உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



கல்யாண யாத்ரை வழிப்பிரயாணம் 75. தேச முழுவதும் முத்துஸ்வாமி அய்யர் வீட்டுக் கலி யாணப் பேச்சே பேச்சாயிருந்ததுமன்றி ஒவ்வொரு ஊரிலுமிருந்து சிறு பையன்கள் முதல் வயது சென்ற பெரியவர்கள் வரை ஒருவரும் பாக்கியில்லாமல் நானாவித ஜனங்களும் வந்து கூடினார்கள். ஊர் முழு வதும் சிலநாளைக்கு அல்லோல கல்லோலப்பட்டது. கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு என நாலாதிக்குகளி லிருந்தும் வண்டிகளும் ஜனங்களும் மேலும் மேலும் வந்து நெருங்கவே , எங்கே பார்த்தாலும் வண்டிக் காடும் மனிதக்காடுமாக இருந்தது. வீட்டுக்கு வீடு நாற்பது ஐம்பது ஜனங்கள் கூடியிருந்தார்கள். இவ் விதமாக காற்றெறிகடலின் களிப்பனோங்கினார்' என்று படி சிறுகுளம் சிறிய குளமாயிராமல் இராப்பகல் ஓய்வில்லாமல் ஆரவாரித்த பெரிய கடலாயிருந்தது. சம்பந்தி அவர்களுடைய இஷ்டமித்திர பரிவார பந்து பட்டாளம் பாரி பட்டாளமாயிருந்தது. அவர்கள் அமர்த்தின வாடகை வண்டிகள் 25 போக, ராமசுவாமி சாஸ்திரிகளுடைய குமாரர் சிரஸ்த்தார் நாராயணய்யருடைய பெட்டிவண்டி ஒன்று, சாஸ் திரிகள் சம்பந்தி கிருஷ்ணய்யர் அகத்து வண்டி இரண்டு, தாசீல் குப்புசாமியய்யருடைய (சுப்பராய னுடைய தகப்பனார்) பெட்டிவண்டி ஒன்று, டிப்டி கலெக்டர் ராமராயர் குதிரைவண்டி ஒன்று, இவ்வித மாகக் கூடிய இம்முப்பது வண்டிகளும் விடிந்து பத்து நாழிகைக்குப் பயணம் புறப்பட ஆரம்பித்து அஸ்த மிக்கப் பத்து நாழிகைக்கு ஊரைவிட்டு நகர்ந்ததை யும், அவைகள் இராத்திரி இருட்டிப் போகும் போது கிருஷ்ணய்யர் 'லாந்தரைக்' கையில் பிடித்துக் கொண்டு யார் என்ன சொல்லியும் 'உங்களுக்குத் தெரியாது' என்று சொல்லிவிட்டு சேவகர்களுடன் வண்டிப்பாதையை பார்த்துக்கொண்டு போனதை யும், நொடிகள் பார்த்து வண்டிக்காரர்களுக்கு அவர்