பஞ்ச பூதங்களின் அறிவியல் கதைகள்/மேகநாதன் சொன்ன ஆகாயத்தின் கதை
"நீருண்டு, பொழிகின்ற காருண்டு விளைகின்ற
நிலமுண்டு பலனு முண்டு
நிதியுண்டு. துதியுண்டு. மதியுண்டு கதிகொண்ட
நெறியுண்டு, நிலையு முண்டு."
-அருட்பா.
குப்புசாமி மாரியப்பனை அழைத்துக்கொண்டு சிங்காரம் வீட்டிற்குப் போனான். பிறகு எல்லோரும் வழியில் தங்கள் நண்பர்கள் ஒவ்வொருவரையும் அழைத்துக் கொண்டு வேகம் வேகமாக மண்டபத்திற்குச் சென்றனர்.
மேலே வானம் இருண்டு-கரிய மேகங்களால் குழப்பட்டு எந்த நிமிஷமும் ஆகாயம் பொத்துக் கொண்டு பெருமழை பெய்யும்போல் பயமுறுத்திக் கொண்டே இருந்தது.
ஆனால் அனைவரும் மண்டபத்திற்கு வந்து சேர்ந்த ஐந்து நிமிஷத்திற்கெல்லாம் பெருங்காற்றும்; அதைத் தொடர்ந்து பேய் மழையும் அடித்துச் சொரிந்தது.
'நல்ல வேளை; எல்லோரும் நனையாமல் தப்பினோம்” என்றான் பொன்னுசாமி மகிழ்ச்சியுடன்.
காற்றும், மழையும், அதோடு பயங்கர இடியும் மின்னலும் கூடச் சேர்ந்து கொண்டது.
நேரம் செல்லச் செல்ல எல்லோர் மனதிலும் ஒருவித பயமும்; ஒருவேளை தேவகுமாரர்கள் இன்று வரமாட்டார்களோ!' என்கிற சந்தேகமும் எழுத்தது.
"தேவகுமாரர்கள் பொய் சொல்ல மாட்டாங்கன்னு சொன்னது மறந்து போச்சா"ன்னு கந்தசாமி ஞாபகப்படுத்தினான். நடுவில் அவர்கள் அமர்வதற்கான இடம் காலியாக விடப்பட்டிருந்தது.
எங்கோ ஒரு மூலையில் மின்னல் வெட்டித் தெறித்தது. மண்டபத்தைச் சுற்றி மழைநீர் ஒடை போல் வேகமாக ஒடிக் கொண்டிருந்தது. இமைக்கும் நேரத்தில் அவர்கள் ஐவரும் சிறுவர்கள் மத்தியில் தோன்றினார்கள்.
கண்ணைப் பறிப்பது போன்ற அவர்களது அழகான உடைகளில் துளி மழை நீர் கூட இல்லை.
"இந்த மழையில் நீங்கள் எல்லாம் வராமாட்டர்கள் என்று எண்ணினேன்” என்று உலகநாதன் கூறி முடிக்கு முன்னர், "நாங்கள்ளாம் மழை வரும்னு தெரிஞ்சு ரொம்ப நாழிக்கு முன்னமேயே இங்கே வந்துட்டோம்” என்று மிக்க மகிழ்ச்சியுடன் பதில் கூறினான் பொன்னுசாமி.
"ஆமாம்...எங்களுக்கு ஒரு சந்தேகம். நீங்கள் எல்லோரும் இங்கே எங்களிடம் கதை கேட்டுவிட்டு நேரம் சென்று வீட்டிற்குப் போகிறீர்கள்; உங்கள் அப்பா அம்மா கோபித்துக் கொள்வதில்லையா?” என்று மேகநாதன் கேட்டான்.
உடனே எல்லாச் சிறுவர்களும் கோரசாக, 'கோவிச்சுக்க மாட்டாங்க. நீங்க சொன்ன கதையை எல்லாம் எங்க அப்பா, அம்மா, பாட்டி எல்லேருகிட்டேயும் ராத்திரிச் சொல்லுப்பிட்டுத் தான் தூங்குவோம். அவங்களுக்கெல்லாம் ரொம்ப சந்தோஷம். நல்ல நல்ல விஷயமா-உபயோகமா நீங்க எங்களுக்குச் சொல்லறீங்களாம். அவங்க எல்லாருக்கும் உங்களையெல்லாம் பார்க்கணும் போல ரொம்ப ஆசையாயிருக்குன்னு சொன்னாங்க" என்றனர்.
உடனே மேகநாதன், 'என்ன பதில் சொன்னீர்கள்?’ என்று கேட்டான்.
"உங்ககிட்டேச் சம்மதம் கேட்டு அழைச்சிட்டுப் போறதாகச் சொல்லியிருக்கோம்” என்றனர்.
சிரித்தபடி, "அதுதான் சரி,” என்று சொன்ன மேகநாதன் கதையை ஆரம்பித்தான்.
'இப்போ, இடி மின்னலோடு மழை பெய்து கொண்டிருக்கிறது. மழை எப்படிப் பெய்கிறது என்பதை முன்பே கங்காதரன் உங்களுக்குச் சொல்லி விட்டான்.
இந்த மின்னல் ஏன் மின்னுகிறது; எப்படி உண்டாகிறது; இடி இடிப்பானேன்; என்பதெல்லாம் உங்களுக்குத் தெரியுமா?
'தெரியாது அண்ணா”-ஒருமித்த குரலில் அனைவரும் கூறினர்.
மேகநாதன் திரும்பி, "உனக்குத் தெரியுமா அழகப்பா?” என்று கேட்டான்.
"வானில் மின்சாரம் பாயும்போது தெரியும் ஒளியை, "மின்னல்" என்கிறோம். அதோ போல் மின்சாரம் மோதும் ஒலியை "இடி" என்கிறோம்' என்றான் அழகப்பன்.
"ரொம்ப சரி. இந்த மின்சாரம் எங்கிருந்து வானத்திற்குப் போகிறது என்று தெரியுமா அழகப்பா?”
'தெரியாது.”
"சரி! நான் சொல்லுகிறேன்,' என்ற மேகநாதன், மின்சாரம் உலகின் எந்த இடத்திலிருந்தும் ஆகாயத்திற்குச் சென்று மின்னலாவதில்லை. அந்த மின்சாரம் மேகங்களிலிருந்தே உற்பத்தியாகி; மேகங்களுக்கு மத்தியிலேயே மின்னவும், இடிக்கவும் செய்கின்றன.
