134 கமலாம்பாள் சரித்திரம் கரியாப் போக' என்றிவ்வாறு கர்ச்சிக்கத் தலைப்பட் டாள். இவ்விதத் திருக்கூத்துகளுடன் பேயாண்டியை மதுரைக்கு உபசரித்து அழைத்துச்சென்று திரிபுரத் துள் ஒரு புரம் போன்ற கற்கோட்டை யொன்றில், காட்டில் திரியும் சிங்கத்தைக் கூட்டிலடைத்தாற் போல, அடைத்து அல்லும் பகலும் காலோயாது, கண் மூடாது, வாய் திறவாது, காவல் காக்கும்படி தக்க காவல்காரர்களை ஏற்படுத்தினார்கள். முத்துஸ்வாமி அய்யர் தானென்றும் தம்பியென் றும் பேதம்பாராமல் தன் கைப் பணத்தையே செல வழித்து தன் பெயராலேயே ' பிரியாது' கொடுத்து வேண்டிய ஏற்பாடுகளை நடத்திவிட்டு ஊருக்குத் திரும்பினார். நல்ல காரியம் ஒன்றை முடித்ததில் அவருக்கு உற்சாகம் கொஞ்சமதிகமாயிருந்தது. வீட்டு வாசலுக்கு வந்தவுடன் கலீர் கலீர் என்று சப்தம் செய்யும் சதங்கையணிந்த பாராசாரிக் காளைகள் கட்டிய தனது பெட்டி. வண்டியினின்றும் கீழேயிறங்கினார். தலையில் வெகு அழகான ஓர் சரிகை யங்க வஸ்திரத்தை ' குசால் ' கட்டுக் கட்டிக்கொண்டு கையில் வெள்ளிப் பூண் பிடித்த தடியேந்தி, காலில் ஜோடு மாட்டிக்கொண்டு தங்க அரைஞாணில் வெள் ளிச் சங்கிலி குலுங்க, வயிரக்கடுக்கன்களும், மரகத மோதிரங்களும், பளீர் பளீர் என்று டால்வீச, தனது கிரஹத்துள் பிரவேசிக்க அங்கே திண்ணையில் உட் கார்ந்திருந்த சிலர் குபீரெனவெழுந்து அவரை வெகு வணக்கமாய் வந்தனம் செய்தார்கள். இப்படி அவர் வரும்பொழுது பொன்னம்மாள் தன்னகத்து வாசலில் நின்று கொண்டிருந்தாள். அவர் வந்த வருகையையும், அவருக்கு நடந்த மரியாதையையும் பார்த்து அவ ளுக்கு உண்டான பொறாமைக்கு அளவில்லை. சூள் அது எத்தனை நாள் வாழ்வோ, எப்படியோ, ஓஹோ