உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



வைராக்கிய வெறி : உயிரில் வெறுப்பு 219 ஆபத்தாய் வர வேண்டுமா! கடவுளுக்குக் கண்ண விந்தா போய் விட்டது! அடா தெய்வமே!--- சுவா மியோ இல்லை யென்று தீர்ந்தது. இனிமேல் என்ன? இருந்தாலென்ன போனாலென்ன! இருட்டினவுடன் நாக்கைப்பிடுங்கிக் கொண்டு பிராணனை விட்டுவிடு கிறேன். இருக்கிறது ஒரு குட்டி, அந்தக் கழுதையை யும் இன்னொரு பயலுக்குத் தொலைத்தாய் விட்டது. தாயைப்போலே பெண். ஸ்ரீநிவாஸா ஜாக்கிரதை! என் னைப்போல மோசம் போகாதே. நன்றாய்ப்பொழுது விடிந்தது இன்றைக்கு ; போகட்டும், என் ஆயுசுக்குக் கடைசிநாளாகவாவது இருக்கிறதேயல்லவோ ; நல்ல நாள் தான். சந்நியாசமும் ஆச்சு கழுதையுமாச்சு. மொட்டையடித்துக் கொண்டு ஊரிலே பிச்சை யெடுத்துக்கொண்டு அப்படியாவது யாரைக் காப் பாற்ற வேண்டும்? கோவிலென்ன குளம் என்ன? எல்லாவற்றையும் நெருப்பைவைத்துக் கொளுத்து கழுதையை. கண்கள் நிறைந்த ஆகாயமே, உனக்குமா கண் தெரியவில்லை. உனது இடியோசைகள் எங்கே ஒளிந்துவிட்டன? இந்த வீணிழவுகளை ஒரு இடியில் தகர்த்தெரியமாட்டாயா!' என்று தனக்குள்ளேயே சொல்லிக்கொண்டு வழி நடந்தார். அன்று பகல் முழுவ தும் அவர் சாப்பிடவேயில்லை. இந்த வெட்கம் கெட்ட கட்டைக்கு சோறு வேறேயா! அந்த தட்டுவாணி முண்டையைத் தொட்ட கட்டையை எங்கே போட் டுக் கொளுத்தினாலும் பாவம் போகாதே. இந்தக் கட்டைக்குச் சோறு வேண்டுமா' என்று சொல்லிக் கொண்டு பகல் முழுவதும் ஒரு தோப்பில் விழுந்து கிடந்தார். 'பசி, நன்றாய்ப் பசி, வேணும் அந்தக் கட்டைக்குத் தண்ணீர் கூடக் கொடுக்கமாட்டேன்' என்று வைராக்கியமாய் நீர் கூடக் குடியாதிருந்தார். அந்தத் தோப்பில் குளிர்ந்த காற்று அடித்தது. சீ! கழுதை! இந்தக் காற்று யாருக்கு வேண்டியிருக் கிறது. இந்த உலகத்துப் போக்கிரிப் புழுக்களுக்குக்