பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 4, தலித் சாகித்ய அகாடமி.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 36 க. அயோத்திதாளலப் பண்டிதர் யாதொன்றுங் கூருது இதன் கணிதங்களை நன்ருராய்ந்து நாளை பகர்வோமெனக் கூறி அவரவர்களில்லஞ்சேர்ந்து மாலைவில் மந்திரிப் பிரதானிகளுடன் கலந்து அரசனது மிருத்துவின் காலத்தை ஆலோசித்தார்கள். ஒவ்வொருவருங்கூடி யாலோசித்து காலகணிதத்தில் மிருத்தியு பட்சத்திற் குட்பட்டிருப்பதில்ை அவற்றை யவருக் கெப்படி சொல்லுவுதென் ற்ச்சமுற்றிருக்குங்கால் பிரதமமந்திரி நிமித்தத்தை நோக்கி பெரியோய் இச்சங்கதிகள் யாவையும் அரசனுக்கு அறிவிக்காமலிருக்கப்படாது அரசனுந் தனது மரணத்திற் கஞ்சமாட்டார் செய்யவேண்டிய காரியங்கள் யாவையும் செவ்வனே முடித்து அரசுக்கு வேண்டிய அதிபதியாளையும் நியமித்துவிட்டு அறஹத்துக்களை யடுத்து மறுமெயின் சுகத்திற்கு வழி தேடிக்கொள்ளுவார். இச்சங்கதியை நாம் அடக்கலாகாது உடனே சொல்ல வேண்டுமென்று முடிவுசெய்து உதயமெழுந்து அரசனிடஞ் சென்று தாங்க ளாராய்ந்துள்ள கணிதத்தை விவரித்தார்கள். அரசனும் புன்னகைக் கொண்டு நிமித்தகர்களே, சென்ற சுக்கிரவாரமிரவு ஐயன் அறப்பள்ளியில் யானுரங்குங்கால் என தரிய தந்தை சொற்பனத்தில் வந்து காசிபாவென்னு மோர் சத்தமிட்டு மிலேச்சர்களாகிய சத்துருக்கள் உன்னைக் கொல்லுதற்கு வட்டமிட்டிருக்கின்ருர்கள் விழித்திரு விழித்திரு மென்று கூறி மறைந்துவிட்டார். யானும் விழித்து வெளிவந்து ஆகாயவிரிவைநோக்குங்கால் நட்சேத்திரச் சுழலால் ஐந்தாவது ஜாமம் விளங்கிற்று. அக்கால சொற்பனம் மறைவின்றி யதார்த்தமாதலின் தங்களை தருவித்து ஜாதகவோலையைத் தந்தேன் தாங்களும் எனது மிருத்தியுவின் கணிதத்தைக்கண்டீர். ஆனந்தமே ஆயினும் எனது பட்டத்திற்கு தம்பி காங்கேயனை நியமிக்க உத்தேசித்திருக்கின்றேன் அவன் காலகணித மெப் படியோ அதையும் ஆராயுங்கோளென்று சொல்லி அவனது வோலையையுமீய்ந்தான். அதைக் கண்ணுற்ற நிமித்தகர் அவனது கலலோரையின் சுகத்தைக்கண்டு பட்டமளிக்கலாமென்று கூறினர்கள். உடனே அரசனுந் தனதரசவங்கத்தோர்களுக் கறிக்கையிட்டு காங்கேயனுக் கரசையளித்துவிட் மன்.