ஆவண இடைமுகம் என்று பொருள்படும் (Multi Document Interface) என்ற தொடரின் தலைப் பெழுத்து குறும்பெயர். சில பயன்பாட்டு மென்பொருள்களில் இருக்கும் பயனாளர் இடைமுகம். ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட ஆவணங்களைத் திறக்க உதவுகிறது. மைக்ரோசாஃப்ட் வேர்டு, எக்செல் தொகுப்புகளில் உள்ளது. நோட்பேடு, வேர்ட் பேடு ஆகியவற்றில் கிடையாது.
. md. us : . எம். டி. யு. எஸ் : ஓர் இணைய தள முகவரி அமெரிக்க நாட்டின் மேரிலாந்து மாநிலத்தைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும்புவிப்பிரிவுக் களப்பெயர்.
meanssends analysis : வழி/விளைவு-பகுப்பாய்வு : துவக்கப் புள்ளியிலிருந்து முன்னும் பின்னும் இலக்கை நோக்கி ஆய்வு செய்கிறமுறை. வேறு பாடுகளைக் கலையும் முயற்சியின் அடிப்படையில் அமைந்தது.
mean time between failure : கோளாறுகளுக்கு இடைப்பட்ட நேரம் : கருவியின் கோளாறு களுக்கு இடையில் ஆகும் நேரத்தின் அளவு. இயக்கும் நேரங்களின் எண்ணிக்கையில் குறிப்பிடப்படும். சான்றாக, ஒரு நிலைவட்டின் கோளாறுகளுக்கு இடைப்பட்ட நேரம் (MTBT) 20, 000 மணிகளாகும்.
measuring divices : அளவீட்டுச் சாதனங்கள்.
mechanical data processing : எந்திரவியல் தரவு வகைப் படுத்துதல் : ஒப்பு நோக்கில் சிறிய பெரிய நிரல் தொகுப்புக்கு ஆட்படாத எந்திரவியல் சாதனங்களைக் கொண்ட தரவுகளை வகைப் படுத்தும் முறை.
mechanical mouse : எந்திர முறை (எலி வடிவ) சுட்டுக் கருவி : ரப்பர் பந்தைப் பயன்படுத்தும் (எலி வடிவ) சுட்டி. அலகின் உள்ளே இருக்கும் சக்கரங்களுக்கிடையே இது சுற்றுகிறது.
mechanical translation : எந்திரவியல் மொழி பெயர்ப்பு : கணினிகள் அல்லது அதேபோன்ற சாதனங்களினால் செய்யப்படும் மொழி பெயர்ப்புக் கான வகைப் பெயர்.
mechanization : எந்திரமய மாக்கல் : மனிதர்களால் முன்பு செய்யப்பட்ட பணிகளை எளிமைப்படுத்த அல்லது எந்திரங்களுக்கு மாற்ற உதவும் எந்திரங்கள்.
media ஊடகம்; தகவல் சாதனம் : கணினி அடிப்படையிலான தரவுவைப் பதிவு செய்வதற் கான தாள், வட்டு, நாடா போன்ற பருப்பொருள் கள். கம்பிகள், கம்பி வடங்கள், ஒளிவ இழை வடங்கள், நுண்ணலை, வானொலி அலை போன்றவை தகவல் பரிமாற்றத்துக்கான ஊடகங்களாகப் பயன்படுகின்றன. மீடியம் - ஒருமை;மீடியா - பன்மை.
media access control : ஊடக அணுகு கட்டுப்பாடு.
media compatibility : ஊடக ஏற்புத் திறன் : வெற்று வட்டுகளாக ஒரே மாதிரியான வட்டு களைப் பயன்படுத்தும் இரண்டு அல்லது மேற்பட்ட மாறுபட்ட முறை அலகுகளின் திறன். ஒன்று மற்றொன்று பதிவு செய்வதைப் படிக்க முடியலாம் அல்லது இயலாமற் போகலாம்.
media conversion : ஊடக மாற்றல் : ஒரு சேமிப்பு ஊடகத்திலிருந்து வேறொன்றுக்கு தரவுவை மாற்றல். வட்டிலிருந்து நாடாவுக்கு அல்லது ஒரு வட்டுப் பெட்டியிலிருந்து இன்னொன்றுக்கு மாற்றுதல்.
media eraser : சாதனங்கள் அழிப்பி : ஊடக அழிப்பி : காந்த நாடாக்களை, குறுவட்டுகளை காந்தமிழக்கச் செய்ய வடிவமைக்கப்பட்ட சாதனம்.
media failure : ஊடகப் பழுது : பதிவு செய்யும் மேற்பரப்பில் உள்ள குறை காரணமாக வட்டிலிருந்து நாடா போன்ற ஒரு சேமிப்பகச் சாதனத்திலிருந்து வேறொன்றுக்கு படிக்கவோ, எழுதவோ முடியாத நிலை.
media filter : ஊடக வடிகட்டி' : 1. குறும் பரப்புப் பிணையங்களில் இரு வேறு வகை ஊட கங்களுக்கிடையே பொருத்தியாகப் பயன்படுத் தப்படும் சாதனம். (எ-டு) : ஆர்ஜே-45 இணைப்பி, இணையச்சு வடத்திற்கும், உறையிடா முறுக் கிணை (UTP) வடத்திற்கும் இடையே பயன்படுத்தப் படுகிறது. ஊடக வடிகட்டிகள் செயல்பாட்டில் அனுப்பி வாங்கிகளை ஒத்தவை. 2. தரவுப் பிணையங்களில் சுற்றுச்சூழலிலிருந்து வரும் மின்னணு இரைச்சலை வடிகட்டி நீக்க இணைக்கப் படும் சாதனம். (எ-டு) இணையச்சு வட அடிப் படையிலமைந்த புறப் பிணையங்களில் (Extranet) அருகமைந்த மின்னணுக் கருவிகளின் இடையூறு காரணமாய் தரவு இழப்பு ஏற்படாமல் தவிர்க்க ஊடக வடிகட்டிகள் உதவும்.
media interchangeability : ஊடக பரிமாற்றத் தன்மை : ஒரே மாதிரியான இயக்கி உள்ள வட்டுகளை ஒரே எந்திரத்தின் மீது பதிந்து வேறொன்றில் திரும்பப் பயன்படுத்தக்கூடிய அளவு.
median : மீடியன் : ஒரு தரவுத் தொகுதியின் நடு அளவு. கீழ்க்கண்ட தரவு தொகுதியில் மீடியன் மதிப்பு 4. இத்தொகுதியில் 19 வகையறாக்கள் இருப்பதால் இதன் மீடியன் நடுமதிப்பாகும். இரட்டைப்படை எண் தரவுகளின் மீடியன் இரண்டு நடு வகையறாக்களின் சராசரி எண்ணாகும். அந்த எண்கள், 1, 1, 2, 3, 3, 3, 3, 3, 4, 4, 5, 5, 5, 6, 8, 8, 9, 9, 9. media specialist : தகவல் சாதன வல்லுநர் : சேமிப்புச் சாதனங்களை வகைப்படுத்தவும், பரா மரிக்கவும் பொறுப்பானவர். சிறு வட்டுகள், சிறு வட்டுத் தொகுப்பு, காந்த நாடாக்கள், மற்றும் தொடர்புடைய பொருள்கள்.
medium : ஊடகம் : பொதியுறை வட்டு, காந்த வட்டு, காகித நாடா, காந்த நாடா, துளை அட்டை மற்றும் காகிதம் போன்ற தரவுகளை பதிவு செய்கிற இயற்பியல் பொருள்.
medium model : நடுத்தர மாதிரியம் : இன்டெல் 80x86 செயலிக் குடும்பத்தில் பயன்படுத்தப்படும் நினைவக மாதிரியம். இந்த மாதிரியத்தில் தகவலுக்காக 64 கிலோபைட் நினைவக இடமே ஒதுக்கப்படும். நிரல் கட்டளைகளுக்கு ஒரு மெகா பைட்வரை இடம் ஒதுக்கப்படும்.
medium pitch : நடுத்தொனி.
medium scale integration (MSI) : நடுத்தர அளவு ஒருங்கிணைப்பு : பெரும் ஒருங்கிணைப் புக்கும் சிறிய அளவிலான ஒருங்கிணைப்புக்கும் இடைப்பட்ட வகை ஒருங்கிணைப்பு வகை.
meg : மெக் : ' மெகாபைட் என்பதற்கான விளிச்சொல்.
mega : மீமிகு : பத்து இலட்சத்தைக் குறிக்கும் முன்னிணைப்பு அல்லது 106. குறும்பெயர் M . Micro என்பதற்கு எதிரானது பத்து இலட்சத்தில் ஒரு பங்கு.
megabit : மீமிகு துண்மி : பொதுவாக ஒரு பத்து இலட்சம் துண்மிகள் அல்லது ஒராயிரம் கிலோ துண்மிகள். சரியாகச் சொன்னால் 10, 48, 576துண்மிகள் அல்லது 1024 கிலோ துண்மிகள்.
Megabyte : மீமிகு எண்மி : குறிப்பாக 20 அல்லது 10, 48, 576 எண்மிகள். 1024 கிலோ எண்மிகள். சராசரியாக ஒரு பத்து இலட்சம் எண்மிகள் அல்லது ஒராயிரம் கிலோ எண்மிகள். குறும்பெயர் MB.
megacycle : மீமிகு சுழற்சி' : ஒரு விநாடிக்குப் பத்து இலட்சம் சுழற்சிகள்.
megaflop : மீமிகு இறக்கம் : ஒரு விநாடிக்கு பத்து இலட்சம் பதின்மப் புள்ளி நடவடிக்கைகள். M flops என்றும் அழைக்கப்படுகிறது.
megahertz : மீமிகு மின் அலை வரிசை : மின் அலைவரிசை அலகு. ஒரு விநாடிக்கு பத்து இலட்சம் சுழற்சிகளுக்குச் சமமானது. ஒலிபரப்பு அலை வரிசை அலகு Mhz என்று குறுக்கி அழைக்கப்படுகிறது. megapel display : மெகாபௌல் காட்சி : கணினி வரைகலையில் ஒரு பத்து இலட்சம் அல்லது மேற்பட்ட படப்புள்ளிகளைக் கையாளும் காட்சி அமைப்பு. ஒரு முழு திரைக்காட்சியில் ஒரு பத்து இலட்சம் படப்புள்ளிகள் வர வேண்டு மென்றால் 1, 000 வரிகளில் ஒவ்வொன்றிலும் 1, 000 புள்ளிகள் இருக்கும்.
member : உறுப்பு : உறுப்பினர் : பொருள்நோக்கு நிரலாக்கத்தில் ஓர் இனக்குழுவில் (class) வரையறுக்கப்படும் ஒரு மாறிலி (variable) அல்லது ஒரு வழி முறை (mothod).
membrane keyboard : ஜவ்வு விசைப்பலகை : இரண்டு மெல்லிய பிளாஸ்டிக் தாள்களினால் அமைக்கப்பட்டது. மின்சாரத்தை கடத்தும் மசிப்பூச்சு உடையது. பல குறைந்த விலையுடைய நுண் கணினிகளில் பயன்படுத்தப்படும் சிக்கனமான சமதள விசைப் பலகை.
memo field : குறிப்புப் புலம் : செய்தியில் மாறும் அளவினைக் கொண்டிருக்கும் தரவுப் புலம். செய்தியை இணைகோப்பில் சேமிக்கலாம். ஆனால், அது தரவுப் பதிவேட்டில் ஒரு பகுதி என்பது போல நடத்தப்படும்.
memory நினைவகம் : நினைவுப்பதிப்பி : ஏராளமான தரவுகளை சேமிக்கும் திறன் கொண்ட கணினியின் சேமிப்பு வசதிகள்.
memory access : நினைவு அணுகல்.
memory addresses : பதிப்பி முகவரிகள்.
memory allocation : நினைவக ஒதுக்கீடு.
memory, associate : சார்பு நினைவகம்.
memory bank : நினைவக வங்கி : தரவுகளை வைத்திருக்கும் கணினி அமைப்பை பொதுவாகக் குறிப்பிடுகிறது.
memory based : நினைவகம் சார்ந்த : செயலாக்கம் செய்வதற்காக நினைவகத்தில் எல்லா தரவுகளையும் வைத்துக் கொள்ளும் நிரல் தொடர். ஏறக்குறைய எல்லா விரிதாள்களும் நினை வகம் சார்ந்தவை. விரிதாளில் ஒரு முனையில் செய்யப்படும் மாற்றம் உடனடியாக அடுத்த முனை யில் பிரதிபலிக்கும். இதனால் அவற்றின் இயக்கம் கணிசமாக விரைவடையும்.
memory board : நினைவுப் பலகை : கணினி முறையுடன் ராமை இணைக்கும் விரிவுப் பலகை. கூடுதல் தகவலைச் சேமிக்கவும் பயன்படுத்தவும் இதனால் இயல்கிறது. memory, bubble : குமிழி நினைவகம்.
memory capacity : நினைவகக் கொள்திறன்.
memory card : நினைவக அட்டை : எடுத்துச் செல்லக் கூடிய கணினிகளில் வட்டுக்கு மாற்றாகப் பயன்படுத்தப்படும் கடன் அட்டை அளவுள்ள நினைவக (மாடுல்) ஐசி அட்டைகள், ரோம், ரேம் அட்டைகள் என்றெல்லாம் அழைக்கப்படும். இவை பலவகையான சில்லுகளைப் பயன்படுத்து கின்றன. ரேம் அட்டைகள் பேட்டரியைப் பயன் படுத்தி செல்களுக்கு மின்சக்தியை நினைவகம் அமைந்துள்ள அச்சிட்ட மின்சுற்று அட்டைகளுக்கு ஏற்றுகின்றன.
memory cell : நினைவக அறை : நினைவுப் பதிப்பி சிப்பு : நினைவகத்தின் ஒரு துண்மி. மாறும் ரேம் நினைவகத்தில். ஒரு டிரான்சிஸ்டர் மற்றும் ஒரு கொள் திறனைக் கொண்டு ஒரு அறை அமைக்கப்படுகிறது. நிலை ரேம் நினைவ கத்தில் ஐந்து டிரான்சிஸ்டர்களைக் கொண்டு ஒரு அறை உருவாகிறது.
memory check : நினைவக சரிபார்ப்பு.
memory chip : நினைவகச் சிப்பு : மின்னேற்ற வடிவில் தகவலைச் சேமிக்கிற அரைக் கடத்திச் சாதனம். வழக்கமாக இவை நினைவகப் பலகைகள் அல்லது அமைப்புப் பலகைகளில் பொருத்தப் பட்டிருக்கும்.
memory control block : நினைவகக் கட்டுப்பாடு கட்டம் : நினைவகத்தின் ஒவ்வொரு கட்டத்தின் ஆரம்பத்திலும் டாசில் (DOS) அமைக்கப்பட்டுள்ள 16 எண்மி அளவுகோல் கட்டம். அதன் நினைவக ஒதுக் கீட்டுப் பணிகளின் மூலம் நிரலாக்கத் தொடரை இது அமைக்கிறது.
memory core : உள்ளக நினைவகம்.
memory cycle : நினைவுச் சுழற்சி : ஒரு எண்மி அல்லது தகவலின் ஒரு சொல்லை நினைவகத்தில் சேர்ப்பதற்கோ சேமிப்புக் கிடங்கு எனப்படும் நினைவகத்திலிருந்து அகற்றுவதற்கோ தேவையான நேரம்.
memory cycle time : நினைவக சுழற்சி நேரம் : ஒரு நினைவக சுழற்சியைச் செய்வதற்கு அது எடுக்கும் நேரம்.
memory data register (MDR) : நினைவகத் தரவுப் பதிவகம் : தலைமை நினைவகத்திற்கு வந்து போகும் அனைத்துத் தரவு நிரல்களையும் தற்காலிகமாக வைத்திருக்கும் ஒரு சிறப்பு நினைவகம். memory dump : நினைவகச் சேமிப்பு;நினைவகத் திணிப்பு;நினைவுக் கொட்டல்.
memory, external : புற நினைவகம்.
memory fill : நினைவக நிரப்பி : ஒரு குறிப்பிட்ட மதிப்புக்கு நினைவகத்தின் ஒரு கட்டத்தில் தரவுகளைப் பொருத்துதல்.
memory interleaving : நினைவக இடைவெளியேற்றம் : நினைவக வேகத்தை அதிகரிக்கும் தொழில்நுட்பத்தின் ஒரு வகை. சான்றாக, ஒற்றைப்படை மற்றும் இரட்டைப்படை முகவரிகளுக்கு தனித்தனி நினைவக வங்கியை அமைப்பதன் மூலம் நடப்பு எண்மியைப் புதுப்பிக்கும் வேளையில் நினைவகத்தின் அடுத்த எண்மியை அணுகலாம்.
memory, internal : அக நினைவகம்.
memory, magnetic : காந்த நினைவகம்.
memory main : முதன்மை நினைவகம்.
memory management : நினைவுப் பராமரிப்பு : நினைவு ஆதாரங்களை மிகவும் திறனுடன் கட்டுப்படுத்துகிற அல்லது ஒதுக்கீடு செய்கிற உத்தி.
memory management programme : நினைவக மேலாண்மை நிரல் : 1. தரவு மற்றும் நிரல் ஆணைகளை முறைமை நினைவகத்தில் இருத்தி வைத்தல், அவற்றின் பயன்பாட்டை கண்காணித்தல், விடுவிக்கப்படும் நினைவகப் பகுதியை மறுஒதுக்கீடு செய்தல் போன்ற பணிகளைச் செய்யும் ஒரு நிரல். 2. நிலைவட்டின் (Hard Disk) ஒரு பகுதியை ரோம் நினைவகத்தின் நீட்டிப்பாய் பயன்படுத்திக் கொள்ளும் ஒரு நிரல்.
memory management unit : நினைவக மேலாண்மையகம் : மெய்நிகர் நினைவக முகவரிகளை (Virtual Memory Address) மெய்யான நினைவக முகவரிகளுக்குப் பொருத்துகின்ற திறன்பெற்ற வன்பொருள். 68020 செயலியை அடிப்படையாகக் கொண்ட கணினிகளில், செயலியும் நினைவக மேலாண்மையகமும் தனித்தனியானவை. ஆனால் இன்றைய நவீனக் கணினிகளில் நினைவக மேலாண்மையகம் மையச் செயலகத்தில் உள்ளிணைக்கப் பட்டிருக்கும். இன்னும் சில கணினிகளில் இவை நுண் செயலிக்கும் நினைவகத்திற்கும் இடையே பாலமாகச் செயல் படும். இந்த வகை நினைவக மேலாண்மையகங்கள் முகவரி ஒன்று சேர்ப்புப் பணிக்குக் காரணமாயிருக்கின்றன. 'டி'ரோம்களில் புதுப்பிப்புச் சுழற்சிகளுக்குக் காரணமாயுள்ளன.
memory map : நினௌவகப் படம் : தரவு சேமிப்பகத்தில் உள்ள தோற்ற உரு வேறு இடத்தில் தோன்றுதல். எடுத்துக்காட்டாக நினைவகத்தில் உள்ள ஒவ்வொரு இடத்துக்கும் பொருத்தமான எழுத்து உரு வெளிப்படு திரையில் தோன்றுதல்.
memory mapped I/O : நினைவகப் பின்னணியிலான உ|வெ : வெளிப்புறச் சாதனம். இதன் உள்ளீடு அல்லது வெளியீட்டின் ஒவ்வொரு உறுப்புக்கும் ஏற்ற நினைவக இருப்பிடங்கள். சான்றாக, நினைவகப் பின்னணியிலான காட்சியமைப்பில் ஒவ்வொரு படப்புள்ளி அல்லது எழுத்தும் நினைவகத்தில் அதற்குரிய எண்மிகளில் இருந்து தரவுகளைப் பெறுகின்றன. மென்பொருளால் நினைவகம் புதுப்பிக்கப்பட்டவுடன். புதிய தரவுவை திரை காட்டுகிறது.
memory mapping : நினைவகம் அமைத்தல் : முன் வரையறை செய்யப்பட்ட அல்கோரிதம்களுக்கு ஏற்றவாறு மாயமுகவரியை உண்மையான முகவரியாக மாற்றும் முறை.
memory model : நினைவக மாதிரியம் : ஒரு கணினி நிரலில் உள்ள தரவுகளையும் குறி முறைகளையும் (கட்டளை களையும்) நினைவகத்தில் ஏற்றுவது தொடர்பான ஒர் அணுகுமுறை. நினைவகத்தில் தகவலுக்கு எவ்வளவு இடம், கட்டளைகளுக்கு எவ்வளவு இடம் என்பதை நினைவக மாதிரியம்தான் தீர்மானிக்கிறது. பொதுவாகத் தட்டை நினைவகப் பரப்பினைக் கொண்டுள்ள பல கணினிகள் ஒற்றை நினைவக மாதிரியத் தையே ஏற்கின்றன. துண்டம் துண்டமான நினைவகப் பரப்பினைக் கொண்டுள்ள கணினிகள் பெரும்பாலும் பல்வகை நினைவக மாதிரியங் களுக்கு இடம் தருகின்றன.
memory module : நினைவகக் கூறு (மாடுல்) : தலைமை நினைவகத்தின் 4 கிலோ எண்மி அல்லது மேற்பட்ட கூறுகளைக் கொண்ட தனிப்பட்ட மின் சுற்று அட்டை.
memory port : நினைவக இணைப்பி : தலைமை நினைவகத்திற்கும் மையச் செயலகத்திற் குமான இணைப்பின் ஆரம்ப நிலை. memory power : நினைவாற்றல்.
memory protection : நினைவகப் பாதுகாப்பு : ஒரு நிரல் தொடரானது தவறுதலாக வேறொரு இயங்கும் நிரல் தொடருடன் மோதுவதைத் தடுக்கும் தொழில்நுட்பம். நிரல் தொடரைச் சுற்றி ஒரு பாதுகாப்பு எல்லைக்கோடு உருவாக்கப்படுகிறது. நிரல் தொடருக்குள்ளிருக்கும் நிரல்கள் அதன் எல்லைக்கு வெளியே இருக்கும் நிரல்களைத் தொட தடை செய்யப் படுகிறது.
memory, random access : குறிப்பிலா அணுகு நினைவகம்.
memory resident : நினைவகத்தில் தங்கியுள்ள : எப்போதும் நினைவகத் தில் உள்ள நிரல் தொடர்.
memory resident package : நினைவகத்தில் தங்கியிருக்கும் பொட்டலம் : கணினியின் அடிப்படை சேமிப்பகத்தில் ஏற்றப்படும் மென்பொருள். நேர மெடுக்கும் அலுவலகப் பணிகளைச் செய்வதற்கு அழைக்கப் படும்வரை அது காத்திருக்கிறது.
memory size : நினைவக அளவு : ஒரு கணினியின் நினைவகக் கொள்திறன். பெரும்பாலும் மெகா பைட்டுகளில் அளவிடப்படும்.
memory slot : நினைவக செருகுவாய்;நினைவகப் பொருத்துமிடம்.
memory sniffing : நுகர்வு நினைவகம்;நினைவகச் சோதனைகள் : வகைப்படுத்தும் பணியின்போது சேமிப்பகத்தை தொடர்ந்து சோதனையிடல்.
memory space : நினைவக இடம் : மையச் செயலகம் அணுகக்கூடிய நினைவக முகவரிகளின் வரிசை. 8088 சிப்புவின் முகவரியிடம் ஏறக் குறைய பத்து இலட்சம் எண்மிகளாகும்.
