கணினி களஞ்சிய அகராதி-2/A
கணினியின் வளர்ச்சிப் படிகள்
தொடக்கக் காலத்தில் கணினிகள் பல்கலைக் கழகங்களிலும் ஆய்வுக் கூடங்களிலும் ஆய்வுப் பொருளாகவே இருந்து வந்தன. 1951இல் தான் கணினி விற்பனைக்கு வந்தது. ரேடிங்டன் நிறுவனம் யுனிவாக்-1 கணினியை அமெரிக்க அரசுக்கு விற்றது. மிகப் பெரிய கட்டிடத்தில் நிறுவப்பட்ட அக்கணினி மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்குப் பயன்படுத்தப்பட்டது.
அதன் பிறகு பரவலாக விற்பனைக்கு வந்த கணினிகளும் பல நூறுபேர் ஒரே நிறுவனத்தில் பணியாற்றக் கூடிய பெருமுகக் கணினிகள் (Main Frames) ஆகும். இவற்றை மிகப் பெரிய வணிக நிறுவனங்களே வாங்கிப் பயன்படுத்தி வந்தன. அடுத்து, நடுத்தர நிறுவனங்களும் பயன்படுத்தக்கூடிய வகையில் அதைவிடச் சிறிய (Mini) கணினிகள் விற்பனைக்கு வந்தன. 1971ஆம் ஆண்டில் துண்செயலி (Micro Processor) கண்டுபிடிக்கப்பட்டபின், கணினியின் வளர்ச்சிப் படியில் திடீர் தாவல் ஏற்பட்டது.
1977ஆம் ஆண்டில் விலை குறைந்த மிகச் சிறிய (Micro) ஆப்பிள் கணினிகள் பெருமளவில் விற்பனைக்கு வந்தன. நிறுவனங்கள் மட்டுமே கணினியை நிறுவ முடியும் என்ற நிலைமாறி, தனியார் ஒருவர் தன் சொந்தப் பயன்பாட்டுக்காக ஒரு கணினியை வாங்க முடிந்தது. எனவே, அக்கணினி சொந்தக் கணினி (Personal Computer-PC) என்றழைக்கப்பட்டது. 1980ஆம் ஆண்டில் மிக எளிதாகப் பயன்படுத்தக்கூடிய சொந்தக் கணினிகளை ஐபிஎம் நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வந்தபின் உலகெங்கிலும் கணினியின் பயன்பாடு பெருமளவு அதிகரித்தது. நுண்செயலி மற்றும் நினைவகச் சிப்புகளின் திரை, விசைப்பலகை, அச்சுப் பொறி போன்ற துணைச் சாதன உற்பத்தியில் ஏற்பட்ட வளர்ச்சி, மனிதனின் அன்றாடப் பணிகளை எளிமைப்படுத்தும் ஏராளமான மென்பொருள் தொகுப்புகளின் உருவாக்கம் காரணமாக, கணினித் துறையில் அதிகமாகப் பரிச்சயம் இல்லாதவர்களும் கணினியில் பணியாற்ற முடியும் என்ற நிலை ஏற்பட்டது.
நிறுவனங்கள் தத்தம் அலுவலகங்களில் பயன்படுத்திவந்த தனித்த கணினிகளை நன்றாகப் பிணைத்து, கணினிப் பிணையங்கள் (Computer Networks) உருவாக்கப்பட்டன. ஒரே அலுவலகத்தில் (Local Area), ஒரு பெருநகரில் (Metro Area) மற்றும் கணினிகளை ஒருங்கிணைத்துப் பிணையங்கள் உருவாயின. தகவல் மற்றும் மூலாதாரங்களைப் பகிர்ந்து கொள்வது இதன் மூலம் சாத்தியமானது. அரசுத் துறையினர், பல்கலைக் கழகங்கள், பொது நூலகங்கள், அறிவியல் ஆய்வுக் கூடங்கள், வங்கிகள் மற்றும் ஏனைய வணிக நிறுவனங்கள் தத்தம் செயல்பாடுகளுக்காக உருவாக்கிய குறும்பரப்பு/விளிபரப்புப் பிணையங்கள் ஒன்றுக்கொன்று இணைக்கப்பட்டன. ஒவ்வொரு நாட்டில் இவ்வாறு உருவாக்கப்பட்ட முதுகெலும்புப் பிணையங்கள் (Back Bone Network) ஒருங்கிணைக்கப்பட்டு இணையம் (Internet) உருவானது. உலகின் எந்த மூலையிலிருந்தும் வேறெந்த மூலையில் குவித்து வைக்கப்பட்டுள்ள தகவல் களஞ்சியத்தை ஒரு நொடியில் பெற வழியேற்பட்டது.
எல்லா விந்தைகளுக்கும் அப்பால் 'இன்டர்நெட்' எனப்படும் இணையம் உலகம் அனைத்தையும் ஒரு கிராமமாக (Global Village) ஆக்கிவிட்டது. தொழிற்புரட்சிக்கு அடுத்தபடியாகத் தகவல் புரட்சி (information Revolution) இணையத்தின் மூலமாய் இன்று உலகைக் குலுக்கிக் கொண்டிருக்கிறது. மனிதன் காலையில் எழுந்து இரவில் உறங்கப் போகும்வரை அனைத்துப் பணிகளையும் இணையம் மூலமே நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது. செய்தித்தாள் படித்தல், உறவினர்க்குக் கடிதம் அனுப்புதல், அறிஞர்களுடன் கலந்துரையாடல்/கருத்துப் பரிமாற்றம், நண்பர்களுடன் அரட்டை, இசை/சினிமாப் பொழுதுப்போக்கு, விளையாட்டு, நூலகப் படிப்பு, தொலைபேசி உரையாடல், ரயில்/ விமானப் பயண முன்பதிவு, கடையிலுள்ள பொருள்களைப் பார்வையிடல், பல்கலைக் கழகத்தில் படித்துப் பட்டம் பெறுதல், .......... மூலம் இணையத்தில் இணைத்துக் கொண்டு செய்து முடிக்க முடியும். வேறென்ன வேண்டும்?
கணினிக் கல்வியின் இன்றியமையாமை
கணினியின் ஆதிக்கம் பரவப் பரவ கணினி அறிவியலைக் கற்றுத் தேர்வதும் கட்டாயமாகிவிட்டது.
ஒவ்வொரு எந்திரத்திலும் அதற்கே உரிய பாகங்கள் இருகின்றன. ஆனால் ஸ்குரூ டிரைவர் என்று சொல்லப்படும் திருப்புளி எந்த எந்திரத்தின் பாகமும் இல்லை. ஆனால் திருப்புளி இல்லாமல் எந்த எந்திரத்தையும் கையாள முடியாது. எந்தவொரு எந்திரத்தையும் கழற்ற, பழுதுபார்க்க, இனணக்க, பராமரிக்க திருப்புளி ஒரு கருவியாகப் பயன்படுகிறது. கணினியைத் திருப்புளிக்கு ஒப்பிடலாம். தொடக்க காலத்தில் குறிப்பிட்ட எந்திரத்தின் பாகம் போல் விளங்கிய கணினி இன்றைக்கு அனைத்து எந்திரங்களையும் கையாள வல்ல திருப்புளியாய் ஆகிவிட்டது.
ஆம். ஒரு காலத்தில் பல்கலைக் கழகங்களில் ஒரு பாடமாகவே இருந்து வந்த கணினி அறிவியல் நாளடைவில் தொழில்நுட்ப அறிவியலின் ஒரு துறையாக வளர்ச்சி பெற்று, இன்றைக்கு எந்த ஒரு அறிவியல் துறையையும்து அணுகி ஆய்வு செய்ய உதவும் ஒரு கருவியாகப் பரிணமித்துள்ளது. எந்த அறிவியல் பாடடத்தைக் கற்பவராயினும், எந்த தொழில்நுட்பத் துறையில் பயில்பவராயினும் கணினி அறிவியலையும் கற்றிருக்க வேன்டும் என்பது கட்டாயத் தேவையாகி விட்டது.
தமிழ்நாட்டில் தகவல் தொழில்நுட்பம்
தமிழ்நாட்டின் சின்னஞ்சிற்றூர்களில் மூலை முடுக்குகளில் எல்லாம் கணினி கற்றுத்தரும் பயிற்சி மையங்கள் ஏராளமாய்ப் பெருகி விட்டன. மாணவர்கள் மட்டுமின்றி சமுதாயத்தின் அனைத்துப் பகுதி மக்களும கணினியில் பயிற்சி பெற ஆர்வம் காட்டுகின்றன்ர். கணினியை இயக்கத் தெரிந்தாலே நல்ல வேலை கிடைக்குமென்ற நிலை ஏற்பட்டுள்ளது.
மென்பொருள் உருவாக்கத்தில் உலகிலேயே இந்தியா முன்னணி வகிக்கிற்து. அதில் தமிழ் நாட்டு இளைஞர்களின் பங்கு கணிசமானது. உலகின் அனைத்து முன்னணிக் கணினி நிறுவனங்களிலும் தமிழ்நாட்டு இளைஞர்கள் முக்கிய பதவிகளில் இருக்கின்றனர். பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் மாணவர்கள் கணினி அறிவியலைத் தேர்வுச் செய்து விரும்பிப் படிக்கின்றனர்.
பத்திரிகைகளில், வானொலியில், தொலைக்காட்சியில் நாள்தோறும் கணினித் துறை சார்பான செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. இந்தியாவில் வேறெந்த மாநிலத்தை விடவும் கணினி விழிப்புணர்வு தமிழ்நாட்டில் அதிகமாகவே உள்ளது.
அச்சுத்துறையில் நுழைந்த முதல் இந்திய மொழி தமிழ். அது போலவே இணையத்தில் நுழைந்த முதல் இந்திய மொழி தமிழ் தான். தமிழுக்கென்றே தமிழில் 13, 000 இணைய தளங்கள் இருப் பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இந்திய மொழிகளிலேயே கணினிக் கென்று தனியாகப் பத்திரிகை வெளிவந்தது தமிழ்மொழியில்தான். கணினி அறிவியல் தொடர்பான ஏராளமான புத்தகங்களும் கடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழ்மொழியில் வெளியிடப்பட்டுள்ளன.
கணினித் திரைகளில் தமிழ்மொழி உலாவந்து கொண்டிருக் கிறது. உரைத் தொகுப்பான்கள் (Text Editor), சொல் செயலிகள் (Word Processor), தகவல்தள மேலாண்மை (Database Management), இ-மெயில் (E-Mail), இணைய உலாவி (Browser), கணக்கியல் தொகுப்புகள் (Account Packages), குழுந்தைகள், மாணவர்கட்குப் பயன்படும் பாடங்கள், வெளிநாட்டில் வாழும் மக்கள் தமிழ் கற்றுக் கொள்ள உதவும் தொகுப்பு, பல்லூடக விளையாட்டுகள் (Multimedia Games) இன்னும் இவை போன்ற மென்பொருள் தொகுப்புகள் தமிழ்மொழியிலேயே வெளிவந்து கொண்டிருக்கின்றன. இப்படிப் பட்ட காலத்தில்தான் நான்காம் தமிழாகிய அறிவியல் தமிழின் ஒர் அங்கமான கணினித் தமிழ் செழுமைப் பெற்று வளரத் துடித்துக் கொண்டிருக்கிறது. ஆனால், கணினி அறிவியல் வளர்ந்த வேகத்தில் கணினி தமிழ் வளரவில்லை என்றே கூறவேண்டும்.