ஈரப்பசை உள்ள காற்று ஆகாயத்தை நோக்கி மேலே செல்லும் போது, குளிர்ச்சியால் காற்றில் உள்ள ஈரப்பசை மிக நுண்ணிய நீர்த்துளி, அல்லது பனித் துகள்களாக மாறி மேகங்களாக உருப் பெறுகின்ற்ன. அவை-மேல் பகுதி, நடுப் பகுதி, அடிப் பகுதி என்கிற இயல்புடன் கூடியவைகளாக உள்ளன.
மேகத்தின் மேல் பகுதிதல் உள்ள காற்று, நீர் ஆகிய அணுக்களில், நேர் மின்சாரம் அதிகமாகவும், மேகத்தின் மையப் பகுதியில் உள்ள அணுக்களில், எதிர் மின்சாரத் துகள்கள் கூடுதலாகவும் இருக்கும். அந்த மேகத்தின் அடிபாகம் பெரும்பாலும் எதிர் மின்சாரத் துகள்களாகவோ, சில சமயம் நேர் மின்சாரத் துகள்களாகவோ காணப்படும்.
ஒரே மேகத்தின் மேல் தளத்தில், நேர் மின்சாரத் துகள்கள் கொண்ட அணுக்களும்;
பஞ்ச-7 அதற்கு மாறாக நடு, மற்றும் கீழ்மட்ட மேகத்தில் எதிர் மின்சாரத் துகள்கள் அதிகமாகவும் சில சமயங்களில் இப்படி மாறுபட்டும் இருக்கும்.
அப்போது மேகத்திலுள்ள இந்த மின்சாரத் துகள்கள் தங்களின் குறைபாட்டை ஈடு செய்து கொள்ள முயலும்.
அவ்வாறு முயலும் போது எதிர் மின்சாரத் துகள்கள் அதிகமாயுள்ள அணுக்களை தோக்கியும்; எதிர் மின்சாரத் துகள்கள் குறைவாக உள்ள அணுக்களை நோக்கியும் அவை பாய்கின்றன. இவ்வாறு பாயும் மின்சாரப் பாய்ச்சலே நமது கண்களுக்கு மின்னலாகத் தோன்றுகிறது.
இந்த மின்சாரப் பாய்ச்சல், ஒரே மேகத்திடையேயும் நிகழலாம்; அல்லது இரண்டு மூன்று மேகங்களுக்கிடையேயும் பாயலாம். சில சமயங்களில் மேகத்திலிருந்து பூமியை நோக்கியும் இந்த மின்சாரம் பாயக் கூடும்.
மேகத்தில் ஏற்படுகிற மின்சாரம், தரையில் சில சமயம் எதிர் மின்சாரத்தைத் தோற்றுவிக்கிறது. நேர் மின்சாரமும், எதிர் மின்சாரமும் ஒன்றை ஒன்று கவரக் கூடியவை என்பது குறிப்பிடத் தக்கது. இம்மாதிரி நிலையில் மேகத்திலுள்ள நேர் மின்சாரம்-தன்னால் பூமியில் தோற்றுவிக்கப்பட்ட எதிர் மின்சாரத்தை நோக்கிப் பாய்கிறது.
மின்னல் ஏற்படுவதற்கு முன்பாக மேகங்களி டைவே உள்ள மின்சார வித்தியாசம் சுமார் 10 கோடி வோல்ட் முதல், 200 கோடி வோல்ட் வரை இருக்கலாம், மின்னல் தனது 500) தடைகளையெல்லாம் எதிர்த்து எளிதில் பாய்ந்து செல்லும் தன்மை படைத்துள்ளதால்; அது தன் மனம் போனபடி நெளிந்தும், நீண்டும், பலவாறாகப் பிரிந்து செல்கிறது.
மின்னலினுடைய நீளம் பல கிலோ மீட்டர் வரை கூட இருக்கும். அகலம் சுமார், 10 முதல் 15 சென்டி மீட்டர் வரை இருக்கும்.
மின்னல் நமது கண்களுக்கு முதலிலும், இடி பிறகும் கேட்கிறது. ஆனால் உண்மையில் இடியும் மின்னலும் ஒரே சமயத்தில் தான் நிகழ்கின்றன.
ஒலியை விட ஒளிக்கு சக்தி அதிகம். ஒளி யானது ஒரு வினாடிக்கு 1 லட்சத்து 86 ஆயிரம் மைல் வேகத்தில் செல்கிறது.
ஒலியோ-காற்றின் வழியே வினாடிக்கு சுமார் 1100 அடி வீதம் தான் செல்கிறது. அதனால் தான் நாம் மின்னலின் ஒளியை முதலிலும், இடியின் ஒசையை பிறகும் கேட்கிறோம்.
இடியைப் பற்றி மற்றொன்றையும் தெரிந்து கொள்ள வேண்டும். மின்னலின் மின்சாரம்தான் தாக்குமே தவிர, இடி தாக்காது. அது வெறும் ஒலி எழுப்புவதோடு சரி அந்த ஒலி பிறக்கக் காரணமாயிருப்பதும் மின்னல் தான்.
மின்னல் தன் சக்தியில் 75 சத வீதத்தை தான் பாய்ந்து செல்லும் வழியில் உள்ள காற்று மண்டல வாயுக்களை சூடேற்றிக் கொண்டு செல்வ தில் செலவழித்துக் கொண்டு செல்கிறது. வினாடி நேரத்தில், லட்சத்தில் ஒரு பங்கு சூடு கூட இல்லா திருந்த காற்று மண்டல வாயு, மின்னலின் பயணத் தால் திடீரென்று பல ஆயிரம் டிகிரி உஷ்ணத்திற்கு சூடேற்றப்படுகிறது. அந்தக் கண நேரத் தில் காற்று விரிந்து கருங்குவதின் விளைவாகவே இடி முழக்கம் ஏற்படுகிறது.
இடியும், மின்னலும் பலமாக உள்ளபோது நடந்து செல்ல நேர்ந்தால் நம்மைக் காப்பாற்றிக் கொள்ள சில முறைகளைப் பின்பற்றுவது மிகவும் அவசியம். வெட்ட வெளியில் நடந்து சென்று கொண்டிருந்தால், இடி. மின்னல் சமயத்தில் நிற்பதைத் தவிர்த்து தரையில் படுத்து விடுவது நல்லது.
சுற்றுப் புறத்தில் தனியாக ஒரு மரம் இருந்: தால் இடி, மழையின் போது அதன் கீழ் சென்று நிற்கக் கூடாது, மின்னலிலுள்ள பெருத்த மின் சக்தியால் பச்சை மரம்கூடப் பற்றி எரியும்.
