உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



96 கமலாம்பாள் சரித்திரம் லவேயில்லை. அது ஸ்ரீநிவாசனுக்கு ஒருவிதத்தில் வருத் தத்தை உண்டுபண்ணினாலும் அவர்களுக்கு அந்த அசந்தர்ப்பமான கடிதம் காட்டப்படவில்லையென்ற எண்ணம் அவனுக்கு சிறிது ஆறுதலைக் கொடுத்தது. பிறகு அவர்களே எழுதினார்களென்ற சங்கதி வெளி யாய் விட்டது. மறுநாள் ஸ்ரீநிவாசன் சாப்பிடும்போது, சிற்சிலர் தவிர ஏறக்குறைய எல்லாப் பெண்களும் ஒருமித்து நின்றாலும் அவனுடன் ஒருவராவது பேசவில்லை. அதில் ஏதோ விசேஷமிருக்கிறது என்று கொஞ்சம் மனதில் பயமிருந்தாலும் விளையாட்டாய்க் கேட்பவன்போல் 'ஏது, இன்றைக்கு என்னம்மங்காள் முதலிய எல்லோ ரும் பேசாமடந்தையா யிருக்கிறது?' என, ஒருத்தி 'உன்னுடன் என்ன விளையாட்டு: நாளைப்பொழுது விடிந்தால் நீ எங்கேயோ நாங்கள் எங்கேயோ' என் றாள். மற்றொருத்தி 'நீதான் எங்களை யெல்லாம் விட்டு விட்டு ஊருக்குப்போகிறாயே, உன்னுடன் என்ன பேச்சு வைத்திருக்கிறது' என்றாள். மற்றொருத்தி பெருமூச்செறிந்து 'இந்த இரண்டு மூன்று நாளும் எவ்வளவோ சந்தோஷமாய் விளையாடி விட்டு நாளை எப்படிப்பொழுதுபோகும் என்று இப்பொழுதே ஏக்கமாயிருக்கிறது. இவ்வளவுதான். எத்தனை நாள் தான் சந்தோஷமாயிருக்கிறது!' என்றாள். இப்படி எல் லாரும் தான் ஊருக்குப்போகிற விஷயத்தைக்குறித்து உண்மையான விசனத்தை வெளியிட, ஸ்ரீநிவாச னுக்கு சாப்பிட்டு கொண்டிருக்கும் போதே தன்னை யறியாமல் கண்களில் ஜலம் வந்துவிட்டது. அடக்க அடக்க அதிகமாய் விசனம் மேலிட்டது. அவன் கண் ணீர் விட்டதைப் பார்த்து அவனுடன் விளையாடின ஸ்திரீகள் எல்லோரும் விம்மி விம்மி அழ ஆரம்பித்தார் கள். அங்கிருந்த கிழவிகளில் சிலர் நன்றாயிருக்கிறது கல்யாணமுமிதுவுமா அழுகிறதைப்பாரடி, அடி பைத்