பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/439

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

‘பட்டுக்கோட்டை’யின் பாடல்கள்

427


திருவள்ளுவர்,

"பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்,
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை”

என்றும், தாயுமானவர், "காகம்போல் உறவு கலந்துண்ணக் கண்டீர்" என்றும் கூறிய அறிவுரையை மனத்தகத்தே கொண்டு "கானக் கருங்குயிலின் கச்சேரியாம்' என்ற பாடலில் பாடுவதும் படித்தின்புறத்தக்கது. இப்பாடல் முழுவதுமே படித்து இன்புறத்தக்கது.

பாடலில் காக்கைகளும், குருவிகளும் மனிதர்களின் கோணல்களை விமரிசனம் செய்யும் பகுதி நகைச்சுவை நிரம்பியதாக இருக்கிறது. ஆனால் சிரித்து மகிழத்தக்க நகைச்சுவையன்று. சிந்தித்து ஒரு சொட்டுக் கண்ணிர் வடித்தற்குரிய நகைச்சுவையாகவே இருக்கிறது.

நம்முடைய மக்கள் ஊழின் வலிவை எண்ணி, ஊழின்வலியை மிகுதிப்படுத்தி உழைப்பாற்றலைத் தரத்தில் தாழ்த்தி வாழ்விழந்து போயினர். இம் மனப்போக்கு வளரும் சமுதாயத்திற்கு நல்லதல்ல. கவிஞர் இயல்பாகவே, இத்தகு கருத்துக்களில் நம்பிக்கையில்லாதவர். அவருடைய கருத்துக்கள் கற்பனையில் தோன்றியவை அல்ல. யதார்த்த உலகத்தையும், அனுபவத்தையும் மையமாகக் கொண்டே தோன்றியிருக்கின்றன. கவிஞர் "ஏற்றமுன்னா ஏற்றம்" என்ற பாடலில், "விதியின் உணர்வால் வீழ்ந்து கிடக்கும் வீணரெல்லாம். வேலை செய்து வீறுபெறவேண்டும்" என்று குறிப்பிடுகிறார். இப்பாடல் முழுவதிலும் உழைப்பின் உயர்வு, சேர்ந்துழைப்பதன் அவசியம் ஆகிய சிறந்த சித்தாந்தங்களைத் தந்ததான பாடற் சந்தத்தில் விளக்கியிருக்கிறார்.

உழைத்தால் மட்டும் போதாது. உற்பத்தியைப் பெருக்கினால் மட்டும் போதாது. சமுதாயத்தில் நரியைப் போலத் தந்திரங்கள் செய்து ஏமாற்றி - எலியைப் போல் உழைக்காமல் பொருள் சேர்த்து வாழ்வது முறையல்ல. இக்கருத்தைக் கவிஞர் "நாங்கள் இதயமுள்ள கூட்டம்” என்ற