கணினி களஞ்சிய அகராதி-2/C

விக்கிமூலம் இலிருந்து

எஃப்டிபீ என்ற அணுகு பெயர் கொடுத்து, நுழைசொல் ஏதுமின்றியோ அல்லது பயனாளரின்

மின்னஞ்சல் முகவரி அல்லது அனானிமஸ் என்ற சொல்லயோ, நுன்சொல்லாகத் தந்து அணுக முடியும். இத்தகு தளங்கள் பொதுப் பயன் எஃப்டிபீ தளங்கள் என்று அழைக்கப்படுகின்றன.


anonymous post : பெயரிடா மடல் : மொட்டைக் கடிதம் : இணையத்தில் செய்திக் குழு விற்கு அல்லது அஞ்சல் குழுவிற்கு, (Newsgroups or Mailing Lists) அனுப்புவர் பெயரில்லாமல் அனுப்பி வைக்கப்படும் ஒரு செய்தியை அல்லது ஒரு மடலைக் குறிக்கிறது. செய்திக் குழுவிற்கு ஒரு பெயர் மறைப்பு வழங்கன்/கணினி மூலம் இத் தகைய பெயரிடாச் செய்தியை அனுப்ப முடியும். மின்னஞ்சல் முறையில் பெயரிடா மறுமடல் வழங்கன் கணினி, மொட்டைக் கடிதம் அனுப்புவதைச் சாத்தியமாக்குகிறது.


anonymous remailer : பெயர் மறைப்பு மறுமடல் கணினி : இணையத்தில் மின்னஞ்சல் போக்குவரத்தை அதற்குரிய வழங்கன் (server) கணினிகள் ஒழுங்குபடுத்துகின்றன. அனுப்பு பவரின் பெயரை மறைத்துக் கடிதங்களை அனுப்பும் வசதியைச் சில கணினிகள் வழங்குகின்றன. அவை தன் வழியாக அனுப்பப்படும் கடிதங்களின் தலைப்பிலுள்ள அனுப்புபவரின் முகவரியை

நீக்கிவிட்டுச் செய்தியை மட்டும் முகவரியை முகவரி தாரருக்கு அனுப்பி வைக்கின்றன. ஆனால், மடலைப் பெறுபவர் இதே வழங்கன் கணினி மூலம் அனுப்பியவருக்குப் பதில் மடல் அனுப்ப முடியும்.


ANSI : அன்சி : அமெரிக்கத் தேசிய தரக்கட்டுப்பாட்டு நிறுவனம் எனப் பொருள்படும் American National Standards Institute என்பதன் குறும்பெயர்.


ANSI character set : 'அன்சி' எழுத்துத் தொகுதி : அன்சி வரை யறுத்த எழுத்து எண் மற்றும் சிறப்புக் குறியீடுகளைக் குறிப்பிடும் குறியீட்டுத் தொகுதி.


ANSI & COBOL : அன்சி & கோபால் : 1974இல் அமெரிக்க தேசிய தரநிறுவனம் தரப்படுத்திய கோபால் கணினி மொழிப் பதிப்பு.


ANSI graphics : அன்சி வரை கலை.


ANSI key board : அன்சி விசைப் பலகை.


ANSI screen control : அன்சி திரைக் கட்டுப்பாடு. ANSI/SPARC : அன்சி / ஸ்பார்க் : அமெரிக்க தேசிய தரக் கட்டுப் பாட்டுக் கழகம்/தரக் கட்டுப் பாட்டுத் திட்டம் மற்றும் தேவைகளின் குழு எனப் பொருள்படும் American National Standards Institute/Standards Planning and Requirements Committee தலைப்பெழுத்துக் குறும் பெயர். 1970-களில் அன்சிக் குழு குறிப்பிட்ட சில தரவுத் தள மேலாண்மை அமைப்புகளின் அடிப்படையாக விளங்கக்கூடிய, பொதுமைப் படுத்தப்பட்ட மூன்றடுக்குக் கட்டமைப்பு ஒன்றை பரிந்துரை செய்தது.


ANSI. SYS : அன்சி. சிஸ் : பயனாளர் தன்விருப்பப்படி கணினித் திரையில் செய்திகளைத் திரையிட அன்சிக் கட்டளைகள் (எஸ்கேப் வரிசை) பயன்படு கின்றன. இத்தகைய கட்டளைகள் அடங்கிய, எம்எஸ்-டாஸ் கணினிகளில் நிறுவப்படத் தக்க சாதன இயக்கிக் கோப்பு 'அன்சி. சிஸ்' என்றழைக்கப்படுகிறது.


ANSI terminal : அன்சி முனையம் : தரமான அன்சி மொழியில் உள்ள ஆனைகளைப் பின்பற்றும் காட்சி முனையம்.


answering machine : விடையளிக்கும் பொறி; விடைப் பொறி : வரும் செய்திகளைச் சேகரிப்பது. முற்பதிவு செய்திகளை அழைத்தவருக்கு அனுப்பி, பதில் அளிக்க வேண்டியவர் இல்லாத குறையைத் தீர்க்கும் பொறி.


answer mode : விடைப் பங்கு : வேறொரு இணக்கி (மோடெம்) யிலிருந்து வரும் அழைப்பை, இணக்கி (மோடெம்) ஒன்று ஏற்கும் நிலை .


answer only modem : தகவல் பெறு இணக்கி; அழைப்பேற்பு இணக்கி; பதிலுக்கு மட்டுமான இணக்கி : இவ்வகை இணக்கிகள் வருகின்ற தகவல்களை ஏற்கும். ஆனால் தகவல் அனுப்பும் திறன் அற்றவை.


answer / originate : விடையளி / தொடககு


answers / originate modem : தகவல் பெறு/தரு இணக்கி : இவ்வகை இணக்கிகள் தகவல் அனுப்பவும் அழைப்புகளை ஏற்கவும் திறனுள்ளவை. பொதுவாக இவ்வகை இணக்கிகளே புழக்கத்தில் உள்ளன.


answer tone : விடை ஒலி : இணைக்கி (மோடெம்) பதில் கொடுத்துவிட்டது என்பதை அழைத்தவருக்குக் கூறும் ஒலிக் குறிப்பு.


antenna : மின்காந்த அலை வாங்கி. anthropomorphism : மனிதப் பண்பேற்றல் : கணினிகள் மற்றும் கணினிகளால் கட்டுப்படுத்தப்படும் விசைக் கருவிகளைக் குறிப்பதற்கான உருவக முறை. இதில் அவை மனிதர்கள் போன்று கருதப்படுகின்றன.

anti-aliasing : மாற்று நீக்கி : திரையில் காட்டும் வடிவம்

மாற்று நீக்கி

ஒன்றின் விளிம்புகளும் கோடுகளும் பிசிரற்றதாக தோன்றக் கையாளப்படும் வடிகட்டும் உத்தி.

anticedent driver reasoning : முன்னிகழ்வு ஏதுவாதம்.

anticipatory paging : எதிர் பார்ப்பு பக்கமாக்கல்.

antidote : முறிப்பி.

anti-glare : கூசொளித் தடுப்பு : கணினித் திரையில் வெளியிலிருந்து வரும் வெளிச்சம்பட்டுப் பிரதிபளிப்பதைக் குறைக்கும் நடவடிக்கை. பிரதி பலிப்பைக் குறைக்கும் வேதியல் பொருளை கணினித் திரையில் பூசுதல், கூசொளியைத் தடுக்கும் ஒரு சல்லடைத் திரையை கணினித் திரையின்மேல் இடல் அல்லது வெறுமனே வெளி வெளிச்சம் பயனாளர் கண்களுக்கு நேராகப் பிரதிபலிக்காத வகையில் கணினித் திரையை குறிப்பிட்ட திசையில் திருப்பி வைத்தல் போன்ற நடவடிக்கைகள் மூலம் கூசொளியைத் தடுக்கலாம்.

antiglare filter : கூசொளி வடிக்கட்டி.

antistatic device : நிலை மின்சாரத் தடுப்புச் சாதனம் : கணினிச் சாதனங்கள் பழுதுபட்டுப் போகவும் தரவு இழப்பு ஏற்படவும் காரணமான, நிலைமின்சார அதிர்வுகளைக் குறைக்கப் பயன்படும் சாதனம். இது நிலை மின்சாரத்தைத் தடுக்கும் தரைவிரிப்பாக இருக்கலாம். கணினியோடு இணைத்து மணிக்கட்டில் கட்டப்படும் ஒயராக இருக்கலாம். அல்லது நிலை மின்சாரத்தைத் தடுக்கும் தைலத்தைப் பூசிக்கொள்வதாய் இருக்கலாம்.

antistatic mat : நிலை மின்சார எதிர்ப்புப் பாய் : நிலை மின்சாரத்தினால் ஏற்படும் அதிர்ச்சிகளைத் தடுக்க ஒரு சாதனத்தின் முன் னால் வைக்கப்படும் தரைப் பாய். மனிதர்கள் மின்காந்த கருவிகளை கையாளும்போது ஏற்படும் அதிர்ச்சியால் தரவுகள் அழிந்து போகாமல் இது காப்பாற்றும்.

antivirus programme : நிச்சு நிரல் எதிர்ப்புச் செயல்நிரல்; நச்சு நிரல் எதிர்ப்பி : ஒரு கணினியின் சேமிப்பு வட்டிலும் நினைவகத்திலும் தங்கியிருந்து ஊறு விளைவிக்கும் நிரல் தொகுப்பை வைரஸ் அல்லது நச்சுநிரல் என்கிறோம். அத்தகைய நச்சுநிரல் நமது கணினியின் சேமிப் பகத்திலோ நினைவகத்திலோ உள்ளதா என்பதைக் கண்டறியவும், இருப்பின் அதனைக்களையவும் திறனுள்ள நிரல் தொகுப்பை நச்சுநிரல் எதிர்ப்பி என்கிறோம். பிணையம் (network) அல்லது இணையம் (internet) வழியாக பதிவிறக்கம் (download) செய்யும் கோப்புகளில் நச்சுநிரல் ஒட்டிக் கொண்டு உள்ளதா என்பதை அறிந்து சொல்கின்ற எதிர்ப்பிகளும் உள்ளன.

antonym dictionary : எதிர்சொல் அகராதி :

any key : ஏதேனும் ஒரு விசை : கணினி விசைப் பலகையிலுள்ள ஏதேனும் ஒரு விசை. கணினியில் இயக்கப்படும் செயல்முறைத் தொகுப்புகள் சில, சிலவேளைகளில் தொடர்ந்து செல்ல, ஏதேனும் ஒரு விசையை அழுத்தவும் (Press any key to continue) என்ற செய்தியைத் தருவதுண்டு. அப்போது பயனாளர் விசைப் பலகையிலுள்ள ஏதேனும் ஒரு விசையை அழுத்தலாம். விசைப் பலகையில் any என்ற பெயரில் ஒரு விசை இல்லை என்பதை அறிக.

any-to-any connectivity : எதிலிருந்து எதற்கும் இணைப்பு : பிணையங்களில் (network) பல்வகை உள்ளன. பிணையக் கட்டமைப்பிலும் (topology), புரவலர் வழங்கன் (hostlserver) இனத்திலும், தரவுப் பரிமாற்ற நெறிமுறையிலும் (protocol) பல்வேறு வகைகளும் முறைகளும் உள்ளன. பல்வகைச் சூழலும் ஒருங்கிணைந்த ஒரு பிணையக் கட்டமைப்பில் தரவுவைப் பகிர்ந்து கொள்ள முடியுமெனில் அதனை எதிலிருந்து எதற்குமான (any to any) இணைப்பு என்கிறோம்.

aperture card : துளை அட்டை : நுண் படச்சுருள் பொருத்துவதற்காகத் தயாரிக்கப்பட்ட திறப்புள்ள, துளை அட்டை.

API : ஏபிஐ : பயன்பாட்டு நிரல் இடைமுகம் என்று பொருள்படும் Applications Programming Interface என்பதன் சுருக்கம். APL : ஏபிஎல் : A Programming Language எனும் மொழிக்கான குறும்பெயர். கணிதமுறையில் அமைக்கப்பட்ட செயலாக்க மொழி. கனக்குகளுக்குத் தீர்வு காண்பதன் மூலம் புகழ்பெற்றது. ஏபிஎல் தன்னுடைய எளிய முறை இயக்கங்கள் மூலம் புத்தி சாலித்தனமான கணக்கிடு கருவி ஒன்றின் பணிகளைச் செய்கிறது.

APPC : ஏபீபீசி : 1. உயர் நிலை கட்டளைத் தொடரிலிருந்து இன்னொரு கட்டளைத் தொடருக்கான தகவல் தொடர்பு என்று Advanced Programme to Programme Communication என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும் பெயர். ஐபிஎம் (IBM) நிறுவனத்தின் முறைமைப் பிணையக் கட்டு (Systems Network Architecture) நெறி முறை உருவாக்கப்பட்டது. வேறுபட்ட கணினி முறைமை இயங்குகின்ற பயன்பாட்டுத் தொகுப்புகள். தமக்குள்ளே தொடர்பு கொள்ளவும் நேரடியாகத் தகவல் பரிமாற்றம் செய்து கொள்ளவும் முடியும் இந்நெறிமுறை உருவாக்கப்பட்டது.

app code : 'ஆப்'முறை : பயன்பாட்டுக் குறியீடு. தகவல்களை செயலாக்கம் செய்யும் ஒரு நிரலில் உள்ள ஆணைகள்.

appearance : தோற்றம்.

append : இணை;கூட்டு : தரவுத் தொகுப்பு ஒன்றுடன் மேலும் புதிய ஆவணங்களைச் சேர்த்தல் அல்லது எழுத்துத் தொடரின் இறுதியில் அல்லது பட்டியலின் இறுதியில் சேர்த்தல்.

appearance : தோற்றம்.

append mode : சேர் பாங்கு.

append record : சேர் ஏடு.

Apple : ஆப்பிள்நுண் கணினி வரிசையொன்றின் விற்பனைப் பெயர். இவற்றைத் தயாரிக்கும் நிறுவனம் ஆப்பிள் நிறுவனம் ஆகும்.

Apple II : ஆப்பிள் II : ஆப்பிள் நிறுவனம் ஏப்ரல் 1977இல் அறி முகப்படுத்திய இரண்டாவது சொந்தக் கணினி (Personal Computer). இதில் 4கே இயங்கு நிலை நினைவகம் இருந்தது. 48கே வரை விரிவாக்கிக் கொள்ளலாம். 6502 என்னும் நுண் செயலி பயன்படுத்தப்பட்டது. வண்ணக் கணினித் திரைக்குப் பதிலாக, தொலைக்காட்சிப் பெட்டியைப் பயன்படுத்திக் கொள்ளும் வசதி முதன்முதலாக ஆப்பிள் II கணினியில்தான் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் எட்டு விரிவாக்கச் செருகுவாய்கள் (expansion slots) இருந்தன.

Apple computers : ஆப்பிள் கணினிகள் : தனிநபர், கல்வி, வணிகம் மற்றும் மேசைக்கணினி வழி நூல் பதிப்பகப் பயன்பாடுகளில் அதிகம் பயன்படும் நுண் கணினிகள்.

AppieDraw : ஆப்பிள் டிரா : ஆப்பிள் மெக்கின்டோஷ் கணினி களில் செயல்படக் கூடிய படம் வரையப் பயன்படும் ஒரு பகிர்வு மென்பொருள் (shareware) தொகுப்பு.

Apple Events : ஆப்பிள் நிகழ்வுகள் : ஆப்பிள் மேக் ஓஎஸ் சிஸ்டம் 7 இயக்க முறைமையில் சேர்க்கப்பட்ட ஒரு பயன்பாடு. இதன் மூலம் ஒரு பயன்பாட்டுத் தொகுப்பிலிருந்து இன்னொரு பயன்பாட்டுத் தொகுப்புக்கு சேமி, திற, மூடு போன்ற கட்டளைகளை அனுப்ப முடியும்.

Apple Extended Keyboard : நீட்டிக்கப்பட்ட ஆப்பிள் விசைப் பலகை : பிற்காலத்தில் வெளியிடப்பட்ட ஆப்பிள் மெக்கின் டோஷ் கணினிகளில் (ஆப்பிள் எஸ்இ, மெக்கின்டோஷ் II, ஆப்பிள் II ஜிஎஸ்) பயன்படுத்தப்படும், 105 விசைகள் உள்ள விசைப் பலகை, ஐபிஎம் மற்றும் அதன் ஒத்தியல் கணினிகளில் பயன்படுத்தப்பட்ட விசைப் பலகையில் இருப்பது போன்று ஆப்பிள் விசைப் பலகையில் இல்லையே என்ற குறையை நிறைவுசெய்ய, இந்த விசைப்

நீட்டிக்கப்பட்ட ஆப்பிள் விசைப் பலகை
பலகையில் முதன்முதலாக செயல் விசைகள் (function keys) சேர்க்கப்பட்டன. புதிய விசைகளையும் சேர்த்து, வடிவமைப் பிலும் சில மாற்றங்கள் செய்து உருவாக்கப்பட்ட இந்த விசைப் பலகை ஐபிஎம்மின் மேம்படுத் தப்பட்ட விசைப் பலகையைப் பெரிதும் ஒத்திருந்தது.

Apple information technology division : ஆப்பிள் தகவல் தொழில் நுட்பப் பிரிவு : கணினி ஆலோசனை மற்றும் பயிற்சி நிறுவனம்.

Apple key : ஆப்பிள் விசை : கட்டளை விசையின் பழைய பெயர்

Apple menu : ஆப்பிள் பட்டியல் : மெக்கின்டோஷ் திரையின் இடதுபக்க மேல்பகுதியில் உள்ள பட்டியல்.

Apple Newton : ஆப்பிள் நியூட்டன் : ஆப்பிள் நிறுவனத்தின் கையகக் கணினி.

Apple printer : ஆப்பிள் அச்சுப்பொறி : கணினி வெளியீட்டின் அச்சுப் பிரதியைப் பெறபயன் படுத்தும் சாதனம். அச்சுப் பொறியானது அழுத்தமுறை அல்லது அழுத்தம் அல்லாத முறையினதாக இருக்கலாம். ஆப்பிள் லேசர் அச்சுப்பொறிகள் புகழ்பெற்றதாகவும் உயர்தர வெளியீட்டை அளிப்பதாகவும் இருக்கின்றன.

Apple scanner : ஆப்பிள் வருடுபொறி : 34 செ. மீ x 21 - 25 செ. மீ. அளவுள்ள உருவங்கள் ஒரு அங்குலத்துக்கு 300 புள்ளி கள் என்ற அளவில் வருடி மெக் கின்டோஷுக்கு மாற்றுகிறது.