வெட்ட வெளியில் நிற்கும் மரம் மட்டுமல்ல; தனியான சிறு குடிசைக்குள்ளும் அம்மாதிரி நேரத்தில் ஒதுங்கக் கூடாது.
பெரிய கட்டிடங்களுக்குள் இருந்தால் பாதிப்பு ஏற்படாது. மின்னலின் பாதிப்பு ஏற்படாதிருக்க பெரிய கட்டிடங்களின் உச்சியில் இடிதாங்கிக் கருவி பொருத்தப்படுவதுண்டு.
இடிதாங்கியின் மேல்பகுதி கூராக இருக்கும்; அடிப்பகுதி பூமியில் சற்று ஆழமாகப் பதிக்கப்பட்டிருக்கும். இதனால் இடித்தாங்கியில் இறங்கும் மின்னல்; கம்பி வழியாக பூமிக்குள் இறங்கி; அபாயத்தைத் தடுத்து விடுகிறது.
நடந்தும், வண்டிகளிலும் சென்றுவந்த மனிதன் பூமியில் தனது பயணத்தை மேற்கொள்ள ரயில், மோட்டார் போன்ற பல ஊர்திகளை உருவாக்கினான். அப்போதும் இவை ஒன்றும் அவனது அசுர வேகத்திற்கு ஈடுகொடுத்ததாகத் தோன்ற வில்லை. ஆகாய விமானத்தைக் கண்டுபிடித்தான். இன்று ஆகாய விமானங்கள் உலகெங்கும் வானத்தில் பறவைகளைப் போல் பறந்து கொண்டிருக்கின்றன,
காலத்தின் அருமையைப் புரிந்து கொண்ட மனிதன் அந்த விமானங்களிலும் திருப்தி அடை யாமல் மின்னல் வேக விமானங்களை உருவாக்கினான். 1852-ம் ஆண்டு ஹென்றி கிப்பர்ட்” என்னும் விஞ்ஞானி முதன் முதலாக ஆகாயக் கப்பலை உருவாக்கினார். ஆனால் அது மணிக்கு 5 மைல் வேகத்தில்தான் பறக்கக் கூடியதாக இருந்தது.
ஆகாயக் கப்பல் என்பது வேறு; ஆகாய விமானம் (ஏரோப்ளேன்) என்பது வேறு.
ஆகாயக் கப்பலை வாயு நிரம்பிய பலூன்" என்று கூறலாம். ஆகாயக் கப்பலுக்கு இறக்கை கிடையாது, அதன் அடிப்புறத்தில் தொங்கும் தொட்டில் போன்ற பகுதி பிரயாணிகள் தங்குவதற்கு ஏற்ப விஸ்தாரமாக இருக்கும். ஆகாயக் கப்பலை முன்னே செலுத்த இஞ்சின் இருக்கும்.
ஆகாயக் கப்பல்கள் ஹைட்ரஜன் வாயுவினால் நிரப்பப்பட்டதாக இருந்தன. ஹைட்ரஜன் எளிதில் தீப்பிடிக்கக் கூடியது. இக்காரணத்தினால் ஆகாயக் கப்பல்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாயின; ஏராளமான பயணிகள் உயிரிழந்தனர்.
இதனால் ஆகாயக் கப்பலின் மவுசு குறைந்தது. அதற்குள்ளாக விமானங்களில் முன்னேற்றம் ஏற்பட்டு லிட்டன.
விமானத்தைத் தொடர்ந்து மனிதன் தளம் அமைத்து ராக்கெட் விடத்துவங்கினான். ரஷ்யாவைச் சேர்ந்த கே.இ. சியால் கோல்ங்கி என்னும் விஞ்ஞானி தான், ராக்கெட்டுகளின் இயக்கம் பற்றி ஆராய்ந்து, விண்வெளிப் பயணத்திற்கு ராக்கெட்டுகளைப் பயன்படுத்தலாம் என்று விஞ்ஞான ரீதியில் முதன்முதலாக அறிவித்தார்.
திரவ எரிபொருளைப் பயன் படுத்தும் பாக்கெட்டை முதலில் வடிவமைத்தவரும் இவரே. விண்வெளி இயலின் தந்தை என்று இவா கருதப்படுகிறார்.
அமெரிக்காவில் ராக்கெட் பற்றிய ஆராய்ச்சிகள் செய்த ராபர்ட் ஹிட் சின்ஸ் கொடார்ட்' என்னும் விஞ்ஞானியால் தயாரிக்கப்பட்ட முதலாவது திரவ எரிபொருள் ராக்கெட் 1926-ம் ஆண்டு வானில் செலுத்தப்பட்டது.
விண்வெளிப் பயணத்திற்கு ராக்கெட் ஒரு வாகனமாகப் பயன்படுகிறது.
அந்தவரிசையில், ராக்கெட் மூலம் விண் வெளியில் கால்வைத்த முதல் வீரர் ரஷியாவைச் சேர்ந்த யூரிகாகரின் என்பவராலார்.
அதன்பிறகு விண்வெளிக்கு-ராக்கெட்டுகளின் பயணம் அதிகரித்தது. ரஷியாவையும், அமெரிக் காவையும் தொடர்ந்து இந்தியாவும் விண்வெளிக்குள் "ஆரியபட்ட” போன்ற கோள்களை அனுப்பியது.
1984-ம் ஆண்டு ஏப்ரல் 3-ம் தேதி இந்திய விமானப்படை அதிகாரியாகவும், சிறந்தவிமான மோட்டியாகவும் திகழ்ந்த 31-வயதுள்ள இந்திய வீரர் ராகேஷ் சர்மாவும்; அவருடன் சோவியத் விண்வெளி வீரர்களான யூரி மாலி ஷேவ்" என்பவரும், கெனடி” என்பவருமாக 'சோயுஸ் டி-11" என்னும் விண்வெளிச் கப்பலில் சோவியத் ரஷியாவிலுள்ள "பால்கனோவர்" என்னும் விண்வெளி ஊர்தி நிலையத்திவிருந்து புறப்பட்டனர்.
இந்த விண்வெளிக் கலனைத் தொலை விண் வெளிக்கு எடுத்துச் சென்ற ராக்கெட்டின் எடை 300 டன். 164 அடி உயரம், 14-அடுக்கு மாடி களுடன் 3 கூறுகளாக அமைந்திருந்தது.