memory typewriter : நினைவகத் தட்டச்சுப் பொறி : அதன் நினைவகத்தில் சில பக்கங்கள் அளவு செய்திகளை வைத்துக் கொண்டு ஒரளவான சொல் செயலாக்க பணிகளையும் செய்யும் தட்டச்சு. ஒன்று அல்லது இரண்டு வரி திரையை வைத்துக் கொண்டு தொகுப்பது தொல்லை தருவதாகும்.
memory unit : நினைவக அலகு.
memory, volatile : நிலையா நினைவகம்.
memotype field : குறிப்புரைத் தரவுப் புலம்.
menu : பட்டி பட்டியல் : ஒரு பயனாளர் தாம் விரும்புகின்ற நடவடிக்
கையை மேற்கொள்ளபட்டியல்
விருப்பத் தேர்வுகளின் பட்டியலிலிருந்து ஒன்றைத் தேர்வு செய்து இயக்க வாய்ப்பளிக்கும் ஒரு பட்டியல். ஒரு கட்டளையை நிறைவேற்றுதல் அல்லது ஒர் ஆவணத்தை வடிவமைத்தல் போன்ற பணியாக இருக்கலாம். வரைகலை இடை முகத்தை வழங்குகின்ற பல பயன்பாட்டு நிரல்கள், இது போன்ற தேர்வுப் பட்டியை பயன்படுத்துகின்றன. பயனாளர்கள் நிரல் கட்டளைகளையும் அவற்றைப் பயன்படுத்தும் முறைகளையும் நினைவில் வைத்துக் கொள்ள அவசியமில்லாத ஒர் எளிய மாற்று வழியை இதுபோன்ற பட்டிகள் வழங்குகின்றன.
menu application : பட்டிப் பயன்பாடு.
menu bar : பட்டியல் பட்டை : திரையில் தோன்றும் பட்டியல் வாய்ப்பு களின் வரிசையடங்கிய பட்டை.
menu block : பட்டிப் பகுதி.
menu definitions : பட்டி வரையறைகள்.
menu driven : பட்டி வழிச் செலுத்தி;பட்டி முடுக்கம்.
menu driven programme : பட்டியல் வழி செலுத்தும் நிரல்கள்.
menu driven software : செயல் பட்டியலை இயக்கும் மென்பொருள் : பட்டியலை விரிவாகப் பயன்படுத்த உதவும் கணினி நிரல் தொகுப்பு. இவ்வகை மென்பொருள் குறைந்த அளவு கணினி பட்டறிவு உள்ளவர்கள் கூடப் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டது. செய்ய வேண்டிய வேலைகளைத் தேர்வு செய்ய செயல் பட்டியல் வரிசை பயன்படுத்தப்படுகிறது.
menu item : பட்டியல் உருப்படி : செயல்பட்டியல் வரிசையில் உள்ள ஏதாவது ஒன்று. menu option : பட்டித் தேர்வு.
merge : சேர்ப்பு;சேர்;இணைப்பு : பொருள் வரிசைகளை மாற்றாமல் பொருள்களை வரிசை முறையில் சிலவற்றை இணையாகவும் சேர்த்தல்.
merge cell : கலம் இணைத்தல்;கலம் சேர்த்தல் : சொல்செயலிப் பயன்பாடுகளில் ஒர் அட்டவணையில் ஒன்றுக்கு மேற்பட்ட கலங்களை ஒரே கலமாக்க உதவும் கட்டளை.
merge document : ஆவணச் சேர்ப்பு;இணைப்பு ஆவணம்;ஆவண இணைப்பு.
merge print programme : இணைப்பு அச்சிடு நிரல் தொகுப்பு : கணினியைப் பயன்படுத்துவோர் தனக்கெனத் தேவையான கடிதங்களைத் தயாரிக்க உதவுகிற நிரல் தொகுப்பு.
merge purge : இணைப்பு-தூய்மையாக்கு : இரண்டு அல்லது மேற்பட்ட பட்டியல்களை ஒன்றாக்கி தேவையில்லாதவற்றை நீக்குதல். சான்றாக, ஒரு புதிய பெயர், முகவரிப் பட்டியலுடன் பழைய பட்டியலைச் சேர்த்து குறிப்பிட்ட அளவு கோலுக்குட்பட்டு இரண்டாவது தடவையாக வரும் பெயர்களை நீக்குதல்.
merge workbooks : பேரேடுகளை ஒன்றிணை.
mesa : மேடு : ஜெர்மானியம் அல்லது சிலிக்கான் தகடுகளில் அவற்றைச் செதுக்கும்போது பாதுகாக்கப்பட்டு அதன் காரணமாய், செதுக்கப்பட்ட சுற்றுப் பகுதிகளைவிட சற்றே உயரமாய்த் தோற்றமளிக்கும் ஒரு பகுதி.
MESFET : மெஸ்ஃபெட் : Metal semiconductors field effect transistor என்பதன் குறும்பெயர். (உலோக அரைக்கடத்திகள் கள நிலை மின்மப் பெருக்கி) முக்கியமான் செயலூக்கமுள்ள சாதனமான கல்லியம் ஆர்சனைடு ஒருங்கிணைந்த இணைப்புகளில் பயன்படுத்தப்படுகிறது. இது மின்னேற்றத் திற்கும் மின் அகற்றலுக்கும் பயன்படுத்தப்படுகிறது.
mesh : வலை கண்ணி : ஒரு வலைப் பின்னலில் உள்ள மூடப்பட்ட வழியை உருவாக்கும் கிளைகள்.
mesh network : வலைப் பிணையம் : வலைப் பின்னல். இதில் உள்ள முனையங்கள் மற்ற பல முனையங்களுடன் பிணைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக தரவுகளைக் கடத்துவதற்கு ஏராளமான வழிகள் அனு மதிக்கப்படுகின்றன. Ring network-க்கு எதிரானது.
message : செய்தி;தரவு : ஒரு குழு என்கிற வகையில் பொருளைத் தருகிற எழுத்துகள். இவை ஒரு குழு என்கிற வகையிலேயே கையாளப்படுகின்றன.
message box : தரவுப் பெட்டி;செய்திப் பெட்டி.
message format : செய்தி வடிவமைப்பு : தரவுவின் பகுதிகளை அதாவது தரவுத் தலைப்பு, முகவரி, உரைப் பகுதி மற்றும் தரவுவின் முடிவு ஆகியவற்றை வகைப்படுத்துதலுக்கான விதிகள்.
message header : செய்தி தலைப்பு : தரவு ஒன்றின் தலைப்புப் பகுதி. அது தரவுத் தொடர்பான செய்தியை அதாவது தரவு போய்ச் சேர வேண்டிய இடம் முன்னுரிமை மற்றும் தரவுவின் வகைகள் பற்றிக் கூறுகிறது.
message of the day : இன்றையச் செய்தி : ஒரு பிணையத்தில் அல்லது பல்பயனாளர் கணினிகளில் அல்லது பிற பகிர்வு முறைமைகளில் அனைத்துப் பயனாளர்களுக்கும் அறிவிக்கப்படும் தினசரிச் செய்தியறிக்கை. பெரும் பாலானவற்றில், பயனாளர் கணினி அமைப்பிற்குள் நுழையும்போதே இச்செய்தி காட்டப்பட்டுவிடும்.
message panes : செய்திப் பலகங்கள்.
message queuing : செய்திப வரிசைப்படுத்துதல் : தரவுத் தொடர்பு முறைமை ஒன்றில் தரவுகளைக் கையாளுவதைக் கட்டுப்படுத்தும் உத்தி. இது கணினி ஒன்றினால் அவற்றை ஏற்கச் செய்கிறது. அவை வகைப்படுத்தப்படும்வரை சேமிக்கப்படுகின்றன அல்லது மற்றொரு வழியில் அனுப்பப்படுகின்றன.
message reflection : செய்திப பிரதிபலிப்பு : பொருள்நோக்கு நிரலாக்கச் சூழலில், குறிப்பாக விசுவல் சி++, ஒஎல்இ, ஆக்டிவ்எக்ஸ் போன்றவற்றில் ஒரு கட்டுப்பாடு தன்னுடைய சொந்த செய்தியையே கையாள வழி செய்யும் ஒரு செயல்கூறு.
message retrieval : செய்தி மீண்டும் பெறுதல் : தகவல் முறைமை ஒன்றில் சேர்க்கப் பட்ட தகவலை சில நேரத்துக்குப் பிறகு மீண்டும் பெறும் திறன்.
message security protocol : செய்திப் பாதுகாப்புநெறிமுறை : இணையத்தில் பரிமாறப்படும் செய்திகளுக்கான ஒரு நெறி முறை. பாதுகாப்புக் கருதி மறையாக்கம் (encryption) மற்றும் சரிபார்ப்பு (verification) போன்ற உத்திகளைக் கையாளும் நெறிமுறை. ஒரு மின்னஞ்சலை ஏற்கவோ புறக்கணிக்கவோ வழங்கன் கணினியில் அனுமதி பெற வேண்டும் என்பதுபோன்ற பாதுகாப்பு நடைமுறைகளை மேற்கொள்ள இந்நெறிமுறை வழி செய்கிறது.
message switching : செய்தி பணிக் குமிழ் : தரவு ஒன்றைப் பெறும் உத்தி. சரியான வெளிச் செல் இணைப்பும் நிலையமும் கிடைக்கும் வரை அதனைச் சேமித்தல். பின்னர் அவற்றை இலக்குக் கணினிகளுக்கு மீண்டும் அனுப்புதல். இக்கணினிகள் பணிக்குமிழின் வேலைகளைச் செய்கின்றன.
message switching centre : செய்தி பணிக்குமிழ் மையம் : செய்திகளில் அடங்கியுள்ள செய்திகளுக்கேற்ப செய்திகளை அனுப்பும் மையம்.
message transfer agent : செய்திப் பரிமாற்று முகவர்.
messaging : செய்தியனுப்பல் : கணினி மற்றும் செய்தி தொடர்புக் கருவிகள் வழியாக மின்னஞ்சல், குரலஞ்சல் அல்லது தொலைநகல் மூலமாக ஒருவர் இன்னொருவருக்கு தகவல் அனுப்பும் முறை.
messaging application : செய்தியனுப்பு பயன்பாடு : பயனாளர்கள் தமக்குள் செய்திகளை (மின்னஞ்சல் அல்லது தொலை நகல்) பரிமாறிக் கொள்ளப் பயன்படும் ஒரு மென்பொருள்.
messaging client : செய்தியனுப்பு கிளையன் : மின்னஞ்சல், தொலை நகல் வழியாக பயனாளர் ஒருவர் செய்திகளை அனுப்பிவைக்க உதவும் ஒரு பயன்பாட்டு நிரல். தொலை தூரத்தில் இயங்கும் வழங்கன் கணினி இதற்காகப் பயன்படுத்திக் கொள்ளப்படும்.
meta-assembler : உயர் சேர்ப்பி;உயர்மட்ட பொறி மொழி : புரிந்து கொள்ள வேண்டிய சேர்ப்பி மொழியின் வர்ணனையை ஏற்றுக் கொள்கின்ற சேர்ப்பி.
meta character : புரவெழுத்து : நிரல் தொகுப்பு மொழி முறைமைகளில், இந்த எழுத்துகள், அவை இணைந்துள்ள எழுத்துகள் விஷயத்தில் சில கட்டுப் படுத்தும் பங்கு வகிக்கின்றன.
meta content format : மீ உள்ளடக்க வடிவம் : ஒரு வலைப் பக்கம் ஒரு கோப்புத் தொகுதி, விண்டோஸின் முகப்புப் பக்கம்,உறவுநிலைத் தரவுத்தளம் இவைபோன்ற கட்டமைப்பாயுள்ள தரவுகளின் உள்ளடக்கம் பற்றிய தகவலை விவரிக்கும் ஒரு திறந்தநிலை வடிவம். வரிசைமுறையாக்கம், அகராதிகள் மற்றும் விலைப்பட்டியல்களுக்கு இவ்வடிவத்தைப் பயன் படுத்திக்கொள்ள முடியும்.
metacompiler:உயர்மொழி தொகுப்பி;உயர் தொகுப்பி:எழுத்துப் பூர்வமான தொகுப்புகளுக்காக முதன்மையாகப் பயன்படுத்தப்படும் மொழிக்கான தொகுப்பி. இவை பெரும்பாலும் சொற்றொடர்களைத் தொகுப்பனவாக உள்ளன. ஒரு சிறப்பு முக்கியத்துவம் உடைய புறத் தொகுப்பி. சாதாரணமாக பொதுவான நிரல் தொகுப்புகளை எழுதுவதில் பெரிதும் பயன்படுவதில்லை.
meta-data:உயர்மட்ட தரவு:தரவு பற்றிய தரவு. ஒரு தரவுத் தளத்தின் அமைப்பு, உறுப்புகள்,இடை உறவுகள் மற்ற தன்மைகளையும் விவரிக்கும் விவரம்.
meta data,index:உயர்மட்ட தரவு,அட்டவணை.
meta data interchange specification:மீத்தரவு மாறுகொள் வரன்முறை: தரவுகளைப் பற்றிய தரவுவை அதாவது மீத் தரவுவை பரிமாறிக் கொள்ளல்,பகிர்ந்துகொள்ளல்,மேலாண்மை செய்தல் இவற்றைப் பற்றிய வரன்முறைகளின் தொகுதி.
metafile:உயர்மட்டக் கோப்பு:ஒரு வகையான தரவுக்கு மேற்பட்டதை சேமித்து வரையறுக்கும் கோப்பு. சான்றாக,விண்டோஸ் மெட்டாஃபைல் (WMF)வெக்டர் வரைகலையின் படங்களையும்,பரவு வரைவியல்(rastar) வரைகலை படிவங்களையும், செய்திகளையும் வைத்துக் கொள்ள முடியும்.
metalanguage:மீமொழி;மட்ட மொழி:ஏனைய மொழிகளை விவரிக்கப் பயன்படும் ஒரு மொழி. நிரலாக்க மொழிகளை வரையறை செய்யப் பொதுவாக பேக்கஸ் நவுர் ஃபார்ம்(Backus Naur Form - BNF)என்னும் மீமொழி பயன்படுத்தப்படுகிறது.
metallic oxide semiconductor (MOS):உலோக ஆக்ஸைடு அரைக்கடத்தி: களப் பயன்பாட்டு மின்மப் பெருக்கி (டிரான்ஸ்சிஸ்டர்). இதில் வாயில் மின்முனை வாயிலி லிருந்து ஆக்சைடு திரை ஒன்றினால் தனிமைப்படுத்தப் பட்டுள்ளது. 2. திறன் கருவியில் அரைக் கடத்தியில் உள்ள ஒரு தகடு அலுமினியத்தால் ஆனது. மற்றொரு தகடு வேற்றுப் பொருளினால் ஆனது. ஆக்ஸைடு இரு துருவ முனையை உருவாக்குகிறது.
meta operating system : மீ இயக்க முறைமை : பல இயக்க முறைமைகளை தனக்குக் கீழ் இயக்கவல்ல ஒர் இயக்க முறைமை.
method : முறை;செய்முறை : பொருள் சார்ந்த நிரல் தொடரமைப்பில், ஒரு பொருளின் நடத்தை மற்றும் செயல் தன்மையைக் கட்டுப்படுத்தும் அல்கோரிதம். ஒரு பொருளுக்கு செய்தி அனுப்பப்படும்போது, ஒரு முறை செயல்படுத்தப்படு கிறது. தரவு திருப்பி அனுப்பப்படலாம் அல்லது திருப்பாமல் போகலாம்.
methodology : முறையியல் : தரவுகளை ஒரு ஒழுங்கான முறையில் ஆய்வு செய்யப் பயன்படுத்தப்படும் உத்திகளைத் தொகுக்கும் நடைமுறை. குறிப்பிட்ட பணி ஒன்றை நிறைவேற்றப் பயன்படுத்தப்படும் தரப்படுத்தப் பட்ட நடைமுறைகள், தொழில் நடைமுறைகள், பராமரிப்பு உத்திகள் மற்றும் ஆவணத் தயாரிப்பு உள்ளிட்டவை.
metric system : பதின்ம முறைமை : பன்னாட்டு அளவில் கையாளப்படும் முறைமை அல்லது தற்பொழுது உலகெங்கும் பயன்படுத்தப்படும் பதின்ம முறைமையின் நவீனப் பிரதி. அது ஏழு அடிப்படை அலகுகளைக் கொண்டது. அவை மீட்டர், கிலோகிராம், விநாடி, ஆம்பியர் கெல்வ், செல்சியஸ், கேண்டெலா மற்றும் மோல்.
metropolitan area exchange : மாநகரப் பரப்பு இணைப்பகம் : ஒரு மாநகரப் பரப்புக்குள் இணையச் சேவை நிலையங்கள் ஒன்றிணைக்கப்படும் இணைப்பகம். மாநகரப் பரப்புக்குள் இருக்கும் ஒரு பிணையத்திலிருந்து இன்னொரு பிணையத்துக்கு அனுப்பப்படும் தரவு இணையத்தின் முதன்மை முது, கெலும்புப் பிணையம் வழியாகப் பயணிக்காது. மாநகர இணைப்பகமே இப்பணியை மேற்கொள்ளும்.
metropolitan area network : பெரு நகரப் பிணையம்.
M-flops : எம்- ஃபிளோப்ஸ் : விநாடிக்கு பத்து இலட்சம் பதின்மபுள்ளி எண் கணக்கீடுகள்.
MFT : எம்எஃப்டீ : குறிப்பிட்ட பணிகளுடன் பல நிரல் தொகுப்பைத் தயாரித்தலுக்கான குறும்பெயர். இங்கு பணிகள் என்பது நிரல் தொகுப்புகளாகும். எண்ணற்ற தொந்தரவுகளுடன் பல நிரல் தொகுப்பைத் தயாரித்தல் என்றும் நகைச் சுவையுடன் குறிப்பிடுவதுண்டு. MVT என்பதற்கு எதிரானது.
. mg : . எம்ஜி : ஒர் இணைய தள முகவரி மடகாஸ்கர் நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப் பெயர்.
mget : எம்கெட் : பல்முனைப் பெறுதல் எனப் பொருள்படும் multiple get என்பதன் சுருக்கம் எஃப்டிபீ (கோப்புப் பரிமாற்ற நெறிமுறை) கிளையன்களில் பயன்படுத்தப்படும் கட்டளை. இதன்மூலம் ஒரு பயனாளர் ஒரேநேரத்தில் பல்வேறு கோப்புகளை அனுப்பி வைக்கும்படி கோரிக்கை வைக்க முடியும்.
. mh : எம்ஹெச் : ஒர் இணைய தள முகவரி மார்ஷல் தீவுகளைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப் பெயர்.
MHZ : எம்எச்இசட் : மெஹ ஹெர்ட்ஜ் என்பதன் குறும் பெயர். விநாடிக்கு பத்து இலட்சம் சுழற்சிகள்.
MICR : எம்ஐசிஆர் : 'காந்த மையெழுத்தேற்பு' எனப் பொருள்படும் "Magnetic ink Character Recognition" என்ற ஆங்கிலச் சொற்றொடரின் முதலெழுத்துகளைத் தொகுத்து உருவாக்கப்பட்ட தலைப் பெழுத்துக் குறும்பெயர்.
micro : நுண்மை;நுண் : 1. பத்து இலட்சத்தில் ஒரு பகுதியைச் குறிக்கும் சொல். நுண் வினாடி (மைக்ரோ செகண்ட்) என்பது, ஒரு வினாடியில் பத்து இலட்சத்தில் ஒரு பகுதி. 2. கணினியில், 'மிக நுண்ணிய'என்று பொருள்படும்;மைக்ரோ கம்ப் யூட்டர்' என்றால், 'நுண் கணினி'என்று பொருள். 'மியூ' (μ) என்னும் கிரேக்க எழுத்து மிகநுண்ணிய ஒன்றைக் குறிக்கும். இது பத்து இலட்சம் என்ற பேரெண்ணுக்கு நேர் எதிரானது.
microcassette : நுண் ஒளிச் சுருள்கள்;நுண்ஒளிப் பேழை : ஒரு சிறிய காந்த நாடாப் பெட்டி. பெயர்கள் போன்ற தரவுகளையும், நிரல் தொடர் களையும் சேமிக்கவும் சில மின் கணக்கீட்டு எந்திரங்களில் பயன் படுத்தப்படுகிறது.
microchannel architecture : நுண் தடக் கட்டுமானம் : ஐபிஎம் பீ. எஸ்/2 கணினிகளில் (25 மற்றும் 30 மாதிரிகள் தவிர) உள்ள பாட்டைகளின் வடி
வமைப்பு. இத்தகைய பாட்டைகள் ஐபிஎம் பீசி/ஏ. டீ கணினி களின் பாட்டை அமைப்புடன் இணைப்பு அடிப்படையிலும் மின்சார அடிப்படையிலும் ஒத்தியல்பற்றவை. பீசி/ஏ. டீ பாட்டை போலன்றி நுண்தடப் பாட்டைகள் 16துண்மி (bit), அல்லது 32 துண்மி (bit) பாட்டைகளாகச் செயல்படுகின்றன. பல்பாட்டை நுண்செயலி களினால் தனித்த முறையிலும் இவற்றை இயக்க முடியும்.
microchart : நுண்சிப்பு : செயல்முறையின் (Programme) அல்லது பொறியமைவின் (System) வடிவமைப்பின் இறுதி தரவுகளைக் காட்டும் வரை படம்.
microchip : நுண்மின்சுற்று : மணற் சத்தில் பெரிதாகவுள்ள கன்மம்' (Silicon) என்ற தனிமத்தினாலான நுண்ணிய சிப்பு. இதன் மேற்பரப்பில் பல்லாயிரக் கணக்கான மின்னணுவியல் அமைப்புகளும் (Components), மின்சுற்று வழித் தோரணிகளும்
(Circuit patterns) பதிவு செய்யப்பட்டுள்ளன.
microcircuit : நுண்மின்சுற்று : ஒரு குறைக்கடத்திச் சிப்பு மீது செதுக்கப்பட்ட மிகச்சிறு மின்னணுச் சுற்று. டிரான்சிஸ்டர்கள், ரெசிஸ்டர்கள் போன்ற மின்பொருள்கூறுகள் ஒன்றிணைக்கப்பட்டு ஒரு நுண்மின் சுற்று உருவாக்கப்படுகிறது. இது, வெற்றிடக் குழாய்களின் ஒரு தொகுதியாகவோ, தனித்தனி டிரான்சிஸ்டர்களின் இணைப்பாகவோ இல்லாமல் ஒர் ஒற்றை அலகாக வடிவமைக்கப்படுகிறது.
microcode ; நுண்குறியீடு : கணினியில் அமைக்கப்பட்டுள்ள அடிப்படை துணை நிரல்களின் அல்லது போலி நிரல்களின் வரிசைமுறை; கணினியிலுள்ள வன்பொருள்கள் (Hardware) இந்த நிரல்களைப் பொதுவாக நிறைவேற்றும்; எனினும், ஒரு தனி வகை ஆயத்த நிலைக்கு மட்டுமான சேமிப்பு அலகில், இந்த நிரல்கள், நுண் செயல்முறை வகுத் திடத்தக்க கணிப்பொறியை இயக்குவதற்கான கட்டளை களை வகுக்கின்றன.
microcoding : நுண்குறியீட்டு முறை : கூட்டல் பெருக்கல் போன்ற கணினி கட்டளைகளை அமைப்பதற்கு அடிப்படைத் தொடக்கச் செயற்பாடுகளை அல்லது துணை நிரல்களை ஒருங்கிணைத்திடும் கணினி கட்டளை வரைவு.