AppleScript : ஆப்பிள் ஸ்கிரிப்ட் : சிஸ்டம் 7 இயக்க முறைமையில் செயல்படும் மெக்கின்டோஷ் கணினிகளில் கட்டகைளை நிறைவேற்றவும், தானியக்கச் செயல்பாடுகளுக்கும் பயன் படும் ஒரு வடிவாக்க மொழி.

Appleshare : ஆப்பிள் ஷேர் : ஆப்பிள் நிறுவனத்திலிருந்து உருவானகணினிக்கான மென்பொருள்.

Applesoft BASIC : ஆப்பிள் சாஃப்ட் பேசிக் : ஆப்பிள் ஐஐசி மற்றும் ஐஐஇ கணினிகளில் பயன்படுத்தப்படும் விரிவு படுத்தப்பட்ட அடிப்படை நிரல் தொகுப்புகளை உருவாக்கப் பயன்படுத்தப்படும் மொழி. பதின்ம எண்களைக் கையாளும் திறன் கொண்டது. ஆப்பிள் சாஃப்ட் பேசிக்கில் நிரல்களை உருவாக்கவும் நிறைவேற்றவும் கணினியிலேயே உள்கட்டமைப் பாக உருவாக்கப்பட்ட ஆணை மாற்றி (Interpreter).

applet : ஆப்ளெட்;குறுநிரல் : பயன்பாட்டு நிரல் போன்ற சிறிய பயன்கூறு. ஜாவா மொழியில் உருவாக்கப்படும் சிறுசிறு செயற்கூறுகள் இவ்வாறு அழைக்கப்படுகின்றன. இவை ஹெச்சீஎம்எல் மொழியில் உருவாக்கப்படும் வரைப்பக்கங்களின் உள்ளிலிருந்து செயல்படுகின்றன.

AppleTalk : ஆப்பிள்டாக் : ஆப்பிள் நிறுவனம் உருவாக்கிய செலவு குறைந்த குறும் பரப்புப்பிணையம் (Local Area Network). இதில் ஆப்பிள் மற்றும் ஆப்பிள் அல்லாத கணினிகள் தொடர்பு கொண்டு அச்சுப் பொறி மற்றும் கோப்புகள் போன்ற வளங்களைப் பகிர்ந்துகொள்ள முடியும். ஆப்பிள் அல்லாத கணினிகள் ஆப்பிள்டாக்கின் மென்பொருளையும் வன்பொருளையும் கொண்டிருக்க வேண்டும். ஐஎஸ்ஓ/ஒஎஸ்ஐ மாதிரியை ஒத்த நெறிமுறைகளையே இந்தப் பிணையம் பின்பற்றுகிறது. சட்டம் (frame) எனப்படும் பொட்டலங்களில் தகவல் பரிமாற்றம் செய்கிறது. ஒர் ஆப்பிள்டாக் பிணையம் இன்னொரு ஆப்பிள்டாக் பிணையத்துடன் இணைவி (bridge) மூலமாகவும், வேறுபட்ட பிணையங்களுடன் நுழைவி (gateway) மூலமாகவும் இணைப்பை ஏற்படுத்திக் கொள்ள முடியும்.

application : பயன்பாடு; பயன்பாட்டுத் தொகுப்பு : கணினியில் சொல்செயலி, கணக்குவழக்கு, கையிருப்பு மேலாண்மை போன்ற ஒரு குறிப்பிட்ட பணியை நிறைவேற்ற உதவும் வகையில் உருவாக்கப்படும் மென்பொருள் தொகுப்பு.

application backlog : பயன்பாட்டுத் தேக்கம்

application binary interface (ABI) : பயன்பாட்டு இரும இடைமுகம் : ஒரு இயக்க முறைமையில் இயங்கு நிலைக்கோப்பு (executable file), கணினியின் வன்பொருள் உறுப்புகளுடன் எவ்வாறு தொடர்பு கொள்கிறது, தகவல் எவ்வாறு பதியப்படுகிறது என்பதை வரையறுக்கும் நிரல் தொகுதி.

application-Centric : பயன்பாட்டுத் தொகுப்பை மையப் படுத்திய; பயன்பாட்டு முக்கியத்துவமுள்ள : ஒரு கணினி இயக்க முறைமையின் (operating system) பண்பியல்பைப் பற்றியது. ஒரு பயனாளர் ஒரு குறிப்பிட்ட வகை ஆவணத்தை (சொல் செயலிக் கோப்புகள், விரிதாள் கள்) திறக்க, உருவாக்க விரும்பினால் அதற்குரிய பயன்பாட்டுத் தொகுப்பை முதலில் இயக்க வேண்டும். கட்டளை வரி பணிச்சூழல் கொண்ட டாஸ், வரைகலைச சூழலை வழங்கும் விண்டோஸ் 3. x  ஆகியவை இந்தப் பிரிவைச்சாா்ந்தவை.

application close : பயன்பாட்டு நிறுத்தம்.

application control menu : பயன்பாட்டுக் கட்டுப்பாட்டுப் பட்டி.

application control : பயன்பாட்டுக் கட்டுப்பாடு : கணினி பயன்பாடு - உற்பத்திப் பயன்பாடுகளில் துல்லியமாக, சரியான நேரத்தில், தகவல்கள் செயலாக்கப்படுவதை உறுதி செய்ய, கணக்குத்துறை மற்றும் கணினித்துறை தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் பரிந்துரைக்கும் கட்டுப்பாடு.

application controller : பயன்கருவிக் கட்டுப்படுத்தி : கணினி ஒரு துணைக் கருவியைக் கட்டுப்படுத்த உதவும் சாதனத்திற்குப் பொதுவான பெயர்.

application developer : பயன்பாடு உருவாக்குபவர் : வணிகப் பயன்பாட்டை உருவாக்கி, முறைமை ஆய்வாளர் மற்றும் பயன்பாட்டு நிரலர் பணிகளைச் செய்யும் ஒரு நபர்.

application development environment : பயன்பாட்டு மென்பொருள் உருவாக்கச் சூழல் : மென்பொருள் உருவாக்குவோர் பயன்படுத்தக்கூடிய, செயல்முறைத் தொகுப்புகள் ஒருங்கிணைக்கப்பட்ட கூட்டுத் தொகுப்பு. ஒரு மொழி மாற்றி (compiler), உலாவி (browser), பிழைசுட்டி (debugger), ஆனைத் தொடர்களை எழுதப் பயன்படும் ஒர் உரைத் தொகுப்பான் (text editor) ஆகியவை சேர்ந்தே இத்தகைய பணிச்சூழலை வழங்குகின்றன.

application development language : பயன்பாட்டு மென்பொருள் உருவாக்க மொழி : பயன்பாட்டுத் தொகுப்புகளை உருவாக்குவதற்கென்று வடிவமைக்கப்பட்ட மொழி. தரவுத் தளத்திலுள்ள தரவுகளைப் பெறுதல், புதுப்பித்தல் மற்றும் அதையொத்த பணிகள், தரவுவை உள்ளீடு செய்வதற்குரிய படிவங்களை உருவாக்குதல் மற்றும் அறிக்கை தயாரித்தல் ஆகிய பணிகளுக்கான உயர்நிலைக் கட்டளை அமைப்பு குறிப்பிட்ட கணினி மொழிகளை மட்டுமே இது குறிக்கிறது.

application development system : பயன்பாட்டு உருவாக்க முறைமை : உருவாக்குதல், மேம்படுத்தல் மற்றும் பயன்பாட்டு ஆணை நிரல்களை இயக்க அனுமதிக்கும் நிரலாக்க மொழி மற்றும் அதன் தொடர்பான பயன்பாடுகள். வினவல் மொழிகள், அறிக்கை தயாரிப்புக் கருவிகள் உள்ளிட்ட டிபிஎம்எஸ்-ஐ இதில் சேர்த்துக் கொள்ளலாம்.

application gateway : பயன்பாட்டு நுழைவாயில் : வெளி உலகுடன் தகவல் போக்குவரத்தில் ஈடுபடக் கூடிய ஒரு நிறுவனத்தின் பிணையக் கணினியிலுள்ள தரவுகளுக்கான பாதுகாப்பினை வழங்கக்கூடிய மென்பொருள் தொகுப்பு.

application generator : பயன்பாட்டு உருவாக்கி : பிரச்சினையின் விவரங்களிலிருந்து பயன்பாட்டுத் தொகுப்பை உருவாக்கும் மென்பொருள். உயர்நிலை கணினி மொழியைவிட ஒன்று அல்லது மேற்பட்ட உயர்நிலையில் உள்ளது. இருப்பினும், நிரலர், சிக்கலான பணிகளை விவரிக்கக் கணித, மொழியமைப்பு விளக்கங்களை அமைத்துத் தர வேண்டும்.

application heap : பயன்பாட்டு நினைவகக் குவியல் : ஒரு பயன்பாட்டுத் தொகுப்பு தனது நிரல் தொடர்களை, விவரக் குறிப்புகளை மற்றும் தேவையான தரவுகளைப் பதிவுசெய்துவைத்துக் கொள்ள ரேம் (RAM) நினைவகத்தில் ஒதுக்கப்படும் பகுதி.

application icon : பயன்பாட்டு சின்னம்; பயன்பாட்டுக் குறு. படம்.

application layer : பயன்பாட்டு அடுக்கு : கணினிப் பிணையங்களில் இரு கணினிகளுக்கிடையே நடைபெறும் தரவுப் பரிமாற்றத்தின் தொழில்நுட்ப நெறிமுறைகளை பன்னாட்டுத் தரநிர்ணய அமைப்பு (lnternational Standards Organisation-ISO) வகுத்துத்துள்ளது. சமிக்கைப் பரிமாற்றங்களுக்குரிய ஒஎஸ்ஐ மாதிரி (OSI Model-Open System Inter connection Model) என்பது முக்கியமான ஒன்று. ஏழு அடுக்குகளைக் கொண்டது. அவற்றுள் பயன்பாட்டு அடுக்கும் ஒன்றாகும். இந்த அடுக்கில்தான் ஒரு தொலைதூரக் கணினியுடன் இணைப்பை ஏற்படுத்திக் கொள்ளவும், கோப்புப் பரிமாற்றம் செய்வதற்குமான சமிக்கைகள் அடங்கியுள்ளன. பயனாளருக்கு மிகவும் பயனுள்ள பணியைச் செய்வது இந்த அடுக்குத்தான். ஏழு அடுக்குகளில் ஏனைய கீழடுக்குகள், அனுப்பும்/பெறும் கணினிகளுக்கிடையே தரவு பரிமாற்றத்தைக் கட்டுப்படுத்துகின்றன.

application level : பயன்பாட்டு நிலை.

application mathematics : பயன்பாட்டுக் கணிதம்.  application minimise button : பயன்பாட்டைச் சிறிதாக்கு பொத்தான்.

application notes : பயன் பாட்டுக் குறிப்புகள் : வழக்கமான உதவிக் குறிப்பு கையேடுகளுடன் விளக்கங்கள் மற்றும் பரிந்துரைகளைச் சேர்த்து விற்பனையாளர் கொடுப்பது.

application-oriented language : பயன்பாடுசார் மொழி; பயன் நோக்கு மொழி : ஒரு குறிப்பிட்ட பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான நிரல் தொகுப்பு மொழி. இதன் கட்டளைகள் கணினியைப் பயன்படுத்துவோர் கையாளும் சொற்களைக் கொண்டிருக்கும் அல்லது அவற்றை ஒத்திருக்கும்.

'application package : பயன்பாட்டுத் தொகுப்பு : ஒரு குறிப்பிட்ட பயன்பாட்டுக்காக வடிவமைக்கப்பட்ட கணினி நிரல்கள் அல்லது நிரல்களின் தொகுப்பு. தொழில் துறைக்காக அல்லது குறிப்பிட்ட நோக்கத்துக்காக உருவாக்கப்பட்ட மென்பொருள் தொகுப்பு. சிறப்பு அல்லது பொது நோக்கப்பணிகளுக்காக எழுதப்பட்ட கணினி நிரல்கள். சிலவற்றில் ஒரே ஒரு பணி மட்டுமே இருக்கும். மற்றவற்றில் பல பணிகள் இருக்கலாம்.

application portability profile (APP) : பயன்பாட்டு கையாண்மை விவரக் குறிப்பு.

application portfolio : பயன்பாட்டு மதிப்பீடு : ஒரு திட்டமிடும் கருவி. இப்போதுள்ள மற்றும் திட்டமிட்டு வரும் தகவல் அமைப்புகளின் பயன்பாடுகளை அவை உண்டாக்கும் வருமானம், அவற்றை ஏற்படுத்தும் செலவு ஆகியவை பெரிய வணிகப் பணிகளுக்கு உதவுமா என்று மதிப்பிடுதல்.

application processor : பயன்பாட்டுச் செயலி : கட்டுப்பாட்டுப் பணிகள் அல்லாமல் தரவுகளை செயலாக்கம் செய்யும் கணினி.

application programme : பயன்பாட்டு : சொல் செயலாக்கம் விலைப்பட்டியலிடல், இருப்பு கட்டுப்பாடு போன்ற பணிகளைச் செய்ய எழுதப்படும் மென்பொருள்.

application programmer : பயன்பாட்டு நிரலர் : முறைமை வகுப்போரைப் போன்றல்லாது குறிப்பிட்ட செயல்பாட்டுக்கான நிரல்களின் தொகுப்பை உருவாக்குகிறவர்.

application programming : பயன்பாட்டு நிரலாக்கம் : குறிப்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப் பயன்படுத்துவதற்கு உரிய நிரல்களின் தொகுப்பைத் தயாரித்தல். இது முறைமைத் தொகுப்பைத் தயாரித்தலுக்கு மாறானது.

application programming interface : பயன்பாட்டு நிரலாக்க இடைமுகம்.

application programms : பயன்பாட்டு நிரல்கள்.

applications, computer : கணினிப் பயன்பாடுகள்.

application shortcut key : பயன்பாட்டு சுருக்குவழி விசை : பயன்பாட்டுத் தொகுப்புகளில் பல்வேறு பணிகளையும் பட்டி விருப்பத் தேர்வுகளின் (menu options) மூலமே நிறைவேற்றிக் கொள்கிறோம். வழக்கமாகத் தொடர்ச்சியான பல்வேறு பட்டித்தேர்வுகளின் மூலம் நிறைவேற்ற வேண்டிய ஒரு பணியை ஒன்றிரண்டு விசைகளை ஒருசேர இயக்குவதன் மூலம் நிறைவேற்றிக் கொள்ள முடியும். அத்தகைய விசை அல்லது விசைகள் சுருக்குவழி விசை என்று அழைக்கப்படுகிறது. இம்முறையை விசைப் பலகைச் சுருக்குவழி (keyboard shortcut) என்றும் கூறுவர்.

application software : பயன்பாட்டு மென்பொருள் : பயன்படு நிரல்கள் தொகுப்பு என்பதைக் காண்க.

app!ication specific programms : பயன்பாடு சார்ந்த நிரல்கள் : வணிக அறிவியல், பொறியியல் மற்றும் பிற துறைகளில் உள்ள இறுதிப் பயனாளரின் குறிப்பிட்ட பணிகளுக்கு உதவும் பயன்பாட்டு மென்பொருள் தொகுப்பு.

application restone button : பயன்பாட்டு மீட்புப் பொத்தான்.

application specific integrated circuit (ASIC) : பயன்பாடு சார்ந்த ஒருங்கிணைந்த மின்சுற்று.

application window : பயன்பாட்டுச் சாளரம், பயன்பாட்டுப் பலகணி.

application wizard : பயன்பாட்டு வழிகாட்டி

applied mathematics : பயன்பாட்டுக் கணிதம் : எந்திரவியல், இயற்பியல், அல்லது கணினி அறிவியலில் நடைமுறைப் பயன்பாட்டுக்குப் பயன்படுத்தப்படும் கணிதம்.

apply : செயலாக்கு.

apply filter : வடிகட்டி பயன்படுத்து.

applying : பயன்படுத்துதல்.

appointment order : பணி ஆணை. apprentice : பயிற்சியாளர்.

approximation : பகுதிக்கு ஏற்ற விதிகளின் தொகுதி.

arcade game : விதானத் தொகுதி விளையாட்டு : கணினி விளையாட்டுகள் நாணயத்தால் இயக்கப்படும் கருவிகளால் பிரபலமாக்கப்பட்டவை. இக்கருவிகள் உயர்திறன் கொண்ட வண்ண வரைவுருக்கள். உயர் வேகச் சித்திர இயக்கம், ஒலி வழங்குதல் ஆகிய திறன்களைக் கொண்டவை. பெரும்பாலும் விளையாட்டுக் குச்சிகளினால் திரையிலுள்ள வடிவம் கட்டுப் படுத்தப்படுகிறது. விளையாட்டுகளின் விதிப்படி கணினி மதிப்புப் புள்ளிகளை அளிக்கிறது.