பேச்சுத் தமிழில் நெல்லைத் தமிழ், கோவைத் தமிழ், சென்னைத் தமிழ் என்றெல்லாம் வழங்கப்படுவதுபோல கணினித் தமிழும் ஊருக்கு ஒரு வடிவம், நாட்டுக்கு ஒரு வடிவம் என ஆகிவிடுமோ என அஞ்சவேண்டியுள்ளது. அறிவியல் என்பது அனைத்துலகுக்கும் பொதுவானது. அதுபோலக் கணினித் தமிழும் தமிழ்பேசும் சமுதாயம் எங்கும் ஒன்றுபோல் பயன்படுத்தப்பட வேண்டும். கணினித் தமிழ்ச் சொல்லாக்கம் தரப்படுத்தப்பட்டு, கணினித் துறைக்கான கலைச்சொல் களஞ்சியம் தொகுக்கப்பட்டு வெளியிடப்பட வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம். ஆனால், அதற்கான திசை வழியில் அரசோ, பல்கலைக் கழகங்களோ, தமிழ்ச் சங்க அமைப்புகளோ போதுமான முயற்சிகள் ஏதும் மேற்கொள்ளவில்லை என்றே கூறவேண்டும். இப்படிப்பட்ட காலக்கட்டத்தில், ஒரு தனியாளாக நின்று, இம்மாபெரும் கடமையைத் தோளில் சுமந்து, தொலைநோக்குப் பார்வையோடு, திரு மனவை முஸ்தபா அவர்கள் உருவாக்கி வெளியிட்டுள்ள இக்கணினிக் களஞ்சியப் பேரகராதியின் முக்கியத்துவத்தையும் பயன்பாட்டையும் எண்ணிப் பார்க்க வேண்டும்.?
மணவையாரின் அறிவியல் தமிழ்ப்பணி
அறிவியல் தமிழ்ப் பணிக்காகத் தம் வாழ்க்கையையே அர்ப்பணித்துக் கொண்டவர் திரு. மணவை முஸ்தபா அவர்கள். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் படிப்பை முடித்ததுமே, சேலம் அரசுக் கல்லூரியில் ஆசிரியர் பணிக்கான ஆணையைப் பெற்றார். தம் பேராசிரியர்களிடம் வாழ்த்துப் பெற சிதம்பரம் சென்றார். அங்கு நடைபெற்ற பயிற்சி மொழி தமிழா? ஆங்கிலமா? என்ற கருத்தரங்கு இவர் வாழ்க்கையின் திருப்புமுனையாக அமைந்தது. அனைத்து அறிவயல் துறைகளும் ஆங்கிலத்திலேயே உள்ளன. அவற்றை தமிழில் கற்பது முடியாத செயல். பயிற்சி மொழி தமிழ் என்பது கானல் நீர் என்று ஒரு பேராசிரியர் குறிப்பிட்டார். வெகுண்டெழுந்த மணவையார், தமிழால் முடியும். சொல்வதோடு நில்லாமல் செயல்மூலம் தமிழால் முடியும் என்பதை நிறுவிக் காட்டுவேன். இன்று முதல் இதுவே என் வாழ்வின் ஒரே இலட்சியம். அறிவியல் தமிழுக்காக என் வாழ்வையே அர்பணித்துக் கொள்கிறேன் என்று முழங்கிய தோடு மட்டுமின்றி, கையிலிருந்த ஆசிரியர் பணிக்கான ஆணையை அங்கேயே கிழித்துப் போட்டார். அன்று முதல் அறிவியல் தமிழ் ஒன்றை மட்டுமே தன் வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டு இன்று வரை அந்தப் பாதையிலேயே வீறுநடைபோட்டு வருகிறார்.
ஒவ்வொரு அறிவியல் துறையிலும் புதிய புதிய கலைச் சொற்களை உருவாக்க வேண்டும் என்பதே இவரின் குறிக்கோள். இக்குறிக்கோளை நிறைவேற்றும் பொருட்டு, 'அறிவியல் கலைச்சொல் களஞ்சியம் என்ற தலைப்பில் இரண்டு தொகுதிகளை வெளியிட்டார். இந்நூல்களில் ஐம்பத்து நான்கு அறிவியல், தொழில்நுட்ப பிரிவுகளுக்குரிய கலைச் சொற்களையும் பொருள் விளக்கத்தையும் உருவாக்கி வழங்கியுள்ளார். அடுத்து பட விளக்கங்களோடு, மருத்துவ, அறிவியல், தொழில்நுட்ப கலைச் சொல் களஞ்சிய அகராதி என்னும் நூலை வெளியிட்டார். இந்நூலின் ஒவ்வொரு கலைச் சொல்லின் வாயிலாகவும் அறிவியல் தகவல்களைச் செய்தித் துணுக்குகளாகத் தந்துள்ளார். இந்த வகையில் தமிழில் மட்டுமல்லாது இந்திய மொழிகளிலேயே முதலாவது வெளிவந்த முதல் நூல்கள் இவையெனில் மிகையாகாது.
அறிவியல் கற்றவர் தமிழறிஞர்களாக விளங்குகிறார்கள். தமிழ் கற்றவர்கள் அறிவியல் அறிஞர்களாக விளங்க முடியாதா? இக்கேள்விக்குத் தக்க பதிலாகத் தன்னையே மாற்றிக் கொண்டவர் திரு. மணவையார். கடந்த நாற்பதாண்டுகளாக அறிவியல் துறைகள் பலவற்றையும் கற்றறிந்த அறிவியல் அறிஞராகத் திகழ்கிறார். இவர் வெளியிட்ட மருத்துவக் கலைச்சொல் களஞ்சியம் இவரின் மருத்துவ அறிவைப் பறைச்சாற்றும். மருத்துவத் துறையின் பதினைந்து உட்பிருவுகளுக்கான கலைச்சொற்களையும் பொருள் விளக்கங்களையும் படங்களையும் தாங்கி வெளிவந்த இந்த நூல் தமிழக அரசின் பரிசையும் பாராட்டையும் பெற்றதோடு மக்களின் பெரும் வரவேற்பையும் பெற்றது.
இந்த நூற்றாண்டின் இணையற்ற அறிவியல் துறையாய் வளர்ந்து நிற்கும் கணினித் துறைக்கான கலைச்சொல் களஞ் சியத்தை உருவாக்க வேண்டும் என்பதும் இவரது வேட்கையாக இருந்து வந்தது. தொலைநோக்குப் பார்வையுடன் ஐந்தாறு ஆண்டுகட்கு முன்பே இதற்கான பணியைத் தொடங்கி விட்டார். இதற்காக, கணினி அறிவியலையும், கற்கத் தயங்கவில்லை. இவர் அண்மையில் அமெரிக்கா, கனடாவுக்குப் பயணம் மேற்கொண்ட போது அப்பயணத்தை கணினிக் கலைச்சொல் களஞ்சியத்தை செம்மையாக உருவாக்கும் பணிக்காகவே அப்பயனத்தின் பெரும்பாலான நாட்களைச் செலவிட்டார்.
திரு. மணவையாரின் கலைச்சொல் களஞ்சியங்கள் அனைத்திலும் ஒரு சிறப்புக் கூறு உண்டு. அகர வரிசையில் ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களைத் தரும்போது அது அகராதி ஆகிறது. அத்தோடு நில்லாமல், உடன் சொல் விளக்கத்தையும் பொருள் விளக்கத்தையும் விரிவாகத் தருவதால் அது கலைக் களஞ்சியமாகப் பரிணமிக்கிறது. ஆங்காங்கே தேவையான இடங்களில் படங்களும் இடம் பெற்றிருப்பது இன்னொரு சிறப்புக் கூறாகும்.
மொழியாக்கச் சிறப்புக் கூறுகள்
அகர வரிசையில் சொற்களின் பொருளைக் கூறும் நூலை 'அகராதி' என்கிறோம். ஒவ்வொரு சொல்லின் விளக்கத்தையும் விரிவாகத் தரும்போது 'கலைச்சொல் களஞ்சியம்' என்கிறோம். சொல்லின் பொருள், விளக்கம் இவற்றோடு நில்லாமல் சில எடுத்துக்காட்டுகளையும் கூறி விளக்குவதை என்னவென்பது? ஒரு பாட நூலைப் படிப்படி போன்ற எண்ணம் நமக்கு ஏற்படுகிறது. எடுத்துக்காட்டாக Hexadecimal Notation என்பதை பதினாறிலக்கக் குறிமானம் என்று பொருள்கூறி, இதில் 0 முதல் 9 வரையிலான இலக்கங்கள் A, B, C, D, E, F என்ற எழுத்துகள் பயன்படுத்தப்படுகின்றன என்று குறிப்பிட்டுவிட்டு, A60B என்ற ஹெக்ஸா எண்ணை 42507 என்ற டெசிமல் எண்ணாக மாற்றும் முறையையும் விளக்கியுள்ளார். அதேபோல் Factorial என்ற சொல்லை விளக்கும்போது !!-ன் மதிப்புக் கண்டறிவது எப்படி எனவும் விளக்கப்பட்டுள்ளது.
Line surge என்ற சொல்லுக்கு மின்சார வெள்ளம், மின்தொடர் எழுச்சி என்று பொருள் கூரி, திடீரென்று உயர்ந்த வோல்ட் மின்சாரம் பாயும் நிலை என்ற விளக்கம் கூறி, உயர்வோல்ட் மின்சாரம் திடீரென்று குறுகிய காலத்திற்குப் பாய்வதால், தவறான பதிவு, தவறான செயல்பாடு, தகவல்கள் இழத்தல், சில சமயங்களில் கணினியில் மிகவும் நுண்ணிய இணைப்புகள், தகவல் உள்ளீட்டு முனையங்கள், தகவல் பரிமாற்றச் சாதனங்களின் அழிவு முதலியன ஏற்படுவதுண்டு என்று அதன் விளைவுகளைக் கூறி, திடீரென்று மின்சார டிரான்ஸ்பார்மர்களை இயக்குதல், பிற துணைக் கருவிகளை இயக்குதல் மற்றும் பிற காரணங்களால் ஏற்படுவதுண்டு என்று அதன் காரணங்களையும் எடுத்துக் கூறுவதுடன் நில்லாமல், உயர்வோல்ட் மின்சாரம் திடீரென்று பாய்வதைத் தடுக்கும் சாதனங்களால் கருவிகளைப் பாதுகாக்கலாம் என்று பாதுகாப்பு வழிமுறையையும் கூறுவதைப் பார்க்கும்போது அகராதி, கலைக் களஞ்சியம் என்கிற வரம்புகளையும் உடைத்தெறிந்து ஒரு புதிய பரிமாணத்தையே எட்டி விடுகிறது என்றுதான் சொல்ல வேண்டும்.
நாகரிகமற்ற முறையில் கணினியைப் பயன்படுத்துவதை Geek என்று கூறுகிறார்கள். அதனை 'கற்றுக்குட்டித்தனம்' என்று நாகரிகமான முறையில் மொழி பெயர்த்துள்ள பாங்கு குறிப்பிடத்தக்கது. Eavesdropping என்பதை ஒற்றுக் கேட்டல் என்கிறார். Hacker-களை குறும்பர் எனச் செல்லமாகக் குறிப்பிடுகிறார். Paddle என்பதைத் துடுப்பு, மத்து என மொழி பெயர்க்கிறார். Menu tem என்பதை "பட்டி உருப்படி" என்கிறார். Packet என்பதைப் பொதிவு, பொட்டலம் என்று குறிப்பிடுகிறார். Pattern என்பதை தோரணி, தினுசு என்கிறார். இவ்வாறு தமிழ்பேசும் மக்களிடையே பேச்சு வழக்கில் பயன்படுத்தக்கூடிய பொருள் பொதிந்த பொருத்தமான தமிழ்ச் சொற்களை மொழியாக்கமாகக் கொடுத்திருக்கும் பாங்கு திரு. மணவையாருக்கே உரிய தனித்தன்மை என்றே கூறவேண்டும்.
