அரசியல் / 297
வேண்டுமென்றும், மற்றும் பட்டினங்களில் வசிப்போர் திருடிவிட்டேனும், கொலைபாதகத்துக்கு உள்ளாகியேனும், விபச்சாரத்திற்கு உள்ளாகியேனும் சிறைச்சாலைகளில் அடைப்படுவார்களாயின் பெரியசாதிகளென்போர் அங்கும் சுகவேலைகள் செய்யவேண்டும், சிறிய சாதிகளென்போர் அங்கும் மலமெடுக்க வேண்டுமென்றும் வகுத்து பலவகையாலும் இம்சித்துப் பாழ்படுத்தி வந்தார்கள். தற்காலந் தோன்றியுள்ள துரைமக்களிற் சிலர் ஏழைமக்கள் மீதுள்ள பொறாமெயாலும் வஞ்சினத்தாலும் இத்தகையக் கொறூரச் செயல்களை நடாத்திவருகின்றார்களென்று கண்டறிந்து சட்டங்களைப் பொதுப்பட நடாத்தும்வழியிற் கொண்டுவருகின்றார்கள்.
மனித குலத்தோரை மனிதர்களென்றெண்ணாது மிருகங்களிலும் கேவலமாக நடாத்தும் அன்பற்றவர்களும் அநுதாபமற்றவர்களுமாகியக் கூட்டத்தோர்மீது தமது கருணைதங்கிய கவர்னர் ஜெனரலவர்கள் அன்பும் அநுதாபமும் காட்டி அதிகார உத்தியோகங்களை அளித்துவிடுவாராயின் அவர்களால் நசுக்கப்பட்டுவரும் அறுபது லட்சங் குடிகளும் அல்லலுற்றே அழிந்து போவார்கள். ஆதலின் புதிய கவர்னர் ஜெனரலவர்களின் அன்பையும் அநுதாபத்தையும் ஏழைக்குடிகளின் மீது முன்பு செலுத்தி பின்பு சகல குடிகளுக்கும் சமரசச்சீரும் சுகமுமளிக்க வேண்டுகிறோம்.
- 4:22; நவம்பர் 9, 1910 -
168. பாபு சாரத சரண மித்திரா அவர்களின் மார்க்கம்
கிரேக்கர் ரோமானியரைவென்றபோல் தாங்கள் ஆங்கிலேயரை வெல்லவேண்டுமென்றும், சகலரும் தேவநாகிரிலிபியை எழுதவும், இந்தி பாஷையில் பேசவேண்டுமென்றும், இந்துமதத்தோர் சகலரும் ஒற்றுமெய் பெறவேண்டுமென்றுங் கூறி இந்துசபை ஒன்று ஸ்தாபித்து பலயிடங்களிற் பிரசங்கங்களும் செய்துவருவதாக நவம்பர்மீ 5உ-ய சுதேசமித்திரனில் வெளியிட்டிருக்கின்றார்கள்.
இதே பாபு சாரத சரண மித்திரா என்பவர் வங்காள ஐகோர்ட் ஜட்ஜிகளிலொருவராயிருந்ததாகவும் வரையப்பட்டிருக்கின்றது. இத்தகைய ஓர் பெருத்த நியாயாதிபதி உத்தியோகம் பெற்று தன்னை சகல மக்களும் (லார்ட்) லார்ட் என்று சொல்லும்படியான அந்தஸ்துக்கும், கெளரதைக்குங் கொண்டுவந்து வங்காளதேசமெங்கும் பிரகாசிக்கச் செய்தவர்கள் ஆங்கிலேயர்களா அல்லது இந்துக்களா என்பதை பகுத்துணராது ஆங்கிலேயரைவென்று அரசுபுரிய வேண்டுமென்னு மதி, ஏதுமதியோ விளங்கவில்லை. தீட்டிய மரத்திற் கூர் பார்ப்பதுபோல் தனக்கு விவேகவிருத்தி செய்துப் பிரகாசிக்கச்செய்த ஆங்கிலேயர்களின் நன்றியை மறந்து அவர்களது அரசையே கைப்பற்றவேண்டுமென்னும் எண்ணங்கொண்ட பாபு சாரத சரண மித்திரருக்கே இந்தியதேச சக்கிரவர்த்தி பட்டத்தை இந்துக்கள் அளித்துவிடுவார்களோ. அவ்வகை அளிப்பினும் ஆயிரத்தியெட்டு சாதிப்பிரிவு, ஐம்பத்தியெட்டு சமயப்பிரிவுள்ள முப்பதுகோடி மக்களை முநிந்தாளும் வல்லபமுண்டோ. இந்த தேசத்தில் சிற்றரசு நடாத்திவரும் அரசர்களே ஆங்கிலேயர் அரசாட்சிக்கு அடங்கியே தங்களது ராட்சியங்களை ஆண்டுவரவேண்டுமென்றும், அவர்களது உதவியே தங்களுக்கு எக்காலமும் இருக்கவேண்டுமென்றும் கோரி தங்கள் ராஜகாரியாதிகளை நடத்திவருங்கால் ராஜகீயவல்லபம் ஏது மற்ற ஓர் நியாயாதிபதியாயிருந்தபாபு சாரத சரண மித்திரருக்கு ஆங்கிலேயரது ஆளுகையை அபகரிக்கவேண்டுமென்னும் எண்ணத் தோன்றி கிராமங்கள் தோரும் பிரசங்கிக்க ஏற்பட்டது பேராசையே ஆகும்.
அதாவது கனி உருசியாயுள்ளதென்று மரத்தை வேரோடு பிடுங்க எத்தனிப்பதுபோல் ஆங்கிலேயர் தனக்களித்துள்ள உத்தியோக கெளரதையால் வங்காளநாட்டோர் யாவரும் தன்னைக் கர்த்தனே கர்த்தனென்று அழைத்தபடியால் இவ்விந்துதேச முழுவதையும் ஆட்சி செய்வோமாயின்