உள்ளடக்கத்துக்குச் செல்

கணினி களஞ்சியப் பேரகராதி-1./T

விக்கிமூலம் இலிருந்து
T

T1 or T-1 : டீ 1 அல்லது டீ-1 : வினாடிக்கு 1. 544 மெகாபிட் (மீமிகு துண்மி) அல்லது 24 குரல் தடங்களைக் கையாளவல்ல ஒரு டீ சுமப்பி. குரல் அழைப்புகளைச் சுமந்து செல்ல, ஏடீ&டீ நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டது. இந்த உயர் அலைக்கற்றைத் தொலைபேசி இணைப்பில் உரைகளையும் படிமங்களையும் அனுப்பவும் பெறவும் முடிந்தது. டீ1 இணைப்புகளை பெரும்பாலும் மிகப்பெரிய நிறுவனங்கள் இணையத் தொடர்புக்காகப் பயன்படுத்திக்கொள்கின்றன.

T2 or T-2 : டீ2 அல்லது டீ-2 : வினாடிக்கு 6. 312 மெகாபிட் அல்லது 96 குரல் தடங்களைக் கையாளவல்ல ஒரு டீ-சுமப்பி.

T3 or T-3 : டீ3 அல்லது டீ-3 : வினாடிக்கு 44. 736 மெகாபிட் அல்லது 672 குரல் தடங்களைக் கையாளவல்ல ஒரு டீ-சுமப்பி.

T4 or T-4 : டீ4 அல்லது டீ-4 : வினாடிக்கு 274. 176 மெகாபிட் அல்லது 4, 032 குரல் தடங்களைக் கையாளவல்ல டீ-சுமப்பி.

tab : நிறுத்துநிலை, பட்டி அட்டவணை, அட்டவணைப் பத்தி தாவல் : Terminal Anchor Block என்பதன் குறும்பெயர்.

tabbing : நிறுத்தம் : ஒளிக் காட்சித்திரையிலோ அல்லது அச்சுப்பொறியின் அச்சிடும் முனையிலோ ஒரு குறிப்பிட்ட பத்தியில் சுட்டியை (கர்சரை) நகர்த்துதல்.

tab character : நிறுத்தநிலை எழுத்து : அடுத்த நிறுத்தத்திற்குப் போவதைக் குறிப்பிடும் ஒரு ஆவணத்தில் உள்ள கட்டுப்பாட்டு எழுத்து.

tab deimited : நிறுத்த நிலைக் குறியீடு : புலங்களுக்கிடையில் விலக்கிகளாக நிறுத்து எழுத்துகளைப் பயன்படுத்தி அமைக்கப்படும் சொல்கோப்புப் படிவம். காற்புள்ளியால் வரையறை செய்யப்படும் கோப்புகளைப் போலல்லாது, எண்ணெழுத்துத் தரவுகளில் மேற்கோள் குறிகள் இருப்பதில்லை.

tab group : நிறுத்த குழு.

tab intervel : நிறுத்த இடைவெளி.

tab key : நிறுத்தல் விசை : அடுத்த நிறுத்துமிடத்திற்கு சுட்டியை நகர்த்தும் விசைப் பலகையின் விசை. table:பட்டியல்;அட்டவணை:உடனடி பார்வைக்குத் தயாரான வடிவில் தரவுகளைத் தொகுத்தல். தொடர்ச்சியான இருப்பகங்களில் தரவு சேமிக்கப்படுகின்றன. நெடுவரிசை கிடைவரிசை வடிவில் எளிதில் நுழைப் பதற்கேற்ப எழுதப்படுகின்றன. ஒரு குறிப்பிட்ட தரவுவைப் பெறக்கூடிய இடத்தைக் கண்டறிய நெடுவரிசை,கிடைவரிசைகளின் கலப்பு உதவுகிறது.

table,addition:கூட்டல் அட்டவணை.

table,datasheet:தரவுத் தாள் அட்டவணை.

table,decision:தீர்வுகாண் அட்டவணை.

table design:அட்டவணை வடிவமைப்பு.

table file:அட்டவணைக் கோப்பு.

table look up:பட்டியல் பார்வை;அட்டவணை நோக்கல்: ஒரு பட்டியலில் தெரிந்த மதிப்புகளைக் கொண்டு தெரியாத மதிப்பைக் கண்டறியும் நடைமுறை.

tablet:வரைவு எண்ணாக்கி:கணினியில் பயன்படுத்துவதற்காக வரைகலைகளையும்,படத்தரவுகளையும் மாற்றித்தரும் உள்ளீட்டுச் சாதனம்.

table view:பட்டியல் பார்வை:வரிசைகள்,பதிவேடுகளையோ அல்லது பலவகைப்பட்ட பொருள்களையோ திரையில் நகர்த்துதல்.

tabular:அட்டவணை வடிவு.

tabular form:அட்டவணை வடிவம்:அச்சிடப்பட்ட வெளியீட்டுக்கு பட்டியல் பார்வை போன்றது.

tabulate:அட்டவணையிடு:1. கூட்டல்களை அச்சிடு. 2.தரவுகளை பட்டியல் வடிவாக்கு.

tabulating Equipment:அட்டவணையிடும் கருவி:துளையிட்ட அட்டை தரவு செயலாக்க எந்திரங்கள்,விளக்கிகள்,மறு படியெடுப்பிகள்,கணிப்பிகள் மற்றும் பட்டியலிடுவிகள் போன்றவை இதில் அடங்கும்.

tabulator:அட்டவணையாக்கி:மொத்த எண்ணிக்கைகளைக் காட்டி, அச்சிடும்,துளையிட்ட அட்டை கணக்கீட்டு எந்திரம்.

tab setting:தத்தல் அமைப்புகள்.

tabulation:அட்டவணையிடல்;பட்டியலிடல்.

tabulation character:அட்டவணைப்படுத்தும் உரு.

tabulator clear key:தத்தல் நீக்கு; அட்டவணையாக்குத் திறவு. tabulator key:அட்டவணையாக்குத் திறவு.

tabulator mechanism:அட்டவணையாக்க முறைமை.;;;

tabulator set key:அட்டவணை நிறுவுச் சாவி.

tabulator setting:அட்டவனை அமைப்பு.

tabulator stop:அட்டவணை நிறுத்தம்.

TACACS:டக்காக்ஸ்:முனைய அணுகல் கட்டுப்படுத்தி அணுகல் கட்டுப்பாட்டு முறைமை என்று பொருள்படும் Terminal Access Controller Access Control Systemஎன்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். அனுமதிக்கப்பட்ட பயனாளர்கள் கொண்ட,தரவுத் தளம் சேமிக்கப்பட்டுள்ள, ஓர் மையப்படுத்தப்பட்ட ஒற்றை வழங்கனில் பயனாளர்கள் நுழைவதற் கான ஒரு பிணைய அணுகு நுட்பம். பயனாளரின் அடையாளத்தை அணுகு வழங்கன் உறுப்படுத்தியபின்,புகு பதிகைத் தரவுவை பயனாளர் நாடிய தரவுத்தள வழங்கனுக்கு அனுப்பி வைக்கும்.

TAF:முனைய அணுகு வசதி:Terminals Access Facility என்பதன் குறும்பெயர்.

tag:அடையாள ஒட்டு;குறி ஒட்டு:ஆணையின் முகவரியைப் பாதிக்கும் பட்டியல் பதிவெண்ணைக் கொண்டு செல்லும் நிரலின் பகுதி.

tag along sort:ஒட்டோடுகூடிய வரிசையாக்கம்.

tag field:ஒட்டுப் புலம்.

tag file:ஒட்டுக் கோப்பு.

tag sort:அடையாள ஒட்டு:பிரிக்கும் நடைமுறை.சரியான வரிசையை உண்டாக்க முக்கிய புலங்கள் முதலில் பிரிக்கப்படும். பின்னர் தரவு பதிவேடுகள் அந்த வரிசையில் வைக்கப்படும்.

tag switching:ஒட்டுஇணைப்பித்தல்;குறிஇணைப்பாக்கம்:திசை வித்தலையும்(routing),இணைப்பித்தலையும்(switching)ஒருங்கிணைத்து சிஸ்கோ சிஸ்டம்ஸ் நிறுவனம் உருவாக்கிய,ஒரு பல்லடுக்கு இணைய இணைப்பாக்கத் தொழில் நுட்பம்.

tail:வால்:ஒரு பட்டியலின் கடைசிப்பகுதியைக் கண்டு பிடிக்கும் சிறப்புத் தரவு பொருள்.

tail form:வால் படிவம்.

tail frame:வால் சட்டம்.

tailing:இறுதி காணல். tailor made : சிறப்பாகச் செய்யப் பட்ட : ஒரு குறிப்பிட்ட பணி, வணிகம் அல்லது வகையான மக்களுக்காக எழுதப்பட்ட ஒரு நிரல் தொடரை இது குறிக்கிறது. ஒரு தனிப்பட்ட வாடிக்கையாளர் இத்தகைய நிரல் தொடரைக் கேட்பார் அல்லது யாருக்கு வேண்டுமானாலும் விற்கப்படலாம்.

talk : டாக் (பேசு;பேச்சு) : ஒரு யூனிக்ஸ் கட்டளை. இணையத்தில் ஒர் ஒத்திசைவு அரட்டைக்கான கோரிக்கையை உருவாக்கும். talk என்னும் சொல்லைத் தொடர்ந்து இன்னொரு பயனாளரின் பெயரும் முகவரியும் தரப்பட வேண்டும்.

talker : டாக்கர் (பேச்சாளி) : இணைய அடிப்படையிலான ஒத்திசைவுத் தரவு தொடர்பு நுட்பம். பெரும்பாலும் பல் பயனாளர் அரட்டைச் செயல் பாடுகளுக்குப் பயன்படுத்தப் படுகிறது. வெவ்வேறு அறைகளில், வெவ்வேறு கருத்துகளைப்பற்றி அரட்டையில் ஈடுபடுவதற்கென கட்டளைகள் உள்ளன. நிகழ்நேரத்தில் பயனாளர்கள் தமக்குள்ளே உரை வடிவில் கருத்துகளைப் பரிமாறிக் கொள்ள முடியும்.

talk. newsgroups : டாக். நியூஸ் குரூப்ஸ் : டாக் படிநிலையிலுள்ள யூஸ்நெட் செய்திக்குழுக்கள். talk. என்னும் முன்னொட்டினைக் கொண்டிருக் கும். விவாதத்துக்கிடமான தலைப்புகளில் வாதங்கள், கலந்துரையாடல்கள் நடைபெறும். ஏழு யூஸ்நெட் செய்திக்குழு படிநிலைகளுள் ஒன்று. பிற ஆறு : comp., misc., news., rec., Sci., SOC.

take over : ஏற்றல்;மேற்கொள்ளல்.

take up spool : ஏற்புக் கண்டு.

talking computer : பேசும்கணினி : பேச்சு பிரித்தறியும் கருவியைப் பயன்படுத்தி பேச்சை உருவாக்கும் கணினி அமைப்பு.

tandem computers : தொடர் இணைப்புக் கணினி : இரண்டு கணினிகள் இணைக்கப்பட்டு ஒரே நேரத்தில் ஒரே சிக்கலுக்காகப் பணியாற்றுவது.

tandem processors : தொடரிணைப்புச் செயலகங்கள் : ஒரு பல் செயலகச் சூழ்நிலையில் ஒன்றோடொன்று இணைந்துள்ள இரண்டு செயலகங்கள்.

tandy corporation : டேண்டி நிறுமம் : நுண்கணினி அமைப்புகளின் உற்பத்தியாளரான ரேடியோஷாக் நிறுவனத்தின் தாய் நிறுவனம்.

tangent : தொடுவரை. tangent point : தொடுபுள்ளி.

tangible benefit : மதிப்பிடக் கூடிய மிகுபலன் : ஒரு குறிப்பிட்ட பண மதிப்பைக் கூறக்கூடிய மிகுபலன்.

TANSTAAFL : டான்ஸ்டாஃபல் : இலவசப் பகல்விருந்து என்பது போன்று எதுவுமில்லை என்று பொருள்படும் There ain't no such thing as a free lunch என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். இணையத்தில் மின்னஞ்சல் அரட்டை, அஞ்சல் பட்டியல், செய்திக் குழுக்கள் மற்றும் பிற நிகழ்நிலை மன்றங்களில் பயன்படுத்தப்படும் சொல்.

tap : தட்டு : செய்தித் தொடர்புகளில், குறும்பரப்புப் பிணையத்தில் முக்கிய அனுப்பும் ஊடகத்துடன் ஏற்படுத்தப்படும் பிணைப்பு.

tape : நாடா : தரவு உள்ளிட்டு சேமிப்பு அல்லது வெளியீட்டுக்குப் பயன்படுத்தப்படும் காந்த உணர்பொருள் பூசப்பட்ட அல்லது துளையிடப்பட்ட நீளமான பொருள். படிக்க அல்லது எழுதுவதற்கேற்ற ஒட்டத்திற்கு வசதியாக வரிசை முறையில் நாடாவின் குறுக்கே பல வழித்தடங்களில் தரவு பதிவு செய்யப்படும்.

tape back-up unit : நாடா ஆதரவு அலகு : ஒரு வகை இரண்டாம் நிலை சேமிப்பகம். நிலைவட்டின் உள்ளடக்கங்களின் தனிப்படி எடுத்துவைக்கப் பயன்படும் நாடாப்பெட்டி.

tape cartridge : நாடாப் பேழை.

நாடாப் பேழை

tape cassette : நாடாப் பெட்டி : நுண்கணினி அமைப்புகளில் எண்முறை பதிவுக்காகப் பயன்படுத்தப்படும் வரிசைமுறை அணுகுசேமிப்பு ஊடகம்.

tape code : நாடாப் பதிவு முறை.

tape control : நாடாக் கட்டுப்பாடு.

tape deck : நாடா இயக்கி.

tape drive : நாடா இயக்ககம்.

tape dump : நாடா திணி : அறிக்கை வடிவில் அமைக்காமல் நாடா உள்ளடக்கங்களை அச்சுவடிவில் எடுப்பது. tape label : நாடா வில்லை : வழக்காமாக காந்தநாடா சுருணையில் உள்ள முதல் பதிவேடு. இதில் நாடாவில் எழுதப்பட்ட நாள், அடையாள எண் அல்லது பெயர் மற்றும் நாடாவில் உள்ள பதிவேடுகளின் எண் ஆகியவை இருக்கும்.

tape leader : நாடா முன்பகுதி : காந்த நாடாவின் முதல் சில மீட்டர்கள். அது அழிக்கப்படுவதற்கு வாய்ப்பு அதிகம் இருப்பதால் இவற்றைப் பயன்படுத்தி தரவு சேமிப்பதில்லை.

tape librarian : நாடா நூலகர் : கணினியில் அனைத்துக் கோப்பு களையும் பாதுகாப்பாக வைப்பதற்குப் பொறுப்பேற்றவர். காந்த நாடா வட்டுப் பெட்டிகளில் உள்ள நிரல் தொடர்கள் மற்றும் தரவுக் கோப்புகள், நுண்திரைப்பட மற்றும் துளையிட்ட அட்டைகள் ஆகியவற்றை இவர் பாதுகாப்பார். கோப்பு நூலகர், தரவு நூலகர் அல்லது பாதுகாவலர் என்றும் அழைக்கப்படுபவர்.

tape library : நாடா நூலகம் : காந்த நாடா கோப்பினை பாதுகாப்பான, சுற்றுப்புறக் கட்டுப்பாடுள்ள சூழ்நிலையில் வைத்திருக்கும் சிறப்பு அறை.

tape, magnetic : காந்த நாடா.

tape mark : நாடா அடையாளம் : ஒரு நாடா கோப்பின் இறுதி முனையைக் காட்டும் கட்டுப்பாட்டுக் குறியீடு.

tape operating system (TOS) : நாடா இயக்கச் செயல்முறை : காந்த நாடாவில் நிரல் தொடர்களைச் சேமித்து வைக்கும் இயக்கச் செயல்முறை.

tape punch : நாடா துளைப்பி.

tape reader : நாடா படிப்பி.

tape reader, paper : தாள் நாடா படிப்பி.

tape reel : நாடா சுருள்.

tape reproducer : நாடா படியெடுப்பி.

tape resident system : நாடா அமைப்பு இயக்கமைவு.

tapes : நாடாக்கள் : பாலியெஸ்டரை அடிப்பொருளாகக் கொண்டு ஃபெர்ரிக் அமிலத்தைப் பதிவு செய்யும் பரப்பாகக் கொண்டிருக்கும். நாடா சுருணைகள் 500 மீட்டர் நாடாக்களை வைத்திருக்கும். இதில் 100 மீமிகு எட்டியல் அல்லது மேற்பட்ட சேமிப்புத் திறனிருக்கும்.

tape spool : நாடா சுருள்;நாடா கண்டு.

tape station : நாடா இயக்ககம்;நாடா நிலையம். tape-to card converter : நாடாவிலிருந்து அட்டைக்கு மாற்றி : காகித நாடா அல்லது காந்த நாடாவிலிருந்து துளையிட்ட அட்டைகளுக்குத் தகவலை மாற்றி அனுப்பும் சாதனம். பொதுவாக இது அணைமுகமாகவே செயலாற்றும்.

tape transport : நாடா அனுப்புப் பொறி : நாடா இயக்கியின் எந்திரப் பகுதி.

tape tree : நாடா மரம் : யூஸ் நெட் இசைச்செய்திக் குழுக்களிலும், அஞ்சல் பட்டியல்களிலும் பயன்படுத்தப்படுகின்ற கேட்பொலி நாடா வினி யோகத்துக்கான ஒரு வழிமுறை. இந்த முறையில், பதிவு செய்யப்பட்ட ஒரு பாடல் பல்வேறு கிளைப்பயனாளர்களுக்கு அனுப்பப்படும். அவர்கள் அதனை பிற பயனாளர்களுக்கு அனுப்பி வைப்பர்.

tape unit : நாடா அலகு.

tape verifier, paper : தாள் நாடா சரி பார்ப்பி.

tape volume : நாடா தொகுதி.

tape width : நாடா அகலம்.

ΤΑΡΙ : டேப்பி;டிஏபீஐ : தொலைபேசிப் பயன்பாட்டு நிரலாக்க இடைமுகம் என்று பொருள்படும் Telephony Application Programming Interfaceஎன்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். விண்டோஸ் திறந்த நிலைமுறை மைக் கட்டுமானத்தில் (WOSA-Windows Open Systems Architecture) ஒரு நிரலாக்க இடைமுகம். விண்டோஸின் கிளையன் பயன்பாடுகள் ஒரு வழங்கனின் குரல்வழிச் சேவைகளை அனுகுவதற்கு உதவுகிறது. சொந்தக் கணினிகளுக்கும், தொலை பேசிக் கருவிக்கும் இடையே ஊடு செயல்பாட்டை (Interoperability) டேப்பி வழங்குகிறது.

. tar : . டார் : டார் நிரல் மூலம் உருவாக்கப்பட்ட இறுக்கப்படாத வடிவமைப்பில் உள்ள காப்பக கோப்பினை அடையாளங்காட்டும் வகைப்பெயர்.

tar : டார் : கோப்புகளை ஆவணப்படுத்தி பாதுகாப்பதற்கான யூனிக்ஸ் யூட்டிலிட்டி.'compress'என்ற சொல்லுடன் சேர்த்துப் பயன்படுத்துகிறது.

tar1 : டார்1 : நாடாக் காப்பகம் (Tap Archive) என்பதன் சுருக்கம். யூனிக்ஸில் உள்ள ஒரு பயன்கூறு. பயனாளர் விரும்பினால் பல்வேறு கோப்புகளை ஒன்றாகச் சேர்த்து ஒரே கோப்பாக வைத்துக்கொள்ள இது உதவுகிறது. அந்த ஒற்றைக் கோப்பு . tar என்னும் வகைப் பெயரைக் கொண்டிருக்கும்.PKZIP போல, tar கட்டளை கோப்புகளை இறுக்கிச் சுருக்குவதில்லை. எனவே tar கோப்புகளை gzip மூலம் இறுக்கிச் சுருக்க முடியும். இறுக்கிய கோப்புகள் . tar. gz என்னும் வகைப் பெயரைக் கொண்டிருக்கும்.

tar2 : டார்2 : டார் பயன்கூறு மூலம் ஒரு கோப்புத் தொகுதியை ஒற்றைக் கோப்பாக மாற்றுதல்.

target : இலக்கு : கோப்பு நகல் பணியில், இலக்கு என்பது நக லெடுத்தது. கோப்புகளை வாங்குகின்ற வட்டு, விவரப்பட்டியல் அல்லது நாடா.

target code (or) object code : இலக்குக் குறிமுறை.

target computer : இலக்கு கணினி;ஒரு நிரல் தொடர் ஏற்றப்பட்டு ஒட்டப்படும் கணினி.

target data set : இலக்குத் தரவு அமைவு :

target directory : இலக்குத் தகைவுத் தொகுப்பு;இலக்கு அடைவு : தரவு அனுப்பப்படுகின்ற விவரப்பட்டியல்.

target disk : இலக்கு வட்டு : நிரல் தொடர் அல்லது வட்டு நகலெடுக்கப்படும் வட்டு.

target drive : இலக்கு இயக்கி : தரவுகள் பதிவுசெய்யப்படும் வட்டு அல்லது நாடாவைக் கொண்ட இயக்கி.

target language : இலக்கு மொழி : வேறு ஒரு மொழியில் சரியாக மொழிபெயர்க்கப்படவேண்டிய மொழி.

target path : இலக்கு வழி.

target programme : இலக்கு நிரல் தொடர்.

target statement : இலக்குக் கட்டளை.

tariff : விலைப்பட்டியல்;கட்டண விகிதம் : செய்தித் தரவு தொடர்புகளில் இடம் பெறுகின்ற வெளியிடப்பட்ட விலைப்பட்டியல். ஒரு குறிப்பிட்ட கருவி, வசதி அல்லது தகவல் தொடர்பு பொது அமைவின் பணி ஆகியவற்றுக்கு இவ்வாறு விலை குறிப்பிடப்படுகின்றது.

task : பணிக் கடமை;பணிப் பொறுப்பு : கணினி சேமிப்பகத்தில் ஏற்றுதல் அல்லது நிரல் அமைத்தல் போன்ற குறிப்பிட்ட வேலையின் தன்மை.

task bar : பணிப்பட்டை : விண் டோஸ் 95/98/மீ/என்டீ/2000 முறைமைகளில் கணினித் திரையின் அடிப்பாகத்தில் தோற்ற மளிக்கும் வரைகலைக் கருவிப் பட்டை. இயக்கத்திலிருக்கும் பல்வேறு பயன்பாடுகளை சின்னமாக்கி பணிப்பட்டையில் வைத்துக் கொண்டு தேவை யானதை மட்டும் செயல்படுத்தலாம். தொடங்கு (Start) பொத்தானும், தேதி, நேரம் போன்ற விவரங்களும் இதில் உண்டு.

taskbar properties : பணிப்பட்டைப் பண்புகள்.

taskbar options : பணிப்பட்டை விருப்பத் தேர்வுகள்.

task button : பணிப்பொத்தான் : விண்டோஸ் இயக்க முறைமையில் ஒரு பயன்பாடு இயங்கிக் கொண்டிருக்கும்போது அதற்குரிய ஒரு பொத்தான் பணிப் பட்டையில் தோற்றமளிக்கும். இவ்வாறு தோற்றமளிக்கும் பொத்தான்கள்மீது சொடுக்கி, தேவையான பயன்பாட்டில் பணிபுரியலாம்.

task despatcher : பணிப் பொறுப்பு செலுத்தி.

task dispatcher : பணிச்செலுத்தி.

task list : பணிக்கடமைப் பட்டியல் : ஒருவர் இயக்குகின்ற அனைத்து பயன்பாடுகளும் காட்டி, அவைகளுக்கிடையில் பிரித்தளிக்க உதவும் ஒரு "விண்டோ" பணிக்கடமை பணிப்பட்டியலைத் திறக்க வேண்டுமென்றால் "switch to"என்பதை கட்டுப்பாட்டுப் பட்டியலிலிருந்து தேர்வுசெய்யவேண்டும்.

task management : பணி மேலாண்மை : ஒரே நேரத்தில் கணினிக்குள் ஒன்று அல்லது மேற்பட்ட நிரல்தொடர்களை (பணிகளை) ஓட்டுவதைக் கட்டுப்படுத்துகின்ற இயக்க அமைப்பின் பகுதி.

task panel : பணிப்பொறுப்புச் சட்டம்;பணிச் சட்டம்.

task queue : பணி வரிசை.

task swapping : பணிப்பொறுப்பு இடமாற்று : இரண்டு பயன்பாடு களுக்கிடையில் பிரித்தளித்தல். நடப்பிலுள்ள ஒடும் நிரல்தொடரில் இருந்து வட்டுக்கோ அல்லது பிற அதிவேக சேமிப்பக சாதனத்திற்கோ (துணை நினைவகம் ஈ. எம். எஸ் போன்றவை) மாற்றிவிட்டு அந்த இடத்தில் வேறொரு நிரல் தொடரை ஏற்றுதல்.

task switching : பணி பிரித்தளித்தல் : தீவிரமான பயன்பாடுகளுக்கு இடையே பிரித்தளித்தல்.