Flexible என்பதன் பேச்சு வழக்குச் சொல் Floppy என்பதாகும். எனவே Flooppy Disk 'நெகிழ் வட்டு' என மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. மெல்லியதாக இருப்பதாலும் Hard Disk என்பதற்கு மாறாக இருப்பதாலும் 'மென் வட்டு' என்றும் குறிக்கலாம். செருகி எடுத்துப் பயன்படுத்துவதால் செருகு வட்டு என்ற மூன்று சொற்களையுமே தந்து நம்மைத் திக்குமுக்காட வைக்கிறார் திரு. மணைவயார் அவர்கள். Hard Disk என்பது பிரிக்க முடியாதவாறு தனிப் பொதியுறையில் நிரந்தரமாய் பிணைக்கப்பட்டுள்ளதால் அதனை நிலை வட்டு என மொழியாக்கம் செய்துள்ளதும் முற்றிலும் பொருத்தமே.
இவ்வாறு திரு. மனவையாரின் மொழியாக்கச் சிறப்புக் கூறுகளைப் பக்கம் பக்கமாக எழுதிக் கொண்டே போகலாம். கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே என்று பழம் பெருமை மட்டுமே பேசிக் காலம் கழிக்காமல் நல்ல தமிழை நல்ல அறிவியல் தமிழை புத்தம் புதுத் தமிழைப் பற்றி எந்த நேரமும் சிந்தித்துச் செயலாற்றி வரும் திரு. மணவை யாரைப் போல் இன்னொரு தமிழறிஞரைக் காண முடியுமா என்பதே சந்தேகத்துக்குரிய கேள்வி. அரசும், பல்கலைக் கழகங்களும், வல்லுநர் குழுவும் செய்ய வேண்டிய ஒரு பணியைத் தனியொருவராக நின்று சாதித்துள்ள திரு. மணவையார் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். ஆங்கில மொழியில் கணினித் துறைக்கென எத்தனையோ அகராதிகளும், சொற்களஞ்சியங்களும் வெளியிடப்பட்டுள்ளன. ஆனால், இந்திய மொழிகளில் இதுவே முதலாவது நூலாக இருக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.
இவ்வண்
மு. சிவலிங்கம்
காணிக்கை
நம்மில் சம்பாதிக்கத் தெரிந்தவர்கள் பலர் உண்டு. ஆனால், தாங்கள் தேடிய செல்வத்தை உரிய வழியில் செலவழிக்கத் தெரிந்தவர்கள் மிகச் சிலரே உண்டு. அத்தகையோருள் தலையாயவராக விளங்குபவர் சமுதாயச் சேவைச் செம்மல், பவழ விழா செல்வர் அல்ஹாஜ் பி. எஸ். அப்துர் ரஹ்மான் அவர்கள்.
நற்குணக்குன்றான அவர்கள் அன்பு, பரிவு, எளிமை, வள்ளன்மை எனும் சொற்களுக்கு இலக்கணமாகவே விளங்குபவர். இளமைத் தொட்டே தனித்துவச் சிந்தனையிலும், அறிவாற்றலிலும் மிக்குயர்ந்து, வணிகத் துறையில் தனக்கென தனி வழி வகுத்து, கடும் முயற்சியாலும் இடையறா உழைப்பாலும் உயர்ந்து, பன்னாடு போற்றும் வணிகராக, பல்முனைத் தொழில் மேதையாக உலகெங்கும் காலூன்றி, அழுத்தமான தடம் பதித்து, தாய் மண்ணுக்குப் பெரும் புகழ் தேடித் தரும் பெரியார். 'கப்பல் தலைவர்' எனும் பொருள் பொதிந்த 'மரைக்காயர்' எனும் சொல்லுக்குப் பெருமை சேர்க்கும் வகையில், உலகெங்கும் கப்பல் செலுத்தும் 'கப்பலோட்டும் தமிழன்' எனும் பெருமைக்குரிய அடைமொழியோடு உலா வருபவர்.
தம் நுண்மாண் நுழைபுலத்தால் பல பேருக்கு வேலை வாய்ப்பளிக்கும் தொழில்களை உருவாக்கி, பல்லாயிரம் பேர் பணிபுரியவும் அதன் மூலம் வாழ்வில் வளம் பெருகவும் வழி கண்ட பிறர் நலம் பேணும் பேராண்மையாளர்.
நத்தைக்குக் கூடுபோல் தான் சார்ந்த இஸ்லாமிய சமுதாயம் ஏழ்மை, அறியாமை, சுகாதாரக்கேடு போன்றவற்றால் நலிவடைந்து கிடக்கும் நிலையை மாற்றி, அவ்வடித்தட்டு மக்கள் வாழ்க்கையில் மேன்மையுற கல்வி ஒன்றே வழி எனத் தெளிந்து, மழலையர் பள்ளி முதல் பொறியியல் கல்லூரி வரை கல்வி நிறுவனங்கள் பலவற்றை உருவாக்கி, சமுதாயத்தில் புது சரித்திரம் படைத்த சாதனை நாயகர் அல்ஹாஜ் பி. எஸ். அப்துர் ரஹ்மான் அவர்கள்.
இன்றையப் போக்குக்கும் காலத் தேவைக்குமேற்ப அறிவியல், தொழில்நுட்பக் கல்வி மூலமே வாழ்வு வளம் பெற முடியும் என்பதைக் கருத்தில் கொண்டு உருவாக்கிய 'கிரஸென்ட் இன்ஜினியரிங் கல்லூரி' அமைந்து, ஆற்றலாளர்களை உருவாக்கி உலகுக்கு வழங்கிக் கொண்டுள்ளது.
அறிவு வளர்ச்சியின் அடித்தளம் பெண்களே என்பதை நன்கு உணர்ந்து தெளிந்த பவழ விழா செல்வர், கீழக்கரையில் 'தாஸிம் பீவி அப்துல்காதர்' மகளிர் கல்லூரியைத் தோற்றுவித்து, பெண் உயர் கல்விக்கு வழி வகுத்துள்ளார். அன்னார் உருவாக்கிய நான்கு மேல்நிலைப் பள்ளிகளில் மூன்று மகளிர்க்கானவை என்பதிலிருந்து இவர் பெண் கல்வியில் கொண்டுள்ள பேரார்வம் எத்தகைய தென்பது புலனாகும்.
ஆதரவற்ற ஏழை எளிய இளஞ்சிறார்களைத் தாயுள்ளத்தோடு அரவனைத்துப் பேணிப் பாதுக்காத்து, அவர்களை வாழ்வின் உயர்நிலைக்குத் தயார் செய்ய 'அல்அமீன்' என்ற பெயரில் நான்கு சிறுவர் இல்லங்களையும் இரண்டு சிறுமியர் இல்லங்களையும் சிறப்பாக நடத்தி வருகிறார்.
சமுதாயக் கல்வியோடு மார்க்கக் கல்வி வளர்ச்சியிலும் பேரார்வம் காட்டி வரும் இப்பெருந்தகை 'புகாரி ஆலிம் அரபுக் கல்லூரி'யை சீரும் சிறப்புமாக நடத்தி வருகிறார். சொல்லப் போனால், தமிழ்நாட்டிலும் இந்திய அளவிலும் இவர் உதவி பெறாத அரபுக் கல்லூரிகளோ, மதராசாக்களோ இல்லையென்றே கூறலாம்.
மனநலம் நாடும் கல்வித்துறை போன்றே மக்கள் உடல் நலம் பேணும் மருத்துவத் துறையிலும் பேரார்வமிக்கவர் இப்பெருந்தகை. இதற்கு கட்டியங்கூறுவன கிழக்கரை 'யூசுப் சுலைஹா மருத்துவமனை'யும் மதுரை 'கிரஸென்ட் மருத்துவமனை'யும் அதோடு இணைந்த 'செவிலியர் பயிற்சிக் கல்லூரி'யும்.
அன்று தமிழாய்ந்த தமிழ்ப் புலவர்கட்கு நிழல் தரும் குளிர் தருவாக விளங்கிய வள்ளல் சீதக்காதி போன்றே இன்று தமிழார்வலர்கட்கும் தமிழ்ப் படைப்பாளர்கட்கும் இளைப்பாறக் கிடைத்த இனிய தருவாக விளங்குகிறார். 'இஸ்லாமிய ஆய்வுப் பண்பாட்டு நிலையம்' அமைத்து இஸ்லாமிய இலக்கியப் பண்பாட்டுக்கு வழிகோலியுள்ளார். தமிழ்ப் படைப்பையும் படைப்பாசிரியர்களையும் ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுதோறும் சிறந்த நூல்களுக்கு சதக்கத்துல்லா அப்பா பெயரில் பரிசளித்துப் பாராட்டி மகிழ்கிறார்.
சிறப்புமிகு இச்செயல்கள் அனைத்தும் தம்மோடு நின்று விடக் கூடாது, என்றென்றுமாக நடைபெறவேண்டும் என்ற நல்லெண்ணத்தில் சீதக்காதி அறக்கட்டளை, அகில இந்திய இஸ்லாமிய நிறுவனம், ஐக்கியப் பொருளாதாரப் பேரவை, ஐக்கியப் பொருளாதாரப் பேரவை டிரஸ்ட், அனைத்திந்திய ஐக்கியப் பொருளாதாரப் பேரவை கூட்டமைப்பு முதலான அறக் கட்டளைகளை நிறுவி, அவற்றின் அறங்காவலராகவும் அமைந்து தொண்டாற்றி வருகிறார்.
இவரது கல்விப் பணியாயினும் தமிழ்ப் பணியாயினும் அனைத்துச் சமுதாய மக்களுக்கென அமைந்து வருவது, இவரது சமய நல்லிணக்க உணர்வுக்குக் கட்டியங் கூறுவதாகும்.
இத்தகு பெருமைமிகு பெரும் பணியைத் தளராது நாளும் ஆற்றி வரும் அன்னாரின் சமுதாயத் தொண்டு இன்று அவரொத்த பலரையும் ஊக்கி வருகிறது. இப்பணிகள் அனைத்தும் வருங்காலத் தலைமுறைக்கு வழிகாட்டுநெறிகளாகக் கொண்டுச் செல்லத் தக்கவையாகும்.
உமறுப் புலவரின் சீறாப்புராணம் மூலம் வள்ளல் சீதக்காதி வாழ்ந்து கொண்டிருப்பதுபோல் புரவலர் பெருந்தகை, பவழ விழாச் செல்வர் பி. எஸ். அப்துர் ரஹ்மான் அவர்கள் இப்பேரகராதி மூலம் காலமெல்லாம் வாழ்வார் என்பது திண்ணம்.
இவரது அளப்பரிய பணி கண்டு வியந்து நிற்கும் நான், எனது அரும் படைப்பான இக் கணினி களஞ்சியப் பேரகராதி பெருநூல் மூலம் பவழ விழா செல்வர் அல்ஹாஜ் பி. எஸ். அப்துர் ரஹ்மான் அவர்களின் தொண்டும் சிந்தனையும் என்றென்றும் நிலைபெற அன்னாரின் அருந்தொண்டுக்கு இந்நூலை நினைவுக் காணிக்கையாக்குகிறேன்.
அன்பன்
மணவை முஸ்தபா
நூலாசிரியர்A : ஏ : டாஸ், விண்டோஸ் மற்றும் சில இயக்க முறைமை (ஆப்பரேட்டிங் சிஸ்டம்களில், முதல் அல்லது முதன்மை நெகிழ் வட்டு இயக்ககப் பெயர்.