microcoding device : நுண்குறி மின்சுற்றுயீட்டுச் சாதனம் : மின்சுற்று
வழிப்பலகை. இதில் திட்ட அளவுச் செயற்பணிகளை நுண்மின்சுற்று வழிகள் மூலமாகச் செய்விக்க நிரல்கள் நிலையான நிரல்கள் அமைந்திருக்கும். இதன் மூலம், செயல்முறைப் படுத்தும்போது இந்த நிரல்களைக் குறியீட்டு முறைமைப் படுத்துவதற்கான தேவையைத் தவிர்க்கலாம்.
microcomputer : நுண்கணினி : மிக நுண்ணிய கணினி அனைத்திலும் இதுதான் மிகவும் மலிவானது. இவை, முழுமையான செயற்பாட்டுக் கணினிகள். இவை நுண் செய்முறைப்படுத்திகளைப் பயன்படுத்துகின்றன. வீடுகளில் சொந்தக் கணினிகளாகப் பயன்படுத்தப்படுகின்றன. இது, பள்ளிகளிலும், வாணிக நிறுவனங்களிலுங்கூடப் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது. இது, உட்பாட்டுச் செய்முறைச் சேமிப்புப் பணியினையும், வெளிப்பாட்டுச் செயற்பாடு களையும், ஒர் நிரல் தொகுதிக் கிணங்க மிகக்குறைந்த செலவில் செய்திடும் கணினியாகும்.
microcomputer applications : நுண்கணினிப் பயன்பாடுகள் : வணிகம், தொழில் நுட்பம், தொழில் துறை, வீடுகள் ஆகியவற்றில் நுண் கணினிகள் பயன்படுத்தப்படுகின்றன. ஒளிப்பேழை விளையாட்டு எந்திரங்கள், போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அமைப்புகள், விற்பனை முனையங்கள், அறிவியல் கருவிகள், குருதிப் பரிசோதனைக் கருவிகள், கடன் வசதி அட்டை மற்றும் சரிபார்க்கும் கருவிகள், உந்து ஊர்தி, எரியூட்டுக் கட்டுப்பாடு, பட்டியலிடும் சாதனங்கள் ஆகியவற்றிலும் நுண் கணினிகள் பயன்படுத்தப்படுகின்றன. தொழில் துறையில் நுண் கணினிகள் பயனாகின்றன. நுண்ணலை அடுப்புகள், தையல் எந்திரங்கள், எரி வாயு நிலையங்கள், வண்ணம் பூசும் கருவிகள், செய்முறைத் தரவு அறிவிப்பி, தூய்மைக்கேடு தரவு அறிவிப்பி ஆகியவற்றில் நுண் செயலிகள் பயன்படுகின்றன. பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் கல்விச் சாதனங்களாகவும், வங்கிகளிலும் வணிக மையங்களிலும் பங்கு மாற்று அங்காடிகளிலும் கணினிகள் பெரிதும் பயன்படுத்தப்படுகின்றன.
microcomputer chip : நுண் கணிப்பொறிச் சிப்பு : ஒரு சிப்பிலுள்ள நுண் கணினி. இது நுண் செயலியிலிருந்து வேறுபட்டது. இதில் மையச் செயலகம் (CPU) அடங்கியிருப்பதுடன் அதே கன்மத் துண்டில் (சிலிக்கன்), குறிப்பின்றி அணுகும் நினைவகம், எழுதிப் படிப்பதற்கு மட்டுமேயான நினைவகம் (ROM), உட்பாட்டு/வெளிப்பாட்டு மின்சுற்று நெறி ஆகியவையும் அடங்கியுள்ளன. இதனைச் "சிப்பில் கணினி" என்றும் அழைப்பர்.
microcomputer components : நுண்கணினி அமைப்பிகள் : ஒரு நுண் கணினியின் முக்கிய உறுப்புகள். இவை : நுண் செய் முறைப்படுத்தி உட்பாட்டு/ வெளிப்பாட்டு மின்சுற்று நெறி; ஒரு நினைவகம் (எழுதிப் படிப்பதற்கு மட்டுமேயான நினைவகம் (RAM) ; செயல்முறை வகுத்திடத்தக்க, படிப்பதற்கு மட்டுமேயான நினைவகம் (PROM) ; அழித்திடக்கூடிய செயல் முறை வகுத்திடத்தக்க படிப்பதற்கு மட்டுமேயான நினைவகம் (EPROM).
microcomputer development system : நுண்கணினி மேம்பாட்டுப் பொறியமைவு : நுண் கணினி அடிப்படையிலான மற்றப் பொறியமைவுகளைச் சோதனை செய்வதற்கும் உருவாக்குவதற்கும் பயன்படுத்தப்படும் முழுமையான நுண் கணினி அமைவு. இணைப்பி வசதிகள், வாசகத் தொகுப்பி, தவறு கண்டறியும் வசதிகள், ஒரே மாதிரியாக அல்லாத இன்னொரு கணினிக்காக எழுதப்பட்ட எந்திரமொழிச் செயல் முறையை நிறைவேற்றத்தக்க வன்பொருள் திறம்பாடுகள், செயல்முறை வகுத்திடத்தக்க படிப்பதற்கு மட்டுமேயான நினைவகம் (PROM), செயல் முறைப்படுத்துவோர் செய்தி அறிவிப்பி, வட்டு, நாடா உள்பாட்டு/வெளிப்பாட்டுப் பொறியமைவு போன்றவை இதில் அடங்கும்.
microcomputer kit : நுண்கணினி கருவிப் பை : நுண் கணினி விற்பனையாளர்கள் இணைத்துக் காட்டுவதற்காக வைத்துள்ள கருவிகளின் தொகுதி அடங்கிய ஒரு பை.
microcomputer system : நுண்கணினி அமைவு : ஒரு நுண்கணினி, புறநிலைச் சாதனங்கள், செயற்பாட்டுப் பொறியமைவு, பயன்பாட்டுச் செயல் முறைகள் அடங்கியுள்ள பொறியமைவு.
microcontroller : நுண்கட்டுப் படுத்தி : ஒரு குறுகிய பகுதிக்குள் மிகநுட்பமான உருக்காட்சியுடனான ஒரு செய்முறையைக் கட்டுப்படுத்தும் ஒரு சாதனம் அல்லது கருவி. ஒரு கட்டுப்பாட்டுச் செயற் பாட்டில் பயன்படுத்தப்படும் நுண் செயல் முறைப்படுத்திய எந்திரம் (நுண் கணினி அல்லது நுண் செயலி). இது, ஒரு செய்முறையில் அல்லது செயற்பாட்டில் மாறுதல்கள் செய்வதற்கு அறிவுறுத்துகிறது அல்லது மாறுதல்களைச் செய்கிறது. எடுத்துக்காட்டாக, தையல் எந்திரங்களை இயக்குவதற்கு ஒரு நுண்கட்டுப்படுத்தியையும் எழுதிப் படிப்பதற்கு மட்டுமேயான நினைவகத்தையும் (ROM) சிங்கர் நிறுவனம் பயன்படுத்துகிறது.
microelectronics : நுண் மின்னணுவியல் : ஒருங்கிணைந்த மின்சுற்று வழிகள், மென்சுருள் உத்திகள், திண்மத் தருக்கமுறை தகவமைவுகள் போன்ற நுண்ம மின்சுற்று வழிகளை உருவாக்குவதற்கான உத்திகளைக் கையாளும் புலம்.
microgram : நுண்கிராம் : நுண் குறியீடு அல்லது நுண் நிரல்கள் என்று அழைக்கப்படுகின்ற அடிப்படைக் கட்டுப்பாட்டு நிரல்களின் சிறிய தொகுதி.
microfiche : நுண்சுருள் தகடு : நுண் சுருள் படலம்; 10 செ. மீ x 15 செ. மீ (4" x 6" அளவுடையது. இதில் கணினியின் வெளிப்பாடுகளை (output) பதிவு செய்யலாம். ஒரு நுண் சுருள் தகட்டில் 270 பக்கங்கள் வரை பதிவு செய்ய முடியும்.
microfilm : நுண்சுருள்; நுண்படலம் : வரைகலைத் தரவுகளை நுண்ணிய வடிவளவில் பதிவு செய்வதற்குப் பயன்படுத்தப்படும் ஒளிப்படச் சுருள்.
microfloppy disk : நுண் நெகிழ்வட்டு : 9 செ. மீக்குக் குறைவான விட்டமுள்ள (3. 5") நெகிழ்வட்டு.
microform : நுண்படிவம் : நுண்சுருள் தகடு, நுண் சுருள் போன்ற நுண்மையாக்கம் செய்யப்பட்ட உருக்காட்சிகளைக் கொண்ட ஒர் ஊடகம்.
micrographics : நுண்வரை கலை : வரைகலைத் தரவுகளைச் சுருக்கி, சேமித்து வைத்து, மீண்டும் வரவழைப்பதற்காக நுண்ம ஒளிப்படக் கலையைப் பயன்படுத்துதல். நுண்சுருள் தகடு, நுண்சுருள், கணினி வெளிப்பாட்டு நுண்சுருள் போன்ற எல்லா வகையான நுண்படிவங்களையும், நுண் உருக்காட்சிகளையும் பயன் படுத்துவதும் இதில் அடங்கும்.
microimage : நுண்படிமம் : ஒளிப் படமாக்கிச் சிறிதாக்கப் பட்ட படிமம். பொதுவாக நுண் படச் சுருள்களில் சேமித்து வைக்கப்படும். மிகவும் சிறி தாக இருக்கும். உருப்பெருக்கி வழியாகத்தான் பார்க்க முடியும்.
microinstructions : நுண்அறிவுறுத்தங்கள் : கணினி பயன்படுத்து கைவசமுள்ள எந்திர மொழியில் பெரும் அறிவுறுத்தங்களைப் பெறுவதற்குப் பயன்படுத்தப்படும் மிகக் குறைந்த அளவு அறிவுறுத்தங்கள்.
microjacket : நுண்அட்டை : நுண் வரைகலையில், ஒன்றாக ஒட்டப்பட்ட உள்ளிருப்பது தெரிகின்ற இரண்டு பிளாஸ்டிக் தாள்கள். நுண் திரைப்படங்களுக்கான சுருள்களை நுழைத்து, சேமிக்கும் வழித் தடங்களை உருவாக்கப் பயன்படுகிறது.
microjustification : நுண்வரிச் சரியமைவு; நுண்வரிச் சரியாக்கம் : சில சொல் செய்முறைப்படுத்தும் செயல்முறைகளில் சொற்களிடையிலும், சொற்களினுள்ள எழுத்துகளிடையிலும் சிறிய வெள்ளி எழுத்து இடை வெளிகளைச் சேர்த்திடு வதற்கான திறன். இது சாதாரணமாகச் சரிக்கட்டப்பட்ட பக்கங்களைவிட எளிதாகப் படிக்க உதவுகிறது.
microkernel : நுண் கருவகம் : 1. ஒர் இயக்க முறைமையின் வன்பொருள் சார்ந்த நிரல்பகுதி. வெவ்வேறு வகையான கணினிகளில் ஒர் இயக்க முறைமையைச் செயல்படுத்தும் நோக்கத்தில் நுண்கருவகம் அமைக்கப்படுகிறது. நுண் கருவகம் இயக்கமுறைமையுடன் ஒரு வன்பொருள் சாரா இடைமுகத்தை வழங்குகிறது. எனவே ஒர் இயக்க முறைமையை வெவ்வேறு பணித் தளங்களில் செயல்பட வைக்க வேண்டுமெனில் நுண் கருவகத்தை மட்டும் மாற்றி எழுதினால் போதும். 2. ஒர் இயக்க முறைமையின் மிக அடிப் படையான பண்புக் கூறுகளை மட்டுமே கொண்டு வடிவமைக்கப்பட்ட ஒரு கருவகம்.
micrologic : நுண் தருக்க (அளவை) முறை : ஒரு நுண் செயல் முறையில் அறிவுறுத்தங்களை உருமாற்றம் செய்வதற்கு நிரந்தரமாகச் சேமிக்கப்பட்ட ஒரு செயல்முறையைப் பயன்படுத்துதல்.
micromail : நுண் அஞ்சல் : ஏசிடி என்னும் இங்கிலாந்து கணினி நிறுவனம் உருவாக்கிய மின்னணு அஞ்சல்முறை.
micromainframe : நுண் பெருமுகம் : பெருமுக அல்லது ஏறக் குறைய பெருமுகக் கணினியின் வேகமுள்ள தனிநபர் கணினி (பீ. சி.). microminiature : நுண்சிறுமம் : மிகமிகச் சிறிய மின்சுற்று அல்லது மின்னணு பொருள்கூறு. குறிப்பாக, ஏற்கெனவே மிகச் சிறிதாக்கப்பட்ட ஒர் உறுப்பின் திருத்தப்பட்ட வடிவம்.
microminiature chip : நுண்ம நுணுக்கச் சிப்பு : கணினிச் சேமக்கலத்தில் (நினைவுப் பதிப்பி சிப்பு) அல்லது கட்டுப் பாட்டில் (நுண் செய்முறைப் படுத்தி சிப்பு) பயன்படுத்தப்படும் மிகப் பேரளவு ஒருங்கிணைப்புச் சிப்பு (VLSI chips) அல்லது பேரளவு ஒருங்கிணைந்த மின்சுற்று (LSI).
microminiaturization : நுண்ம நுணுக்கமாக்கம் : நுணுக்கமாக்கத்தை விட ஒருபடி சிறியதான மிகச் சிறிய வடிவளவு.
micron : மைக்ரோன் : பதின்மான நீட்டளவை அலகில், ஒரு மீட்டரில் பத்து இலட்சத்தில் ஒரு பகுதி. ஏறத்தாழ ஒர் அங்குலத்தில் 1/25, 000.
microphone : நுண்பேசி : 1. ஒலி அலைகளை தொடர்முறை (analog) மின்சாரச் சமிக்கைகளாய் (signals) மாற்றித் தரும் சாதனம். நுண்பேசியின் வெளியீட்டை ஒரு கூடுதல் வன் பொருள், கணினி ஏற்கத்தகு இலக்க முறைத் தகவலாய் மாற்றித் தரமுடியும். (எ-டு) பல்லூடக ஆவணங்களைப் பதிவு செய்தல்; ஒலிச் சமிக்கைகளை பகுத்தாய்தல். 2. ஆப்பிள் மெக்கின்டோஷ் கணினியில் இயங்கும் ஒரு தகவல் தொடர்பு நிரல்.
microprocessor : நுண் செய்முறைப்படுத்தி : ஒர் ஒருங்கிணைக்கப்பட்ட மின்சுற்று வழிச்சிப்பில் அடங்கியுள்ளவற்றைப் பொதுவாகச் செய்முறைப்படுத்துவதற்குத் தேவையான அடிப்படைக் கணிதத் தருக்க முறையும் கட்டுப்பாட்டு மின்வாயும் ஆகும். நுண் கணினிகள், வீட்டுச் சாதனங்கள், வணிக எந்திரங்கள், கணிப்புச் சாதனங்கள், பொம்மை விளையாட்டு ஒளிப்பேழை எந்திரங்கள், மற்றும் பல்லாயிரம் பிற சாதனங்களில் இரு பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது.
microprocessor chips : நுண் பகுப்புச் சிப்புகள்; நுண்பகுப்புச் சில்லுகள்.
microprogrammable computer : நுண்செயல்முறை வகுத்திடத்தக்க கணினி : அறிவுறுத்தங்களின் தொகுதி நிலைப்படுத்தியதாக இல்லாமல், படிப்பதற்கு மட்டுமேயான நினைவுப் பதிப்பி அல்லது பிற நினைவுப் பதிப்பி சாதனங்களைச் செயல் முறைப்படுத்துவதன் மூலம் தனித் தனித் தேவைகளுக்கேற்ப செயல் முறைகளை வகுத்தமைக்கக்கூடிய ஒரு கணினி. இதனால், ஒரு கணினியானது முதன்மைப் பொறியமைவாக அல்லது நுண் கணினியாக இருப்பினும் கோட்பாட்டு முறைப்படி அதனை நுண் செயல்முறைப்படுத்திட இயலும்.
microprogramme : நுண் நிரல் தொடர்; நுட்பு நிரல் : ஆரம்ப நிரல்களின் வரிசை. இவற்றை நுண் செயலகத்தில் உள்ள நுண் அளவை துணை அமைப்பாக மாற்றப்படும்.
microprogramming : நுண் செயல்முறைப்படுத்துதல் : ஒரு கணினியின் கட்டுப்பாட்டுப் பகுதியை இயக்குவதற்கான முறை. இந்தப் பகுதியில் ஒவ்வொரு அறிவுறுத்தமும் பல சிறிய செயல்களாகப் (நுண் செயல்கள்) பகுக்கப்பட்டிருக்கும். இவை, ஒரு நுண் செயல்முறையின் ஒரு பகுதியாக அமைந்திருக்கும்.
micropublishing : நுண் வெளியீடு : நுண்வரைகலையில் பயன்படும் சொல். விற்பனை அல்லது விநியோகத்திற்காக புதிய அல்லது மறு வடிவமைக்கப்பட்ட தரவுவை நுண் திரைப்படத்தில் வெளியிடுவது.
microspace justification : நுண் இட ஓரச்சீர்மை : உரை ஆவணங்கள் இரு ஓரங்களிலும் சீராக இருப்பின் அழகான தோற்றத்தைத் தரும். இவ்வாறு ஆவணங்களின் உரைப் பகுதியின் ஒரங்களைச் சீராக ஆக்கும் பொருட்டு சொற்களின் இடையேயும் ஒரு சொல்லில் எழுத்துகளுக்கிடையேயும் மெல்லிய இடவெளியை இட்டு நிரப்புதல். இதனை நுண் ஓரச்சீர்மை என்றும் கூறுவர். சொல்லில் இடம்பெறும் அதிகப்படியான இடவெளி சொல்லின் தோற்ற அழகைத் தோற்கடித்துவிடும்.
microsecond : நுண்வினாடி : ஒரு வினாடியின் பத்து இலட்சத்தில் ஒரு பகுதி. இதன் சுருக்க வடிவம் : μs அல்லது μsec.
Microsoft C : நுண்மென் பொருள் சி : நுண்மென்பொருளின் 'சி' தொகுப்பி. பல வகையான வணிக உற்பத்திப் பொருள்களை உருவாக்கப் பயன்படுத்தப்படுகிறது. விண்டோஸ் நிரல் தொடரமைப்பதற்குத் தேவைப்படும் நுண்மென் பொருள் விண்டோஸ் மென் பொருள் வளர்ச்சி சாதனம். பீ. சி. பயன்பாடு வளர்ச்சிக்காக பீ. சி. யில் பயன்படுத்தப்படுவதற்கு 'சி மொழியில் அதிகம் பயன்படுவது மைக்ரோ நுண் மென்பொருள் 'சி' மற்றும் போர்லேண்டில் டர்போ 'சி' ஆகிய இரண்டும் ஆகும்.
microsoft word : நுண்மென்பொருள் சொல் : மைக்ரோ சாஃப்ட் நிறுவனம் மெக்கின்டோஷ் கணினி மற்றும் பீ. சி. க்களுக்காக உருவாக்கிய எல்லா தன்மைகளும் நிறைந்த சொல் செயலாக்க நிரல்தொடர். டாஸ் பதிப்பு ஒரு ஆவணத்தில் வரைகலை மற்றும் சொற்பகுதி சார்ந்த இடைமுகங்களின் மூலம் பணியாற்ற உதவுகிறது. Word for windows என்று அழைக்கப்படும் விண்டோசுக்கான மைக்ரோசாஃப்ட் வேர்ட் மென்பொருள் நவீன வசதிகள் கொண்டதாக விண்டோஸ்களில் பணியாற்ற ஏற்றதாக உள்ளது.
microsoft works : நுண்மென் பொருள் பணிகள் : மெக்கின்டோஷ் மற்றும் பீ. சி-க்களுக்கான ஒருங்கிணைந்த மென்பொருள் பொதி அல்லது தொகுப்பு. மைக்ரோசாஃப்ட் நிறுவனம் உருவாக்கியது. உறவு போன்ற திறன்களுடன் கோப்பு மேலாண்மை சொல் செயலாக்கம், விரிதாள், வணிக வரைகலை மற்றும் தரவு தொடர்பு திறன்கள் ஆகிய அனைத்தும் கொண்ட தொகுப்பாக இது கிடைக்கிறது.
microspacing : நுண் எழுத்திடை வெளி அமைவு : அச்சுத் துறையில் மிகச்சிறிய தொலைவுகளுக்கு நகர்த்துவதற்கு அனுமதிக்கும் இடைவெளியமைவு. இது, நுண் வரிச் சரியமைவிலும், நிழல் அச்சுக் கலையிலும் பயன்படுத்தப்படுகிறது. இதனை மிகைப்பாட்டு எழுத்திடை வெளியமைவு என்றும் கூறுவர்.
micro to mainframe linkage : நுண்ணிலிருந்து பெருமுக இணைப்பு : பயன்படுத்துபவரின் மேசையில் உள்ள பெருமுகக் கணினி அமைப்புக்கும் தனி நபர் கணினி அமைப்புகளுக்கும் இடையில் தகவல் தொடர்பு நடைபெற அனுமதிக்கும் வன் பொருள்/மென்பொருள்.
microtransaction : நுண் பரிமாற்றம் : 5 டாலருக்கும் குறைவான தொகைக்கான ஒரு வணிகப் பரிமாற்றம் இவ்வாறு அழைக்கப்படுகிறது.
microvirus : நுண் நச்சுநிரல்
microwave : நுண்ணலை : சென்டி மீட்டர் அளவில் ஓர் அலைநீளம் கொண்டுள்ள மின்காந்த அலை. மின் காந்த
நிறமாலையில் ஒரு பகுதியில் இந்த நுண்ணலை அமைந்துள்ளது. இதனைச் சுற்றி நீண்ட அலைவு நீளங்களின் பக்கத்தில் வானொலி அலைகளும் சிற்றலை நீளங்களின் பக்கத்தில் அகச்சிவப்பு அலைகளும் சூழ்ந்துள்ளன. இது தகவல் தொடர்புகளில் பயன்படுத்தப்படுகிறது.
microwave hop : நுண்ணலைத் துள்ளல்; நுண்ணலைத் தாவல் : ஒன்றையொன்று நோக்கியவாறு அமைக்கப்பட்டுள்ள இரு உட்குழிவு வானலை வாங்கிகளுக்கு நடுவிலுள்ள நுண்ணலை வானொலி அலைவரிசை.
microwave relay : நுண்ணலை பரப்புகை : ஒரு கிகா ஹெர்ட்ஸுக்கும் கூடுதலான அலைவரிசையில் இருமுனைகளுக்கிடையே வான் அலைபரப்பின் மூலம் ஏற்படுத்தப்படும் தகவல் தொடர்பு இணைப்பு.
microwave transmission lines : நுண்ணலை பரப்பீட்டுக் கம்பிகள் ; நுண்ணலை பரப்புத் தொடர் : மின் காந்த ஆற்றலை நுண்ணலை அதிர்வெண்களில் ஒரு முனையிலிருந்து இன்னொரு முனைக்கு அனுப்புவதற்குப் பயன்படுத்தப்படும் கட்டமைவுகள்.