. tc : . டீசி : ஒர் இணைய தள முகவரி துர்க்ஸ்-கைக்கோஸ் தீவுகளைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

T-carrier : டீ-சுமப்பி : ஒரு பொதுச் சுமப்பி வழங்குகின்ற தொலைதூர இலக்கமுறைத் தகவல் தொடர்புத் தடம். இரு முனைகளிலுமுள்ள ஒன்று சேர்ப்பிகள் பல்வேறு குரல் தடங்களை ஒன்றிணைத்து இலக்கமுறைத் தரவுத் தாரைகளாய் (Digital Data stream) அனுப்பி வைக்கின்றன. பெறு முனையில் குரல் தடங்கள் தனித்தனியே பிரிக்கப்படுகின்றன. 1993ஆம் ஆண்டில் ஏடி&டி நிறுவனம் டி-சுமப்பி சேவையை அறிமுகப்படுத்தியது. சுமந்து செல்லும் தட எண்ணிக்கையைப் பொறுத்து பல்வேறு நிலைகள் உள்ளன. டீ1, டீ2, டீ3, டீ4 ஆகியவை உண்டு. குரல் தகவல் தொடர்பு தவிர இணைய இணைப்புக்கும் டீ சுமப்பிகள் பயன்படுகின்றன.

TcL/Tk : டீசிஎல்/டீகே : கருவிக் கட்டளைமொழி/கருவித் தொகுதி எனப் பொருள்படும் Tool Command Language/Tool Kit என்பதன் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஒரு உரை நிரல் மொழியும் (TCL) , ஒரு வரை கலைப் பயனாளர் இடைமுகக்கருவித் தொகுதியும் (TK) இணைந்த ஒரு நிரலாக்க அமைப்பு. டீசிஎல் மொழி ஊடாடு நிரல்களுக்கும், உரைத் தொகுப்பான்களுக்கும் பிழை நீக்கிகளுக்கும், செயல்தளத்துக்கும் கட்டளைகளை வழங்க முடியும். அவை சிக்கலான தரவுக் கட்டமைப்புகளை உரை நிரல்களில் உட்செருகுகிறது.

TCP : டீசிபீ : பரப்புகைக் கட்டுப்பாட்டு நெறிமுறை என்று பொருள்படும் Transmission Contol Protocol என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். டீசிபீ/ஐபீ நெறிமுறையில் உள்ளிணைந்தது. தரவலை சிறுசிறு பொதிகளாக்கி, ஐபீ மூலமாக அனுப்பி வைக்கிறது. மறு முனையிலிருந்து ஐபீ மூலம் பெறப்படும் தரவுப் பொதிகளைச் சரிபார்த்து ஒன்றுசேர்த்து முழுத் தரவுவை வடிவமைக்கிறது. ஐஎஸ்ஓ/ஓஎஸ்ஐ அடுக்குகளில் போக்குவரத்து அடுக்கில் டீசிபீ செயல்படுகிறது.

TCP/IP : டீசிபீ/ஐபீ : பரப்புகைக் கட்டுப்பாட்டு நெறிமுறை/இணைய நெறிமுறை என்று பொருள்படும் Transmission. Control Protocol/Internet Protocolஎன்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். இரு கணினிகளுக்கிடையேயான தகவல் தொடர்புக்கென அமெரிக்கப் பாதுகாப்புத் துறையினர் உருவாக்கிய நெறிமுறை. யூனிக்ஸ் இயக்கமுறையின் அங்கமாக உருவாக்கப்பட்டது. இன்றைக்கு, இணையம் உட்பட பிணையங்களுக்குள்ளே தகவல் பரிமாற்றத்துக்கான, ஏற்றுக் கொள்ளப்பட்ட நெறி முறையாய் நிலைபெற்று விட்டது.

ΤCΡ/ΙΡ Stack : டீசிபீ|ஐபீ அடுக்கு : டீசிபீ/ஐபீ நெறி முறைகளின் தொகுப்பு.

. td : . டீடி : ஒர் இணைய தள முகவரி சாட் நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

tear-off : பிய்த்தெடு;கிழித்தெடு : வரைகலைப் பயனாளர் இடை முகத்தில் (GUI), திரையில் தோன்றும் ஒர் உருப்படியை இழுத்துச் சென்று பயனாளர் விரும்பும் இடத்தில் வைத்துக் கொள்ளும் வசதி உண்டு. எடுத்துக்காட்டாக, வரைகலைப் பயன்பாடுகள் பலவற்றிலும் பட்டிகள், கருவிப் பெட்டிகள் போன்றவற்றை இழுத்துச்சென்று வேறிடத்தில் வைத்துக் கொள்ளும் வசதி உள்ளது.

tear-off menu : கிழித்து வெளியேறும் பட்டி : அதன் முதன்மை இடத்திலிருந்து வேறொரு பகுதிக்கு மாற்றி அனுப்பி நகர்த்தக்கூடிய திரை மீதுள்ள பட்டி அல்லது வண்ணத் தட்டு.

techie : நுட்பி, நுட்பர் : தொழில் நுட்பம் தெரிந்த நபர். பயனாளர் பணியாற்றும்போது ஏதேனும் சிக்கல் ஏற்பட்டாலோ, ஏதேனும் தொழில்நுட்பச் சிக்கலைப் புரிந்துகொள்ள முடியாமல் போனாலோ, உடனடியாகத் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறக்கூடிய நபர். நுட்பர் ஒரு பொறியாளராக இருக்கலாம் அல்லது ஒரு தொழில்நுட்பாளராக இருக்கலாம். ஆனால், பொறியாளர் அனைவரும் நுட்பராகி விடமுடியாது.

technical analysis package : தொழில் நுட்ப ஆய்வுத் தொகுப்பு : பங்குச் சந்தையில் வாங்கவும், விற்கவும் சிறந்த நேரம் எது என்பதை முதலீட் டாளர்கள் முடிவு செய்ய உதவும் நிரல் தொடர். மாறும் சராசரிகள் வரைபடமாயமைத்தும், கூட்டியும், வணிக அளவுப் போக்குகளை வரைந்தும் பிற ஆய்வுப் பணிகளைச் செய்தும் முதலீட்டாளர்க்கு உதவுகிறது.

technical interview : தொழில் நுட்ப நேர்காணல். technical support : தொழில்நுட்ப உதவி.

technical test : தொழில் நுட்பச்சோதனை.

technical writer : தொழில்நுட்ப எழுத்தாளர் : கணினி கருவிவசதி அல்லது அது தொடர்பான பணிகள், மற்றும் மென்பொருள் அல்லது தொழில் நுட்பப் புலங்கள் தொடர்பான திட்டங்கள், பயிற்சிக் கையேடுகள், குறிப்புக் கையேடுகள், நிரல் தொடரமைப்புக் கையேட்டு நூல்கள் மற்றும் அறிக்கைகள் ஆகியவற்றைத் தயாரிப்பவர்.

technique : நுணுக்கமுறை.

technology : தொழில்நுட்பம் : ஒரு பொருள் உருவாக்குவதற்காக அறிவு மற்றும் முறைகளைப் பயன்படுத்துதல்.

technology, information : தகவல் தொழில் நுட்பம்.

technology lab : தொழில் நுட்ப ஆய்வுக் கூடம்.

technology transfer : தொழில் நுட்ப மாற்றல் : இருக்கின்ற தொழில் நுட்பத்தை நடப்பு சிக்கல் அல்லது சூழ்நிலைக்குப் பயன்படுத்துதல்.

technophile : தொழில்நுட்ப ஆர்வலர் : வளர்ந்துவரும் தொழில்நுட்பத்தில் உற்சாகத்துடன் ஆர்வம் செலுத்தும் ஒருவர்.

tech writer : தொழில்நுட்ப எழுத்தாளர் : வன்பொருள் அல்லது மென்பொருளுக்கு ஆவண விவரம் எழுதுபவர்.

telco : டெல்கோ : தொலைபேசிக் குழுமம் எனப் பொருள்படும் Telephone Company என்பதன் சுருக்கச் சொல். பொதுவாக, இச்சொல் இணையச் சேவைகளை வழங்கும்

tele : தொலை : தொலை விலிருந்தோ அல்லது தொலைபேசி மூலமோ செய்யப்படும் இயக்கம்.

telecine : தொலைத் திரைப்படம்.

telecom;தொலைத் தொடர்பு.

tele-commerce : தொலைவணிகம்.

telecommuniting : தொலைத் தகவல் தொடர்பு கொள்ளுதல் : அலுவலகத்திலிருந்து வீட்டுக்குத் தொலைத் தகவல் தொடர்பு மூலம் வீட்டிலிருந்தே பணியாற்றுவது.

telecommunication : தொலைத் தகவல் தொடர்புகள்;தொலைத் தொடர்பு : தகவல் தொடர்புக் கம்பிகளின் வழியாக தரவுகளை மாற்றல்.

telecommunications channel : தொலைத் தகவல் தொடர்புத்தடம் : செய்தி அனுப்பும் இடத்தையும் பெறுபவரையும் இணைக்கும் தகவல் தொடர்புக் கட்டமைப் பின்பகுதி. தரவுவை அனுப்பவும், பெறவும் ஒரிடத்திலிருந்து வேறொரு இடத்திற்கு இணைக்கப் பயன்படும் கருவியும் இதில் அடக்கம்.

telecommunications control programme : தொலைத் தகவல் தொடர்பு கட்டுப்பாடு நிரல்தொடர் : தொலைத் தகவல் தொடர்புக் கட்டமைப்பில் கணினிகளுக்கும் முனையங்களுக்கும் இடையில் கட்டுப்பாட்டினைக் கவனித்துக்கொள்ளும் கணினி நிரல் தொடர்.

telecommunications controller : தொலைத் தகவல் தொடர்புக் கட்டுப்படுத்தி : ஒரு விவரதகவல் தொடர்பு இடைமுகச் சாதனம். (சிறப்பு நோக்க சிறு அல்லது நுண் கணினி) பல முனையங்களைக் கொண்ட தொலைத் தகவல் தொடர்புக் கட்டமைப்பை இது கட்டுப்படுத்தும்.

telecommunications monitors : தொலைத் தகவல் தொடர்பு திரையகம் : ஒரு தொலைத்தகவல் தொடர்புக் கட்டமைப்பின் கணினிகளுக்கும், முனையங்களுக்கும் கட்டுப்பாட்டைக் கவனிக்கும் கணினி நிரல் தொடர்கள்.

telecommunications processors : தொலைத் தகவல் தொடர்பு செயலகங்கள் : பல முனையங்களிடமிருந்து ஒரே நேரத்தில் தகவல்களை தகவல் தொடர்பு வழித்தடங்களுக்குக் கொண்டு செல்ல அனுமதிக்கும் பன்மையாக்கி கள், ஒருமுகப்படுத்திகள் மற்றும் தகவல் தொடர்புக் கட்டுப்படுத்திகள், கொத்துக் கட்டுப்படுத்திகள், பிழை கண்காணித்தல், சிக்கலறிதல், திருத்தல், குறிப்பேற்றம், குறிப்பேற்ற மின்மை, தகவல் சுருக்குதல், விவரக் குறியிடல், செய்திகளை மறு குறியீடு அமைத்தல், துறை பூசல் (port contention (36-A) ) இடைத்தடுப்பு (buffer storage) சேமிப்பகம் ஆகியவைகளுடன் செயற்கைக்கோள் மற்றும் பிற தகவல் தொடர்பு கட்டமைப்புகளுக்கு இடைமுகமாக இருத்தல் ஆகியவற்றையும் இவை செய்யும்.

telecommunications specialist : தொலைத் தகவல் தொடர்பு வல்லுநர் : தகவல் தொடர்பு கட்டமைப்புகளை வடிவமைப்பதற்குப் பொறுப்பேற்றுள்ளவர். telecommunity : தொலை சமுதாயம் : தொழில்நுட்ப ஏற்புடைத் தன்மைகள் இல்லாமல் தகவல் இலவசமாக அனுப்பி, பெறக்கூடிய சமுதாயம்.

teleconference : தொலை மாநாடு : தொலைத் தகவல் தொடர்பு மூலம் தொலைவான இடங்களில் உள்ளவர்களுடன் மின்னணு கூட்டம் நடத்துதல். நேருக்கு நேர் சந்தித்தல் மற்றும் பயணத்திற்கு மாற்றாகக் கருதப்படும் இத்தொலை மாநாடு இரு வழி ஒளி-ஒலி வசதியுடன் நடத்தப்படுகிறது. தகவல் மற்றும் தொலை நகலி செலுத்தம் ஆகியனவும் தேவைக்கேற்ப இடம் பெறும்.

telecoping : தொலை நகலெடுத்தல்;நீண்ட தூர நகலெடுத்தல்.

telecopy : தொலைபடி;தொலை நகல் குறிக்கவே பயன்படுத்தப்.

tele-education : தொலைக்கல்வி.

tele-entertainment : தொலை பொழுது போக்கு.

telegraph : தந்தி : ஏறக்குறைய ஒரு நொடிக்கு 150. துண்மிகள் வேகத்தில் அனுப்பும் குறைந்த வேக தகவல் தொடர்புச் சாதனம். மோர்ஸ் காலத்தில் இருந்து நீடித்து வருபவை குரல் உரையாடலை அனுப்ப முடியாது.

telehomecare : தொலையில்ல மருத்துவம்.

telemanagement : தொலை மேலாண்மை : ஒரு நிறுவனத்தின் தொலைபேசி அமைப்புகளின் மேலாண்மை.

tele marketing : தொலைச் சந்தையமைப்பு : தொலைபேசி மூலம் விற்பனை செய்தல்.

telematics : டெலிமாட்டிக்ஸ் : தொலைத் தகவல் தொடர்புகள் மற்றும் தானியங்கி தகவல் செயலாக்கத்தின் சங்கமம்.

telemedicine : தொலை மருத்துவம் : குறிப்பாக தொலைத் தகவல் தொடர்புகள் தொலைக்காட்சியைப் பயன்படுத்தி ஊடுகதிர் (a) அல்லது ஒரு நோயாளியின் நேரடி உருவப் படங்களை தொலைவில் உள்ள வல்லுநருக்கு அனுப்புவது.

telemedicine clinic : தொலை நிலை மருத்துவமனை.

telemeter : தொலை அளவி.

telemetry : தொலை அளவி : தொலை அளவி கருவிகளை மின்சாரம் அல்லது வானொலி மூலம் தகவல்களை அனுப்புதல். நிலவைச் சுற்றிவரும் ஒரு விண்கலத்தின் மூலம் தரையில் உள்ள ஒரு நிலையத்திற்குத் தரவு களை அளந்து அனுப்பலாம். telnet : டெல்நெட் தொலை இணைப்பு : டெல்நெட் நெறி முறையை நடைமுறைப் படுத்துகின்ற கிளையன் நிரல்.

telnet2 : டெல்நெட்2;தொலை இணைப்பு2  : டெல்நெட் நெறிமுறையைப் பயன்படுத்தி இணையத்தின் மூலமாகத் தொலைதூரக் கணினியை அணுகுதல்.

telnet3 : டெல்நெட்3;தொலை இணைப்பு3  : ஒர் இணையப் பயனாளர் இணையத்தில் பிணைந்துள்ள ஒரு தொலை தூரக் கணினியில் நுழைந்து, கட்டளைகளை இயக்க வகை செய்யும் நெறிமுறை. அக்கணினியுடன் நேரடியாக இணைக்கப்பட்ட, உரை அடிப்படையிலான ஒரு முனையம் போலவே செயல்பட முடியும். டெல்நெட், டீசிபீ/ஐபீ நெறிமுறைக் குடும்பத்தில் ஒர் அங்கம்.

telephone : தொலைபேசி.

telephone equipment : தொலைபேசிக் கருவி.

telephone exchange : தொலைபேசிப் பரிமாற்றம்/இணைப்பகம்.

telephony : தொலைபேசி முறை : ஒலியை மின் சமிக்கைகளாக மாற்றி, குழாய்கள் அல்லது வானொலி மூலம் அனுப்பி அவற்றை ஒலியாக மீண்டும் மாற்றி அனுப்புதல்.

telephony device : தொலைபேசிச் சாதனம் : ஒலி சமிக்கைகளை மின்சார சமிக்கைகளாக மாற்றி வேறிடத்துக்கு அனுப்பி, பெறுமிடத்தில் மின்சாரச் சமிக்கைகளை ஒலியாக மாற்றியமைக்கும் சாதனம்.

telephotography : தொலை ஒளிப்படவியல் : மின் தகவல் தொடர்பு வழித்தடங்களின் மூலம் ஒளிப்படங்களை அனுப்புதல். பொது தகவல் தொடர்பு அனுப்பும் நிறுவனங்கள் இவற்றை வழங்குகின்றன.

teleprinter : தொலை அச்சுப்பொறி, தொலை அச்சு : தானியங்கி அச்சிடும் சாதனம்.

teleprocessing : தொலை செயலாக்கம் : தொலைவில் உள்ள இடங்களுக்கும் தகவல் செயலாக்க மையத்திற்கும் மற்றும் இரண்டு கணினி அமைப்புகளுக்கும் இடையில் தொலைபேசிக் கம்பிகள் மூலம் தகவல்களை அனுப்புதல். தகவல் தொடர்புகள் மற்றும் தகவல் செயலாக்கக் கருவிகளை இணைத்துப் பயன்படுத்துவது.

telesoftware : தொலை மென்பொருள் : தொலைபேசிக் கம்பி அல்லது தொலைக்காட்சி மூலம் தொலைச் சொற்பகுதி சமிக்கையில் கணினி நிரல் தொடர்களை அனுப்புதல்.

teletext : தொலைவுரை : ஒரு வழி தகவல் தொடர்பு ஊடகம். சில வீடியோ டெக்ஸ்ட் சேவைகளில் பயன்படுத்துவது. ஒரே திரையளவில் சிறப்பு சுருக்கிய அளவில் தொலைக்காட்சித் தகவல்களைத் தொடர்ச்சியாக அனுப்பப் பயன்படுத்துபவர்கள் தங்களது திரையில் எந்தப் படத்தை பார்க்க விரும்புகிறார்களோ அதே படத்தை தங்கள் தொலைக்காட்சிப் பெட்டியில் மறு குறியீடமைத்துப் பெறலாம்.

teletype interface : தொலைத் தட்டச்சு இடைமுகம்.

teletype mode : தொலைத் தட்டச்சு முறை : தட்டச்சுப் பொறியில் தட்டச்சு செய்வது போல ஒரு நேரத்தில் ஒரு வரியில் வெளியீட்டை அனுப்புவது. இதன்பொருள் தகவல்கள் காட்டவோ, அச்சிடவோ செய் யும்போது ஒன்றையடுத்து இன்னொரு வரியாக தரவு காட்டப்படும் அல்லது அச்சிடப்படும்.

teietypewriter (TTY) : தொலைத் தட்டச்சுப் பொறி : டீ. டீ. ஒய். தொலைத் தட்டச்சு அலகு.

television receiver (TR) : தொலைக்காட்சி பெறும் பொறி : ஒளிபரப்பப் படும் தொலைக் காட்சி சமிக்கைகளை வானலை வாங்கி மூலம் பெறுகின்ற திறனுடைய வணிக தொலைக் காட்சிப் பெட்டி போன்ற ஒரு காட்சி சாதனம். வானொலி அலைவரிசை குறிப்பேற்றி (மாடுலேட்டர்) கள் இணைத்து காட்சிச் சாதனமாக பல நுண் கணினிகளில் பயன்படுத்தலாம்.

televoting : தொலைநிலை வாக்களிப்பு.

telex : தொலை எழுதி : மேற்கத்திய ஒன்றியத்தினால் அளிக்கப்படும் தந்திச் சேவை.

teller : வங்கிப் பணப் பொறுப்பாளர்.

telmet : தொலை இணைப்பு.

telpak : டெல்பாக் : இரண்டு அல்லது மேற்பட்ட இடங்களுக்குப் பொது தகவல் தொடர்புகளை எடுத்துச் செல்வதற்காக அகலப்பாட்டை வழித்தடங் களை வாடகைக்கு எடுத்து, அதன் மூலம் நடத்தப்படும் சேவை.

template : படிம அச்சு : 1. வடிவியல் (geometric) ஒட்டு வரை படக் குறியீடுகளை வரையப் பயன்படுத்தப்படும் குழைம (plastic) வழிகாட்டி, 2. கணினி வரைகலையில், பொதுவாகப் பயன்படுத்தப்படும் வடி வமைப்பிகள் அல்லது வடிவமைப்பு உதவிகளின் பகுதிகள். ஒருமுறை உருவாக்கப்பட்டால், மீண்டும் வரைவதற்குப் பதிலாக, அதையே மீண்டும் தேடி எடுக்க முடியும். 3. மென்பொருள் மேம்பாட்டில் நிரல் தொடர்களின் தொகுதியின் மூலம் வட்டில் சேமிக்கப்பட்டதை கணினிக்கு நிரலிட்டு விரிதாளில் உள்ள தகவல்கள் பற்றிய சில இயக்கங்களைச் செய்யுமாறு கூறுதல். சான்றாக, டெல்லிக்கு மேற்கே உள்ள வாடிக்கையாளர்களுக்கு 10 விழுக்காடு ரயில் கட்டணத்தைக் கூட்டுக என்பது.

template wizzard : வார்ப்புரு வழிகாட்டி.

temporary font : தற்காலிக எழுத்துரு : மென்பொருளாலோ அல்லது கையாலோ அச்சுப் பொறியில் மீண்டும் திருத்தி அமைக்கும்வரை அச்சுப்பொறியின் நினைவகத்தில் தங்கியிருக்கும் மென் அச்செழுத்து.

temporary password : தற்காலி நுழைசொல்.

temporary storage : தற்காலிக சேமிப்பகம் : நிரல் தொடரமைத்தலில், இடைக்கால முடிவுகளை சேமித்து வைப்பதற்கான சேமிக்கும் இடங்கள்.

ten key pad : பத்து விசை பட்டை : எண்களை எளிதாக நுழைக்க உதவும் 0 முதல் 9 வரை எண்களை தனித் தொகுதியாகக் கொண்ட விசை. கணிப்பி விசை அட்டை போன்றது.

ten's complement : பத்தின் கூட்டெண் : ஒரு குறிப்பிட்ட மதிப்பின் எதிரெண்ணைக் குறிப்பிடப் பயன்படுத்தப்படும் எண். எல்லா எண்களும் 9 ஆக உள்ள ஒவ்வொரு இலக்கத்திலிருந்தும் கழித்து அதனுடன் ஒன்றைச் சேர்த்து இந்த எண் கொண்டு வரப்படுகிறது. சான்றாக 654-ன் பத்தின் கூட்டெண்ணாக வருவது 346, 999 உடன் 346-ஐக் கழித்து அதனுடன் 1-ஐக் கூட்டி இந்த எண் கொண்டு வரப்படுகிறது.

tensile strength : இழுப்பு வலு.

tera : டெரா : ஒரு ட்ரில்லியனுக்கு மெட்ரிக் முன்னிணைப்புச் சொல். டி என்று சுருக்கி அழைக்கப்படுகிறது.

terabit : டெராபிட்;டெரா துண்மி : ஒரு டிரில்லியன் துண்மிகள். டிபி, டிபிட் அல்லது டெராபிட் என்றெல்லாம் அழைக்கப்படும்.

terabit storage : டெராபிட் சேமிப்பு : 12துண்மிகள் அளவில் 10 திறனுள்ள சேமிப்புச் சாதனங் களுக்குப் பயன்படுத்தப்படும் பொதுச்சொல்.

terabyte : டெராபைட்;டெரா எட்டியல் : 240 ' (2இன் 40 மடங்கு) அல்லது துல்லியமாக 1 009 511 627 776 எட்டியல்கள். அல்லது ஒராயிரம் மீமிகு எட்டியல்கள், ஒரு மில்லியன் மீமிகு எட்டியல்கள், ஒரு பில்லியன் கிலோ எட்டியல்கள் அல்லது ஒரு டிரில்லியன் எட்டியல்கள் என்று சொல்லலாம். ஒளி வட்டு பெரு சேமிப்பகச் சாதனங்களின் திறனை அளக்கப் பயன்படுகிறது.

