பக்கம்:அசோகனுடைய சாஸனங்கள்.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

4

இப்புஸ்தகத்தில் அவதாரிகை சற்று விரிவாக அமைந்திருப்பது ஒரு குறையாகாதென்று கருதுகிறேன். அசோகன் சரிதை, ஆட்சிமுறை, அக்காலத்துப் பெருமையைத் தெரிவிக்கும் அறிகுறிகள் முதலியவற்றை விவரிப்பது இச்சாஸனங்களின் முக்கியத்தை உணருவதற்கு அவசியமானதால் அவதாரிகையில் இவ்விஷயங்கள் விளக்கப்பட்டிருக்கின்றன.

சாஸனங்களின் மொழிபெயர்ப்பு, இங்கிலீஷ் பெயர்ப்புக்களை மட்டும் அனுஸரித்திராமல் மூலத்தோடும் ஒப்பிட்டுச் சீர்திருத்தப்பட்டிருக்கிறது. பலவித இயற்கை வித்தியாசங்கள் நிறைந்திருந்தபோதும் இந்தியாவில் நுட்பமான ஒற்றுமை உள்ளூறப் பரவியிருப்பதுபோல, இந்திய மொழிகளுக்கும் நெருங்கிய உறவு. இருக்கின்றது. உதாரணமாக, ஸம்ஸ்கிருதம் பிராகிருதம் மூலமாக வந்த சொற்கள் பல பாஷைகளுக்கும் பொதுவாக உள்ளன; இஃதன்றி, வாசகரீதியிலும் அணியிலும் ஒற்றுமை காணப்படுகின்றது. ஆதியில் இந்நாட்டுப் பாஷையொன்றில் எழுதப்பட்ட இலக்கியத்திற்கு மற்றொரு இந்தியமொழியிற் செய்யப்படும் பெயர்ப்பு இங்கிலீஷ் மொழிபெயர்ப்பைவிட மேன்மையாயிருப்பது இயல்பன்றோ? ஆகையால் அசோக சாஸனங்களின் தமிழ் மொழி பெயர்ப்பு இங்கிலீஷ் மொழிபெயர்ப்பைவிட மூலத்தின் போக்கை விளக்க ஏற்றதாயிருக்கவேண்டும். அப்படியில்லாவிட்டால் அஃது ஆசிரியன் குற்றமேயன்றி வேறன்று; கருத்து விளங்குவதற்குச் சிறிதும் கஷ்டமின்றியும் சிலசமயம் தன்னை அறியாமலும் மூலத்திலுள்ள சொற்கள் இத் தமிழுரையில் வந்திருப்பது இவ்வபிப்பிராயத்துக்குச் சான்றாகும்.

இவ்வித பிரயத்தனங்களிற் கிடைத்த உதவிகளைக் கூறுவது மரபு; இஃது எனது பிரியமான கடமையாகவுமிருக்கின்றது. சென்னை சர்வகலாசாலையின் இந்திய சரித்திர ஆசிரியராகிய டாக்டர் எஸ். கிருஷ்ணஸ்வாமி ஐயங்காரவர்கள் புத்தகத்தின் எழுத்துப் பிரதியைப் பரிசோதித்துச் சில குற்றங்குறைகளைத் தீர்த்துள்ளார்கள். திருவனந்தபுரம் கிரந்த பரிபாலனாலயத்தைச் சேர்ந்த ம-௱-௱-ஸ்ரீ ஹரிஹரசாஸ்திரிகள் எனக்கு முதலில் இம் முயற்சிக்கு ஊக்கத்தைக் கொடுத்தார். மற்றும் பல நண்பர்கள் இதன் எழுத்துப்பிரதியையோ அல்லது அச்சுப் பிரதியையோ