உள்ளடக்கத்துக்குச் செல்

தான்பிரீன் தொடரும் பயணம்/இளங்கோவின் ஒரு கவிதை

விக்கிமூலம் இலிருந்து



இளங்கோவின்
ஒரு
கவிதை:


உம் மக்களின், இளைஞர்களின்
இறந்த உடல்களின் மீதும்,
சாம்பல் மேடுகளின் மீதும்,
ஏறி நின்று
உயர்த்திய கரங்களில்
துப்பாக்கிகளை ஏந்தியபடி,
ஓங்கிய குரல்கள்
விண்ணதிர ஒலிக்க
உனது முகத்திலறைந்து கூறுகின்றோம்:

"இங்கு எமக்கொரு வாழ்வுண்டு:
எங்கள் இருப்பை“
அங்கீகரிக்க மறுக்கும்
எல்லோருக்கும்
நாங்கள் எதிரிகளே!“

உனது
இரத்தமொழுகும் கரங்கள்
வாழ்வுக்காக மரணிப்பதைத் தவிர
வேறெதனையும்
எமக்கு உணர்த்தவில்லை.