teraflops : டெராஃபிளாப்ஸ் : மீத்திறன் கணினிகளின் வேகத்தை அளக்கும் அலகு. ஒரு வினாடியில் ஒரு டிரில்லியன் மிதவைப் புள்ளிக் கணக்கீடுகள் என்பதைக் குறிக்கும். ஒரு வினாடியில் எத்தனை டெராஃபிளாப்ஸ் எண்ணிக்கையிலான கணக்கீடுகளை ஒரு கணினி செய்ய முடியும் என்பதைக் கணக்கிட்டு அதன் வேகம் மதிப்பிடப்படுகிறது. 1 டிரில்லியன்-1000 பில்லியன் (1013).

terminal : முனையம்;முகப்பு : விசைப் பலகை காட்சி அல்லது விசைப் பலகை/அச்சுப் பொறிச் சாதனம். கணினியில் தகவல் களையும், நிரல் தொடர்களையும் உள்ளீடு செய்யவும், வெளி

முனையம்


யீட்டைப் பெறவும் இது பயன்படுகிறது.

terminal adapter : முனையத் தகவி.

terminal address card : முனைய முகவரி அட்டை.

terminal buffer : முனைய இடைநிலை நினைவகம்.

terminal component : முனைய அமைப்பி, முனையக் கூறு.

terminal configuration facility : முனைய உருவமைப்பு வசதி.

terminal emulation : முகப்பு போலச் செய்யப்படல்;முனையம் போன்ற : சில சிறப்புத் தயாரிப்பு கணினிகள் வேறொரு கணினியின் முகப்பு போலச் செயல்படும் சூழ்நிலை.

terminal emulator : முனைய முன் மாதிரி.

terminal entry : முனையப்பதிவு. terminal error : முனையப் பிழை : நிரல் தொடர் தொடர முடியாத அளவுக்கு கணிசமான விளைவுகளை ஏற்படுத்தும் பிழை.

terminal interrupt : முனையக் குறிக்கீடு.

terminal job : முனையப் பணி.

terminal mode : முனைய முறை : முனையத்தைப்போல நடக்குமாறு கணினியை செயல்படுத்தும் செயல்பாட்டு முறை. தட்டச்சு செய்யப்பட்ட விசைக் கோடுகளை அனுப்பவும், அனுப்பப்பட்ட தகவல்களைப் பெறவும் செய்கிறது.

terminal node : முனையக் கணு;முனையக் கரணை.

terminal port : முனையத் துறை.

terminal response : முனையப் பொறுப்பு முறை.

terminal security : முனையக் காப்பு.

terminal server : முனையப் பணியகம் : ஒரு கட்டமைப்பு அல்லது புரவலர் கணினியுடன் பலதரப்பட்ட முனையங்கள் இணைக்கப் பயன்படுத்தப் படும் கணினிக் கட்டுப்படுத்தி.

terminal session : முனைய அமர்வு : ஒரு முனையத்தில் ஒரு பயனாளர் செயலாற்றும் நேரம்.

terminal stand : முனைய நிறுத்தி;முனையத் தாங்கி : கணினி முகப்பை தாங்குவதற்கேற்ப வடிவமைக்கப்படும் மர அல்லது உலோகக் கட்டை.

terminal strip : முனையப் பட்டை : கம்பிகள் இணைக்கப்படும் திருகாணியின் தொகுதியைக் கொண்ட ஒட்டப்பட்ட பட்டை.

terminal symbol : முகப்புக் குறியீடு : செவ்வக வடிவ படக் குறியீடு, ஒரு செயல்முறையில் ஆரம்பநிலை மற்றும் முடிக்கும் நிலைகளைக் குறிப்பிடுகிறது.

terminal table : முனையப் பட்டிகை.

terminal transactions facility : முனையப் பரிமாற்று வசதி.

terminal user : முனையப் பயனளவு.

terminate : முடிவுற்ற.

termination : முடிவுறல்.

termination, abnormal : இயல்பிலா முடிப்பு.

terminator : முடிப்பி : ஒரு தொடர் அல்லது கட்டமைப்பின் கடைசி முனையில் உள்ள வெளிப்புறச் சாதனத்துடன் இணைக்கப்பட்ட வன்பொருள் பகுதி. terminator cap : முடிப்பிக் குமிழ் : ஓர் ஈதர்நெட் பாட்டையின் இரு முனைகளிலும் பொருத்தப்படும் தனிச்சிறப்பான இணைப்பி. இந்த இணைப்பிகளில் ஒன்றோ இரண்டுமோ இல்லாமல் போனால் ஈதர்நெட் பிணையம் செயல்படாது.

ternary : மும்மை;மூன்றாலான : 1. நிரலாக்கத்தில் ஒர் உறுப்பு மூன்று இயலும் மதிப்புகளில் ஒன்றைப் பெறும் பண்பியல்பு. 2. ஒரு நிபந்தனையில் மூன்று வெவ்வேறு நிலைகள். 3. அடியெண் 3 கொண்ட எண் முறைமை. (இரும, எண்ம, பதின்ம, பதினறும முறைகளைப்போல).

terrestrial link : தரைவழி இணைப்பு : தரையிலோ அல்லது அதன் அருகிலோ அல்லது அதற்கு அடியிலோ செல்லும் தகவல் தொடர்புக் கம்பி.

test : சோதனை : ஒரு நிரலைப் பல்வேறு கோணங்களில் பரி சோதித்தல். பல்வேறு உள்ளீட்டு மதிப்புகள் தந்து சரியாகச் செயல்படுகிறதா எனப் பரிசோதனை செய்தல்.

test automation software : சோதனைத் தானியங்கு மென்பொருள் : ஒரு மென்பொருள் பயன்பாட்டுத் தொகுப்பின் புதிய அல்லது திருத்திய பதிப்பைப் பரிசோதனை செய்வதற்கான அனைத்துச் செயல் முறைகளையும் ஒரு நிரல் மூலமே செய்து முடித்தல். சோதனையாளர் தரவேண்டிய உள்ளீடுகள் பிற கட்டளைகள் அனைத்தையும் சோதனைத் தானியங்கு மென்பொருளே செய்து முடிக்கும்.

test box : சோதனைப் பெட்டி.

test data : சோதனைத் தரவு : ஒரு குறிப்பிட்ட நிரல் தொடரின் இயக்கத்தை சோதனை செய்வதற்காக உருவாக்கப்பட்ட தரவு. ஒன்று அல்லது இரண்டு கையால் கூட்டபட்ட முடிவுகள் அல்லது தெரிந்த முடிவுகளுடன் சோதனைத் தரவு இணைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்ட நிரல் தொடர் செல்லத்தக்க தாக்கப்படும். சாதனைத் தரவுவாகப் பயன்படுத்தப்பட்ட தரவு செல்லாததாக இருக்கும்.

test driver : சோதனை இயக்கி : சோதனை தகவல் தொகுதிகளைத் திரட்டுவதில் வேறொரு நிரல் தொடரை இயக்கும் நிரல் தொடர்.

testing : சோதித்தல்;சோதனை செய்தல் : ஒரு நிரல் தொடரின் நடத்தையை மாதிரி தரவு தொகுதியின்மீது இயக்கி சோதனை செய்தல். இதில் தவறான நடத்தைக்கான அனைத்து வாய்ப்புகளையும் கண்டறியும் முயற்சியில், செல்லுகின்ற மற்றும் செல்லாத தகவல்களும் இதில் சேர்க்கப்படும்.

testing room;ஆய்வு அறை.

test message : சோதனைச் செய்தி.

test plan : சோதனைத் திட்டம் : எத்தகைய சோதனை நடத்தப்படும் என்பதைப் பொதுவாகக் குறிப்பிடுவது. இதில் சகிக்கப்படும் அளவுகளின் வரையறையும் உள்ளடங்கி இருக்கிறது.

test post : சோதனை அஞ்சல் : செய்தி எதுவுமில்லாத ஒரு செய்திக்குழுக் கட்டுரை. இணைப்பைச் சரி பார்க்க அனுப்பி வைக்கப்படுவது.

test programme : சோதனை செயல் முறை;சோதனை நிரல்.

test run : சோதனையோட்டம் : ஒரு நிரல் தொடர் சரியாக இயக்கப்படுகிறதா என்பதை சோதிப்பதற்கான ஒட்டம். சோதனை ஒட்டத்தின்போது, வெளியாகும் முடிவுகள் ஏற்கனவே உருவாக்கப்பட்ட முடிவுகளுடன் ஒப்பிடப்படும்.

TeX or TEX : டெக்ஸ் : கணிதவியலாளரும் கணினி அறிஞருமான டொனால்டு க்னத் (Donald Knuth) என்பவர் உருவாக்கிய ஒரு உரை வடிவமைப்பு மென்பொருள். ஆஸ்க்கி உரை உள்ளிட்டிலிருந்தே அறிவியல், கணித மற்றும் பிற தொழில் நுட்ப ஆவணங்களை உருவாக்க முடியும். யூனிக்ஸ், எம்எஸ் டாஸ், விண்டோஸ், ஆப்பிள் மேக் முறைமைகளுக்கான டெக்ஸ் இணையத்தில் இலவசமாகக் கிடைக்கிறது (ftp : //ftp. tex. ac. uk/tex-archiev/). சில கூடுதல் வசதிகளுடன் விற்பனைக்கும் கிடைக்கிறது. ${\pi}r^2$ என உள்ளீடு செய்தால் πr2 என்கிற வெளியீடு கிடைக்கும். டெக்ஸை குறுமங்கள் (macros) மூலம் விரி வாக்க முடியும். பல்வேறு வகையான பயன்பாடுகளுக்கென குறுங்கோப்புகள் கிடைக்கின்றன.

text : உரை : சொல்லப்பட வேண்டிய தகவலை விளக்கும் எழுத்துகள், எண்கள் மற்றும் சொற்கள், கோடுகள் மற்றும் குறியீடுகளைக் கொண்டது. வரைகலை (Graphics) க்கு எதிர்ச் சொல்.

text attribute : உரைப்பான்மை.

text area : உரைப்பகுதி.

text based : உரை சார்ந்த : எழுத்து சார்ந்த என்றும் சொல்லலாம். சொற்களையே மிகுதியாகக் கொண்ட,சில வரைகலை எழுத்துகளையும் கொண்ட திரைக்காட்சி. சான்றாக,80 பத்திகளின் 25 வரிசைகள்.

text body:உரை உடற்பகுதி.

text box:உரைப்பெட்டி:ஒரு வசனப் பெட்டியில் கட்டளையைச் செய்வதற்கு வேண்டிய தரவவைத் தட்டச்சு செய்யலாம். சொல் பெட்டி காலியாக இருக்கலாம் அல்லது வசனப் பெட்டி திறக்கும்போது சொற் களைக் கொண்டிருக்கலாம்.

text colour:உரை நிறம்.

text compression:உரை ஒடுக்கம்.

text control:உரைக் கட்டுப்பாடு.

text curson:உரைச் சுட்டி.

text data:உரை தரவு:ஆவணங்களில் பயன்படுத்தப்படும் சொல் தொடர்கள்,வாக்கியங்கள்,பத்திகள் மற்றும் பிற தரவு தொடர்ப் படிவங்கள்.

text editing:உரை பதிப்பு:மின்னணு முறையில் சேமிக்கப்பட்ட பொருளைச் சேர்த்தல்,மாற்றல் மற்றும் நீக்குதல் ஆகியவற்றை உள்ளடக்கிய பொதுச்சொல்.

text editor:உரைத்தொகுப்பி;ஏடு திருத்தி;நூல் திருத்தி;நூல் செப்பமாக்கி;சொல் தொகுப்பி;சொல் பதிப்பி.

text entry:உரைப்பதிவு:உரை உள்ளீடு விசைப்பலகை மூலம் உரைக்கான எழுத்துகளை உள்ளிடல்.

text field:உரைப்புலம்:எண்ணெழுத்து தரவுகளான பெயர் மற்றும் முகவரிகளைத் தாங்குகின்ற தரவுக் கட்டுமான அமைப்பு உரைப்புலத்தில் அதிகமான அல்லது எல்லையற்ற சொற்பகுதி தங்கியிருக்குமானால்,அது குறிப்புப் பகுதி என்று அழைக்கப்படலாம்.

text file:உரைக்கோப்பு:சொல்வடிவில் கூறப்பட்ட தரவலைக் கொண்டுள்ள கோப்பு.

text formating programme:உரைப் படிவ நிகழ்வு.

textile design:நெசவுத்துணி உருவரை.

text lables:உரைச் சிட்டைகள்.

text line:உரை வரி.

text lock:உரைப் பூட்டு.

text management:உரைப்பகுதி மேலாண்மை:உரைப்பகுதியை உருவாக்கி,சேமித்து,திரும்பப் பெறல். பலதரப்பட்ட அடிப்படையில் உரைப் பகுதிகளைத் தேடக்கூடிய,தேடிக்கொண்டு வரும் திறன்கள் என்பதை இது உணர்த்துகிறது. சொல் செயலகமும் உரைப்பகுதியை சமாளிக்கிறது என்றாலும் அதற்கு தேடிக்கொண்டு வரும் திறன்கள் குறைவாகவே இருக்கும்.

text mode : உரைப் பாங்கு : கணினித் திரையகத்தின் ஒரு வகைக் காட்சிப் பாங்கு. இந்தப் பாங்கில் எழுத்துகள், எண்கள், ஏனைய குறிகள் மட்டுமே திரையில் தோன்ற முடியும். வரைகலைப் படிமங்களைக் காட்ட முடியாது. அதுமட்டுமின்றி, வடிவமைக்கப்பட்ட எழுத்து வடிவங்களையும் (சாய்வெழுத்து (Italics), மேல்எழுத்து (superscript), கீழ்எழுத்து (subscript) காட்ட முடியாது. சுருக்கமாக, விசிவிக் (WYSIWYG-What You See Is What You Get) சாத்தியமில்லை எனலாம்.

text processing : உரை செயலாக்கம் : நிரல்தொடர் கட்டுப்பாட்டின் கீழுள்ள அகரவரிசை தரவுகளைக் கையாளுதல்.

text processor : உரை செயலாக்கி.

text revision : உரை மாற்றமைவு.

text segment : உரைப் பகுதி.

text streame : உரை பாய்வு.

text string search : உரைச்சரம் தேடல்.

text suppression : உரை அமுக்கம்.

text system : உரைப்பகுதி அமைப்பு : சொற்பகுதி தகவலைக் கையாள வன்பொருளையும் சிறப்பாக எழுதப்பட்ட மென்பொருளையும் தொகுத்தல்.

text transfer : உரை மாற்றல் : முகப்பிலிருந்து தூர கணினிக்கு உரைக் கோப்புகளை மாற்றும் முறை.

text to columns : நெடுக்கையாக்கு.

text-to-speech : எழுத்து ஒலி வடிவு : எழுத்திலிருந்து ஒலி வடிவம.

text transmission : உரை அனுப்பீடு.

text transparency : உரை ஒளிர்மை, சொல் புலப்பாடு.

textual scrolling information : சொல்லோட்டத் தகவல்.

texture : இழைவு இழைமம் : கணினி வரைகலையில், இரு பரிமாண அமைப்பினை முப்பரிமாண மேற்பரப்பின் சிக்கலான தோற்றத்தைத் தர பயன் படுத்துவது. இதில் கலவையை மாதிரியாக அமைத்தல், ஒவியங்கள் அல்லது எண்முறை ஒளிப்படங்களை அடிக்கடி பயன்படுத்துதல் ஆகியவற்றின் மூலமாக இல்லாமலேயே செய்யப்படுகிறது. முப்பரிமான தரவுத்தள அமைப்புகள் செய்யமுடியாத கலவையை படத் துணுக்குகள் சேர்க்கின்றன. ஒரு கணினி படத்தில் (pixel) படப்புள்ளிகளை இருப்பிடமான ஏற்பாட்டில் செய்யும் வேலையை துணி நெசவில் பாவு நூல் வார்ப்பு மற்றும் ஊடிழைகளுடன் ஒப்பிடப்படுவதுண்டு. ஆகவேதான் இச் சொல் உருவானது.

texture mapping : இழைப்பு விவரணையாக்கம் : கணினி வரைகலையில், ஒரு சிறப்பு மேற்பரப்பை உருவாக்குதல். இவற்றை நெறிமுறையுடன் அமைகக முடியும. ஒரு பொருளைச் சுற்றி துணை உருவத்தை மின்னணு முறையில் மேலமைப்பது.

text window : உரைச் சாளரம் : சில கணினி வரைகலை அமைப்புகளில் காட்சித்திரைகளில் காட்டப்படும் சொற்களின் பகுதி.

. tf : . டீ. எஃப் : ஒர் இணைய தள முகவரி தெற்கு ஃபிரான்ஸ் பிரதேசத்தைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

. tg : . டீஜி : ஒர் இணயை தள முகவரி டோகோ நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப் பெயர்.

TGA : டீஜிஏ : 1. டார்கா (targa) என்பதன் சுருக்கம். ட்ரூவிஷன் நிறுவனம் உருவாக்கிய கிடைவரி (Raster) வரைகலைக் கோப்பு வடிவம். 16 துண்மி (பிட்), 24துண்மி (பிட்), 32 துண்மி (பிட்) நிறங்களைக் கையாளவல்லது. 2. மிகு தெளிவுள்ள ஒளிக்காட்சி வரைகலைப் பலகை வரிசைகளின் வணிகப் பெயர்.

. th : . டீஹெச் : ஒர் இணைய தள முகவரி தாய்லாந்து நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

the microsoft network (MSN) : மைக்ரோசாஃப்ட் நெட்வொர்க் (எம்எஸ்என்) : மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்தின், பல்வேறு வசதிகள் நிறைந்த நிகழ்நிலைச் சேவை. 1995ஆம் ஆண்டு ஆகஸ்டில், விண்டோஸ் 95 அறிமுகப்படுத்தப்பட்ட போது தொடங்கப்பட்டது.

theorem : தேற்றம் : எண்ணாக்கப்படிகூடிய ஒரு சொற்றொடர். ஒரு செல்லக்கூடிய வாக்குவாதத்தின் முடிவு. thermography : வெப்பக் கதிர்.

therminomic : மின்மயத் துகள்.

theorem prover : தேற்றம் நிறுவலர் : ஒரு இலக்குடன் துவங்கி அதன் விளைவுகளைத் தேடி அந்த இலக்குக்காக ஒன்று சேரும் முடிவுகளைக் கூறும் நிரல் தொடர். தேற்றம் எண்ணாக்கும் நிரல் தொடரில் உண்மை களின் தொகுதியைக் கொண்ட தரவு ஆதாரம் அதன் உயத்துணர் நுட்பம் இலக்கினை அடையும் நிறைவைத் தருகின்ற கண்டு பிடிப்புகளை உருவாக்குகிறது.

theorem proving : தேற்றம் நிறுவல் : தானியங்கி அணுகு முறைகளாக நிலைநாட்டல், தேடல் மற்றும் விளைவுகளைத் தேடல் ஆகியவற்றைக் கூறலாம். ஒரு குறிப்பிட்ட தேற்றத்திற்கான நிரூபணத்தைத் தேடுவதை நிலைநாட்டத் தேடும் நிரல் தொடர் செய்கிறது. விளைவு தேடும் நிரல்தொடர் விளைவுகள் ஏற்படுவதைக் கண்டறிகிறது. பிறகு சிறப்பான விளைவுகள் தேர்ந்தறியப்படுகிறது.

theory of numbers : எண்களின் கொள்கை;எண்களின் கோட்பாடு : எண்களின் தன்மைகள் மற்றும் உறவுகள் பற்றிப் பொதுவாகக் கூறும் கணிதவியலின் பிரிவு.

thermal dye diffusion : வெப்பச்சாய பரவல் : வெப்ப மெழுகு மாற்றல் போன்ற அச்சிடும் செயல்முறை. இதில் மைக்குப் பதிலாக சாயம் பயன்படுத்தப் படும். அச்சுமுனையானது நாடாவை சூடுபடுத்தி சாயத்தை திடவடிவில் மாற்றி திறவு காகிதத்தில் படிய வைக்கிறது. அதிக வெப்பம் இருந்தால் அச்சும் அடர்த்தியாக இருக்கும். ஒளிப்பட தரம் அருகில் வருவதுபோல தொடர் வண்ணம் உருவாக்கப்படலாம்.

thermal printer : மின் அச்சுப்பொறி, சூட்டு எந்திரம்;வெப்ப அச்சுப்பொறி : வெப்பம் உணரும் காகிதத்தில் வெளியீட்டைத்தரும் தொடாத அச்சுப் பொறி மெழுகுப் பகுதிகளை உருக்க வெப்பத்தைப் பயன்படுத்துவது. அதில் உள்ள மை காகிதத்திற்கு மாறுகிறது. நடுத் தரத்தில் மறுபிரதி தருகிற இது மெதுவான வேகத்தில் இயங்குகிறது. ஆனால், அந்தச் சாதனம் அதிக விலையில்லாதது, அமைதியான, நம்பக்கூடிய ஒன்று.

thermal stencil : வெப்பப் பதிவு முனை.

thermal wax transfer : வெப்ப மெழுகு மாற்றல் : மெழுகு போன்ற ஒரு மையை காகிதத் துக்கு மாற்றும் அச்சிடும்முறை, சான்றாக;வண்ண அச்சுப்பொறியில் பலநூறு திரும்ப வரும் தொகுதிகளான கறுப்பு, சியான், மெஜந்தா மற்றும் மஞ்சள் மை கொண்ட மைலார் நாடா பயன்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு நிறத்திற்கு எதிராகவும் ஒரு காகிதத்துளை அழுத்தி சூடாக்கும் பொருள்களைக் கொண்ட ஒரு கோட்டின் வழியாகச் செல்லும்போது புள்ளிகள் அல்லது படப்புள்ளி களின் மை காகிதத்தில் மாற்றப்படுகிறது.

thermal wax-transfer printer : வெப்ப மெழுகு-மாற்றல் அச்சுப் பொறிஒரு சிறப்புவகை தொடா அச்சுப்பொறி (Nonimpact printer). வெப்பத்தின் மூலம் வண்ண மெழுகினை தாளின்மீது உருகவைத்து படி மங்கள் வரையப்படுகின்றன. வழக்கமான வெப்ப அச்சுப் பொறியைப் போலவே, சூடாக்குவதற்கு ஊசி (பின்) கள் பயன்படுத்தப்படுகின்றன. பல வண்ண மெழுகு பூசப்பட்ட நாடாமீது சூடான ஊசிகள் படும்போது ஊசிகளுக்கு அடியிலுள்ள மெழுகு உருகித் தாளில் ஒட்டிக் கொள்கின்றன. ஊசிகள் தாளைத் தொடு வதில்லை.

thesaurus : அகராதி;அகர முதலி : பெரும்பாலான சொல் அகராதிகளில் உள்ள ஒரு தன்மை ஒரு குறிப்பிட்ட அனேகமாக அதிகம் பயன்படுத்தப் பட்ட சொல்லுக்கு மாற்றாக ஒரு சொல்லை கண்டுபிடிக்க உதவுகிறது. எந்த வகையான எழுத்துப் படைப்பை உருவாக்கினாலும் ஒரு குறிப்பிட்ட சூழ்நிலைக்கு மாற்றுச் சொற்கள் அல்லது மரபுத் தொடர்களை அது தருகிறது என்பதால் அகராதி என்பது மதிப்புமிக்க குறிப்புதவிப் பொருளாகும்.

the world-public access UNIX : உலகம்-பொது அணுகல் யூனிக்ஸ் : பாஸ்டனை மையமாகக் கொண்ட மிகப்பழைய பொது அணுகு இணையச் சேவை வழங்கன். 1990 ஆண்டிலிருந்து இவ்வமைப்பு, தொலைபேசி மூலம் இணையத்தை அணுகும் வசதியைத் தந்தது. அதாவது பொதுமக்கள் இணையத்தை அணுக முடியும். வைய விரிவலை அணுகல், யூஸ்நெட், ஸ்லிப்/பீபீபீ டெல்நெட், எஃப்டீபீ, ஐஆர்சி, கோஃபர், மின்அஞ்சல் போன்ற பிற வசதிகளையும் வழங்குகிறது. 1995 ஆம் ஆண்டிலிருந்து யுயுநெட் மூலமாக உள்ளூர் தொலைபேசி வழி அணுகலையும் அளித்து வருகிறது.

thick film : தடித்த படச்சுருள் : சிப்புவின் மேலுள்ள டிரான்சிஸ்டர் களாலான நுண்ணிய மேலடுக்குகளைவிட தடிமனான உலோகப் பொருள், அரைக்கடத்தி அல்லது காந்தப்பொருள். சான்றாக, தடித்த உலோகத் திரைப் படங்களை உயரின நுண்மின் சுற்றுகளின் பீங்கான் அடிப்பகுதியில் மேல் பூச்சாகப் பயன்படுத்தப்படுகிறது.