Archie , ஆர்க்கி : பெயர் கொடா கோப்புப் பரிமாற்ற நெறிமுறையின் மூலம் இலவச ஆவணக்காப்பகங்களில் சேமித்து வைக்கப்பட்டுள்ள கோப்புகளைத் தேடிக் கண்டறியும் இணையப் பயன்பாடு. மான்ட்ரீல் நகரின் மெக்கில் (McGill) பல்கலைக்கழகத்திலுள்ள தலைமை ஆர்க்கி வழங்கன் கணினி, தன்னுடன் இணைக்கப்பட்ட கோப்புப் பரிமாற்ற நெறி முறை அடிப்படையிலான அனைத்து வழங்கன் கணினிகளிலிருந்தும் கோப்புப் பட்டியல்களைப் பதிவிறக்கம் செய்து, அவற்றை ஒன்றிணைத்து ஒரே பட்டியலாக்கி, அப்பட்டியலை அனைத்து ஆர்க்கி வழங்கன் கணினிகளுக்கும் நாள்தோறும் அனுப்பி வைக்கிறது. ஆவணக் காப்பகம் என்று பொருள்படும் ஆர்க்கிவ் என்ற சொல்லின் சுருக்கமே ஆர்க்கி ஆகும்.

archie server : ஆர்க்கி வழங்கன் கணினி, ஆர்க்கி சேமிப்பகம் : ஆர்க்கி சேவையகம் இலவசக் கோப்புப் பரிமாற்ற நெறிமுறைக் காப்பகங்களிலுள்ள கோப்புகளின் பெயர்களையும் முகவரிகளையும் கொண்ட பட்டியலை வைத்திருக்கும், இணையத்தில் இணைக்கப்பட்டுள்ள வழங்கன் கணினியின் பெயர்.

architectural protection : கட்டமைப்புப் பாதுகாப்பு : கட்டு மான காப்பு.

architecture : கட்டுமானம் : வடிவமைப்பு : கணினியின் உள் இயக்க நடவடிக்கைகளின் வடிவமைப்பு. நினைவக நிரல் பகுதி மற்றும் உள்ளீட்டு, வெளியிட்டு அமைப்புகள் கொண்டது.

archival : ஆவணக் காப்பகம் : தரவு ஒன்றை நீண்ட காலம் சேமிப்பது தொடர்பானது.

archival back up : ஆவண ஆதார நகல். archival store : காப்பகச் சேமிப்பு : ஆவண இருப்பகம் : அடிக்கடி பயன்படுத்தாமல் பின் தேவைக்கு ஆதாரமாக வைக்கப் பட்டிருக்கும் கோப்புகள்.

archive : ஆவணக் காப்பகம் : கோப்புச் சேமிப்பகம் : 1. வேறொரு சேமிப்பகத்திலுள்ள கோப்புகளை நகலெடுத்துப் பாதுக்காப்பாக வைத்துக் கொள்கிற நாடா அல்லது வட்டுச் சேமிப்பகங்களைக் குறிக்கிறது. 2. இறுக்கிச் சுருக்கப்பட்ட கோப்பு. 3. இணையத்தில் கோப்புப் பரிமாற்ற நெறிமுறை (FTP) மூலமாக அணுக முடிகிற ஒரு கோப்பகம் (Directory) அல்லது அணுகுவோருக்கு வழங்குவதற்கென்றே இணையத்தில் கோப்புகளைச் சேமித்து வைத்துள்ள ஒரு கோப்பகம்.

archive attribute : காப்புக்கூறு : கோப்புகளை வகைப்படுத்தும் இயல்புநிலை. சில படிகள் மற்றும் பின்னாதரவு நிரல்களில் இந்த நிலையைச் சோதிக்க முடியும்.

archive bit : ஆவணக் காப்பகக் குறி : ஒரு கோப்பு ஆவணக் காப்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ளதா என்பதை அறிந்து கொள்ள உதவும் ஒரு குறியீடு.

archieve file : காப்பகக் கோப்பு : பல்வேறு கோப்புகளை உள்ளடக்கிய ஒரு கோப்பு. ஒரு மென்பொருள் தொகுப்பு, அதன் விளக்கக் குறிப்புகளையும் எடுத்துக்காட்டு உள்ளீட்டுக் கோப்புகளையும் உள்ளடக்கிய ஒரே கோப்பாக இருக்க முடியும், இணையத்தில் செய்திக்குழுவில் (news group) தொகுக்கப்பட்ட செய்திகளையும் இச்சொல் தொடர் குறிக்கிறது. யூனிக்ஸ் முறைமையில் tar கட்டளை மூலம் காப்பகக் கோப்புகளைக் கையாள முடியும் அவற்றை இறுக்கிச் சுருக்கவும் முடியும். டாஸ் மற்றும் விண்டோஸ் இயக்கத்தளத்தில் pkzip, மேக் ஓ. எஸ் இல் stuffit ஆகியவை ஏற்கெனவே இறுக்கிச் சுருக்கப்பட்ட கோப்புகளைக் கொண்ட காப்பகக் கோப்புகளை உருவாக்கப் பயன்படுகின்றன.

archive gateway : காப்பக நுழைவாயில்.

archive site : ஆவணக் காப்பகத் தளம் : கோப்புகளைச் சேமித்து வைத்துள்ள ஓர் இணைய தளம். இங்குள்ள கோப்புகளை பொதுவாக கீழ்க் காணும் ஏதேனும் ஒரு முறையில் அணுக முடியும். (1) பெயரின்றி அணுகும் கோப்புப் பரிமாற்ற நெறிமுறை மூலம் பதிவிறக்கம் செய்யலாம். (2). கோஃபர் (gopher) மூலம் அணுகலாம். (3) வைய விரிவலை (www) யில் பார்வையிடலாம்.

archiving : ஆவணப்படுத்தல்.

arcnet : ஆர்க்நெட் : ஒரு கணினிப் பிணையக் கட்டமைப்பு.

area : பரப்பு.

area chart : பரப்புநிரல் படம் : வரைபட வகைகளுள் ஒன்று. கடந்த நான்கு காலாண்டுகளில் நடைபெற்ற விற்பனையின் அளவைக் குறிக்க இது போன்ற வரைபடத்தைப் பயன்படுத்தலாம். இருவேறு விவரக் குறிப்புகளைக் குறிக்கும் இரண்டு கோடுகளுக்கு இடையே நிறம் அல்லது புள்ளிகளால் நிறைத்துக் காட்டப்படும் பரப்பளவு.

area, common storage : பொதுச் சேமிப்பகப் பரப்பு.

area, constant : மாறாப் பரப்பு.

area density : பரப்பு அடர்த்தி.

area graph : பரப்பு வரைபடம்.

area, seek : தேடு பரப்பு.

area, search : பகுதி தேடல் : பெரும் எண்ணிக்கையிலான ஆவணத் தொகுதிகளில் குறிப்பிட்ட ஒன்றைத் தேர்ந்தெடுப்பதற்காகப் பரிசீலித்தல்.

area, work : பணிப் பரப்பு.

argument : மதிப்புரு ;தரு மதிப்பு : ஒரு செயல்கூறு அல்லது செயல்முறைக்கு அழைக்கும் நிரலிலிருந்து அனுப்பி வைக்கப்படும் மதிப்புகள்.

argument list : மதிப்புருப் பட்டியல்.

argument seperator : மதிப்புரு பிரிப்பி,

arithmetic : எண் கணிதம் : 1. கணிதவியலின் ஒரு பகுதி உடனிலை முழு எண்கள் மற்றும் பூஜ்யம் ஆகியவற்றின் ஆய்வு தொடர்பானது. 2. கூட்டல், கழித்தல், பெருக்கல் மற்றும் வகுத்தல் சம்பந்தப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பானது. அல்லது இப்பணிகளைச் செய்யும் கணினி கருவியின் ஒரு பகுதி தொடர்பானது.

arithmetic address : எண் கணித முகவரி : எண்கணித முகவெண்.

arithmetic and logical operators : கணித மற்றும் தருக்கக் செயற்குறிகள்.

arithmetic check : எண்கணிதச் சோதனை.

arithmetic coding : கணித முறையாக்கம் : புள்ளிவிவர முறை தரவுகளை சுருக்கும் முறை தரவுச் சரங்களை 0 முதல் 9 வரை உள்ள தனி பதின்ம எண்ணாக மாற்றுவது.

arithmetic exception : எண் கணித விதிவிலக்கு

arithmetic expression : கணக்கீட்டுத் தொடர்; எண் கணிதக் கோவை : ஒன்று அல்லது கூடுதலான எண்கள், மாறிகள், செயல்கள், குறியீடுகள் அல்லது இவை இணைந்த கோவை. கணக்கீட்டின் விளைவாக ஒரு தனி மதிப்பைக் குறிப்பிடுவது.

arithmetic, fixed point : நிலைப் புள்ளிக் கணக்கீடு

arithmetic, floating decimal : மிதவைப் புள்ளிக் கணக்கீடு

arithmetic instruction : கணித ஆனண : கணித இயக்கத்தைச் செய்யுமாறு கணினிக்குச் சொல்கிறது.

arithmetic-logic unit : கணிதத் தருக்ககம் : மையச் செயலாக்கத் தின் ஒர் அங்கம். அங்கு கணித மற்றும் தருக்கவியல் நடவடிக் கைகள் நிறைவேற்றப்படுகின்றன.

arithmetic operation : கணித வியல் செயல்பாடு : எண் கணித வினை : எண்ணியல் அளவுகளின் பல்வேறு நடவடிக்கைகள். இவற்றில் அடிப்படை நடவடிக்கைகளான கூட்டல் அல்லது கழித்தல், பெருக்கல், வகுத்தல், தொகுத்தல் கூறுபடுத்துதல் மற்றும் வேர்களை பிரித்தெடுத்தல் ஆகியவையும் அடங்கும்.

arithmetic operation, binary : இருமக் கணிதச் செயல்பாடு

arithmetic operator : கணிதச் செயற்குறி : ஒரு கணக்கீட்டைச் செய்ய கணினிக்கு கூறும் குறியீடு. கூட்டல், கழித்தல், பெருக் வகுத்தல், தொகுத்தல் போன்ற செயல்களைக் குறிப்பிடும் செயற்குறிகள்.

arithmetic overflow : கணித மிகைவழிவு : வரையறுக்கப் பட்ட வரம்புக்கு அதிகமாகப் பெறப்படும் மதிப்பு. ஒரு நான்கு இலக்க எண் வகை மாறியில் ஐந்து இலக்க மதிப்பை இருத்த முனைதல்.

arithmetic register : கணிதப் பதிவகம் : கணித மற்றும் அளவை இயக்கங்களைச் செய்வதற்கென்றே ஒதுக்கப்பட்ட பதிவகம்.

arithmetic shift : கணிதவியல் பெயர்ச்சி : ஒர் எண்ணிக்கையினை அடிப்படை எண் ஒன்றினால் பெருக்கல் அல்லது வகுத்தல். எடுத்துக்காட்டு 13ஐ 10ஆல் இருமுறை பெருக்கியதால் கிடைப்பது 1, 300 ஆகும். இதில் 13 என்ற எண் இரு இடங்களில் இடப்புறப் பெயர்ச்சி அடைகிறது.

arithmetic statement : கணக்கீட்டுக் கூற்று.

arithmetic underflow : குறைப் பொழிவு : சரியாகக் கூறமுடியாத அளவுக்குச் சிறிய எண்ணாக வரும் கணக்கீடு.

arithmetic unit : கணக்கம் : கணக்கிடும் பகுதி.

arm access : அணு குகை

. army. mil : ஆர்மி. மில் : அமெரிக்க நாட்டு இராணுவத்தைச் சுட்டும் இணைய தள முகவரி. இணைய தளங்களை அவற்றின் உள்ளடக்கங்களுக்கேற்ப com. gov. edu. org. mil. net. int. ஆகிய பெரும் பிரிவு களில் அடக்குகின்றனர். அமெரிக்க இராணுவத் தள முகவரி . mil என்ற பெரும் பிரிவில் அடங்குகிறது.

ARP : ஏ. ஆர். பீ : முகவரி கண்டறி நெறிமுறை என்று பொருள்படும் Address Resolution Protocol என்பதன் தலைப்பெழுத்துச் சுருக்கம். கணினிப் பிணையங்களுக்கிடையே தகவல் தொடர்புக்கான டி. சிபி/ஐபி (TCP/ IP) நெறிமுறையின் ஒரு வடிவம். ஒரு குறும் பரப்பு பிணையம்இணையத்தில் தொடர்புகொள்ளும்போது ஐபி முகவரி (தருக்க முகவரி) யை மட்டுமே அறிய முடியும். அப்பினையத்திலுள்ள ஒரு கணினியின் மெய்யான வன்பொருள் (ஈதர் நெட்) முகவரியை அறிந்துகொள்ள ஏஆர்பி நெறிமுறை பயன்படுகிறது. இணையத்தின் வழியாக ஒர் ஏ. ஆர். பீ கோரிக்கை அனுப்பி வைக்கப்படும்போது, குறிப்பிட்ட ஐபி முகவரி கொண்ட கணுக் கணினி தன்னுடைய வன் பொருள் முகவரியோடு பதில் அனுப்பும். வன்பொருள் முகவரி கண்டறிதலைப் பொதுவாகக் குறித்தபோதும் எதிர்மறைப்பணியான ஆர்ஏஆர்பீ (Reversed ARP) சேர்த்தே குறிக்கிறது.

ARPANET : 'அர்ப்பானெட்' மேம்பட்ட ஆய்வுத்திட்ட முகமைப் பிணையம்' எனப் பொருள்படும் Advanced Research Projects Agency Network என்பதன் குறும் பெயர். இது பாதுகாப்புத் துறை இடங்கள், ஆய்வு மையங்கள் மற்றும் கணினி அறிவுக்கூடங் களை இணைக்கிறது. இதன் நோக்கம் கணினி விவரங்களைப் பகிர்ந்து கொள்ளுதல், மிகவும் நம்பிக்கையான, சிக்கனமான கணினித் தகவல் தொடர்பை உருவாக்குதல். ARP request : ஏஆர்பி கோரிக்கை : முகவரி கண்டறி நெறிமுறைக் கோரிக்கை என்று பொருள்படும் Address resolution protocol என்பதன் சுருக்கம். ஒர் ஏ. ஆர். பி பொதிவு (அல்லது பொட்டலம்), புரவன் கணினியின் (host computer) இணைய முகவரியைக் கொண்டிருக்கும். கோரிக் கையைப் பெறும் கணினி தனக் குரிய ஈதர்நெட் முகவரியுடன் பதிலை அனுப்பும்.

ARQ : ஏஆர்கியூ : தானியங்கு முறையில் மீண்டும் அளிப்பதற்கான வேண்டுகோள். Automatic Repeat request என்பதன் குறும்பெயர். தரவு வழங்கப்படுவதை கண்காணிக்கும் பாணி

arrange : ஒழுங்கமை.

arrangement : ஏற்பாடு : வரிசை ஒழுங்கு பொருள் பட்டியல் சொற்களின் வரிசையொழுங்கு அல்லது ஒரு அமைவில் உள்ள தரவு வகைகள்.

Array : கோவை : வரிசை : தொடர்புடைய பொருள் வகைகளின் வரிசை.

array and sringes : கோவை மற்றும் சரம்.

array bound : கோவை வரம்பு

array dimension : கோவை பரிமாணம்.

array element : கோவை உறுப்பு : வரிசைப் பொருள் வரிசையில் உள்ள ஒரு கூறு.

array index number : கோவை இடஞ்சுட்டு எண் : வரிசை அடையாள எண் : ஒரு வரிசை உள்ள குறிப்பிட்ட பொருளை அடையாளம் காட்டும் இருப்பிட வரிசை எண்.

array iterator : கோவை வரிசை இயக்கி : ஒரு வரிசையில் உள்ள ஒவ்வொரு பொருளிலும் புகுந்து இயக்கத்தைச் செய்யும் ஒரு பணி.

array processor : கோவைச் செயலி ; வரிசைச் செயலி : அணி கணக்குகளை சாதாரணக் கணினிகளைவிட விரைவாகச் செய்யக் கூடியது.

array reference : கோவைக் குறிப்பி ; வரிசைக் குறிப்பு : எந்த வரிசையிலும் அணுகக் கூடிய சிறப்புத் தரவு மதிப்பு.

arrival rate : வருகை வீதம் : குறிப்பிட்ட அளவு நேரத்தில் தரவு தொடர்புச் சாதனத்தில் எவ்வளவு தரவுகள் அல்லது எழுத்துகள் வருகின்றன எனும் வீதம்.

arrow key : அம்புக்குறி விசை : கணினித் திரையில் தோன்றும் அல்லது தேர்வுப்பட்டியல் கட்டுக் குறியை விருப்பத் தேர்வுக்களில் குறியை மேல் கீழாக, பக்கவாட்டில் நகர்த்து வதற்குப் மேல், கீழ், வலம், இடம் நோக்கிய பயன்படக்கூடிய, மேல், கீழ், வலம், இடம் அம்புக்குறி இடப்பட்ட விசைகள்.

article : கட்டுரை செய்திக் குறிப்பு : இணையத்தில் செய்திக்குழுவில் (news- group) வெளியிடப்பட்டுள்ள ஒரு செய்திக் குறிப்பு. கடிதம் என்றும் கூறப் படுவதுண்டு.

article Selector : கட்டுரை தேர்வி.

artificial inteligence (A )  : செயற்கை நுண்ணறிவு : ஒரு எந்திரம் எவ்வளவு அறிவுத் திறனுடன் இருக்க முடியும் என்பதை விளக்கும் கணினி அறிவியலின் ஒரு பிரிவு பகுத் தறிதல், கற்றல் போன்ற மனித அறிவுத்திறனோடுபுடைய செயல்களைச் செய்யும்தொடர் கருவி ஒன்றின் திறனோடு தொடர்புடையது.

artificial language : செயற்கை மொழி : வரையறை செய்யப்பட்ட விதிகளை அடிப்படையாகக் கொண்ட மொழி இவ்விதிகள் அதன் பயன்பாட்டுக்கு முன் உருவாக்கப்பட்டதாகும். இது இயற்கையான மொழிக்கு வேறுபட்டதாகும்.

artificial life : செயற்கை உயிர் : வாழும் உயிரினங்களின் நடத்தையில் சில கூறுகளை போலச் செய்யும் கணினி அமைப்புகள் பற்றிய ஆய்வு. ஒரு குறிப்பிட்ட பணியை நிறைவேற்ற எழுதப்பட்ட நிரல், அதன் செயல்த்திறனை அடிப்படையாகக் பட்டச்செயல் கொண்டு, தகவமைத்தல், தப்பிப்பிழைத்தல் இனம்பெருக்குதல் போன்ற மனிதப் பண்புகளின் மொத்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு செய்ய முடியும். இந்த நிரல்கள் ஒரு சிக்கலுக்கு மிகச்சரியான தீர்வு கிடைக்கும்வரை தம்மைத் தாமே தொடர்ந்து மாற்றிக் கொள்கின்றன. இத்தகைய நிரல்களை இயக்கும் கணினி முறைமைகளை செயற்கை உயிர் என்கின்றனர்.

artificial network : செயற்கைப் பிணையம்.

artificial neural network : செயற்கை நரம்புசார் பிணையம் : மனிதனின் மூளையும் நரம்பு மண்டலமும் ஒரு பிணையம் (network) செயல்படுகின்றன. மனித உடலில் செயல்படும் இந்தப் பிணையத் தின் தொழில்நுட்ப அடிப்படையில் ஒரு கணினிப் பிணையத்தை உருவாக்க ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. மனித நரம்பு மண்டலப் பிணையக் கருத்தமைவின் அடிப்படையில் கணினியில் ஒரு குறிப்பிட்ட பணிக்கான மென்பொருளைச் செயல்படுத்தக்கூடிய செயற்கை நுண்ணறிவு அமைப்பினை நரம்பு சார்பிணையம் என்று அழைக்கலாம்.

Artline : ஆர்ட் லைன் : ஒரு வரைகலை மென்பொருள் : ஐபிஎம் சார்பு நுண்கணினிகளில் பயன்படுத்துவதற்கு ஏற்ற விளக்கமுறை வரைகலை மென்பொருள். அளவெடுக்கக்கூடிய எழுத்துகள், முப்பரிமாணச் சாயல்கள், ஒரு உருவத்தை வேறொன்றாக மாற்றும் பணி போன்ற பல அம்சங்கள் இதில் உள்ளன.

artwork : வரைகலை வேலை : வரி ஓவியங்கள் போன்ற வரைகலை வேலைகளைச் செய்தல்.

ARTSPEAK : பேச்சுக்கலை : அனுபவமற்ற பயனாளர் கணினி வரைவுகளை வரை கருவியில் உருவாக்க உதவுவது.

ASA : ஏஎஸ்ஏ : அமெரிக்க புள்ளியியல் சங்கம் எனப் பொருள்படும் American Statistical Association என்பதன் குறும்பெயர்.

