இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
iv
• | அருள்நெறித் திருக்கூட்டம் தோற்றம். | |
• | ‘மணிமொழி’ என்னும் பெயரில் இயக்கப் பத்திரிகை வெளியிடல். | |
1953 | • | ஆதீனத்தின் அருளாட்சியிலுள்ள பிரான்மலைத் திருக்கோயில் சித்திரைத் திருவிழாவின்போது (சங்க கால வள்ளல் பாரி வாழ்ந்திருந்த மலையில்) வள்ளல் பாரி விழாத் தொடங்குதல். |
• | பல்லக்கில் பட்டணப் பிரவேசம் வருதலைத் தவிர்த்தல். | |
• | இலங்கைப் பயணம் - இரண்டு வாரம் சுற்றுப் பயணம். | |
1954 | • | இராசாசி தலைமையில் தேவகோட்டையில் அருள்நெறித் திருக்கூட்ட மாநாடு. |
• | திராவிடர் கழகத் தலைவர் பெரியார் சந்திப்பு. | |
• | தாய்லாந்து, இந்தோசீனா, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணம் (3 திங்கள்) | |
1955 | • | அருள்நெறித் திருப்பணி மன்றம் தொடங்குதல். |
• | ‘தமிழ்நாடு’ நாளிதழ் தவத்திரு குன்றக்குடி அடிகளார் என்ற பெயரை அறிமுகப்படுத்துதல். | |
1956 | • | அறிஞர் அண்ணா குன்றக்குடி திருமடத்திற்கு வருகை. |
• | ஆச்சார்ய வினோபா பாவே திருமடத்திற்கு வருகை. | |
1958 | • | குன்றக்குடியில் உயர்நிலைப்பள்ளி தொடங்குதல். |
1959 | • | ஆ. தெக்கூரில் பள்ளிச் சீரமைப்பு மாநாடு நடத்துதல். பாரதப் பிரதமர் நேரு மாநாட்டிற்கு வருகை. |
1960 | • | மத்திய அரசு சேமநலக் குழு உறுப்பினராதல். |
1962 | • | சீனப்போரின்போது தங்க உருத்திராட்ச மாலையைத் திருவொற்றியூர்க் கூட்டத்தில் ஏலம் விட்டு ரூ. 4000 தருதல். |
• | மதுரை அருள்மிகு மீனாட்சியம்மன் திருக்கோயிலில் திருமுறைத் தமிழ் அருச்சனை தொடங்குதல். | |
1965 | • | இந்தி எதிர்ப்புப் போராட்டம்; அரசு வழக்கு தொடர்தல். |
1966 | • | தமிழ்நாடு தெய்வீகப் பேரவைத் தோற்றம். |
1967 | • | திருப்புத்தூர்த் தமிழ்ச் சங்கம் தோற்றம். |
• | திருக்கோயில் கருவறைக்குள் சீலமுடைய அனைவரும் சாதி வேறுபாடின்றி திருமுறை நெறிப்படி - போதொடு நீர் சுமந்தேத்தி வழிபாடு செய்வதெனத் திருப்புத்தூர்த் தமிழ்ச் சங்கம் தீர்மானம் நிறைவேற்றுதல். | |
1968 | • | இரண்டாம் உலகத் தமிழ்மாநாடு - ‘திருக்குறள் உரைக்கோவை’ நிகழ்ச்சி தொடக்கவுரை நிகழ்த்தல் |