thimple : சிமிழ் : சிமிழ் வடிவத்தில் உள்ள அச்சிடும் பொருள். எழுத்துத் தர அச்சிடுவதற்குப் பயன்படுகிறது. சிமிழைச் சுற்றி எழுத்து அச்சுகள் வட்டமாக வரிசைப் படுத்தப்படுகின்றன. அச்சிடப்படவேண்டிய எழுத்தின் அச்சு சுழன்று சரியான இடத்தில் சுற்றிவரும்போது சுத்தியல் அதை முன்னோக்கி அழுத்தி காகிதத்தில் அச்சிடும்.

thimble printer : சிமிழ் அச்சுப் பொறி : சிமிழ் வடிவத்தில் அச்சு சக்கரத்தைப் பயன்படுத்தும் அச்சுப்பொறி. இதன் அடிக்கும் சாதனம் நாடாவுக்கு நேராக அடிக்கும் பகுதியைக் கொண்டுவந்து காகிதத்தில் அச்சிடுகிறது.

thin client : மெல்லிய கிளையன்;சிறுத்த கிளையன்.

thin film : மெல்லிய படச்சுருள்;மென்படலம் : ஒட்டவைத்த அடிப்பகுதி, பொதுவாக ஒரு தட்டையான பிளேட்டுகளாலான மெல்லிய புள்ளிகளை வைத்து ஏற்படுத்தப்படும் கணினி சேமிப்பகம் அடிப்பகுதியும் சேர்க்கப்பட்ட கம்பிகளில் உள்ள மின்சக்திமூலம் புள்ளிகள் காந்தப்படுத்தப்படுகின்றன.

thin film head : மெல்லிய படச்சுருள் முனை : அதிக அடர்த்தி உள்ள வட்டுகளுக்கான படி/எழுதுமுனை நிக்கல்-இரும்பு மையத்தில் வைக்கப்பட்ட கடத்தும் படச்சுருளின் மெல்லிய அடுக்குகளால் இது அமைக்கப்படுகிறது.

thin film storage : மென் படலச் சேமிப்பகம்.

thin server : மெல்லிய வழங்கன்;சிறுத்த வழங்கன் : ஒருவகை கிளையன்/வழங்கன் கட்டுமானம். பெரும்பாலான பயன்பாடுகள் கிளையன் கணினியிலேயே இயங்கும். இதுபோன்ற கிளையன், கொழுத்த கிளையன் என வழங்கப்படுகிறது. எப்போதாவது தொலைதூர வழங்கனில் தரவு செயல்பாடுகள் நடக்கும். இதுபோன்ற ஏற்பாடு சிறந்த கிளையன் செயல்திறனைக் கொடுக்கும். ஆனால் நிர்வாகப் பணிகளைச் சிக்கலாக்கிவிடும். எடுத்துக்காட்டாக, கிளையனிலிருக்கும் மென்பொருள்களை மேம்படுத்துவது மிகப்பெரும் சவாலாக இருக்கும்.

thin space : மெல்லிடவெளி;மெல்லிய இடவெளி : ஒர் எழுத்துருவில் அதன் பாயின்ட் அளவில் நான்கில் ஒரு பங்குள்ள கிடைமட்ட இடவெளி. எடுத்துக்காட்டாக, 12-பாயின்ட் அளவுள்ள ஒர் எழுத்துருவில் மெல்லிடவெளி 3-பாயின்ட் அகலத்தில் இருக்கும்.

thin window display : மெல்லிய சாளரக் காட்சி : விசைப்பலகைகள், பாக்கெட் கணினிகள் போன்றவற்றில் பயன்படுத்தப்படும் ஒரு வரி காட்சித்திரை. எல்சிடி அல்லது எல்இடி காட்சித் திரை.

third generation computers : மூன்றாம் தலைமுறை கணினிகள் : டிரான்சிஸ்டர்களுக்குப் பதிலாக பொருள்களை வாமனப் படுத்தி ஒருங்கிணைந்த மின் சுற்றுக்களைப் பயன்படுத்தும் கணினிகள், விலை குறைப்பு, வேகமான இயக்கம், கூடுதல் நம்பகத் தன்மை ஆகியவற்றை தரும் இவை 1964 இல் அறிமுகப் படுத்தப்பட்டன. இன்னும் ஆதாரத் தொழில்நுட்பமாக இவையே உள்ளன.

third generation language : மூன்றாம் தலைமுறை மொழி : உயர்நிலை மொழிகளின் இன்றைய தலைமுறை இதுவே. சான்று : பேசிக், சி மற்றும் பாஸ்கல்.3GL என சுருக்கி அழைக்கப்படுகிறது.

third party : மூன்றாவதாள்;மூன்றாம் ஆள்;மூன்றாம் குழுமம், தொடர்பற்றவர்;தொடர்பிலாக் குழுமம் : ஒரு பெரிய தயாரிப்பு நிறுவனத்தின் கணினிகள் மற்றும் புறச்சாதனங்களுக்குரிய உதிரி பாகங்களைத் தயாரித்து விற்றுவரும் குழுமத்தை இவ்வாறு அழைப்பர். பெரும்பாலும் பெரிய நிறுவனத்தோடு இவர்களுக்கு எவ்விதத் தொடர்பும் இருக்காது. கணினித் தயாரிப்பாளர், கணினிப் பயனாளர் நேரடித் தொடர்புடைய இந்த இருவர்க்கும் தொடர்பில்லாத மூன்றாவது ஆள் என்ற பொருளில் இவ்வாறு வழங்கப்படுகிறது.

third-party lease : மூன்றாமவர் அடைமானம் : ஒரு தனி நிறுவனம் உற்பத்தியாளரிடமிருந்து வாங்கிய கருவியை தானாக வேறு ஒரு இறுதிப் பயனாளருக்குத் தரும் ஒப்பந்தம். thirty-two-bit chip : முப்பத்திரண்டு துண்மிச் சிப்பு : ஒரே நேரத்தில் முப்பத்திரண்டு துண்மிகளைச் செயலாக்கம் செய்யும் மையச் செயலக சிப்பு.

Thomas Charles Xavier (Colmar, Thomas) : தாமஸ் சார்லஸ் சேவியர் (கால்மார், தாமஸ் : 1820 இல் உருவாக்கப்பட்ட கணக்கிடும் எந்திரம். நடைமுறை சாத்தியமான, பயனுள்ள வகையில் செயலாற்றிய முதல் கணிப்பி என்று இதைப்பற்றி கூறப்படுகிறது.

thrashing : அடித்தல்;புடைத்தல்;தாக்குதல் : மெய்நிகர் நினைவக அமைப்பில் நினைவக ஏற்றலுடன் தொடர்புள்ள மேற்பகுதி"கடைதல்' (churning) என்றும் அழைக்கப்படுகிறது.

thread : புரி.

threaded : முறுக்கப்பட்ட : பல தனிப்பட்ட துணைநிரல் தொடர்களை அழைப்பதற்கேற்ற வசதியுள்ள ஒரு நிரல் தொடர்.

threaded discussion : கோத்த உரையாடல்;தொடரும் விவாதம் : ஒரு செய்திக்குழு அல்லது பிற நிகழ்நிலை மன்றங்களில், ஒவ்வொரு செய்தி அல்லது கட்டுரைக்கான பதில்கள், எதிர்ப் பதில்கள் அனைத்தையும் தனித்தனியே அகர வரிசைப்படியோ, கால வரிசைப்படியோ தொகுக்காமல் மூலச் செய்தியோடு தொடர்ச்சியாகப் பின்னுவது.

threaded newsreader : கோத்த செய்தி படிப்பி : செய்திக் குழுக்களின் செய்திகள்/அஞ்சல்கள்/பதில்களை ஒன்றன்கீழ் ஒன்றாய் ஒரே செய்திபோலக் காட்டும் செய்திப்படிப்பு நிரல். பதில்கள் தனித்தனியே அகர வரிசை/கால வரிசைப்படி தொகுக்கப்பட்டிருக்காது.

threaded tree : தொடுப்புறு மர அமைப்பு : மரமொத்த தகவல் அமைப்பை 'ஸ்கேன்'செய்வதற்கு உதவும் கூடுதல் சுட்டுகளைக் கொண்ட மர அமைப்பு.

threading : புரியாக்கம் : நிரலின் செயல்பாட்டு வேகத்தை அதிகரிக்க சில நிரலாக்க மொழிகளில் பயன்படுத்தப்படும் நுட்பம். (எ-டு) ஃபோர்த் (Forth), ஜாவா சி# போன்ற மொழிகளில் புரியாக்க நுட்பம் உள்ளது. ஃபோர்த் மொழியில், ஒவ்வொரு புரியாக்கப்பட்ட துணை நிரல் கூறுகளிலும் காணப்படும் பிற துணைநிரல் கூறுகளுக்கான அழைப்புகள் (ஃபோர்த் மொழி யில் முன் வரையறுத்த ஒரு சொல்) அந்த நிரல்கூறுகளுக்கான சுட்டுகளால் (pointers) பதிலீடு செய்யப்படுகின்றன. threat : அச்சுறுத்தல்;மருட்டல்.

threat agent : அச்சுறுத்தி.

three address computer : மூன்று முகவரி கணினி;மும் முகவரி கணினி : அதன் நிரலிடல் முறையில் மூன்று முகவரிகளைப் பயன்படுத்தும் கணினி, சான்றாக, ADD A, B, C என்ற நிரல்களில் A மற்றும் சார்ந்துள்ள மதிப்புகள் காட்டப்பட்டு C உடன் அதன் முடிவு சேர்க்கப்படுகிறது.

three address code : மும் முகவரிக் குறியீடு.

threat analysis : அச்சுறுத்தல் பகுப்பாய்வு.

three dimentional (3-D) : முப்பரிமாண (3-D) மூவளவு : கணினி வரைகலையில், ஒரு மாதிரியின் உயரம், அகலம் மற்றும் ஆழத்தின் ஒவ்வொரு புள்ளியிலும் மூவிடப் பரிமாணங்கள் சேமிக்கப்படுகின்றன.

three dimentional array : முப் பரிமாண வரிசை : மூன்று மடிப்பு வகைகளை வரிசை, பத்தி, மடிப்பு-வழங்கும் வரிசை

three point curve : முப்புள்ளி வளைவு.

three state logic element : மூன்று நிலை தருக்கப்பொருள் : மூன்று வெளியீட்டு நிலைகளை-நிறுத்தம், குறைந்த மின்சக்தி மற்றும் அதிக மின்சக்தி- தருகின்ற மின்னணு பொருள்.

three-tier client/server : மூன்றடுக்கு கிளையன்|வழங்கன் : மென் பொருள் அமைப்புகள் மூன்றடுக்குகளில் கட்டமைக்கப்பட்டுள்ள ஒரு கிளை யன்/வழங்கன் கட்டுமானம். (1) பயனாளர் இடைமுக அடுக்கு. (2) வணிகத் தருக்க அடுக்கு. (3) தரவுத் தள அடுக்கு. ஒவ்வோர் அடுக்கும் ஒன்று அல்லது மேற்பட்ட உறுப்புகளைக் கொண்டிருக்கும். எடுத்துக் காட்டாக, மேல் அடுக்கில் ஒன்று அல்லது பல பயனாளர் இடைமுகங்கள் இருக்கலாம். ஒவ்வொரு பயனாளர் இடைமுகமும் நடு அடுக்கிலுள்ள ஒன்றுக்கு மேற்பட்ட பயன்பாடுகளுடன் ஒரே நேரத்தில் தொடர்பு கொள்ள முடியும். நடு அடுக்கிலுள்ள பயன்பாடு ஒரேநேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட தரவுத் தளங்களுடன் தொடர்பு கொள்ள முடியும்.

throttle control : தடுப்பிதழ்க் கட்டுப்பாடு : கணினியில் விமானப் பாவிப்பி அல்லது விளையாட்டுகளில், பாவிப்பு எந்திரப் பொறியின் சக்தியைக் கட்டுப்படுத்தப் பயனாளருக்கு உதவும் ஒரு சாதனம். தடுக்கிதழ், பெரும்பாலும் ஒரு விசைப்பிடி (JoyStick) அல்லது ஒரு சுக்கான் (Rudder) விசையுடன் இணைந்து பயன்படுத்தப்படும்.

throughput : முழுதும் செல்லல் : ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு கணினி அமைப்பு செய்யக் கூடிய பயனுள்ள செயலாக்கத்தின் மொத்த அமைப்பான அளவு.

throw : எறி : சி ++/ஜாவா/சி# மொழிகளிலுள்ள ஒரு கட்டளை.

thumbnail : விரல்நுனி;விரல் நகம், குறுஞ்சின்னம் : ஒரு படிமத்தின் மிகச்சிறு வடிவம். படிமங்களை அல்லது பல பக்கங்களை வெகுவிரைவாகப் பார்வையிடுமாறு மின்னணு வடிவில் அமைத்திருத்தல். எடுத்துக்காட்டாக, வலைப் பக்கங்கள் பெரும்பாலும் படிமங்கள் அல்லது குறுஞ்சின்னங்களைப் பெற்றிருப்பதுண்டு. இணைய உலாவி, முழு அளவுப் படிமத்தைவிட இக் குறுஞ்சின்னங்களை வெகு விரைவாகப் பதிவிறக்கம் செய்துவிடும். இக்குறுஞ் சின்னங்களை சுட்டியால் சொடுக்கியதும் முழுப் படம் திரையில் விரியும்.

thumb wheel : கட்டைவிரல் சக்கரம் : உள்ளிட்டுச் சுட்டியை நிலைக்க வைக்கும் சாதனம். ஒரு அச்சில் சுட்டியின் இயக்கத்தைக் கட்டுப்படுத்தும் சுழலும் சக்கரத்தைக் கொண்டது. விரல் சக்கரங்கள் இரட்டையாகவே இருக்கும். ஒன்று சுட்டியின் செங்குத்து இயக்கத்தையும், மற்றொன்று பக்கவாட்டு இயக்கத்தையும் கட்டுப்படுத்தும்.

thyristor : தைரிஸ்டர் : மூன்று அல்லது மேற்பட்ட இணைப்புகளைக் கொண்ட இருநிலைச் சாதனம.

TIA : டீஐஏ : முன்கூட்டிய நன்றி என்று பொருள்படும் Thanks in Advance என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். இணையத்தில், ஒரு கோரிக் கையை முன்வைக்கும்போது, வழக்கமாகச் சொல்லப்படுவது.

TICCIT : டிக்கிட் : Time shared interactive computer controlled instructional television என்பதன் குறும்பெயர். சிறு கணினிகளையும் மாற்றம் செய்யப்பட்ட வண்ண தொலைக்காட்சிப் பெட்டிகளையும் ஒரே நேரத்தில் பல மாணவர்களுக்கு தனிப்பட்டமுறையில் சொல்லித் தரு வதற்குப் பயன்படுத்தும் கணினி உதவிடும் கல்வி அமைப்பு.

tick : டிக் : 1. ஒரு கடிகாரத் துடிப்பு மின்சுற்றிலிருந்து உமிழப்படுகின்ற, வழக்கமாய் அடிக்கடி ஏற்படுகின்ற சமிக்கை. இந்த சமிக்கையால் உருவாக்கப்படும் குறுக்கீட்டையும் இது குறிக்கிறது. 2. சில நுண்கணினி அமைப்புகளில், குறிப்பாக மெக்கின்டோஷ் கணினியில், ஒரு வினாடியில் அறுபதில் ஒருபங்கு. நிரல்கள் பயன்படுத்தும் அகநிலைக் கடி காரத்தில் பயன்படுத்தப்படும் அடிப்படை நேர அலகு.

ticket : நெருக்க உரிமை.

ticket based access control : உரிமையுடனான நெருக்கக்கட்டுப்பாடு.

ticket list : நெருக்க உரிமைப் பட்டி.

tie breaker : கட்டு பிரிப்பி : ஒரே நேரத்தில் இரண்டு செயலாக்க அலகுகள் ஒரே வெளிப்புறச் சாதனத்தினைப் பயன்படுத்த ஏற்படும் மோதலைச் சமாளிக்கும் மின்சுற்று.

tie line : முடிச்சு இணைப்பு : ஒரு நிறுவனத்தின் இரண்டு அல்லது மேற்பட்ட பிரிவுகளை (தொலை தூரக் கிளைகளை) இணைப்பதற்காக, ஒரு தகவ்ல் தொடர்பு நிறுவனத்திடமிருந்து (தொலை தொடர்புத் துறை யினர்) குத்தகைக்குப் பெறப்படும் ஒரு தனியார் இணைப்பு.

tie mark : கட்டு அடையாளம் : ஒரு அளவில் மதிப்புகளைக் காட்டும் அடையாளம். கண்டறியப்பட்ட எண் மதிப்புகளுக்கிடையில் உள்ள புள்ளிகளைக் காட்ட பயன்படுத்தப்படுகிறது.

. tif : டிஃப் : குறியிட்ட படிமக்கோப்பு வடிவில் (Tagged Image File Format -TIFF) அமைந்த பிட்மேப் படிமங்களை அடையாளங்காட்டும் கோப்பு வகைப்பெயர்.

TIFF or TIF : டிஃப் : படிமக் கோப்பு வடிவாக்கம் எனப்பொருள்படும் Tagged image File Format அல்லது Tag Image File Format என்ற தொடரின் தலைப் பெழுத்துக் குறும்பெயர். சாம்பல் அளவீட்டு வரைகலைப் படிமங்களை வருடி, சேமித்து, பரிமாறிக்கொள்ள, பெருமளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கோப்பு வடிவம். பழைய வரைவோவியப் பயன்பாடுகளில் (பழைய மேக்பெயின்ட் போன்ற) டிஃப் வடிவாக்கம் மட்டுமே இருந்து வந்தது. ஆனால் தற்போது பயன்பாட்டில் உள்ள நவீன நிரல்களில் ஜிஃப், ஜேபெக் போன்ற விதவிதமான வடிவாக்கங்களில் படிமங்களைச் சேமிக்க வசதிகள் உள்ளன. TIGA : டிகா : டெக்ஸாஸ் இன்ஸ்ட்ரூமெண்ட்ஸ் வரைகலைக் கட்டுமானம் என்று பொருள்படும் Texas Instruments Graphics Architecture என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். டெக்ஸாஸ் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ் நிறுவனத்தின் 340x0 வரைகலைச் செயலியின் அடிப்படையில் அமைந்த, ஒளிக்காட்சி தகவிக் கட்டுமானமாகும் இது.

tightly coupled : இறுக்கமாக இணைக்கப்பட்ட : ஒன்றை ஒன்று சார்ந்திருக்கும் கணினிகளைப் பற்றியது.

tightly coupled multi processing : இறுக்க இணைவு பன்மைச் செயலாக்கம்.

tilde : டில்டே : அஸ்கி எழுத்து எண் 126 (-) சில பெரிய நிரல் தொடர் மொழிகளில் பயன்படுத்தப்படுவது. சான்றாக, லோட்டஸ் 1-2-3 ஒரு வரி திரும்ப வருவதைக் குறிப்பது.

tile : காட்சி வில்லை : வரை கலை ஓவியப்பொருளின் ஒரு பகுதி. சதுரம் அல்லது வைர வடிவமாக இருக்கலாம்.


காட்சி வில்லை


tiled : அடுக்கப்பட்ட : பொருள்களை அடுத்தடுத்துக் காட்டுதல். சான்றாக, அடுக்கப்பட்ட சாளரங்களை ஒன்றின்மேல் ஒன்றாக வைக்கமுடியாது.

tile vertically : செங்குத்தாய் அடுக்கு.

tiling : உழுதல் : வரைகலை காட்சிப்பகுதியில் ஒரு இடத்தின் தனி நிறத்தைக் கொண்டு நிரப்பாமல் ஒரு அமைப்பைக் கொண்டு நிரப்புதல். சாளரங்களை வரிசைப்படுத்தும் முறை. இதில் சாளரங்கள் ஒன்றின் மீது ஒன்று மேலேறி நிற்காமல் அனைத்துச் சாளரங்களும் தெரியும். ஒவ்வொரு சாளரமும் திரையில் ஒரு பகுதியை எடுத்துக் கொள்கிறது. tiling screen : சாயும் திரை : எளிதாகப் பார்க்க வசதியாக, முன் பின்னாகவும், மேலிருந்து கீழாகவும் மாற்றிக் கோணம் அமைக்கக்கூடிய ஒளிக்காட்சித் திரை.

tilt down : கிடை மட்டமாய் சரிவாக்கு.

tilt left : இடப்பக்கம் சரிவாக்கு.

tilt right : வலப்பக்கம் சரிவாக்கு.

tiltup : சாய்த்து உயர்த்து.

time : வேகம், காலம்.

time accass : அணுகு நேரம்.

time acceleration : முடுக்கு நேரம்.

time add : நேரம் கூட்டு.

time add-substract : நேரம் கூட்டு-கழி.

time, available machine : இருக்கும் பொறி நேரம், மொழிமாற்று நேரம்.

time, compile : தொகு நேரம்.

timed backup : நேரங்குறித்த காப்பு.

time division : நேரம் பிரிப்பி : தகவல் தொடர்பு வழித்தடத்தின் பரப்புத் திறனை மேம்படுத்த பயன்படுத்தப்படும் செலுத்து நுட்பம். துடிப்புக் குறி யீட்டுக் குறிப்பேற்றம் என்றும் அழைக்கப்படுகிறது. இம்முறையில் ஒரு குறிப்பிட்ட குழுவைச் சேர்ந்த ஒவ்வொரு தரவு இணைப்புக்கும் ஒரு குறிப் பிட்ட நேரம் ஒதுக்கப்பட்டு அந்த நேரத்தில்தான் அது தரவுகளை அனுப்பிப் பெறும். அதன் அடுத்த நேரம் வரும்வரை அது அமைதியாக இருக்கும். அந்த நேரத்திற்குள் மற்ற தரவு இணைப்புகள் செயலாற்றும். இதன்படி பல்வேறு, தொடர்பில்லாத பயனாளர்கள் ஒரே தகவல் தொடர்பு இணைப்பை ஒரே சமயத்தில் பயன்படுத்த முடியும்.

time division multiplexing (TDM) : காலப் பிரிவு பல்வழி தரவு தருமுறை; காலப்பிரிவுப் பெருக்கம் : ஒரு பொது மின்சுற்றுப் பாதையில் பல வழித் தடங்கள் தகவலை அனுப்பும் முறை. இம் முறையில் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு முறைவைத்து ஒவ்வொரு வழித்தடத்திற்கும் பொது மின்சுற்றை ஒதுக்குவது.

time error, run : இயக்க நேரப்பிழை.

time frame : காலவரையறை.

time, idle : செயல்படா நேரம்.

time log : காலப் பதிவு : 24 மணிநேரம் போன்ற ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் கணினி அமைப்பு எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதைக் குறிப்பது.

time-of-day count : நாளின் நேரத்தை எண்ணுதல் : பயாஸ் தரவுப் பகுதியில் உள்ள ஒரு மாறிலி. நேர குறுக்கீட்டினால் தொடர்ந்து காட்டப் படுவது செயலாக்க முறை. அதனுடைய மதிப்பைப் பயன்படுத்தி நாளின் நேரத்தைக் கணக்கிடும்.

time out : நேரம் போனது;காலங்கடந்தது : ஒரு குறிப்பிட்ட வெளிப்புறச் சாதனம் வேலை செய்யவில்லை என்பதைக் குறிப்பிட உள்ளிட்டு/வெளி யீட்டு இயக்கங்கள் பயன்படுத்தும் ஒரு சொல்.

time out settings : நேர முடிவு அமைப்புகள்.

time quantum : கால அளவு : நேரப் பங்கீட்டு அமைப்பால், ஒவ்வொரு அமைப்பாளருக்கும் ஒதுக்கப்படும் கால அலகு.

timer : காலங்காட்டி : கணினியின் உட்பகுதியில் உள்ள கடிகாரம்.

timer clock : நேரம் காட்டிக் கடிகாரம்.

time, real : நிகழ் நேரம்.

time, response : மறுமொழி நேரம்.

timer interrupt : நேரங்காட்டி குறுக்கீடு : 8253 நேரம்காட்டும் சிப்புவால் ஒரு நொடிக்கு 18. 2 தடவைகள் காட்டுமாறு தூண்டப்படும் ஒரு குறுக்கீடு. ஒவ்வொரு தடவை அது இயங்கும் போதும் பயாஸ் (Bios) நாளின் நேரத்தைக் காட்டும் கணக்கில் ஒன்று கூட்டப்படுகிறது.

time, run : இயக்க நேரம்.

time scale : கால அளவுமுறை.

time, search : தேடு நேரம்.