இரண்டு நெகிழ் வட்டுகள் இருப்பின் ஏ, பி (A, B) என்று அழைக்கப்படும். கணினிக்குள் நிரந்தரமாகப் பொருத்தப்பட்டுள்ள நிலைவட்டு எப்போதும் சி (C) என்றே அழைக்கப்படும். தொடக்க காலக் கணினிகளிள் நெகிழ்வட்டுகள் மட்டுமே இருந்தன. பிற்காலக் கணினிகளில்தான் நிலைவட்டு இடம் பெற்றது. எனவேதான் பெயர் வரிசை இவ்வாறு அமைந்தது.
கணினியை இயக்கும் போது, இயக்க முறைமை உள்ளதா என முதலில் ஏ-வட்டில்தான் தேடும். இல்லை யேல் சி-யில் தேடும். இதற்கான குறிப்பு சீமாஸ் நினைவகத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கும். நாம் இந்த வரிசையை மாற்றி அமைக்கவும் முடியும்.
ΑΑΑI : ஏஏஏஐ : அமெரிக்க செயற்கை துண்ணறிவுச் சங்கம் என்பதைக் குறிக்கும் American Association for Artificial Intelligence என்பதன் குறும்பெயர். செயற்கை நுண்ணறிவை மேம்படுத்துவதற்கான தொழில்துறை அமைப்பு.
abacus : மணிச் சட்டம் : மணிகள் வரிசையாகக் கோர்க்கப்பட்ட, கம்பிகள் பொருத்தப்பட்ட, எளிய கனக்குகளைச் செய்யப் பழங்காலத்தில் பயன் படுத்தப்பட்ட கருவி. இப்போதும் பல கீழ்த்தியை நாடுகளில் பரவலாகப் பயன்படுத்தப் படுகிறது.
abbreviated address : சுருங்கிய முகவரி முறை : முழு முகவரியைப் பயன்படுத்தும் முறையிலிருந்து மாறுபட்டது. இதில் முகவரியின் ஒரு பகுதி மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு குறுக்கப்பட்ட குறியீடு காரணமாக விரைவாக தகவல் களைக் கையாள இயலுகிறது.
abbreviated dialing : சுருங்கிய சுழற்றுகை : குறுக்குச் சுழற்றுகை.
ABC : ஏபிசி : 'Atanasoff-Berry Computer' எனப்படும் முதல் இலக்கமுறை கணினியின் குறும் பெயர். இதனை 1939இல் ஜான் அடனசோஃபும் அவரது உதவியாளர் கிளிப்போர்டு பெர்ரியும் உருவாக்கினர். abend : இயல்பற்ற முடிவு : இயல்புக்கு மாறான, முடித்தலுக்குரிய குறும்பெயர். சுழி (பூஜ்யம்) யினால் வகுத்தல் அல்லது ஒர் எண்ணோடு ஒர் எழுத்தைக் கூட்டும் முயற்சி காரணமாக ஏற்படும் பிழையால், நிரல் ஒன்றின் செயற் பாட்டை முன்கூட்டியே முடித்தல்.
ABIOS : ஏபயாஸ் : உயர்நிலை அடிப்படை உள்ளிட்டு வெளிபீட்டு முறைமை என்று பொருள்படும் 'advanced basic input/ output system' என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும் பெயர். பல்பணி மற்றும் பாதுகாக்கப் பட்ட இயக்க முறைமைக்குத் துணை செய்யும், உள்ளீட்டு/ வெளியீட்டுப் பணி நிரல் தொகுதிகள். ஐபிஎம், பீ. எஸ்/2 சொந்தக் கணினிகளில் உள் இணைக்கப்பட்டுள்ளது.
abnormal termination : இயல் பற்ற நிறுத்தம் : சுழி (பூஜ்யம்) யத்தால் வகுத்தல், எண் அளவு மீறல் போன்ற பிழையின் விளை வாக ஒரு நிரல் பிரதியிலேயே நிறுத்தப்படுதல்.
abandon : கைவிடு.
abort : கைவிடல் : முறித்தல் : ஒரு முறை பிறழ்ந்த செயல், அல்லது தவறு நிகழும்பொழுது, ஒரு நிரலை முடிவுக்குக் கொண்டு வரும் முறை.
about : பற்றி
abscissa : இடையச்சுத் தொலவு : ஒரு புள்ளியிலிருந்து நிலையச்சுக்குள்ள தொலைவு. ஒரு வரைபடம் புள்ளிவிவர அட்ட வணையின் எக்ஸ் (x) அச்சு ஒய் (y) அச்சுக்கோட்டுக்கு மாறு பட்டதாகும்.
absolute address : நேரடி முகவரி ; தனி முகவரி ; முற்று முகவரி ; துல்லிய முகவரி ; நிரந்தர முகவரி : நினைவகத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு நிரந்தரமாக வழங்கப்படும் முகவரி. 0000, 0001, 0002, 0003 ஆகிய முகவரிகள் கணினியின் நினைவிடத்தின் முதல் நான்கு இடங்களுக்கு ஒதுக்கப்படலாம். எந்திர முகவரி என்றும் அழைக்கப்படும்.
absolute addressing : சரியான முகவரியிடல்.
absolute cell reference : தனிச் சிற்றம் குறித்தல்; நேரடிக் கலம் குறித்தல்.
absolute code : தனிக் குறிமுறை.
absolute coding : நேரடிக் குறியீட்டு முறை ; தனிக் குறி முறை ; முற்றுக் குறிமுறை : எந்திரக் கட்டளைகளையும் நிரந்தர முகவரிகளையும் பயன்படுத்தும் குறியீட்டு முறை. வேற்று வடி வத்துக்கு மாற்றாமல் நேரடியாக கணினியால் செயல் படுத்தப் படும். இம்முறை அடையாளக் குறியீட்டு முறையிலிருந்து மாறுபட்டது.
absolute coordinates : நேரடி ஆயத் தொலைவுகள் : ஒரு மைய அச்சின் தொடர்பாகக் குறியிடப்படும் ஆயத் தொலைவு. சார்பு ஆயத் தொலைவு முறையின்படி முந்தைய ஆயத் தொலைவுகளை ஒட்டி வரு வதற்கு மாறானது.
absolute disk sectors : நேர் வட்டுப் பகுதி : ஒரு குறிப்பிட்ட எண்ணிடத்தில் உள்ள வட்டுப் பகுதி.
absolute error : தனி தவறு; தனி வழு முற்றுப் பிழை.
absolute link : நேரடித் தொடர்பு முழு இணைப்பு.
absolute movement : நிரந்தரப் பெயர்ச்சி : திரையில் உள்ள ஒரு வடிவை ஒரு குறிப்பிட்ட எக்ஸ் - ஒய் ஆயத் தொலைவு இடத்துக்கு மாற்றுதல். இது சார்நிலைப் பெயர்ச்சியிலிருந்து மாறுபட்டது.
absolute path : முழுமையான பாதை ; முழுப்பாதை : ஒரு கோப்பின் இருப்பிடத்தை வட்டு (drive) அதன் மூலக் கோப்பகத் (root directory) திலிருந்து தொடங்கி முழுமையாகக் குறிப்பிடும் முறை (எ-டு) c : \windows\ system\ms386. dll
absolute pointing device : முற்றப் பொருந்திய சுட்டுக்கருவி : பேனாவையொத்த சுட்டுக் கருவிகளில் ஒரு வகைக் கருவிக்குப் பெயர். பயனாளர், வரைகலைப் பட்டிகை மீது வலது மேல் மூலையில் பேனாச் சுட்டுக் கருவியை வைக்கும் போது, திரையிலுள்ள கட்டுக்குறி (cursor) யும் கணினித் திரையின் வலது மேல்முலைக்கு நகரும்.
இவ்வாறு திரையில் நகரும் நிலை கட்டுக்குறியின் இடத்துடன் பொருந்தி நகர்த்தப் படும் இடம் அல்லது நிலை இருப்பதால் கட்டுக் கருவிக்கு இந்தப் பெயரிடப்பட்டுள்ளது.
absolute URL : முழு யூ ஆர் எல்.
absolute value : நேர் அளவு : கூட்டல் அல்லது கழித்தல் குறியீடு இல்லாத எண் அளவு.
absolute vector : நேர் அளவு நெறியம் : கணினி வரைகலை முறையில் நேர் ஆயத் தொலைவுகளுடன வடிவமைக்கப்பட்ட . ஒரு அளவு நெறியம்.
abstract : கருத்தியல் : சுருக்கம் : பொழிப்பு : ஒரு ஆவணத்தினைப் பற்றிய சுருக்கமான விளக்கம். abstract automatic : தன்னியக்கக் கருத்துரு : தானியங்கு கருத்தியல்.
abstract class : கருத்தியல் இனக்குழு.
abstract data type : கருத்தியலான தரவு இனம்.
abstract machine : கருத்தியல் எந்திரம்; பொழிப்பு எந்திரம். ஒரு நுண்செயலிக்கான வடிவாக்கம். உண்மையில் பயன்படுத்து வதற்குரியது அல்ல. இது ஒரு மாதிரி வடிவம் மட்டுமே. கருத்தியல் எந்திர மொழி என அறியப்படும் ஒர் இடை நிலை மொழியின் செயலாக்கத்திற்கான ஒரு மாதிரி வடிவமைப்பு. இந்த வடிவமைப்பை ஒர் ஆணைமாற்றியோ (interpreter) மொழிமாற்றியோ (compiler) பயன்படுத்திக் கொள்ள முடியும்.
இந்த துண்செயலியின் நிரல் தொகுதி உண்மையான கணினி நிரல்களோடு ஒத்திருக் காது. மொழிமாற்றம் (compile) செய்யப்பட்ட நிரல் தொகுதி யுடன் பெரிதும் ஒத்திருக்கும்.
abstract methods : கருத்தியல் வழி முறைகள்.
abstract syntax : கருத்தியல் தரவு தொடரியல் : கருத்தியல் தரவு இன வரையறை. கணினியின் வன்பொருள் கட்டமைப்பு மற்றும் குறியிட்டு முறை சாராத, ஒரு தரவுக்கட்டமைப்பின் வரையறை அல்லது இலக்கணம். இத்தகைய தரவு இன வரையறை, எல்லாவகைக் கணினிக்கும், எல்லாவகைக் கணினி மொழிகளுக்கும் பொதுவான ஒன்றாகும்.
abstract syntax notation : கருத்தியல் தரவு இனக்குறிமானம் - 1 : கருத்தியல் தரவு இனங்களுக்கும், தரவுக் கட்டமைப்பு பற்றிய வரையறைகளுக்குமான ஐஎஸ்ஓ வின் தரக் கட்டுப்பாடு. ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழிக்கு மாற்றுவதற்கு இத் தரக்கட்டுப்பாடு அடிப் படையாக விளங்குகிறது.
abstract syntax tree : கருத்தியல் தொடரமைப்பு மரவுரு : பல்வேறு, ஒருங்கிணைந்த கட்டளைத் தொடர் சூழல்களிலும் கட்டமைப்பு சார்பான உரைத் தொகுப்பான்களிலும் பயன் படுத்தப்படுகின்ற மர உரு.
A/B switch box : ஏ/பிமாற்று விசைப் பெட்டி : இரு நிலை விசை அமைப்பை தன்னகத்தே கொண்ட ஒரு பெட்டி இந்தப் பெட்டி வழியாகச் செல்லும் சைகை (சமிக்கை) யை இரு வகையாக நெறிப்படுத்தலாம். (1) ஒற்றை உள்ளிட்டிலிருந்து,
இரு வெளியீடுகளில் ஏதேனும் ஒன்றுக்கு. (2) தேர்ந்தெடுக்கப்
பட்ட ஒரு உள்வீட்டிலிருந்து, ஒற்றை வெளியீட்டுக்கு.
