உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



272 கமலாம்பாள் சரித்திரம் பிக்க வழி யோசித்துத் தன் கவிக்கடையை அவிழ்த்து விட்டார். அர்த்தமோ அர்த்தமில்லையோ அது அவருக்கு லட்சியமே யில்லை. இலக்கண விதியைக் கவனித்தே கட்டி வருகிறதில்லை. எமகம் திருபுக்குக் குறைந்த பாட்டு அவர் அபிப்பிராயத்தில் பாட்டே யில்லை .

  • " மலரிடைவைகும் மதியிலர்காள்

டுடுடுடுடுடுடுடு மலரிடைவைகும் மதியிலர்காள் டுடுடுடுடுடுடுடு' என்று டுகர வர்க்கத்திலும்,

  • " சேர்சிசூசா சீசுசச் சைசூ சோசாசு என்று சகர வர்க்கத்திலும் பாட்டுக்களை வாரிவீசத் துவக்கினார். அவர் இவ்வித வித்யா வெறியிலிருக்கும் போது இதுதான் சமயம் என்று கண்ட அந்தப் பண் டாரம் பேசிக்கொண்டே அவரை வழியைவிட்டு இழுத்துக்கொண்டு போனான். அம்மையப்பிள்ளைக்கு இருந்த ஆவேசத்தில் எங்கே போகிறோம், வருகிறோம் என்கிற நினைவுகூட இல்லை. அவர் வெறும் சித்திரக் கவிகளுடன் நிறுத்தாமல் உத்பிரேட்சை முதலிய அலங்காரக் கவிகளிலேயும் புகுந்துவிட்டார். ஒரு ஸ்திரீ விரகதாபத்திலிருந்தாளாம். அப்பொழுது நாழி கையாய்விட்டதால் சூரியன் தன் வழக்கப்படி கிரம மாக அஸ்தமித்தான். அப்படிச் சொல்வதற்குப் பதி லாக நமது வித்வான் ' சூரியனாகிய காற்றாடியானது அந்த ஸ்திரீயினுடைய பெருமூச்சாகிய சண்டமாருத தத்தால் அடிபட்டுக் கிழே விழுந்தது. விழுந்து
  • இப்பாட்டுகளின் பொருள் நான் எங்கு விசாரித் தும் கிடைக்கவில்லை. யாரேனும் தயவுகூர்ந்து சொல்வரேல் வந்தனமுள்ளவனாயிருப்பேன்.