MICR reader : எம்ஐசிஆர் படிப்பி ; காந்த மை எழுத்து ஏற்புப் படிப்பி : மின் காந்த மையெழுத்து ஏற்புப் படிப்பி (Magnetic Ink Character Reader). இது மின்காந்த மையெழுத்துகளில் அச்சடிக்கப்பட்டுள்ள ஆவணங்களைப் படித்துக்காட்டும் உட்பாட்டுச் சாதனம்.
middle level language : இடை நிலை மொழி : எந்திர மொழி போன்ற அடிநிலை மொழிகள் திறனும் வேகமும், பிற உயர் நிலை மொழிக்ளின் எளிமையும் கொண்டிருப்பதால் சி-மொழி இவ்வாறு அழைக்கப்படுவதுண்டு.
middleware : இடைப்பொருள் ; இடைமென்பொருள் : இரண்டு அல்லது மேற்பட்ட வகை மென்பொருள்களுக்கிடையே இருந்து தகவலை மொழி பெயர்த்துத் தரும் ஒருவகை மென்பொருள். இது பலவகைப்படும். பொதுவாக ஒரு பயன்பாட்டுக்கும் ஓர் இயக்க முறைமைக்கும் இடையே செயல்படும். அல்லது ஒரு பயன்பாட்டுக்கும் ஒரு தரவுத் தள மேலாண்மை முறைமைக்கும் இடையே இருந்து செயல்படும். (எ-டு) கோர்பா மற்றும் பிற பொருள் முகவர் நிரல்கள், பிணைய மென்பொருள்கள் மற்றும் கட்டுப்பாட்டு நிரல்கள். MIDI : மிடி ; எம்ஐடிஐ : இசைக் கருவி இலக்கமுறை இடைமுகம் என்று பொருள்படும் Musical Instrument Digital interface என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். இசை ஒருங்கிணைப்பிகள், இசைக் கருவிகள் இவற்றை கணினிகளுடன் இணைக்கும் ஒரு நேரியல் (serial) இடைமுக தர வரையறை. மிடி வரையறை பாதி வன்பொருள் அடிப்படையிலானது. பாதி, இசையும் ஒலியும் எந்த முறையில் குறியாக்கப்பட்டு மிடிச் சாதனங்களுடன் தொடர்புபடுத்தப்படுகின்றன என்ற விளக்கத்தை கொண்டிருக்கும். இது, ஒலியின் தொனி மற்றும் ஒலி அளவு போன்ற பண்புக்கூறுகள் 8 துண்மி (bit) இலக்கமுறைத் (digital) தகவலாய் மாற்றப்பட்ட குறி முறையாகும்.
midicomputer : நடு கணினி : சிறு கணினிக்கும், பெருமுகக் கணினிக்கும் இடைப்பட்ட செயல்திறன் உள்ள கணினி.
midiminicomputer : நடு நுண்ணிய கணினி : நடுத்தர வடிவளவுடைய நுண்ணியக் கணினி. இது 16 துணுக்குச் சொற்களைப் பயன்படுத்துகிறது. இது நுண் நுண்ணியக் கணினி, பெரும நுண்ணியக் கணினி, மீநுண்ணிய கணினி ஆகியவற்றிலிருந்து மாறுபட்டது.
midrange computer : நடு வரிசை கணினி : சிறு கணினி போன்றதே. ஆனால் தனி பயனாளர் சிறு கணினி பணி நிலையங்கள் இதில் இருப்பதில்லை.
migration : இடம்பெயர்வு.
. mil : . மில்; எம்ஐஎல் : அமெரிக்க நாட்டு இராணுவ அமைப்புகளின் இணைய தள முகவரிகளை அடையாளம் காட்டும் களப் பெயர். . mil என்பது தளமுகவரியின் இறுதியில் இடம்பெறும்.
milestone : நிகழ்வு ; மைல்கல் : ஒரு பணியை நிறைவேற்றுங்கால் நிகழும் ஒரு நிகழ்வு. ஓர் உட்பாட்டு/ வெளிப்பாட்டுச் செயற்பாடு முடிவடைவது இதற்கு எடுத்துக்காட்டு.
millicent technology : மில்லிசென்ட் தொழில்நுட்பம் : டிஜிட்டல் எக்யூப்மென்ட் கார்ப்பரேஷன் நிறுவனம் உருவாக்கிய இணைய நெறிமுறைத் தொகுதி. மிகச் சிறிய அளவிலான வணிகப் பரிமாற்றங்களைப் பற்றியது. ஒருசென்டுக்கும் குறைவான விலையில் தகவல் குறிப்புகளை வாங்குவது தொடர்பான வணிக நடவடிக்கைகளைக் கையாள்வதற்கான நெறிமுறை. milk disk : பால் வட்டு : ஒரு சிறிய கணினியிலிருந்து தரவுகளைத் திரட்டப் பயன்படுத்தப்படும் வட்டு. பின்னர், ஒரு பெரிய கணினியில் செயலாக்கம் செய்யப்படுவதற்காக இவ்வாறு செய்யப்படுகிறது.
mill : ஆலை : பகுப்பாய்வு எந்திரம் என அழைக்கப்பட்ட முதல் எந்திரக் கணினியை வடிவமைக்கும்போது சார்லஸ் பாபேஜ் பயன்படுத்திய செயலகத்திற்கு மற்றொரு பெயர்.
milli : மில்லி : ஆயிரத்தில் ஒரு பகுதி. ஒரு மில்லி வினாடி என்பது, ஒரு வினாடியில் ஆயிரத்தில் ஒரு பகுதியாகும்.
milli micro second : மில்லி நுண் வினாடி : இது நானோவினாடி (nanosecond) என்றும் அழைக்கப்படும். இது ஒரு வினாடியில் நூறு கோடியில் ஒரு பகுதி.
millisecond : மில்லி வினாடி : ஒரு வினாடியில் ஆயிரத்தில் ஒரு பகுதி; இதன் சுருக்க வடிவம் : ms அல்லது msec.
MILNET : மில்நெட் : இராணுவப் பிணையம் என்று பொருள்படும் Military Network என்ற தொடரின் சுருக்கம். தொடக்க கால ஆர்ப்பா நெட்டின் இராணுவப் பிரிவை உருவகிக்கும் விரிபரப்புப் பிணையம். அமெரிக்க நாட்டு இராணுவத் தரவு போக்குவரத்துக்கானது.
MIMD : எம்ஐஎம்டி : பல் ஆணை பல் தரவு தாரைச் செயலாக்கம் எனப் பொருள்படும் (Multiple Instruction Multiple Data Stream Processing) என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். இணைநிலைச் செயலாக்கத்தை நடைமுறைப்படுத்தும் ஒருவகை கணினிக் கட்டுமானம். இக்கணினி அமைப்பிலுள்ள ஒவ்வொரு மையச் செயலகமும் தனித்தனியே நிரல்களைக் கொணர்ந்து தரவுகளின்மீது செயல்படுத்தும்.
MIME : மைம் : பல்பயன் இணைய அஞ்சல் நீட்டிப்புகள் எனப் பொருள்படும் Multiple Internet Mail Extensions என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஆஸ்கி வடிவத்தில் மாற்றி அமைக்காமலேயே ஒலி, ஒளிக்காட்சி மற்றும் இரும (பைனரி) கோப்புகளை இணைய மின்னஞ்சல் வழியாக அனுப்ப வகை செய்யும் தர வரையறை. இது எஸ்எம்டீபீ (SMTP-Simple Mail Transfer Protocol) யின் நீட்டிப்பாகும். ஓர் ஆவணத்தின் உள்ளடக்கத்தை மைம் வகை சுட்டுகிறது. மைம் ஒத்தியல்புள்ள பயன்பாடு ஒரு கோப்பினை அனுப்பி வைக்கும் போது அந்தக் கோப்புக்கு ஒரு மைம் வகையைக் குறிப்பிட்டு அனுப்புகின்றது. பெறுகின்ற பயன்பாடும் மைம் ஒத்தியல்பானதாய் இருக்க வேண்டும். மைம் வகை/உள் வகைப்பட்டியலுடன் ஒப்பிட்டு, பெற்ற ஆவணத்தின் உள்ளடக்கத்தைச் ச்ரியாகத் தீர்மானிக்கிறது. மைம் வகை உரை (text) எனில், சாதா (plain), ஹெச்டீஎம்எல் (html) என்ற இரு உள்வகை உள்ளன. மைம் வகை உரை/ஹெச்டிஎம்எல் எனில் அதை ஒர் ஹெச்டிஎம்எல் ஆவணமாக உலாவிகள் அடையாளம் காணும்.
minemonic codes : நினைவுட்டுக் குறியீடுகள்
mini : சிறிய; குறு; சிறு : நுண்ணிய கணினியின் சுருக்கப் பெயர்.
miniaturization : நுணுக்கமாக்கம்; சிற்றளவாக்கம் : ஒரு பொருளின் வடிவளவினை அதன் திறம்பாடு குறையாத வண்ணம், சிறியதாகக் குறைக்கும் செய்முறை. இதனை நுண்ம நுணுக்கமாக்கத்துடன் ஒப்பிட்டுப் பார்க்க.
mini computer : குறுங்கணினி; சிறு கணினி : எண்மானக்கணினி. இது ஒரு நுண்மக் கணினியிலிருந்து (micro computer) வேறுபட்டது. இது அதிகச் செயல்திறனுடையது. அதிக ஆற்றல் வாய்ந்த நிரல்களைக் கொண்டது. இதன் விலையும் அதிகம். இதில் அதிகச் செயல்முறைகளும், செயற்பாட்டுப் பொறியமைவுகள் உள்ளன. இது, சிறிய வடிவளவும் குறைந்த விலையும், குறைவான தரவு கொள்திறனும் கொண்ட முதன்மைப் பொறியமைவிலிருந்து வேறுபட்டது. நுண்ணிய கணினி பொறியமைவு நான்கு செயற்பாட்டு வகைகளாகப் பகுக்கப்பட்டுள்ளன : (1) நடு நுண்ணிய கணினி, (2) பெரும நுண்ணிய கணினி, (3) மீப் பெருமக் கணினி; (4) மீநுண்ணிய கணினி.
mini floppy disk : சிறு நெகிழ் வட்டு : நுண் கணினியமைவுகளில் பயன்படுத்தப்படும் 13. 3 செ. மீ. (5. 25") விட்டமுடைய நுண் வட்டு.
minimal : குறுமம்.
minimal pairs : குறும இணை ஒலிச்சொல் பட்டியல்.
minimal tree : குறும மரம் : இதன் முனையங்கள், இந்த மரத்தை பெரிதும் உகந்த அளவில் செயற்படுமாறு செய்
யும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும். இது பெரும இணைப்பு மரத்திலிருந்து வேறுபட்டது.
minimax : குறுமப் பெருமம் ; சிறுமப் பெருமம் : ஒரு செய்முறையில் பெருமப் பிழையினை குறும அளவுக்குக் குறைத்திடும் உத்தி.
minimini computer : குறுஞ்சிறு கணினி : நுண்ணிய கணிப் பொறியமைவுகளில் மிகச் சிறிய வகை. இதில், ஒரு குறிப்பிட்ட அளவு செயற்பாட்டு அம்சங்களே அமைந்திருக்கும். இது, நடு நுண்ணிய கணினி, பெரும நுண்ணிய கணினி, மீநுண்ணிய கணினி ஆகியவற்றிலிருந்து வேறுபட்டது.
minimize : சிறிதாக்கு : வரைகலை சூழ்நிலையில், ஒரு சன்னலை பிம்பம் அளவுக்குக் குறைப்பது.
minimize button : சிறிதாக்கு பொத்தான் : விண்டோஸ் 3. x, விண்டோஸ் 95/98/என்டி இயக்க முறைமைகளில் ஒரு சாளரத்தின் மேல் வலது மூலையில் உள்ள ஒரு பொத்தான். இதன்மீது சுட்டியால் சொடுக்கும்போது சாளரம் மறைந்து கொள்ளும். விண்டோஸ் 3. x மற்றும் விண்டோஸ் என்டி 3. 5 ஆகியவற்றில் முகப்புத் திரையிலேயே ஒரு சின்னமாக அமர்ந்து கொள்ளும். விண்டோஸ் 95/98 மற்றும் விண்டோஸ் என்டி 4. 0 மற்றும் அதற்குப் பின்வந்த விண்டோஸ் இயக்க முறைமைகளில் திரையின் அடிப்பகுதியிலுள்ள பணிப்பட்டையில் (Taskbar) சாளரப் பெயர் ஒரு பொத்தானாக அமர்ந்து கொள்ளும். அந்தப் பொத்தான்மீது சொடுக்கும் போது சாளரம் முந்தைய அளவுக்கு விரியும்.
minimum value : குறைந்தபட்ச மதிப்பு.
miniport drivers : சிறுதுறை இயக்கிகள் : ஒரு குறிப்பிட்ட சாதனம் குறித்த தரவுவைக் கொண்டுள்ள இயக்கிகள். இவை சாதனம்சாரா துறை இயக்கிகளுடன் தொடர்பு கொண்டு அவற்றின் வழியாக கணினி முறைமையுடன் பேசிக் கொள்ளும்.
minitower : சிறு நெடுபெட்டி : தரையில் செங்குத்தாய் நிற்கும் கணினி நிலைப்பெட்டி (cabinet). பொதுவாக கணினி முறைமைப் பெட்டி 24 அங்குல உயரம் இருக்கும். இதனை நெடு பெட்டி என்பர். சிறுநெடு பெட்டி 13 அங்குல உயரமே இருக்கும். minor key : துணை விசை : ஒரு பதிவேட்டை அடையாளம் காணப் பயன்படுத்தும் துணை விசை. சான்றாக, மாற்றங்களை கணக்கு எண் மற்றும் தேதி வாரியாக பிரித்தல். இதில் கணக்கு எண் பெருவிசை. தேதி துணைவிசை.
minor sort key : குரும வகைப்பாட்டுப் பகுதி ; சிறு வரிசையாக்கத் துணைச் சாவி : பதிவேடுகளை வகைப்படுத்துவதற்கான இரண்டாம் நிலைப் பாகுபாட்டு ஆதாரங்களைக் கொண்ட தரவுப் புலம். பெரும வகைப்பாட்டுப் பகுதியில் இரு மடியாக்கங்கள் நடைபெறும் போது மட்டுமே இது பயன்படுத்தப்படுகிறது.
MIP mapping : மிப் பொருத்துகை, மிப் படமாக்கம் : குறைவில் நிறைய என்று பொருள்படும் Multi-turn is Parvo (Much in Little என்பதன் லத்தீன் தொடர்) என்பதன் சுருக்கமே MIP எனப்படுகிறது. படமாக்கிய ஒரு படிமத்தைச் சுற்றுத் தொலைவிலிருந்தே முன்கணக்கிட்டு ஒரு வரைகோல (Texture) படமாக்கியில் பயன்படுத்தப்படுகிறது. படப்புள்ளி மாற்றுகை மனிதக் கண்புலனுக்கேற்ப நிறங்களை மாற்றித்தரும் என்பதால், படமாக்கிய உருவங்களின் இதமான வரை கோலத்திற்கு வழிவகுக்கும்.
mips : மிப்ஸ் : Million Instructions Per Second என்பதன் குறும் பெயர். ஒரு வினாடிக்குப் பத்து இலட்சம் ஆணைகள். ஒரு பெரிய கணினியமைவு, ஒரு வினாடி நேரத்தில் நிறைவேற்றும் எந்திர மொழி ஆணைகளின் சராசரி எண்ணிக்கையைக் குறிக்க இது பயன்படுகிறது.
mirror image : ஆடி பிம்பம் ; கண்ணாடிப் பிம்பம்.
mirroring : கண்ணாடி உருக்காட்சி : ஓர் உருக்காட்சியைச் சித்திரித்துக் காட்டும் வரைகலைச் செய்திக் குறிப்பினை, அதன் நேர்தலை கீழ் பிம்பமாகக் காட்டும் கண்காட்சி அல்லது உருவாக்கம். பல கணினி வரைகலைப் பொறியமைவுகள், காட்சித் திரையில், ஒரு வரைகலை உருக் காட்சியைத் தானாகவே தலைகீழாகப் பிரதிபலித்துக் காட்டுகின்றன.
mirror site : நகல் தளம்; பிம்பத் தளம் : ஒரு கோப்பு வழங்கன் கணினி. பிணையத்திலுள்ள முக்கிய வழங்கன் கணினியிலுள்ள கோப்புகளின் நகல்களைக் கொண்டிருக்கும் தரவு போக்குவரத்துச் சுமையைப் பகிர்ந்து கொள்வதற்காகவும், அதிகமான தரவு போக்குவரத்தைக் கையாள உயர்திறன் வழங்கனின் தேவையைப் தவிர்ப்பதற்காகவும் பிம்பத் தளங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
MIS:எம்ஐஎஸ்:மேலாண்மைத் தகவல் பொறியமைவு என்று பொருள் படும்"Management Information System"என்ற ஆங்கிலத் தலைப் பெழுத்துச் சொல்.
missconvergence:காட்சித்திருப்பம்.
misspelled words:பிழைச் சொற்கள்.
mistake:பிழை;தவறு:மனிதர் செய்யும் சிறு பிழை. இதனால், தவறான கணிப்பு,தவறான கணினி நிரல்களைப் பயன் படுத்துதல்,தவறான விசையை அழுத்துதல்,கணினி செயல் முறையில் தவறான சூத்திரங் களைப் பயன்படுத்துதல் போன்ற கருதப்படாத விளைவுகள் ஏற்படக்கூடும்.
.mi.us:.எம்ஐ.யுஎஸ்:ஒர் இணைய தள முகவரி அமெரிக்க நாட்டு மிச்சிகன் மாநிலத்தைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.
mixed cell reference:கலப்புக் கலக் குறிப்பு:விரிதாள்களில் ஒரு கலம் பற்றிய குறிப்பு. (ஒரு வாய்பாட்டினைக் கணக்கிட்டு விடை காணத் தேவைப் படும் ஒரு கலத்தின் முகவரி). கலத்தின் கிடக்கை(Row)அல்லது நெடுக்கை தொடர்புறு(Relative)குறிப்பாக இருக்கும்(வாய்பாட்டினை நகலெடுத்தாலோ நகர்த்தினாலோ தானாகவே மாறிக்கொள்ளும்). மற்றது நிலையாக இருக்கும். (வாய் பாட்டினை நகலெடுத்தாலோ நகர்த்தினாலோ மாறாதது).
mixed number:கலப்பு எண்:முழு எண் பகுதியும் பின்னப்பகுதியும் கொண்ட ஒர் எண். எடுத்துக்காட்டு: 63.71;-18,006;298.413,
mixed object:கலவைப் பொருள்.Compound document போன்றது.
mixing:ஒலிக் கலவை.
mix with file:கோப்புடன் சேர்.
.mk:.எம்கே:ஒர் இணைய தள முகவரி மாசிடோனியா நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.
.ml:.எம்எல்:ஒர் இணைய தள முகவரி மாலி நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப் பிரிவுக் களப் பெயர். ML : எம் எல் : 'வித்தகர் மொழி'என்று பொருள்படும்'Manipulator Language"என்ற ஆங்கிலச் சொற்றொடரின் தலைப்பெழுத்துச் சொல். இது, எந்திர மனிதர்களைக் கட்டுப்படுத்துவதற்கு IBM என்ற முதன்மைப் பொறியமைவு நிறுவனம் பயன்படுத்தும் செயல்முறைப் படுத்தும் மொழி.
. mm : . எம்எம் : ஒர் இணைய தள முகவரி மியன்மார் நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக்களப்பெயர்.
MMX : எம்எம்எக்ஸ் : பல்லூடக நீட்டிப்புகள் எனப் பொருள்படும் (Multimedia Extensions) என்ற தொடரின் சுருக்கம். இன்டெல் 80x86 குடும்பச் செயலிகளில் ஒரு குறிப்பிட்ட வகைச் செயலிகள். பல்லூடக மற்றும் தகவல் தொடர்புப் பயன் பாடுகளுக்கான கூடுதல் திறன் கொண்டவை. இவற்றின் நிரல் தொகுதியில் அதற்கான கூடுதல் நிரல்களைக் கொண்டவை.
. mn : . எம்என் : ஒர் இணைய தள முகவரி மங்கோலியா நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.
mnemonic : நினைவூட்டு வாசகம்;நினைவுபடுத்தி : மனிதர் எளிதில் நினைவில் பதித்து வைத்துக் கொள்ளக்கூடிய வாசகங்கள்;நினைவில் இருத்தி வைத்துக் கொள்வதற்கான உத்திகள்.
mnemonic code : நினைவூட்டு வாசகக் குறியீடு;நினைவூட்டுக் குறியீடு : எளிதில் நினைவில் வைத்துக் கொள்ளக்கூடிய இணைப்பு மொழிக் குறியீடு. எடுத்துக்காட்டு : பெருக்கல் (Multiply) என்பதற்கு'MPY"என்ற சுருக்கெழுத்தைப் பயன் படுத்துதல்.
mnemonic language : நினைவூட்டு வாசக மொழி : எளிதில் நினைவில் வைத்துக் கொள்ளக்கூடிய சைகைகளின் அடிப்படையில் அமைந்த செயல் முறைப்படுத்தும் மொழி. இந்தச் சைகைகளைக் கணினி மூலம் எந்திர மொழியாக இணைக்கலாம்.
MNP10 : எம்என்பீ10 : மைக்ரோகாம் பிணைய நெறிமுறை என்று பொருள்படும் (Microcom Networking Protocol Class 10) என்ற தொடரின் சுருக்கம். தொடர்முறை செல் தொலைபேசி (Analog Cellular Tele- phone) களுடன் இணைக்கப்படும் மோடம் இணைப்புகளுக்கான தொழிலகச் செந்தரத் தகவல் தொடர்பு நெறிமுறை. . mn. us : . எம்என். யுஎஸ் : ஒர் இணைய தள முகவரி அமெரிக்க நாட்டு மின்னசோட்டா மாநிலத்தைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.