விண்வெளி நிலையத்திலிருந்து முடுக்கி விடப்பட்ட ராக்கெட், 9 நிமிடங்களில் 283 கிலோ மீட்டர் உயரத்தில் மட்ட கோள் வீதிக்கு விண்வெளிக் கலனை அனுப்பி வைத்து விட்டது.
ராகேஷ் சர்மாவும் அவரது சோவியத் நண்பர் களும் 'சல்யூட்-7 , விண்வெளிக் கலனில் தமது சிறப்பான ஆய்வுகளை; ஒருவாரம் தங்கி நிகழ்த்தி விட்டு பூமிக்குத் திரும்பினர்.
இந்த விண்வெளிப்பயண நிகழ்ச்சிக்குப் பிறகு உலக மக்கள் அனைவரையும் ஆவலோடு ஆகாயத்தை அண்ணாந்து பார்க்கவைத்த பெருமை "ஹேலி" வால் நட்சத்திரத்தையே சாரும்.
வால்மீன்களை—வால் நட்சத்திரம் என்றும்; தூமகேது என்றும் பெயரிட்டு அழைத்து வந்த துடன்; அவை தோன்றும் போதெல்லாம் உலகி லுள்ள மக்கள் அனைவரும் பயமும் பீதியும் கொள்ளத் தவறவில்லை,
வால் நட்சத்திரங்கள்—வால்மீன்கள் என்கிற பெயரில் மனிதர்களை அச்சுறுத்தி வந்துள்ள இந்த நட்சத்திரங்கள்—எவ்வித வானியல் விதிகளுக்கும் கட்டுப்படுவதில்லை. அத்தப் பெயரில் ஒரு நட்சத்திரமும் இல்லை,
வால் நட்சத்திரம் மாதிரித் தோற்றமளிக்கிற அந்த வால் மீனுக்கு வாலும் கிடையாது. அது வாயுக்கள் நிறைந்த ஒரு வான் பொருளே.
சூரியனை இத்தகைய வான் பொருட்கள் நெருங்கும் போது, வால் போன்றதொரு பனிக் கோளம் முளைக்கிறது. உறைந்து போயிருந்த பொருட்களனைத்தும் சூடேறி, ஆவியாகவும்; தூசியாகவும் மாறிவிடுகின்றன. சூரியனை விட்டு விலகிப்போகையில்; வால் குறுகி மீண்டும் பனிக் கோளமாகி விடுகின்றன.
வால்நட்சத்திரம் பற்றிய குறிப்பு முதன் முத லில் சைனாவில் தான் பதிவு செய்யப்பட்டிருந்தது. கி.மு. 611-ல் தோன்றிய வால் நட்சத்திரம் ஒன்றைப் பார்த்து விட்டு சீனமக்கள் அது ஒரு தெய்வீகத் துடைப்பம்” என்று வர்ணித்ததோடு-உலகில் அதிகரித்துள்ள தீமைகளைப் பெருக்கித் தள்ள அது கடவுளால் அனுப்பப்பட்டது என்றும் கரு தினர்.
அதைத்தொடர்ந்து யுத்தம், வெள்ளம், பஞ்சம் ஆகியவை தோன்றக் கூடும் என்ற நம்பிக்கையும் பரவல்ாக ஏற்பட்டது.
நம் நாட்டில் தூம கேதுவின் வருகை பெரிய தீமைகளை விளைவிக்கும் என்று அரசர்களும், பொது மக்களும் அஞ்சினர். பொதுவில்-வால் மீனின் தோற்றம், பின் ஏற்படப்போகிற ஒரு துயர நிகழ்ச்சியின் அறிகுறி என்றே எல்லோராலும் எண்ணப்பட்டு வந்தது.
வால் மீன் என்றழைக்கப்படும் அந்த விண் மீன், வாயுக்கள் தூசிகள், பாறைச் சிதறல்கள் இவற்றால் ஆனவையே. சூரிய குடும்பம் உருவான போது அவற்றிலிருந்து எஞ்சிய துண்டங்களே இவை என்றும் கூறலாம்.
வால் மீனின் உட்பகுதி, 'கரு' என்னும் நியூக்ளியஸ் ஆகும். இதில் அடங்கியுள்ள வாயுக்களும், திடப்பொருட்களும் சூரியனின் வெப்பத்தாலும் கதிர் வீச்சினாலும் எதிர்ப்பக்கம் தள்ளப்படுவதால்; இதற்கு வால் போன்ற ஒரு பாகம் ஏற் படுகிறது.
சூரிய ஒளியினால் துண்டப்படும் வாயுக்கள் கருவைச் சுற்றிலும், புகை மூட்டம் போன்ற ஒளி வட்டத்தை உண்டாக்குகின்றது. இது "கோமா” என்று அழைக்கப்படுகிறது.
வாயுக்கள் அதிகம் வெளியாகும் போது வால் போல் பெருகிக் கொண்டே போகிறது. சூரிய ஒளி யினால் இது பளப்பளமாக ஒளி விடுகிறது
சில வால்மீன்களுக்கு பல வால்கள் முளைப் பதும் உண்டு. வால்மீனுக்கும், சூரியனுக்கும் இடையே உள்ள இடைவெளி குறையக் குறைய வாலின் நீளம் அதிகமாகும்.
சூரியனிலிருந்து விலகிச் செல்லச் செல்ல வாலின் நீளம் குறைந்து கொண்டே வந்து; வெறும் நட்சத்திரம் போல் தோன்றி கடைசியில் பனிப்பந்தாகி மறைகிறது.
வால் நட்சத்திரத்தில் வாலாகக் காட்சியளிக் கும் துகள்கள் அனைத்தும் மீண்டும் உட்கருவு ன் சேர்வதில்லை. இதனால் ஒவ்வொரு முறை சூரியனைக் கடக்கும்போதும் வால்மீனின் என்ட குறைந்துகொண்டே வந்து; இறுதியில் காணாமற் போய்விடும். அதாவது மரணமடையும் என்றும் கூறலாம்.
கி.பி. 1472-ம் ஆண்டுதான் முதன்முதலில் வானவியல் நிபுணர்கள் வால்மீன்களை வானியல் பொருட்களாகக் கருத ஆரம்பித்தனர்.
ஜெர்மானிய வானியல் விஞ்ஞானி "ஜோஹ னன் முல்லர்” என்பவரும்—அவரது மாணவர் ஒருவரும். ஒரு வால் நட்சத்திரத்தை அடையாளம் கண்டுகொண்டு, அவற்றிற்கும் நட்சத்திரங்களுக்கும் உள்ள இடைவெளியைக் குறித்துக் கொண்டனர். வானில் கற்பனையாக ஒரு கோட்டினை வரைந்து வால் நட்சத்திரத்தின் பாதையைக் குறித்தனர்.