ASCC : ஏஎஸ்சிசி : தானியங்கு தொடர் செயல் கூட்டுறு கணிப்பான் எனப் பொருள்படும் Automatic Sequence Controlled Calculator என்பதன் குறும்பெயர். இது ஹார்வர்டு பல்கலைகழகத்தில் ஹோவர்டு அய்க்கன் ஆணைப்படி உருவாக்கப்பட்டது. 1941இல் நிறைவு செய்யப்பட்டது. காகித நாடா ஒன்றில் சேமிக்கப்பட்ட ஆணைகளைப் பயன்படுத்துவது. 'ஹார்வர்டு மார்க்' என்றும் அழைக்கப்பட்டது.

ascender : ஏற்றி : கீழ்வரிசை எழுத்துகளின் ஒரு பகுதி எழுத்தின் முக்கிய பகுதிக்கு மேலே நீளுதல்.

ascending : ஏறுமுகமாய் வரிசைப்படுத்தல் : பட்டியல் உறுப்புகளை ஏறுமுக வரிசையில் வரிசைப்படுத்தும் முறை.

ascending order : ஏறுமுக வரிசை : ஏறுவரிசை என்பது ஒரு பட்டியலிலுள்ள உறுப்புகளை சிறியதில் தொடங்கி பெரியதில் முடியுமாறு வரிசைப்படுத்துவது. எடுத்துக்காட்டாக 1 முதல் 10 வரை, அ முதல் ஒள வரை அடுக்குவது. ஒரு குறிப்பிட்ட பயன்பாட்டுத் தொகுப்பில் இத்தகைய அகர வரிசையை முடிவு செய்வது மிகவும் சிக்கலானது. எடுத்துக்காட்டாக, எண்களை எழுத்துகளுக்கு முன்னால் வைப்பதா பின்னால் வைப்பதா, இடவெளிகளை (spaces) எங்கு சேர்ப்பது?. ஆங்கிலத்தைப் பொறுத்தவரை பெரிய எழுத்து, சிறிய எழுத்துச் சிக்கல் உண்டு. ஆஸ்க்கி அட்டவணையின் எண் மதிப்பு அடிப்படையில், ஆங்கிலச் சிறிய எழுத்து, பெரிய எழுத்தை விட அதிக மதிப்புக் கொண்டது.

ASCII : அஸ்கி : தகவல் பரிமாற்றத்துக்கான அமெரிக்கத் தரக் குறிமுறை எனப் பொருள்படும் American Standard Code for Information Interchange என்பதன் குறும்பெயர். ஏழு துண்மியுள்ள இந்தக் குறியீடு பல்வேறு வகையான சாதனங்களுக்கிடையே தரவுப் பரிமாற்றத்துக்கு உதவுகிறது.

ASCII character set : ஆஸ்கி எழுத்துத் தொகுதி : இரும இலக்கங்களில் ஏழு துண்மி (பிட்) குறிப்பிடப்படுகின்ற ஆஸ்கிக் குறியீடுகள், 0 முதல் 127 வரை அவற்றின் ஆஸ்க்கி மதிப்பு இருக்கும். பெரும்பாலான கணினிகளில் எட்டு துண்மி (பிட்) களால் ஆன விரிவாக்கப்பட்ட ஆஸ்கி குறியீடு பயன்படுத்தப்படுகிறது. அதில் கூடுதலாக 128 எழுத்துகளும் குறியீடுகளும் அடங்கியுள்ளன. பிறமொழி எழுத்துகள், வரைகலைக் குறியீடுகளைக் கொண்டுள்ளன.

ASCII file : ஆஸ்கிக் கோப்பு : ஆஸ்கி எழுத்து வடிவங்களில் உருவாக்கப்பட்ட ஆவணம், எழுத்துகள், எண்கள், நிறுத்தற் குறிகள், இடவெளிகள், புதுவரிக் குறியீடுகள் இவற்றைக் கொண் டிருக்கும். சில வேளைகளில் தத்தல் (Tab) இட வெளிகள் மற்றும் கோப்பிறுதிக் குறியையும் கொண்டிருக்கும். ஆனால் வடிவமைப்பு (formatting) விவரங்கள் எதையும் கொண்டிருக்காது. இத்தகைய கோப்பு, உரைக் கோப்பு (text file) எனவும், உரை மட்டுமுள்ள கோப்பு (text only file) எனவும் அழைக்கப்படுகிறது.

ASCII transfer : ஆஸ்கி அனுப்புகை : ஆஸ்கிப் பரிமாற்றம் : மின்னணுத் தகவல் பரிமாற்றத்தில் ஓர் உரைக் கோப்பினை அனுப்புவதற்கு ஏற்ற படிவ முறை. இத்தகைய பரிமாற்ற முறையில் பிணையத்திற்கும், பிணையத்திலிருந்தும் தகவல் அனுப்பி வைக்க உலகப் பொதுவான குறியீட்டுத் தொகுதி அடிப்படையில் எழுத்து மாற்றம் செய்யப்படுகிறது.

ASCII sort order : ஆஸ்கி வரிசையாக்கம்.

ASCII string : ஆஸ்கி சரம் : சில நிரலாக்க மொழிகளில் குறிப்பிட்ட ஓர் எழுத்துடன் (NULL) முடியும் சரம். ஆஸ்கி மதிப்பு சுழி (பூஜ்யம்) யாக இருக்கும் எண்மி (பைட்), சர ஈற்று எழுத்தாகும்.

ASIC : ஏஎஸ்ஐசி (அசிக்) : குறித்த பயன்பாட்டு ஒருங்கிணைப்பு மின்சுற்று என பொருள்படும் Application Specific Integrated Circuit என்பதன் குறும்பெயர். ஒரு குறிப்பிட்ட பயன்பாட்டுக்காக உருவாக்கப்பட்ட சிப்பு. மற்ற சிப்புகளைவிட இதை விரைவாக உருவாக்கலாம. மாற்றங்களையும் எளிதாகச் செய்யலாம்.

ASIS : ஏஎஸ்ஐஎஸ்; அசிஸ் : தகவல் அறிவியலுக்கான அமெரிக்க சங்கம் என்பதைக் குறிக்கும் American Society for Information Science என்பதன் குறும்பெயர்.

ASM : ஏஎஸ்எம் : முறைமை மேலாண்மைச் சங்கம் என்பதைக் குறிக்கும் Association for Systems Management என்பதன் குறும்பெயர்.

aspect card : ஆவண எண் அட்டை : தகவல் பெறும் அமைவில் உள்ள ஆவணங்களின் எண்கள் அடங்கிய அட்டை.

aspect - oriented programming : விவரண நோக்கு நிரலாக்கம்.

aspect ratio : வடிவ விகிதம் : ஒரு கணினி வரைபடத்தில் காட்சித்திரை அல்லது பட வரம்பின் உயரத்துக்கும், அகலத்துக்கும் உள்ள விகிதம்.

ASR : ஏஎஸ்ஆர் : தானியங்கு முறையில் செய்தி அனுப்புதல் மற்றும் பெறுதலுக்கான Automatic Send/Receive என்பதன் குறும்பெயர்.

assemble : இணை;தொகு : கணினி நிரல் தொகுப்பு ஒன்றுக்காக தரவுகளை சேகரித்து, பொருட்படுத்தி ஒருங்கிணைத்தல். தரவுகளை கணினி மொழிக்கு மாற்றி, அதனை கணினி பின்பற்றுவதற்காக இறுதி நிரல் தொகுப்புக்குள் இணைத்தல்.

assembler : சில்லு மொழி மாற்றி; சிப்பு மொழி பெயர்ப்பி : இது ஒரு மொழி பெயர்ப்பி. கணினியைக் கையாளும் ஒருவர் தயாரித்த எந்திர மொழியில் இல்லாத நிரல்களை ஏற்று, அதனை கணினி பயன்படுத்தக் கூடிய எந்திர மொழி வடிவத்துக்கு மாற்றுவது.

assembler directive : சிப்பு மொழி மாற்றி நெறியுறுத்தம் : ஒரு சிப்பு மொழி நிரலில் தரப்படும் மாற்றி. இதனை அடையாளம் கண்டு அதன்படி செயல்படும்.

assembling : தொகுத்தல் : ஒரு குறியீட்டு ஆதார மொழி நிரல் தொகுப்பை ஒன்றின் பின் ஒன்றாக எந்திர மொழியாக ஒரு கணினியில் மாற்றும் தன்னியங்கு நடைமுறை.

assembly : தொகுப்பு : சேர்ப்பு : ஒருங்கிணைந்த மின்சுற்றை கம்பிகளால் இணைத்து ஒரு அமைப்புக்குள் கொண்டு வரும் செயல்.

assembly language : சில்லு மொழி : சிப்பு மொழி : இலக்கக் குறியீட்டு ஆணைகளுக்குப் பதிலாக குறியீட்டுச் சொற்களை (mneumonic codes) கொண்டு எழுதப்படும் கணினி மொழி.

assembly listing : தொகுப்பு பட்டியல் : தொகுப்பி ஒன்றினால் தயாரிக்கப்பட்ட அச்சுத் தயாரிப்பு.

assembly programme : தொகுப்பு மொழி நிரல் : சிப்பு மொழி நிரல்.

assertion : உறுதிப்படுத்துதல் : மதிப்பீட்டை உண்மையாக்கும் ஒரு பூலியன் வாக்கியம்.

assign : மதிப்பிருத்து : குறித்தளி,

assigned number : குறித்தளித்த எண்.

assign macro : குறுநிரல் குறித்தளி.

assignment : குறித்தளித்தல் : மதிப்பிருத்தல்.

assignment operator : மதிப்பிருத்தும் செயற்குறி : மதிப்பிருத்தும் செய்முறைக் குறி; மதிப் பிருத்தும் இயக்கி : ஒரு மாறியில் (variable) அல்லது ஒரு தரவுக் குழுவில் (data structure) ஒரு மதிப்பை இருத்தி வைக்கப் பயன்படும் செயற்குறி அல்லது குறியீடு. பெரும்பாலும் = என்னும் அடையாளம் இப்பணிக்குப் பயன்படுத்தப்படுகிறது.

assignment statement : மதிப்பிருத்தல் கூற்று : ஒரு மாறியில் (variable) ஒரு குறிப்பிட்ட மதிப்பினை இருத்தப் பயன்படும் கட்டளை.

associate : உறவுபடுத்து : தொடர்புறுத்து : ஒரு கோப்பின் குறிப்பிட்ட வகைப்பெயர் (extension) ஒரு குறிப்பிட்ட பயன்பாட்டுத் தொகுப்புடன் உறவுடையது என்று இயக்க முறைமை (operation system) -க்கு அறிவித்தல். ஒரு கோப் பினைத் திறக்கும்போது, அக் கோப்பின் வகைப்பெயர் அடிப்படையில் குறிப்பிட்ட பயன்பாடு முதலில் இயக்கப் பட்டுப் பிறகு அந்தக் கோப்பு அந்தப் பயன்பாட்டினுள் திறக்கப்படும். எடுத்துக் காட்டாக, விண்டோஸ் இயக்க முறைமையில் . doc என்னும் வகைப் பெயருள்ள கோப்புகளைத் திறக்க ஆணையிட்டால், முதலில் வேர்டு இயக்கப்பட்டு அதனுள் அக்கோப்பு திறக்கப்படுவதைக் காணலாம்.

associated document : இணைவு ஆவணம்.

Association for Computing Machinery (ACM) : கணினி எந்திரவியலார் சங்கம் : 1917ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட அமைப்பு. தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களின் அறிவு மற்றும் தொழில்நுட்ப மேதமையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இச்சங்கம் அமைக்கப்பட்டது.

Association for Systems Management (ASM) : முறைமை மேலாண்மைச் சங்கம் : முறைமை மேலாண்மை மற்றும் தகவல் செயலாக்கத் துறையில் விரைவாக ஏற்படும் வளர்ச்சி மாற்றம் ஆகியவற்றை உறுப்பினர்களுக்கு அறிமுகப்படுத்தலில் ஈடுபடும் பன்னாட்டுச் சங்கம். 1947இல் இச்சங்கம் உருவாக்கப்பட்டது. அது ஐந்து தொழில் நுணுக்கப் பகுதிகளைக் கொண்டது. தரவுப் பரிமாற்றம், தரவு செயலாக்க மேலாண்மை, தரவு முறைமை, முறைமைக்குத் திட்டமிடல் மற்றும் எழுத்து மூலமான தகவல் பரிமாற்றம். உறுப்பினர்கள் இப்பிரிவுகளில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பிரிவுகளைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம்.

Association of C and C++ users : சி மற்றும் சி++ பயனாளர்கள் சங்கம் : கணினி நிரலாக்க மொழிகளான சி, சி++ மற்றும் அவற்றின் உறவு மொழிகளில் ஆர்வமுள்ளவர்களின் சங்க அமைப்பு. இம்மொழிகளின் தொழில்முறை நிரல் வரைவாளர்கள், இவற்றின் மொழி மாற்றிகளை (compilers) உருவாக்கும்/விற்பனை செய்யும் வணிகர்கள், தொழில் முறை அல்லாத நிரல் வரைவு ஆர்வலர்கள் ஆகியோர் இச்சங்க உறுப்பினர்கள்.

associative array : சார்புக் கோவை : கணினி பெர்ல் (perl) மொழியில் ஒரு தரவு இனம்.

associative computer : சார்புக்கணினி : சார்பு நினைவகத்தைக் கொண்ட கணினி. associative dimensioning : சார்புப் பரிமாணம் அமைத்தல் : பரிமாணப் பொருள்களில் பயனாளர் செய்யும் மாற்றங்களுக்கேற்ப நிரலானது தானாகவே பரிமாணப் பொருள்களில் மாற்றம் செய்து கொள்ளும் செயல்முறை.

associative memory : சார்பு நினைவகம் : ஒரு சேமிப்புச் சாதனம். இதன் சேமிப்பு இருப்பிடங்களை அவற்றின் உள்ளடக்கங்களைக் கொண்டே அடையாளம் காணமுடிகிறது.

associative retrieval : சார்பு மீட்பு : இணை மீட்பு.

associative store : சார்புறு சேமிப்பு.

associative storage : சார்புறு சேமிப்பு : இதன் நினைவிடங்கள் அதன் உள்ளடக்கத்தினால் அறியப் படுகின்றன. (இது பெரும்பாலான கணினி சேமிப்புகளில் பெயர் அல்லது எண்ணால் நினைவிடத்தைக் குறிப்பிடுவதற்கு மாறானது). உள்ளடக்க முகவரி நினைவகம் என்றும் தேடல் நினைவகம் என்றும் குறிப்பிடப்படுகின்றன.

assumed decimal point : எடுபதின்மப் புள்ளி : கற்பனைப் பதின்மப் புள்ளி.

astable : நிலையற்ற : மின்னணு மின் சுற்றுகளில் மாறிக்கொண்டிருக்கும் நிலை. ஒரு நிலையில் இருந்து தொடர்ச்சியாக வேறொரு நிலைக்கு மாறிக் கொண்டே இருத்தல். மின்னணுக் கடிகாரங்களில் பயன்படுத்தப்படும் நேரம் அமைக்கும் மின்னணுச் சாதனம் மற்றும் கணினி கடிகாரத்துக்கும் இதுவே அடிப்படை.

asterisk : உடுக்குறி : பல கணினி மொழிகளில் பெருக்கல் செயற்குறியாக பயன்படும் குறியீடு.

astomisher : வியப்பாளி.

astronomy : வானவியல் : நட்சத்திரங்கள், கோள்கள் பற்றி மின்னணுத் தகவல் தொடர்பு முறையில் ஆராயும் அறிவியல்.

asymmetrical transmission : செஞ்சீரிலா செலுத்துகை, சமச் சீரற்ற அனுப்பீடு : அதிவேக இணக்கிகளில் (modems) பயன்படுத்தப்படும் அனுப்பீட்டு முறை. குறிப்பாக வினாடிக்கு 9, 000 துண்மி (பிட்) கள், அதற்கும் அதிகமாக அனுப்பவல்ல இணக்கிகளில் இம்முறை செயல் படுத்தப்படுகிறது. இம்முறையில் ஒரே நேரத்தில் தகவலை வெளிச் செலுத்தவும் உள்வாங்கவும் முடியும். தொலைபேசித் தகவல் தடத்தின் கற்றையை இரு பாதைகளாக்கி ஒன்றில் 300 முதல் 450 துண்மிகள் (வினாடிக்கு) வரையும் இன்னொரு பாதையில் 9,600 துண்மிகள் அல்லது அதற்கும் அதிகமான வேகத்தில் தகவல் பரிமாற்றம் நடைபெறும்.

asymmetric digital subscriber line : செஞ்சீரிலா இலக்கமுறை சந்தாதாரர் தகவல் தடம் : சாதாரணமான முறுக்கிய இணை தொலை பேசிச் செப்புக் கம்பிகள் வழியாகவே ஒளிக் காட்சிச் சமிக்கை உட்பட மிகுவேக இலக்க முறைத் தகவல் தொடர்பைச் சாத்தியமாக்கும் வகையில் தொழில்நுட்பமும் சாதனங்களும் மேம்பட்டுள்ளன. இறங்கு திசையில் வினாடிக்கு மெகா துண்மி (மெகாபிட்)கள் வரையிலும், ஏறு திசையில் 800 கிலோ துண்மி (பிட்)கள் வரையிலும் தகவல் பரிமாற்றம் இயலும்.

asymmetric key cryptography : ஒழுங்கற்ற விசை, மறைக் குறியியல்.

asymmetric modem : ஒருங்கிலா இணக்கி (மோடெம்) : இருபுற தகவல் பரிமாற்றம் செய்யும் மோடெம். வெவ்வேறு திசைகளில் வெவ்வேறு வேகத்தில் தகவல்களை அனுப்பக் கூடியது. சான்றாக ஒப்புதல்கள் ஒரு திசையில் மெதுவாக அனுப்பப்படும். ஆனால் தகவல் அதிக வேகத்தில் வேறொரு திசையில் அனுப்பப்படும்.

asymmetric multiprocessing : ஒருங்கிலா பல்முனைச் செயலாக்கம் : ஒரு மையச் செயலகம் குறிப்பிட்ட பணிக்கு மட்டும் என்று ஒதுக்கப்பட்டுள்ள பல்முனை செயலாக்க வடிவமைப்பு.

asymmetric system : ஒழுங்கிலா முறைமை : பெரிய பாகங்கள் அல்லது தன்மைகள் வெவ்வேறாக உள்ள கணினி அமைப்பு. ஒளிக்காட்சி நெருக்குதலில், தகவல்களை நெருக்குவதற்கு அதிகக் கருவிகள் தேவைப்படுகின்ற அமைவு.