. mo : . எம்ஓ : ஒர் இணைய தள முகவரி, மக்காவ் நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.
mobile computing : நடமாடும் கணிப் பணி;பயணக் கணிப் பணி : பயணம் செய்து கொண்டிருக்கும்போது கணினியைப் பயன்படுத்தும் செயல்பாடு. பயணக் கணிப்பணிக்கு மேசைக் கணினியைவிட மின் கலத்தில் இயங்கு கின்ற, கையிலெடுத்துச் செல்லத்தக்க கணினியே ஏற்றது.
mobile radio systems : நடமாடும் வானொலி அமைப்புகள் : எந்த நாட்டின் தொலைபேசி அமைப்புக்கும் பயனுள்ள விரிவாக்கமாக மேட்ஸ் (MTS) எனப்படும் நடமாடும் தானியங்கித் தொலைபேசி அமைப்பு விளங்கும். வழக்கமான கம்பிகளால் இணைக்கப்பட்ட தொலைபேசிபோல ஒவ்வொரு நடமாடும் நிலையமும் ஒரு காரில் வானொலி தொலைபேசி இணைக்கப் பட்டு அதற்கு தனி எண் கொடுக்கப்படும். அதே நகரத்தில் உள்ள பிற இயங்கும் தொலைபேசிகளுடன் மட்டுமல்லாது மற்ற வழக்கமான தொலைபேசிகளுடன் உலகின் எந்தப் பகுதிக்கும் பேச முடியும்.
mobile robots : நடமாடும் எந்திர மனிதர்கள் (எந்திரன்) : மனிதர்களைப் போல, சில எந்திர மனிதர்களும் தாமாகவே ஒரிடத்திலிருந்து வேறு ஒரு இடத்திற்கு நகரக்கூடியவை.
mobile users : நடமாடும் பயனாளர்கள்.
modal : படிமம்;மாதிரி : முறை சார்ந்தது. மாடல் இயக்கம் ஒரு முறை யிலிருந்து மற்றொன்றுக்கு மாற்றித் தருகிறது.
mode : முறைமை, செயற்பாட்டு முறை : சொல் சார்ந்த, இடைப் பரிமாற்ற அல்லது வரைகலை முறை உள்ளிட்ட ஒளி மூலமான காட்சி. ஒரு அமைப்பு இயக்கப்படுகின்ற இயக்க நிலை. இரண்டு சூழ்நிலைகள் இதில் ஏற்படலாம். வன்பொருள் மென்பொருளுக்கு எண்ணற்ற முறைகள் உள்ளன.
mode, batch processing : தொகுதிச் செயலாக்க பாங்கு.
modec : மோடெக் : தொலை தகவல் தொடர்பில், இலக்கமுறையில் (digital) மோடத்துக்குரிய தொடர்முறைக் சமிக்கைகளை உருவாக்கும் சாதனம். மாடு லேட்டர், டீமாடுலேட்டர் ஆகிய சொற்கள் இணைந்ததே மோடம். கோடர், டீகோடர் ஆகிய சொற்கள் இணைந்தது கேடெக். மோடம், கோடெக் ஆகிய சொற்கள் இணைந்து உருவானது மோடெக்.
model : உருப்படிவம்;படிமம் : அறிவியல் ஆராய்ச்சிகளுக்காக எடுத்துக் கொள்ளப்படும் ஒரு பொருளின் அல்லது அமைப்பின் இன்றியமையாத அம்சங்களைக் கொண்ட ஒரு முன் மாதிரி வடிவம். அறிவியல் உருப்படிவங்களில் சிக்கலான சூத்திரங்களும், பெருமளவு கணிதமும் பயன்படுத்தப்படுகின்றன. சமன்பாடுகளுக்குத் தீர்வு காணவும், தேவையான கணிப்புகளைச் செய்யவும் கணினியைப் பயன்படுத்தினால் அது 'கணினி வடிவாக்கம்'எனப்படும். அறிவியல், வணிகம், பொருளாதாரம் முதலிய பல்வேறு துறைகளில் உருப்படிவமும், வடிவாக்கமும் மிகவும் இன்றியமையாதவை.
model base : மாதிரி அடிப்படை : கோட்பாடு, கணக்கீடு மற்றும் அளவைமுறை மாதிரிகளின் ஒழுங்குபடுத்தப்பட்ட தொகுதி. வணிக உறவுகள், கணிப்பீடு நிரல்கள் அல்லது பகுப்பாய்வு நுட்பங்கள் போன்றவற்ற இவை விளக்குகின்றன. நிரலாக்கத் தொடர்கள், துணை நிரல்கள், கட்டளைகளைக் கோப்புகள் மற்றும் விரிதாள்கள் போன்ற வடிவங்களில் இத்தகைய மாதிரிகள் சேமிக்கப்படுகின்றன.
model-based expert system : மாதிரி-சார்ந்த வல்லுநர் அமைப்பு : ஒரு பொருளின் வடிவமைப்பு மற்றும் பணி பற்றிய அடிப்படை அறிவு சார்ந்த வல்லுநர் அமைப்பு. சான்றாக இத்தகைய அமைப்புகள் கருவியின் சிக்கல்களைக் கண்டறியப் பயன்படுத்தப்படுகின்றன. Rule based expert system என்பதன் எதிர்ச்சொல்.
model dialog : உருப்படிவ உரையாடல்.
model geometric : வடிவ மாதிரியம்;வடிவ கணித உருப்படிவம் : ஒரு கணினி வரைகலைப் பொறியமைவில் வடிவமைக்கப்பட்டு தரவுத் தளத்தில் சேமித்து வைக்கப்பட்டுள்ள ஒர் உருவத்தை, ஒரு பகுதியை அல்லது புவி வரைகலைப்பரப்பை, முழுமையான முப்பரிமாண அல்லது இருபரிமாணப் புவியியல் வடிவ கணித அமைப்பில் உருவாக்கிக் காட்டுதல்.
modeling : உருப்படிவாக்கம் : ஒரு பொறியமைவின் சில பகுதிகளைத் துல்லியமாக உருப்படுத்திக் காட்டும் செய் முறை.
modem மோடம் (அதிர் விணக்க நீக்கி) : Modulator-Demodulator என்ற இரண்டு சொற்களின் முதலெழுத்துகளைச் சேர்த்து இச்சொல் உருவாக்கப்பட்டது. குரல்-நிலை தகவல் தொடர்பு வசதிகளின் சமிக்கைகளை ஏற்றும், மாற்றியும் அனுப்பிப் பெறுகின்ற சாதனம். தொலை பேசிக் கம்பி இணைப்புக்கு கணினியையோ அல்லது முனையத்தையோ ஆற்றுப்படுத்துகின்ற சாதனம். பெறும் இடத்தில் கணினியில் இலக்க முறை துடிப்புகளை ஒலி அலைவரிசைகளாகவும் அவற்றை மீண்டும் துடிப்பு களாகவும் மாற்றித் தருகிறது. கணினியின் உள்ளேயும் மோடெத்தைப் பொறுத்து முடியும். வெளிப்பகுதியில் மோடெத்தை வைத்தால் 'போர்ட்' மூலம் அது கணினியில் சேர்கிறது. தொலைபேசியில் அழைப்பது, பதில் சொல்வது ஆகியவற்றை மோடெம் கையாள்கிறது. இவற்றை அனுப்பும் வேகம் ஒரு நொடிக்கு 300 முதல் 33, 600 துண்மிகள் அல்லது அதற்கு மேற்பட்டதாகும். தொலைபேசிமூலம் அழைக்கும் மோடெத்தின் சராசரி வேகம் ஒரு நொடிக்கு 2, 400 துண்மிகள். 33, 600 துண்மிகள் திறனுள்ளது பிரபலமாகிறது. ஒரு நொடிக்கு 2, 400 துண்மிகள் என்ற வேகத்தில் இயங்கும்போது 7 நொடிகளில் 2, 000 எழுத்துகளைக் கொண்ட ஒரு திரையை நிரப்பும். எழுத்து விகிதமானது துண்மி விகிதத்தில் 10%. ஆகவே, 2, 400 துண்மிகள் ஒரு நொடிக்கு என்பது 240 எழுத்துகள் ஒரு நொடிக்கு என்பதாகும். மோடெத்தில் பார்க்க வேண்டியது அதிவேகம், பிழை சோதித்தல் மற்றும் தகவல்களைச் சுருக்கல் ஆகியவையே. புதிய மோடெம்கள் தானாகவே பிற மோடெம்களின் வேகத்திற்கும், வன்பொருளின் விதிமுறைகளுக்கும் சரிசெய்து கொள்கிறது.
modem bank : இணக்கி வங்கி;மோடம் வங்கி : ஒர் இணையச் சேவையாளர் அல்லது ஒரு பிபிஎஸ் சேவை இயக்குநர் பராமரிக்கின்ற வழங்கன் கணினியுடன் அல்லது தொலை அணுகு வேன் (WAN) பிணையத்தில் இணைக்கப்பட்ட இணக்கி (மோடம்) களின் தொகுப்பு இவ்வாறு அழைக்கப் படுகிறது. தொலைதூரப் பயனாளர்கள் ஏதேனும் ஒரு குறிப் பிட்ட ஒற்றைத் தொலைபேசி எண்ணை அழைத்தாலே, அப்போது பயன்பாட்டில் இல்லாத தொகுதியிலுள்ள வேறொரு எண்ணுக்கு திசைமாற்றித் தரும் வகையில் பெரும்பாலான இணக்கி (மோடம்) வங்கிகளின் இணக்கிகள் உள்ளமைக் கப்பட்டுள்ளன.
modem eliminator : மோடெம் விலக்கி : நெருக்கமாக உள்ள இரண்டு கணினிகள் மோடெம் இல்லாமலேயே தொடர்பு கொள்ள அனுமதிக்கும் சாதனம். தனிநபர் கணினிகளுக்கு, இது தேவையான மென்பொருளைக் கொண்ட முழு மோடெம் போன்றதாகும். ஒத்திசைவு (சின்க்ரனஸ்) அமைப்புகளில் ஒத்திசைவுக்கு அறிவுக் கூர்மையை அளிக்கிறது.
modem port : இணக்கித் துறை : ஒரு சொந்தக் கணினியில் புற இணக்கியை (மோடத்தை) இணைத்துப் பயன்படுத்தக் கூடிய ஒரு நேரியல் துறை (Serial port).
moderated : கண்காணிக்கப்பட்ட முறைப்படுத்தப்பட்ட : செய்திக்குழு, அஞ்சல் பட்டியல் அமைப்புகளிலும், அல்லது பிற செய்திப் பரிமாற்ற அமைப்புகளிலும் பொருத்தமில்லாத சர்ச்சைக்கு இடமாகும் கட்டுரைகள் அல்லது செய்திகள் உறுப்பினர்களுக்கு அனுப்பப் படுவதற்கு முன்னரே நீக்கி விடும் உரிமை அக்குழுவின் கண்காணிப்பாளருக்கு உண்டு. இத்தகைய குழுச் செய்திப் பரிமாற்றங்களில் அனைவரும் ஏற்றுக் கொள்ளத்தக்க நாகரிகமான கருத்துரைகளையே அஞ்சல் செய்ய வேண்டும் என்பதை நினைவில் கொள்க.
moderated discussion : முறைப்படுத்தப்பட்ட உரையாடல் : அஞ்சல் பட்டியல், செய்திக் குழு அல்லது பிற நிகழ்நிலை மன்றங்களில் நடை பெறுவது. கண்காணிப்பாளர் ஒருவரால் முறைப்படுத்தப்படும் தகவல் பரிமாற்றம். உரையாடலில் ஒருவர் தன் செய்தியை அனுப்பியதும், அச்செய்தி நடைபெற்றுக் கொண்டிருக்கும் உரையாடலுக்கு பொருத்தமானதா என்பதை கண்காணிப்பாளர் முடிவு செய்வார். பொருத்தமானது எனில் அச்செய்தியை குழு முழுமைக்கும் சமர்ப்பிப்பார். முறைப்படுத்தப்படாத உரையாடல்களைவிட முறைப்படுத்தப்பட்ட உரையாடல் அதிக மதிப்புடையது. ஏனெனில் முறையற்ற செய்தி களைகண்காணிப்பாளர் ஒரு காவலாளிபோல் இருந்து தடுத்து விடுகிறார். சிலவேளைகளில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் ஆபாசச் செய்திகளையும் அவர் வடிகட்டி விடுவார்.
moderator : இடையீட்டாளர், நடுவர், கண்காணிப்பாளர் : சில இணைய செய்திக் குழுக்களிலும், அஞ்சல் பட்டியல்களிலும் செய்திகளை குழு உறுப்பினர்களுக்கு சமர்ப்பிக்கப்படும்முன் தணிக்கை செய்து முறைப் படுத்துபவர். பொருத்தமற்ற, முறையற்ற செய்திகளைத் திருத்துவார், புறக்கணிப்பார் அல்லது வடிகட்டித் தடுத்து நிறுத்திவிடுவார்.
mode reset : மாற்றமைவு பாங்கு.
modification : திருத்தியமைத்தல்; மாற்றியமைத்தல்.
modification, address : முகவரி மாற்றியமைத்தல்;முகவரி திருத்தி அமைத்தல்.
modified frequency modulation encoding : திருத்தப்பட்ட அதிர்வலைப் பண்பேற்றக் குறியாக்கம் : சுருக்கமாக எம்எஃப்எம் குறியாக்கம் எனப்படுகிறது. வட்டுகளில் தரவுவைச் சேமிக்கப் பரவலாகப் பயன்படும் ஒரு வழிமுறை. இது ஏற்கெனவே உள்ள அதிர்வலைப் பண்பேற்றக் குறியாக்கத்தை அடிப்படையாகக் கொண்டது. ஆனால், ஒத்திசைவுத் தகவலுக்கு அவசியமில்லாத காரணத்தால் செயல் திறனில் மேம்பட்டது. முந்தைய அதிர்வலைப் பண்பேற்றக் குறியாக்கத்தைவிட அதிக அளவான தகவலை ஒரு வட்டில் பதிய முடியும். பெருவாரியான நிலை வட்டுகளில் இம்முறையே பயன்படுத்தப்படுகிறது. எனினும் ஆர்எல்எல் (RLL-Run Length Limited) குறியாக்க முறையைக் காட்டிலும் திறன் குறைந்ததே.
modifier : திருத்தியமைப்பி;மாற்றி.
modifier, character : எழுத்து மாற்றியமைப்பி.
modifier key : மாற்றம் செய்விசை : விசைப் பலகையிலுள்ள ஒரு விசை அதை அழுத்திக் கொண்டு வேறொரு விசையை அழுத்தினால் அதன் இயல்பான பணியைச் செய்யாமல் வேறு பணியைச் செய்யும்.
modify : திருத்தம் செய்தல் : 1. கணினி நிரலின் ஒரு பகுதியை அதன் இயல்பான பொருள் விளக்கத்திலிருந்தும் நிறைவேற்றத்திலிருந்தும் மாறுபடும் வகையில் மாற்றியமைத்தல். இந்த மாற்றம், நிரலை நிரந்தரமாக மாற்றி விடலாம், அல்லது அதில் மாற்றம் எதுவும் செய்யாமல் நடப்பு நிறை வேற்றத்தை மட்டுமே பாதிக்கலாம். 2. ஒரு குறிப்பிட்ட தேவைப்பாட்டுக் கேற்ப ஒரு செயல்முறையை மாற்றுதல்.
modify structure : வடிவமைப்பை மாற்று : ஒரு கோப்பின் வடிவ அமைப்பை மாற்றும் தரவுத் தளக் கட்டளை. புல நீளங்களும், பெயர்களும் மாற்றப்படலாம். புலங்களைச் சேர்க்கலாம் அல்லது நீக்கலாம். பழைய தரவுக் கோப்புகளை, புலங்கள் நீக்கப்பட்டாலொழிய புதிய அமைப்புகளாக தரவு இழப்பின்றி மாற்றித் தரும்.
modula-2 (Modular language-2) : மாடுலா-2 : பாஸ்கலை உருவாக்கிய சுவிட்சர்லாந்து பேராசிரியர் நிக்லாஸ்விர்த் 1979இல் அறி முகப்படுத்திய பாஸ்கலின் மேம்பட்ட பதிப்பு. கூறு (மாடுல்) களை தனியாகத் தொகுக்க உதவுகிறது.
modular : கூறுநிலை.
modular approach : கூறுநிலை அணுகுமுறை : ஒரு திட்டத்தை வரிசைக் கிரமமான பிரிவு களால் பிரித்தல். சிறிய அலகுகளாகப் பிரிப்பதனால் ஆய்வு, வடிவமைப்பு மற்றும் நிரல் தொடரமைப்பு முயற்சிகள் எளிமையாகும்.
modular coding : தகவமைவு குறியீட்டு முறை : செயல் முறைப்படுத்தும் உத்தி; இதில், ஒரு செயல்முறையில் தருக்க முறைப்பகுதிகள் பல்வேறு தனித்தனித் தகவமைவுகளாக அல்லது வாலாயங்களாகப் பகுக்கப்படுகின்றன; ஒவ்வொரு வாலாயமும் தனித்தனியே செயல்முறைப்படுத்தப்படும்.
modular constraint : தகவமைவு வரையறை : கணினி வரைகலையில், உருக்காட்சிகளின் சில அல்லது அனைத்துப் புள்ளிகளும், கண்ணுக்குப் புலனாகாத வலைச் சட்டத்தின் குறுக்கு வெட்டுப் புள்ளிகளில் அமைந் திருக்கும் வகையில், உருக் காட்சிகளின் இட அமைப்பில் ஏற்படுத்தப்படும் வரையறை.
modular design : கூறுநிலை வடிவமைப்பு : வன்பொருள் அல்லது மென்பொருள் வடிவமைப்பில் ஒர் அணுகுமுறை. இம்முறையில் ஒரு திட்டப் பணி சிறுசிறு கூறுகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு கூறும் தனியே உருவாக்கப் பட்டு, சோதிக்கப்பட்டு, இறுதியில் ஒருங்கிணைக்கப்பட்டு இறுதி வடிவம் பெறும். ஒவ் வொரு கூறும் ஒரு குறிப்பிட்ட பணியை நிறைவேற்றுமாறு வடிவமைக்கப் படும். இம் முறையினால் உருவாக்க நேரமும், பரிசோதனை நேரமும் மிச்சமாகும். சிலபல கூறுகளை ஒன்றுக்கு மேற்பட்ட திட்டப் பணிகளுக்கும் பயன்படுத்திக் கொள்ளவும் முடியும்.
modular element : கூறுநிலை உறுப்பு.
modularity : தகவமைவுத் திறன் : கணினிகளை ஒரு தொகுப்புக் கட்டிடத்தில் வடிவமைப்பில் உருவாக்கும் கோட்பாடு. இது, சாதனத்தின் திறம்பாட்டை உயர்த்தவும், சிக்கன முறையான மேம்பாட்டுக்கும் உதவும்.
modular programming : தகவமைவுச் செயல்முறைப்படுத்துதல் : எளிதாக இடமாற்றம் செய்யக் கூடிய, சிறிய கணினி வாலாயங்களை உருவாக்குகிற செயல்முறைப்படுத்துதல். இது, தரஅளவான இடைமுகப்புத் தேவைகளை நிறைவு செய்யும். செயல்முறையைச் செயற்பணிகளை முழுமையாகச் செய்யக் கூடிய வகையில், குறிப்பிட்ட பகுதிகளாகப் பகுத்து இது செய்யப் படுகிறது. மிகவும் சிக்கலான செயல்முறைகளையும் பொறியமைவு களையும் உருவாக்குவதற்கு இது உதவுகிறது.
modulatanty : கூறுநிலைமை.
modulate : பண்பேற்று : ஒரு சமிக்கையின் சில பண்பியல்புகளை ஒரு நோக்கத்துடன் மாற்றியமைத்தல். பொதுவாக தகவலை வேறிடங்களுக்கு அனுப்பி வைக்கும் பொருட்டு இவ்வாறு பண்பேற்றம் செய்வதுண்டு.
modulation/demodulation : பண்பேற்றம்/பண்பிறக்கம்;அதிர் விணக்கம் : செய்திக் குறிப்புகளை அனுப்புவதில், உயர் அதிர்வெண் ஊர்திக்கு குழுஉக் குறியின் சில பண்புகளை, தாழ் அதிர்வெண்தரவு குழுஉக் குறிக்கு இணங்கியவாறு மாற்றும் செயல் முறை. கணினி சேர்முனையக் குழுஉக் குறிகளை செய்தித் தொடர்பு வசதிகளுக்கு ஏற்பு உடையதாக செய்வதற்குத் தரவுத் தொகுதிகளில் இது பயன்படுகிறது.
modulator : குறிப்பேற்றி;அதிர்விணக்கி : தரவுக் குறிப்புச் செயல் முறைப்படுத்தும் எந்திரத்திலிருந்துவரும் மின்னியல் துடிப்புகளை அல்லது துண்மிகளைப் பெற்றுக்கொண்டு அவற்றைச் செய்தித் தொடர்பு இணைப்பின் வழியாகச் செலுத்துவதற்கு ஏற்புடைய குழுஉக் குறிகளாக மாற்றுகிறது.
module : கூறு;தகவமைவு : ஒரு செயல்முறையில் தருக்க முறைப் பகுதிகளில் ஒன்று. ஒரு பெரிய செயல்முறையை தன்னடக்கமான பல தருக்க முறைத் தகவமைவுகளாகப் பகுக்கலாம். இந்தத் தகவமைவுகளைப் பல செயல்முறையாளர்கள் தனித்தனியே எழுதிச் சோதனை செய்யலாம். பிறகு இத்தகவமைவுகளை ஒன்றாக இணைத்து முழுச் செயல்முறையாக அமைத்து விடலாம்.
modulo : மீதி;வகுத்தல் தகவமைவுச் சார்பலன் : வகுத்தலில் மீதத்தைக் கொடுக்கும் ஒரு கணிதச் சார்பலன். 'x' என்ற எண்ணின் 'n'தகவமைவின் மூலம் x/n என்ற முழு எண் மீதம் கிடைக்கிறது. எடுத்துக்காட்டு 1000-இன் 84 தகவமைவு 1000/84 அல்லது 76.
moire : மங்கல்;தெளிவின்மை : பொருத்தமற்ற தெளிவுக்கூறுடன் ஒரு படிமம் திரையில் காட்டப்படும்போது அல்லது அச்சிடப்படும்போது மங்கலாக, மினுக்கலுடன் தெளிவின்றி இருத்தல். தெளிவின்மைக்கு பல அளபுருக்கள் காரணமாய் உள்ளன. படிமத்தின் அளவும் தெளிவும், வெளியீட்டுக் கருவியின் அளவு-தெளிவுடன் ஒத்தில்லாதபோது இந்த நிலை ஏற்படும்.
molecular beam epitaxy : மொலிக்யூலர் பீம் எபிடாக்சி : அடுக்குகளைப் பிரிப்பதனால் உருவாக்காமல் அணு அளவு அடுக்குகளைச் சிப்புவில் வளர வைக்கும் தொழில் நுட்பம்.
molecules : முலக்கூறுகள்.
momadic : எதிர் இயக்கச் செயற்பாடு;ஒருறுப்பு : எதிர் இயக்கி (NOT operated) போன்ற ஒரே இயக்கப்படு எண்ணை மட்டுமே பயன்படுத்துகிற ஒரு கணிதச் செயற்பாடு தொடர்பானது.
monitor : காட்சித்திரை கணித்திரை கண்காணிப்புத்திரை;திரையகம் : 1. கட்டுப்பாட்டுச் செயல்முறை அல்லது மேற்பார்வைச் சாதனம். 2. ஒளிப் பேழைக் காட்சித்திரை.
monitoring systems : கண்காணிப்பு முறைகள்.
monitor programme : கண்காணிப்பு நிரல்.
monochrome : ஒரே வண்ணத்திரை : ஒரே நிறமுடைய முன்னணியில் ஒரு நிறத்தையும் பின்புறத்தில் ஒரு நிறத்தையும் காட்டுவது. சான்றாக, வெண்மையின்மீது கறுப்பு, கறுப்பின்மீது வெண்மை, கறுப்பின்மீது பச்சை.
monochrome adapter : ஒற்றை நிறத் தகவி : ஒரேயொரு முன் புல நிறத்தில் ஒளிக்காட்சிக் சமிக்கையை உருவாக்கும் திறனுள்ள ஒர் ஒளிக்காட்சி ஏற்பி. சிலவேளைகளில் ஒற்றை நிறத்தையே வெவ்வேறு அடர்வு களில் காண்பிக்கும், சாம்பல் அளவீட்டைப் போன்றது.
monochrome card : ஒரு நிறப்பட அட்டை;ஒரே நிற அட்டை : கணினியின் விரிவாக்கத் துளை விளிம்பில் பொருந்துகிற சுற்று வழி அட்டை. இது ஒரே நிறக் குழுஉக் குறிகளை உண்டாக்கும். பயன்படுத்தப்படும் காட்சித் திரையைப் பொறுத்து இது, வெள்ளை/அம்பர்/பச்சை நிறச் சாயல்களை உண்டுபண்ணும்.
monochrome display : ஒற்றை நிறத் திரைக்காட்சி : 1. ஒற்றை நிறத்தில் மட்டுமே தோன்றும் ஒளிக்காட்சித் திரைக்காட்சி. அந்த ஒற்றைநிறம், பயன்படுத் தப்படும் பாஸ்பரைப் பொறுத்தது. அனேகமாக பச்சை அல்லது ஆம்பர் நிறமாக இருக்கும். 2. ஒரே நிறத்தையே வெவ்வேறு அடர்வுகளில் காண்பிக்கும் திறன்பெற்ற திரைக்காட்சி.