கி.பி. 1577-ல் டச்சு நாட்டு விஞ்ஞானி டைகோ பிராஹோ' ஒரு புதிய வால் மீனைக் கண்டார். அவர், வால்மீன் இருக்கும் தொலை வினைக் கணக்கிட முடியும் என நம்பினார்,
ஒவ்வொரு இரவும் நட்சத்திரங்கள், மற்றும் வால் மீன்கள் தோன்றுமிடங்களைக் குறித்துக் கோண்டார். அதே போல மற்ற நகர் வானியல் விஞ்ஞானிகளின் ஆய்வினையும் குறித்துக்கொண்டார். அவரால் இடமாற்றத்தினை அறிய முடிய வில்லை. எனவே, வால்மீன்—சந்திரனிலிருந்து குறைந்த பட்சம் 4 மடங்கு தூரத்தில் இருக்க வேண்டும் என முடிவெடுத்தார்.
இந்தக் கண்டு பிடிப்புக்குப் பின்னர், வால் நட்சத்திரங்கள்—வால்மீன்கள்தான் என நிரூபன மாயிற்று.
கி.பி. 1543-ல் கோபர்னிகஸ் என்னும் விஞ்ஞாளி, சூரியலும் மற்ற கிரகங்களும் பூமியைச் சுற்றவில்லை என்று கூறி அரிஸ்டாடில் கொள்கையை மறுததாா.
கிரசங்களின் போக்கினைக் கொண்டு அவை சூரியனைச் சுற்றி வருகின்றன என்றும்; அதன் மூலம் கோள்களின் இயக்கத்தைக் கணக்கிட முடியும் என்றும் கூறினார்.
பூமியும் ஒரு கிரகமே! இதன் மூலம் சூரிய குடும்பக் கொள்கை உருவாயிற்று.
1687-ம் ஆண்டு "சர் ஐசக் நியூட்டன்' என்னும் பிரிட்டிஷ் விஞ்ஞானியின் புவிஈர்ப்பு விசை பற்றிய கொள்கைக்குப் பிறகே, வானியல் வல்லுனர்களால் விண்மீன்களும், கிரகங்களும் மற்ற விண் பொருட்களின் அருகாமையில் எவ்வாறு இயங்க முடிந்தது என்பதை உணர முடிந்தது.
நியூட்டனின் கொள்கைப்படி வால் மீன்கள் நீள்வட்டப் பாதை அல்லது இணைகரப் பாதை யில் செல்ல வல்லன. சூரியனுக்கும் வால் மீனுக்கும் உள்ள தூரம்; அந்த வால் மீனின் வேகம், இவற்றின் மூலமாக இதைக் கணிக்க முடியும்.
வேகம் குறைவாக இருந்தால், நீள்வட்டப் பாதையில் வால்மீன் செல்லும்; என்றேனும் ஒரு நாள் திரும்பும் எனக் கொள்ளலாம்.
இந்தப் பின்னணியில் தமது உழைப்பைத் துவக்கியவர்தான், எட்மண்ட் ஹேலி', என்னும் புகழ் பெற்ற விஞ்ஞானி.
சமீபத்தில் தோன்றிய வால்மீனைக் கண்டு பிடித்தவர் எட்மண்ட் ஹேலி! பிரிட்டிஷ் வானியல் வல்லுனரான எட்மண்ட் ஹேலி கி.பி. 1656-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 29-ம் தேதி லண்டனில் பிறந்தார்.
இவரது தந்தை சோம்புச் செய்தல், உப்புக் காய்ச்சுதால், போன்ற தொழில்களைச் செய்து வந்தார்.
ஹேலிவின் பள்ளிப் படிப்பு செயிண்ட் பால்’ பள்ளியில் துவங்கியது. லத்தீன், கிரேக்கம், மற்றும் கணிதம் முதலியன கற்றார்.
சிறு வயது முதலே ஹேலிக்கு ஆகாயத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருப்பது என்றால் மிகவும் பிடிக்கும். இந்த ஆர்வம் அவரை வானி யல் ஆராய்ச்சியில் ஈடுபட துாண்டியது.
மகனது விருப்பத்திற்குத் தந்தையும் ஊக்கம் ஊட்டினார். பல அறிவியல் சாதனங்களை வாங்கிக் கொடுத்தார். அவற்றில், 24 அடி நீளத் தொலை நோக்கி கருவியும் ஒன்று.
1673—ம் ஆண்டு ஆக்ஸ்போர்டு குவின்ஸ் கல்லூரியில் சேர்ந்தார். பின்னாளில் அந்தக் கல்லூரியிலேயே பேராசிரியராகவும் பணியாற்றினார். படிக்கும் போதே விண்ணை ஆராய்ந்தார். பல உண்மைகளை அறிந்தார்.
தமது 18-வது வயதில் தன் தந்தை வாங்கிக் கொடுத்த 24 அடி தொலை நோக்கியைப் பயன்படுத்தி, அதுவரை வழக்கத்திலிருந்த ஜூபிடர், மற்றும் சனிக் கிரகங்கள் பற்றிய அட்டவணை தவறு என அறிந்தார். ஹேலியின் காலத்திற்கு முன் தென் வானம் சரியாக ஆராயப்பட்டு அட்டவணை படுத்தப்படவில்லை.
ஹேலிக்கு 1660-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ராயல் சொஸைட்டியில் ஃபெலோஷிப் கிடைத் தது. உடனே அவர் ஐரோப்பிய சுற்றுப் பயணம் மேற்கொண்டார். பிரான்சு செல்லு முன்பு விண்ணில் ஒரு வால்மீனைக் கண்டார். அது லண்டனில் தெரிகிறதா எனக் கேட்டுத் தன் நண்பர் ஷாகுக்கிற்கு கடிதம் எழுதினார்.
அதை அறிந்த கொண்ட பின், அது முன்பு 1531லும், பிறகு 1607லும் தோன்றிய அதே வால் மீனாக இருக்கலாம் என்ற கருத்தை வெளியிட்டார்.
தனது 19-வது வயதில் 1675-ல் கிரஹங் களின் சுற்றுப்பாதை பற்றி ஆராய்ச்சிசெய்து; அது பற்றி ஒரு ஆய்வுக் கட்டுரை எழுதினார். அது ராயல் சொஸைட்டியின், 'ஃபிலாசபிகல் டிரான் சாக்ஷன்”-என்னும் விஞ்ஞான ஏட்டில் வெளியாயிற்று.