AC : ஏசி மாற்று மின்விசையைக் குறிக்கும் Alternating Current என்பதன் குறும் பெயர். இவ்வகை மின்சாரமே இல்லம், பள்ளிகள், வணிக அமைப்புகளில் பயன்படுத்தப்படுகிறது.
AC adapter : ஏசி (மாற்று மின் விசை) ஏற்பி : ஏசி இயைபி, ஏசி
தகவி; மாற்று மின் இயைபி : 110 அல்லது 220 வோல்ட் அளவுள்ள வீட்டு மின்சாரத்தை, கணினி உறுப்புகளுக்குத் தேவைப்படுகின்ற குறைந்த மின் அழுத்தம் கொண்ட நேர்மின்சாரமாக மாற்றித்தரும் ஒரு புறச் சாதனம்.
academic network : கல்வித் துறைப் பிணையம்.
ACC : ஏசிசி : ஆஸ்திரேலிய கணினி மாநாடு என்பதைக் குறிக்கும் Australian Computer Conference என்பதன் குறும் பெயர். ஆஸ்திரேலிய கணினிச் சங்கத்தின் ஆண்டு மாநாடு.
accelerated graphics port (AGP) : முடுக்கு வரைகலைத் துறை.
acceleration time : முடுகு நேரம்; முடுக்கல் நேரம்.
accelerator : முடுக்கி; வேகப்படுத்தி : ஒரு பணியை விரைவு படுத்தும் முக்கிய இணைப்பு.
accelerator board : முடுக்குப் பலகை வேகமூட்டிப் பலகை. accelerator card : முடுக்கி அட்டை : கணினியின் மைய நுண்செயலிக்குப் பதிலாக அல்லது அதன் வேகத்தை அதிகரிக்க பயன்படுத்தப்படும் அச்சு மின் சுற்றுப் பலகை (printed circuit board). இதனால் கணினியின் வேகத் திறன் அதிகரிக்கும். accelerator key : முடுக்கு விசை.
accept : ஏற்றுக்கொள்.
acceptable user policy : ஏற்கத்தக்க பயனாளர் கோட்பாடு : ஏற்கத்தக்க பயன்பாட்டுக் கொள்கை; இணையச் சேவையாளர் அல்லது இணையத்தில் தகவல் சேவை வழங்குபவர் வெளியிடும் ஒர் அறிக்கை. இணையச் சேவையைப் பயன்படுத்திக் கொள்ளும் பயனாளர் எந்தெந்த நடவடிக்கையில் ஈடுபடலாம் அல்லது ஈடுபடக் கூடாது என்று குறிப்பிட்டுக் காட்டும் அறிக்கை. எடுத்துக் காட்டாக, பயனாளர்கள் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடுவதைச் சில இணையச் சேவையாளர்கள் அனுமதிப்பதில்லை.
acceptance test : ஏற்புச் சோதனை : புதிய கணினி முறைமை ஒன்றின் திறன்களையும் செயல்பாட்டையும் விளக்குவதற்கான சோதனை. கணினி முறைமை செயலொழுங்கு நிலையில் உள்ளது என்பதை நுகர்வோர்க்கு உணர்த்த உற்பத்தியாளரால் பெரும்பாலும் இச்சோதனை நிகழ்த்தப்படுகிறது.
access : அணுகல் : 1. விரும்பும் தகவலைக் கண்டறிய பொதுவாக கணினி முறைமையை அல்லது ஒரு தரவுத் தளத்தை அணுகுதல். 2. மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தரவுத்தள மென்பொருள்.
access arm : அணுகு கை : பெறுநிலைக் கரம் : காந்த வட்டுக் கோப்பு சேமிப்பகத்தில் படித்தல் மற்றும் எழுதுதலுக்கான பொறியமைவை குறிப்பிட்ட நிலையால் பொருத்த உதவும் எந்திர உறுப்பு.
ACCESS bus : அணுகு பாட்டை; அணுகு மின்வழி : கணினியுடன் புறச் சாதனங்களை இணைக்கப் பயன்படும் இருதிசை மின் இணைப்புத் தொகுதி. அச்சுப் பொறிகள், இணக்கிகள், சுட்டிகள், விசைப் பலகைகள் போன்ற 125 குறைவேகப் புறச் சாதனங்களை ஒற்றைப் பொதுப் பயன் வாயில் மூலமாக, இந்த அணுகுபாட்டையில் கணினியுடன் இணைக்க முடியும். இதற்கு புறச் சாதனங்கள், தொலைபேசி செருகி போன்ற இனைப்பானால் பொருத்தப்படுகின்றன. ஆனால் கணினி ஒவ்வொரு புறச்சாதனத்துடனும் நேரடியாக தொடர்பு கொள்கிறது. கணினி செயல்பட்டுக் கொண்டிருக்கும் போதே புறச்சாதனத்தைப் பொருத்தலாம். கணினி, தானாகவே அதற்கொரு முகவரியை ஒதுக்கி செயல் நிலைக்கு கொண்டுவந்து விடும். டிஜிட்டல் எக்யூப்மென்ட் கார்ப்பரேஷன் உருவாக்கியுள்ள இந்த அக்செஸ் பஸ், இன்டெல் நிறுவனத்தின் யுஎஸ்பி (universal serial bus) -க்குப் இணையானது எனலாம்.
access code : அணுகுக் குறி முறை : ஒரு கணினி முறைமையில் இயக்குவோரைக் குறிக்கும் எழுத்துகள் அல்லது எண்களின் குழு.
access control : அணுகுக் கட்டுப்பாடு : அணுகுக் குறியீட்டைப் பயன்படுத்தும் செயல்முறை. இதன் மூலம் ஒரு கணினியை அனுமதிக்கப்பட்டவர் மட்டுமே பயன்படுத்தும் வகையில் கட்டுப்படுத்தப்படுகிறது.
access control list : அணுகல் கட்டுப்பாட்டுப் பட்டியல் : வட்டில் பதிவு செய்து வைக்கப்பட்டுள்ள ஒரு கோப்பினை அணுகவும், திருத்தம் செய்யவும் உரிமை பெற்றுள்ள பயனாளர்கள் அல்லது குழுக்கள் பற்றிய தகவல்கள் அடங்கிய பட்டியல்.
access control register : அணுகுக் கட்டுப்பாட்டுப் பதிவகம் : செயல்பட்டுக் கொண்டிருக்கும் இயக்கத்துக்கு தகவல் அணுகலைக் கொடுக்கும் எந்திரப் பதிவகம்.
access denied : அணுகல் மறுப்பு.
access event : அணுகல் நிகழ்ச்சி, அணுகு நிகழ்வு.
access hole : அணுகு துளை.
access immediate : உடனடி அணுகல்.
access level : அணுகு மட்டம்; அணுகு நிலை.
access light : அணுகு ஒளி : கணினி, ஒரு வட்டில் எழுதும் போதோ அல்லது படிக்கும் போதோ கணினி முகப்பில் ஒளியின் மூலம் சமிக்கை அளிப்பது. வட்டு இயக்ககத்தில்கூட இது சில சமயம் இருக்கலாம்.
access limits : அணுகு எல்லைகள் : பாதுகாக்கப்பட்ட தகவல் கோப்புகளின் தொகுதியைப் படிக்கவோ, பயன்படுத்தவோ அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை.
access mask : அணுகல் மறைப்பி.
access mechanism : அணுகு பொறியமைவு : காந்த வட்டுச் சேமிப்பகத்தில் படித்தல் மற்றும் எழுதுதல் முனையை உரிய தடத்தில் நிறுத்தும் உறுப்பு.
access memory, random : குறிப்பின்றி அணுகு நினைவகம்.
access method : அணுகுமுறை : சேமிப்பு மற்றும் உள்ளீட்டு/வெளியீட்டுப் பொறிகளுக்கு இடையில் தகவல் பரிமாற்றத்துக்கு இயக்குவோர் பயன்படுத்தக்கூடிய பராமரிப்பு உத்திகளில் ஏதாவது ஒன்று.
access mode : அணுகு பாங்கு.
access monitoring : அணுகுக் கண்காணிப்பு : சரியான அனுமதிச் சொல்லைக் கொடுப்பதற்கு ஒருசில வாய்ப்புகளை மட்டுமே கொடுக்கும் அணுகுக்கட்டுபாட்டு முறை.
access number : அணுகு எண் : இணையத்திலுள்ள ஒரு சேவையை அணுகுவதற்கு சந்தாதாரர் பயன்படுத்தும் தொலைபேசி எண்.
accessibility : அணுகல் தரம்; அணுகுதிறன் அணுகுதரம் : ஏதேனும் ஒருவகையில் உடல் ஊனமுற்றவர்கள், நடமாடுவதில், பார்வையில், கேட்பதில் குறைபாடு உடையவர்கள், எவ்வித இடர்ப்பாடும் இல்லாமல் கையாள்வதற்கு ஏற்ற வகையில் கணினியில் அமைந்துள்ள வன்பொருள், மென்பொருள்களின் தரம்.
accessibility options : அணுகுமுறை விருப்பத் தேர்வுகள்.
accessory : துணையுறுப்பு : நெகிழ்வட்டு இயக்ககம், அச்சுப்பொறி போன்ற ஒரு வெளிப்புறச்சாதனம்.
access path : அணுகு பாதை; அணுகுவழி : ஒரு கோப்பின் இருப்பிடத்தைக் கண்டறிய, இயக்க முறைமை (operating system) பின்பற்றிச் செல்லும் பாதை. அணுகுபாதை ஒரு இயக்ககம் அல்லது வட்டுத் தொகுதி (disk volume) பெயருடன் தொடங்கும். அதனைத் தொடர்ந்து கோப்பகம் மற்றும் உள்கோப்பகங்களின் பெயர்கள் தொடர்ச்சியாக இடம் பெறும் (அவ்வாறு இருப்பின்). இறுதியில் கேப்பின் பெயர் இருக்கும். (எ. டு) : C : \WINDOWS\SYSTEM\abc. dll access permission : அணுகல் அனுமதி : அணுகுவதற்குரிய பாதுகாப்பு விதிமுறைகளுக்கு ஏற்ப செயற்பட்டு ஒரு நிரலாக்கத் தொடரை இயக்க அனுமதித்தல்.
access points : அணுகு முனைகள்; இயக்க முனைகள்.
access privileges : அணுகு சலுகைகள் : ஒரு பிணையத்தில் அல்லது ஒரு கோப்பு வழங்கலில் சேமிக்கப்பட்டுள்ள தகவல் வளங்களைக் கையாள்வதற்கு ஒரு குறிப்பிட்ட பயனாளருக்கு அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகள். வழங்கல் கணினியை அணுகுதல், ஒரு கோப்பகத்தின் உள்ளடக்கத்தைப் பார்வையிடல், ஒரு கோப்பினைத் திறந்து பார்த்தல், அதனைப் பிறருக்கு அனுப்புதல், ஒரு கோப்பினை அல்லது கோப்பகத்தை உருவாக்குதல், திருத்தியமைத்தல், அழித்தல் போன்ற செயல்பாடுகள் இந்தச் சலுகைகளில் அடங்கும். முறைமை நிர்வாகி ஒரு பயனாளருக்கு இச்சலுகைகளை வழங்கலாம் அல்லது மறுக்கலாம். நிர்வாகிக்கு இத்தகைய உரிமை இருப்பதால் தகவல் பாதுகாக்கப்படுகிறது; இரகசியத் தகவலின் மறைதன்மை காப்பாற்றப்படுகிறது. வட்டிலுள்ள சேமிப்பிடங்கள் போன்ற வளங்களை முறைப்படி பிரித்தளிக்க முடிகிறது.