asynchronous : நேரச்சீரிலீ : ஒரு வகை தரவுத் தொடர்புடன் தொடர்புடையது. எழுத்துகள் அனுப்பப்படும் பொழுது ஒன்றுக்கும் மற்றொன்றுக்கும் இடையே மாறுபடும் நேர இடைவெளி கொண்டது.

asynchronous communication : ஒத்தியங்காத் தகவல் தொடர்பு : நேரச் சீரற்ற தொடர்பு; ஒத்திசைவில்லாத தகவல் தொடர்பு.

asynchronous computer : நேரச் சீரற்ற கணினி : முன் செயல் நிறைவடைந்தால் உருவாக்கப்படும் சமிக்கையைத் தொடர்ந்து அல்லது செயலாக்கத்துக்குச் சாதனம் கிடைக்கும்பொழுது அடுத்த செயல் தொடரும் கணினி. நேர்ச் சீர்க் கணினிக்கு இது மாறானது.

asynchronous data transmission : நேரச் சீரிலா தகவல் அனுப்புகை : ஒத்தி யங்கா தகவல் அனுப்புகை.

asynchronous device : நேரச் சீரற்ற சாதனம் : தகவல் தொடர்பு கொள்ளும் கணினி அமைப்புக்கு வெவ்வேறு இடைவெளிகளில் சமிக்கைகளை அனுப்பிடும் சாதனம்.

asynchronous input : ஒத்தி யங்கா உள்ளீடு : நேரச்சீரிலா உள்ளீடு : கணினியின் நேரச்சீரிலா உள்ளீட்டுத் தகவல்.

asynchronous mode : நேரச் சீரிலா பாங்கு : ஒரு செயல் முடிந்த பிறகே அடுத்ததைத் தொடங்க அனுமதிக்கும் முறையில் செயலாற்றும் கணினி, ஒரே நேரச்சீர்க் கணினியில் உள்ளது போல் ஒரு செயலைச் செய்ய அடுத்த நேரத் தொடக்கம் வரை கரத்திருக்க வேண்டியதில்லை.

asynchronous operation : ஒத்தியங்காச் செயல்பாடு : கடிகாரம் போன்ற ஒரு நேரச் சாதனத்தை சாராமல் தனித் தியங்கும் ஒரு செயல்பாடு. எடுத்துக்காட்டாக, இரண்டு இணக்கிகள் தமக்குள் ஒத்தியங்காத் தகவல் பரிமாற்றம் செய்து கொள்ளும்போது நேரக் கணக்கின்படி தகவலை அனுப்புவதில்லை. தொடங்கு, நிறுத்து என்னும் சமிக்கையை ஒன்றுக் கொன்று அனுப்பி தமக்குள் சீராகத் தகவலை பரிமாறிக்கொள்கின்றன. ஒத்தியங்கு செயல்பாட்டுடன் ஒப்பிடுக.

asynchronous procedure call : ஒத்தியங்காச் செயல்முறை அழைப்பு : செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஓர் நிரல் தொடரில், ஒரு செயல்கூறு இயக்கப்படுவதற்கான நிபந்தனைகள் நிலவும்போது, அச்செயல்கூறு அழைக்கப்பட்டுச் செயல்படுத்தப்படும். அந்த நிரல் தொடர் இயங்காத போதும், அதேபோன்ற நிபந்தனைகள் நிலவுமெனில், இயக்க முறைமையின் கருவகம் (kernel) ஒரு மென்பொருள் குறுக்கீட்டை நேரடியாக வழங்கி, அந்த நிரல் தொடரை இயக்கி அதிலுள்ள செயல் கூற்றையும் அழைத்துச் செயல்படுத்தும்.

asynchronous protocol : நேரச் சீரிலி நெறிமுறை : நேரச் சீரிலா முறையில் தகவல் அனுப்புவதைக் கட்டுப்படுத்தும் தகவல் தொடர்பு நெறிமுறை. asynchronous terminal : ஒத்தியங்கா முனையம் : நேரச் சீரிலா முனையம்.

Asynchronous Transfer Mode : நேரச் சீரிலா பரிமாற்றுப் பாங்கு.

asynchronous transmission : நேரச் சீரிலா அனுப்புகை : ஒவ்வோர் எழுத்தும் தனித் தன்னிறைவு அலகாக அமைந்து தனக்கென தொடக்க, முடிவு துண்மிகளைக் கொண்டதாக தரவுகளை அனுப்பும் முறை. ஒவ்வொரு எழுத்துக்கும் இடையில் உள்ள இடைவெளி வெவ்வேறாக இருக்கும். கணினிக்கும், மோடெத்துக்கும் இடையில் இத்தகைய தரவு அனுப்பும் முறையே உள்ளது. ஒரு மோடெம் வேறொன்றுக்குத் தரவுகளை அனுப்பும் போது நேரச் சீர்மையைக் கடைப் பிடிக்கலாம்.

ATA , ஏ.டீ.ஏ : உயர்நிலைத் தொழில்நுட்ப உடன் இணைப்பு என்று பொருள்படும் Advanced Technology Attachment என்பதன் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஐடிஇ நிலைவட்டு இயக்கத்துக்கு அன்சிக் குழுமத்தின் எக்ஸ் எஸ்டி 10 குழு தந்த முறைப்படியான பெயர் இது. ஏ.டீ உடனிணைப்பு என்றும் இதற்குப் பெயர்.

ATA hard disk drive card : ஏடிஏ நிலைவட்டு இயக்கக அட்டை : ஏடிஏ நிலைவட்டு இயக்கத்துக்கான கட்டுப்பாடு இடைமுகமாய் பயன்படும் விரிவாக்க அட்டை. இவை பெரும்பாலும் ஐஎஸ்ஏ செருகுவாய்களில் பொருத்தப்படும் அட்டைகளாக இருக்கும்.

ATA/IDE hard disk drive : ஏடீஏ/ ஐடிஇ நிலைவட்டகம்/நிலை வட்டு இயக்ககம் : ஐடிஇ (IDE-intergrated Drive Electronics) , ஏடீஏ (AT Attachment) ஆகிய இரண்டும் ஒரே தொழில் நுட்பத்தையே குறிக்கின்றன. ஒரு வட்டகத்தின் கட்டுப்பாட்டுச் சாதனத்தையும் வட்டகத்தோடு ஒருங்கிணைக்கும் வட்டு இயக்கக வடிவமைப்பாகும். இதன்மூலம் இடைமுகத்துக்கான செலவு குறைகிறது.

Atanasoff-Berry Computer : (ABC) அடனாசோஃப்- பெர்ரி கணினி : முதல் மின்னணு கணினி, டாக்டர் ஜான் வின்சென்ட் அடனாசோஃப் மற்றும் கிளிஃபோர்டு பெர்ரி ஆகியோரால் உருவாக்கப்பட்டது. தகவல் சேமிப்பு மற்றும் கணிப்புகளுக்கு வெற்றிடக் குழாய்களைப் பயன்படுத்தியது.

Atanasoff John V : அடனா சோஃப் ஜான் வி : 1939இல் தன் உதவியாளர் கிளிப் ஃபோர்டு பெர்ரி உதவியுடன் முதல் மின்னணுவியல் இலக்கமுறைக் கணினியைக் கண்டுபிடித்தவர். கணிதச் சிக்கல்களுக்குக் கணினியில் தீர்வு காண்பதில் அவர் ஆர்வம் கொண்டிருந்தார்.

ΑΤΑΡΙ : அட்டாப்பி : குறுவட்டுச் சாதனங்களைக் கையாள, ஐபிஎம் பிசி ஏடீ கணினிகளில் பயன்படுத்தப்படும் இடைமுகச் சாதனம்.

Atari : அட்டாரி : தனியார் கணினிகள் மற்றும் இணைப்புச் சாதனங்கள் வரிசையில் புகழ்பெற்ற நிறுவனம். தொடங்கியதிலிருந்தே அமெரிக்க நிறுவனமாக உள்ளது.

at birth : பிறக்கும்போது.

AT bus : ஏடீ மின்வழித்தடம் : ஏ.டீ மின்பாட்டை : ஐபிஎம் ஏடி மற்றும் அதன் ஒத்தியியல்புக் கணினிகளில் தாய்ப்பலகையுடன் புறச் சாதனங்களை இணைக்கும் மின்வழித் தடம். முன்பிருந்த பீசி மின்பாட்டை 8 துண்மி (பிட்) களையே ஏந்திச் செல்லும். ஏ.டீ மின் பாட்டையில் 16 துண்மிகள் (பிட்கள்) ஒருசேரப் பயணம் செய்ய முடியும். இது விரிவாக்க மின் பாட்டை என்றும் அழைக்கப்படுகிறது.

at death : இறக்கும்போது.

ATDP : ஏடிடிபீ : எண் சுழற்றுத் துடிப்புகளைக் கவனி என்று பொருள்படும் Attention Dial Pulse என்ற சொல் தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஹேய்ஸ் மற்றும் ஹேய்ஸ் ஒத்தியல்பு இணக்கிகளில் துடிப்புமுறை எண் சுழற்றலைத் தொடக்கி வைக்கும் கட்டளை.

ATDT : ஏடிடிடீ : எண்சுழற்று ஒலியைக் கவனி என்று பொருள்படும் Attention Dial Tone என்ற சொல்தொடரின் தலைப்பெழுத்துச் சுருக்கம். ஹேய்ஸ் மற்றும் ஹேய்ஸ் ஒத்தியல்பு இணக்கிகளில் ஒலிமுறை எண் சுழற்றலைத் தொடங்கி வைக்கும் கட்டளை.

atlas : அட்லாஸ் : டிரான்சிஸ்டர்களை வைத்து உருவாக்கப்பட்ட இரண்டாம் தலைமுறைக் கணினிகளில் புகழ்பெற்றது.

ATM : ஏடிஎம் : 'தன்னியக்கப் பணப் பொறுப்பு எந்திரம்' எனப் பொருள்படும். Automatic Teller Machine என்பதன் குறும்பெயர்.

ATM Forum : ஏடிஎம் மன்றம் : 1991ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. தகவல்தொடர்பு மற்றும் கணினித்துறை சார்ந்த 750 குழுமங்கள், அரசு முகமைகள் மற்றும் ஆய்வுக் குழுக்கள் இதன் உறுப்பினர்கள். தகவல் பரிமாற்றத்தில் ஒத்தியங்கா அனுப்பீட்டு முறையை முன்னேற்றுதல் இம்மன்றத்தின் குறிக்கோள்.

atom : ஆட்டம் : தரவு அமைப்புகளை உருவாக்குவதற்கான அடிப்படை அலகு. கோப்பில் உள்ள ஒரு ஏடு போன்றது. அதில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட தரவுகள் இருக்கலாம்.

atomic : அணுநிலை.

atomic indivisible : பகுக்க இயலா அணுத்தன்மையுள்ள : ஒரு அணுச் செயல் அணுத்தன்மை என்றால் ஒரு செயலை முழுவதுமாகச் செய்ய வேண்டும் அல்லது செய்யாமல் இருக்க வேண்டும். சான்றாக, எந்திரக் கோளாறின் காரணமாக, ஒரு பரிமாற்றம் முடிவது தடைபடுமானால், கணினி அமைப்பு அந்தப் பரிமாற்றம் தொடக்கத்தில் இருந்த நிலைக்கு மீண்டும் சென்று விடும்.

atomicity : அணுத்தன்மை : எதையும் எந்த அளவுக்குப் பகுக்கலாம் என்பதைக் கூறுவது.

atomic operation : அணுச் செயல்பாடு : மேலும் சிறிய செயல்களாகப் பகுக்க முடியாத செயல்.

attach : இணை : கணினி ஒன்றின் திறனைக் கூட்ட புறச் சாதனம் ஒன்றைச் சேர்த்தல்.

atomic resolution storage : அணு முறை சேமிப்பு.

attached document : உடனிணைக்கப்பட்ட ஆவணம் : ஒரு மின்னஞ்சல் செய்தியுடன் உடனிணைப்பாக அனுப்பி வைக்கப்படும் ஓர் ஆவணம். ஆஸ்கி உரைக் கோப்பு, இரும மொழிக் கோப்பு, ஒரு வரைகலைப் படக் கோப்பு, ஓர் இசைப் பாடல் கோப்பு, ஓர் ஒளிக் காட்சிக் கோப்பு, ஒரு மென்பொருள் தொகுப்பு இவற்றுள் எதை வேண்டுமானாலும் மின்னஞ்சல் செய்தியுடன் இணைத்து அனுப்ப முடியும். வேறு வேறு பயன்பாட்டுத் தொகுப்புகளில் உருவாக்கப்பட்ட ஆவணங்களாக இருக்கலாம். இணைக்கப்படும் ஆவணங்கள் மின்னஞ்சல் செய்தியின் ஒரு பகுதியாகக் கருதப் படுவதில்லை. அவை மைம் (MIME), பின்ஹெக்ஸ் (BINHEX) என்ற முறையில் மாற்றுக் குறியீடாக்கப்பட்டு அனுப்பி வைக்கப்படுகின்றன. பெரும்பாலான மின்னஞ்சல் தொகுப்புகள் தாமாகவே இம் மாற்றத்தை செய்து அனுப்பும் திறன் பெற்றுள்ளன. மின்னஞ்சலைப் பெறுபவர் பயன்படுத்தும் மின்னஞ்சல் தொகுப்பு இந்த ஆவணங்களை மீண்டும் மூல வடிவுக்கு மாற்றும் திறன் படைத்ததாக இருக்க வேண் டும். இல்லையேல் அதற்கென உள்ள மென்பொருளை பயன் படுத்தி மாற்றிக்கொள்ள வேண்டும்.

attached processor : உடனிணை; இணைக்கப்பட்ட செயலி : வேலைகளைச் செய்வதில் உதவுவதற்காக ஒரு தலைமை கணினியுடன் இணைக்கப்பட்ட செயலி. பல் செயலாக்கச் சூழ்நிலையில், தலைமை செயலக அமைவுடன் சேர்க்கப்பட்ட கூடுதல் மையச் செயலகம். தலைமைச் செயல் அமைவுடன் சேர்ந்து செயல்பட்டு கணினி அமைப்பின் மென்பொருள் மற்றும் வெளிப் புறச் சாதனங்களைப் பகிர்ந்து கொள்கிறது.

attachment : உடனிணைப்பு.

attachment encoding : உடனிணைப்புக் குறி முறையாக்கம்.

attended operations கவனிக்கப்பட்ட செயற்பாடு; கவனிக்கப்பட்ட செயலாக்கம்.

attention key : கவன விசை : கணினி முனையத்தில் உள்ள ஒரு பணி விசை. அப்போது செய்து கொண்டிருக்கிற வேலையில் தடையிடுமாறு, கணினிக்கு இது சமிக்கை அளிக்கும்.

attenuation : தேய்வு : சமிக்கை ஒன்றின் அளவு அது கட்டுப் பாட்டு அமைவு வழியாகச் செல்லும் பொழுது குறைதல்.

attrib : அட்ரிப் : டாஸ் கட்டளைகளில் ஒன்று. ஒரு கோப்பின் பண்புகூறை மாற்றுவது.

attribute : பண்புக்கூறு : 1. மாறிலி ஒன்றைக் கணினி கையாளும் முறை. 2. தரவு மாதிரி ஒன்றின் இனங்காட்டும் பண்பு. தரவு அமைவு ஒன்றின் அடிப்படை அலகு. 3. ஒரு கருவி ஒன்றின் பண்பு.

attribute byte : பண்புக்கூறு பைட் : வட்டுக் கோப்பில் உள்ள சேமிக்கப்பட்ட தரவைக் குறிப்பது. அக் கோப்பில் உள்ள பண்புகூறுகளை இது குறிப்பிடுகிறது.

attribute inheritance மரபுரிமப் பண்பு : பண்புக் கூறு; மரபுரிமம்.

attribute representations பண்புக் கூறு உருவகிப்புகள்.

ATx : ஏடிஎக்ஸ் : 1995ஆம் ஆண்டில் இன்டெல் நிறுவனம் அறிமுகப்படுத்திய தாய்ப்பலகை யின் கட்டமைப்புகள் தொடர் பான தரக்கோட்பாடுகள். கேட்பொலி மற்றும் ஒளிக்காட்சித் திறன்கள் உள் இணைக்கப்பட்ட தாய்ப்பலகை பற்றியவை. அனைத்துச் செருகுவாய்களிலும் முழு நீளப் பலகைகளையும், யுஎஸ்பி துறைகளையும் ஏடி எக்ஸ் ஏற்க வல்லது.

audio : கேட்பொலி : மனிதரால் கேட்கக் கூடிய ஒலி.

audio board : கேட்பொலி அட்டை : தனிநபர் கணினி விரிவாக்க அட்டை. ஒலியை உருவாக்கி வெளியில் உள்ள சிறிய ஒலிபெருக்கிகளுக்காக அதைப் பெரிதாக்கித் தருகிறது. ஒலி அட்டை (sound card) என்றே பெரிதும் அழைக்கப்படும்.

audio card : கேட்பொலி அட்டை : கணினியின் தாய்ப்பலகையில் பொருத்தக் கூடிய விரிவாக்க அட்டை. தொடர்முறை (analog) வடிவிலான கேட்பொலிச் சமிக்கைகளை இலக்கமுறைக்கு மாற்றி, கணினியில் கோப்புகளாகப் பதிவு செய்யவும், கணினிக் கோப்புகளை மின்காந்த சமிக்கைகளாக மாற்றி ஒலி பெருக்கி மூலம் கேட்பொலியாகத் தரவும் இவ்வட்டை பயன்படுகிறது. கணினியில் இணைக்கப்பட்ட ஒலிவாங்கி மூலம் கேட்பொலியை உள்ளீடாகத் தர முடியும். வெளியீட்டு ஒலியை ஒலிபெருக்கி மற்றும் தலைபேசி (headphone) மூலமாகக் கேட்க முடியும். கேட்பொலிக் குறுவட்டுகள், ஒலிநாடாக்கள் மற்றும் இணையத்திலிருந்தும் ஒலியை/ இசையை/ பாடலைக் கேட்பதற்கு கேட்பொலி அட்டைகள் உதவுகின்றன. இவை ஒலி அட்டை, ஒலிப்பலகை, கேட் பொலிப் பலகை என்றும் அழைக்கப்படுகின்றன.

audiocast : கேட்பொலி பரப்புகை : இணைய நெறி முறை எனப்படும் ஐபீ நெறி முறையைப் பயன்படுத்தி கேட்பொலிச் சமிக்கைகளைப் பரப்புதல்.

audio cassette : கேட்பொலிப் பேழை, ஒலிப் பேழை.

audio CD : ஒலிக் குறுவட்டு; கேட்பொலிக் குறுவட்டு.