1676-ம் ஆண்டு ஹேவி ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் படித்துக் கொண்டிருந்தார். "யூனிட்டி' என்னும் கப்பலில் மூன்று மாத காலம் 10 ஆயிரம் கிலோ மீட்டர் துார பயணத்தை மேற்கொண்டார்.
ஆபிரிக்காவுக்கு மேற்கே உள்ள செயின்ட் ஹெலின்’ என்னும் தீவுக்குச் சென்றார். அங்கே தெற்கு வானைப் படமாக்கினார். ஓராண்டு அங்கு அவர் ஆராய்ச்சி நடத்தினார்.
பிரிட்டிஷ் ராயல் கழகம் ஹேலியின் முயற்சி யைப் பாராட்டியது. ஆனால் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகமோ, அவர் படிப்பைத் துறந்தவராகக் கருதியது.
பிரிட்டனின் அரசர் முன் வந்தாலொழிய ஹேலியால் பட்டம் பெற இயலாத சூழ்நிலையில்இரண்டாம் சார்லஸ் அரசர் முயற்சியால் ஹேலிக்கு எம். ஏ. பட்டம் கிடைத்தது. அதே ஆண்டு அருைடைய 21-ம் வயதில் ராயல் கழகத்தின் உறுப்பினர் என்னும் மதிப்பும் கிடைத்தது. அவரைப் போன்ற இளம் வயதில் இத்தகைய மதிப்பு வேறு யாருக்கும் கிடைத்ததில்லை.
1682-ஹேலியின் வாழ்க்கையில் ஒரு மைல் கல் எனலாம், அப்பொழுதுதான் அவர் வால்மீனைக் கண்டார். முதலில் அது அவரைப் பெரிதும் கவர வில்லை.
ஹேலிக்கு இந்த சமயத்தில் திருமணமாயிற்று. மனைவியின் பெயர் "மேரிடுக்" லண்டன் அருகில் 'ஐலிம்ட னில் ஹேலி இல்லற வாழ்க்கையை மேற் கொண்டார். அங்கு ஒரு வான் ஆராய்ச்சி மையத்தை அமைத்துக் கொண்டு, தினசரி குறித்த நேரத்தில் சந்திரனையும், நட்சத்திரங்களையும் ஆராய்ந்தார்,
1683-ல் இரு ஆராய்ச்சித் தாள்களை வெளி யிட்டார். ஒன்று சனிக்கிரகம் மற்றும் அதன் துணைக்கோள்கள் பற்றியது; மற்றொன்று பூமியைப் பற்றியது.
1684-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் டிரிடினி கல்லூரியில் பணி புரியும் மேதை ஐசக் நியூட்டனை ஹேலி சந்தித் தார்,
இந்தச் சந்திப்பு அறிவியலின் அடிப்படைக்கு உதவ ஏதுவாயிற்று. அவர்களது நட்பு பல உண்மைகளை உணர வல்லதாக அமைந்தது.
1684-ம் ஆண்டு துவக்க மாதங்களில் ஜோகானிஸ் கெப்ளர் வெளியிட்ட, கோள்களின் விதி பற்றிப் படித்தறிந்தார். கெப்ளரின்மூன்றாம்
விதியில் சில சந்தேகங்கள் அவருக்கு எழுந்தன அவற்றைப் பற்றி அறிந்து கொள்ள சர்.ஐசக் நியூட்டனைச் சந்தித்தார்.
கெப்ளரின் விதிகளின் படி, கிரகங்களின் பாதையையும், பாதையின் வடிவங்களையும் ஆராய நியூட்டன் வகுத்த எளிய முறைகள் ஹேலிக்கு ஆச்சரியத்தை அளித்தன.
பின்னர் நியூட்டன் சுழல் பாதையில் இருக்கும் பொருட்களின் வேகம் பற்றிய தமது 9 பக்கக் கட்டுரையிலிருந்து ஒரு புத்தகத்தை உருவாக்குவதாகக் கூறினார்.
இதுவே இயற்கைத் தத்துவங்களின் கணித அடிப்படைகள். The Mathematical Principles of Natural Philosophy என்னும் கொள்கைக்கு வித்துட்டது. இக்கொள்தையே தற்கால அறிவியலின் பைபிள் எனலாம்.
ஹேலி, அணுவின் உருவை ஆராய்ந்தார். காந்த சக்தி, வெப்பம், காற்று, தாவரம், சிப்பிகள், கடிகாரங்கள் ஒளி, ரோமானிய வரலாறு, வானூர்திகள் என பல்வேறு துறைகளில் பல்வேறு கருத்துக்களைக் கொடுத்துள்ளார்.
குரிய குடும்பத்தின் இடைவெளியை கணக்கிடும் முறையை ஹேலி கண்டார். வெள்ளி, சூரியனின் மையத்தைக் கடக்கும் நேரத்தில் மூலமாக இதைக் கணக்கிட்டார். 15 கோடி
கிலோ மீட்டர் தூரத்தில் சூரியன் இருப்பதாக அறிவித்தார்.
ஹேலி பூமியின் வயதையும் அறிந்தார். கடல் நீரின் உப்பின் தன்மையை, ஒரு கடிகாரம் தனது பணியைத் துவக்கியதற்கு ஒப்பிட்டு ஆராய்ந்தார்.
இதன் மூலமாக பூமியின் உண்மையான வயதை அறிய முடியாவிட்டாலும், அதற்கு மிக நெருக்கமாகச் செல்ல முடிந்தது.
தமது 39வது வயதில் மீண்டும் வால்மீன்கள் பற்றிய ஆராய்ச்சியை ஹேலி துவக்கினார். அவரால் எந்த முடிவுக்கும் வரமுடியவில்லை. எனவே, 1637 முதல் 1698வரை வானில் தென்பட்ட 23 வால்மீன்களை ஆராய்ந்தார். அவற்றின் வேறுபட்ட கோணங்கள் புலப்பட்டாலும் 1521, 1607, 1682, இவற்றில் தோன்றிய வால்மீன்கள் ஒத்த குணமுடையவையாகக் காணப்பட்டன.
எனவே, ஒரு வால்மீன் குறிப்பிட்ட கால கட்டத்தில் மீண்டும் மீண்டும் தென்படுவதாக அவர் அறிந்தார். அவர் இதே வால்மீன் 1758-ல் தோன்றுமென அறிவித்தார்.
வானியல் வல்லுனர்கள் ஆச்சரியப்படும் வகையில், வால்மீன் மீண்டும் 1759-ல் தோன்றியது.