monochrome monitor : ஒரே நிறக் காட்சித்திரை;ஒரே நிறத் திரை : மாறுபட்டதொரு கறுப்பு வண்ணம் பின்னணியில் தனியொரு வண்ண (வெள்ளை, அம்பர், அல்லது பச்சை) எழுத்துகளைக் காட்சியாகக் காட்டும் ஒரு தனிவகைக் காட்சித்திரை. இதனால் மிகக் கூர்மை வாய்ந்த தெளிவான காட்சி உருவாகிறது. எனவே மிகஎளிதாகப் படிக்க முடிகிறது. பெரும்பாலும் சொல்செயலி பயன்பாடுகள், வணிகப் பொறியமைவுகள் கல்விச் சாதனங்கள் போன்ற கணினி சேர் முனையங்கள் பல மணி நேரம் தேவைப்படுகிற, ஆனால் பல வண்ணக்காட்சிகள் தேவைப்படாத பயன்பாடுகளில் இது பயன்படுத்தப்படுகிறது.
monochrome printer : நிற அச்சகப்பொறி.
monodic boolean operator : ஏக பூலியன் இயக்கர்;ஏக பூலியன் செயற்குறி.
monographics adapter : ஒற்றை வரைகலைத் தகவி : ஒற்றைநிற உரை மற்றும் வரைகலைப் படங்களை மட்டுமே காட்ட முடிகிற ஒளிக்காட்சித் தகவி. செயல்பாட்டின் அடிப்படையில் ஹெர்க்குலிஸ் வரைகலை அட்டை (HGC) யுடன் ஒத்தியல்பு உடையது.
monolingual : ஒற்றைமொழி.
monolingual coding : ஒற்றை மொழிக் குறிமுறை.
monolithic : தனிக் கன்ம அடுக்கு ஒருங்கிணைந்த : தனியொரு கன்ம அடுக்கு தொடர்பானது. இதன் அடிப்படையில் ஒர் ஒருங்கிணைந்த மின்சுற்று வழி உருவாக்கப்படுகிறது. தனியொரு கன்ம அடுக்குச் செயல் முறையில் பல்வேறு தனித்தனி தகவுச் செயல்முறைகளை இணைப்புத் தொகுப்பி மூலம் ஒருங்கிணைக்கலாம்.
monolithic integrated circuit : தனிக் கன்ம அடுக்கு ஒருங்கிணைப்பு மின்சுற்று வழி : ஒரு பொருளின் ஒரே பாளத்தில் அமைக்கப்படும் மின்சுற்று வழி. இது, கலப்பு மின்சுற்று வழியிலிருந்து மாறுபட்டது;இதில், தனித்தனிப் பாளங்களில் மின்சுற்று வழி அமைப்பிகள் அமைக்கப் பட்டிருக்கும்;அவை இறுதி மின்சுற்று வழியுடன் மின்னியல் முறையில் இணைக்கப்பட்டிருக்கும்.
monolithic kernel : ஒரு சீரான கருவகம்.
monophonic : ஒரே ஒலியுடைய : ஒரு தனி வழித்தடத்தைப் பயன்படுத்தி ஒலியை மீண்டும் ஏற்படுத்துதல்.
monospace font : சமஇட எழுத்துரு : தட்டச்சில் பயன்படுத்தப்படும் எழுத்துருவைப் போன்றது. ஒவ்வோர் எழுத்தும் கிடை மட்டத்தில் ஒரே அளவான இடத்தை அடைத்துக்கொள்ளும். (எ-டு) i மற்றும் m ஆகிய இரண்டு எழுத்துகளும் அவற்றின் அகலம் எப்படி இருப்பினும் அடைத்துக் கொள்ளும் இடம் ஒரே அளவானதாக இருக்கும்.
monospacing : ஒற்றை இடை-வெளிவிடல் : ஒரு அங்குலத்துக்கு 10 எழுத்துகள் விடுவது போன்று ஒரே மாதிரியான குறுக்கு வாட்ட இடைவெளி விடுதல்.
monroe Jay R : மன்ரோ ஜே ஆர் : 1911இல், முன்பு ஃபிராங்க் பால்ட்வின் வடிவமைத்த வடிவமைப்புகளைப் பயன்படுத்தி, முதலாவது விசைப்பலகை சுழல் எந்திரத்தைக் கண்டு பிடித்து, வணிகமுறையில் பெரும் வெற்றி கண்டவர்.
monte carlo method : மான்டி கார்லோ முறை : ஒரு கணக்குக்குத் தீர்வுகாணத் திரும்பத் திரும்பக் கணிப்புகளைச் செய்திடும் முறை. ஒன்றுக்கொன்று இடைத் தொடர்புடைய ஏராளமான மாறியல் மதிப்புருக்கள் உள்ள சிக்கலான கணக்குகளுக்குத் தீர்வுகாண இந்த முறை பயன்படுகிறது.
montissa : மடக்கையின் பதின்மக் கூறு.
. montreal. ca : . மான்ட்ரீல். சிஏ : ஒர் இணைய தள முகவரி கனடா நாட்டு மான்ட்ரீலைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப் பிரிவுக் களப் பெயர்.
MOO : மூ : பொருள்நோக்கான மட் என்று பொருள்படும் MUD, Object Oriented என்ற தொடரின் சுருக்கம். MUD என்பது, Multiuser Dungeon என்பதன் சுருக்கம். ஒரு பொருள்நோக்கு மொழியை உள்ளடக்கிய மட், மூ என்று அழைக்கப்படுகிறது. பயனாளர்கள் தனிப்பரப்புகளையும் அதில் பொருள் உறுப்புகளையும் உருவாக்க முடியும். மூ, மட் பயன்பாட்டைவிட விளையாட்டுகளை உருவாக்கவே அதிகம் பயன்படுகிறது.
. moov : . மூவ், . எம்ஓஓவி : மெக்கின்டோஷ் கணினிகளில் பயன்படுத்தப் படும் குவிக் டைம் மூவி ஒளிக்காட்சிக் கோப்புகளைக் குறிக்கும் கோப்பின் வகைப்பெயர் (file extension).
MOOV : மூவ் : மெக்கின்டோஷின் குவிக்டைம் திரைப்படங்களுக்கான ஒரு கோப்பு வடிவம். உரை, கேட்பொலி, ஒளிக்காட்சி, கட்டுப்பாடு அனைத்தையும் ஒத்திசைந்த தடங்களில் சேமித்து வைக்கும்.
more than : மேலும்.
Morlund Samuel (1625-1695) : மோர்லண்ட் சாமுவேல் (1625-1695) : நேப்பியர் சட்டங்களை மேம்படுத்தி ஒரு பெருக்கல் கருவியைக் கண்டுபிடித்தவர். கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் ஆகிய நான்கு கணிதச் செய்முறைகளையும் கணக்கிடு வதற்கு ஒரு கணித எந்திரத்தை 1666இல் கண்டுபிடித்தார்.
morpher : உருமாற்றி.
Morphing : உருமாற்றம்.
Morse code : மோர்ஸ் குறியீடு : பத்தாம் நூற்றாண்டின் நடுப் பகுதியில் சாமுவேல் மோர்ஸ் உருவாக்கிய புள்ளிகளும் கோடுகளும் கொண்ட தகவல் குறியீடு. ஒரு புள்ளி என்பது ஒரு வோல்டேஜ் கொண்டு செல்லும் அலை அல்லது ஒரு குறிப்பிட்ட நேரம் கொண்ட ஒளிக்கற்றை ஆக இருக்கலாம். தொலைபேசி வருவதற்கு முன்பு தந்தி மூலம் செய்திகளை அனுப்ப இது பயன்பட்டது.
MOS : எம்ஓஎஸ் : உலோக ஆக்சைடு அரைக்கடத்தி திண்மப் பொருள் எனப் பொருள்படும் 'Metalic Oxide Semiconductor' என்ற ஆங்கிலப் பெயரின் தலைப்பெழுத்து குறும்பெயர்.
mosaic : மொசைக் : வைய விரி வலை, பிரபலமாவதற்கு முக்கிய காரணமான வரைகலை வலை மேலோடி. என்சிஎஸ்ஏவில் எழுதப்பட்டது.
MOS device : மோஸ் சாதனம் : 'போர்ன்'வகைப் பொருளில் தனி வழித் தடத்தில் மின்சாரம் ஒட அனுமதிக்கும் சாதனம். வழித் தடப்பகுதியில் இன்சுலேட் செய்யப்பட்ட எலெக்ட்ரோடு மூலம் இது கட்டுப் படுத்தப்படு கிறது.
ΜΟSFΕΤ : மாஸ்ஃபெட் : 'உலோக ஆக்சைடு அரைக்கடத்தித் திண்மப் பொருள் புல விளைவு மின்மப் பெருக்கி' என்று பொருள்படும் 'Metallic Oxide Semiconductor Field Effect Transistor" என்ற ஆங்கில பெயரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர்
MOS/LSI : எம்ஓஎஸ்/எல்எஸ்ஐ;பார்க்க : உலோக ஆக்சைடு அரைக் கடத்தித் திண்மப் பொருள் (Metallic Oxide Semiconductor), பேரளவு ஒருங்கிணைப்புத் தொழில்நுட்பம் (Large Scale Integration Technology).
most significant bit : மிகு மதிப்பு பிட் : எண்ணின் ஒன்று அல்லது மேற்பட்ட பைட்களின் (bits) ஒர் இரும தொடர்ச்சியான துண்மிகளின் வரிசையில் அதிக இட மதிப்புக் கொண்ட துண்மி (bit). (அடையாள துண்மியைத் தவிர்த்து).
most significant character : மிகு மதிப்பு எழுத்து : ஒரு சரத்திலுள்ள இடது ஒர எழுத்து. MSC என்பது இத்தொடரின் சுருக்கம்.
Most Significant Digit (MSD) : மிக முக்கிய இலக்கம் : ஒர் எண்னில் மிகப்பெரும் மதிப்பினை அல்லது முக்கியத்துவத்தைக் கொண்டுள்ள இலக்கம். எடுத்துக்காட்டாக 58371 என்ற எண்ணில் மிகப்பெரும் முக் கியத்துவம் வாய்ந்த இலக்கம் 5.
motherboard : தாய்ப்பலகை;தாய் இணைப்புப் பலகை;தாய் இணைப்பு :
மின்சுற்றுவழி அட்டைகள் பலகைகள் அல்லது தகவமைவுகள் ஒன்றோ டொன்று பிணைக்கப்பட்டுள்ள இணைப்புப் பலகை. ஒரு நுண் கணிப்பொறியின் தலையாயமின்சுற்று வழிப்பலகை. இதனைப் பொறியமைவுப் பலகை. பின்தளப் பலகை என்றும் கூறுவர்.
motif : மோட்டிஃப் : ஒப்பன் மென்பொருள் ஃபவுண்டே ஷன் அங்கீகரித்த வரைகலை பயனாளர் இடைமுகம்.
motion capture : அசைவுப் பதிவு.
motion JPEG : நகர்வு ஜேபேக் : நகர்வு ஒளிக்காட்சித் தகவலைச் சேமித்து வைப்பதற்கான தர வரையறை. ஒளிப்பட வல்லுநர். குழு ஒருங்கிணைப்பு (JPEG) முன் வைத்தது. ஒளிக்காட்சித் தகவலின் ஒவ்வொரு சட்டத் தையும் ஜேபெக் தர வரையறைப்படி இறுக்கிச் சுருக்கும்.
motion path : ஓடும் பாதை : உயிர்ப்படப் பொருள் ஒன்று பின்பற்ற வேண்டிய பாதை.
motor : விசைப்பொறி.
motorola : மோடோரோலா : நுண் செயலிகள் உட்பட மின்னணுவியல் சாதனங்கள் தயாரிக்கும் நிறுவனம்.
mount : பொருத்து; நிறுவு : ஒரு கணினி யில் பொருத்தப் பட்ட ஒரு வட்டினை அல்லது நாடாவை கணினி அடையாளங் கண்டு அவற்றை கோப்பு முறைமையில் இணைத்துக் கொள்ளும்படி செய்தல். இச்சொல் பெரும்பாலும் ஆப்பிள் மெக்கின்டோஷ் மற்றும் யூனிக்ஸ் அடிப்படையிலான கணினிகள் வட்டுகளை அணுகச் செய்வதைக் குறிக்கப் பயன்படுகிறது.
mouse : எலி வடிவச் சாதனம்; சுட்டு நுண்பொறி; சுட்டுக் கருவி : சுட்டி காட்சித் திரையில் ஒரு சறுக்குச் சட்டத்தை அல்லது வேறு பொருளை அங்கு மிங்கும். நகர்த்துவதற்குப் பயன் படும் சாதனம். ஒரு நுண்பொறியில் ஒரு சிறு பெட்டியின் உச்சியில் ஒரு தட்டையான பரப்பில் நகர்த்தக்கூடிய ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பொத்தான்எலி வடிவச் சாதனம்
கள் அமைந்திருக்கும். இந்தப் பெட்டி ஒரு வால் போன்ற கட்டிழை மூலம் இணைக்கப் பட்டிருக்கும். நுண்பொறி நகரும்போது திரையில் சறுக்குச் சட்டம் இணையாக நகர்கிறது. குறிப்பிட்ட செயல்களுக்குக் குறிப்பிட்ட பொத்தான்கள் அழுத்தப்படுகின்றன. சறுக்குச் சட்டத்தைத் திரையில் எந்தத் திசையிலும் மூலை விட்டக் கோட்டிலுங்கூட இந்த நுண் பொறியால் நகர்த்த முடியும். இது இச்சாதனத்தின் மிகப்பெரும் நன்மையாகும்.
mouse button : சுட்டு நுண்பொறிப் பொத்தான் : கணினி நிரல்களை அனுப்புவதற்கு சுட்டு நுண்பொறியின் உச்சியிலுள்ள ஒரு விசை.
mousekeys : சுட்டி விசைகள் : மைக்ரோசாஃப்ட் விண்டோஸில் உள்ள ஒரு வசதி. பயனாளர், சுட்டிக் குறியை நகர்த்த விசைப்பலகையின் எண்களடங்கிய விசைத் தொகுதியைப் பயன்படுத்த அனுமதிக்கப் படுகிறது. வழக்கமான சுட்டியை நகர்த்துவதில் இடர்ப்பாடு உள்ளவர்களுக்காகவே இத்தகைய வசதி தரப்பட்டுள்ளது.
mouse pad : சுட்டி நகர்த்து அட்டை : சுட்டியை நகர்த்து வதற்காக மிருதுவான மேற் பரப்பை அளிக்கின்ற ஏறக்குறைய 9 அங்குல சதுர அளவுள்ள துணி மூடிய ரப்பர் அட்டை.
mouse pointer : எலி வடிவ சுட்டிக்காட்டி : சுட்டியின் கட்டுப் பாட்டில் இயங்கும் திரையில் உள்ள பிம்பம் அல்லது சுட்டி (கர்சர்).
mouse port : சுட்டித் துறை : 1. பொதுவாக பீசியையொத்த கணினிகளில் சுட்டி அல்லது அதுபோன்ற சுட்டுக் கருவியை இணைப்பதற்கென்றே உள்ள பொருத்துவாய். சுட்டிக்கென ஒரு துறை இல்லையெனில், ஒரு நேரியல் துறையில் சுட்டியை இணைத்துக் கொள்ள லாம். 2. ஆப்பிள் மெக்கின்
டோஷ் கணினிகளில் ஆப்பிள் டெஸ்க்டாப் பாட்டைத் துறை யைக் குறிக்கும்.
mouse sensitivity : சுட்டி உணர்வு : சுட்டியின் நகர்வுக்கும் திரையில் காட்டியின் (Cursor) நகர்வுக்கும் இடையேயுள்ள உறவு. அதிக உணர்வுள்ள சுட்டியை அதிக தொலைவு நகர்த்தினால்தான் திரையில் காட்டி (cursor) சிறிது தொலைவு நகரும். சுட்டிக்கான இயக்கி நிரலில் உணர்வினைக் கூட்டி னால் திரையில் காட்டி மெதுவாக நகரும். இதனால் பயனாளர் தம் விருப்பப்படி காட்டியை நகர்த்த முடியும். கேட்/கேம் (CAD/CAM) பணிகளில் துல்லிய தன்மைக்கு அதிக உணர்வுள்ள சுட்டி உகந்தது.
mouse trails : சுட்டிச் சுவடுகள் : சுட்டியை நகர்த்தும்போது திரை யில் நகரும் சுட்டிக் குறி (mouse pointer) நகர்ந்து வந்த பாதையில் தெரிகின்ற சுவடுகள். மடிக் கணினி, கைஏட்டுக் கணினி ஆகியவற்றில் சுட்டிச் சுவடுகள் மிகவும் பயன்படும். ஏனெனில் அவற்றில் இயங்கா அணித்திரைக் காட்சி (passive matrix display) முறை உள்ளது. சுட்டிக் குறி நகர்வது, சுவடுகள் இருந்தால்தான் நன்கு தெரியும். பழைய ஒற்றைநிறத் திரைகளுக்கும் சுவடுகள் இருப்பின் நல்லது. விண்டோஸ் இயக்க முறைமையில் தேவையெனில் சுவடுகள் தெரியும்படி வைத்துக் கொள்ளலாம்.
. mov : . எம்ஓவி : ஆப்பிளின் குவிக்டைம் வடிவிலுள்ள திரைப்படக் கோப்புகளின் வகைப் பெயர்.
movable head disk unit : நகரும் முனையுடைய வட்டு அலகு : நகரும் முனை வட்டகம் : இது ஒரு சேமிப்புச் சாதனம் அல்லது பொறியமை. இதில் கவிந்த முறையில் முலாம் பூசிய வட்டுகள் அடங்கியுள்ளன. இந்த வட்டுகளால் பரப்பில் தரவு இரும எண் தரவு முறைப்படி வரிசைப்படுத்தப்பட்டுள்ள காந்தப் புள்ளிகளின் வடிவில் சேமித்து வைக்கப்படுகின்றன. தரவு, வட்டுகளைச் சுற்றி வட்டப் பாதைகளில் அமைக்கப் படுகின்றன. வட்டுகளில் தேவையான வட்டப் பாதையில் எந்திர முறையில் நகர்த்தக்கூடிய தலைக் கரங்களை ஒடவிட்டுப் படிக்கவும் எழுதவும் செய்யலாம்.
move நகர்த்தல்; நகர்வு : 1. சேமிப்புச் சாதனத்தில் படியெடுக்க வேண்டிய தரவுவை ஒர் அமைவிடத்திலிருந்து இன்னோர் அமைவிடத்திற்கு நகர்த்துதல். 2. கணினி வரைகலையில்
ஒரு வரைகலை ஓரினப் பொறியமைவில் தற்போதுள்ள இடநிலையை மாற்றுதல்.
move/copy நகர்த்தல்/நகலெடுத்தல்.
movescopy sheet : தாள் நகர்த்து/ நகலெடு.
movement of arm : புயத்தின் இயக்கம்.
moving average : நகரும் சராசரி; மாறும் சராசரி : ஒரு தரவுத் தொடர் வரிசையில் குறிப்பிலா மாற்றத்தின் ஏற்ற இறக்கச் சராசரியைக் கணித்திடும் முறை. இதன்படி தொடர் வரிசையில் மிக அண்மைக்குரிய வரலாற்றுத் தரவுகளே பயன் படுத்தப்படுகின்றன. தொடர் வரிசையில் தரவுகளில் ஏற்படும் மாற்றத்தையொட்டி இது மாறு வதால் இந்தப் பெயர் ஏற்பட்டது. இந்தச் சராசரி சிறு சிறு ஏற்றத்தாழ்வுகளால் மறைந்து விடக்கூடிய போக்குகளைக் காட்டும்.
moving molecules : நகரும் மூலக்கூறு : இந்திய எஸ். சி. எஸ். அல்லது பி. பி. சி. அக்காரன் கணினிக்கான கல்வி மென் பொருள். அழுத்தம் மற்றும் வானிலையின் மாற்றங்கள் எவ்வாறு மூலக்கூறுகளின் இயக்கத்தைப் பாதிக்கின்றன என்பதைக் காட்டும் யூனிக்கார்ன்.
mozilla : மோசில்லா : நெட்ஸ்கேப் நேவிகேட்டர் 'Read me' கோப்பின்படி நெட்ஸ்கேப் என்ற சொல்லின் உச்சரிப்பு இப்படித்தான் அமையும்.
. mpeg : . எம்பெக் : எம்பெக் (MPEG) வடிவில் அமைந்த வரைகலைப் படிமக் கோப்புகளை அடையாளங்காட்டும் கோப்பு வகைப்பெயர். (MPEG-Moving Pictures Experts Group).
MPEG : எம்பெக் : 1. திரைப்பட வல்லுநர்கள் குழு எனப் பொருள்படும் Moving Pictures Experts Group என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். கேட்பொலி மற்றும் ஒளிக்காட்சித் தகவல்களை இறுக்கிச் சுருக்குவதற்கான தரவரையறைகள். தகவல் தொழில்நுட்பத்துக்கான ஐஎஸ்ஓ/ஐஇசி கூட்டுத் தொழில் நுட்பக்குழு உருவாக்கியவை. எம்பெக் தர வரையறை பல்வகைப்பட்டவை. வெவ்வேறு சூழ்நிலைகளில் செயல்படுவதற்கென வடி வமைக்கப்பட்டவை.
MPEG-1 : எம்பெக்-1 : சி. டிரோம் தொழில்நுட்பத்துக்கான மூல எம்பெக் தர வரையறை. ஒளிக் காட்சி மற்றும் கேட்பொலித் தரவுகளைச் சேமிக்கவும் மீட்
டெடுக்கவும் வடிவமைக்கப்பட்டது. 1. 5 எம்பிபீஎஸ் வரையிலான நடுத்தர அலைக் கற்றை இரண்டு கேட்பொலித் தடங்கள், பின்னலுறா ஒளிக்காட்சி ஆகியவற்றை எம்பெக்-1 வரையறுக்கிறது.
MPEG-2 : எம்பெக்-2 : எம்பெக்-1 தர வரையறையின் நீட்டித்த வடிவம். தொலைக்காட்சி அலைபரப்புக்காக (ஹெச்டி டீவி உட்பட) வடிவமைக்கப்பட்டது. 40 எம்பிபீஎஸ் வரை யிலான உயர்நிலை அலைக் கற்றையை, ஐந்து கேட்பொலித் தடங்கள், பலதரப்பட்ட சட்ட அளவுகள் மற்றும் பின்னலுறு ஒளிக்காட்சிகளை வரையறுக்கிறது.
MPEG-3 : எம்பெக்-3 : தொடக்கத்தில் உயர் வரையறைத் தொலைக்காட்சிக்கான (HDTV) எம்பெக் தர வரையறையாகும். ஆனால் இதற்குப் பதிலாக எம்பெக்-2 பயன்படுத்த முடியும் என்பதால், எம்பெக்-3 மதிப்பிழந்தது.
MPEG-4 : எம்பெக்-4 : ஒளிக்காட்சித் தொலைபேசிகள் மற்றும் பல்லூடகப் பயன்பாடுகளுக்காக வடிவமைக்கப்படும் தர வரையறை. எம்பெக்-4 64 கேபிபீஎஸ் வரையிலான அடிநிலை அலைக்கற்றையை வழங்குகிறது.
. mpg : . எம்பீஜி : எம்பெக் குழுவினர் வரையறுத்த வடிவமைப்பைப் பயன்படுத்தி இறுக்கிச் சுருக்கப்பட்ட கேட்பொலி மற்றும் ஒளிக்காட்சித் தகவலைக் கொண்ட, குறியாக்கம் செய்யப் பட்ட தகவல் தாரைகளை அடையாளம் காட்டும் கோப்பு வகைப்பெயர்.
ΜΡ/Μ : எம்பீ/எம் : நுண்கணினிகளுக்கான பல்பணி நிரல் எனப் பொருள்படும் Multi tasking Programme for Micro Computers என்ற தொடரின் தலைப் பெழுத்துக் குறும்பெயர். சிபி/எம் இயக்கமுறைமையின் பல்பணி பல்பயனாளர் பதிப்பாகும்.