audio compression : கேட்பொலி இறுக்கம் : கேட்பொலிச் சமிக்கைகளின் ஒட்டுமொத்த சத்த அளவைக் குறைப்பதற்கான வழிமுறை. ஒரு கேட்பொலிச் சமிக்கையை ஓர் ஒலிபெருக்கி மூலமாக ஒலிபரப்பும் போதோ, தகவல் தொடர்பு ஊடகம் வழியாக அனுப்பிடும் போதோ ஏற்படும் மேலோட்டமான சிதைவின் அளவும் இம்முறையில் கட்டுப் படுத்தப்படுகிறது.

audio conferencing : ஒலிச் சொல்லாடல்; கேட்பொலிச் சொல்லாடல்.

audio data : கேட்பொலி தரவு : ஒலியை இலக்கமாக்கியபின் வெளிப்படும் தரவு.

audio device : கேட்பொலிக் கருவி : ஒலியை ஏற்கும் அல்லது உருவாக்கும் கணினிக் கருவி.

audio editor programmes : ஒலித் தொகுப்பு நிரல்கள்.

audio file : கேட்பொலிக் கோப்பு.

audio input : கேட்பொலி உள்ளீடு : ஒரு கணினியில் தரவுவை உள்ளீடு செய்ய ஒலியைப் பயன்படுத்துவது.

audio graphics : கேட்பொலி வரைகலை; ஒலி வரையம்.

audio monitor : கேட்பொலிக் கண்காணி.

audio output : கேட்பொலி வெளியீடு : மனிதக் குரல் போன்ற ஒலிச் சமிக்கைகளை உருவாக்கக்கூடிய ஒலி இயற்றிகளினால் உருவாக்கப்படும் கணினி வெளியீடு.

audio output port : கேட்பொலி வெளியீட்டுத் துறை : இலக்க முறையிலிருந்து தொடர்முறைக்கு மாற்றும் மின்சுற்று. இதுதான் கணினியிலுள்ள தகவலைக் கேட்பொலியாக மாற்றித் தருகிறது. இம் மின்சுற்று, ஒலி பெருக்கி, பேச்சொலி பெருக்கி ஆகியவற்றுடன் இணைந்து பயன்படுத்தப்படுகிறது.

audio properties : கேட்பொலிப் பண்புகள்.

audio response : கேட்பொலி மறுமொழி : ஒரு குறிப்பிட்ட வகை உள்ளீட்டைப் பெற்றுக் கொண்டு, கணினி உருவாக்கும் ஒலி-குறிப்பாக பேச்சொலி வெளியீடு. இத்தகைய வெளியீடு, இலக்க முறைப்படுத்திய அகராதியிலுள்ள சொற்களின் கூட்டாகவோ, அட்டவணையிலுள்ள ஒலியன்களின் கூட்டிணைவாகவோ இருக்கலாம்.

audio response device : கேட்பொலிப் பதிலுரைச் சாதனம் : பேசப்படும் குரல் போன்ற எதிர்விளைவை உருவாக்கும் வெளியீட்டுக் கருவி. ஒலி வெளியீடு என்பதைப் பார்க்கவும்.

audio response output : கேட்பொலி பதிலுரை வெளியீடு : ஒலியாக அல்லது பேசும் மொழியாக கணினியின் வெளியீடு.

audio response unit : கேட்பொலி பதிலுரையகம் : பேசும் சொல்லாக வெளியீடு தருகின்ற கணினியின் வெளியீட்டுச் சாதனம்.

audio signal : கேட்பொலி சமிக்கை : ஒலி அலைகளைப் பெரிதாக்கி மின்வடிவில் தருவது.

audio sphere : கேட்பொலிப் புலம் : மெய்நிகர் தோற்றச் சூழ்நிலையில், பயனாளரின் இருப்பிடம் மற்றும் ஒலி தோன்றுமிடத்திற்கேற்ப ஒலியை முப்பரிமாண முறையில் குறிப்பிடும் அமைப்பு.

audio system : ஒலி முறைமை; கேட்பொலி முறை.

audio tex : ஆடியோடெக்ஸ் : தொலைபேசி தகவலை அனுப்பவும் பெறவும் அனுமதிக்கும் ஒலி முறையில் பதில் தரும் பயன்பாடு. குரல் வேண்டுகோள்களுக்கேற்ப, பயனாளர்கள் விசையை அழுத்தியோ அல்லது கேள்விகளுக்குப் பதில் கூறியோ தங்களது வழியை பல விருப்பத் தேர்வுகளுக்கிடையில் தேர்ந்தெடுப்பார்கள். நிதி தொடர்பான தரவுகளை அறியவும் பொருள்கள் வாங்க ஆணை தரவும் பயன்படுகிறது. தரவுத் தளங்களை மாற்ற வசதியாக இடைப் பரிமாற்ற அமைப்புகளில் இது உருவாக்கப்பட்டுள்ளது.

audio visual : ஒலி ஒளி : நாடாப்பேழைகளுடன் தொடர்புடையது. இவை தகவலை ஒலி மூலமும் ஒளியின் மூலமும் பதிவு செய்கின்றன.

audit : தணிக்கை : கணினி இயக்கங்களின் திறனை முடிவு செய்ய, அமைப்புகள், நிரல் தொடரமைத்தல் மற்றும் தரவு மைய நடைமுறைகளைச் சோதித்தல்.

auditing : கணக்காய்வு  : ஓர் இயக்க முறைமை, கோப்புகள், கோப்பகங்கள் போன்ற உருப்பொருள்களை உருவாக்கவோ, அணுகவோ, அழிக்கவோ முற்படுவது போன்ற பாதுகாப்பு தொடர்பான நிகழ்வுகளைக் கண்டறிந்து பதிவு செய்யும் இயக்க முறைமையின் செயல்பாடு. பாதுகாப்புக் குறிப்பேடு (Security log) என்றறியப்படும். ஒரு கோப்பில் அத்தகைய நிகழ்வுகள் பதிவு செய்யப்பட்டிருக்கும். தகுந்த உரிமை பெற்ற பயனாளர்கள் மட்டுமே இக் கோப்பின் உள்ளடக்கத்தை அறிய முடியும்.

audit of computer system : கணினி முறைமைத் தணிக்கை : .

audit software : தணிக்கை மென்பொருள் : தரவுத் தளங்களிலிருந்து மாதிரிகளை எடுப் பது மற்றும் உறுதி செய்யும் கடிதங்களை வாடிக்கையாளர் களுக்கு அனுப்புவது போன்ற பல தணிக்கைப் பணிகளைச் செய்யும் சிறப்பு நிரல் தொடர்கள்.

audit trail : தணிக்கைச் சோதனை : தணிக்கைத் தடம் : ஊடகங்களைக் கொண்டு தரவுச் செயலாக்கத்தின் அனைத்து நிலைகளையும் தேடுதல். மூல ஆவணத்தில் அது இடம் பெறுவதில் துவங்கி இறுதி ஆவணமாக வெளிவரும் வரை அனைத்துச் சோதனைகளும் செய்யப்படும்.

AUI cable : ஏயுஐ வடம் : 'உடனிணைப்புச் சாதன இடை முகக் கம்பி வடம்' என்ற பொருள்தரும் Attachment Unit interface Cable என்பதன் சுருக்கம். ஓர் ஈதர்நெட் பிணையத்துடன் ஒரு கணினியின் தகவியை (adapter) இணைக்கும் அனுப்பிப் பெறும் வடம்.

authenticate : சான்றுறுதிப் படுத்து.

authentication : சான்றுறுதி : அங்கீகாரமளித்தல் : ஒரு சிறு தகவல் சரிதானா என்பதைச் சோதித்துப் பார்க்கும் செயல்முறை.

authenticity : நம்பகப்பண்பு : தகவல் ஒன்றின் நம்பகத் தன்மை.

author : படைப்பாளி : ஆசிரியர் : கணினி வழிக் கற்றலுக்குப் பாடப் பொருளை உருவாக்குபவர்.

authoring : படைப்பாக்கம்.

authoring language : படைப்பாக்க மொழி : கணினி வாயிலாகக் கற்பிக்கப்படும் பாடங்களையும், தரவுத் தளங்கள் மற்றும் நிரல் தொகுப்புகளையும் உருவாக்குவதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு கணினி மொழி அல்லது பயன்பாட்டு உருவாக்க முறைமை. நுண் கணினி பணித்தளம் பொறுத்தவரை, பலரும் அறிந்த எடுத்துக்காட்டு, பாடங்களை உருவாக்கப் பயன்படும் பைலட் (PILOT) மொழியாகும்.

authoring system : படைப் பாக்க முறைமை : படைப்பாக்க மொழி ஒன்றினை செயல்படுத்தும் திறன் கொண்ட கணினி முறைமை.

authoring system standard : படைப்பாக்க முறைமைத் தரம் : படைப்பாக்க நிரலைச் செயல் படுத்தும் திறனுள்ள கணினி அமைப்பு. கற்றுக் கொள்ளவும், சிபிடீ நிரலை உருவாக்கவும் அனுமதிக்கும் மென்பொருள்.  authoring tool : படைப்பாக்கக் கருவி : பல் ஊடகப் பொருளை உருவாக்க உதவும் மென் பொருள். பல்ஊடகம் வழங்குதற்குரிய தேவையான சூழ்நிலையையும் அது உருவாக்கித் தரும்.

authorized programme : ஏற்கப் பெற்ற நிரல்.

authorization : ஏற்புறுதி; அனுமதி அளித்தல் : செயலாக்கம் நடைபெறுவதற்கு முன்பு குறிப்பிட்ட அனுமதி பெறவேண்டிய கணினி அமைப்பின் கட்டுப்பாட்டுத் தன்மை.

authorization code : ஏற்புறுதி குறிமுறை; அங்கீகாரக் குறியீடு : கணினி அமைப்பை அணுக அனுமதிக்கும் நுழை சொல் (password) அல்லது அடையாள எண்.

authorization distribution list : ஏற்புறுதி விநியோகப் பட்டியல்; அங்கீகரிப்பு விநியோகப் பட்டியல் : குறிப்பிட்ட அறிக்கைகளின், அங்கீகரிக்கப் பட்ட பயனாளரின் பட்டியல். தகுதி பெறுபவர்களுக்கு மட்டுமே பிரதிகள் விநியோகிக்குமாறு கட்டுப்படுத்த உதவுகிறது.

authorization level : ஏற்கப்பட்ட ஆணைத் தொடர் மட்டம்.

authorization programme : ஏற்புறுதி; அங்கீகரிப்பு நிரல் : ஒரு கணினி அமைப்பின் தகுதி அல்லது அடிப்படை இயக்கத்தை மாற்றக் கூடிய ஒரு கணினி செயல்முறை.

author language : படைப்பாக்க மொழி : கணினி வழி கற்பித்தலுக்கான மென் பொருள்களை உருவாக்கப் பயன்படுத்தப்படும் கணினி மொழி.

authors : படைப்பாளிகிள் ஆசிரியர்கள் : கணினி வழிக் கற்றலுக்கான பாட முறைமைகளை வடிவமைப்போர்.

author styles : படைப்பாக்க பாணி

auto answer : தானியங்குப் பதில் : கணினிகளிலிருந்து வரும் தொலைபேசி அழைப்புகளுக்கு தானியங்கு முறையில் மோடெம் ஒன்றிலிருந்து மற்றொரு கணினிக்கு பதிலை அனுப்புதல்

auto attendent : தானியைங்குப் உதவிப் பொறி : மனிதர்கள் இயக்குவதற்கு மாற்றாகக் குரலை சேமித்து அனுப்பி வைக்கும் அமைப்பு அழைப்பவர்களைக் குரல் அஞ்சல் பெட்டிகளுக்கு அனுப்பி வைப்பது.

auto bypass : தானே ஒதுஇங்கிப் போதல் : கட்டமைப்பில் உள்ள ஒரு குறிப்பிட்ட முனையமோ அல்லது பிற சாதனமோ பழுதானால், அதை விடுத்து மாற்று வழியில் போகும் திறன். இதனால் மற்ற சாதனங்கள் தொடர்ந்து இயங்க முடியும்.

auto cad : ஆட்டோ காட் -ஒரு மென்பொருள் தொகுப்பு.

auto chart : உடனடி நிரல் படம் : தானியங்கு வரைபடம்.

auto code : தானியங்கு குறிமுறை

auto correct : தானாகப் பிழை திருத்தல்; தானியங்கு பிழை திருத்தம் : விண்டோசில் இயங்கும் மைக்ரோ சாஃப்ட்வேர்டு பணித் தொகுப்பில் இடம் பெற்றுள்ள ஒரு செயல்கூறு. ஓர் ஆவணத்தில் தட்டச்சு செய்து கொண்டிருக்கும்போது, சொல்லில் இருக்கும் எழுத்துப் பிழைகள் தாமாகவே சரி செய்யப்பட்டு விடும். அதுமட்டுமின்றி, தட்டச்சு செய்யப்படும் சில குறியீடுகள்/சொற்கள், முன் கூட்டியே வரையறுக்கப்பட்ட படி பதிலீடு செய்யப்பட்டு விடும். எடுத்துக்காட்டாக, the என்ற சொல்லைத் தவறுதலாக teh என்று தட்டச்சு செய்தோமெனில் அது தானாகவே the என்று மாறிவிடும். விசைப் பலகையிலுள்ள மேற்கோள் குறிகள் ஒரேபுறம் திரும்பிய நிமிர்ந்த குறிகள் (") ஆகும். இதுபோன்ற ஒற்றை மற்றும் இரட்டை மேற்கோள் குறிகள் ஆவணத்தில் இருபுறம் அடைக்கும் வரைந்த குறிகளாய் ("மற்றும்") மாறிவிடும். பயனாளர் இது போன்ற தானியங்கு பிழை திருத்த/பதிலீட்டு வசதிகளை செயலுமைப்படுத்த வேண்டும்.

auto dial : தானியங்கு எண் சுழற்றி : தானியங்கு அழைப்பி : தொலைபேசி இணைப்புடன் பொருந்தக் கூடிய மோடெம். ஒரு தொலைபேசி எண்ணைச் சுழற்றி மோடெமும் தகவல் தொடர்பு மென்பொருளும் முறையான தகவல் தொடர்பு நடைமுறைகளை நிறைவேற்றக் கூடியவை. அதனால் கணினிகளுக்கிடையே தரவுகளைப் பரிமாறிக் கொள்ள முடியும்.

AUTODIN : ஆட்டோடின் : தானியங்கு இலக்க முறை பிணையம் எனப் பொருள்படும் AUTOmatic Digital Network : என்பதன் குறும் பெயர். ராணுவ தகவல் தொடர்பு முறையில் தரவுகளைக் கையாளும் பகுதி.

ΑUΤΟΕΧΕ. ΒΑΤ : ஆட்டோ இஎக்ஸ் இ. பேட் : தானியங்கு நிரல் : எம்எஸ் டாஸ் இயக்க முறைமையில் பயன்படுத்தப்படும் கோப்பு. நிரல்களடங்கிய கணினி இயக்கப்படும்போது தானாக இயக்கப்படும் சிறப்புப் பயன் கோப்பாகும். தொடக்கக் காலப் பதிப்புகளில் பயனாளர் இக் கோப்பினை உருவாக்க வேண்டும். பிந்தைய டாஸ் பதிப்புகளில், இயக்க முறைமை கணினியில் நிறுவப்படும் போதே இக்கோப்பு உருவாக்கப் பட்டுவிடும். பயனாளரின் விருப்பத்திற்கு ஏற்றவாறு முன் நிறுவப்பட்ட சாதன இயக்கிகளுடன் கணினியும், இயக்க முறைமையும் தயாரான நிலையில் இருப்பதற்குரிய நிரல்கள் இந்தக் கோப்பினில் எழுதப்பட்டிருக்கும்.

autofit : தானாகப் பொருந்தவை

autoflow : முன்னோட்டம் : ஒரு பக்கத்திலிருந்து அடுத்த பக்கத்திற்குப் போதல் அல்லது வரை கலை உருவத்தைச் சுற்றி வரிகளைப் பொருத்துதல்.

autofont : ஆட்டோ ஃபாண்ட் : தன்னியல்பு எழுத்துரு : தானே பயிற்சியளிக்கும் ஓ. சி. ஆர் பலதரப்பட்ட ஆவணங்களை விரைவாகவும் துல்லியமாகவும் படிக்க வசதியான பல்வேறு வகையான எழுத்தமைப்புகளுக்கேற்ப இது தன்னை சரி செய்து கொள்கிறது.

auto form : உடனடிப் படிவம்.

autohide : தானாக மறைதல்.

auto indexing : தானியங்குப் பட்டியலிடல் : முறைமைப் பட்டியலிடுதல். கூடுதல் தகவல்களை, தரப்பட்டுள்ள முகவரிகளில் ஏதாவது ஒன்றில் கூடுதல் இணைப்பைச் சேர்த்தல்.

auto - loader : தானியங்கு ஏற்றி : சிலவிசை கணினியை பலகைகளில் உள்ள விசை. கணினியை செயலுக்குத் தூண்டுவது. முக்கியமாக இயக்க முறைமையை கணினியில் உள்சேமிப்புப் பகுதியில் சேர்த்து கணினி அமைப்பை இயக்கத் தொடங்குகிறது.

auto mata : தானியக்கக் கொள்கை  : இயக்கக் கோட்பாடுகள், தானியங்குக் கருவிகளைப் பயன்படுத்துதல் பற்றிய கல்வியுடன் தொடர்புடைய கொள்கை.

automated data processing தானியங்குத் தரவு செயலாக்கம் : குறைந்தபட்ச மனித முயற்சி மற்றும் இடையீட்டுடன், தரவுகள் கையாளப்படும். பெரும்பாலும் தானே ஒழுங்குபடுத்திக் கொள்கிற முறை.

automated flowchart : தானியங்கு பாய்வு நிரல்படம் : கணினி கட்டுப்பாட்டில் உள்ள அச்சிடு கருவி அல்லது வரை கருவியினால் வரையப்படும் நிரல் படம்.

automated office : தானியங்கு அலுவலகம் : அலுவலகச் சூழலில் கணினிகள் அலுவலக மின்னணுக் கருவிகள் மற்றும் தொலைத் தகவல் தொடர்புத் தொழில் நுணுக்கம் ஆகியவை இணைவதன் விளைவு. மின்னணுவியல் அலுவலகம் என்பதைப் பார்க்கவும்.

automatic : தானியங்கி : சில குறிப்பிட்ட சூழல்களில் இயக்குவோரின் இடையீடு இல்லாமல் இயங்குகிற நடைமுறை அல்லது கருவி தொடர்பானது.

automatic abstract : தானியங்கிச் சுருக்கம் : ஒரு ஆவணத்தில் இருந்து முக்கிய சொற்களை நிரலே சுருக்கித் தருவது.

automatic backup : தானியங்கு காப்பு நகல்.