1705-ல் ஹேலி "வால்மீன்களில் வானியல் உண்மைகளின் சாராம்சம்” என்னும் புத்தகத்தை வெளியிட்டார். இதுவே முதன் முதலாக நியூட்டனின் கொள்கையைப் பின்பற்றி வானியல் விந்தைகளை அறியும் முதல் முயற்சியாகும்.
ஹேலி தமது இறுதி ஆண்டுகளில் பிரபஞ்சம் பற்றிய சில அடிப்படைக் கருத்துக்களை வெளியிட்டார்.
நியூட்டன் மிகவும் அமைதியான இயல்புடையவர். ரகசியங்களை வெளியிடமாட்டார், கலகலப்பாகப் பேசமாட்டார், பிறருடன் விவாதிக்க மாட்டார். ஆயினும் அவரிடமிருந்த அபாரமான விஞ்ஞான அறிவை ஹேலி புரிந்து கொண்டார்.
எனவே முறைப்படி தன் ஆராய்ச்சிக் கருத்துக்களைத் தொகுத்து எழுதுமாறு அவரை ஹேலி கேட்டுக் கொண்டார்.
நியூட்டன் எழுதத் துவங்கினார். அதை எழுதி முடிக்க அவருக்கு 18 மாதங்கள் ஆயின. அதை ராயல் சொஸைட்டி வெளியிட முன் வந்தது, ஆனால் பணப்பற்றாக்குறை. எனவே, செலவைதானே ஏற்றுக் கொண்டார் ஹேலி. 1687-ல் புத்தகம் வெளியாயிற்று. இதைப் படித்த விஞ்ஞானிகளிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
'பிலாசபி நேசுரலிஸ் பிரின் சிபியா, என்பது அந்த நூலின் பெயர். ஹேலி அதைத் தெய்வீகப் படைப்பு’ எனப் புகழ்ந்தார்.
ஹேலியின் துாண்டுதல் மட்டும் இல்லாதிருந் தால் அந்த நூல் எழுதப்பட்டே இராது. 1686-ல் ஹேலிக்கு ராயல் சொஸைட்டியில் முக்கிய பதவி கிடைத்தது. 1689-ல் அவருக்கு நீா மூழ்குதலில் ருசி ஏற்பட்டது. நீர் மூழ்கும் சாதனங்களில் பல முன்னேற்றங்களைச் செய்தார்.
"டைவிங் பெல்' என்ற நீர் மூழ்கி சாதனம் ஒன்றைக் கண்டு பிடித்தார். அதன் செயல்பாட் டைக் கண்டறிய தாமே கடலில் மூழ்கினார்
நியூட்டனின் புவி ஈர்ப்பு விசைத் தத்துவம்; இந்தப் பேரண்டத்திற்கும் பொதுவானது; வால் மீன்களுக்கும் அதுவே ஆதாரம் எனக் கண்டறிந் தவர் ஹேலி! இவை மட்டுமின்றி—
ஹேலி, ஒரு பல்துறை மேதையாகத் திகழ்ந் தார். அவர் ஒரு வானியல் நிபுணர்; கணித மேதை; மாலுமி, சிறந்த மொழி பெயர்ப்பாளர்; கவிஞர்; பெளதீக விஞ்ஞானி; கடலியல் நிபுணர்; கால நிலை நிபுணர் என இப்படிப் பல துறைகளில் ஹேலி, தமது உழைப்பையும், முத்திரையையும் பதித்துள்ளார்.
ஒரு திறமையான விஞ்ஞானியாக விளங்கிய ஹேலி மிகவும் இரக்க குணம் படைத்தவர். நட்புக்கு ஏற்றவர். நியூட்டனின் குணத்திற்கு நேர் மாறானவர். பிற்காலத்தில் அஸ்ட்ரானமர் ராயல்' என்னும் பட்டம் பெற்றவர்.
1736-ல் ஹேலி தமது அருமை மனைவியை இழந்தார். இந்தத் துயரத்தைத் தொடர்ந்து, அவரது உடல் நலம் பாதிக்கப்பட்டது. ஆயினும் அவர் விஞ்ஞான ஆராய்ச்சியை விடவேயில்லை.
1682-ம் ஆண்டில் அவர் ஒரு பிரகாசமான விண்மீனைக் கண்டதிலிருந்தே அதனுடைய சுழல் பாதையைக் கணக்கிடும் முயற்சியில் ஈடுபட்டு உழைத்து வந்தார். இது எளிதாக அமையவில்லை.
இதற்காக அவர் பல ஆண்டுகள் இம்முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டார். தனக்கு முன்னதாக உள்ள விஞ்ஞானிகள் ஆராய்ச்சி மூலம் கணிக்கப்பட்ட வால்மீன்களின் பாதைப்ற்றிய தகவல்களை சேகரித்து ஆராய்ந்தார்.
இது புதிய வால்மீனின் பாதையை அறிய உதவும் என நம்பினார். 1607-ல் கெப்ளர்பார்த்த அதே வால்மீன்தான் 1682-ல் மீண்டும் தோன்றியி ருக்க வேண்டும் என்ற முடிவிற்கு வந்தார் ஹேலி.
1465-ல் ரெகியோ மோன்டனஸ் எனும் விஞ் ஞானி பார்த்த அதே வால்மீனை 1531-ல், 'பிராகேஸ்டிரோவும்', 'எபிலியனும் பார்த்தனர்; அதுவேதான் 1682-ல் தோன்றியிருக்க வேண்டும் என்ற முடிவும் ஏற்பட்டது. ஹேலி ஆச்சர்யப்படும் வகையில், 1456-லிருந்து 1531 வரைக் கணக்கிட்டுப் பார்த்தால், 75 ஆண்டுகள் இடைவெளி இருக்கும்.
1531-முதல் 1607 வரை 76 ஆண்டுகள்—1607 முதல் 1682 வரை 75 ஆண்டுகள்!
எனவே, 1456, 1531, 1607, 1682 ஆண்டுகளில் தோன்றிய வின்மீன்கள்யாவும் ஒன்றே. இது நீள் லட்டம் பாதையில் செல்லுகின்றது. 75 அல்லது 76 ஆண்டுகளுக்கு ஒருமுறை மீண்டும் தெரியும் என ஹேலி அறிந்தார்.
இம்முடிவை உலகுக்கு அறிவிக்க அவருக்கு பல காலம் ஆயிற்று.
1705-ம் ஆண்டு அவர் அத்தனை கணக்கீடுகளையும் போட்டு, தமது முடிவு சரியே எனக் கண்டார்.
