கமலாம்பாள் சரித்திரம் போலிருந்தால் ஸ்திரீகள் எல்லாம் சூர்ப்பனகையாக இருக்கட்டுமே!' அய்யர் மேல் சமாதானம் ஒன்றும் சொல்லத் தோன்றாததினால் குழந்தை கல்யாணியைப்பார்த்து, 'உனக்கு ராமனைப்போல் புருஷன் வேண்டுமோ? லட்சுமணனைப் போல் வேண்டுமோ?' என்றார். கலி யாணி வெட்கத்துடன் தலை குனிந்து மௌனமாயிருந் தாள். அப்பொழுது அவர்: 'ராமன் கருப்பு , லட்சு மணன் சிவப்பு, ராமன் அப்பாவி, அவனுக்கு அழத் தான் தெரியும். லட்சுமணன் நல்ல தீரன். பார், ராமன் "காட்டுக்குப்போ " என்றதற்கு முன் மரவுரி யும் கையுமாய்ப் புறப்பட்டுவிட்டான். லட்சுமண னோ தைரியமாய் எல்லாரையும் கொன்றுவிடுகிறேன் என்று வில்லைத் தூக்கினான். ராமனுக்கு லட்சு மணன் எவ்வளவோ திறம். எல்லாவற்றையும் யோ சித்து சீக்கிரம் பதில் சொல். நான் கலியாணத்திற்கு ஏற்பாடு செய்யவேண்டும்' என்று பரிகாசம் செய்தார். கல்யாணி 'என்ன அண்ணா ! இதற்குத்தான் கூப் பிட்டீர்களாக்கும் ! மீனாட்சி கூப்பிடுகிறாள், நான் போ கிறேன்' என்று புறப்பட, உடனே ஐயர் 'இந்தாடி. குட்டி, நீ ராமனையும் கலியாணம் செய்து கொள்ள வேண்டாம், லட்சுமணனையும் கலியாணம் செய்து கொள்ள வேண்டாம்; அவர்கள் இருவர்களுக்கும் கலி யாணம் ஆய்விட்டது. அதற்காக நீ ஏன்-' என்று சொல்லி முடிப்பதற்குமுன், 'முத்துஸாமி' 'முத்து ஸாமி' என்று வாசல் கதவை யாரோ தட்ட, முத்து ஸ்வாமி' அய்யர் 'ராமண்ணா வாத்தியார் வந்திருக் கிறார், நீங்கள் உள்ளே போங்கள்,' என்று சொல்லி விட்டு கதவைத் திறந்தார்.