time, seek : நாடும் நேரம்;கண்டறி நேரம்.

time series : காலத் தொடர் : தரவுகளை நீண்ட கால அளவில் தொகுத்துக் கூறுதல். ஒரு குறிப்பிட்ட தரவு தொகுதியின் முழுப்பகுதியும் தெரியவில்லை என்றாலும் அவற்றின் எதிர்காலம் மதிப்புகளும் தெரிய வில்லை என்றபோதிலும் அத்தொகுதியின் பொதுவான நடத்தையை குறிப்பிடுவது.

time series analysis : காலத்தொடர் ஆய்வு : ஒரு தரவுத் தொகுதியின் நீண்ட காலப் போக்குக்கான காரணங்களைக் கண்டறிய பயன்படுத்தப்படும் ஒரு புள்ளி விவரமுறை. சான்றாக, கோதுமையின் விலை ஆண்டு முழுவதும் ஏறி, இறங்குகிறது;ஆண்டுக்காண்டு மாறுகிறது. காலத் தொடர்பு ஆய்வு இந்த ஏற்ற, இறக்கத்திற்குள் ஒரு ஒழுங்கைக் கண்டுபிடித்து பருவகாலம், போக்கு கள் மற்றும் வறட்சி போன்ற சுழற்சி நிகழ்வுகளைக் கண்டுபிடித்தல்.

time services : நேரத் தொடர்.

time share : காலப் பகிர்மானம்;பகிர்வு நேரம்.

time sharing : நேரப்பங்கிடல்;காலப்பங்கீடு;நேரப் பகிர்வு முறை : ஏறக்குறைய ஒரே நேரத்தில் கணினி வசதியைப் பல பயனாளர்கள் பல்வேறு நோக்கங்களுக்காகப் பயன்படுத்தும் இயக்கமுறை. ஒவ்வொரு பயனாளரையும் தொடர்ச்சியாக அதன் வசதியைப் பயன்படுத்திக் கொள்ள கணினி அனுமதித்தாலும், எல்லா பயனாளர்களும் ஒரே நேரத்தில் பயன்படுத்திக் கொண்டதாகவே தோன்றும்.

time sharing priority : நேரப் பங்கீட்டு முன்னுரிமை.

time slice : காலச் சிப்பு : ஒரே அலகு.

time slicing : காலக் கூறு;நேரம் கூறிடல் : பல நிரல் தொடரமைப்பு அமைப்பில் ஏதாவது ஒரு நிரல் தொடரே மையச் செயலகத்தை ஆக்கிரமித்துக் கொள்வதைத் தடுக்க, செயலாக்கத்தை ஒவ்வொரு நிரல் தொடருக்கும் பிரித்து ஒதுக்கும் முறை.

time slot : கால ஒதுக்கீடு;நேர ஒதுக்கீடு : இரண்டு சாதனங்கள் ஒன்றாக இணைக்கப்படும் போது இடைவெளிவிட்டு தொடர்ந்து திரும்பத் திரும்ப வரும் நேரம்.

time to live : வாழ்நாள்;ஆயுள் காலம் : இணையத்தில் அனுப்பப்படும் ஒரு தரவுப் பொதியின் தலைப்புப் புலம். அந்தப் பொதியை எவ்வளவு காலம் வைத்திருக்கலாம் என்பதைக் குறிக்கிறது.

time total : மொத்த நேரம்.

time transfer : ப்ரிமாற்ற நேரம்.

timing signals : நேர சமிக்கைகள் : கணினி இயக்கங்களை ஒரே நேரத்தில் ஒருங்கிணைக்க வெளிப்புறச் சாதனங்கள் அல்லது செயலகங்களில் உருவாக்கப்படும் மின்துடிப்புகள். முக்கிய நேர சமிக்கைகள் கணினியின் கடிகாரத்திலிருந்து வருகிறது. பல மெதுவான சுழற்சிகளாகப் பிரிக்கப்படும் அலை வரிசைகளை இந்த கடிகாரம் ஏற்படுத்துகிறது. நேரப்பங்கீடு அல்லது உண்மை நேர கடிகாரத்திடமிருந்து மற்ற நேர சமிக்கைகள் வருகின்றன. வட்டு இயக்கிகள், நேர சமிக்கைகள் செய்ய நினைவக வட்டுப் பகுதி ஒன்றில் துளைகள் அல்லது அடையாளங்கள் செய்தோ அல்லது ஏற்கனவே பதிவுசெய்த எண் தரவுகளையோ பயன்படுத்தலாம்.

tiny BASIC : சின்னஞ்சிறு பேசிக் : முதல் தலைமுறை தனிநபர் கணினிகளில் பயன்படுத்தப்பட்ட அளவான நினைவகத்தைக் கொண்ட பேசிக் மொழியின் ஒரு துணைப்பகுதி.

tiny model : மிகச்சிறு மாதிரியம் : இன்டெல் 80x86 செயலிகளில் செயல்படுத்தப்படும் ஒரு நினைவக மாதிரியம். இதில், நிரல் குறி முறைக்கும், தரவுகளுக்கும் சேர்த்து மொத்தம் 64 கிலோபைட்டுகள் மட்டுமே வைத்துக்கொள்ள முடியும். சி-மொழி நிரல் ஒன்றை மிகச் சிறு நினைவக மாதிரியத்தில் மொழி மாற்றி (compile) உருவாக்கப்பட்ட EXE கோப்பினை, EXE2BIN போன்ற பயன்கூறுகள் மூலம் COM கோப்புகளாக மாற்றியமைக்க முடியும்.

tip of the day : இன்றைய உதவிக் குறிப்பு.

title : தலைப்பு.

title bar : தலைப்புப் பட்டை : விண்டோஸ் போன்ற வரைகலைப் பயனாளர் இடைமுகத்தில் (GUI) திரையில் தோன்றும் சாளரங்களின் மேற்பகுதியில் அச்சாளரத்தின் பெயரைத் தாங்கியிருக்கும் பட்டை. பெரும்பாலான தலைப்புப் பட்டைகளில் சாளரத்தை மூடவும், அளவு மாற்றுவதற்குமான பொத்தான்களும் இடம் பெற்றிருக்கும். தலைப்புப் பட்டையில் சுட்டியை வைத்து அழுத்திக்கொண்டு சாளரத்தை எங்கு வேண்டுமானாலும் நகர்த்திச் செல்லலாம்.

. tj : . டீஜே : ஒர் இணைய தள முகவரி தாஜிகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

. tk : . டீகே : ஒர் இணைய தள முகவரி டேக்கேலாவ் நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

T2L : டி2எல் : TTL என்பதற்கு மாற்றுப் பெயர்.

TLA : டிஎல்ஏ : மூன்றெழுத்துச் சுருக்கச்சொல் எனப்பொருள் படும் Three Letter Acronym என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். இணையத்தில் மின்னஞ்சல், செய்திக் குழுக்கள் மற்றும் பிற நிகழ்நிலை மன்றங்களில் கணினிக் கலைச்சொற்களில் இருக்கும் ஏராளமான சுருக்கச் சொற்கள், குறிப்பாக மூன்றெழுத்துச் சுருக்கச் சொற்கள் குறித்து அங்கதமாய்க் குறிப்பிடப்படும் சொல்.

. tm : . டீஎம் : ஒர் இணைய தள முகவரி துர்க்மேனிஸ்தான் நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக்களப் பெயர்.

. tn : . டீஎன் : ஒர் இணைய தள முகவரி துனிசியா நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

. to : . டீஓ : ஒர் இணைய தள முகவரி டோங்கா நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

toggle : இருநிலை மாற்றி : இரண்டு நிலையான அமைப்புகளைக் கொண்ட ஒரு சாதனம்.

toggle case : இருநிலைமாற்றிப் பெட்டி, நிலைமாற்றிப் பெட்டி.

toggle keys : நிலைமாறு விசைகள் : விண்டோஸ் 95/98 இல் உள்ள ஒரு பண்புக்கூறு. கேப்ஸ்லாக், நம்லாக், ஸ்குரோல்லாக் போன்ற நிலை மாற்று விசைகளில் ஒன்றை நிகழ் (ON) அல்லது அகல் (OFF நிலையில் வைக்கும் போது மெல்லிய/உரத்த பீப் ஒலி எழும்.

toggle switch : இருநிலை மாற்றி.

token : அடையாள வில்லை;அடையாளி;வில்லை : 1. ஒரு நிரல் தொடரமைப்பு மொழியில் உள்ள ஒரு பெயர் அல்லது பொருளைக் குறிப்பிடுகின்ற குறியீடு. 2. ஒரு குறிப்பிட்ட நிலையத்தில் இணைய சமிக்கை மூலம் குறிப்பிட சில வழித் தடங்களில் பயன்படுத்தப்படுவது. எட்டு 1-கள் போன்ற துண்மிகளின் தொகுதி.

token bus network : வில்லைப் பாட்டைப் பிணையம் : தரவு போக்குவரத்தை ஒழுங்குபடுத்த வில்லை அனுப்பும் முறையைக் கடைப்பிடிக்கின்ற, பாட்டைக் கட்டமைப்பில் அமைந்த ஒரு குறும்பரப்புப் பிணையம் (பணி நிலையங்கள் ஒற்றை, பகிர்வு தரவு நெடுவழியில் பிணைக்கப் பட்டிருக்கும்). தரவு அனுப்பும் உரிமையை வழங்கும் வில்லை ஒரு நிலையத்திலிருந்து இன்னொரு நிலையத்துக்கு அனுப்பப்படும். ஒவ்வொரு நிலையமும் வில்லையைச் சிறிது நேரம் வைத்திருக்கும். அந்நேரத்தில் அந்நிலையம் மட்டுமே தரவு அனுப்ப முடியும். அதிக முன்னுரிமை பெற்ற நிலையத் திலிருந்து அதற்கடுத்த முன்னுரிமை பெற்ற நிலையத்துக்கு வில்லை அனுப்பி வைக்கப்படும். அந்நிலையம், பாட்டையில் அடுத்த நிலையமாக இருக்கவேண்டியதில்லை. சுருங்கக்கூறின், வில்லையானது பிணையத்தில் ஒரு தருக்க நிலை வளையத்தில் (Logical Ring) சுற்றிவருகிறது எனலாம். வளையக் கட்டமைப்பில் இருப்பதுபோன்று பருநிலை வளையத்தில் (Physical Ring) சுற்றி வருவதில்லை. இத்தகு பிணையங்கள் ஐஇஇஇ 802. 4-ல் வரையறுக்கப்பட்டுள்ளன.

token passing : அடையாள வில்லை அனுப்புதல் : ஒரு தகவல் தொடர்பு வழித்தடத்தை ஒன்றுக்கு மேற்பட்டவர் பிடித்துக் கொள்வதைத் தடுக்கும் ஒரு தொழில் நுட்பம். தகவல் தொடர்பு அமைப்பில் ஒரே ஒருமுறை மட்டும் வருமாறு குறியீடு இடப்பட்ட அடையாள வில்லை. ரேமில் உள்ள அடையாள வில்லையை வைத்திருக்கும் ஒரே ஒரு கணினி மட்டுமே தகவல்களை அனுப்பிப் பெறமுடியும். இரயில்வே சமிக்கை முறை யிலிருந்து அடையாள வில்லையை அனுப்பிப் பெறும் முறை பெறப்பட்டது. இரண்டு இரயில்கள் ஒரே பாதையில் வந்து மோதிக்கொள்வதை தடுப்பதற்காக அடையாளவில்லை அல்லது பேட்டனை முன்னும், பின்னும் எடுத்துச் செல்வார்கள்.

token ring : அடையாளவில்லை வளையம் : 1980 ஆரம்பத்தில் உருவாக்கப்பட்ட ஐபிஎம் கணினி கட்டமைப்பு வரை முறைகளின் உரிமப்பொருள். IEEE 802. 5 தர நிருணயத்தில் இது வரையறுக்கப்படுகிறது.

token ring network : அடையாளவில்லை வளைய பிணையம் : வரிசைமுறையில் அடையாள வில்லையை அனுப்பும் நுட்பத்தைப் பயன்படுத்தும் தகவல் தொடர்புப் பிணையம். இதில் பிணையத்தின் ஒவ்வொரு நிலையமும் அடையாள வில்லையை அதற்கடுத்த நிலையத் திற்கு அனுப்பும்.

tolerance : இணக்கம்;பொறுதி.

toll : சுங்கம்.

tone : நிறத்திண்மை : கணினி வரை கலையில் மென்னிறம் மற்றும் நிழல்.

toner : மை : நகலெடுக்கும் எந்திரங்களிலும், லேசர் அச்சுப் பொறிகளிலும் பயன்படுத்தப்படும் மின்சக்தி ஏற்றப்பட்ட/மை. கண்ணுக்குத் தெரியாத உருவத்தினை எதிர் துருவத்தில் உள்ள பலகை, உருளை அல்லது காகிதத்தில் விழச்செய்யும்.

tool : கருவி : சில கணினி அமைப்புகளில் உள்ள ஒரு பயன்பாட்டு நிரல் தொடர்.

tool bar : கருவிப்பட்டை.

toolbox : கருவிப்பெட்டி : முன் வரையறுக்கப்பட்ட (பெரும்பாலும் முன்பே மொழி மாற்றப்பட்ட) நிரல் கூறுகளின் தொகுதி. ஒரு குறிப்பிட்ட கணினிக்காக, ஒரு குறிப்பிட்ட பணிச்சூழலுக்கு, ஒரு குறிப்பிட்ட பயன்பாட்டுக்காக நிரல் எழுதும் ஒரு நிரலர் இந்த மென்பொருள் கருவிகளைப் பயன் படுத்திக்கொள்ள முடியும்.

toolkit : கருவிப்பெட்டி : ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் எழுதப்பட்டு, இயக்கப்படுவதற்கு அனுமதிக்கும் மென்பொருள் வாலாயங்களின் தொகுதி. பல்வேறு பணிகளைச் செய்வதற்காக பயன்பாட்டு நிரல் தொடர்கள் வாலாயங்களை அழைக்கும். சான்றாக, ஒரு பட்டியலைக் காட்டுதல் அல்லது வரைகலைக் கோடு ஒன்றை வரைதல்.

toolkit software : கருவித் தொகுதி மென்பொருள்;கருவிப் பெட்டி மென்பொருள் : முழு நிரல் தொடரையும் அவர்களே எழுதுவதற்குப் பதிலாக, பயனாளர்கள் தாங்களே தங்களது சிறப்புப் பயன்பாடுகளை ஏற்படுத்திக்கொள்ள அனுமதிக்கும் மென்பொருள் தொகுப்பு.

tool palette : கருவி வண்ணத் தட்டு : ஊடாடு வரைகலைத் தேர்வுக்காக பட்டியல் அமைப்பில் திரை மீதுள்ள பணிகளின் தொகுதி பெரும்பாலும் வரைகலை சார்ந்தது.

tools : கருவிகள்.

top : உச்சி;உச்சிப் பகுதி.

top down : மேல்-கீழ்.

top-down design : மேல்-கீழ் வடிவமைப்பு : ஒரு நிரல் வடிவமைப்பு வழிமுறை. மீவுயர் நிலையில் நிரலின் செயல்பாட்டை (தொடர்ச்சியான பணிகள்) வரையறுப்பதில் தொடங்குகிறது. ஒவ்வொரு பணியும் அதன் அடுத்தநிலைப் பணிகளாக உடைக்கப்பட்டு வரயறுக்கப் படுகின்றன. இவ்வாறு அடுத்தடுத்த நிலைக்குச் செல்லல்.

top down development : மேலிருந்து கீழ் மேம்பாடு : கணினி நிரல் தொடர் மேம்பாட்டுக்கான வடி வமைப்புக் கட்டுமான பிரிவு, மேம்பாட்டு செயலாக்கத்தின் போது உயர் நிலைப் பணிகள் யாவும் குறியீடு அமைக்கப்பட்டு வெளியமைப்பு வடிவத் தில் முன்னதாகவே சோதிக்கப்படும். கீழ்நிலை தரவுகள் சேர்க்கப்பட்டு வரையறைகள் மற்றும் இடைமுகங்கள் மூலம் போகப்போக சோதிக்கப் படும். வேலைக் கட்டுப்பாட்டு மொழிகள் மற்றும் செயலாக்க முறைகள் போன்ற மேல்நிலைகளில் துவங்கி இதன் மொத்த அமைப்பு உருவாக்கப் படுகிறது. படிப்படியாக இது முன்னேறி நிரல் தொடர் கட்டுப்பாட்டுக் கூறுகள் வரை விரிந்து சென்று கீழ்நோக்கிய வரிசைமுறை அமைப்பில் நிரல் தொடர் கூறுகளின் மேலும் துல்லியமான நிலைகளுக்குக் கீழிறங்கி வருகிறது. இந்த அணுகுமுறை இரண்டுவகை விளைவுகளை ஏற்படுத்தும். முதலாவது, மேம்பாட்டினை ஒட்டி அதேவேளையில் கணினி அமைப்பு ஒருங்கிணைவது ஏற்படும். அடுத்ததாக, மேம்பாடு செய்யப்பட்டுக் கொண்டிருக்கும்போதே கூடுதல் திறனுடைய இயக்க அமைப்பு பயன்பட்டு வருகிறது.

top-down methodology : மேல்-கீழ் செயல்முறை : கலவையான தன்மையை ஒழுங்குபடுத்து வதற்கான கட்டுப்பாடான அணுகுமுறை. இதில் ஒரு அமைப்பின் மேல்நிலை பணிகள் அடையாளம் காணப்பட்டு பின்னர் இப்பணிகளை வரிசைக் கிரமமான புரியக்கூடிய கீழ் நிலை கூறுகளாகப் பிரிக்கப்படுகிறது.

top-down programming : மேல்-கீழ் நிரலாக்கம் : நிரலாக்கத்தில் ஒர் அணுகுமுறை. முதலில் நிரலின் முதன்மைப் பகுதி எழுதப்படும். முதன் மைப் பகுதியில் பல்வேறு துணை நிரல்களுக்கான அழைப்புகள் இருக்கும். அதன் பிறகு துணை நிரல்களுக்கான குறிமுறைகள் எழுதப்படும். அதில் இடம்பெறும் அடுத்த நிலை துணை நிரல்களுக்குப் பிறகு குறிமுறை எழுதப்படும்.

topic drift : தலைப்பு நழுனல்;தலைப்பு திசைமாறல் : இணையத்தில் நடைபெறும் நிகழ்நிலைக் கலந்துரையாடலின் மூலக்கருப்பொருள், தொடர்புடைய அல்லது தொடர்பில்லாத பிற தலைப்புக்குத் தாவுதல். எடுத்துக்காட்டாக, தொலைக்காட்சி பற்றி விவாதித்துக் கொண்டிருக்கும் போது, திரைப்படத்துக்குத் தாவி, பிறகு செய்தித்தாளுக்குப் போய்,அரசியலுக்குச் சென்று,ஊழலுக்கு மாறி,விலைவாசியில் தொடர்ந்து, பழங்கள் காய்கறிகளின் நன்மையில் முடியலாம்.

topshead:மேல்/தலை(முனை).

topic group:தலைப்புக் குழு:நிகழ்நிலை விவாதப் பகுதி.ஒரு குறிப்பிட்ட கருப்பொருளில் பொதுவான ஆர்வம் உள்ளவர்களின் குழு.

top-level domain:மேல்நிலைக் களம்:இணைய முகவரிகளின் களப்பெயர் அமைப்பில்,பெரும்பாலான களப்பெயர்களுக்குப் பொருந்தக் கூடிய பரந்த வகையைக் குறிக்கும். தற்போது பயன்பாட்டில் உள்ள மேல்நிலைக் களப்பெயர்,.com,.edu,.gov,.net,.org,.mil,.int ஆகிய வற்றில் ஒன்றாக இருக்கிறது.

top-of-file:கோப்பின் தொடக்கம்: 1. ஒரு கோப்பின் தொடக்கம். குறிப்பிட்ட பயன்பாட்டில் உருவாக்கப்படும் கோப்புகளின் முதல் பைட் ஒரு சிறப்புக் குறியீடாக இருக்கும். அதைக் கொண்டே அக்கோப்பு குறிப்பிட்ட வகையைச் சார்ந்தது என்பதை அறியமுடிகிறது. 2. வரிசை முறைப்படுத்தப் பட்ட ஒரு தரவுத்தள அட்ட வணையில் முதல் ஏடு.

top of page:பக்கத்தின் மேற்பகுதி:ஒரு பக்கத்தின் மேல் பகுதி எங்கே இருக்கவேண்டும் என்று அச்சுப்பொறிக்குக் கூறுகின்ற ஒரு ஏற்பாடு. இதனால் சரியான இடத்தில் அச்சு துவங்கி காகிதத்தில் சரியாக முன்னேறி காகிதப் படிவத்தைப் பெறுகின்றது.

top margin:மேல் ஓரம்.

topology:கட்டமைப்பியல்;வடிவியல்;இடத்தியல்:ஒரு கட்டமைப்பின் வடிவமைப்பில் உள்ள பல்வேறு தகவல் தொடர்பு வழித்தடங்கள், சாதனங்கள் ஆகியவை ஒன்றோடொன்று இணைந்திருப்பதை வரை படமாகக் காட்டும் ஒரு கணினி கட்டமைப்பு.

.tor.ca:.டீஓஆர்சிஏ:ஒர் இணைய தள முகவரி கனடா நாட்டின் டொரன்டோ நகரைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

total:கூட்டுத் தொகை.

total bypass:முழு ஒதுக்கல்:செயற்கைக்கோள் தகவல் தொடர்புகளைப் பயன்படுத்தி உள்ளுர் மற்றும் நீண்டதொலைவு தொலைபேசிக் கம்பிகளை ஒதுக்குதல்.

total time:முழு நேரம். total transfer : முழு மாற்றல்.

touch pad : தொடு திண்டு : அழுத்த உணரிகளைக் கொண்ட ஒருவகை வரைகலை வரை பட்டிகை (tablet). கையால் தொட்டு காட்டியின் இடம் உணர்த்தப்படும். மின் காந்தத்தைப் பயன்படுத்தும் மிகு தெளிவு வரை பட்டிகைகளும் உள்ளன.

touch screen : தொடுதிரை : கை விரல்களைப் பயன்படுத்தி திரையில் ஒரு குறிப்பிட்ட வாய்ப்பு அல்லது ஒரு பட்டியலின் பொருள் அல்லது இடை முகத்தைத் தேர்ந்தெடுத்துக் காட்டப் பயன்படுத்தப்படுவது.

touch sensitive : தொடு உணர்வு.

touch sensitive screen : தொடு உணர் திரை : 1. திரையில் குறிப்பிட்ட இடத்தில் விரலாலோ அல்லது வேறு பொருளாலோ தொடுவதன் மூலம் கட்டளைகளை அனுப்ப உதவும் காட்சித்திரை. 2. ஒரு ஒளிக்காட்சிக் குழாயின் முன்னால் தெளிவான குழைமத்துளைச் (பிளாஸ்டிக்) சேர்த்துக் கொண்டுள்ள சிறப்பு வகை ஒளிக்காட்சி. எந்த இடத்தில் திரையில் தொடப்படுகிறது என்பதை திரை தெளிவாகக் கண்டறிந்து குறிப்பிடப்பட்ட பணியைக் கணினி செய்கிறது.

touch sensitive tablet : தொடு உணர் பலகை : வரைகலை மற்றும் பட வடிவில் உள்ள தரவுகளை எண் வடிவில் கணினி பயன்படுத்தும் வகையில் தரும் உள்ளிட்டுச் சாதனம். விரல் அல்லது எழுத்தாணி மூலம் பலகையைத் தொட்டால் வரைகலை தரவுகளை உருவாக்க முடியும்.

touch tone telephone : தொடு குரல் தொலைபேசி : அழுத்தும் பொத்தான் தொலைபேசி, தொலை செயலாக்க அமைப்புகளில் பயன்படுத்தப்படுவது.

tower : கோபுரம் : அகலத்தை விட அதிகமான உயரம் உடைய தரையில் நிற்கும் பெட்டி. மோட்டோரோலா 68, 000 குடும்ப மையச் செயலகங்களைப் பயன்படுத்தும் என்சி ஆரின் யூனிக்ஸ் சார்ந்த தனி மற்றும் பல் செயலகக் கணினி அமைப்புகளின் கோபுர வரிசை தனியாக நிற்கும் தரையில் வைக்கப்படும். பெட்டியைப் பயன்படுத்தும் தனிநபர் கணினிகளைப் பற்றிய ஒரு பொதுப் பெயர். மேசை இடத்தைக் குறைக்க இத்தகைய வடிவமைப்பு திட்டமிடப்பட்டது.
கோபுரம்


முகப்பும், விசைப்பலகையும் மேசைமீது வைக்கப்படும்.