எனவே இவற்றினை வெளியிட்டு 1758-ம் ஆண்டு, மீண்டும் இந்த வால்மீன் உலகில் தென்படும் என அறிவித்தார்.
ஹேலி, மீண்டும் இவ்வால்மீனைக் காண வேண்டுமானால்;102 ஆண்டுகள் வாழவேண்டும். அவர் அவ்வளவு நாட்கள் உயிர் வாழவில்லை.
தமது எண்பத்தாறாவது வயதில், 1742-ம் ஆண்டு ஜனவரி மாதம் 14ம் தேதி கிரீன்விச் வான் ஆராய்ச்சி நிலையத்தில் தாம் கண்டுபிடித்த (ஹேலி) வால்மீன் எவ்வளவு துரத்தில் இருக்கிறது என்பதைத் தொலைநோக்கிக் கருவியில் பார்த்துக் கொண்டிருந்தார். நாற்காலியில் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருக்கும்போதே அவரது உயிர் பிரிந்துவிட்டது.
கி.பி. 1656 முதல், 1742 வரை வாழ்ந்த பிரிட்டிஷ் வானியல் வல்லுனர்களில் எட்மண்ட் ஹேலியின் பெயர்: பொன் எழுத்துக்களில் பொறிக்க வேண்டியதாகும்.
அனைவரும் 1758-ல் எதிர்பார்த்திருந்தபடி ஹேலி வால்மீன் தோன்றவில்லை. விஞ்ஞானிகள் 1757 முதலே இதனை எதிர்பார்த்திருந்தனர். ஹேலி தாமதமாகத் தோன்றிய செயல்; நியூட்டனின் கொள்கையை வலுப்படுத்தியது.
நியூட்டனின் புவிஈர்ப்பு விசைக் கொள்கை யின்படிப் பார்க்கையில், ஜூபிடரும் சனியும், ஹேலியின் வருகையைத் தாமதப்படுத்துகின்றன என்பதை அறிந்தனர்.
சனி 100 நாட்களும், ஜூபிடர் 518 நாட்களும் ஹேலியைத் தாமதப்படுத்தின. இதனால் 618 நாட்கள் கழித்து ஹேலிவால்மீன் தோன்றியது.
1758 டிசம்பரிலேயே ஒரு விவசாயி வால் மீனைப் பார்த்தார். பின்னர் பூமிக்கு மிக அருகாமையில் 1759-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தென்பட்டது.
சென்ற முறை நீளவட்டப் பாதையில் சென்றதைவிட இந்த முறை, 586, நாட்கள் அதிகமாயிற்று. ஒரு வால்மீனின் சுழற்பாறையில் 586 நாட்கள் மாறுபாடு என்பது; ஜூபிடர், சனி கிரகங்களின் ஈர்ப்புத் தன்மையினால் ஏற்பட்டது. பெளதீகத்தின் அடிப்படை உண்மையினை இது நிரூபித்தது.
அது முதல் அந்த வால்மீனுக்கு "ஹேலி'யின் பெயரையே விஞ்ஞானிகள் பெருமிதத்துடன் சூட்டி மகிழ்ந்தனர்.
"1759-க்குப் பிறகு 1835லும், பிறகு 1910லும் தோன்றி; இப்போது மீண்டும் 1986-ல் தோன்றி மக்களுக்குக் காட்சி தந்துவிட்டு ஹேலி மறைந்துள்ளது” என்று கூறி நிறுத்திய மேகநாதன், நண்பர்களைப் பார்த்தான்.
அத்தனை நேரம் அவன் கூறிய ஹேலியின் கதையில் அனைவரும் மெய்மறந்து போயிருந்தனர்.
"நண்பர்களே, இந்த ஐந்து நாட்களாக தானும் எனது சகோதரர்களும் உங்களுக்கு பல அறிவியல் கதைகளைக் கூறினோம். எங்களுக்கு இதற்காக நீங்கள் என்ன கொடுக்கப் போகிறீர்கள்?" என்று மேகநாதன் அவர்களை நோக்கிக் கேட்டான்.
உடனே அவர்கள் அனைவரும், பெருத்த மகிழ்ச்சியோடு, "நீங்கள் எதைக் கேட்டாலும் தாங்கள் தருவோம்”, என்று அன்போடு கூறினர்.
அதைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்த தேவ குமாரர்கள், "எங்களுக்கு உங்களிடமிருந்து வேறு எதுவும் வேண்டாம்; ஆனால் நீங்கள் எல்லோரும் நாளை முதல் தவறாமல் பள்ளிக்கு போக வேண்டும். உங்களுடைய முழு கவனத்தையும் கல்வியில் செலுத்தி; உங்களில் ஒவ்வொருவரும் நான் சற்று முன்பு கூறிய ஹேலியைப் போன்ற ஒரு பெரிய விஞ்ஞானியாகவோ, டாக்டராகவோ; இன்ஜினி யராகவோ; அல்ல்து உங்களுக்கு பிடித்த எந்தத் துறையிலாவது தலைசிறந்து விளங்க வேண்டும்.
உங்களால் இந்த கிராமமும், கிராமத்து மக்களின் நிலையும் உயர வேண்டும். ஒவ்வொருவரும் உங்கள் பிறந்த மண்ணிற்குப் பெருமை சேர்ப்பவர் களாக விளங்க வேண்டும். செய்வீர்களா?" என்று கேட்டான்.
அவர்கள் அனைவரும் ஒன்று கூடி உங்கள் வார்த்தைப் படியே நாங்க எல்லோரும் நல்லாப் படிச்சு, பெரிய பெயர் வாங்குவோம்" என்று ஏதோ சத்தியம் செய்வது போல் உறுதியோடு கூறினார்கள்.
அதைக் கேட்ட தேவகுமாரர்கள் மிக்க மகிழ்ச்சியோடு அவர்களிடம் விடை பெற்றபோது 'அப்படியானால் இனிமே நீங்க எங்களைப்பார்க்க வரமாட்டீங்களா?” என்று குரல் தழு தழுக்கக் கேட்ட கண்ணப்பனிடம் உலகநாதன் அன்பொழுக, "நீங்கள் எல்லோரும். எங்களை எப்போது பார்க்க வேண்டு மென்று நினைத்தாலும் நாங்கள் வருவோம். ஆனால் பெரிய பரீட்சை முடிந்து, லிவ் விட்ட பிறகு தான் நீங்கள் எங்களை நினைக்க வேண்டும்" என்கிற நிபந்தனையுடன். தேவகுமாரர்கள் சிரித்தபடி அவர்களிடம் விடைபெற்றுச் சென்றனர்.