access protocol : அணுகு நெறிமுறை : தடங்களில் சமிக்கைகளை அனுப்புவதற்கு ஒரு கட்டமைப்பில் உள்ள சாதனங்களைப் பயன்படுத்தும் போக்குவரத்து விதிகள். எதைப் பயன்படுத்தினாலும், ஒரு நேரத்தில் ஓர் இடத்திலிருந்து மட்டுமே அனுப்பப்பட வேண்டும். இல்லையேல், தரவு தவறாகும் அல்லது தொலைந்து போகும்.
access provider : அணுகல் வழங்கி.
access, random : குறிப்பின்றி அணுகல்.
access rights : அணுகு உரிமைகள் : ஒரு கோப்பு அல்லது கோப்பகம் அல்லது ஒரு முறைமையைப் பார்க்க, உள் நுழைய அல்லது மாற்றம் செய்வதற்கான அனுமதி.
access, serial : தொடரியல் அணுகல்.
access series அணுகு தொடர்.
access specifier : அணுகல் வரையறுப்பி.
access speed : அணுகு வேகம் : முதன்மை அல்லது துணை நிலை நினைவகத்தில் தரவுகள் கேட்கப்பட்டதிலிருந்து அவை எடுக்கப்பட்டு, பயன்படுத்த ஆகும் நேரம்.
access storage device, direct : நேரடி அணுகு களஞ்சியக்கருவி; நேரடி அணுகு சேமிப்பக சாதனம்.
access storage, direct : நேரடி அணுகு சேமிப்பகம் : அணுகு களஞ்சியம்.
access storage, random : தற்போக்கு அணுகு தேக்ககம்; குறிப்பின்றி அணுகு சேமிப்பகம்.
access storage, zero : சுழி அணுகு சேமிப்பகம்.
access time : அணுகு நேரம் : சேமிப்பிலிருந்து ஒரு குறிப்பிட்ட தரவைக் கண்டறிந்து, வெளியிட்டுக்கு வழங்குவதற்கான நேரம் அல்லது தரவு ஒன்றைச் சேமிப்பு இடத்தைக் கண்டறிந்து வழங்குவதற்கான நேரம்.
access to store : சேமிப்பக அணுகல்.
access vector : அணுகு நெறியம் : தேவையான தரவுகளைக் கண்டுபிடிக்க உதவும் ஒரு தரவு விவரம்.
account . கணக்குவைப்பு : 1. இணையத்தில், ஒரு பயனாளரை அடையாளம் காணவும், அவர் இணையத்தைப் பயன்படுத்தும் நேரத்தைக் கணக்கிடவும், இணையச்சேவை நிறுவனம் பராமரித்து வரும் கணக்கு வைப்பு. 2. குறும்பரப்பு பிணையங்களிலும், பல் பயனாளர் இயக்க முறைமைகளிலும், நிர்வாகம் மற்றும் பாதுகாப்புக் காரணங்களுக்காக, அனுமதிக்கப்பட்ட பயனாளர்களை அடையாளம் காணும் பொருட்டு, பதிவு செய்து வைக்கப்பட்டுள்ள ஒரு குறிப்பேடு.
accountancy : கணக்கியல்
accountancy card calling : வங்கிக் கணக்கு அழைப்பு அட்டை
accounting file : கணக்கு வைப்புக் கோப்பு : ஒரு பிணைய அல்லது பல் பயனாளர் பணிச் சூழலில், ஓர் அச்சுப்பணி அச்சுப்பொறிக்கு அனுப்பப்படும்போது, அதை அனுப்பிய பயனாளர் பற்றிய விவரம் மற்றும் இதுவரை அச்சடிக்கப்பட்ட பக்கங்கள் பற்றிய விவரம் ஆகியவற்றைக் கொண்ட ஒரு கோப்பு. இந்தக் கோப்பு அச்சுப் பொறி கட்டுப்படுத்தி (printer controller) யால் உருவாக்கப்படுகிறது.
accounting information system : கணக்கிடும் தகவல் அமைப்பு : ஒரு நிறுவனத்தின் பணம் கைமாறல் போன்ற வணிகப்
புழக்கங்களைப் பதிவு செய்து வைக்கப்பட்டுள்ள ஒரு கோப்பினை அணுகவும், திருத்தம் செய்யவும் உரிமை பெற்றுள்ள பயனாளர்கள் அல்லது குழுக்கள் தரவுகள் பற்றிய தரவுகள் அடங்கியபட்டியல்.
accounting machine : கணக்கியல் எந்திரம்; கணக்கு வைப்பு எந்திரம் : 1. 1910 மற்றும் 50களில் வணிகக் கணக்கியல் நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தப்பட்ட எந்திரம். தானியங்கு தரவு செயலாக்கத்திற்குப்பயன்படுத்தப்பட்ட பழமையான கருவிகளுள் ஒன்று. தொடக்ககால கணக்கியல் எந்திரங்கள் மின்னணு அடிப்படையிலானவை அல்ல. துளை அட்டை மற்றும் செருகு பலகைச்சட்டங்களைப் பயன்படுத்தின. 2. கணக்கியல் செயல்பாடுகளுக்கு என்றே தனிச்சிறப்பாகப் பயன்படுத்தப்படும் கணினி. இக்கணினியை இயக்கியதும் அதில் பதிவுசெய்யப்பட்டுள்ள கணக்கியல் மென்பொருள் இயங்கத்தொடங்கும்.
accounting package : கணக்கிடு தொகுப்பு.
accounting routine : கணக்கிடு நடைமுறை.
accounting systems : கண்க்கிடும் அமைப்புகள் : நிதி சார்ந்த தரவுகளை அளவிட, விளக்க, ஆராய மற்றும் பரப்ப முடிவெடுப்பவர்களை அனுமதிக்கும் கணினி அமைப்புகள்.
account number : கணக்கு எண் : ஒரு கணினி மையத்தில் கணினி பயன்படுத்தும் ஒருவருக்கோ அல்லது பலருக்கோ அளிக்கப்படும் எண். அந்த எண் பாதுகாப்பு மற்றும் கட்டணம் கணக்கிடும் நோக்கத்துக்காகப் பயன்படும். நுழை சொற்களையும் (Passwords) கணக்கு எண்களாகப் பயன்படுத்தலாம் அல்லது நுழைச் சொற்களுடன் கனககு எண்ணும் தரப்படலாம்.
account policy : கணக்கியல் கொள்கை : கணக்குவைப்புக் கோட்பாடு : 1. குறும்பரப்புப் பிணையங்கள் மற்றும் பல்பயனாளர் பணித்தளங்களில் பயனாளர்களின் உரிமைகள் தொடர்பாகப் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் பற்றிய வரையறைகள். ஒரு புதிய பயனாளர், முறைமையை அணுக அனுமதிக்கலாமா, ஏற்கெனவே உள்ள பயனாளருக்குக் கூடுதலான வளங்களைக் கையாளும் உரிமைகளையும் வழங்கலாமா என்பது போன்ற கொள்கை நிலைகளை வரையறுப்பது. ஒரு பயனாளர் தனக்குரிய சலுகைகளை முறைப்படி பயன்படுத்திக்
கொள்வது தொடர்பான விதிமுறைகளையும் இக்கொள்கை வரையறை செய்கிறது. 2. விண்டோஸ் என்டி (விண்டோஸ் 2000) மற்றும் விண்டோஸ் எக்ஸ் பீ இயக்க பிணையத்தைச் சேர்ந்த ஒரு குறிப்பிட்ட கணினி அல்லது ஒரு களப்பிரிவில் (domain) உள்ள பயனாளர்கள் நுழைசொற்களைப் (passwords) பயன்படுத்துவதற்கான விதிமுறைகளை இச்சொற்றொடர் குறிக்கிறது.
acoustic coupler : கேட்பொலி பிணைப்பி.
accumulation : திரட்சி ; சேர்ப்பு.
accumulator : குவிப்பி; திரளகம்; திரட்டகம்; சேர்ப்பகம் : நுண்செயலில் கணக்கீடுகளுக்குப் பயன்படுத்தப்படும் ஒரு பதிவகம். பொதுவாக, குறிப்பிட்ட உறுப்புகளை எண்ணுவதற்கோ, தொடர் கூட்டுத்தொகையை பதிவு செய்யவோ இப்பதிவகம் பயன்படுகிறது.
accuracy : துல்லியம்
accurate : துல்லியமான.
ACD : ஏசிடி : Automatic Call Distributor என்பதன் சுருக்கம். வரிசைமுறை அமைப்பில் பயன்படுவது.
ACF : ஏசிஎஃப் : Advanced Communication Facility என்பதன் சுருக்கம்.
ACH : ஏசிஎச் : Association for Computers and the Humanities என்பதன் குறும்பெயர். மொழி, இலக்கியம், வரலாறு, மானிடவியல், சமூகவியல் இவற்றில் கணினி ஆய்வுகளையும் மற்றும் கலை, இசை, நடனம் ஆகியவற்றைப் படைக்கவும் கற்கவும் பயன்படுத்துபவரை ஊக்குவிக்கும் பன்னாட்டுச்சங்கம்.
ACI : ஏசிஐ : Automatic Car identification என்பதன் குறும்பெயர். தானியங்கு முறையில் தொடர்வண்டி பெட்டிகளை அறிதலைக் குறிக்கும். இரயில் பாதை நிறுவனங்கள் தொடர்வண்டி பெட்டிகளை அறிவதற்குப்பயன்படுத்தும் தானியங்கு முறை.
ACIA : ஏசிஐஏ : Asynchronous Communications interface Adapter என்பதன் குறும்பெயர். செய்தித் தகவல் தொடர்பு இடைமுகங்களில் பயன்படுத்தப்படும் ஒரு ஒருங்கிணைந்த மின்சுற்றுச்சிப்பு.
ACIS : அசிஸ் : Andy. Charles. lan's System என்ற சொற்றொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். இது பொருள் நோக்கிலான வரைவியல் மாதிரி கருவிகளை உருவாக்கும் தொகுதியாகும். முப்பரிமாணப் பயன்பாடுகளில் பயன்படுத்த வடிவமைக்கப்பட்ட வரைவியல் எந்திரம் (geometry engine).
ACK : ஏசிகே : ஏற்பு அறிவிப்பு : Acknowledgeஎன்பதன் பெயர். தகவல் தொகுப்பு ஒன்று பெறப்பட்டுள்ளது என்பதை, அதனை அனுப்பிய முனையத்துக்கு, பெற்ற முனையம் திருப்பி அனுப்புவது. இதற்கு எதிர்மறையான குறும் பெயர் என். ஏ. கே (NAK).
acknowledge : ஏற்பு ஒப்பு : ஒரு பணி முடிந்துவிட்டது என்பதையும், அடுத்த பணிக்கு வன்பொருள் தயார் என்பதையும் குறிப்பிடும் உள்ளிட்டு/வெளியீட்டு சமிக்கை.
acknowledge character : ஏற்பு ஒப்பு எழுத்து : அனுப்பப்பட்ட தகவல் சரியாகப் பெறப்பட்டது என்பதைக் குறிப்பிடும் தகவல் தொடர்பு கட்டுப்பாட்டு எழுத்து.
acknowledgement : ஏற்பு ஒப்பம் : தகவல் பெறும் சாதனத்திலிருந்து அனுப்பும் சாதனத்திற்கு ஏற்பு ஒப்ப எழுத்தை அனுப்புதல்.