MPOA : எம்பீஒஏ : ஏடிஎம் வழியாக பல் நெறிமுறை என்று பொருள்படும் Mufti Protocol Over ATM என்ற குரும்பெயர் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஏடிஎம் குழுமுன்வைத்த வரன் முறையாகும் இது. (ஏடிஎம் என்பது ஒத்திசையா பரிமாற்றல் பாங்கு என்று பொருள்படும் Asynchronous Transfer Mode என்பதன் சுருக்கம். ஏடிஎம் பயனாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் இணைந்த அமைப்பே ஏடிஎம் குழு). தற்
போதுள்ள ஈதர்நெட், டோக்கன்ரிங் மற்றும் டீசிபி/ஐபி பிணையங்களுடன் ஏடிஎம்மை ஒருங்கிணைப்பதற்கான வரன்முறைகளாகும்.
MPR II : எம்பீஆர் II : விஎல்எஃப் கதிர்வீச்சு உட்பட ஒளிக்காட்சித் திரையகத்திலிருந்து உமிழப்படும் காந்த மற்றும் மின் புலத்தைக் கட்டுப்படுத்தும் தர வரையறை ஆகும். 1987இல் அளவீடுகள் மற்றும் சோதனை களுக்கான சுவிஸ் (Swedish Board for Measurement and Testing) உருவாக்கிய தன்முனைப்புத் தர வரையறை ஆகும். 1990இல் புதுப்பிக்கப்பட்டது.
MPU : எம்பியூ : பன்முகச் செயலி அலகு எனப் பொருள்படும். 'Multi Processing Unit' என்ற ஆங்கிலப் பெயரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர்.
. mq : . எம். கியூ : ஒர் இணையதள முகவரி மார்ட்டினிக் நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக்களப்பெயர்.
mr : . எம்ஆர் : ஒர் இணைய தள முகவரி மெளரிட்டானியா நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக்களப்பெயர்.
MR : எம்ஆர் : மோடம் (இணக்கி) தயார் எனக்குறிக்கும் Modem Ready என்ற தொடரின் சுருக்கம். மோடத்தின் முன் பக்கப் பலகத்தில் (Panel) எரியும் ஒரு சிறு விளக்கு. மோடம் தயார் நிலையில் உள்ளதை உணர்த்துகிறது.
. ms : . எம்எஸ் : ஒர் இணைய தள முகவரி மான்ட்செர்ரட் நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.
MSD : எம்எஸ்டி : 'மிக முக்கிய இலக்கம்' எனப் பொருள்படும் "Most significant digit" என்ற ஆங்கிலச் சொல்லின் சுருக்கம்.
MS-DOS : எம்எஸ்-டாஸ் : மைக்ரோசாஃப்ட் வட்டுச் செயற்பாட்டுப் பொறியமைவு எனப் பொருள்படும் "Microsoft Disk Operating System" என்ற ஆங்கிலப் பெயரின் தலைப் பெழுத்துக் குறும்பெயர். இது "international Business Machines Corporation" (IBM) தயாரிக்கும் சொந்தக் கணினி (PC) களில் பயன்படுகிறது.
MS-DOS mode : எம்எஸ் டாஸ் பாங்கு : விண்டோஸ் 95/98/ என்டி போன்ற 32-பிட் இயக்க முறைமைகளில் பாவிக்கப் படும் எம்எஸ்டாஸ் பணிச்
சூழலை வழங்கும் ஒரு செயல் தளம் (shell).
MS-DOS shell : எம்எஸ் டாஸ் செயல் தளம் : பயனாளர் எம்எஸ்டாஸ் இயக்க முறைமையில் அல்லது எம்எஸ் டாஸில் பாவிக்கும் பிற இயக்க முறைமைகளில் செயலாற்ற அனுமதிக்கும் ஒரு சூழல்.
MSDOS. SYS : எம்எஸ்டாஸ். சிஸ் : எம்எஸ்டாஸ் இயக்கத் தொடங்கு வட்டுகளில் மறைத்து வைக்கப்பட்டுள்ள இயக்க முறைமைக் கோப்புகளில் ஒன்று. இயக்க முறைமையின் கருவகமாய் (kernel) விளங்கும் மென் பொருள் இது.
MSI : எம்எஸ்ஐ : Medicum scale integration என்பதன் குறும் பெயர். நடுத்தர அளவு ஒருங்கிணைப்பு (Medium scale integration) என்பதன் சுருக்கம்.
MSSG : எம்எஸ்எஸ்ஜி : "செய்தி" என்று பொருள்படும் "Message" என்ற ஆங்கிலச் சொல்லின் சுருக்கம்.
. ms. us : . எம்எஸ். யுஎஸ் : ஒர் இணைய தள முகவரி அமெரிக்க நாட்டு மிஸிலிப்பி மாநிலத்தைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப் பெயர்.
MSX : எம்எஸ்எக்ஸ் : மைக்ரோ சாப்ட் கழகம் (Microsoft Corporation) வகுத்துள்ள திட்ட அளவு. வீட்டுக் கணினி அங்காடியை ஒருங்கிணைப்பதற்காக ஜப்பானியர் இதனைப் பயன்படுத்துகிறார்கள். ஜப்பான் முழுவதும் எம்எஸ்எக்ஸ் பயன் படுத்தப்படுகிறது.
. mt : . எம். டீ : ஒர் இணைய தள முகவரி மால்ட்டா நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக்களப்பெயர்.
MTBF : எம்டீபிஎஃப் : செயலறவுகளுக்கு இடையிலான சராசரி நேரத்தைக் குறிக்கும் "Mean time between failures" என்ற ஆங்கில சொற்றொடரின் தலைப்பெழுத்துச் சொல். ஒரு பொறியமைவு அல்லது அமைப்பு செயலிழக்காமல் எவ்வளவு நேரம் செயற்படும் என எதிர்பார்க்கப்படும் சராசரி கால நீட்சி.
ΜΤΤΕ : எம்டீடிஎஃப் : செயலறவுக்கான சராசரி நேரத்தைக் குறிக்கும் "Mean time to failures" என்ற ஆங்கிலச் சொற்றொடரின் தலைப்பெழுத்துக் குறும் பெயர். ஒரு பொறியமைவு அல்லது அமைப்பு குறைபாடின்றி செயற்படும் சராசரி கால நீட்சி.
ΜΤΤR : எம்டீடீஆர் : பழுது பார்த்தலுக்கான சராசரி நேரத்தைக் குறிக்கும் “Mean Time To Repair" என்னும் ஆங்கிலச் சொற்றொடரின் தலைப் பெழுத்துக் குறும்பெயர். ஒரு கணிதப் பொறியமைவில் ஏற்படும் கோளாறினைக் கண்டு பிடித்துச் சரிசெய்வதற்குத் தேவைப்படுமென எதிர்பார்க்கப்படும் சராசரி நேரம்.
mu : மியூ : 'μ' என்ற கிரேக்க எழுத்தின் பெயர். இது நுண்மையைக் குறிக்கும் முதலெழுத்துச் சின்னமாகப் பயன் படுத்தப்படுகிறது. எடுத்துக் காட்டு : μS நுண் வினாடி (microp second).
μC : மியூசி : நுண்கணிப் பொறியைக் குறிக்கும் சுருக்கப் பெயர். 'μ' என்பது "மியூ" என்ற கிரேக்க எழுத்து ஆகும்.
MUD : மட்; எம்யுடி : பல் பயனாளர் நிலவறை என்று பொருள்படும் Multiuser Dungeon என்ற தொடரின் சுருக்கம். இணையத்தில் பல பயனாளர்கள் ஒரே நேரத்தில் பங்கு கொண்டு நிகழ்நிலையில் ஒரு வரோடு ஒருவர் ஊடாடி மகிழும் விளையாட்டு. இணையத்தில் சிலவும் ஒர் மெய்நிகர் சூழல்.
MUG : எம்யூஜி : மம்ப்ஸ் பயன் படுத்துவோர் குழுமம் எனப் பொருள்படும் "Mumps Users Group" என்ற ஆங்கிலச் சொற்றொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர்.
multiaccess : பல்முனை அணுகல்; பன்முக அணுகல்.
multiaccess computer : பன்முக அணுகு கணினி, பல் பயன் கணினி : பல பயனாளர் ஒரே சமயத்தில் கணினித் தரவு ஆதாரங்களைக் கையாளும் வகையில் அமைக்கப்பட்டுள்ள கணினியமைவு. இதில், இயக்குவதற்கு ஒன்றுக்கு மேற்பட்ட சேர் முனையங்களை இணைப்பதற்கு வசதி இருக்கும். இதில் உட்பாட்டு/வெளிப்பாட்டுச் சேர்முனையங்களை மையச்செயலகத்திலிருந்து வெகு துரத்திலுள்ள இடங்களில் அமைக்கலாம். அப்போது இவை சேய்மைச் சேர் முனையங்கள் (Remote terminals) எனப்படும். இதனை ஒரே சமயத்தில் பலர் இயக்கலாம். இந்தப் பொறியமைவு, கணிப்பொறி களையும், அதன் புறநிலைச் சாதனங்களையும் இயன்ற வரையில் மிகப் பெருமளவுக்குப் பயன்படுத்திக் கொள்கிறது.
multi-access system : பன்முக அணுகு முறைமை.
multi address : பன்முக முகவரி : ஒன்றுக்கு மேற்பட்ட முகவரிப் பகுதி அடங்கிய ஒர் அறிவுறுத்தப் படிவம்.
multibus : பல்வேறு வழித்தடம் : இராணுவம், தொழில்துறை மற்றும் விண்வெளி பயன்பாடுகளில் பயன்படுத்தப்படும் மேம்பட்ட தடையக் கட்டுமான அமைப்பு. செய்தி அனுப்புதல், தானாக அமைத்துக் கொள்ளுதல் மற்றும் மென்பொருள் தலையீடுகள் உள்ளடக்கியது.
multi cast : பலரறியப் பரப்புதல்; பல் பரப்பல்.
multicast-backbone : பல்முனைப் பரப்பு முதுகெலும்பு.
multicasting : பல்முனைப் பரப்புகை : ஒரு பிணையத்தில், ஒரே நேரத்தில் ஒரு செய்தியை ஒன்றுக்கு மேற்பட்ட இலக்குகளுக்கு அனுப்பி வைக்கும் செயல்முறை.
Multi computer system : பன்முகக் கணினியமைவு; பல் செயல் கணினியமைப்பு : இரண்டு அல்லது அவற்றுக்கு மேற்பட்ட மையச் செயலகம் (CPU) அமைந்துள்ள கணினியமைவு.
multics : மல்டிக்ஸ் : மேக் திட்டத்தில் வடிவமைக்கப்பட்ட பன்முக அணுகு இயக்க அமைப்பு மற்றும் டிரேட்மார்க்.
multidimensional : பல்பரிமாண.
multidimensional array : பல் பரிமாண வரிசை : இரண்டு அல்லது மேற்பட்ட பரிமாணங்களைக் கொண்ட வரிசை.
multidrop line : பன்முகப்படி வரி; பன்முனைத் தொடல் : பல் சேர் முனையங்களை இயக்குவதற்கு ஒரேயொரு வழியை அல்லது வரியைப் பயன்படுத்தும் செய்தித் தொடர்புப் பொறியமைவுத் தொகுதி. இதனை பன்முக முனைவரி என்றும் கூறுவர். இது 'வரிக்கு வரி' என்பதற்கு மாறுபட்டது.
multidrop network : பன் முனையப் பிணையம்.
multifile sorting : பன்முகக்கோப்பு வகைப்படுத்துதல்; பல் கோப்பு வரிசைப்படுத்தல் : ஒவ்வொரு கோப்புக்கும் தனித் தனி நிலையளவுருக்களின் அடிப்படையில், இயக்குபவர் தலையீடின்றி இயக்கக்கூடிய, ஒன்றுக்கு மேற்பட்ட கோப்புகளை வகைப்படுத்தக்கூடிய தானியங்கு வரிசை முறை.
multifinder : பல்பணி இயக்கி; மல்ட்டி ஃபைண்டர் : ஆப்பிள் மெக்கின்டோஷின் ஃபைண்டர்
பயன்பாட்டின் ஒரு பதிப்பு. பல்பணிகளை ஒரே நேரத்தில் இயக்க வழிசெய்யும். ஒரே நேரத்தில் பல்வேறு பயன்பாடுகள் நினைவகத்தில் தங்கியிருக்க வகை செய்வதே இதன் முதன்மையான பயன். ஒற்றைச் சுட்டிச் சொடுக்கில் பயன்பாடுகளுக்கிடையே மாறிக் கொள்ளலாம். ஒரு பயன்பாட்டிலுள்ள தரவுவை இன்னொன்றுக்கு நகல் எடுக்கலாம். இயக்கத்தில் இருக்கும் பயன்பாடு மெய்யான பல பணிச் செயல்பாட்டை அனுமதிக்குமெனில் பின்புலத்தில் வேறொரு பணியை இயக்க முடியும்.
multi frequency monitor : பல் அலையெண் கணித்திரை : ஒரு எல்லையில் உள்ள அனைத்து அலை எண்களுக்கும் அனுசரித்துச் செல்லும் காட்சித்திரை அல்லது வி. ஜி. ஏ. மற்றும் சூப்பர் வி. ஜி. ஏ. போன்ற குறிப்பிட்ட அலை எண் தொகுதிகளுக்கும் ஏற்புடையது.
multi function board : பன்முகச் செயற்பணிப் பலகை; பல் செயற்பலகை : ஒரு கணினியமைவுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட புதிய திறம்பாட்டினை அளிக்கக்கூடிய செருகிகளைக் கொண்ட சாதனம். எடுத்துக் காட்டு : கடிகாரம் /நாட்காட்டி நினைவக விரிவாக்கப் பலகை அல்லது ஒருபோகு/தொடர் இடைமுகப்பு.
multi-hop transmission : பல் தாண்டு பரப்புதல் : மின்னணு மண்டலத்தின் செயற்போக்கு. அதன் வழியாக ஒரு வானொலி அலை பரப்பப்படும்போது, அலையில் அலையெண்ணைப் பொறுத்தே அது அமையும். குறைந்த அலையெண்களில், மின்னணு மண்டலம் அதிக மின்கடத்தி ஊடகமாகப் பயன்பட்டு குறைந்த ஒப்புடன் குறைந்த அளவில் உள்ள எந்த சமிக்கையையும் அனுப்பும். பூமியிலிருந்தும் மின்னணு மண்டலத்தின் கீழ்ப்பகுதியிலிருந்தும் பிரதிபலித்து VLF அல்லது LF சமிக்கைகளை நீண்ட தூரத்துக்கு பிரதிபலித்தல் மூலம் அனுப்ப முடியும்.
multihosting : பல் விருந்தோம்பல் : பல்முனை ஐ. பி. முகவரிகளுக்கு முகவரியிடப்பட்ட பொதிகளை கணினி ஏற்றுக் கொள்ளுமாறு கெஞ்சுவதில் ஒருமுறை. எந்த முகவரிக்குப் பொதி அனுப்பப்பட வேண்டியிருக்கிறது என்பதைக் கண்டு பிடித்தவுடன், ஒரு தனி எந்திரத்தின் மூலமே பல சர்வர்களின் செயல்களை மாயமாகச் செய்ய முடியும்.
multijob operation : பன்முகப் பணிச் செயற்பாடு; பல்பணி செயற்பாடு : இரண்டு அல்லது அவற்றுக்கு மேற்பட்ட பணிகளை படிப்படியாக ஒரே சமயத்தில் நிறைவேற்றுதல். இது பன்முகச் செயல்முறைப் படுத்துதலுடன் ஒப்பிடத்தக்கது.
multi layer : பன்முக அடுக்கு; பல் அடுக்கு : மின் முலாம் பூசிய துவாரங்களின் மூலம் இணைக்கப்பட்டுள்ள பல மின் சுற்று வழி அடுக்குகளைக் கொண்ட ஒரு முன் மாதிரியான அச்சிட்ட மின்சுற்று வழிப்பலகை.
multi level addressing : பன் முக நிலை முகவரியிடல்.
multiline : பல் கம்பி ; பல் ஒளியிழை : இரண்டு அல்லது மேற்பட்ட செய்தி அனுப்பும் பாதைகளைக் (கம்பிகள் அல்லது ஒளி இழைகள்) கொண்டுள்ள தடயம் அல்லது வழித்தடம் அல்லது குழாய்.
multiline function : பல்வரிச் சார்பு.
multilinked list : பன்முக தொடுப்புப் பட்டியல்; பல் இணைப்புப் பட்டி : ஒவ்வொரு அணுவும் குறைந்தது இரண்டு கூர் முனைகளைக் கொண்ட பட்டியல்.
multilink point - to - point protocol : பல் தொடுப்பு முனைக்கு முனை நெறிமுறை : இணையத்தில் கணினிகள் தமது அலைக் கற்றைகளை ஒருங்கிணைக்க் தம்மிடையே பல மெய்ம்மைத் தொடுப்புகளை (real links) ஏற்படுத்திக் கொள்ள அனுமதிக்கும் நெறிமுறை. ஒற்றை மெய்ம்மைத் தொடுப்பின் கொள்திறனைவிட அதிகக் கொள்திறனுள்ள ஒரு மெய் நிகர் தொடுப்பை (virtual link) இந்த நுட்பம் உருவாக்குகிறது.
multimedia : பல்லூடகம் : உரை, ஒலி, வரைகலை, அசை ஆட்டம், ஒளிக்காட்சி ஆகிய வற்றின் தொகுப்பு. கணினி உலகில் பல்லூடகம் என்பது மீஊடகத்தின் (Hypermedia) ஓர் அங்கமாக விளங்குகிறது. மீ ஊடகம் என்பது மேற்காணும் ஐந்து ஊடகங்களையும் மீஉரை யுடன் (Hypertext) இணைக்கிறது.
multimedia conference : பல் ஊடக கருத்தரங்கு; பல்லூடகக் கலந்துரையாடல்.
multimedia distributed parallel processing : பல் ஊடக இணைச் செயல்பாடு.
multimedia extensions : பல் ஊடக விரிவாக்கங்கள் : ஒலிப் பதிவு செய்தல், திரும்ப ஒலித்
தல், உயிர்ப்பட திரும்பல், ஜாய்ஸ்டிக், மிடி, சிடி ரோமுக்கான எம். சி. ஐ. இடைமுகங்கள், ஒளிக்காட்சி வட்டுகள், ஒளிக் காட்சி நாடாக்கள் போன்ற வற்றுக்குப் பயனுள்ள விண்டோ வழமைகள்.
multimedia PC : பல்லூடக பீசி (கணினி) : பல்லூடக வசதி பெற்ற சொந்தக் கணினி. இதற்கான மென்பொருள், வன் பொருள் தர அளவீடுகளை பல்லூடக பீசி விற்பனைக் குழு (Multimedia PC Marketing Council) நிர்ணயம் செய்துள்ளது. ஒரு பீசியின் ஒலி, ஒளிக்காட்சி, சிடி-ரோம் இயக்கத் திறன்களின் குறைந்தபட்ச அளவீடுகளை இது வரையறுத்துள்ளது.
multinode computer : பல்கணு கணினி : பல செயலிகளைப் பயன்படுத்தும் ஒரு கணினி. மிகச் சிக்கலான பணியில் கணக்கீடுகளை இவை பகிர்ந்து கொள்ளும்.
multipart forms : பல்பகுதி படிவங்கள்; பல்லடுக்குப் பல்தாள் படிவங்கள் : கணினியில் தொட்டச்சுப் பொறிகளில் (impact printers) அச்சுக்குப் பயன்படுத் தப்படும் ஒருவகைத்தாள் தொகுதி. இரு தாள்களுக்கிடையே கரியத்தாள் (carbon paper) இருக்கும். அல்லது ஒவ்வொரு தாளின் பின்பக்கமும் ஒருவகை வேதிப்பொருள் பூசப் பட்டிருக்கும். இது கரியத்தாள் போன்றே செயல்படும். கடைசித் தாளில் இப்பூச்சு இருக்காது. ஒரே அச்சில் பல படிகளை எடுக்க இத்தாள் பயன்படுகிறது. ஒரு தொகுதி யில் மொத்தம் எத்தனை படிகள் எடுக்க முடியும் என்பதைக் கொண்டு இத்தாளின் பல்லடுக்கு (multipart) கணக்கிடப்படுகிறது.
multipass : பன்முக ஓட்டம் : மிகவும் சிக்கலான ஒரு பணியை ஒரே ஒட்டத்தில் செய்ய முடியாதிருக்கும்போது, ஒரே தரவுவை ஒன்றுக்கு மேற்பட்ட தடவை ஒடவிட்டு அதனை முழுமையாகச் செய்யும்முறை.
multipass sort : பன்முக ஓட்ட வகைப்படுத்தல்; பல ஒட்ட வரிசையாக்கம் : ஒரு மையக் கணினி இடைநிலைச் சேமிப்பியின் உள்முக நினைவகத்தில் அடங்கியுள்ள ஒன்றுக்கு மேற்பட்ட தரவுகளை வகைப்படுத்து வதற்காக வடிவமைக்கப்பட்ட வகைப்படுத்தும் செயல் முறை.
multi-path propagation : பல்-பாதை பரப்புதல் : வான-அலை வானொலி இணைப்பின் இறுதியில் வந்து சேரும் வானொலி அலைகள், மின்னணு மண்டலத்தில் இரண்டு அல்லது மேற்
பட்ட மாறுபட்ட பாதைகளைக் கடந்து வந்திருக்கும். ஒவ்வொரு அலையும் உருவாக்கும் மொத்த கள பலத்தை அது கொண்டிருக்கும். மின்னணு மண்டலம் அதன் அடர்த்தியை ஒட்டி தொடர்ச்சியான ஏற்ற இறக்கங்களைக் கொண்டிருக்கும் என்பதால் பாதை 1 மற்றும் 2-ன் நீளங்கள் மாறும். இந்த மாற்றம் பெறுமிடத்தில் மொத்த கள திறனை மாற்றும்.
multiple access message : பன்முக அணுகு செய்தி.
multiple-access network : பன்முக அணுகு இணையம் : ஒர் இணையத்தின் ஒவ்வொரு நிலையத்தையும் எந்த நேரத்திலும் அணுகுவதற்கான வசதியுடைய பொறியமைவு. இதில், இரு கணினிகள் ஒரே சமயத்தில் செய்தியனுப்புவதற்கு முடிவு செய்யும்போது அதற்கான நேரங்களை நிருணயிப்பதற்கான வசதி அமைந்துள்ளது.
multiple access points : பன்முக அணுகு முனைகள்.
multiple-address instruction : பன்முக முகவரி ஆணை : ஒரே செயற்பாட்டுக் குறியீட்டையும் இரண்டு அல்லது அவற்றுக்கு மேற்பட்ட முகவரிகளையும் கொண்டுள்ள ஆணை. பொதுவாக, இரு முகவரி, மூன்று முக வரி, அல்லது நான்கு முகவரி ஆணை என்று குறிக்கப்பட்டிருக்கும். பார்க்க : இருமுக வரிக் கணினி, மூன்று முகவரிக் கணினி. இது, ஒரு முகவரி
ஆணைக்கு மாறுபட்டது.
multiple-address message : பன்முக முகவரிச் செய்தி : ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களுக்கு அனுப்ப வேண்டிய செய்தி.
multiple assignment statement : பன்மதிப்பிருத்து கட்டளை.
multiple connector : பன்முக இணைப்பி : பல்வழி இணைப்பி : பல பாய்வு வரிகளை ஒரே வரிக்குள் அல்லது ஒரு பாய்வு வரியைப் பல பாய்வு வரிகளுக்குள் ஒருங்கிணைப்பதைக் குறிக்கும் இணைப்பி.