automatic carriage : தானியங்கு நகர்த்தி : தட்டச்சுப் பொறி அல்லது அச்சிடு கருவி ஒன்றுக்கான கட்டுப்பாட்டுப் பொறியமைவு. அது தானே காகிதம் நகர்த்தல், சொற்களுக்கு இடைவெளி தருதல், வரித்தாள் காகிதத்தை வெளியேற்றுதல் ஆகியவற்றைக் கட்டுப் படுத்துகிறது.

automatic carriage return : தானியங்கு நகர்த்தி திரும்பல் :

automatic check : தானியங்குச் சரிபார்ப்பு : ஓர் ஆவணத்திலுள்ள சொற்பிழை, இலக்கண பிழைகளை, நிரல், தாமாகவே சரி பார்த்தல்.

automatic coding : தானியங்கி குறிமுறையாக்கம் : மொழிமாற்றி போன்ற ஒரு நிரலைப் பயன்படுத்தி சங்கேதக் குறியீட்டிலிருந்து எந்திரக் குறியீட்டை உருவாக்குதல்.

automatic computer : தானி யங்கு கணினி : ஒரு குறிப்பிட்ட வேலையை செயல்படுத்தும் கணினி. நிரல் தொகுப்பை மாற்றுதல் தவிர வேறு மனிதக் குறுக்கீடு இல்லாமல் செயல்படுத்த வல்லது.

automatic controller : தானியங்கு கட்டுப்படுத்தி : உணர் சாதனம் மூலம் வரும் சமிக்கைளை ஏற்றுக் கொண்டு, ஒழுங்குபடுத்தி, தரவுகளை ஒப்பிட்டு தேவையான திருத்தங்களைச் செய்யும் திறனுள்ள ஒரு கருவி அல்லது சாதனம்.

automatic data processing : தானியங்குத் தரவுச் செயலாக்கம் : தரவுகளின் மீது எந்திரங்களைப் பயன்படுத்தி, செயலாக்கி விடைபெறுவது. automatic dictionary : தானியங்கு அகராதி; தானியங்கு அகரமுதலி.

automatic digital network : தானியங்கு இலக்கமுறை பிணையம்.

automatic error correction : தானியங்கு பிழை திருத்தம் : தரவு அனுப்புதலில் ஏற்படக் கூடிய அல்லது அமைப்பிலேயே ஏற்படக் கூடிய தவறுகளைக் கண்டுபிடித்து சரி செய்யும் உத்தி.

automatic feature negotiation : தானியங்கு ஏற்புத் தன்மை : எதிர்முனையில் உள்ள மோடெத்தின் வேகம், பிழை கட்டுப்பாடு மற்றும் தகவல் சுருக்குதல் முறைக்கேற்பத் தன்னை சரி செய்து கொள்ளும் மோடெத்தின் திறன்.

automatic hardware dump : தானியங்கு வன்பொருள் திணிப்பு.

automatic hyphenation : தானியங்கி ஒட்டுக்குறியமைத்தல் : சொற்களின் இடையில் தானாகவே சிறுகோடு அமைக் கும் தன்மை. சொல் செயலி மற்றும் பக்க வடிவமைப்பு மென்பொருள்களில் அதிகம் காணப்படுவது.

automatic interrupt : தானியங்கு இடைமறிப்பு : தானியங்கு குறுக்கீடு.

automatic loader : தானியங்கு ஏற்றி : வன்பொருள் இயக்கத்தைத் தொடங்கி வைக்கும் நிரல்.

automatic message switching : தானியங்குச் செய்தி இணைப் பாக்கம்.

automatic message switching : தானியங்குச் செய்தி இணைப் பாக்கம்.

automatic network switching : தானியங்கு பிணைய இணைப் பாக்கம்.

automatic pagination : தானியங்கி பக்கமமைத்தல் : செய்தி வரிகளைப் பக்கவாரியாகத் தானாகவே பிரிக்கும் தன்மை. சொல்செயலி மற்றும் பக்க வடிவமைப்பு மென்பொருள்களில் காணப்படுவது.

automatic programming தானியங்கு நிரலாக்கம் : 1. நிரல் ஒன்றைத் தயாரிப்பதில் சில நிலைப் பணிகளைச் செய்யக் கணினி மூலமே நிரலை உருவாக்குதல் 2. எந்திர மொழி நிரல் ஒன்றை குறியீட்டுத் தொகுப்பின் வழிகாட்டுதலின் பேரில் தயாரித்தல். automatic quality control : தானியங்கு தரக் கட்டுப்பாடு : செயலாக்கப்படும் பொருளின் தரத்தை, ஏற்கெனவே நிர்ண யிக்கப்பட்ட தர அடிப்படையில் சோதித்து;நிர்ணயிக்கப்பட்ட தரத்துக்கும் குறைவாக இருக்கு மானால், சரி செய்வதற்கான நட வடிக்கையினை மேற்கொள் வதற்கான உத்தி.

automatic recharge : தானியங்கு மறு மின்னேற்றம்.

automatic recovery programme : தானியங்கு மீட்பு நிரல் : வன்பொருள் செயலிழத் தலின்போது கட்டுப்பாட்டை ஏற்றுக்கொண்டு கணினியை இயங்க வைக்கும் ஒரு நிரல்.

automatic reformating : தானியங்கு மறுவடிவாக்கம் : சொல் செயலியில் மாற்றங்களை ஏற்று வரிகளைத் தானாகச் சரிசெய்து கொள்ளல்.

automatic scrolling : தானியங்கு உருளல் : ஒரு நீண்ட ஆவணம் கணித் திரையில் கீழ் மேலாக அல்லது மேல் கீழாக உருண்டு செல்லல்.

automatic shutdown : தானியங்கு பணி நிறுத்தம் : ஒழுங்கு முறைப்படி பிணையம் (Network) ஒன்றை அல்லது கணினியின் செயல்பாட்டை முழுமையாக ஒழுங்கான முறையில் நிறுத்துவதற்கான மென்பொருள் ஒன்றின் திறன்.

automatic system reconfiguration : தானியங்கு முறைமை மறுதகவமைப்பு : ஒரு கணினியில் புதிதாக ஒரு வன்பொருளையோ மென்பொருளையோ சேர்க்கும்போது அல்லது மாற்றும்போது கணினி முறைமை தானாகவே தகவமைத்துக் கொள்ளுமாறு செய்தல்.

automatic tag reader : தானியங்கிப் படிப்பி : வட்டமான ஒட்டைகள் உடைய துளையிட்ட அட்டைகளைப் படித்தறியும் ஒரு சாதனம்.

automatic teller machine (ATM) : தானியங்கிப் பணப் பொறுப்பு எந்திரம் : வங்கி ஒன்றின் முனையம். அது வாடிக்கையாளருக்கு 24 மணி நேர வைப்பு மற்றும் திரும்பப்பெறும் சேவைகளை வழங்குகிறது. வங்கிக் கணினியுடன் இணைக்கப்பட்ட சிறப்பு நோக்கமுடைய கருவி. தானியங்கிக் கருவியை வாடிக்கை யாளர் இயக்க, ஒரு பிளாஸ்டிக் அடையாள அட்டையைச் செருகி, சிறப்பு அனுமதிக் குறியீட்டை குறிப்பிடுகிறார். இதன்மூலம் பணம் எடுக்கவும் தன் கணக்கு பற்றிய விவரங்களை அறியவும் முடியும்.

automatic typewriter : தானியங்கு தட்டச்சுப்பொறி.

automatic verifier : தானியங்கு சரிபார்ப்பி.

automation : தானியங்கு முறை ;தானியங்கி : 1. நடைமுறை ஒன்றை தானியங்கு முறையில் செயல்படுத்துதல், 2. கருவி அல்லது நடைமுறை அல்லது முறைமையினை மனித நோக்கு, முயற்சி அல்லது முடிவுக்கு மாற்றாக, பொறியமைவு அல்லது மின்னணுவியல் கருவி மூலம் தானியங்கு முறையில் கட்டுப்படுத்தும் செயல்.

automonitor : தானியங்கு கண்காணிப்பி : 1. கணினி நடவடிக்கைகளின் கணினிப் பதிவேடு. 2. கணினி ஒன்றின் செயல்பாட்டு நடைமுறைகளை பதிவு செய்யும் கணினி மென்பொருள்.

auto outline : தானியங்கு சுற்றுக் கோடு

auto pilot : தானியங்கு விமானி : விமானம் ஒன்றை அல்லது விண்வெளிக் கலத்தை பறக்கச் செய்ய உதவும் கருவி.

AutoPlay : தானியக்கம் : குறுவட்டு இயக்ககத்தில் ஒரு குறுவட்டு வைக்கப்பட்டவுடன் தானாகவே இயங்குமாறு அமைக்கப்பட்டுள்ள ஒரு வசதி, விண்டோஸ் 95/98 இயக்க முறைமையில் உள்ளது. அந்தக் குறுவட்டில் Auto - Run-INF என்னும் ஒரு கோப்பு இருக்க வேண்டும். குறுவட்டு, இயக்ககத்தில் செருகப்பட்டவுடன், விண்டோஸ் இக்கோப்பினைத் தேடும். (அவ்வாறு தேடும்படி நாம் முன்பே விண்டோசுக்கு அறிவுறுத்தியிருக்க வேண்டும்). அக்கோப்பு இருப்பின் அதில் குறிப்பிட்டுள்ள கட்டளைகளின்படி விண்டோஸ் செயல்படும். பெரும்பாலும் கணினியின் நிலைவட்டில் ஒரு பயன்பாட்டுத் தொகுப்பை நிறுவுவதற்கான கட்டளையாக இருக்கும். ஒரு கேட்பொலிக் குறுவட்டினைச் செருகியவுடன் விண்டோஸ், பாடலைப் பாட வைக்கும் பயன்பாட்டை இயக்கி, குறு வடடிலுள்ள முதல் பாடலை தானாகவே பாட வைக்கும்.

autopolling : தானியங்கு சோதனை : தானியங்கு பதிவு முறை. இம்முறையில் கணினி பிணையம் ஒன்றின் முனையங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில், தகவல்களை அனுப்பத்தயார் நிலையில் உள்ளனவா என்பதை அறிய சோதிக்கப்படுகின்றன. கணினி பிணையம் ஒன்றில் வன்பொருளும் மென்பொருளும் இணைந்து இச்சோதனையை மேற்கொள்கின்றன.

auto - redial : தானியங்கு மறு சுழற்றி : அழைக்கப்பட்ட தொலைபேசி கிடைக்கும்வரை மீண்டும் எண் சுழற்றுவதற்கான மோடெம் ஒன்றின் பண்புக்கூறு.

auto - repeat : தானியங்கு திரும்பசெயல் : தானியங்கு மீள் செயற்பாடு : சில விசைப் பலகைகளின் பண்புப்படி சில விசைகளை அழுத்தினால் அவற்றின் செயல்கள் தானியங்கு முறையில் மீண்டும் செய்யப்படுகின்றன.

auto-restart : தானியங்கு மீள் தொடக்கம்; தானியங்கு தொடக்கம் : கருவி பழுதுபட்டாலோ மின்சாரம் தடைப்பட்டாலோ மீண்டும் சீராகும் பொழுது பணிகளைத் தொடரத் தயார் நிலையை அடைவதற்கான நடவடிக்கைகளைத் தானியங்கு முறையில் நிறைவேற்றுவதற்கான கணினி ஒன்றின் திறன்.

auto resume : தானே தொடர்ந்தல் : கணினியில் ஒரு இடத்தில் நிறுத்தி விட்டுப் பின்னர் தொடர்ந்து அனுமதிக்கும் தன்மை. பயன்பாடுகளை இரண்டாவது தடவை மேலேற்றத் தேவையில்லை. நினைவு விவரங்கள் வட்டில் சேமிக்கப்பட்டோ அல்லது மின்சார பேட்ரி மூலம் தயார் நிலையில் வைக்கப்பட்டோ இருக்கும். மடிக் கணினி மற்றும் கையேட்டுக் கணினிகளில் இத்தன்மை பெரும்பாலும் காணப்படும்.

autosave : தானியங்கிச் சேமிப்பு : பயனாளர் தலையிடாமல் தொடர்ச்சியான இடைவெளிகளில் தகவல்களை வட்டில் சேமித்தல்.

autoscore : தானே கோடிடல் : சொல் செயலியில், எழுதப்பட்ட பகுதியில் அடிக்கோடிடுவதற்கான ஆணை.

autoserve : தானியங்கு வழங்கல்.

autoshapes : உடனடி வடிவங்கள்.

autosizing : தானே அளவமைத்தைல்  : ஒரு அமைப்பிலிருந்து வேறு ஒன்றுக்கு மாறும்போது அதே செவ்வக உருவத் தோற்றத்தை வைத்துக் கொள்ளும் முகப்பின் திறன்.

autostart : தானே தொடங்குதல் : சில வணிக நுண் கணினிகளில் ரோம் நினைவகத்தில் சேமிக்கப்பட்டுள்ள ஒரு குறியீடு, கணினியை இயக்கியவுடன் இது இயக்க முறைமையை மேலேற்றி உடனே செயல்படத் தயாராக்கும். இவ் வசதியை விளக்கும் சொல் Turnkey.

autostart routine : தானே தொடங்கும் நிரல்கூறு  : கணினியில் அமைக்கப்பட்ட நிரல்கள் கணினியை இயக்கத் தொடங்கியவுடன் தாமே செயல்படத் துவங்கும். கணினி நினைவகத்தைச் சோதித்தல் போன்ற கண்டறி சோதனைகளை நடத்தி, இயக்க முறைமையை ஏற்றி கட்டுப்பாட்டை அதற்குக் கொடுக்கும்.

auto run : உடனடிக் கூட்டல்.

auto text : உடனடி உரை

autotrace : தானியங்கு எல்லை வரைவு; தானியங்கு ஒரம் வரைதல் : படவரைவு நிரல்களிலுள்ள ஒரு வசதி. ஒரு துண்மிப்பட (பிட் மேப்) உருவப்படத்தை ஒரு பொருள்-நோக்கு (object-oriented) படமாக மாற்ற அதன் ஓரங்களில் கோடு வரைகிறது.

Α/UΧ : ஏ/யூஎக்ஸ் : பல் பயனாளர், பல்பணி யூனிக்ஸ் இயக்க முறைமையின் ஒரு வடிவம். ஆப்பிள் கம்ப்யூட்டர் நிறுவனத்தின் படைப்பு. ஏடி&டி யூனிக்ஸ் சிஸ்டம்V வெளியீடு 2. 2 இயக்க முறைமையை அடியொற்றி உருவாக்கப்பட்டது. பல புதிய வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. பல்வேறு மெக்கின்டோஷ் கணினிகளில் செயல்படுமாறு வடிவமைக்கப்பட்டது. மெக்கின்டோஷின் பல்வேறு சிறப்புக்கூறுகளும் ஏ/யூஎக்ஸில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக, மெக்கின் டோஷ் டூல்பாக்ஸ் வசதி இதில் உண்டு. இதன்மூலம், பயனாளர்கள், வரைகலைப் பணிச்சூழலை (Graphical User Interface) பெறமுடியும் .

AUX : ஏயூஎக்ஸ் : கணினித் துணைச் சாதனங்களுக்குரிய தருக்கமுறைச் சாதனப் பெயர். எம்எஸ் டாஸ் இயக்க முறைமையில் வழக்கமான துணைச் சாதனத்துக்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட பெயர். பெரும்பாலும் இப்பெயர் கணினியின் முதல் தொடரியல் துறைக் குறிக்கும் காம் (COM1) என்றும் இதனை அழைப்பர்.

auxiliary equipment : துணை நிலைச் சாதனம் : மையச் செயலகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் இல்லாத கருவி.

auxiliary function : துணை நிலைச் செயல் : தானியங்கு எந்திரக் கருவிக் கட்டுப்பாட்டில், செயல்படு கருவி ஒன்றின் வேகக் கட்டுப்பாடு அல்லது எந்திரத்தின் வெட்டுக் கருவியின் கட்டுப்பாடு நீங்கலாக பிற செயல்கள். எண்ணெயிடல், கருவியைக் குளிர்வித்தல் முதலியன மாதிரித் துணைச் செயல்களாகும். auxiliary memory : துணை நிலை நினைவகம்.

auxiliary operation : துணைச்செயல்பாடு : மையச் செயலகத்தின் கட்டுப்பாட்டில் இல்லாத கருவியினால் செய்யப் படும் செயல்பாடு.

auxiliary speakers : துணை நிலை ஒலிப்பிகள்.

auxiliary store : துணை நிலைச் சேமிப்பு.

auxiliary storage : துணை நிலை சேமிப்பகம் : வட்டு, நாடா போன்ற சேமிப்பகங்களைக் குறிக்கின்றது. கணினியின் நுண்செயலி நிலையா நினைவகத்தைப் போன்று இவற்றை நேரடியாக அணுகுவதில்லை. தற்போதைய வழக்காற்றில் இத்தகையதுணைநிலை சேமிப்பகங்கள் வெறுமனே சேமிப்பகம் என்றோ, நிலையான சேமிப்பகம் என்றோ அழைக்கப்படுகின்றன. நுண் செயலி தற்காலிகச் சேமிப்பகமாய் நேரடியாகப் பயன்படுத்திக் கொள்ளும் நிலையா நினைவக (RAM) சிப்புகள் வெறுமனே நினைவகம் என்றே குறிக்கப்படுகின்றன.

available list : கிடைக்கும் பட்டியல் : ஒதுக்கப்படாத நினைவகப் பகுதிகளின் பட்டியல் என்றும் அறியப்படும்.

available point : கிடைக்கும் இடம் : கணினி முகப்பில் திரையில் உள்ள ஒரு இடம்.

Availability : கிடைக்கும் நிலை : குறிப்பிட்ட செயலுக்கான மணி நேரத்துக்கும், வன்பொருளின் சரியான இயக்க நேரத்துக்கும் உள்ள விகிதம். இதனை செயலாக்க விகிதம் என்று பெரும்பாலும் கூறுவதுண்டு.

availabłe time : கிடைக்கும் நேரம் : கணினி ஒன்று பயன்படுத்துவதற்கு கிடைக்கும் நேரம்.

available machine : கிடைக்கும் எந்திரம்.

available machine time : கிடைக்கும் எந்திர நேரம்.

available memory : கிடைக்கும் நினைவகம்.

avatar : அவதாரம் : சில வகை இணைய அரட்டை அறைகள் போன்ற மெய்நிகர் நடப்புச் சூழல்களில் பயனாளரின் வரை கலை வடிவிலான தோற்றம் இவ்வாறு அழைக்கப்படுகிறது. மனிதரின் இருபாலரில் ஒருவருடைய பொதுப்படையான படம் அல்லது அசைவூட்டம், பயனாளரின் ஒளிப்படமாகவோ கேலிச் சித்திரமாகவோ இருக்கலாம். ஒரு விலங்கின் படமாகவோ அசைவூட்டமாகவோ கூட இருக்கலாம். பயனாளர் தன்னுடைய மெய்நிகர் நடப்புத் தோற்றமாகக் காட்டுவதற்குத் தேர்வு செய்த ஒரு பொருளாகவும் இருக்கலாம்.

average : சராசரி : புள்ளி விவர அல்லது எண் இலக்கச் சராசரி.

average latency : சராசரி உள்ளுறை சுணக்கம் : நேரடி அணுகு சேமிப்புச் சாதனத்தில் முழு சுழற்சியில் பாதியில் பதிவுப் பரப்பில் சுற்றிவர ஆகும் நேரம்.

average search length சராசரித் தேடு நீளம் : ஒரு குறிப்பிட்ட முகவரியைக் கண்டு பிடிக்க சராசரியாகத் தேவைப்படும் நேரம் அல்லது செயல்களின் எண்ணிக்கை.

