உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



'கந்தன் மேளமாம், பெரிய வைத்தி பாட்டாம்' 71 'வாருங்கள்' என்றார். தீட்சதரும் கை வேஷ்டியைக் கீழே போட்டுக்கொண்டு 'அப்பாடா,' என்று உட் கார்ந்தார். அய்யர் 'இப்பொழுதுதான் சாப்பிட்டாச் சாக்கும்' என, தீட்சதர் 'இத்தருவாய் ஆயிற்று' என் றார். பிறகு சற்று நேரம் மௌனம். பிறகு அய்யர், 'தேதி 13 ஆய்விட்டாற் போலிருக்கிறதே. சிறுகுளத் துக்கு எப்பொழுது பயணம்? நீங்கள் வருகிறீர்கள் அல்லவா?' என, தீட்சதர் வெற்றிலை போட்டு மென்று கொண்டே 'நான் வருகிறது சந்தேகந்தான். சனியன் ஒரு சிராத்தம் வந்து குறுக்கிட்டுக்கொண்டு இழவு கொடுக்கிறது. இல்லாவிட்டால் இங்கே என்ன சாதிக் கிறோம். போய்விட்டு வருவதை விடத்தான் என்ன?' என்றார். அதற்கு அய்யர் 'அடடா நீங்கள் அவ்வளவு தான் கொடுத்துவைத்தது. மூவாயிரம் ரூபாய் பிரத்தி யேகமாய் எடுத்துக் கட்டிவைத்துவிட்டானாம் கலியா ணத்துக்காக. கீவளூர் கந்தன் மேளமாம், அவனுக்கு 200 ரூபா பேசியிருக்கிறார்களாமே. பாட்டுக்கு ராக வையர்; பெரிய வைத்தி; பெரிய யுத்தம் நடக்கும், வேடிக்கை பார்க்கலாம் ; இதுபோக இன்னும் வந்து கோவிந்தசாமி ராவ் மிருதங்கத்துக்கு; அப்புறம் வந்து பிடிலுக்கு நடராஜன் : இதெல்லாம் சாதாரணமா யிருக்கும்; இவ்வளவும் போதாதென்று திருவாரூர் ராஜலட்சுமி சதிர்' என, தீட்சிதர் வெற்றிலையை விழுங் கிக்கொண்டு 'பேஷ் அவனுக்கென்ன மகாராஜன், லட்சப்பிரபு. ஒரேபெண், அதற்குக் கலியாணம்' என் றார். அய்யர் 'நீங்கள் தான் வரமாட்டேன் என்கிறீர் களே' என, தீட்சதர் உன்னைவிட எனக்குப் பத்துப் பங்கு ஆசையிருக்கிறது. ஆசையிருந்து என்ன பண்ணுகிறது? இந்த இழவு சிராத்தம் ஒன்று வந்து கழுத்தறுக்கிறது. நல்ல நாள் என்றால் அன்றைக்குத் தான் பெண்பெண்டாட்டிகள் 'தூரம்' என்று கொல் லையில் உட்காருவார்கள். அதுபோல வந்திருக்கிறது நமக்கு சனியன் பிடித்த இழவு. இரு , பார்ப்போம்.