TPI : டீபீ. ஐ : tracks per inch என்பதன் குறும்பெயர். காந்த வட்டுகளில் சேமிப்பின் அடர்த்தியை அளக்கப் பயன்படுத்தப்படுவது.

TP monitor : டீபீ கண்காணிப்பி : தொலை செயலாக்கம் (Tele processing) அல்லது பரிமாற்றச் செயலாக்கம் (Transaction Processing) என்பதன் சுருக்கம். முனையங்களுக்கும் (அல்லது கிளையன்களுக்கும்), பெருமுகக் கணினிக்கும் (அல்லது வழங்கனுக்கும்) இடையே நடைபெறும் தகவல் பரிமாற்றத்தைக் கட்டுப்பாடு செய்யும் ஒரு நிரல். ஒன்று அல்லது மேற்பட்ட நிகழ்நிலைப் பரிமாற்றச் செயலாக்கப் (OLTP) பயன்பாடுகளுக்கு முரணில்லாச் சூழலை வழங்குகின்றன.

. tr : . டீஆர் : ஒர் இணைய தள முகவரி துருக்கி நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

trace : தேடு ; சுவடு ; பதி வடையாளம் : 1. பரவு காட்சித் திரையில், ஒளிக் கற்றையின் பாதையை வருடல் (scan) செய்வது. 2. மின்னணு பாகங் களை மின்சுற்று அட்டைகளில் இணைக்கும் மின்னோட்டப் பாதை.

trace dependents : சார்புகளைத் தேடு : எம்எஸ் எக்ஸெல்லில் ஒரு கட்டளை.

trace error : பிழை தேடு.

trace precedents : முன் காரணிகளைத் தேடு : எம்எஸ் எக்ஸெல்லில் ஒரு கட்டளை.

tracing routine : தேடும் வாலாயம் : ஒரு நிரல்தொடரின் இயக்கத்தின்போது கணினி இயக்கப் பதிவகங்களில் அடங்கியிருப்பவற்றின் நேரப்படியான வரலாற்றைக் கூறும் வாலாயம். ஒரு முழுமையான தேடும் வாலாயம் மூலம் ஒவ்வொரு முறை நிரல் செயல்படுத்தப் படும்போதும் பாதிக்கப்படும் இருப்பிடங்கள் மற்றும் அனைத்துப் பதிவகங்களின் தகுதியைக் கண்டறிய முடியும்.

track : ஓடுபாதை;தட வரிசை;தடம் : 1. காந்த நாடா அல்லது காந்தவட்டு போன்ற தொடர்ச்சியான அல்லது சுழலும் ஊடகம் மீது தரவுகள் செல்லும் பாதை. 2. ஒளிக்காட்சியில் காட்டப்படும் சுட்டி (கர்சர்),

ஓடுபாதை


எழுத்தாணி, சுட்டுப்பொறி (மவுஸ்) அல்லது பிற உள்ளிட்டுச் சாதனத்தில் நகரும் நிலையைப் பதிவு செய்தல் அல்லது பின்தொடர்தல்.

track address : தடவரிசை முகவரி.

track ball : தடக்கோளம்;கோளச் சுட்டி : ஒரு கணினி காட்சித் திரையில் சுட்டியைத் தேடப் பயன்படுத்தும் சாதனம். ஏற்றும் சாதனம்,


தடக் கோளம்

பொதுவாக ஒரு பெட்டி, ஒரு பந்தில் அமைக்கப் படுகிறது. பயனாளர் அந்தப் பந்தைச்சுழற்றினால் சுட்டி அதே வேகத்தில் நகரும். பந்தின் திசையிலேயே அது நகரும்.

track changes : மாற்றங்கள் குறித்து வை : எம்எஸ் வேர்டில் ஒரு கட்டளை.

track density : தட அடர்வு.

tracking : தேடல் : ஒளிப்பேனா, மின்னணு பேனா, கோளச் சுட்டி அல்லது சுட்டுப்பொறி ஆகியவற்றைக் கொண்டு காட்சித்திரையின் மேற்பகுதியில் சுட்டியையோ அல்லது வேறு குறியீட்டையோ நகர்த்துதல்.

track pad : தடத்திண்டு : தொடுதலை உணரும் திறனுள்ள சிறிய தட்டை வடிவத் திண்டால் ஆன ஒரு சுட்டுச் சாதனம். பயனாளர்கள் திரையில் தோன்றும் காட்டியை இங்குமங்கும் நகர்த்த, தடத் திண்டின்மீது விரலை வைத்து நகர்த்தினால்போதும். இத்தகைய சாதனம் பெரும்பாலும் மடிக் கணினிகளில் பொருத்தப் பட்டுள்ளன.

track pitch : தட நெருக்கம்.

track recovery : தட மீட்பு.

track reverse : தடப் பின்னோட்டம்.

track sector : தடப் பிரிவு.

track selector : தடத் தேர்வுக் கருவி.

tracks per inch : ஓர் அங்குலத்தில் தடங்களின் எண்ணிக்கை : ஒரு வட்டில் ஒர் அங்குல ஆரப்பரப்பில் பதியப்பட்டுள்ள ஒரு மைய வட்டத்தடங் களின் (தரவுச் சேமிப்பு வளையங்கள்) அடர்த்தி. அதிக அடர்த்தி (அதிக எண்ணிக்கையிலான தடங்கள்) இருப்பின், வட்டில் அதிகமான தகவலைப் பதிய முடியும்.

track time elapsed : தட நேர முடிவு.

track time remaining : தட நேர மிச்சம்.

tractor : தாள் இழுப்பி ; இழுவைத் தாள் ஊட்டி : அச்சுப் பொறிமூலம் தொடர்ந்து அனுப்பப்படும் காகிதத்தை நகர்த்துகின்ற அச்சுப்பொறியில் உள்ள ஒரு பகுதி.

tractor feed : இழுவைத்தாள் ஏற்பி : அச்சுப்பொறியின் பகுதியாக உள்ள ஒரு மின்னியந்திரச் சாதனம். இது தொடர்படிவ காகிதத்தை அச்சு எந்திரப் பகுதிக்கு அனுப்புகிறது.

                      இழுவைத் தாள் ஏற்பி டிராக்டர் ஏற்புப் பகுதியில் உள்ள துளைகள் காகிதத்தை வாங்கி நகர்த்துகிறது.

trademark : வணிகச் சின்னம் : ஒரு நிறுவனம் தானே தயாரிக்கும் தனியுரிமை விற்பனைப் பொருட்களை அடையாளங் காட்டும் ஒரு சொல், சொல் தொடர், குறியீடு, அல்லது ஒரு படிமம் (அல்லது இவற்றுள் சில வற்றின் சேர்க்கை). பெரும்பாலும் வணிகச் சின்னத்தின் அருகில் TM அல்லது R என்ற குறியீடு இருக்கும்.

trade off : ஈடுகட்டல்.

trade show : வணிகக் கண்காட்சி;விற்பனைப் பொருட்காட்சி : பல்வேறு விற்பனை நிறுவனங்கள் சேர்ந்து தங்களுடைய விற்பனைப் பொருட்களை பொதுமக்களுக்குக் காட்சிப்படுத்தல்.

traffic : போக்குவரத்து : ஒரு தகவல் தொடர்பு இணைப்பு அல்லது தடத்தில் நடைபெறும் தகவல் பரிமாற்றங்கள்.

traffic intensity : போக்குவரத்து அடர்வு.

traid : டிரைட் : மூன்று துண்மிகள், எட்டியல்கள் அல்லது எழுத்துகள் போன்று மூன்றினைக்கொண்ட தொகுதி.

trail : செல் தடம்.

trailer : முன்னோட்டம் : 1. தரவு செயலாக்கத்தில், ஒரு கோப்பின் கடைசிப் பதிவேடு. அப்பதிவேட்டின் கோப்பில் உள்ள பதிவேடுகளின் எண்ணிக்கையையும் இடைநிலை கூட்டல்களையும் கொண்டிருக்கும். 2. தரவு தொடர்புகளில், ஒரு குறியீடு அல்லது குறியீடுகளின் தொகுதி. அனுப்பப்பட்ட செய்தியின் கடைசிப்பகுதி இதில் இருக்கும்.

trailer edge : முன்னோட்ட விளிம்பு.

trailer label : முன்னோட்ட வில்லை : ஒரு கோப்பைப் பற்றிய அடையாளத் தகவலைக் கொண்டிருக்கும் அதற்கு முந்தைய கோப்பின் கடைசிப் பதிவேடு.

trailer record : முன்னோட்ட ஏடு.

trailing edge : பின்விளிம்பு : ஒரு மின்சாரச் சமிக்கையின் பிற்பகுதி. ஒர் இலக்கமுறை சமிக்கை நிகழ்நிலையிலிருந்து அகல்நிலைக்கு மாறும்போது அதன் பின்விளிம்பு நிலை மாற்றத்தைக் குறிக்கிறது.

train1 : தொடர், வரிசை : தொடர் வரிசையாய் அமைந்திருக்கும் உருப்படிகள் அல்லது நிகழ்வுகள். (எ-டு)இருமச் சமிக்கைகளை அனுப்பிடும் போது இடம்பெறும் இலக்க முறைத் துடிப்புகள்.

train2:பயிற்று,கற்பி:ஒரு மென்பொருள் அல்லது வன் பொருள் தயாரிப்பை எவ்வாறு பயன்படுத்துவது என்று இறுதிப் பயனாளருக்குக் கற்றுக் கொடுத்தல்.

train printer:தொடர் அச்சுப்பொறி:ஒரு தடத்தில் உள்ள குண்டு அச்சுகளைப் பயன்படுத்தும் வரி அச்சுப்பொறி.

training:பயிற்சி:1.ஒரு குறிப்பிட்ட பொருள் பற்றிய தரவுகளைக் கற்றுத்தரல்.மென் பொருளைப் பொறுத்தவரை ஒரு பயன்பாட்டில் காணப் படும் அனைத்துக் கட்டளைகளின் மீது விளக்கம் தரப்படும். 2. தரவு தொடர்புகளில்,இரண்டு மோடெம்கள் தங்களுக்குள் சரியான வரைமுறை மற்றும் செலுத்து வேகத்தை முடிவு செய்தல். 3. குரல் அறியும் அமைப்புகளில்,ஒரு குரலைக் கண்டறிவதற்காக ஒரு வரின் மாதிரி களையும் அமைப்புகளையும் பதிவு செய்தல்.

transaction:பரிமாற்றம்;செயல் பரிமாற்றம்;செயலாக்கம்;செய்வினை: நடவடிக்கை அல்லது வேண்டுகோள். நிரல்கள்,வாங்கல்கள்,மாற்றல்கள், சேர்த்தல்கள் மற்றும் நீக்கல்கள் ஆகியவை ஒரு வணிகச் சூழ் நிலையில் பதிவு செய்யப்படும் பரிமாற்றங்களின் சான்றுகள். கேள்விகளும் மற்ற வேண்டுகோள்களும்கூட கணினிக்குப் பரிமாற்றங்கள் என்றாலும் அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பதிவு செய்யப்படுவதில்லை என்பதால் அவை பரிமாற்றங்களாகக் கருதப்படமாட்டாது. ஒரு கணினி அமைப்பின் வேகம் மற்றும் அளவை முடிவுசெய்ய பரிமாற்ற அளவே பெரும் காரணியாகக் கருதப்படும்.

transaction code:பரிமாற்றக் குறியீடு.

transaction document:பரிமாற்ற ஆவணம்:வணிகப் பரிமாற்றத்தின் ஒரு பகுதியாக வெளியிடப்படும் ஆவணம். சான்று வாங்கும் நிரல்,சம்பளக் காசோலை,விற்பனைப் பற்றுச்சீட்டு அல்லது வாடிக்கையாளர் சேவை.

transaction file:பரிமாற்றக் கோப்பு.

transaction journal:பரிமாற்ற இதழ்.

transaction lock:செயலாக்கப் பூட்டு,செய்வினைப் பூட்டு. transaction oriented processing : பரிமாற்றம் தொடர்பான ஆய்வு.

transaction processing : பரிமாற்றச் செயலாக்கம்.

transaction processing council : பரிமாற்றச் செயலாக்கக் குழு : வரையறுக்கப்பட்ட தர நிர்ணயிப்புகளை குறிக்கோளாகக் கொண்ட வன்பொருள், மென்பொருள் விற்பனையாளர்களின் குழு.

transaction programme : பரி மாற்றச் செயல்பாடு.

transaction terminal : பரிமாற்ற முனையம் : வங்கிகள் சில்லரைக் கடைகள், ஆலைகள் மற்றும் பணியிடங்களில் பரிமாற்றத் தரவுகளை அவை ஆரம்பிக்கும் இடத்தில் சேகரிக்கப் பயன்படுத்தப்படும் முனையம். சான்று : விற்பனை இட (POS) முனையங்கள் மற்றும் தானியங்கி டெல்லர் எந்திரங்கள் (ATMs).

transaction trailing : பரிமாற்றச் சுவடு.

transborder : எல்லை கடந்த.

transceiver : அனுப்பி வாங்கி : பல வடிவங்களில் வரும் உவம அல்லது துடிப்பு சமிக்கைகளை அனுப்பிப் பெறும் எந்திரம். சான்று ஒரு கட்டமைப்பு ஏற்பியில் உள்ள தகவல் தொடர்பு செயற்கைக்கோள்.

transcribe : புற செமிப்பக படியெடுப்பி.

transcript : எழுத்துப்படி.

transcription : படியெடுப்புக் கருவி.

transctional application : பரி மாற்றப் பயன்பாடு.

transcription machine : எழுத்துப் படி பொறி.

transducer : விசைமுறை மாற்றமைவுக் கருவி : ஒரு உள்ளிட்டு சமிக்கையை வேறு ஒரு வடிவத்தில் வெளியீட்டு சமிக்கையாக மாற்றித் தரும் தன்மை அல்லது சாதனம்.

transfer : மாற்றல் : 1. ஒரு பொருள் அல்லது தர்வு தொகுதியை படித்தல், படியெடுத்தல், அனுப்புதல் அல்லது சேமித்தல். 2. கட்டுப்பாட்டை மாற்றுதல்.

transfer address : மாற்றல் முகவரி.

transfer, conditional : நிபந்தனை மாற்றல்.

transfer control, conditional : நிபந்தனைக் கட்டுப்பாடு மாற்றல்.

transfer rate : மாற்றல் விகிதாம்;மாற்றல் வேகம் : அணுகப்பட்ட தரவு ஒரு சாதனத்திலிருந்து வேறு ஒன்றுக்கு எந்த வேகத்தில் நகர்த்தப்படுகிறது என்பது.

transfer, serial : தொடர் மாற்றல்.

transfer statement : இடமாற்றுக் கூற்று;மாற்றல் கூற்று : ஒரு நிரலாக்க மொழியில், நிரலின் ஒட்டத்தில், கட்டுப்பாட்டை, நிரலின் இன்னொரு பகுதிக்குத் திருப்பிவிடும் கட்டளை. பெரும்பாலான மொழிகளில் GOTO என்னும் கட்டளை இப்பணிக்குப் பயன்படுத்தப்படுகிறது.

transfer time : பரிமாற்ற நேரம் : தரவு பரிமாற்றத்தில் தரவு பரிமாற்றம் தொடங்கிய நேரத்துக்கும் முடிந்த நேரத்துக்கும் இடைப்பட்ட நேரம்.

transfer, total : முழு மாற்றல்.

transform : உருமாற்று : அதன் பொருளை மாற்றாமல் தரவின் வடிவத்தை மாற்றுதல்.

transform algorithm : மாற்றல் நெறிமுறை : ஒரு பதிவு விசையில் எண் மதிப்பீடுகளைச் செய்து அதன் முடிவை அந்தப் பதிவேட்டின் முகவரியாகப் பயன்படுத்துவது.

transformation : உருமாற்றம் : கணினி வரைகலையில், ஒரு திரை உருவத்தின் அளவு அல்லது இடத்தின் மீது செய்யப்பட்ட மாற்றல்களில் ஒன்று. மூன்று அடிப்படை மாறுதல்களாக மொழி பெயர்ப்பு, அளவிடல் மற்றும் சுழற்சி ஆகியவற்றைக் கூறலாம்.

transformer : மின்மாற்றி;உருமாற்றி : கணினி மின்வழங்கலில் 115 வோல்ட்டுகள், 60 ஹெட்சுகள் அதைவிடக் குறைந்த ஆனால் கணினி கருவி பயன் படுத்தக்கூடிய பொருத்தமான மின்னழுத்தமாக மாற்றித் தருதல்.

transient : மாறுகின்ற;நிலையிலா, மாறுகுணம் : 1. மாற்றத்துக்குப் பிறகு சிறிது நேரம் அப்படியே இருக்கின்ற நிலையில் ஏற்படும் திடீர் மாற்றம் பற்றி ஆராய்வது. 2. மின்சக்தி அல்லது சமிக்கையில் திடீரென்று எழுச்சி ஏற்பட்டு அதனால் தவறான சமிக்கையும், பாகங்கள் கோளாறுகளும் ஏற்படுதல்.

transient error : மாறும்பிழை : ஏதாவது ஒருமுறை மட்டுமே ஏற்படுவது போன்றபிழை. அது மீண்டும் திரும்ப ஏற்படாது.

transient portion : தற்காலிகப் பகுதி, மாறும் பகுதி.

transient programme : மாறும் நிரல் தொடர்;மாறுநிலை செயல் முறை : கணினி அமைப்பின் முதன்மை நினைவகத்தில் தங்காத நிரல் தொடர். தேவைப்படும்போது நாடா அல்லது வட்டிலிருந்து நிரல் தொடர்களை கணினி படிக்கும்.

transient state : மாறும்நிலை : ஒரு சாதனம் அதன் முறைகளை மாற்றும் சரியான நேரம். சான்று : 0 முதல் 1-க்கு அல்லது அனுப்புதலில் இருந்து பெறுதலுக்கு.

transient suppressors : மாறும் அழுத்திகள்;மாறுநிலை ஒடுக்கி : சிறு வோல்டேஜ் பிழைகளை சமாளிக்கும் சாதனம். நிலையான மின்னோட் டத்தைத் தருகிறது. குறுகிய நேர உயர்வோல்டேஜ் சமயங்களில் கருவிகளை அழுத்திகள் பாதுகாக்கின்றன.

transistor : டிரான்சிஸ்டர்;மின்மப் பெருக்கி : இடம்மாற்று (transfer), மிந்தடை (resistor) என்ற இரு சொற்களின் கூட்டு. திண்ம நிலை மின்சுற்றுப் பொருள்கூறு. மூன்று முனைகளுடன் இருக்கும். (1) அடி வாய் (base). (2) உமிழி (emitor). (3) திரட்டி (collector). இதில் பாயும் மின்னழுத்தம் (Voltage) அல்லது மின்னோட்டம் (Current) வேறொரு மின்னோட்டத்தைக் கட்டுப்படுத்தும். மின்மப் பெருக்கி பல்வேறு பணிகளைச் செய்கிறது. (எ. டு) திறன்பெருக்கி (amplifier), நிலை மாற்றி (switch), அதிர்வி (oscillator). நவீன மின்னணுவியலில் தவிர்க்கப்பட முடியாத மிக அடிப்படையான பொருள் கூறு ஆகும்.

transistor : transistor logic (TTL) : மின்மப் பொறி-மின்மத் தருக்க அளவை (டீடீஎல்) : இரு துருவ சாதனங்களின் மூலம் குறைந்த சக்திகளும் அதிவேக அளவை மின்சுற்றுகளால் உருவாக்கப்படும் ஒருங்கிணைந்த மின்

பலவகையான மின்மப் பொறிகள்
சுற்று அளவை. பொதுவாக குறைந்த சக்தி செக்கோட்டி மின்சுற்றுகள் வேகமாக இயங்கினும் அதிக செலவாகும். ஏனென்றால் தங்கமுலாம் பூசிய செக்கோட்டி டயோடுகள் ஒவ்வொரு டீடீஎல் தட உள்ளீட்டுக்கும் தேவைப்படுகின்றன.

transit delay : இடங்கடப்புச் சுணக்கம்.

transition : மாறுகை.

transit symbol : கடவுக் குழூஉக்குறி.

translate : மொழிபெயர் : பொருளை மாற்றாமல் ஒரு வகையான வடிவத்திலிருந்து வேறு ஒரு வடிவத்துக்கு தரவுகளை மாற்றுதல்.

translation : மொழிபெயர்ப்பு : 1. கணினி வரைகலையில், ஒரு உருவத்தை திரையில் ஒரு புதிய இடத்துக்கும் மாற்றுதல். மொழி பெயர்ப்பின்போது, உருவத்தின் ஒவ்வொரு புள்ளியும் அதே வேகத்திலேயே நகரும்.

translation time : பெயர்ப்பு நேரம்.

translator : மொழிபெயர்ப்பி : ஒரு மொழி அல்லது குறியீட்டிலிருந்து வேறு ஒன்றுக்கு மொழிபெயர்ப்புகளைச் செய்யும் கணினி நிரல் தொடர்.

transliteration : ஒலிபெயர்ப்பு : Computer என்ற சொல்லைக் கம்ப்யூட்டர் என எழுதுவது.

transmission : பரவுதல்;செலுத்துதல்;கடத்துதல்;அனுப்புதல்;அனுப்பீடு : ஒரிடத்திலிருந்து தரவுகளை அனுப்புதல் மற்றும் வேறு ஒரு இடத்திலிருந்து தரவுகளைப் பெறுதல். மூலத் தரவுகளை பெரும்பாலும் மாற்றாமல் அனுப்புவது.

transmission, asynchromous data : ஒத்திசையா தரவுப் பரபபுகை.

transmission, data : தரவுப் பரப்புகை.

transmission facility : பரப்பும் வசதி : தொலை முகப்புகளுக்கும் கணினிகளுக்கும் இடையிலான தரவுத் தொடர்புகளின் இணைப்பு. தரவுத் தொடர்புக் கம்பிகள், நுண்ணலை பரப்பும் கம்பிகள், தரவுத் தொடர்பு செயற்கைக் கோள்கள், லேசர் தொலை பேசிக் கம்பிகள், ஒளி இழைகள், அலைவழிகாட்டிகள் போன்றவை இவ்வகையைச் சேர்ந்தவை.

transmission medium : செலுத்து ஊடகம்.

transmission retry : பரப்ப மறு முயற்சி. transmission speed : செலுத்து வேகம்;பரப்பு வேகம்.

transmission time : செலுத்து காலம்;அனுப்பீடு காலம்.

transmission time protection : செலுத்துகாலப் பாதுகாப்பு;இணை வழியில் பாதுகாப்பு.

transmit : அனுப்பு;பரப்பு : ஒரிடத்திலிருந்து தரவுகளை அனுப்பு அல்லது வேறு ஒரு இடத்திலிருந்து தரவு பெறு.

transmitter : அனுப்பி;பரப்பி;செலுத்தி;செய்தி பரப்பும் சாதனம் : மின்னியல் முறையில் குறியாக்கம் செய்யப்பட்ட தரவுவை வேறோர் இடத்துக்கு அனுப்புவதற்காக வடிவமைக்கப்பட்ட மின்சுற்று அல்லது மின்னணுச் சாதனம்.

transmitting : அனுப்புகின்ற : ஒரு நபரிடமிருந்து வேறொரு நபருக்கோ அல்லது ஒரு கணினியிடமிருந்து வேறொரு கணினிக்கோ தரவுகளை அனுப்பும் செயல்முறை. தொலை வெளிப்புற உறுப்பில் இருந்து கணினிக்கு அனுப்புவதுகூட இதில் சேரும்.

transparent : தெரியக்கூடிய : பயனாளர்களுக்கு அல்லது பிற சாதனங்களுக்குப் பார்க்க முடியாத ஒரு செயல்முறை. பயனாளர் தலையீடின்றி செய்யக்கூடிய கணினி இயக்கத்தைப் பற்றிக் கூறுவதால் இது பயனாளருக்குத் தெரியக்கூடியது.

transperency adapter : மறைபிலாத் தகவி.

transponder : செலுத்து அஞ்சலகம் : ஒரு தரை நிலையத்திலிருந்து வரும் சமிக்கைகளைப் பெற்று அதை ஒரு பெறும் நிலையத்திற்குப் பிரதிபலிக்கக்கூடிய செயற்கைக் கோளில் உள்ள பெரிதாக்கி.

transportable computer : அனுப்பக்கூடிய கணினி : எடுத்துச் செல்லக் கூடிய சிறிய கணினி. பொதுவாக சுமார் 10 கிலோவுக்குக் குறைவாக எடை உடையது.

transport layer : போக்குவரத்து அடுக்கு : ஐஎஸ்ஓ/ஓஎஸ்ஐ அடுக்கில் நான்காவது அடுக்கு. பிணைய அடுக்குக்கு நேர் மேலே உள்ளது. சேவையின் தரத்துக்கும், தரவுவைத் துல்லியமாக வினியோகிக்கவும் உதவுகிறது. பிழையைக் கண்டறிதல், அவற்றைச் சரிப்படுத்தும் பணிகள் இந்த அடுக்கில் நடை பெறுகின்றன.

transport protocol : போக்குவரத்து நெறிமுறை : இணைப்பு ஏற்படுத்துவதற்கும் எல்லா தரவுகளும் பாதுகாப்பாக சென்று சேர்ந்து விட்டனவா என்று பார்ப்பதற்குமான தரவு தொடர்பு விதிமுறை. ஓஎஸ்ஐ மாதிரியின் 4-வது பகுதியில் இது வரையறுக்கப்பட்டுள்ளது.

transpose : இடைமாற்றம் : தரவுகளின் இரு பொருள்களை ஒன்றுக் கொன்று மாற்றிக் கொள்ளுதல்

transpose error : இடமாற்றப்பிழை.

transputer : ட்ரான்ஸ்பியூட்டர்;சில் கணினி : மின்மப்பெருக்கி (Transistor), கணினி (Computer) ஆகிய இருசொற்களின் கூட்டுச்சொல். ஒற்றைச் சிப்புவில் ஆன முழுக்கணினி. ரேம் நினைவகம் மையச் செயலகம் அனைத்தும் அடங்கிய ஒற்றைச் சிப்பு. இணைநிலைக் கணிப்பணி அமைப்புகளுக்கு அடிப்படையான கட்டுமான உறுப்பாகும்.

transreciver : பெற்றனுப்புச் சாதனம்;பெற்றனுப்பி.

transversal : ஊடு வெட்டுக்கோடு : ஒரு நிரல் தொடரில் பிழை நீக்குவதற்காக ஒவ்வொரு சொற்றொடரையும் செயல்படுத்துதல்.

trap : பொறி : தெரிந்த இடத்திற்கு நிரல் தொடரின் நிபந்தனையுடன் கூடிய தூண்டுதல். நிரல் தொடர் இயக்கப்படும் போது பொறி வைக்கப் பட்டுள்ள இடத்திற்குப் போனவுடன் இது தானாகவே செயல்படுத்தப்படும்.

trapdoor : பொறிக்கதவு : தரவுவைப் பின்னர் பெறலாம் மாற்றலாம் அல்லது அழிக்கலாம் என்ற நோக்கத்தில் ஒரு தரவு செயலாக்க அமைப்பில் வேண்டுமென்றே உருவாக்கப்படும் பிரிவு.

trapping : பொறிவைத்தல் : ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு மாற்றும் வழக்கமான நிரல் தொடர் ஓட்டத்தில் கட்டுப்பாடு வைத்துக் கொள்ளும் வன்பொருள் வசதி.