AVI : ஏவிஐ : கேட்பொலி, ஒளிக்காட்சி பிணைந்தது என்று பொருள்படும் Audio Vedio interleaved என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். விண்டோஸ் இயக்க முறையில் பயன்படுத்தப்படும் ஒரு பல்லூடகக் கோப்பு வடிவம். ஒலி மற்றும் ஒளிக்காட்சி இவ்வகைக் கோப்புகளில் பதியப்படுகின்றன. மைக்ரோ சாஃப்டின் ரிஃப் (RIFF- Resource Interchange File Format) தொழில் நுட்பத்தைப் பின்பற்றியது. avionics : வான் மின்னணுவியல் : விமானங்கள் மற்றும் விண்கலங்களில் பயன்படும் மின்னணுக் கருவியமைப்புகள் மற்றும் கட்டுப்பாட்டுக் கருவிகள்.

avoiding data repetition : தகவல் சுழற்சியைத் தவிர்த்தல்.

. aw : . ஏடபிள்யூ : இணையத்தில் அருபாவைச் சேர்ந்த இணைய தளங்களைக் குறிக்கும் பெரும் புவிப் பிரிவு களப்பெயர்.

AWC : ஏடபிள்யூசி : கணிப் பணியில் பெண்களுக்கான சங்கம் : Association for Women in Computing என்பதன் குறும்பெயர். கணினித் தொழிலில் ஈடுபட்டிருப்போரைக் கொண்ட சங்கம். கணினித் தொழிலில் பெண்களுக்கான தொழில் திறனை வளர்த்தல்; கணினித் தொழிலில் ஈடுபட்டிருப்போரிடையே தகவல் தொடர்பை ஊக்குவித்தல் இதன் முக்கிய நோக்கமாகும்.

awk , ஆக் , ஏடபிள்யுகே : Aho, Weinberger Kernighan atasil 19, 331 சுருக்கம். அஹோ, வெயின்பர்கர், கெர்னிகன் ஆகியோர் 1977இல் உருவாக்கிய யூனிக்ஸ் செயல்தள மொழி,

axes : அச்சுகள் : ஒரு இரட்டைப் பரிமாண ஒருங்கிணைப்பு முறைமையில் செங்குத்து (Y) மற்றும் படுக்கைக் குறியீடு (X) களாகப் பயன்படுத்தப்படும் கோடுகள்.

axis : அச்சு சுழலச்சு  : இரு பரிமாண வரைபடங்களில் பயன்படும் கிடைமட்ட, செங்குத்து அச்சுகள். முறையே, x-அச்சு, y -அச்சு என்று குறிக்கப்படுகின்றன. இவற்றை அடிப்படையாகக் கொண்டு அளக்கப்படும் ஆயத்தொலைவுகளைக் (coordi - nates) கொண்டு படங்கள் வரையப்படுகின்றன. முப்பரிமாண ஆயத்தொலைவு அமைப்பில் மூன்றாவது அச்சு, உயர/ஆழ அச்சாக இருக்கும். z-அச்சு எனப்படும்.

axons : ஆக்சன்கள் : மனித மூளையில் ஒரு நரம்பணுவிலிருந்து இன்னொரு நரம்பணுவுக்கு இந்த நரம்புகள் மூலம் வெளியீடுகள் அனுப்பப்படும்.

. az : ஏஇஸ்ட் : இணையத்தில் அஜெர்பெய்ஜான் நாட்டைச் சேர்ந்த இணைய தளங்களைக் குறிக்கப் பயன்படும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

azimuth : அஸிமத் : ஒரு ஆதாரப்பகுதியில் இருந்து கடிகாரப் போக்கில் செல்லும் கோணத்தை அளக்கும் கருவி. வழித்தடத்தில் உள்ள படி / எழுது முனைகளின் சரியான அமைப்பை இது சோதிக்கும்.
B

b : பி : 'பைட்' (byte) அல்லது 'பாட்' (baud) என்பதன் சுருக்கப் பெயர். இருப்பகத்தைக் குறிப்பிடும் இடங்களில் 'பைட் (எண்மி) என்றும் தகவல் தொடர்புகளில் குறிப்பிடும்போது 'பாட் (செய்தி வேகம்) என்றும் உணர்த்தும் கேபி (KB) - 1000 பைட்டுகள் அல்லது பாட் (தொழில்நுட்ப அடிப்படையின்படி 1கே (1K) என்பது 1024 பைட்டுகளைக் குறிக்கும்).

babbage, charles : பாபேஜ், சார்லஸ் : (1792 - 1871) ஆங்கிலேய கணிதவியலாளர்; கண்டு பிடிப்பாளர். 20 பதின்மப் புள்ளிகள் வரை மடக்கை எண் (லாகர்தம்) மூலம் கணக்கிடக் கூடிய ஒரு வேறுபாட்டு எந்திரத்தை வடிவமைத்தவர். இலக்கமுறை கணிப்பொறிக்கு முன்னோடியாக விளங்கும் 'பகுப்பு' எந்திரத்தையும் உருவாக்கியவர். பாபேஜ் காலத்தில் அவரது எந்திரங்களை வெற்றிகரமாக உருவாக்குவதற்கு வேண்டிய பொறியியல் தொழில் நுட்பங்கள் முன்னேறியவையாக இல்லை.

babble : பிறழவு : ஒரு அமைப் பின் பெருமளவு வழித்தடங்களில் ஏற்படும் குறுக்கீட்டுப் பேச்சு.

bachman diagram : பக்மன் வ்ரைபடம்.

back : முந்தைய

backbone : முதுகெலும்பு : அடியாதாரம் : 1. சிறு சிறு பிணையங்களை ஒருங்கிணைத்து அவற்றுக்கிடையே தகவல் போக்குவரத்தை ஏற்படுத் தும் பெரும் பிணையம். இணையத்தில் ஒவ்வொரு நாட்டிலுமுள்ள இத்தகைய முது கெலும்புப் பிணையங்கள் ஒருங் கிணைக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவில் மட்டும் ஆறு முது கெலும்புப் பிணையங்கள் உள்ளன (எ. டு : sprint, MCI) ஆயிரக்கணக்கான மைல்கள் பரப்பிலுள்ள பகுதிகள் துண்அலை (microwave) தடங்கள், நிலத்தடி, கடலடிக் கேபிள்கள் மற்றும் செயற்கைக் கோள்களால் இணைக்கப்படுகின்றன. 2. இணையத் தகவல் தொடர்பில் பெருமளவு தகவல் பொட்டலப் பரிமாற்றங்களைச் செயல் படுத்துகின்ற சிறிய பகுதிப் பிணையங்கள். 3. ஒரு பிணையத்தில் தகவல் தொடர்புப் போக்குவரத்துக்கு ஆதாரமாக விளங்கும் இணைப்புக் கம்பிகள். ஒரு குறும்பரப்புப் பிணை யத்தில் பாட்டை (Bus) என்பது முதுகெலும்பாக விளங்கும்.

backbone cabal : முது கெலும்புமறை குழு : இணையத்தில் யூஸ்நெட் செய்திக் குழுக்களின் படி நிலை அமைப்பை அறிவித்தல் மற்றும் புதிய செய்திக் குழுக்களை உருவாக்கல் ஆகிய வற்றுக்கு பொறுப்பான பிணைய நிர்வாகிகளின் குழுவைக் குறிக்கும் சொல். இப்போது அத் தகைய மறைகுழுக்கள் இல்லை.

back door : பின்வாசல் : பின் கதவு : ஒரு நிரல் அல்லது முறைமையின் பாதுகாப்புக் கட்டுப் பாடுகளை மீறி உள்ளே நுழையும் வழி. நிரலாக்க வல்லுநர்கள் உருவாக்கிக் கொண்டிருக்கும் மென்பொருள்களில், பிழை களைக் கண்டறியும் நோக்கில் இத்தகைய பின்வாசல்களை அமைப்பர். பின்வாசல் வசதி நிரலர் தவிர ஏனையோர்க்கு தெரிந்துவிட்டாலோ, மென் பொருள் வெளியிடப்படுவதற்கு முன்பு அத்தகைய பின் வாசல் வசதிகள் நீக்கப்படாவிட்டாலோ (கவனக் குறைவாக), பாதுகாப்புக்கு பங்கம் ஏற்பட்டுவிடும்.

backdrop : பின்னணி : பின்னணித் தோற்றம். சிடி ஐ-யில் மற்ற தோற்றங்கள் தெளிவாகத் தெரியும்போது பின்னணி தோற்றப் பகுதியும் முழுவதும்தெரியும்.

back end : பின்னிலை : பின்னணி; பின்அமைவு : 1. கிளையன்/வழங்கன் (Client/Server) பயன்பாடுகளில், வழங்கு கணினியில் செயல்படும் நிரலின் பகுதி. (Client/Server Architecture, Front End என்பதனுடன் ஒப்பிடுக). 2. மொழிமாற்றி (compiler) யின் ஒரு பகுதி. மனிதர்களுக்குப் புரிகிற மூல நிரல் வரைவை (source code), எந்திரத்துக்குப் புரிகிற குறிநோக்கு வரைவாக (object code) மாற்றியமைக்கும் பகுதி.

back-end case : பின்முனை எழுத்து : நிரல் குறியீடுகளை உருவாக்கும் எழுத்துக் கருவிகள்.

back end operation : பின் முனைப் பகுதிகள்; பின்னிலைப் பணிகள்; பின் இயக்கப் பணிகள்.

back-end processor : பின் நிலைச்செயல் : தரவுத் தள எந்திரம் (Data base machine) போன்றது. மையச் செயலகத்திற்கும் நேரடி அணுகு சேமிப்புச் சாதனங்களில் சேமித்து வைக்கப்பட்டுள்ள தரவுத் தளங்களுக்கும் இடை முகமாகப் பணியாற்றும் கணினி.

backfilling : பின்புற நிரப்புதல் : 8086 /88 மற்றும் 286 பி. சி. க்களின் வழக்கமான நினைவகத்திற்குப் பதிலாக இஎம்எஸ் நினைவ கத்தை ஒதுக்குவது. மூல தாய்ப் பலகை அட்டை சிப்புகள் செயலிழக்கின்றன. இஎம்எஸ் சிப்புகளுக்குக் கீழ் நினைவு முகவரிகள் இடப்படுகின்றன. பின்புற நிரப்புதலின் மூலம் டெஸ்க்வியூ போன்ற பல்பணி நிரல்கள் இயங்கவும், விரிவாக்கப்பட்ட நினைவகத்தில் ஒரே நேரத்தில் கூடுதல் நிரல்களை அமைக்கவும் முடியும்.

background:பின்புலம்;பின்னணி:1. பன்முகக் கட்டளையிடலில் குறைந்த முன்னுரிமையுள்ள நிரல் செயல்படுத்தும் சூழல். 2. காட்சித் திரையில் காட்டப்பட உருக்களோ வரை பட முன்புலங்களோ இல்லாத திரைப்பகுதி.

background application:பின் புலப் பயன்பாடு.

background colour:பின்னணி வண்ணம்;பின்புல நிறம்: காட்சித்திரையின் பின்னணி நிறம். காட்சித் திரைதுடைக்கப்பட்ட பிறகு ய்ந்த நிறத்துக்குத் திரை திரும்பும்.

background communication:பின்புலத் தகவல் தொடர்பு

background job:பின்புலப் பணி.

background ink:பின்புல மை:அதிகம் பிரதிபலிக்கும் மை. வருடுபொறி கண்டுபிடிக்க முடியாத வகையில் படிவத்தின் பகுதிகளை இது அச்சிடும்.

background noise:பின்னணிண்இரைச்சல்:கம்பியிலோ,வழித் தடத்திலோ அல்லது மின்சுற்றிலோ வந்துசேரும் தொடர்பில்லாத, தேவையற்ற சமிக்கைகள்.

background operation:பின் புல இயக்கம்:ஒரு நிரல் இயங்கிக் கொண்டிருக்கும்போது ஏற்படும் துணைச் செயலாக்கம். ஒரு நிரலை மொழிமாற்றும் பணியைச் செய்யும்போது,அச்சுப்பொறிக்கும் தகவல் அனுப்பலாம். குறுக்கீடுகளைப் (Interrupt)பயன்படுத்தி பின்னணி இயக்கம் நடைபெறலாம்.

background printing:பின்புல அச்சிடல்;பின்னணி அச்சிடு முறை:ஒர் ஆவணத்தை அச்சிட அச்சுப்பொறிக்கு அனுப்பி விட்டு கணினியில் வேறுபணிகளை மேற்கொள்ளும் முறை.

background processing:பின்னணி செயலாக்கம்:முன்புலத்தில் ஒரு நிரல் செயல்படும் போது பின்னணியில் அதே நேரத்தில் வேறொரு நிரல் இயக்கப்படுவது.

background programme:பின்புல நிரல்:பல நிரல்களை ஒரே சமயத்தில் செயல்படுத்தும் கணினி அமைப்புகளில் உயர் முன்னுரிமை உள்ள நிரல்களைச் செயல்படுத்தத் தேவையில்லாதபோது செயல்படுத்தப் படும் நிரல். முன்புல நிரலுக்கு மாறானது.

background reflectance : பின்னணி பிரதிபலிப்பு : ஒரு எழுத்தைச் சுற்றி ஏற்படும் பிரதி பலிப்பை அளக்கும் ஒ. சி. ஆர் (OCR-Optical CharacterRecognition).

background tasks : பின்புலப் பணிகள்.

backing storage : தாங்கும் இருப்பகம் : பின்னர் பயன் படுத்துவதற்காக வட்டுகள் அல்லது நாடாக்களில் வைக்கப் பட்டிருக்கும் துணை நிலை நினைவகம்.

backing store : பின்தாங்கும் இருப்பு : கணினியின் முதன்மை நினைவகத்திற்கு பின்பலமாக இருந்து தாங்குகின்ற நினைவகம். துணை இருப்பகம் என்றும் அழைக்கப்படுகிறது.

backing-up : பின் ஆதரவு : மூலம் சேதமாகவோ அல்லது தொலைந்து போகவோ செய்யுமானாலும் உள்ளடக்கங்களை இழக்காமல் இருப்பதற்காக பின் ஆதரவு படிகளை ஏற்படுத்திக் கொள்ளல்.

backlash : பின் விளைவு : எந்திரமுறை செயல்பாட்டின் போது, தாங்குவதன் விளைவாக இரண்டு பல் சக்கரங்களைப் போன்ற சேர்ந்தியங்கும் பகுதிகளின் செயல்.

backline : பின் பகுதி : ஒரு அமைப்பின் அட்டைகளில் மின் சுற்றுகள் மற்றும் எந்திரப் பகுதிகள் இணைக்கப்படுவதுண்டு. இதில் முதன்மை மின்சுற்று அட்டைகள் பொருத்தப்படும். தாய்ப் பலகை என்றும் முறைமைப் பலகை என்றும் அழைப்பர்.

backlit : பின்னொளி : திரையின் பின்பக்கத்திலிருந்து ஒளி வருகின்ற எல்சிடி திரை. இதனால் பின்னணி பிரகாச மாகவும் எழுத்துகள் தெளிவாகவும் இருக்கும்.

back-lit display : பின்-ஒளி திரைக் காட்சி : திரைக்குப் பின்னால் ஒளிபடுமாறு அமைக்கப்பட்ட எல்சிடி திரைக் காட்சி. உருவங்கள் கூர்தெளிவாகவும், எழுத்துகள் நன்கு படிக்கும் படியும் இருக்கும். குறிப்பாக, சுற்றுப்புறம் மிகவும் ஒளியுடன் விளங்கும்போது இத்தகைய ஏற்பாடு பலன் தரும்.

back panel ; பின் பலகம் : கணினி பெட்டியில் வெளிப்புறச் சாதனங்களை கணினியுடன் இணைப்பதற்கான பல துளைகளுடன்கூடிய பின்புறப்பகுதி.

backplane : பின்தளம்.

backquote : பின்மேற்கோள் குறி.

back slash : பின்சாய்வுக் கோடு : விசைப்பலகையில் உள்ள ஒரு சிறப்புக் குறியீடு.

backspace : பின்னிடவெளி : காட்டியை (Cursor) இடதுபுற மாக ஒரு இடவெளிக்கு நகர்த்துகின்ற விசைப்பலகையின் செயல் பாடு. ஏற்கெனவே தட்டச்சு செய்யப்பட்டதை கணினியில் பதிவதற்குமுன் மாற்றம் செய்ய அனுமதிக்கிறது.

backspace character : பின் இட எழுத்து.

backspace key : பின்னிட வெளிவிசை (விரற் கட்டை).

backspace tape : பின் இட நாடா : ஒரு காந்த நாடாவை அது ஆரம்பித்த இடத்திற்கோ அல்லது பதிவேட்டிற்கோ திருப்பி அனுப்பும் செயல்பாடு.

backterium : இனப்பெருக்கி : கணினி நச்சு நிரலில் ஒரு வகை. தொடர்ந்து தன்னைத்தானே நகலெடுத்துக் கொள்ளும். இறுதியில் முழுக் கணினியையும் (சேமிப்பகம் முழுமையும்) இந்த நச்சு நிரலின் நகலே ஆக்கிரமித்திருக்கும்.

backtracking : பின்தேடல் : ஒரு பட்டியலை தலை கீழாகத் தேடும் செயல் முறை.

backup : காப்பு நகல்; பின் ஆதரவு; பின்படி ஆதார நகல் : மறுபடி : 1. வழக்கமாகப் பயன் படுத்தப்படும் செயல்முறைகள் அல்லது கருவிகளில் அதிக சுமை ஏற்றப்பட்டோ அல்லது பழுதடைந்தோ போகும் வேளையில் பயன்படுத்துவதற்காக, கிடைக்கக்கூடிய மாற்றுக் கருவிகள் அல்லது செயல்முறைகள் பற்றியது. 2. மூலம் தொலைந்து போகக் கூடும் என்பதற்காக

"https://ta.wikisource.org/w/index.php?title=கணினி_களஞ்சிய_அகராதி-2/C&oldid=1085111" இலிருந்து மீள்விக்கப்பட்டது