A C M ஏசிஎம் : கணினி எந்திரங்களுக்கான சங்கம்
Association for Computing Machinery என்பதன் குறும்பெயர். கணினி வல்லுநர்களுக்களுக்கான தொழில் திறனையும் தகுதியையும் வளர்க்கப் பாடு படும் உலகின் மிகப் பெரிய மற்றும் அறிவியல் சங்கம். 1947இல் உருவாக்கபட்டது. அவ்வப்போது மாணவர்கள் கல்வியாளர்கள் தொழில்செய்வோர் இடையே நடைபெறும் விவாதங்களைக் கொண்ட மதிப்புமிக்க இதழ் களை வெளியிட்டும் எண்ணற்ற கருத்தரங்குகளை நடத்தியும் தொழில் நுட்பத் திறனுக்காகப் புகழ் பெற்றது.
ACMST : ஏசியம்எஸ்டி : Association for Computers in Mathematics and Science Teachin என்பதன் தலைப்பெழுத்துக் குறும்பெயர். கணிதம் மற்றும் அறிவியல் கல்வியில் கணினிகள் சங்கம். இது கல்வியில் கணினியைப் பயன்படுத்துவதில் ஆர்வம் கொண்டுள்ள கல்லூரி மற்றும் மேல் நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான தொழில் முறை அமைப்பு.
acoustic coupler ஒலிப்பிணைப்பி; ஒலி இணைப்புச்சாதனம் . ரப்பர் கோப்பைகள் வழியாக தொலைபேசியின் பகுதியுடன் கைக்கொள் இணைக்கப்படும் மோடெம். இது கணினி தரும் சமிக்கைகளை தொலைபேசியின் வாய் பேசி உரைக் கூடிய ஒசையாக மாற்றுகிறது. தொலைபேசி ஒசைகளை கணினி படிக்கக் கூடிய மின்சார சமிக்கைகளாக மாற்றுகிறது. இவை ஒலி மோடெம் என்றும் அழைக்கப்படுகின்றன. இவை எந்த வகை தொலைபேசியுடனும் இணையக் கூடியவை. நேரடி இணைப்பு மோடெம்களை ஒரு தொலைபேசி அமைப்புடன் இணைக்கத் தொகுப்பியல் தொலைபேசி இணைப்புத் தேவை. ஒரு விநாடிக்கு 1, 200 துண்மி (பிட் ) என்பது இதன் தகவல் பரிமாற்ற வேகம்
acoustic delay line : ஒலி அடிப்படையின் தாமதத் தடம்.
acoustic memory : ஒலி நினைவகம் : தொடர்ச்சியாக ஒரு சமிக் கையை மீண்டும் மீண்டும் உரு வாக்குவதன் மூலம் தகவலைச் சேமிக்கும் இடம்.
acoustic modem : ஒலி இணக்கி; ஒலி மோடெம் : இரும ஒலி அலை வரிசைகளாக மாற்றுவதன்மூலம் தகவல்களை அனுப்பிப் பெறுகிறது
acoustic sound enclosure
ஒலித் தடுப்பு உறை : ஒர் அச்சுப்பொறி அல்லது பிற எந்திரங் களில் பொருத்தி ஒசையை மட்டுப்படுத்தும் சாதனம்.
ACPA : ஏசிபிஏ : கணினி நிரலர் மற்றும் பகுப்பாய்வாளர் சங்கம் Association of Computer Programmer and Analysis என்பதன் குறும்பெயர். தொழிலில் ஈடுபட்டிருப்போது பன்னாட்டுச் சங்கம். தொழில் துணுக்கப் பிரச்சினைகளில் உறுப்பினர்களின் கருத்துகளுக்கு இடமளிக்கிறது. மற்றும் தொழில்துணுக்கத் திறனை வளர்த்துக் கொள்ள கருத்தரங்குகள், கருத்துப் பட்டறைகள், மாநாடுகள் மூலம் வாய்ப்பளிக்கிறது. தேசிய அளவிலும் வட்டார அளவிலும் தகவல்கள் நிறைந்த துறைசார் வெளியீடுகளை வழங்குகிறது. மற்ற சேர்ந்த தொழில்நுணுக்கத்திறனாளருடன் கருத்துப் பரிமாற்றத்தை ஊக்குவிக்கிறது.
Arcobat : அக்ரோபேட் :
அடோப் நிறுவனம் உருவாக்கி யுள்ள ஒரு வணிக மென் பொருள். டாஸ் விண்டோஸ்,
மெக்கின்டோஷ், யூனிக்ஸ் பணித்தளங்களில் உருவாக்கப் பட்ட, முழுதும் வடிவமைக்கப் பட்ட ஆவணங்களை பிடிஎஃப் (PDF - Portable Document Format) கோப்பாக மாற்றித் தரும். பிடிஎஃப் கோப்பினை வெவ்வேறு பணித்தளங்களில் பார்வையிட முடியும். மூலக்கோப்பு எந்தப் பயன்பாட்டுத் தொகுப்பில் உருவாக்கப்பட்டிருந்தாலும், அக்கோப்பிலுள்ள வேறு வேறான எழுத்துருக்கள், நிறங்கள், வரைகலை மற்றும் ஒளிப்படங்களையும் சேர்த்து, கணினி வழியாக பிறருக்கு அனுப்பி வைக்க முடியும். பிடிஎஃப் கோப்புகளைப் பார்வையிட மட்டும் முடிகின்ற 'அக்ரோபேட் ரீடர்' என்னும் மென்பொருள் இலவசமாகவே கிடைக்கிறது.
acronym : முதலெழுத்துக் குறும் பெயர் தலைப் பெழுத்துச் சுருக்கப் பெயர்.
across worksheets : பணித்தாள்களுக்கிடையே.
action : செயல் : குறிப்பிட்ட சூழலில் வெளியாகும் செயற்பாடு.
action argument : செயல்மதிப்புரு செயல் இணைப்பு மாறி.
action diagram : செயல் வரிபடம்
action message : செயல் தகவல்; செயல் செய்தி.
action oriented management : செயல் சார்ந்த மேலாண்மை.
action oriented management report : " செயல் சார்ந்த மேலாண்மை அறிக்கை சிறப்புக் கவனம் தேவைப்படுகின்ற அசாதாரண சூழ்நிலைகள் குறித்து நிர்வாகத்தினை விழிப்படையச் செய்யும் ஒரு சிறப்புக் குறிப்புரை.
action statement : செயல் கூற்று : சில செயல்களை மேற்கொள்ளும்படி கணினிக்குத் தரப்படும் கட்டளை.
action stub : செயலிடம்
activation : இயங்குவித்தல் : ஒரு செயல்முறையை இயங்கச் செய்தல்.
activation record ; இயங்குவிப்பு ஏடு : இயங்க வைத்தல் தொடர் பான தரவு வைக் கொண்டப் உள்ளமைப்பு தரவு அமைப்புமுறை.
activation stack : இயங்குவிப்பு இருப்பு நிகழ்வு இயக்கி உட்பட அனைத்து இயக்கிகளுக்குமான ஒரு உட்பகுதி தகவல் அமைப்பு.
active addressing : இயங்கு முகவரி; செயற்படு முகவரி.
active area : இயங்கு பரப்பு
active cell : செயற்படும் சிற்றிடம்; இயங்கு கலன் : மின்னணுவியல் விரிதாளில், தளப்பரப்பில் சுட்டியினால் உணர்த்தப்படும் கட்டம். active channel : இயங்கு தடம் : செயற்படு அலை வரிசை
active class : இயங்கு இனகுழு
active configuration : இயங்கு அமைவடிவு செயல்படு தக தகவமைப்பு.
active content : இயங்கும் உள்ளடக்கம் : மாறும் உள்ளடக்கம் நேரத்தின் அடிப்படையிலோ, பயனாளரின் நடவடிக்கை காரணமாகவோ, தளவலைப்பக்கத்தின் மாறுகின்ற உள்ளடக்கம். இணையத்தில் திரையில் தோன்றும் ஒரு வலைப் பக்கத்தில் காணப்படும் படங்கள், எழுத்துகள், விளம்பரப் பட்டைகள் இவற்றை, நேரத்தின் அடிப்படையிலோ, பயனாளரின் தலையீட்டின் அடிப்படையிலோ (கட்டியில் சொடுக்குவதன்மூலமோ) மாற்றியமைக்க முடியும். இத்தகைய மாறும் உள்ளடக்கம், ஆக்டிவ்எக்ஸ் கட்டுப்பாட்டு விசைகள் மூலம் இயல்கிறது.
active database : இயங்கு தகவல் தளம்; இயங்கு தரவுத் தளம்.
active data dictionary : இயங்கு தரவு அகராதி ஒரு நிறுவனத்தின் தரவுத் தளத்தை அணுகுவதற்கு டிபிஎம் எஸ்ஸை பயன்படுத்துபவர்கள் மற்றும் பயன்பாட்டு நிரல் தொடர்கள் அணுகும்போது, தரவு பொருள் வரையறைகளை தானாகவே செயற்படுத்தும் தரவு அகராதி.
active decomposition படு சிதைவு.
active decomposition diagram இயங்கு சிதைவு வரைபடம்.
active device : இயங்கு உறுப்பு : இயங்கு பகுதி இயங்கிக் கொண்டிருக்கும் சாதன நிரலின் அடிப்படையில், ஒரு கோப்பு அல்லது கணினித் திரையில் ஒரு பகுதி, தற்போது செயல்பாட்டில் இருக்கும் அல்லது கட்டளைச் செயல்பாடுகளுக்கு ஆட்பட்டிருக்கும். பொதுவாக, திரையில் தோன்றும் கட்டுக்குறி (Cursor) அல்லது தேர்வு செய்யப்பட்ட ஒரு பகுதி, கணினித் திரையில் இயங்கும் உறுப்பினை காட்டும்.
active element : செயற்படு உறுப்பு : இயங்கு உறுப்பு.
active file : நடப்பு கோப்பு : பயன்படும் கோப்பு : தற்பொழுது பயன்படுத்தப்படும் கோப்பு.
active index : செயற்படும் சுட்டு
active links : இயங்கும் இணைப்புகள் : செயற்படு தொடுப்புகள்.
active matrix display : இயங்கு அணி காட்சி. ActiveMovie : இயங்கும் திரைப்படம் : மேசைக் கணினி மற்றும் இணையத்தில் செயல்படுத்தும் பல்லூடகப் பயன்பாடுகளுக்காக, மைக்ரோசாஃப்ட் நிறுவனம் உருவாக்கிய, பணித்தளம் சாரா இலக்கமுறை ஒளிக்காட்சி (Digital Video) தொழில் நுட்பம்.
active partition : இயங்கும் பாகம் : வன்பொருளில் மின் சக்தி வந்தவுடன் பயன்படுத்தப்படும் இயக்க முறைமையைக் கொண்ட நிலைவட்டின் பகுதி.
active programme : ந்டப்பு நிரல்;இயங்கும் செயல் நிரல் : நுண்செயலி தற்போது நிறைவேற்றிக் கொண்டிருக்கும் நிரல்.
active sensing : நடப்பு ஆணைத் தொடர்.
active star : இயங்கும் நட்சத்திரம் : வெளியிலுள்ள முனையங்கள் ஒரு தனி மைய முனையுடன் இணையும் ஒரு பிணையக் கட்டமைப்பு முறை.
active window : இயங்கும் சாளரம் : மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் தொகுப்பில் இயங்கும் திறந்த சாளரம்.