Trash : குப்பைத் தொட்டி, குப்பைக் கூடை : மெக்கின் டோஷ் ஃபைண்டர் பயன்பாட்டில் குப்பைத் தொட்டிபோல் தோற்றமளிக்கும் ஒரு சின்னம். ஒரு கோப்பினை அழிக்க விரும்பும் பயனாளர் அக்கோப்புக்குரிய சின்னத்தை இழுத்துவந்து குப்பைத் தொட்டியில்விட வேண்டும். குப்பைத் தொட்டியில் இடப்பட்ட கோப்பு உண்மையில் அழிக்கப்படாது. தேவையானபோது மீட்டுக் கொள்ளலாம். குப்பைத் தொட்டிமீது இரட்டைச் சொடுக்கிட்டுத் திறந்து மீட்க வேண்டிய கோப்பினை குப்பைத் தொட்டி யிலிருந்து இழுத்து வெளியேவிட வேண்டும். குப்பைத் தொட்டியைக் காலியாக்கு (Empty Trash) என்னும் கட்டளை மூலம் அதிலுள்ள கோப்புகளை நிரந்தரமாக நீக்கிவிடலாம்.

trash can : கழிவுக் கலம் : கோப்புகளையும், மடிப்புத் தாள்கள் மற்றும் பயன்பாடுகளையும் நீக்குவதற்கும் நெகிழ்வட்டுகளை வெளியேற்றுவதற்கும் பயன்படும் மெக்கின்டோஷ் உருப்பொருள்.

traverse : பயணித்தல்; ஊடு கடத்தல் : நிரலாக்கத்தில், மரவுரு அல்லது அது போன்ற தரவுக் கட்டமைப்புகளில் அனைத்துக் கணுக்களையும் ஒரு குறிப்பிட்ட வரிசையில் அணுகுவதைக் குறிக்கும்.

trays : இழுப் பறைகள்.

TRC : டீஆர்சி : பட்டி தேடுகுறி : Terminal Reference Character என்பதன் குறும் பெயர்.

tree : மரம் : சுழற்சிகள் இல்லாது இணைக்கப்பட்ட வரை படம். மர வரைபடம் என்றும் அழைக்கப்படுகிறது.

tree diagram : மர வரைபடம்.

tree network : மர பிணையம்;மரக்கட்டமைப்பு : வரிசைமுறை முனைகளில் கட்டுப்பாடு அமைக்கப்படும் கட்டமைப்பு. குடும்ப மரத்தின் தலைகீழ் வடிவ அமைப்பாக காகிதத்தில் தகவல் தொடர்பு குறிப்பிடப் படுகிறது. கட்டமைப்பின் உச்சம் அல்லது மரத்தின் மேற்பகுதியானது கட்டமைப்பின் அடிப்படைக் கட்டுப்பாட்டினைக் குறிப்பிடுகிறது. இடைப்பட்ட கிளைகளில் கீழ்ப்பகுதியில் சில நிலைகளில் கட்டுப்பாடு தரப்படலாம்.


மரபிணையம்
tree sort : மர வகைப்படுத்தல் : ஒரு மரத்தின் முனைகளாகக் கருதப்படுபவற்றை மாற்றக்கூடிய வகைப்படுத்தும் முறை. ஒருபொருள் வேர்முனையை அடைந்தவுடன், கடைசி இலை முனையுடன் அது பரிமாற்றிக் கொள்ளப்படுகின்றது.

tree structure : மர அமைப்பு : தரவுகளை ஒருங்கமைப்பின் ஒரு வடிவமான வரிசைமுறை வடிவமைப்பிற்கான வேறொரு பொருளின் பெயர்.

trellis-coded modulation : பின்னல்-குறிமுறைப் பண்பேற்றம் : 900தள்ளியிருக்கும் கால்வட்ட வீச்சுப் (Amplitude) பண்பேற்றத்தின் மேம்பட்ட வடிவம். வினாடிக்கு 9600 துண்மி (பிட்) அல்லது அதற்கும் மேற்பட்ட வேகத்தில் செயல்படும் இணக்கிகளில் பயன் படுத்தப்படுகிறது. சுமப்பி அலையின் பாகை, வீச்சு ஆகிய இரண்டின் மாற்றங்களுக்கு இயைந்தவாறு, தகவலானது தனித்த துண்மி (பிட்டு) தொகுதிகளாக குறியாக்கம் செய்யப்படுகிறது. பிழைச் சரிபார்ப்புக்கான துண்மிகளும் உடன் சேர்க்கப்படுகின்றன.

trend line : போககுக்கோடு : தெரிந்த தகவலுக்கு அப்பால் போக்குகளைக் கண்டறிந்து உரைப்பதற்காக தரவு வரிசைகளைக் கணித்து விரிவாக்கல்.

triad : மும்மை.

trial version : வெள்ளோட்டப் பதிப்பு;முன்னோட்டப் பதிப்பு.

tribble click : முச் சொடுக்கி.

trichromatic : மூவண்ணத் திறமான : மூவண்ணக் கலவை : கணினி வரைகலையில், மூவண்ணக் கலவை என்பது பொதுவாக மூன்று அடிப்படை நிறங்கள் (சிவப்பு, பச்சை மற்றும் நீலம்) ஒன்றாகச் சேர்ந்து மற்ற நிறங்களை உருவாக்குவதைக் குறிப்பிடுகிறது.

trigger : விசை வில் : ஒரு இயக்கப்பிடியின் மேலுள்ள பொத்தான். ஒரு நிகழ்ச்சியை ஆரம்பிப்பதற்காக ஏவுகணையைச் சுருக்கி அல்லது ஒரு சங்கடத்தைத் துண்டுதல் போன்றவற்றைச் செய்ய ஒளிக்காட்சி விளையாட் டுகளில் பயன் படுத்தப்படுவது.

trigonometry : கோணவியல் : முக்கோணங்களின் பக்கவாட்டுகள் மற்றும் கோணங்கள் ஆகியவற்றின் உறவுகள் மற்றும் இந்த உறவுகளுக்கான பல்வேறு குறிக்கணக்கியல் முறை பணிகள் ஆகியவைப் பற்றி ஆராயும் கணிதவியலின் பிரிவு. சரியான முக்கோணத்தில் அடிப்படை உறவுகளை கோணவியல் பணிகள் என்று அழைக்கப்படு கின்றன. பல நிரல் தொடரமைப்பு மொழிகளில் இவை நூலக வாலாயங்களாகக் குறிப்பிடப்படுகின்றன.

trim : ஒழுங்கமை.

triple precision : மூன்று துல்லியம்;மும்மை சரிநுட்பம் : கணினி வழக்கமாகப் பயன்படுத்துகின்ற, ஒரு பொருளில் மூன்று மடங்கு எண் களைப் பயன்படுத்தி வைத்திருத்தல்.

tripie twist : மும்முறுக்கு : மேம்பட்ட தெளிவுக்காக படிகங்களை 260 டிகிரிகளில் முறுக்குகின்ற மீ முறுக்கு மாறுபாடு.

tristate logic : மூன்று நிலை தருக்கம்;முன்நிலை தருக்க முறை : ஒருவகை சிறு மின்மப் பெருக்க தருக்க வடிவம். இதில் உள்ளீடு மற்றும் வெளியீடு வேலைகள் மூன்று நிலைகளை எடுத்துக் கொள்ளலாம். இரண்டு வழக்கமான குறைந்த ஒட்டம் மற்றும் 1, 0 நிலைகளை ஏற்றல். பல மூன்று நிலை தருக்க சாதனங்களுக்கு நேரப்பங்கீட்டு தடயக் கம்பிகளை இது அனுமதிக்கிறது.

tristimulus values : முத் தூண்டல் மதிப்புகள் : பிற நிறங்களை உருவாக்கக் கலக்கப்படும் மூன்று அடிப்படை நிறங்கள் ஒவ்வொன்றின் அளவுகள்.

trojan horse : ட்ரோஜன் குதிரை : கணினி கிருமி (virus) களில் ஒரு வகை. கணினி குற்றவாளி ஒருவர் வேறொருவரின் நிரல் தொடரில் நிரலை விட்டு வைப்பார். நிரல் தொடர் வழக்கமானது போலவே செயல்பட்டு நாம் சேமித்து வைத்துள்ள கட்டளைத் தொடர்களையும் தரவுகளையும் பழுதாக்கி விடக் கூடியது.

trol : தூண்டில் செய்தி : ஒரு செய்திக் குழுவில் அல்லது பிற நிகழ்நிலைக் கலந்துரையாடல்களில், சூடான பதிலை எதிர் நோக்கி அஞ்சலிடும் சர்ச்சைக் கிடமான செய்தி. எடுத்துக்காட்டாக, வளர்ப்பு விலங்கு விரும்பிகளின் செய்திக்குழுவில் பூனையைத் துன்புறுத்துவதை நியாயப் படுத்தி ஒரு கட்டுரையை வெளியிடல்.

tron : டிரான் : புகழ்பெற்ற அதிநுட்ப முன் அடைச்சொல்.

troubleshoot : தவறு காணல்;பிழைகள் : கணினி நிரல் தொடரில் உள்ள ஒரு தவறு அல்லது வன்பொருள் அலகில் உள்ள ஒரு கோளாறைக் கண்டறிய முயலுதல். trouble ticket : சிக்கல் சீட்டு : ஒரு குறிப்பிட்ட சாதனம் அல்லது கணினியில் ஏற்பட்டுள்ள சிக்கல் பணிப்பாய்வு (work flow) செயலாக்கம் மூலமாகக் கண்டறியப்பட்டுத் தரப்படும் அறிக்கை. தொடக்க காலங்களில் இது தாளில் அச்சிடப்பட்டதாய் இருந்தது. இன்றுள்ள பல்வேறு பணிப்பாய்வு மற்றும் உதவி மேசைப் (Help Dest) பயன்பாடுகளில் மின்னணு சிக்கல் சீட்டுகள் பயன்படுத்தப்படுகின்றன.

TRS (Tandy Radio Shack) : டிஆர்எஸ் : Tandy Radio Shack என்பதன் குறும்பெயர். டான்டியின் பீ. சி. களுக்கு கூறப்பட்ட முதல் வணிகப் பெயர். 1977இல் முதன் முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட மூன்று கணினிகளில் ஒன்றாக டீஆர்எஸ் 800 இருந்தது. அதன் செயலாக்க அமைப்பின் பெயர் டீஆர்எஸ் டாஸ் (TRS. DOS).

TRs Dos : டீஆர்எஸ் டாஸ் : Tandy Radio Shack Disk Operating System என்பதன் சுருக்கப் பெயர். டீஆர்எஸ் 80 நுண் கணினிகளின் இயக்க முறைமை.

TRS 80 Microcomputer : டீஆர்எஸ் 80 நுண்கணினி : டான்டி கார்ப்ரேஷனின் ஒரு பிரிவான ரேடியோ ஷாக் நிறுவனம் உற்பத்தி செய்த பல நுண் கணினி அமைப்புகளின் வணிகப்பெயர்.

True Basic : ட்ரூபேசிக் : மூல பேசிக் மொழியை உருவாக்கிய ஜான் கெம்னியும் தாமஸ் குர்ட்ஸும் இணைந்து, பேசிக் மொழியைத் தரப்படுத்தவும், நவீனப்படுத்தவும் 1983ஆம் ஆண்டில் ட்ரூபேசிக் மொழியை உருவாக்கினர். ட்ரூ பேசிக்கில் வரி எண்கள் தேவையில்லை. கட்டமைப்பான (structured), மொழிமாற்றி (compiler) அடிப்படையிலான மொழியாகும். உயர்நிலைக் கட்டுப்பாட்டுக் கட்டமைப்புகளை (control structures) கொண்டது. இதனால் கட்டமைப்பு நிரலாக்கம் (structured programming) இயல்வதாகிறது.

true colour : உண்மை நிறம் : 1. 16, 77, 216 நிறங்களை (24 துண்மி நிறம்) உருவாக்கக் கூடிய திறன். 2. ஒளிப் படம் போன்று நிற உருவங்களை உருவாக்கும் திறன். (24 துண்மி நிறம் குறைந்த அளவு தேவைப்படும்).

true complement : உண்மை நிரப்பு எண் : உண்மை நிரப்பு பத்தின் நிரப்பு எண் மற்றும் இரண்டின் நிரப்பு எண்ணுக்கு உடன்பாட்டுச் சொல்.

true image : உண்மைத் தோற்றம் : நுண் மென்பொருளின் மேம் படுத்தப்பட்ட பிற்சேர்க்கை வரிமொழி மாற்றி. பிற்சேர்க்கை வகை 1 மற்றும் உண்மை வடிவ எழுத்துகளை இது அச்சிடுகிறது.

True Type : மெய்வகை : ஆப்பிள் கம்ப்யூட்டர் நிறுவனம் 1991இல் அறிமுகப்படுத்திய வெளிக்கோட்டு எழுத்துருத் தொழில்நுட்பம். மைக்ரோ சாஃப்ட் நிறுவனம் 1992 ஆம் ஆண்டில் வெளியிட்டது. இது ஒரு விசிவிக் (WYSIWYG) எழுத்துருத் தொழில்நுட்பம் ஆகும். அதாவது, திரையில் காணும் எழுத்து வடிவங்கள் அப்படியே அச்சில் கிடைக்கும்.

truncate : துணிப்பு;துணித்தல் : 1. துல்லியத்தை குறைத்து ஒரு எண்ணின் இறுதி எண்களை வெளியேற்றுதல். சான்றாக, 'பை'வரிசைகளை 3. 14159 என்ற எண் துணிப்புச் செய்கிறது. எப்படியென்றால், இந்த எண்ணை எல்லையின்றி நீட்டிக்கலாம். 2. ஒதுக்கப்பட்ட இடத்தில் பொருந்தாத எழுத்துகளை வெட்டுதல். சான்றாக Rumplestritskin என்ற பெயரை அச்சிட்ட அறிக்கையில் பத்து எழுத்துப் பெயர்ப் புலத்தில் பொருத்த வேண்டு மென்றால் அப்பெயரை rumplestil என்று சுருக்குதல்.

truncation error : சுருக்குவதில் பிழை;துணிப்புப் பிழை : சுருக்கு வதனால் ஏற்படும் பிழை.

trunk : தொலை : இரண்டு தொலைபேசி பொத்தான் அமைப்பு மையங் களுக்கு இடையில் ஏற்படும் நேரடிக் கம்பி இணைப்பு.

truth table : உண்மைப் பட்டியல்;மெய்நிலை அட்டவணை : ஒரு இருமை மின்சுற்று உருவாக்குகின்ற உள்ளீட்டு/வெளியீட்டுக் கூட்டல்களின் அனைத்து வாய்ப்புகளையும் முறையாகப் பட்டியலிடல்.

try : முயல்.

TSAPI : டீசாப்பி;டீஎஸ்ஏபீஐ : தொலைபேசிச் சேவை பயன்பாட்டு நிரலாக்க இடைமுகம் எனப்பொருள்படும் Telephony Services Application Programming Interface என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். மிகப்பெரும் தொலைபேசி அமைப்புக்கும் ஒரு கணினிப் பிணைய வழங்கனுக்கும் இடையேயான இடைமுகத்துக் குரிய தரவரையறைகள். நாவெல் நிறுவனமும் ஏடீ&டீ நிறுவனமும் இணைந்து உருவாக்கியவை. பல்வேறு தொலைபேசிக் கருவி உற்பத்தியாளர்களாலும் மென்பொருள் தயாரிப்பாளர்களாலும் ஆதரிக்கப்படுகிறது.

T. 120 standard : டீ. 120 தர வரையறை : ஒரு கணினிப் பயன்பாட்டுக்குள்ளேயே, கலந்துரையாடல், பலமுனைக் கோப்புப் பரிமாற்றம் போன்ற பல்முனைத் தகவல் தொடர்பு சேவைகளுக்காக பன்னாட்டுத் தொலைத் தகவல் தொடர்பு சங்கம் (ITU) உருவாக்கிய வரன்முறைகள்.

TSR : டீஎஸ்ஆர் : நினைவகத்தில் தங்கிச் செயல்படுதல் என்று பொருள்படும் Terminate and Stay Resident என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஒரு நிரலை இயக்கியவுடன் நினைவகத்தில் சென்று தங்கிவிடும். ஆனால் செயல்படாது. ஒரு குறிப்பிட்ட நிகழ்வு நடைபெறும்போது அல்லது வேறொரு நிரல் இயங்கிக் கொண்டிருக்கும் போது நினைவகத்தில் இருக்கும் நிரலை இயக்கமுடியும். எம்எஸ் டாஸ் போன்ற பல் பணித் திறனற்ற இயக்க முறைமைகளில் இதுபோன்ற நிரல்கள் அதிகம் பயன்படுத்தப் படுகின்றன.

. tt : . டீடீ : ஒர் இணைய தள முகவரி டிரினிடாட் டொபேக்கோ நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப் பெயர்.

ΤΤFΝ : டீடிஎஃப்என் : இப்போதைக்கு டாட்டா என்று பொருள்படும் Ta Ta for now என்ற தொடரின் தலைப் பெழுத்துக் குறும்பெயர். இணையக் கலந்துரையாடல் குழு அல்லது தொடர் அரட்டையில் (IRC) பங்கு பெற்றுள்ள குழுவிலிருந்து தற்காலிகமாக விலகிச் செல்லல். பிறகு வந்து சேர்ந்து கொள்வார்.

TTY : டீடீஒய் : தொலைத் தட்டச்சு (Teletypewriter) என்பதன் சுருக்கம். தொலைபேசி இணைப்பு வழியாக நடைபெறும் குறைந்தவேக தரவு தொடர்புக்கான கருவி. ஒவ்வொரு எழுத்துகளாக உள்ளீடு செய்ய ஒரு விசைப்பலகையும், தொலைவிலிருந்து வரும் தரவுவை ஒவ்வொரு எழுத்தாக அச்சிட அச்சுப்பொறியும் கொண்டது.

tube, cathode : எதிர்மின் குழாய்.

tube store, cathod ray : எதிர் மின் கதிர்க் குழாய் சேமிப்பு. tunnel : சுருங்கை வழி : ஒரு நெறிமுறையின்கீழ் உருவாக்கப்பட்ட பொதி அல்லது செய்தியை இன்னொரு நெறிமுறைக்கான பொதியில் சுற்றிவைத்தல். இப்படிச் சுற்றி வைத்த பொதி, மேலுறை நெறிமுறையின் பிணையத்தில் இன்னோர் இடத்துக்கு அனுப்பப்படும். நெறிமுறைக் கட்டுப்பாடுகளைத் தவிர்க்கவே இந்த வகையான பொதிப் பரிமாற்றம் பயன் படுத்தப்படுகிறது.

tunnel diode : ஒத்தியைவு இரு முனையம் : அதிவேக கணினி மின்சுற்று அமைப்பு மற்றும் நினைவகங்களில் பயன்படுத் தப்படும் மின்னணுச் சாதனம். பில்லியன் நொடிகளின் பின்னங்களாலான பொத் தானிடும் வேகம்.

tuple : பண்புக்கூறுத் தொகுதி, கிடக்கை;ஏடு : ஒரு தரவுத் தள அட்டவணையில் தொடர்புடைய, பண்புக் கூறுகளின் மதிப்புகளடங்கிய தொகுதி. உறவுநிலைத் தரவு தள மேலாண்மை அமைப்பில் இது ஒரு கிடக்கை (Row) ஆகச் சேமிக்கப்படுகிறது. உறவு நிலையில்லா அட்டவணை கோப்புகளில் ஏடு (Record) என அழைக்கப்படுகிறது.

turbo : டர்போ : அதிவேக செயலாக்கம்/திறம்பட்ட இயக்கத்தைக் குறிப்பிடும் சொல். குறிப்பிட்ட பெயருடைய வன்பொருள், மென்பொருளைக் குறிப்பிட இச்சொல் பயன்படுத்தப்படுகிறது. பீசி. யில் வேகமான கடிகார விகிதத்தைக் குறிப்பிடுகிறது. போர்லாண்ட் தன்னுடைய டர்போ சி மற்றும் டர்போ பாஸ்கல் ஆகியவற்றில் இதைப் பயன்படுத்தி பிரபலப் படுத்தியது.

turbo C : டர்போ சி : பலதரப் பட்ட வணிகப் பொருள்களை உருவாக்கப் பயன்படும் போர்லாண்ட் நிறுவனத்தின் 'சி' தொகுப்பி. அதன் மிக நன்றாக வடிவமைக்கப்பட்ட பிழை நீக்கி மிகவும் புகழ்பெற்றது.

turbo mouse : டர்போ சுட்டி (மவுஸ்) : கென்சிங்டன் மைக்ரோவேர் நிறுவனத்தின் மெக்கின்டோஷ் டிராக்பால். பந்து மெதுவாக நகர்ந்தால், சுட்டி மெதுவாக நகரும். ஆனால் அது வேகமாக நகர்ந்தால் திரையில் சுட்டி அதிக தூரம்போகும். பீசி. யில் அதற்கு இணையானது திறம்பட்ட சுட்டி (expert mouse).

Turbo Pascal : டர்போ பாஸ்கல் : பெரும்பாலான நுண்கணினி அமைப்புகளில் உள்ள பாஸ்கல் நிரல் தொடரமைப்பு மொழியின் புகழ்பெற்ற பதிப்பு.

Turing : தூரிங் : 1982இல் ஆர். சி. ஹோல்ட் மற்றும் ஜே. ஆர். கார்டி ஆகிய இருவரும் டோரொன்டோ பல்கலைக்கழகத்தில் உருவாக்கிய நிரல் தொடரமைப்பு மொழி. பாஸ்கல் நிரல் தொடர் மொழியில் உள்ள சில இயலாமைகளை நீக்குவதற்கென்றே இதன் அடிப்படை வடிவமைப்பு இலக்கினைக் கொண்டது. யூனிக்ஸ் இயக்க அமைப்பின் கீழும் இயங்குகிறது.

