உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



வேறொருவரையும் கல்யாணம் செய்து கொள்ள மாட்டேன் 69 பும் கலியாணம் செய்து கொள்ளமாட்டேன் என்று சொல்லுகிறதாம்' என்றான். சுப்பராயன் இப்பொழுது முதல் என்ன அறிவு! என்ன அன்பு!' என்று சொல்ல ஸ்ரீநிவாசன் சந்தோஷத்துடன் 'இந்தப் பெண் எனக் குக் கிடைக்குமானால் நான் அதிர்ஷ்டசாலிதான்' என்றான். ஸ்ரீநிவாசன் எவ்வளவு புத்திசாலியாக இருந்தா லும் சிறு குழந்தையானதினால் உலகத்தை அறியான். பெண்டாட்டியென்றால் 'பாக்குக்கொடுத்த பாக்கிய வதி, புஷ்பம் கொடுத்த புண்ணியவதி, சந்தனம் கொடுத்த சரஸ்வதி' என்ற இவ்வித எண்ணந் தவிர வேறொன்றும் அறிய அவனுக்கு வயது போதாது. ஆயினும், "காதலரிருவர் கருத்தொத்து ஆதரவுப்பட் -தே இன்பம்' என்ற சில உண்மைகளை அவன் புஸ்த கங்கள் மூலமாய் அறிந்திருந்தான். பாக்கியிருந்த பத்து நாளும் அவனுக்கு பத்து யுகமாகவே இருந்தன. பகல் வந்துவிட்டால் 'பொல்லாப் பகலே, போகாப் பொழுதே' என்று நிந்தித்துக்கொண்டு எப்பொழுது இரவு வருமென்று எதிர்பார்ப்பான். இரவு வந்துவிட் டால் 'செல்லா இரவே, சிறுகா இருளே' என்று நிந் தித்துக்கொண்டு எப்பொழுது விடியுமென்று ஏக்க முறுவான். எந்தப்பாடமானாலும் சரி, எந்தக் கணக் கானாலும் சரி, எல்லாம் கலியாணத்துக்குப் பிறகு பார்த்துக்கொள்ளலாமென்று போட்டுவிட்டான். இவ னுக்கும் சுப்பராயனுக்கும் ரிப்பன் பாக்கெட் பஞ்சாங் கத்தை வைத்துக்கொண்டு பொருத்தங்கள் பார்ப் பதும் (ஜோதிஷரிடம் கேட்க வெட்கம் ) அதிர்ஷ்ட சக்கிரங்களைச் சோதிப்பதுமே தொழிலாக இருந்தது. இப்படியாக நாள்களும் கழிய முகூர்த்தத்திற்கு இரண்டு நாளைக்கு முன் சிறுகுளம் போவதற்காக சுமார் இருபத்தைந்து வண்டிகள் ஸ்ரீநிவாசன் வீட்டு வாசலில் வந்து நின்றன.