multiple inheritance : பல்வழி மரபுரிமம்; பன்முக மரபுரிமை : சில பெருநோக்கு நிரலாக்க மொழி (Object Oriented Programming Languages) களில் காணப்படும் பண்புக்கூறு. ஏற்கெனவே உருவாக்கப்பட்டுள்ள ஒன்றுக்கு மேற்பட்ட இனக் குழுக்களை அடிப்படையாகக் கொண்டு புதிய இனக்குழுவை உருவாக்க அனுமதிக்கும் செயல்முறை. இருக்கும் தரவு இனங்களை நீட்டிக்கவும்
இணைக்கவும் பல்வழி மரபுரிமம் வழி வகுக்கிறது. சி++ மொழியில் இத்தகு வசதி உள்ளது. ஆனால் ஜாவா மற்றும் சி# மொழிகளில் பல் வழி மரபுரிமம் அனுமதிக்கப் படுவதில்லை.
multiple-job processing : பன்முகப் பணிச் செய்முறைப்படுத்தல் : ஒன்றுக்கு மேற்பட்ட தரவு செய்முறைப்படுத்தும் பணியை ஒரே சமயத்தில் செய்வதைக் கட்டுப்படுத்துதல்.
multiple-level control break : பல்நிலை கட்டுப்பாட்டுத் தடை : கட்டுப்பாட்டு தடைகளுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட கட்டுப் பாட்டுக் களத்தைப் பயன் படுத்துவது.
multiple page preview : பன்முகப் பக்க முன்காட்சி; பலபக்க முன்காட்சி.
multiple-pass printing : பன்முக ஒட்ட அச்சடிப்பு; பல் ஒட்ட அச்சிடல் : புள்ளி அச்சடிப்பிகளில் உயர்தரமான எழுத்துகளைப் பெறுவதற்குப் பயன்படுத்தப் படும் நுட்பம். அச்சுச் சுருள் முனை ஒரு முறை ஒடியதும், காகிதம் சற்றே நகர்கிறது; மற்றொரு ஒட்டம் நடைபெறுகிறது. இறுதியில் எளிதில் படித்திடக்கூடிய ஓர் அச்செழுத்து. கிடைக்கிறது. இது நிழல் அச்சடிப்புக்கு மாறுபட்டது.
multiple programme loading : பன்முக நிரல் சுமை.
multiple punching : பன்முகத் துளையிடல்; பல் துளையிடல் : ஒர் அட்டைப்பத்தியில் இரண்டு அல்லது அவற்றுக்கு மேற்பட்ட துளைகள் இடுதல்.
multiple recipients : பல் பெருநர்கள் : ஒன்றுக்கு மேற்பட்ட மின்னஞ்சல் முகவரிகளை ஒற்றைவரியில் குறிப்பிட்டு ஒன்றுக்கு மேற்பட்ட பயனாளர்களுக்கு மின்னஞ்சல்களை ஒரே நேரத்தில் அனுப்பி வைக்கும் திறன். முகவரிகளுக் கிடையே காற்புள்ளி அல்லது அரைப்புள்ளி, பிரிப்புக் குறியீடாகப் பயன்படும்.
multiple regression : பன்முகப் பின்னிறக்கம்; பன்முகப் பின்னடை வியக்கம் : ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட விளக்க அல்லது தற்சார்பு மாற்றம் சார்புடையதெனக் கருதப்படும். ஒரு சார்பு மாறிலியின் மதிப்பை ஊகித்தறிவதற்கான புள்ளியியல் முறை.
multiple selection : பன்முகத் தெரிவு.
multiple user system : பல் பயனாளர் பொறியமைவு; பல்
பயனாளர் அமைவு : ஒரே சமயத்தில் பலர் பயன் படுத்தும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ள கணிப்பொறியமைவு.
multiplex : பன்முகப் பயன் பாட்டுப் பொறியமைவு : பன்மையாக்கி ஒரே சமயத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட பயனாளர் பயன்படுத்துவதற்கு அனுமதி யளிக்கும் பொறியமைவு.
multiplexer : ஒருங்கிணைப்பி; பல் பலன் தொகுப்பி.
multiplexing : ஒன்றுசேர்த்தல்; ஒருங்கிணைத்தல் : தரவு தொடர்பிலும், உள்ளிட்டு / வெளியீட்டுச் செயல்பாடுகளிலும் ஒற்றைத் தரவு தடத்தில் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட வெவ்வேறு தரவு சமிக்கைகளை (signals) அனுப்பி வைக்கப் பயன்படுத்தப்படும் ஒரு நுட்பம். ஒரே தடத்தில் பயணிக்கும் வெவ்வேறு தரவு சமிக்கைகள் ஒன்றோடொன்று கலந்துவிடாமல் இருக்க நேரம், இடைவெளி அல்லது அலை வரிசை - இவற்றில் ஒன்றால் பிரிக்கப்பட்டு அனுப்பப்படுகின்றன. இவ்வாறு சமிக்கைகளை ஒன்றிணைக்கப் பயன் படும் சாதனம் ஒன்றுசேர்ப்பி அல்லது ஒருங்கிணைப்பி (multiplexer) என்று அழைக்கப் படுகிறது.
multiplexor (MPX) : பன்முகக்கணினி; பல் பயன் தொகை; பன்மையாக்கி : ஒரு கிணினித் தகவல் வழியினைப் பலர் பகிர்ந்து கொள்வதற்குப் பல செய்தித் தொடர்புப் பாதைகளை அனுமதிக்கும் சாதனம்.
multiplexor channel : பன்முகக் கணினி வழி; பன்மையாக்கத் தடம் : ஒரு தனி வகை உட்பாட்டு/வெளிப்பாட்டுக் கணினி வழி. இது, ஒரு கணினிக்கும், ஒரே சமயத்தில் செயற்படும் புறநிலையச் சாதனங்களுக்கு யிடையில் தரவுகளை அனுப்ப வல்லது. இது தேர்திறக் கணினி வழியிலிருந்து வேறுபட்டது.
multiplexor, data channel : தரவுத் தட ஒன்று சேர்ப்பி.
multiplication : பெருக்கல்
multiplication time : பெருக்கல் நேரம் : ஒர் இரும எண்ணுக்கான பெருக்கலைச் செய்வதற்குத் தேவைப்படும் நேரம். இது, பெருக்கல் செயற்பாட்டில் அடங்கியுள்ள கூட்டல் நேரங் கள் அனைத்திற்கும் அகற்சி நேரம் அனைத்திற்கும் சமமான தாகும்.
multiplier : பெருக்கி; பெருக்கெண் : 1. கணக்கீட்டில் ஒர் எண்ணை எத்தனை முறை பெருக்க வேண்டும் என்பதைக்
குறிக்கும் எண். 4x5 என்பதில் 4 என்பது பெருக்கப்படு எண். 5 என்பது பெருக்கெண்.
2. கணினியில் இருக்கும் ஒரு மின்னணு சாதனம். மையச் செயலகத்தின் புறத்தே இருப்பது. பெருக்கல் கணக்கீடுகளை இது செய்யும். தொடர் கூட்டல் முறையில் இது நிறைவேற்றப் படும். 4x5 எனில் 4 என்ற எண் 5 முறை கூட்டப்படும்.
multiplier, digital : இலக்கப் பெருக்கி.
multipoint configuration : பல் முனை தகவமைவு : ஒரு தகவல் தொடர்பு இணைப்பு. பல நிலையங்கள் தொடர்ச்சியாக ஒரே தகவல் தொடர்புத் தடத்தில் இணைக்கப்பட்டிருக்கும். பொதுவாக, தரவு தொடர்பு இணைப்பை ஒரு முதன்மை நிலையம் (ஒரு தலைமைக் கணினி) நிர்வகிக்கும். இணைக்கப்பட்ட ஏனைய நிலையங்கள் அதன் கட்டுப் பாட்டின்கீழ் இயங்கும்.
multipoint line : பல்முனைக் கம்பி : மூன்று அல்லது மேற்பட்ட சாதனங்களை ஒன்றோ டொன்று இணைக்கும் ஒரு தனிக் கம்பி.
multiported memory : பல் இணைப்பு நினைவகம் : ஒன்றுக்கு மேற்பட்ட அணுகு பாதை மூலம் அதன் உள்ளடக்கங்களை அணுக அனுமதிக்கும் நினைவகம். அதே நினைவகப் பகுதியை ஒரே வேளையில் படிக்கவும் எழுதவும் அது அனுமதிக்கிறது.
muItiprecision arithmetic : பன்முக எண் கணக்கியல் : ஒவ்வொரு எண்ணையும் குறிப்பதற்கு இரண்டு அல்லது அவற்றுக்கு மேற்பட்ட கணினிச் சொற்கள் பயன் படுத்தப்படும் கணித வடிவம்.
multiprocessing : பல் நிரலாக்கம்; பன்முகச் செய்முறைப்படுத்தல்; பன்மைச் செயலாக்கம் : பொதுவான கட்டுப் பாட்டின் கீழுள்ள பன்முக மையச் செயலகம் வாயிலாக இரண்டு அல்லது அவற்றுக்கு மேற்பட்ட ஆணை வரிசை களை ஒரே சமயத்தில் நிறை வேற்றுதல்.
multi processing arithmetic : பன்முக செயலாக்க எண் கணிதம்.
multiprocessor : பல் செயலி; பன்முகச் செய்முறைப்படுத்தி; பன்மைச் செயலகம் : ஒரே பொதுவான கட்டுப்பாட்டின் கீழ் இரண்டு அல்லது அவற்றுக்கு மேற்பட்ட மையச்
செயலகங்களைக் கொண்ட கணினி இணைவனம்.
multiprocessor computer systems : பல்செயலக கணினி அமைப்புகள் : மையச் செயலக வடிவமைப்புக்கு பல்செயலக அமைப்பு முறையைப் பயன் படுத்தும் கணினி அமைப்புகள். ஆதரவு நுண் செயலகங்கள் பல்லாணைச் செயலகங்கள் மற்றும் இணைச் செயலக வடிவமைப்புகள் ஆகியவைகளை உள்ளடக்கியது.
multiprogramming : பன்முகச் செயல் முறைப்படுத்தல் : ஒரே கணினியில் ஒரே சமயத்தில் இரண்டு அல்லது அவற்றுக்கு மேற்பட்ட செயல்முறைகளை இயங்கச் செய்தல். நினைவகத்தில் ஒவ்வொரு செயல்முறைக்கும் அதற்கெனத் தனியிடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. அதற்குத் தனித்தனிப் புற நிலைச் சாதனங்களும் உள்ளன. இவை அனைத்தும் மையச் செயலக அலகைப் பகிர்ந்து கொள்கின்றன. மையச் செயலக அலகைவிடப் புறநிலைச் சாதனங்கள் மெதுவாகச் செயற்படுகின்றன. இதனால் இது சிக்கனமானது. பெரும்பாலான செயல்முறைகள், தங்கள் நேரத்தைக் கடைசி வரை உட்பாட்டுக்காக /வெளிப்பாட்டுக்காகக் காத்திருந்து கழிக்கின்றன. ஒரு செயல்முறை காத்திருக்கும்போது, இன்னொரு செயல் முறை, மையச் செயலக அலகைப் பயன்படுத்திக் கொள்கிறது.
multi reel file : பல்சுருள் கோப்பு.
muitireel sorting : பன்முகச் சுருணை வகைப்படுத்தல் : ஒன்றுக்கு மேற்பட்ட உட்பாட்டு நாடாவைக் கொண்டுள்ள ஒரு கோப்பின் தானியங்கி வரிசைமுறை.
multiscan monitor : பன்முக வருடு திரை; பன்முக நுண்ணாய்வு முகப்பு : ஒரு எல்லைக்குள் உள்ள அனைத்து அலை வரிசைகளுக்கும் அனுசரித்துப் போகும் காட்சித்திரை.
multistar network : பன்முக விண்மீன் பிணையம் : தரவு செய்தித் தொடர்புகளின் பிணையம். இதில் பல தாய்க் கணினிகள் பிணைக்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு தாய்க் கணினியும் சிறிய கணினிகளின் நட்சத்திரத்தைச் சொந்தமாகக் கொண்டிருக்கின்றன.
multi syllabus approach : பன்முகப் பாடத்திட்ட அணுகுமுறை.
multisync monitor : பல் ஒத்திசைவுத் திரையகம் : பலதரப்
பட்ட செங்குத்து மற்றும் கிடை மட்ட ஒத்திசைவு வீதங்களுக்கு ஈடுகொடுக்கும் திறன்பெற்ற ஒரு கணினித் திரையகம். அத் திரையகங்களுக்கு பல்வேறு வகைப்பட்ட தகவிகளைப் (Adapters) பயன்படுத்திக் கொள்ள முடியும். ஏனெனில் அவை ஒளிக்காட்சிச் சமிக்கை யில் ஒத்திசைவு வீதத்துக்கு ஏற்ப தாமாகவே தகவமைத்துக் கொள்ளும் திறன் பெற்றவை.
multisystem network : பன்முகப் பொறியமைவுப் பிணையம் : பன் முறை பொறியமைப்புப் பிணையம் : இரண்டு அல்லது அவற்றுக்கு மேற்பட்ட தாய்க் கணினிகளைக் கொண்டிருக்கிற செய்தித் தொடர்புகள். இது, செய்தித் தொடர்பு கொள்வதற்கு எந்தக் கணினியைப் பயன்படுத்த ஒரு சேர்முனையம் விரும்புகிறதோ அந்தக் கணினியைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள இயல்விக்கிறது.
multi task : பல் பணி
multitasker : பல்செயலாற்றல் : பல நிரலாக்கத் தொடர்களை ஒரே நேரத்தில் திறந்து இயங்க வைக்கும் கட்டுப்பாட்டு நிரல் தொடர். நிரல் தொடர்களுக் கிடையே நீங்கள் மாறி செயல்படலாம். இயக்குபவரின் கவனம் தேவைப்படாதவை பின்னணியில் இயங்கிக் கொண்டிருக்க, முன்னணியில் திரையில் உள்ள நிரல் தொடரை நீங்கள் இயக்கலாம்.
multitasking : பன்முகப் பணியாக்கம்; பன்முறைப் பணியாக்கம் : ஒரே சமயத்தில் இரண்டு அல்லது அவற்றுக்கு மேற்பட்ட பணிகளைச் செய்வதற்கான ஒரு கணினியின் திறம்பாடு.
multitask operation : பன்முகப்பணிச் செயற்பாடு : பல் பணியாக்கம் : ஒரே கணினியில் ஒரே சமயத்தில் இயங்கும் ஒரு செயல்முறையினுள் உள்ள இரண்டு அல்லது அவற்றுக்கு மேற்பட்ட கூறுகள்.
multithreaded application : பல்புரிப் பயன்பாடு : ஒரே நேரத்தில் ஒரு நிரலில் உள்ள ஒன்றுக்கு மேற்பட்ட கிளைப் பணிகள், கிளைநிரல் புரி களாகப் பிரிந்து ஒரே நேரத்தில் செயல்படுத்தப்படுவது. இந்த முறையில் செயலி வாளா இருக்கும் நேரம் குறைக்கப்படுகிறது.
multithreading : பல் நூலிழைத்தல் : ஒரு தனி நிரல் தொடருக்குள் பல் பணி ஆற்றுதல். ஒரே நேரத்தில் பரிமாற்றங்களையும் செய்திகளையும் அது செயலாக்கம் செய்யும். ஒரே நேரத்தில்
சேர்ந்தியங்கும் ஒலி ஒளி பயன் பாடுகளை உருவாக்கவும் இது தேவைப்படும். திரும்ப வரும் குறியீட்டுமுறை இதற்கு அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
multiuser : பல் பயனாளர் : இரண்டு அல்லது மேற்பட்ட பயனாளர்கள் சேர்ந்தியங்கும் கணினி.
multiuser DOS : பல் பயனாளர் டாஸ் : ஒரு தனி பி. சி. யிலிருந்து பல ஊமை முனையங்கள் இயங்க அனுமதிக்கும் டாஸ் - ஏற்புடை இயக்க அமைப்பு. டிஜிட்டல் ரிசர்ச் நிறுவனம் இப்பணியில் 10 முகப்புகள் / பி. சி. க்களைப் பயன்படுத்தி 386 எஸ்எக்ஸ் மையச் செயலகம் அல்லது உயர் எந்திரங்களை இயக்க முடியும். Concurrent DOS-ஐ நீக்கி இது ஏற்படுத்தப் பட்டது.
multi user file processing : பல் பயனாளர் கோப்புச் செயலாக்கம்.
multiuser systems : பலர் பயன் படுத்தும் பொறியமைவுகள்.
multi variate : மல்டி வேரியேட் : பல மாறிலிகளை எதிர்கால முரைக்கும் மாதிரியில் பயன் படுத்துவது.
multi view ports : பன்முகக் காட்சித் திரைகள் : இரண்டு அல்லது அவற்றுக்கு மேற்பட்ட காட்சித்திரைகளைக் காட்டும் திரைக்காட்சி. இந்தக் காட்சித் திரைகள் அடுத்தடுத்து அமைந்திருக்கும். ஒன்றையொன்று சார்ந்திருப்பதில்லை.
multi volume file : பல தொகுதிக் கோப்பு : மிகப்பெரிய கோப்பு. இதற்கு ஒன்றுக்கு மேற்பட்ட வட்டுத் தொகுதி, சுருணை, அல்லது காந்த நாடா தேவைப்டும்.
multiway branching : பல்வழி கிளை பிரித்தல்.
MUMPS : மம்ப்ஸ் : மசாசூசெட்ஸ் பொது மருத்துவமனைப் பயன் பாட்டுச் செயல்முறைப்படுத்திப் பொறியமைவு எனப் பொருள்படும் "Massachusetts - General Hospital Utility Program ming System" என்ற ஆங்கிலச் சொற்றொடரின் சுருக்கம். இது, குறிப்பாக மருத்துவ ஆவணங்களைக் கையாள்வதற்காக வடி வமைக்கப்பட்ட ஒரு கணினி மொழி. தரவு மேலாண்மையிலும் வாசகங்களைக் கையாள்வதிலும் இந்த மொழி வெகுவாகப் பயனுடையது.
MUP : மியூபி : நுண் செயலி என்று பொருள்படும் 'Micro processor' என்ற ஆங்கிலச் சொல்லின் சுருக்கம். (μ என்பது
மியூ என்ற கிரேக்க எழுத்து. இது நுண்மையைக் குறிக்கும் குறியீடாகும்).
mus : மியூஎஸ் : நுண் வினாடி என்று பொருள்படும் 'µs' என்ற ஆங்கிலச் சொல்லின் சுருக்கம். 'µ' என்ற கிரேக்க எழுத்து நுண்மையைக் குறிக்கும்.
MUSE : மியூஸ் : பல்பயனாளர் பாவிப்புப் பணிச்சூழல் என்று பொருள்படும் Multi User Simulation Environment என்பதன் சுருக்கம்.
musical language : இசை மொழி : கணினி உட்பாட்டுக்குப் பொருத்தமான குறியீட்டில் இசைச் சுரங்களைக் குறிப்பதற்கான முறை.
musicomp : இசைச்செயல்முறை மொழி; இசையமைப்பு : இசையமைப்புச் செயல்முறை மொழி. இது மூல இசைச் சுரங்களை உருவாக்குவதற்கும் இசை ஒருங்கிணைப்புக்கும் வழி செய்யும் நுட்பங்களை அளிக்கிறது.
music synthesizer : இசை இணைப்பி : இசையைப் பதிவு செய்வதற்கும், ஒளி பரப்புவதற்கும் ஒரு கணினியுடன் இணைக்கப்படும் சாதனம்.
mute : ஒலி நிறுத்தம்.
mutual exclusion : பரஸ்பர விலக்கம் : ஒரு நிரலாக்க நுட்பம். ஒரு நினைவக இருப்பிடம் அல்லது உள்ளீட்டு/வெளியீட்டுத்துறை அல்லது ஒரு கோப்பு போன்ற ஏதேனும் ஒரு கணினி வளத்தை ஒரு நேரத்தில் ஒரு நிரல் அல்லது நிரல்கூறு மட்டுமே அணுகுவதை உறுதிப்படுத்தும் முறை. அறைக் கதவில் நான் வேலையாய் இருக்கிறேன்; இடையூறு செய்யாதீர் என்று ஒர் அறிவிப்புப் பலகையை வைத்துவிட்டு உள்ளே பணிகளை மேற்கொள்ளும் முறையை ஒத்தது. ஒர் அறிவிப்புக் குறிப்பு அல்லது குறியீடு (semaphores/flags) மூலம் ஒன்றுக்கு மேற்பட்ட நிரல்களின்/ நிரல் கூறுகளின் நடவடிக்கைகள் முறைப்படுத்தப்படுகின்றன.
MUX : மக்ஸ் : 'Multiplexor என்ற ஆங்கிலச் சொல்லின் சுருக்கம்.
. mv : . எம்வி : ஒர் இணைய தள முகவரி மாலத் தீவுகளைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.
MVC architecture : எம்விசி கட்டுமானம்.
MVT : எம்விடீ : ஒரு மாறியல் எண்ணிக்கைப் பணிகளுடன் கூடிய பன்முகச் செயல்முறைப் . mw
977
. mz
படுத்துதல் என்று பொருள்படும் "Multi programming with a variable number of tasks" என்ற ஆங்கிலச் சொற்றொடரின் சுருக்கம். இதனைப் "பல தொல்லைச் செயல்படுத்துதல்" என்றும் வேடிக்கையாகக் கூறுவர்.
. mW : . எம்டபிள்யூ : ஒர் இணைய தள முகவரி மாலாவி நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.
. mx : . எம்எக்ஸ் : ஒர் இணைய தள முகவரி மெக்ஸிகோ நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.
. my : . எம்ஒய் : ஒர் இணைய தள முகவரி மலேசியா நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப் பெயர். -
my briefcase : என் கைப்பெட்டி : விண்டோஸ் 95 மற்றும் விண்டோஸ் என்டி 4. 0-வுக்கு கோப்பு-ஒருங்கிணைப்பு பயன்பாடுகளைப் பயன்படுத்தும் மேசைக் கணினி பிம்பம்.
My Computer : என் கணினி. விண்டோஸ் 95/98 இயக்கமுறைமையில் முகப்புத்திரையில் இருக்கும் ஒரு கோப்புறை.
My Documents : என் ஆவணங்கள். விண்டோஸ் 95/98 இயக்க முறைமையில் முன்னியல்பாய் இருக்கும் ஒரு கோப்புறை.
mylar : மைலார் : காந்த நாடா போன்ற தகவல் ஊடகத்திற்கு ஒர் ஆதாரமாகப் பயன்படுத்தப்படும் பாலிஸ்டர் படலத்தின் வணிகப் பெயர்.
MYOB : எம்யோப் : உன் வேலையைப் பார் எனப் பொருள்படும் Mind Your Own Business என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். மின்னஞ்சல் மற்றும் செய்திக் குழுக்களில் பயன்படுத்தப்படுவது.
my two cents : என் பங்களிப்பு : மை டு சென்ட்ஸ் : செய்திக் குழுக் கட்டுரைகளிலும் அவ்வப்போது மின்னஞ்சல் செய்திகளிலும் அஞ்சல் பட்டியலிலும் பயன்படுத்தப்படும் ஒரு தொடர். குறிப்பிட்ட செய்தி, நடந்து கொண்டிருக்கும் விவாதத்தில் எழுத்தாளரின் பங்களிப்பு என்பதைக் குறிப்பிடுவது.
. mz : . எம்இஸட் : ஒர் இணைய தள முகவரி மொஸாம்பிக் நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.