Turing Alan M. : தூரிங் ஆலன் எம் (1912-1954) : ஆங்கில கணிதவியாளர் மற்றும் தருக்க வியலார். இறப்பதற்குச் சற்று முன்பு உலகின் முதல் நவீன அதிகவேக எண்முறை கணினிகளின் வடிவமைப்பை உருவாக்கியவர்.

Turing machine : தூரிங் எந்திரம் : ஒரு சாதனத்தின் கணித மாதிரி யமைப்பு. ஒரு நீண்ட நாடாவின் தற்போதைய நிலையை ஒட்டி அதன் உள்ளமைப்பை மாற்றுதல், எழுதுதல், படித்தல் மற்றும் நகர்த்துதல் ஆகிய வற்றைச் செய்வது. ஆகவே கணினி போன்ற நடத்தையின் முன் மாதிரி ஆனது.

Turing's test : தூரங்கின் சோதனை : ஒரு கணினியிடம் அறிவுக் கூர்மை இருக்கிறதா என்பதை முடிவு செய்ய ஆங்கில கணிதவியலாரான ஆலன் தூரிங் உருவாக்கிய சோதனை. இதில் பங்குகொள்பவர்கள் ஒரு மனிதரும் ஒரு கணினியும். பதில் சொல்பவர்களில் யார் மனிதர், யார் கணினி என்பதை மூன்றாவது நபர் கண்டுபிடிப்பார். இந்தச் சோதனை யின்படி, தேர்வாளரை கணினி எந்த அளவுக்கு ஏமாற்றுகிறது என்பதை வைத்து கணினியின் வெற்றியும், அதற்கு ஆதாரமாக அதன் திறமை, அறிவுக் கூர்மையும் கண்டறியப்படும்.

turn around : சுழற்சி திரும்ப வரும் : ஒரு குறிப்பிட்ட பணியைச் செய்ய எடுத்துக் கொள்ளும் நேரம். ஒரு குறிப்பிட்ட இலக்கை அடைய ஆகும் நேரம். ஒரு வேலையைச் செயலாக்கத்திற்குக் கொடுப்பதற்கும், முடிந்த வெளியீடு பெறுவதற்கும் இடையில் ஆகும் நேரம்.

turnaround document : சுழற்சி ஆவணம்;திரும்பிவரும் ஆவணம் : எந்திரம் படிக்கும் உள்ளீடாக ஒரு நிறுவனத்திற்குக் கணினி அமைப்பு அளிக்கும் வெளியீடு. (வாடிக்கையாளர் விலை மதிப்பீடு மற்றும் பட்டியல்கள்).

turnaround time : சுழற்சி நேரம்;சுற்றித் திரும்பும் நேரம் : 1. பய னாளரிடமிருந்து கணினி மையத்திற்குப் பயணம் செய்ய ஒரு வேலைக்கு ஆகும் நேரம். கணினியில் இருந்து சென்று நிரல் தொடர் முடிவுகள் பயனாளருக்குத் திரும்ப வருவதும் இதில் கணக்கிடப் படும். 2. தரவு பரப்புதலுக்கு இடையில் ஆகும் நேரம். 3. அரை டுப்ளே வழித்தடத்தைப் பயன்படுத்தி அனுப்புதல்.

turnaround form : சுற்றித் திரும்பும் படிவம் : அடுத்து வரும் செயலாக்க நிலையின் போது வெளியீட்டுச் சாதனமே உள்ளீட்டு ஊடகமாகப் பயன் படும் நிலைமை.

turn key : திறவுகோல் திருப்பு;சாவி திருப்பு.

turnkey system : முழுப்பணி அமைவு : ஏற்கெனவே தயாரான நிலையில் பயன்படுத்த உதவும் கணினி அமைப்பு. வன்பொருள், மென்பொருள், பயிற்சி, பராமரிப்பு உதவி போன்ற ஒரு பயன்பாட்டுக்குத் தேவையான எல்லாமும் அதில் அடங்கும்.

turn off : நிறுத்தி : ஒரு கணினி அமைப்பை நிறுத்தும் (மின் சக்தி நிறுத்தும்) செயல்.

turn on : துவக்கு : ஒரு கணினி அமைப்பைத் துவக்கும் (மின் சக்தி துவக்கும்) செயல்.

turnpike effect : வழிமறிப்பு விளைவு : ஒரு தகவல் தொடர்பு அமைப்பில் அல்லது ஒரு பிணையத்தில் அளவுக்கதிகமான போக்கு வரத்தினால் ஏற்படக்கூடிய முட்டுக்கட்டை நிலை.

turtle : ஆமை : திரையில் காட்டப்படும் முக்கோண வடிவ சின்னம். லோகோ மொழியுடன் ஆமை வரை கலையைப் பயன்படுத்துவதன் மூலம் வரைகலையின் கோடுகளின் போக்கைக் கூறலாம். சான்று : தெற்காக நகர்த்து என்ற நிரல் வந்தால் ஆமை திரையின் அடிப்பகுதியை நோக்கி நகரும்.

turtle graphics : ஆமை வரை கலை : லோகோ மற்றும் பிற கணினி மொழிகளில் சேர்க்கப்பட்டுள்ள'ரோபோ'வைப் போலச் செய்யும் வரைகலை. சிறுவர்களுக்கு படக் கணிதம் மற்றும் கணினி வரைகலையைக் கற்றுத் தருவதற்குப் பயன்படுவது.

tutorial : பயிற்சி : வன்பொருள் அல்லது மென்பொருள் பயிற்சிக் கையேடு. அச்சிடப்பட்ட ஆவணமாகவோ அல்லது நாடா அல்லது தட்டின்மீது காந்த வடிவில் பதிவு செய்யப் பட்டதாகவோ இருக்கலாம்.

tutorial programme : பயிற்சி நிரல் தொடர் : பயிற்சி செயல் முறை : புதிய பொருளை விளக்கி அதன் பிறகே பயனாளரிடம் வைத்திருக்கக்கூடிய வகையில் விளக்கும் கணினி நிரல் தொடர்.

. tv : . டீவி : ஒர் இணைய தள முகவரி தூவாலு நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப் பெயர்.

TV : டிவி;தொலைக்காட்சி : Television என்பதன் குறும்பெயர்.

TVT : டி. வி. டி : Television Typewriter என்பதன் குறும்பெயர். தொலைக்காட்சிப் பெட்டியை கணினி முனையமாக மாற்றுவதற்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்ட விசைப்பலகை மற்றும் மின்னணுச் சாதனம். ஒளிக்காட்சி முனையம் (வீடியோ டெர்மினல்).

TV Terminal : டி. வி. முகப்பு;தொலைக்காட்சி முனையம் : கணினி வெளியீட்டுச் சாதனமாகப் பயன்படும் பொது தொலைக்காட்சிப் பெட்டி.

. tw : . டி. டபிள்யூ : ஒர் இணைய தள முகவரி தைவான் நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

TWAIN : ட்வய்ன் : ஒர் ஆர்வம் தூண்டும் பெயரில்லாத தொழில் நுட்பம் என்று பொருள்படும் Technology Without An Interesting Name என்ற தொடரின் தலைப் பெழுத்துக் குறும்பெயர். மென்பொருள் பயன்பாடுகளுக்கும், வருடு பொறியொத்த படிமக் கவர்வு சாதனங்களுக்கும் இடையேயான, ஏற்றுக் கொள்ளப்பட்ட செந்தர இடைமுகம். ஏறத்தாழ அனைத்து வருடு பொறிகளிலும் ட்வய்ன் தொழில் நுட்பம் உள்ளது. மென்பொருள்களிலும் அத்தொழில் நுட்பத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

tweak : நுண் இசைவிப்பு : ஒரு கருவியின் பகுதியை மேம்படுத்தும் பொருட்டு சரி செய்தல் அல்லது நன்றாக ஒத்தியயைவு (tune) செய்தல்.

tween : இடையுரு;இடையாள் : கணினி வரைகலையில் உருமாற்ற (morphing) நிரலில் தொடக்க உருவுக்கும் இறுதி உருவுக்கும் இடைப்பட்ட உருவங்களைக் கண்டறிதல். twelve punch : பன்னிரண்டு துளை : ஹோலரித்தின் துளையிட்ட அட்டையில் மேல் வரிசையில் உள்ள துளை.

twinaxial : இரட்டை அச்சு : கோ-ஆக்சியல் போன்ற குழாய். ஆனால், இதில் ஒன்றுக்குப் பதிலாக இரண்டு உள்கடத்திகள் இருக்கும்.

twin-cable : இரட்டைக் குழாய் : அதே இரண்டு இடங்களுக்கு இடையில் பல இரண்டு கம்பி இணைப்புகள் வேண்டுமென்றால், உள்ளே பல இரட்டைக் கம்பிகளைக் கொண்ட கேபிள் தரப்படும். இதில் இணையாக கம்பிகள் முறுக்கேறும்.

twinkle box : மின்னும் பெட்டி : ஒளி உணர்கருவிகள், லென்ஸ் மற்றும் சுழல்வட்டு ஆகியவற்றைக் கொண்ட உள்ளிட்டுச் சாதனம். முப்பரிமாண நிலையில் உள்ள ஒளி உமிழ் பொருளை அதன் கோண ஒளி அறியும் திறனைக் கொண்டு கண்டறிய முடியும்.

twisted pair : முறுக்கப்பட்ட இணை : 'யுடிபி' (Unshielded Twister pair) என்று அழைக்கப்படும் மெல்லிய (22 முதல் 26 கேஜ்) குறுக்குகளைக் கொண்ட தொலைபேசிக் கம்பிகளில் உள்ள மூடப்பட்ட கம்பி. மற்ற இணைக் கம்பிகளின் குறுக்கீட்டைக் குறைக்க கம்பிகள் ஒன்றோடொன்று முறுக்கப் பட்டிருக்கும். அச்சு இணை (coaxial cable) கம்பிகள் அல்லது ஒளி இழைகளைவிட முறுக்கப்பட்ட கம்பிகளுக்குக் குறைவான பட்டை அகலம் இருக்கும்.

twisted-pair cable : முறுக்கிணை வடம் : இரண்டு தனித்தனி தடுப் புறையிட்ட கம்பிகள் ஒன்றாக முறுக்கப்பட்ட வடம். அருகிலுள்ள வடங்களிலிருந்து வரும் வானலை இடையூறுகளைக் குறைக்க இவ்வடம் பயன்படுத்தப்படுகிறது. இரண்டிலொரு கம்பியில் முக்கியமான தரவு சுமந்து செல்லப்படுகிறது. இன்னொரு கம்பி தரைப் படுத்தப்படுகிறது (earthed).

twisted pair wire : முறுக்கிணைக் கம்பி.

twisted wire : முறுக்கிய கம்பி : தரவு தொடர்பு ஊடகம். இணைக் கம்பிகளை ஒன்றாக முக்கிய ஒரு கம்பி வடத்துடன் கட்டப்படுவதாகும்.

two address computer : இரு முகவரிக் கணினி : அதன் நிரல் படிவத்தில் இரண்டு முகவரிகளைப் பயன்படுத்தும் கணினி. சான்றாக, ADD A+B நிரல் என்றால் 'A' வின் மதிப்புகளுடன் 'B' ன் மதிப்புகளும் சேரக்கூடும். இது (B) -ன் பழைய மதிப்பை மாற்றுகிறது.

two dimensional : இரு பரிமாணம் (2D) : வரை கலை தகவலை புலனாகும் தன்மைகளுடன் வழங்குவது. உயரம் மற்றும் அகலம் எவ்வளவு என்று இரண்டு பருப்பொருள் தன்மையும் குறிப்பிடப்படும்.

two dimensional array : இரு பரிமாண வரிசை : பத்திகள் மற்றும் வரிசைகளைக் கொண்ட ஏற்பாடு.

two-dimensional model : இரு பரிமாண மாதிரியம் : நீள, அகலம் கொண்ட பருநிலைப் பொருள்களைக் கணினியில் பாவிப்பது. ஆழம் உருவகப் படுத்தப்படுவதில்லை. x, y-ஆகிய இரு அச்சுகளில் பொருளின் பரி மாணங்கள் குறிக்கப்படும்.

two dimentional storage : இரு பரிமாண சேமிப்பகம்.

two-out-of-five-code : இந்தில் இரண்டு குறிமுறை தரவு பரி மாற்றத்தில் பயன்படுத்தப்படும் பிழை உணர்வுமிக்க குறிமுறை. பத்து இலக்கங்கள் (0 முதல் 9 வரை) ஒவ்வொன்றையும் ஐந்து இரும இலக்கங்களால் (0, 1) குறிப்பது. ஐந்து இரும இலக்கங்களில் இரண்டு 1 மூன்று 0 ஆகவோ, இரண்டு 0 மூன்று 1 ஆகவோ இருக்கும்.

two pass : இருமுறை கடத்தல் : தரவுகளை இரண்டுமுறை மாற்ற வேண்டியுள்ள நிரல் தொடர் அல்லது இலக்கம் பற்றியது. முதல் முறை தரவு மூலம் செல்லும்போது அதன் நோக்கத்தை ஒரளவே நிறை வேற்றுகிறது. இரண்டாவது முறை தரவுவை கடக்கும் போதுதான் முழுமையாக நிறைவேற்றுகிறது.

two-planet internet : இருகோள் இணையம்.

two's complement : இரண்டின் நிரப்பு எண் : எதிர்மறை எண்களைக் குறிப்படும்முறை. உடன்பாடு அல்லது எதிர்மறை இருமை எண் ஒன்றை எதிர்க் குறியீடாக மாற்றவேண்டுமானால் எல்லா '0' க்களையும் 1 ஆகவும் எல்லா 1-களையும் 0-வாகவும் மாற்றி பின்னர் 1-ஐக் காட்ட வேண்டும்.

two state devices : இரு நிலைச்சாதனங்கள்.

two-tier clientserver : ஈரடுக்குக் கிளையன்|வழங்கன் : ஒருவகை கிளையன்/வழங்கன் கட்டுமானம். இதில் மென்பொருள் அமைப்புகள் இரண்டு அடுக்கு களாகக் கட்டமைக்கப்படுகின்றன. (1) பயனாளர் இடைமுகம்/வணிகத் தருக்க அடுக்கு. (2) தரவுத்தள அடுக்கு. நான்காம் தலைமுறை மொழிகள் (4GLs), இந்தவகை ஈரடுக்குக் கிளையன்/வழங்கன் கட்டுமானம் செல்வாக்குப் பெற்று விளக்குவதற்கு உதவின.

two way branching : இருவழிப் பிரிதல், இருவழி கிளைத்தல்.

two-wire cable : இரண்டு கம்பிகுழாய் : ஒரு கம்பி வடத்தில் உள்ள கடத்திகள் ஒன்றை யொன்று மின்சாரத்தால் தாக்காவண்ணம் பாதுகாக்கப் பட்டுள்ளன. மேலே மூடப்படும் கம்பி மின்பாதுகாப்பு உள்ளது. வெளிப்பக்க உறை பீவிசி என்று அழைக்கப்படுகிறது. மின் தடுப்புச் செய்யப்பட்ட கம்பி வடத்தில் உள்ள இரண்டு கடத்திகளும் கம்பிவடம் நெடுகிலும் முறுக்கப் பட்டு'இணை'என்று அழைக்கப்படுகின்றது.

two-wire line : இரண்டு கம்பி : வெற்றுக் கடத்திகளைப் பயன்படுத்தி தந்திக் கம்பிகளின் மேல் காப்புறைகளை உருவாக்குதல். குறை மின்சுற்று ஆகி தரவு தொடர்புத் தடை ஏற்படாமல் இருக்கும் கம்பிகள் ஒன்றை யொன்று தொட அனுமதிக்கக் கூடாது.

TXD : டீஎக்ஸ்டி : தகவலை அனுப்ப (Transmit Data) என்பதன் சுருக்கம். அனுப்பப்படும் தரவுவை ஒரு சாதனத்திலிருந்து இன்னொரு சாதனத்துக்குச் சுமந்து செல்லப் பயன்படும் இணைப்புத் தடத்தைக் குறிக்கும். கணினியிலிருந்து இணக்கிக்கு ஆர்எஸ்-232. 2 இணைப்புகளில் இரண்டாவது பின்.

. txt : . டிஎக்ஸ்டீ : ஆஸ்கி உரைக் கோப்புகளை அடையாளங்காட்டும் வகைப்பெயர் (extension). பெரும்பாலும். டீஎக்ஸ்டீ வகைப்பெயர் கொண்ட ஆவணங்கள் வடிவமைப்புக் கட்டளைகளைக் கொண்டிருப்பதில்லை. இதன் காரணமாக இவ்வகைக் கோப்புகளை எந்த உரைத் தொகுப்பான் அல்லது சொல் செயலிகளிலும் கையாள முடியும்.

Tymnet : டிம்நெட் : நூற்றுக்கு மேற்பட்ட நாடுகளில் நிகழ் நிலைச் சேவைகளோடும், இணையச் சேவையாளர்களோடும் இணைப்புகளைக் கொண்டுள்ள ஒரு பொதுத் தரவுப் பிணையம்.

type : வகை : 1. தரவு அல்லது சொல்நுழைவில் விசைப் பலகையில் உள்ள விசைகளை அழுத்துதல். 2. நிரல் தொடரமைவில், அதனுள் சேமிக்கப்பட்ட தரவுகளினால் முடிவு செய்யப்படும் மாறிலி வகை. சான்றாக, முழு எண், மிதக்கும் புள்ளி, தருக்க சரம், தரவு, இருமை ஆகியவை பொது தரவு வகைகளாக இருக்கும். 3. டாஸ் மற்றும் ஓஸ்/2 இல் சொல் தொகுப்புக் கோப்பின் உள்ளடக்கங்களைக் காட்டும் கட்டளை.

type-ahead capability : தொடர் தட்டச்சுத் திறன் : விசைப் பலகையில் தட்டச்சு செய்யும் விசையழுத்தங்களை இடை நிலை நினைவகத்தில் (Buffer Memory) சேமித்து வைத்துப் பிறகு திரையில் காட்டும் திறனுள்ள ஒரு கணினி நிரல். பயனாளர் வேகமாகத் தட்டச்சு செய்தால், அந்த வேகத்தில் எழுத்துகளைத் திரையில் காட்ட முடியாதபோது சில விசையழுத்தங்களை இழக்க நேரலாம். இப்படி நிகழ்வதைத் தவிர்க்கவே இடைநிலை நினைவகத்தில் உள்ளீடுகள் சேமிக்கப்படுகின்றன.

type ball : தட்டச்சுப் பந்து;அச்சுப் பந்து : பயன்படுத்தக் கூடிய எல்லா எழுத்துகளையும் கோல்ஃப் பந்துபோலத் தோற்றமளிக்கச் செய்யும் தட்டச்சு அடிக்கும் தன்மை. உயர்த்தப்பட்டுள்ள எழுத்துகளை சுற்றிலும் நகர்த்தக்கூடிய அச்சில் ஏற்றி வைக்கும். சுத்தியல்போல இயங்கி, காகிதத்தில் நாடாவை அழுத்தி எழுத்து உருவத்தை உருவாக்குகிறது.

அச்சுப் பந்து

type casting : இனமாற்றம்;வகை மாற்றம் : ஒரு தரவின மதிப்பை வேறொரு தரவினமாக மாற்றுதல் (எ. டு) மெய்யெண் இனமதிப்பை முழு எண் மதிப்பாக மாற்றுதல்.

type declaration : இன அறிவிப்பு : பல நிரலாக்க மொழிகளில் பயனாளர் தாம் விரும்பும் தரவினங்களை உருவாக்கிக் கொள்ள வசதி உள்ளது. ஏற்கெனவே இருக்கும் மூலத் தரவினங்கள் சிலவற்றை ஒருங்கிணைத்து புதிய தர வினங்களை உருவாக்கி அறிவிக்கலாம். (எ-டு) சி-மொழியில் struct அறிவிப்பு மூலம் புதிய தரவினங்களை உருவாக்கலாம். சி++, ஜாவா, சி# மொழிகளில் classஎன்ற அறிவிப்பின் மூலம் புதிய தரவினங்களையும் அவற்றின் பண்புகள், வழிமுறைகளையும் வரையறை செய்ய முடியும்.

typeface : அச்சுரு : அச்சிடுவதற்கான, குறிப்பிட்ட, பெயரிடப் பெற்ற எழுத்துகளின் தொகுதி. (எ-டு) )Helvetica Bold Oblique. இது குறிப்பிட்ட கோணத்தில் சாய்வும் (Obliqueness), குறிப்பிட்ட அளவு கோடுகளின் தடிமனும் (Stroke Weight) கொண்டவை. அச்சுரு, எழுத்துரு (Font) விலிருந்து மாறுபட்டவை. எழுத்துருக்கள் குறிப்பிட்ட உருவளவில் (Point Size) உரு வாக்கப்படுகின்றன. அச்சுரு, அச்சுருக் குடும்பத்திலிருந்து மாறுபட்டவை (எ-டு) Helvetica Family. உறவுடைய பல அச்சுருக்களின் குழு.

typeface family : அச்செழுத்துக் குடும்பம் : வடிவமைப்பில் ஒன்றையொன்று தொடர்புள்ள அச்செழுத்துகளை குழுவாக அமைத்தல்.

type font : அச்செழுத்து வகை.

typematic : தொடர் அச்சு : அழுத்திக் கொண்டிருக்கும் வரை திரும்ப திரும்ப அடித்துக் கொண்டிருக்கும் விசைப் பலகை எழுத்து.

typematic rate : தொடரச்சு விகிதம் : தொடர்ச்சியாக கீழே இறக்கிய போது திரும்பத் திரும்ப விசைப்பலகை விசைகளை குறியீடு அனுப்பும் வேகம்.

type mismatch error : விவர இன ஒத்திசையாப் பிழை : இரு மாறிகளைக் கையாளும் ஒரு கணக்கீட்டில், இரண்டு மாறிகளும் வெவ்வேறு விவர இனத்தைச் சார்ந்திருந்தால் வரும் பிழை.

typeover : மேல் அழுத்து;மேல் அச்சிடல் : அச்சிடப்பட்ட பிரதியில் தடிமனான எழுத்து வரும் வகையில் ஒரு எழுத்தை ஒரு முறைக்கு மேல் அடிக்கும் அழுத்தும் அச்சுப்பொறியின் திறன்.

typeover mode : மேல் அச்சிடல் முறை : சொல் செயலாக்கம் மற்றும் தரவு நுழைவில், விசைப் பலகை மூலம் தட்டச்சு செய்யப்படும் விசைகள் ஒன்றின் மேலே எழுதினாலோ அல்லது அப்போதைய சுட்டி இருப் பிடத்தினை மாற்றினாலோ இந்நிலை ஏற்படும். type safety : இனப் பாதுகாப்பு;வகைப் பாதுகாப்பு.

typesetting : அச்சுக்கோப்பு : தொழில்முறை தர எழுத்துகளை உற்பத்தி செய்யும் ஒளிப்பட மின் செயல்முறை. அச்சுக் கோப்பில் உள்ள அங்குலத் திற்கு 1200-2400 எண்கள் உள்ள திரை இருக்கும். இதன் மூலம் ஏறக்குறைய முழுமையான எழுத்துகள் உருவாகும்.

type size : அச்சுரு அளவு : அச்சிடுகின்ற எழுத்துகளின் உருவளவு. பாயின்ட் என்னும் அலகினால் அளவிடப்படும். ஒரு பாயின்ட் என்பது ஏறத்தாழ 1/72 அங்குலம்.

type style : அச்சுரு பாணி;அச்சுரு அழகமைவு : 1. எழுத்து வடிவத்தின் சாய்வுத் தன்மை. 2. ஒரு குறிப்பிட்ட எழுத்து வடிவு அல்லது எழுத்து வடிவக் குடும்பத்தின் ஒட்டுமொத்த வடிவமைப்பு. 3 எழுத்து வடிவில் ரோமன், தடிமன், சாய்வு, தடிமன் சாய்வு போன்ற அழகமைவுகளுள் ஒன்று.

typewriter : தட்டச்சுப் பொறி : கணினியுடன் இணைக்கப்பட்டு தரவு தொடர்புக்காகப் பயன் படுத்தப்படும் திறனுள்ள உள்ளீட்டு/வெளியீட்டுச் சாதனம்.

type writer, console : பணியகத் தட்டச்சுப் பொறி.

typography : அச்சுக்கலை : 1. எழுத்துரு வடிவமைப்பு மற்றும் அச்சுக்கோப்புக் கலை. 2. வடிவமைக்கப்படாத உரைப் பகுதியை அச்சிடுவதற்கு ஏற்ற வகையில் மாற்றியமைத்தல்.

. tz : . டீஇஸட் : ஒர் இணைய தள முகவரி தான்ஸானியா நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.