ActiveX : ஆக்டிவ்எக்ஸ் : வெவ்வேறு மொழிகளில் உருவாக்கப்பட்ட மென்பொருள் செயல் உறுப்புகள் (components) ஒரு பிணையப் பணிச் சூழலில், தமக்குள் உறவாடிக் கொள்ள வகைசெய்யும் தொழில்நுட்பங்களின் கூட்டுத் தொகுதி. 1990-களின் இடைப்பகுதியில் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் இதனை உருவாக்கியது. மைக் ரோசாஃப்ட் நிறுவனத்தின் காம் (COM.-Component Object Model) தொழில் நுட்பத்தின் அடிப்படையில் இது உருவாக்கப் பட்டுள்ளது. தற்போது வைய விரிவலையில் பயனாளர் உறவாடும் பக்கங்களை வடிவமைக்க ஆக்டிவ்எக்ஸ் பெருமளவு பயன்படுத்தப்படுகிறது. மேசைக் கணினிப் பயன்பாடுகளிலும், ஏனைய நிரலாக்கங்களிலும்கூடப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
ActiveX controls : ஆக்டிவ் எக்ஸ் கட்டுப்பாடுகள்;ஆக்டிவ் எக்ஸ் இயக்குவிசைகள் : ஆக்டிவ்எக்ஸ் தொழில் நுட்ப அடிப்படையில் உருவாக்கப்பட்ட, மீண்டும் மீண்டும் பயன்படுத்திக் கொள்ளக்கூடிய மென் பொருள் செயலுறுப்புகள். அசைவூட்டம் (animation), மீள்-எழு பட்டிகள் (pop-up menus) போன்ற தனிச்சிறப்பான செயல்பாடுகளை வலைப்பக்கங் களிலும் மேசைப் பயன்பாடுகளிலும் உருவாக்குவதற்கு இச் செயலுறுப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். சி, சி++, விசுவல் பேசிக், விசுவல் சி++ போன்ற மொழிகளில் ஆக்டின்எக்ஸ் செயலுறுப்பு களை உருவாக்க முடியும்.
ActiveX documents : ஆக்டிவ் எக்ஸ் ஆவணங்கள்.
activity : நடவடிக்கை;செயற்பாடு : பணியின் பகுதிகளில் ஒரு நடவடிக்கை.
activity rate : செயற்பாட்டு வீதம்.
activity ratio : செயல்பாட்டு விகிதம் : கோப்பு ஒன்று கையாளப்படும்பொழுது நடவடிக்கைகளுக்கு ஆட்படும் ஆவணங்களுக்கும் கோப்பில் உள்ள ஆவணங்களுக்கும் இடையிலான விகிதம்.
ΑCΤΟR : ஆக்டர் : ஒயிட் வாட்டர் குரூப் நிறுவனத்தினர் உருவாக்கிய, பொருள் நோக்கிலான நிரலாக்க மொழி. மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் நிரலாக்கத்திற்கு உதவும் நோக்கில் வடிவமைக்கப்பட்ட மொழி.
actual argument : தரு மதிப்பு : ஒரு செயல்கூறு, செயல்முறை அல்லது துணைநிரல் கூறினை (Function, Procedure of subroutines அழைக்கும் கட்டளையில், அவபுருக்களுக்கு (para meters) இயைந்த வகையில் அனுப்பி வைக்கப்படும் தரு மதிப்புகள்.
actual decimal point : உண்மை பதின்மப் புள்ளி : ஓர் உள்வீட்டுத் தரவுப் பொருளில் சேர்க்கப்படும் உண்மையாக இடம் பெறும் பதின்மப் புள்ளி.
actuate : உந்திவிடு.
actuator : செயல் ஊக்கி : காந்த வட்டில் விருப்பப்படும் இடத்துக்கு படித்தல், எழுதுதல்,
செயல் ஊக்கி தொகுப்பி
முனையை நகர்த்தும் இயக்கப் பொறியமைப்பு.
ACU : ஏசியு : தானியங்குத் தொலைபேசி அழைப்புப் பிரிவு எனப் பொருள்படும். Automatic Calling Unit என்பதன் குறும்பெயர். இது தொலைபேசி இணைப்பில் அழைப்புகளை வணிக எந்திரம் ஒன்று அனுப்ப அனுமதிக்கிறது.
ada : அடா : ஒரு கணினி மொழி. அமெரிக்க இராணுவத் துறை உருவாக்கிய உயர்திறன் நிரலாக்க மொழி. உலகின் முதலாவது நிரலரான அடா அகஸ்டா லவ்லேஸ் நினைவாக 'அடா' எனப் பெயரிடப்பட்டது.
A-D Analog to Digital : தொடர்முறை இலக்கமுறை மாற்றி'
Ada Lovelace : அடா லவ்லேஸ் : சார்லஸ் பாபேஜுடன் பணியாற்றிய பெண். அப்பெண் ஆங்கிலக் கவிஞர் பைரன் பிரபுவின் மகள் கணிதவியலார். உலகின் முதல் நிரலர் என்ற பெருமையை இவர் பெறுகிறார்.
ADAPSO : எடாப்சோ : Association of Data Processing Service Organization என்பதன் குறும் பெயர். தரவு கையாளும் சேவை நிறுவனச் சங்கங்களின் கூட்டமைப்பின் பெயர். இந்த அமைப்பு ஆண்டுக்கொரு முறை உறுப் பினர்களின் பெயர்களை அகர வரிசையில் தொகுப்பாக வெளியிடுகிறது.
adapter : தகவி;இயைபி;பொருத்தி : பல்வேறு கருவி களுக்கிடையே இயைபை அனுமதிக்கும் கருவிப் பகுதி.
adapter boards : தகவிப் பலகைகள்;இயைபுப் பலகைகள் : அச்சிடப்பட்ட மின் இணைப்புப் பலகைகள். இவை ஒரு முறைமைப் பலகையை உள் ளீட்டு, வெளியீட்டுக் கருவிகளுடன் இணைக்கிறது அல்லது ஒரு முறைமையுடன் சிறப்பான பணிகளைச் சேர்க்கிறது.
adapter cards : தகவி அட்டைகள்;இயைபு அட்டைகள் : தகவிப் பல கைகளுக்கான மாற்றுப் பெயர். adapter class : ஏற்பி இனக்குழு.
adapter ROM : நினைவகம் தகவி;இயைபு நினைவகம் : தகவிச் சாதனத்தைக் கட்டுப்படுத்தும் குறியீட்டைக் கொண்ட நினைவகம். இது கணினி அமைப்பின் இயக்கத் திறனை அதிகரிக்கும். பல நிலை வட்டு இயக்கங்களில் ஏற்பு ரோம்கள் உள்ளன. ஸ்கஸ்ஸிப் புரவன் தகவி கூடுதல் நினைவகம், புறச் சாதனங்கள் அல்லது கூடுதல் நேரியல் அல்லது இணை நிலைத் துறை ஆகியவை தகவிச் சாதனங்களில் அடங்கும்.
adaptive : இயைபு.
adaptive allocation : இயைபு ஒதுக்கீடு.
adaptive answering : பிரித்தறி மறு மொழி;இயைபறி பதிலுரை : தொலைபேசி வழியாக வரும் அழைப்பு ஒரு தொலைநகல் கருவியிலிருந்து வருகிறதா அல்லது கணினியிலிருந்து வரும் தகவல் பரிமாற்றமா என்பதைக் கண்டறிந்து, அதற்கேற்ப புதிலிறுக்கும் ஒரு இணக்கியின் (modem) திறனைக் குறிக்கும்.
adaptive differential pulse code modulation : தகவேற்பு வேறுபாட்டுத் துடிப்புக் குறியீட்டுப் பண்பேற்றம் : இலக்க முறை கேட்பொலித் தகவலை இறுக்கிச் சேமிப்பதற்குப் பயன்படும் தருக்க முறை. கேட்பொலியின் ஒவ்வொரு துணுக்கையும் அப்படியே இலக்கமுறையில் சேமிக்காமல், ஒவ்வொரு துணுக்கும் அதன் முந்தைய துணுக்கிலிருந்து எவ்வாறு வேறுபட்டுள்ளது என்பதை மட்டும் பதிவு செய்யும் முறை.
adaptive interface : இயைபு இடைமுகம்.
adaptive routing : தகவுத் திசைவிப்பு;இயைபு வழியமைப்பு : மாற்று வழியமைப்புக்கு மாறானது. பிணையத் தரவு தொடர்பில் ஒவ்வொரு தடத்திலும் நடைபெறும் போக்குவரத்தைக் கண்காணித்து, எந்தத் தடத்தைப் பயன்படுத்தலாம் என்று முடிவு செய்யப்படுதல்.
adaptive system : இயைபுறு அமைப்பு;தகவுறு முறைமை : கற்கும் திறன், சூழலுக்கேற்ப அதன் நிலையை மாற்றிக் கொள்ளுதல் அல்லது ஒரு துண்டலுக்கு எதிர் வினையாற்றல் போன்றவற்றைக் கொண்ட கணினி அமைப்பு. சூழ்நிலையின் மாற்றங்களுக்கேற்ப தன்னை மாற்றிக்கொள்ளும் கணினி அமைப்பு.
A-D converter : தொடர்முறை இலக்க முறை மாற்றி : தொடர் முறைத் தரவுவை இலக்கமுறைத் தரவுவாக மாற்றும் சாதனம்.
add data : தரவு சேர்.
add data table : தரவு அட்டவணை சேர்.
add echo : எதிரொலி சேர்.
addend : கூட்டெண் : இரண்டு எண்களைக் கூட்டும்போது முதல் எண் கூட்டெண் என்று அழைக்கப்படும்.
addendum : சேர்ப்பு;பின்னிணைப்பு.
adder : கூட்டி : இரண்டு இரும எண்களைக் கூட்டப் பயன்படும் மின்னுறுப்பு.
adder, binary half : இரும அரைக் கூட்டி.
adder, half : அரைக் கூட்டி.
adder unit : கூட்டி அலகு : இரண்டு பல இலக்க இரும எண்களை ஏற்று அவற்றைக் கூட்டும் திறனுள்ள ஒரு மின்னணுச் சாதனம்.
add-in : கூடுதல் இணைப்பு : கணினியில் ஏற்கெனவே பொருத்தப்பட்ட அச்சிடப்பட்ட இணைப்புப் பலகையில் பொருத்தப்படக்கூடிய மின்னணு உறுப்பு. நுண் கணினியில் உள்ள காலியறைகளில் பொருத்தப்படக் கூடிய நினைவுச் சிப்புகள் ஒர் எடுத்துக்காட்டு.
adding machine : கூட்டல் எந்திரம்.
adding wheel : கூட்டல் சக்கரம் : பற்கள் உள்ள பல்லிணை (கியர்). இது எந்திரவியல் முறையில் கூட்டல் நடவடிக்கையை அனுமதிக்கிறது. பாஸ்கல் கணக்கிடு பொறியில் பயன்படுத்தப்படுகிறது.
add-in manager : கூடுதல் வசதி மேலாளர்.
add-in programme : சேர்ப்பு செய் நிரல்;கூடுதல் நிரல்.
addition : கூட்டல் : இரண்டு மதிப்புகளைக் கூட்டுதல்.
addition record : கூட்டிய ஏடு : கோப்பு ஒன்றினைக் கையாளும் பொழுது புதிய ஏட்டை உருவாக்குவதால் கிடைக்கும் ஆவணம்.
addition table : கூட்டல் அட்டவணை.
add method : கூட்டு வழிமுறை.
addnew hardware : புதிய வன்பொருள் சேர்.
add-on : திறனேற்றி : கணினி அமைவு ஒன்றுடன் அதன் கட்டமைவு அல்லது செயல் திறனை மேம்படுத்த அல்லது அதன் சேமிப்புத்திறனை அதிகரிக்கப் பொருத்தப்படும் துணைக் கருவி.